Skip to content
Post Views: 13,050
அத்தியாயம் 3
“இன்னைக்கு நைட் நீ ஃபிரீயா அர்ஜுன்?” அனன்யா கேட்க,
“தெரிலயே அனு!” என்று ஜாக்கிரதையாய் அர்ஜுன் சொல்லவும்,
“அப்ப ஃபிரீ தான். நாம டின்னர் வெளில போலாம். எல்லாரும் போய் ரொம்ப நாளாச்சே!” என்றாள் ஆசையாய்.
Advertisement
அனன்யா சாப்பிட்டு தான் ஆக வேண்டும் என தம்பியை வீட்டினுள் இழுத்து வர, அங்கே ஏற்கனவே சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை கண்டும் காணாதவனாய் அனன்யா கூறிய இடத்தில் அர்ஜுன் அமர்ந்திருந்தான் அருகில் விவேக்குடன்.
“ஹோட்டல் சாப்பாடு வேணும்னு சொல்லேன். அதுக்கேன் தலையை சுத்தி மூக்கை தொட்டுட்டு நிக்குற?” சாப்பிட்டபடி கிண்டலாய் கூறினான் விவேக்.
“அதான் சொல்லிட்டேன் இல்ல? ப்ளீஸ்ங்க! ஹோட்டல் சாப்பாடு வித் பேமிலி. அதுவும் ஹோல் பேமிலி. எவ்ளோ நாளாச்சு? ப்ளீஸ் ப்ளீஸ்!” என்று அனன்யா கெஞ்ச,
Advertisement
“உனக்கு வேணும்னா காலையும் பிடிப்ப கழுத்தையும் பிடிப்ப!” என்று சிரித்தது கலையரசி.
Advertisement
“அத்தை! அன்னைக்கு சாப்பிட்டோமே க்ரில் சிக்கன்! செம்ம டேஸ்ட்! யம் யம்! இன்னும் நாக்குல அந்த சுவை நாட்டியம் ஆடுது!” ரசித்து கூறினாள் அனன்யா.
“சிக்கனா! நோ வே!” விவேக் சொல்ல,
“நான் வேற வே’ல போய்க்குவேன்! இப்ப நைட் கூட்டிட்டு போறிங்களா இல்லையா?” என தீவிரமாய் இறங்கிவிட்டாள் அனன்யா.
Advertisement
விஜயலக்ஷ்மி வாயே திறக்கவில்லை. அர்ஜுன் அமைதியாய் சாப்பிட அவனின் இந்த அமைதி தான் அவளை என்னவோ செய்தது.
“சரி டி! கத்திட்டே இருக்காத! அதான் டிசைட் பண்ணிட்டியே! ஆனா சிக்கன்.. அதுவும் நைட் டைம்.. அதை மட்டும் மாத்திக்கோ. இன்னொரு நாள் வாங்கி தர்றேன்” என்ற விவேக்,
“என்ன அர்ஜுன்! ஓகே தானே?” என்றான் அர்ஜுனிடம்.
“இல்ல மாமா!” என யோசித்தவனுக்கு சட்டென்று நியாபகம் வர,
“ப்ரணி கூப்பிட்டா மாமா! ஃபன்க்ஷன் போனும்னு சொல்லிட்டு இருந்தா!” என்றவன் அனைவரும் அமைதியாகவும்,
“நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க!” என்றான்.
முடிவே செய்துவிட்டாள் விஜயலக்ஷ்மி அவன் திருமணம் முடிந்துவிட்டது என்று.
‘ஒரு தகவலாய் கூட பிரணிதா தன்னிடம் சொல்லவில்லையே!’ என்று ஒருபுறமும்,
‘இவன் திருமணமானவன்!’ என்ற உண்மை ஒருபுறம் என இலகுவாய் இருக்க முடியவில்லை விஜயலக்ஷ்மிக்கு.
அனன்யா அமைதியானதில் தான் வருத்தம் அர்ஜுனிற்கு.
“அனு!” என்று அர்ஜுன் அழைக்க,
“அதான் எங்க கூட எல்லாம் வர மாட்டேன் சொல்லிட்ட இல்ல? போ!” என்று முகத்தை தூக்கிக் கொண்டாள்.
