Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யாதுமாகி ♥️29

யாதுமாகி #29

 வினிதா கல்யாணத்தின் போது ஆசையா கேட்டாலே அப்போ கூட நீங்க இந்த வளையலை கொடுக்கலையே…குமுறலுடன் மாமியாரை முறைத்தார் ஜோதி.

 அதுதான் பதினாறு பவுன் காசு மாலையும், அஞ்சு பவுன் ராக்குடியும் கொடுத்தேனே…

தங்க நகையும் வைர வளையலும் ஒன்னா? ஜோதி சிடுசிடுத்தர்.



Advertisement

அம்மாடி மருமகளே இது பரம்பரை நகை!

 அப்படி பார்த்தால் எனக்கு தானே சேரனும்? அதற்கும் மடக்கினார் ஜோதி.

உன் கிட்ட இருந்தாலும் உன் மருமகளுக்கு தானே சேரனும்? விடுவியா… போய் ஆகுற சோலியை பாரு.

Advertisement

சினந்து கொதிப்பேறிய ஜோதி கொம்பேறி மூக்கனாய் சீறினார். 54 வயசு ஆகுது எனக்கு. இந்த வீட்டு மருமகளா வந்து எனக்கு நீங்க எதுவும் கொடுக்கலையே…

Advertisement

 யாருக்கு என்ன கொடுக்கணும் அதை எப்போ கொடுக்கணும்னு எனக்கு தெரியும். அன்னம் அலட்டிக் கொள்ளாமல் பதிலளித்தார்.

ஏம்மா பிள்ளைதாச்சி பொண்ணை கூப்பிட்டு மனையில் உட்கார வச்சிட்டு மாமியாரும் மருமகளும் என்ன பண்றீங்க? நல்ல நேரம் போயிட்டே இருக்கு… பழுத்த சுமங்கலியான ஒரு மூதாட்டி உரிமையாய் சத்தம் போட்டார்.

 போ… போ… போய் நல்ல மனசோட நலங்கு வை! சுமங்கலியா இருக்கேன்னு தான் உன் கையால வளையல் போட சொன்னேன் இல்லைனா நானே போட்டு இருப்பேன். Bமருமகளை விரட்டி அனுப்பினார்.

Advertisement

 நிறைந்த மனசோட தாயும் பிள்ளையும் நல்லபடியா வரணும்னு வேண்டிக்கிட்டு நலங்கு வை! மருமகளை எச்சரித்து அனுப்பினார்.

கொல்லன் பட்டறை கொதிக்கலன் போல் கொதித்தது ஜோதியின் மனது.

 எங்கிருந்தோ வந்த பேரன் பொண்டாட்டிக்கு கொடுக்கும் கிழவி பேத்திகளான தன் பெண் பிள்ளைகளுக்கு கொடுக்கவில்லையே…

 கண் கூசும் வெள்ளை கற்கள் பதித்த அந்த கால வைர வளையல்களை நேத்ராவின் கையில் கடுகடுப்புடன் திணித்துவிட்டு தலையெழுத்தே என போட்டோவிற்கு போஸ் கொடுத்து விட்டு வந்தார்.

 பேரப்பிள்ளை, கொள்ளு பேரப்பிள்ளை கண்ட முதிய பெண்மணிகள் மனசார ஆசீர்வாதம் செய்து வளையல் அடுக்கினர்.

 மிகப் பிரம்மாண்டமாய் நிகழ்ந்தேறியது நேத்ராவின் வளைகாப்பு வைபவம்.

தாய் வீட்டிற்கு அழைத்து செல்ல காத்திருந்தனர் அவள் பிறந்த வீட்டினர்.

 நேத்து நீ இல்லாம ரொம்ப கஷ்டம் நெக்ஸ்ட் மன்த் லாஸ்ட்ல தானே உனக்கு டியூ டேட். இன்னும் 40 நாளுக்கு மேல இருக்கு,அதுவரைக்கும் என்னால தாக்கு பிடிக்க முடியாது.

 அவன் கண்கள் லேசாக கரித்து உவர் நீர் எட்டி பார்த்தது.

பெருமையாகவும்,பாவமாகவும் கணவனை கண்டவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்து சமாதானம் செய்தாள்.

உங்கள் அம்மா வீட்டில் மூன்று நாள் இரு! சன்டே வந்து கூட்டிட்டு வந்துடுவேன்.

டெலிவரி டைமில் கொண்டு போய் விட்டுடறேன்.

நேத்ராவை மார்பில் சாய்த்து வளையல் குலுங்கும் அவள் கரங்களை பற்றி தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான்.

சரி அப்படியே பண்ணிடலாம்! புன்னகை முகமாய் தலை அசைத்தவளை மெல்ல அனைத்து கொண்டு ஐ லவ் யூ கண்ணம்மா என்றான் அவள் கல் பதித்த ஜிமிக்கி காதில்.

