Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யாதுமாகி ♥️34

யாதுமாகி#34

 அம்மா சொல்வது போல் நான் செய்தது தவறு தானே…. இன்னும் சிறு பிள்ளை போல் நடந்து கொள்கிறேன்.நாளை நம் வீட்டுக்கு போய் விட வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்தாள் நேத்ரா.

 தன்னால் தாய் தந்தைக்கு சிரமம் என்று அவளுக்கு புரிந்தது.

 இரவு உணவை பெயருக்கு உண்டு முடித்து குழந்தைக்கு அரை இட்லியை பாலில் குழைத்து ஊட்டி விட்டு கட்டிலில் கவிழ்ந்தவளுக்கு ஏனோ மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைப்புற்றது.



Advertisement

 அன்று செய்த அதே தவறை என்றும் செய்திருக்கிறேன். அன்று விஷ்ணு வீட்டில் இல்லை சொல்லாமல் வந்து விட்டேன். இன்று அருகே அவர் இருந்தும் சொல்லாமல் வந்து விட்டேனே… குற்ற உணர்வின் மிகுதியில் மன வலி மிகுந்து நிற்க உறக்கம் தொலைத்தவள் சாரி என்ற ஒற்றை வார்த்தையை டைப் செய்து அனுப்பி விட்டு மொபைலை பார்த்தவளுக்கு அடுத்த நிமிடமே ப்ளூ டிக் வந்து விழுந்தது.

பெற்றவளுக்கும் என் உணர்வு புரியவில்லை, கட்டியவளுக்கும் புரியவில்லை என்ற வேதனையில் உழன்று கொண்டிருந்தவன் காலையிலிருந்து இன்னும் உண்ணவில்லை.இதோ இரவு 9:00 மணிக்கு மேல் ஆகிவிட்டது உறக்கமும் தழுவவில்லை.

 விஷ்ணு ஒரு வழக்கை கையில் எடுக்கிறான் என்றால் எதிர்தரப்பில் கேஸை எடுக்கவே மற்ற வழக்கறிஞர்கள் யோசிப்பார்கள்.

Advertisement

நூற்றுக்கு எண்பது சதவீதம் அவன் தொட்ட வழக்கில் வெற்றியே…கிரிமினல் வழக்கில் இந்த வெற்றி சதவிகிதம் இமாலயம் என்பது கருப்பு அங்கே அணிந்தவர்களுக்கே புரியும்!

Advertisement

 அவனின் சட்ட அறிவு, ஷரத்துகளை கரைத்து குடித்த வித்தகம். எதிராளியை அடக்கி ஆளும் வல்லமை. பேச்சு கம்பீரம்,பிறர் மீது அவன் செலுத்தும் ஆதிக்கம் அப்படி இருக்கும்.

தொழிலில் புலியாக, புயலாக இருப்பவன் குடும்ப வாழ்க்கையில் எவ்வளவு வளைந்து கொடுத்தும் அவனால் தாயையும் தாரத்தையும் சமாளிக்க முடியவில்லையே .

 நேத்ராவை தவறு சொல்வதற்கில்லை.அவள் எவ்வளவோ பொறுத்துதான் போகிறாள். அவள் எதிரில் அவளை பெற்றவர்களை கடும் சொற்களால் விமர்சித்தால் எந்த பிள்ளைதான் பொறுத்து போகும்?

Advertisement

 அம்மாவிற்கு ஏன் இவ்வளவு ஆணவம்? இவர் போகும்போது எதை கொண்டு போக போகிறார்?தான் என்ற மமதை இவருக்கு என்று தான் அழியும்? விரக்தியாய் கண்மூடியவன் குழந்தை முகம் காண எண்ணி மொபைலில் கேலரியை திறந்தான. குழந்தை போட்டோவை ஆசையாய் பார்த்துக் கொண்டிருக்கும்போது தான் நேத்ராவின் மெசேஜ் வந்தது.