“சரி சரி நடிக்காத! மாமாகிட்ட நான் சொல்றேன். நீ க்ரில் வாங்கிக்கோ!” என சூழ்நிலையை இயல்பாக்க முனைந்தான் சிரித்தபடி.
“ப்ச்! போடா! அவரை ஏமாத்த எனக்கு தெரியாதா? வந்துட்டான்!” என்ற அனன்யா சொல்லில்,
“எது?” என்று விவேக் மனைவியை முறைக்க, மற்றவர்கள் சிரிக்க என நேரம் கடந்தது.
“ஜாமூன் சாப்பிடுறியா? உனக்கு தான் ஸ்வீட் புடிக்குமே!” அனு கேட்க,
“ம்ம்ஹும்ம்! வேண்டாம் அனு! இப்ப சாப்பிடுறது இல்ல!” என்றவன் எழுந்து கொண்டான்.
அப்படியே உறைந்து அமர்ந்துவிட்டாள் விஜயலக்ஷ்மி.
‘கார்ல எதுக்கு இவ்ளோ ஸ்வீட்?’ விஜயலக்ஷ்மி கேள்விக்கு,
‘எனக்கு பிடிக்கும். டிரைவ் பண்ணும் போது அதிகமா எடுத்துப்பேன். உனக்கும் வேணும்னா எடுத்துக்கோ!’ அன்று கூறினானே அவளிடம். ஒரு நொடி விஜயலக்ஷ்மி தலையை உலுக்கி நிமிர்ந்து பார்க்க, அர்ஜுன் வெளியே சென்றுவிட்டான்.
“ப்ரணி எங்க கூப்பிட்டா?” தனியே வந்ததும் தம்பியிடம் கேட்டாள் அனன்யா.
“ஏதோ பிரண்ட் ஃபன்க்ஷன் போல! லேட் நைட் தனியா ட்ராவல் பண்ண பயமா இருக்குன்னு கூட கூப்பிட்டா!”
“அப்ப எதுக்கு போராளாம்? வீட்டுல இருக்க வேண்டியது தான?”
“க்கா! என்ன இது? இப்ப எதுக்கு அவ மேல கோவம்?”
“அட போ டா! நீ தான் மெச்சிக்கணும்! ஒரு நாள் கூட இத்தனை வருஷத்துல எனக்கு கால் பண்ணல. உன் மேல மட்டும் என்ன தனி அக்கறை?” அனன்யா கோபமாய் கேட்க,
“பேசாம இரு அனு! இப்ப ஏன் டென்ஷன் எடுத்துட்டு இருக்க நீ? நான் பாத்துக்குவேன்! அவளே யாரும் இல்லாம தனியா கஷ்டப்பட்டுட்டு இருக்கா. அவளை போய்….” என்றவன்,
“உன் ஹெல்த்தை கவனிச்சுக்கோ!” என்று சொல்லி கார் அருகே செல்ல,
“என்னவோ பண்ணு! சொன்னா கேட்கவா போற! அவளுக்கு தான் பெரியமாமா இருக்காரே! அவ தான் வேணும்னு தனியா இருக்கிறா!” என்ற அனன்யா,
“அச்சோ!” என்று தலையில் கைவைத்தவள்,
“சரி அதை விடு! அன்னைக்கு கேட்டேனே! பாக்கலாமா?” என்றதும் திரும்பி அவன் முறைக்க,
“இந்த லுக்கு அங்க வர்றாரு பாரு. அவருக்கு குடு. அவர் தான் கேட்க சொன்னது!” என அருகில் வந்து கொண்டிருந்த கணவனை காட்டினாள்.
“இதுக்கு தான் நான் வர்றதே இல்ல. மாமாக்கு முடியலையேனு தான் பிக்கப் பண்ண வந்தேன்!” என்றவன் காரில் ஏறிவிட,
“என்ன நீ என்னை என்னவோ அவன்கிட்ட சொல்லிட்டு இருக்குற?” என்று வந்தான் விவேக்.
“நீங்க தானே அன்னைக்கு கேட்க சொன்னிங்க?” என்று காற்றில் அவள் கோலம் வரைய, விவேக்கோடு அர்ஜுனும் அதை புரிந்து கொண்டான்.
“நானா?” என விவேக் அதிர, அர்ஜுன் சிரித்துவிட்டான் இவர்கள் சம்பாஷனையில்.