 புருஷருக்கு என்ன ஆச்சு? இம்புட்டு பாசம் பொங்குது…அவன் தலையை கலைத்து சிரித்தாள்.

 புருஷருக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிடுச்சு! காதலாகி கசிந்துருகி அவள் இதழ்களை தன் இதழால் மென்மையாய் ஒற்றி எடுத்தான்.

நேத்ரா ராகு காலம் தொடங்கறதுக்குள்ள கிளம்பனும்! உன்னோட பேக் எல்லாம் ரெடியா? அன்னம் அரை வாசலில் நின்று சத்தமிட்டார்.

நீ ஏன் மசமசன்னு நிற்குற? போய் சீக்கிரம் கிளம்பு! பேரனை அதட்டினார்.

 நானா? புரியாமல் கேட்டான்.

 ஆமா… உன் பொண்டாட்டிக்கு தானே வளைகாப்பு?அவளை தனியா அனுப்பக்கூடாது. ஜோடியா தான் போகணும்! போய் விட்டுட்டு காலையில் வந்தது.

 விஷ்ணுவின் முகம் சிறுத்து விட்டது.

ப்ளீஸ்ங்க அவன் கரம் பற்றி கெஞ்சலுடன் பார்த்தாள்.

வேணும் புள்ளைய சாமி ரூமுக்கு கூட்டிட்டு போய் ஆசீர்வாதம் பண்ணி திருநீறு பூசி அனுப்பி விடு! மகனை எவினார் அன்னம்.

நேத்ரா உன் மாமனார் மாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ என்றார் வேதம்.

 பிள்ளைதாச்சி பொண்ணை போய் காலில் விழ சொல்லனுமா? அதெல்லாம் வேண்டாம். வேணு பிடிவாதமாய் மறுக்க நேத்ரா சிரமம் பாராது அவர்கள் பாதம் பணிந்தாள் நேத்ரா.

மூச்சிரைக்க பாதம் பணிந்தவளை கண்டு கொள்ளாது ஜோதி நிற்க… அம்மாடி எழுந்திருமா! பதறியபடி வேணுமருமகளை தூக்கி விட்டார்.

விஷ்ணு கடுப்புடன் தாயை முறைத்தான்.

ஒரு கர்ப்பிணி பெண் காலில் விழறா…நல்லபடியா பெற்று பிழைத்து வான்னு சொல்ல துப்பில்லை. என்ன மனுஷி இவங்க? பல்லை கடித்தான்.

உலகத்தில் இல்லாம இவன் பொண்டாட்டி அதிசயமா உண்டாகி இருக்கா….இந்த தாங்கு தாங்குறான். உள்ளுக்குள் பொறுமிக் கொண்டிருந்தார் ஜோதி.

 வேணு தன் முன்னோர்களையும், இஷ்ட தெய்வத்தையும்,

குலதெய்வத்தையும் வேண்டி விபூதி பூசினார்.

 சரி இந்த பாலை குடிச்சிட்டு கிளம்புமா! மங்களம் ஒரு டம்ளர் பாலை நீட்டினார்.

 பொத்தாம் பொதுவாக அனைவரிடமும் விடை பெற்று கிளம்பினாள் நேத்ரா.

 போய் வருகிறேன் என்று நேத்ராவும் மாமியாருக்கு சொல்லவில்லை,போய் வா என்று ஜோதியும் வழி அனுப்பவில்லை.

“——————-”

 மாமியார் வீட்டில் தங்க வேண்டுமா? கல்யாணமான புது பெண் போல் அவ்வளவு சங்கோஜம் கொண்டான்.

 அவனுடனே இருந்து சிறு குழந்தை போல் கவனித்துக் கொண்டாள் நேத்ரா.

இரவு உணவின் போது மருமகன் கண் முன் வந்து அவனுக்கு சங்கடத்தை கொடுக்க விரும்பாமல் வெங்கி டைனிங் டேபிள் பக்கமே வரவில்லை.

எங்கே உங்க அப்பாவை காணோம்?கிசுகிசுப்பாய் மனைவியிடம் கேட்டான்.

 அவரை உங்க மாமனார் என்றும் சொல்லலாம்! அவளும் கிசுகிசுப்பாகவே அவன் காதில் பதில் கூறினாள்.

எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு? கோபம் போல் முறைத்தான்.

 உங்க மாமனாருக்கு உங்களை கண்டாலே வெட்கம் வெட்கமாக வருதாம்.

 ஏன் நான் என்ன அவருக்கு முறை பொண்ணா? விஷ்ணு லந்து பண்ண… சிரிப்பை அடக்கிக் கொண்டே பரிமாறினார் வேதம்.

 மருமகன் உண்டு முடித்து சென்ற பிறகு தான் மாமனார் வந்தார்.