 சாப்பிட்டியா? பிரணவ் என்ன பண்றான்? அவனிடமிருந்து பதில் மெசேஜ் வந்தது.

 சாரி, மறுபடியும் அதே வார்த்தை அவளிடம் இருந்து வந்தது.

எதுக்கு சாரி?

 உங்ககிட்ட கூட சொல்லாம வந்துட்டேன்.

 பரவாயில்லை…உன் மனநிலை எனக்கு புரியாம இல்லை. நீ நம்ம வீட்டுக்கு வந்திருந்தா கோபமா ஏதாவது பேசி இருப்பே,அம்மாக்கும் உனக்கும் பெரிய பிரச்சனை வந்திருக்கும்.

தேங்க்ஸ்!என்னை புரிஞ்சிக்கிட்டதற்கு.

 உன்னை புரிந்து கொள்ள முடிந்ததால் தான் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

தேங்க்ஸ்!

இதுக்குமா?

ம்ம்ம்ம்…சாப்பிட்டீங்களா?

இல்லை.

 ஏன்? மதியமாவது சாப்பிட்டீங்களா?

 இல்லை.

ஏன்?

 பசிக்கல!

பசிக்கலையா? நான் அப்செட் பண்ணிட்டேன். அதுதானே மூட் ஆஃப் உங்களுக்கு?

 அப்படியும் தான்.

 அடுத்து அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. விஷ்ணுவிற்கு தெரியும் அவள் அழுகிறாள் என்று. உடனே கால் செய்து விட்டான்.

கண்களை துடைத்துக்கொண்டு மொபைலை காதுக்கு கொடுத்தாள்.

என்ன நேத்து.. அழறியா?

 இல்லையே…

 பொய் சொல்லாதே! எனக்கு தெரியும்.

 ஆமான்னா என்ன பண்ண போறீங்க?

என்ன பண்ணனும்? இதழ் கடித்து லேசாக முகிழ்ந்த குறும்பை கேட்டான்.

என் மேல் கோபம் உங்களுக்கு. அதுக்கு தானே இப்படி சாப்பிடாம உங்களையே வருத்திக்கறீங்க..

  எனக்கு யாரு மேலயும் கோபம் இல்லை.நான் இம்மெச்சுரா நடந்துக்க டீன் ஏஜ் பையன் இல்லை,ஒரு குழந்தைக்கு தகப்பன்.

 கொஞ்சம் மனசு சரியில்லை அவ்வளவுதான்.

 அத்தை பற்றி தெரிந்தும் நான் கோபப்படுறது தப்புதான். மீண்டும் வருத்தம் இழை ஓடியது அவள் குரலில்.

 நீயும் எவ்வளவுதான் பொறுத்துப் போக முடியும்? உனக்கும் சுயமரியாதை இருக்கே.

நீங்க கல்யாணமே வேண்டாம்னு நிம்மதியா இருந்தீங்க. நான் உங்க லைஃபில் காலை சுத்திலும் பாம்பா வந்துட்டேன்.

அடி லூசு, ஏன்டி புலம்பி தொலைக்குற? எந்த குடும்பத்தில் பிரச்சனை இல்லை?

நான் உன்னை கல்யாணம் பண்ணினது தவறு என்று ஒரு நொடி கூட யோசித்தது இல்லை.எனக்கானவள் நீதான். நீ இல்லைனா நான் இன்னும் கல்யாணம் பண்ணாம கட்ட பிரம்மச்சாரியா தான் சுத்திக்கிட்டு இருந்திருப்பேன்.

 யூ நோ ஒன் திங். உன்னை தான்னு இல்லை எந்த பொண்ணை நான் கட்டி இருந்தாலும் அம்மா இப்படித்தான் நடத்துவாங்க.

 நான் காலையில் வந்துடறேன் அவள் குரலில் அழுகையும் காதலும் போட்டியிட்டது.

வேண்டாம்! கொஞ்ச நாள் அங்கேயே இரு.

என்னது கொஞ்ச நாளா?அவள் விக்கித்தாள்.