“மாமா! நீங்க வாங்க! நேரமாச்சு!” என்று சொல்லவும்,
“இன்னைக்கு இதை நீ கேட்டே ஆகணுமா?” என மனைவி தலையில் ஒரு கொட்டு வைக்க,
“அம்மாஆஆஆ!” என அலறியவள்,
“ஒரே நாள்ல மூணு கொட்டு!” கணவனை முறைத்து தலையில் தேய்த்து அவள் சொல்ல,
“வாய் அவ்ளோ இருக்கு உனக்கு!” என்றது அர்ஜுன்.
“உனக்காவது என் கஷ்டம் புரியுதே!” என அலுத்துக் கொண்டான் விவேக்.
விவேக் அலுவலகத்தில் தான் அர்ஜுனும் வேலை பார்க்கிறான். அனு திருமணத்தின் பின் இருந்தே இங்கே விவேக்கோடு தான் அர்ஜுன் இருக்கிறான் அலுவலகத்தில்.
அதற்கு முன் வரை பெங்களூருவில் நல்ல வேலையில் இருந்தவன் அனன்யா திருமணத்தோடு தான் சென்னைக்கு வந்ததே! அதன்பின் தான் அன்னை கயல்விழியோடு அவன் அதிக நேரம் செலவழித்ததும்.
அர்ஜுன் காரினை செலுத்த அருகில் அமர்ந்திருந்த விவேக்கிற்கும் அர்ஜுனிடம் கேட்க பல கேள்விகள் இருந்தது.
ஆனாலும் கேட்டு அவன் ஏற்கனவே சுருக்கிக் கொண்ட வட்டத்தை தான் பேசி இன்னும் சுருக்கிடக் கூடாதே என அமைதியாய் வந்தான்.
இப்பொழுது இருக்கும் அர்ஜுன் முற்றிலும் வேறு ஒரு அர்ஜுன் தான் அவன் அறிந்த வரையில்.
சுறுசுறுப்போடு அகத்தின் மகிழ்ச்சியோடு மலர்ந்த முகமும் என கண்முன் வந்து போனான் பழைய அர்ஜுன்.
இப்பொழுதும் புன்னகை முகம் தான் எனினும் அது அவன் செயற்கையாய் ஒட்ட வைத்திருக்கிறான் என பார்த்ததும் புரியும்.
விஜயலக்ஷ்மி! ‘அன்று மட்டும் அவள் அமைதியாய் இருந்திருந்தால்?’ இன்று வரை அதை அவன் நினைக்காத நாளே இல்லை.
அதை சொல்லி அவளை வருத்தப்பட வைக்கவும் விருப்பமில்லை. அவளுக்கு பிடிக்கவில்லை எனில் அதை கூறியது சரி தான். ஆனாலும் காலமும் நேரமும் என அந்த நிலைக்கு வந்த பின்பு அவள் கூறியிருக்க கூடாது என நினைக்காத நாளில்லை.
“மாமா!” என்று அர்ஜுன் தோளில் தட்டிய பின்பு தான் நினைவில் இருந்து கலைந்தான் விவேக்.
“நைட் தூங்க விடாம பேசுறாளா அனு?” என்று சிரித்து அர்ஜுன் கேட்டு இறங்க,
“உன் அக்கா தானே! கொஞ்சமாவா சேட்டை பண்றா!” என அவனும் கூறியே அந்த கார்மெண்ட்ஸ் கம்பெனியில் இறங்கினான்.
“சரி மாமா! நான் எக்ஸ்ப்போர்ட் பக்கம் பாக்குறேன்” என்று சொல்லி அலுவலகத்தின் உள்பக்கம் அர்ஜுன் செல்ல, தனதறைக்கு வந்தான் விவேக்.
அன்றைய நாள் முழுதும் வெளியிடங்களுக்கு அனுப்பவேண்டியவற்றை அர்ஜுன் பார்வையிட்டு அனுப்பும் வரை உடனிருந்து பார்த்துக் கொண்டான்.
மதியம் உணவருந்தும் நேரம் மீண்டுமாய் அழைத்தாள் ப்ரணிதா.
“சொல்லு ப்ரணி!” என அப்பொழுது தான் அழைப்பை ஏற்றான் அர்ஜுனும்.