வேதம் சற்று முன் மாப்பிள்ளை சொன்ன வார்த்தையை எண்ணி சிரித்துக்கொண்டார்.

 என்ன இளிப்பு?வெங்கடாசலம் எரிச்சலாய் கேட்டார்.

 உங்க மாப்பிள்ளை சொன்னதை நினைத்தேன் சிரித்தேன்.

என்ன சொன்னார் உன் அருமை மாப்பிள்ள? அவர் அழுத்தமாய் கேட்டார்.

விஷ்ணு சொன்னதை வேதம் சொல்ல… உள்ளுக்குள் வெட்க சிரிப்பு வந்தாலும் உன் மாப்பிள்ளைக்கு கொழுப்பு கூடிப்போச்சு என்றார் கண்களை உருட்டி மிரட்டி.

வீங்கி சுரந்த பாதங்களை வெதுவெதுப்பான உப்பு தண்ணீரில் நனைத்து கொண்டிருந்தாள் நேத்ரா.

ஏங்க மாமா சொன்ன மாதிரி பையன் பிறக்குமா? இல்ல பொண்ணு பிறக்குமா? சலுகைகள் கணவன் தோளில் சாய்ந்து ஆர்வமாய் கேட்டாள். இப்போதெல்லாம் அவள் அடிக்கடி ஆர்வமுடன் கேட்கும் கேள்வி இதுதான்.

 என்ன குழந்தையா இருந்தா என்ன?நல்லவிதமா சுகப்பிரசவம் ஆனால் சரி.தாடியை லேசாய் தடவிக் கொண்டான்.

 தாடி உங்களுக்கு நல்லாவே இல்லை. வழக்கம் போல் முகம் சுழித்தாள்.

நம்ம வீடுகளில் மனைவி நிறைமாத கர்ப்பினியாக இருந்தால் முகச்சவரம் செய்ய மாட்டாங்க செல்லம்.

அதுக்காக…இன்னும் ஒன்றரை மாசம் தாடி வச்சிட்டு அலைவீங்களா?

 அதுக்கு ஏன்டி முகம் இப்படி போகுது?

 இதுக்கு மேல நான் எப்படி இருந்தா என்ன? அவன் சலிப்பு போல் சொல்லி சிரித்தான்

இது வழக்கமா பொம்பளைங்க பேசுற டயலாக் சார்.

 ஏன் பொம்பளைங்களுக்கு காப்பிரைட்ஸ் கொடுத்துட்டாங்களா?

கேலியாய் சிரித்தவனின் இதழ் பற்றி கடித்து முத்தமிட்டாள்.

என் பொண்டாட்டி செம க்யூட்டா இருக்கா… கட்டி அணைக்கும் போது இடிக்கும் வயிற்றில் காதலுடன் முத்தமிட்டான்.

அப்படியா? நம்பாமல் கேட்டவளை மோகத்துடன் பார்த்தான்.

என்ன லுக்கு? புருவத்தை தூக்கி கேட்டாள்.

குழந்தை பிறந்தால் என் பொண்டாட்டி என்னை எல்லாம் கண்டுக்குவாளான்னு யோசித்தேன்…

ஏன் கண்டுக்காம?எனக்கு என் விஷ்ணு தான் ஃபர்ஸ்ட்.என் விஷ்ணுக்காக தான் இந்த குழந்தையே … அவன் மார்பில் புதைந்தவளை காதல் பெருக்குடன் அணைத்து அவள் நெற்றியில் அவ்வளவு பெருமிதத்துடன் முத்தமிட்டான்.

 இரவு முழுவதும் அட்டை பூச்சி போல் அவன் மார்போடு ஒன்றிக்கொண்டாள்.

பயமா இருக்கா? அவள் கண்ணம் வருடினான்.

 லைட்டா….! கண் சிமிட்டினாள்.

அதெல்லாம் ஒன்னும் இல்லை.நான் உன் கூடவே இருப்பேன்! அவள் சிகை கோதினான்.

 லேபர் ரூமில் அலோ பண்ண மாட்டாங்க!

 நான் டாக்டர்கிட்ட பேசிட்டேன். அவங்க ஓகே சொல்லியாச்சு. கண்டிப்பா உன் கூட இருப்பேன்.

 அப்படியா? அப்போ என் வலியில் கொஞ்சம் வாங்கிக்கோங்க! கிளுக்கி சிரித்து அவன் மடியில் தஞ்சம் புகுந்தால்.

 அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் கொஞ்சம் இல்லை மொத்த வலியும்யும் நானே வாங்கிப்பேன் என்றான்.

கணவனின் பேச்சில் கண்ணீர் கரை புரண்டு கொட்டியது அவளுக்கு.