ப்ரணித்தா அர்ஜுன் அன்னையின் தம்பி மகள். அன்னை தந்தை என இருவருமே அவள் கல்லூரி படிக்கும் நேரத்தில் விபத்தில் இறந்திருக்க, அடுத்து அவள் இரண்டு வருடங்கள் அவளின் பெரியப்பா வீட்டில் தான் தங்கி இருந்தாள். ஐடி நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தபின் தனியாய் ஒரு விடுதியில் தங்கிக் கொண்டாள்.
ஐந்து வருடங்களாகிறது அவள் வேலையில் சேர்ந்து. அனன்யாவின் திருமணத்திற்கு பிறகு தான் தன் அத்தை கயல்விழிக் குடும்பத்தோடு ஒரு ஒட்டுதல் வந்தது ப்ரணித்தாவிற்கு.
அனன்யா திருமணத்தின் பின் தான் அர்ஜுன் பெங்களூருவில் இருந்து வேலையை மாற்றிக் கொண்டு வந்ததும். சில மாதங்களில் விவேக் தன்னோடு தன் அலுவலகத்திற்கு அழைத்துக் கொண்டான் அர்ஜுனை.
“எவ்வளவு நேரமா கூப்பிடுறேன் மாமா!” என்ற ப்ரணித்தா,
“இன்னைக்கு ஃபன்க்ஷன் சொன்னேனே! வர்றிங்க தானே?” என்று கேட்க,
சில நொடிகள் சிந்தித்தவன், “ஹ்ம் வர்றேன் அனு!” என்று சொல்ல,
“மாமா! நான் ப்ரணி!” என்றாள் சிரித்தபடி,
“ப்ச்! சாரி ப்ரணி! காலையில அனுகிட்ட பேசிட்டு இருந்தேன். அந்த நியாபகத்துல சொல்லிட்டேன்!” என்றவன்,
“ஆமா! நீ அனுக்கு பேசுறதே இல்லையா?” என்றான் அவளிடம்.
“ஆமா மாமா! அது… அது… டைம் இல்லையே! நானே நைட் பதினோரு மணிக்கு தான் ஷிப்ட் முடிஞ்சு வர்றேன்! அப்புறம் தூங்குனா காலையில பத்து மணிக்கு தான் எழுந்துக்குறேன்!” என்றாள் பாவமாய்.
“ஹ்ம்! புரியுது ப்ரணி! சரி முடிஞ்சா வீக்கேண்ட் அனுவை போய் பாரு! கூடவே உன் பிரண்ட் ஃபாரின்லேர்ந்து வந்துட்டாங்க. அவங்களையும் பார்த்த மாதிரி இருக்குமே உனக்கு!” என்றதும் அதிர்ந்தவள் மனம் திக்திக்கென்று அடித்துக் கொள்ள,
“மாமா! யாரை சொல்றிங்க?” என்றாள் ப்ரணித்தா.
“அங்க வேற யார் ஃபாரின் போனாங்க?” என்றவன்,
“வந்துட்டா!” என்று இடைவெளிவிட்டு “விஜி!” என்றவன் அழைப்பில் அத்தனை மென்மை.
விக்கித்து அமைதியாகிவிட்டாள் ப்ரணித்தா.
‘எனக்கு விஜியைப் பிடிச்சிருக்கு ப்ரணி!’ அவளிடம் கூறி இருந்தான் தானே! இன்றுவரை அவளிடம் மட்டும் தான் அதை கூறி இருக்கிறான்.
“ஹெலோ ப்ரணி!” என கொஞ்சம் சத்தமாய் அர்ஜுன் அழைக்க,
“ஹான்! சொல்லுங்க மாமா!” என்றவள் குரலில் சுத்தமாய் சுரத்தில்லை.
“போகும் போது நீ ஆட்டோல போய்டு நான் நைட் ரிட்டர்ன்ல பிக்கப் பண்ணிக்குறேன்னு சொன்னேன்!” என்றான்.
“ஹ்ம் ஓகே மாமா!”
“ஹ்ம்ம் டா! பார்த்து பத்திரமா போனும்! கேப் நம்பர் எனக்கு அனுப்பிடு!” என ஒவ்வொன்றாய் அவன் சொல்ல, ப்ரணித்தா நினைவு முழுதும் விஜயலக்ஷ்மி வந்துவிட்டதில் நின்றுவிட்டது.
தொடரும்..
error: Content is protected !!