“———————”

 நேத்ரா கவனமா இருக்கணும், பாத்ரூம் டைல்ஸ்சில் பார்த்து நடக்கணும், அம்மா கொடுக்கிற சோம்பு கசாயம் கரெக்டா குடிக்கணும்,தாறுமாறா தூக்கத்தில் உருண்டு புரண்டு படுக்கக் கூடாது,தோட்டத்தில் கொஞ்சம் வாக் பண்ணனும். வெயிட் எ மினிட்! வாட்டர் ப்ளீஸ் தண்ணீர் டம்ளரை நீட்டினாள்.

உனக்கு கிண்டலா இருக்கா? அவள் காதை திருகினான்.

இல்லையா பின்ன? இன்னும் மூன்று நாள் தானே இங்கே இருக்க போறேன்? திரும்ப வந்து கூட்டிட்டு போய் ஹவுஸ் சரஸ்ட் பண்ண போறீங்க. அதுக்கு இவ்வளவு அட்வைஸ் மழையா? கேலியோடு பெருமையும் இழையோடியது அவள் குரலில்.

 வெங்கடாசலம் வேதவல்லி தம்பதிகளுக்கு பெருமையாக இருந்தது.மாப்பிள்ளை இப்படி தங்கமாய் தங்குகிறாரே…

 அத்தை நேத்ரா பத்திரம் நான் சன்டே வந்து கூட்டிட்டு போயிடுவேன். அதுவரைக்கும் கவனமா பார்த்துக்கோங்க!

 அவ எங்க பொண்ணு,அவளை உங்களை விட நல்லா நாங்க பார்த்துக் கொள்வோம்.அவ குழந்தை பிறந்து ஏழு மாசம் கழித்துதான் வருவா. அதுவரைக்கும் இங்கே தான் இருப்பா… வெங்கடாசலம் முகத்தில் அறைந்தார் போல் பேசினார்.

பல்லை நரவென கடித்த விஷ்ணுவை பார்த்த வேதம்….என்னங்க மாப்பிள்ளை சொல்றது தான் கரெக்ட்! இந்த மாதிரி நேரத்துல நேத்ராக்கு மாப்பிள்ளை கூட இருக்கத்தான் தோணும்

.நீங்க வந்து கூட்டிட்டு போங்க!ஊடாலே புகுந்து பிரச்சனையை அமுக்கிவிட்டார் வேதம்.

விஷ்ணு விடைபெற்று கிளம்ப…ஏக்கமாய் பார்க்கும் மகளை பார்க்கும்படி கணவருக்கு ஜாடை காட்டினார் வேதம்.புரிந்து கொண்ட வெங்கி தலையை சொரிந்தார்.

“—————–”

 மனமே இல்லாமல் மனைவியை தாய் வீட்டில் விட்டுவிட்டு வந்த விஷ்ணுவிற்கு ஏதோ ஒரு புரியாத பயம் மனதை அழுத்தியது.

விஷ்ணுவின் கையணைப்பையும்,அவன் கதகதப்பையும் நாடிய மனதை எண்ணி சிலிர்த்துக்கொண்டு கட்டிலில் வந்து அமர்ந்தாள்.

என்னம்மா சோர்வாய் இருக்கா? வேதம் மகளின் முகம் பார்த்தார்.

லேசா மூச்சு முட்டுதும்மா! மயக்கம் வர்ற மாதிரி இருக்கு.

ஒன்னும் இல்லடா… மாசம் கூட கூட குழந்தை எடை அதிகமாகிறது இல்லையா… அதுதான் மூச்சு முட்டுது!

நீ சரியாவே சாப்பிடல… இரு நான் போய் ஜூஸ் கொண்டு வரேன்.ஏசியை ஆன் செய்து தலையணை போட்டு மகளை படுக்க வைத்து விட்டு போனார்.

 ஒரு மாதுளையை கழுவி உறித்துக் கொண்டிருக்கும் போதே “அம்மா’ என்ற சத்தம்.

மகளின் குரல் கேட்டு பதறி ஓடினார்.

 அம்மா அம்மா என்று பயத்துடன் கரை படிந்த நைட்டியை காட்டினாள்.

 ஏதோ சரியில்லை என்று உணர்ந்து கொண்ட வேதம் என்னங்க காரை கிளப்புங்க என்று பதறினார்.

 கையில் கிடைத்த துணிகளை அள்ளி பையில் திணித்துக் கொண்டவர் ஹாஸ்பிடல் ஃபைலை எடுத்துக்கொண்டு மகளின் முகத்தை துடைத்து ஷாலை எடுத்து போர்த்திவிட்டார்.

 அப்போதுதான் ஆபீஸ் வந்து முக்கியமான கேஸ் கட்டை பிரித்தான் விஷ்ணு.

 மொபைல் அழைப்பில் வெங்கடாசலம்…. அவர் மருமகனுக்கு விபரம் சொல்ல பதறி அடித்து காரை கிளப்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!