என் மேல் கோபம் இல்லை என்று சொன்னீங்க?

 ஆமாம்.

அப்புறம் என்னை இங்கேயே இருக்க சொல்றீங்க!

கொஞ்சம் ஃப்ரீயா ரிலாக்ஸா இருப்பேன்னு தான்.

 நம்ப முடியலையே? அவள் படபடப்பாய் கேட்டாள்.

கொஞ்ச நாள் லவ் பண்ணுவோம். கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ண டைம் இல்லையே இப்ப ஆற அமர லவ் பண்ணுவோம் ஓகேவா?

 அப்படியா மிஸ்டர் ஸ்வீட் சிக்ஸ்டீன்?

 எஸ் மை டியர் ஓல்டு லேடி!

ஹலோ யாரு ஓல்டு லேடி? எகிறினாள்.

 ட்ராக் மாத்தாம என் கேள்விக்கு பதில் சொல்லு.

 என்ன கேட்டீங்க?

லவ் பண்ணுவோமான்னு கேட்டேன்.

 லவ்…லவ் பண்ணிட்டாலும்…நொடித்துக் கொண்டாள்.

ஏன்டி… லவ் பண்ண மாட்டோமா? சிறப்பா செஞ்சிடுவோம்.அவன்

கிசுகிசுப்பாய் முணுமுணுத்தான்.

 சார் ரொமாண்டிக் கிங்! அப்படியே லவ் ஃபீலிங்கில் விழுந்து தத்தளித்து பறந்தோடி வந்துடுவாரு!

ஏன் வர மாட்டோமா?

அவன் குழைவாய் கேட்டான்.

ம்ம்ம்ம்….வந்துட்டாலும்…. அவள் எரிச்சலுடன் முணகினாள்.

வந்துட்டேன்டி என் செல்லப்பொண்டாட்டி…திரும்பி பாரு! கண் சிமிட்டி சிரித்தவன் வாயிலில் நின்று கையசைத்தான்.

நிஜமா? அவள் பிரம்மையுடன் நோக்க…மொபைலை கட்டிலில் வீசிவிட்டு வேகமாய் அவளை இழுத்தனைத்து இதழ் முத்தம் பதித்தான்.

அய்யோ…. என்ன இது? விடுங்க…அவனை போராடி விலக்கினாள்.

நீ தானே…இது கனவா? நிஜமான்னு? பிரம்மையோட பார்த்த. கனவல்ல நிஜம் என்று புரிய வைக்க தான் இந்த லிப் லாக்.

 அவனது சரசமான பதிலில் அவள் கன்னம் செம்மையுற்றது.

 போன்ல தானே பேசினீங்க, அதுக்குள்ள எப்படி வந்தீங்க? ஆச்சரியமாய் கேட்டாள்.

 கரைமேடும் இந்திரா நகரும் வெவ்வேறு கண்டதிலா இருக்கு? 13 கிலோமீட்டர் ஒரு தூரமா? அவளை இழுத்து தோள் வளைவில் புதைத்துக் கொண்டான்.

 எங்க அம்மா வீட்டுக்கு நீங்களா வந்து இருக்கீங்க?ஆச்சரியமா இருக்கு.அவள் நம்பாத பார்வை பார்த்தாள்.

என்ன பண்ண? எனக்கு சொந்தமான என் ப்ராப்பர்ட்டிஸ் இங்கே தானே இருக்கு.அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

 நீங்க சாப்பிடவே இல்லையே.. சட்டென நினைவிற்கு வந்தவள் விலகி எழ…

 என் மாமியார் இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பிட கூப்பிடுவாங்க பாரு! அவள் சிகை கிளறி சிரித்தான்.

 நேத்துமா… குரல் கொடுத்துக்கொண்டே கதவை தட்டி விட்டு உள்ளே வந்து உணவு தட்டை வைத்து விட்டுப் போனார் வேதம்.

எப்பூடி?என்பதை போல் பார்த்தான்.

அவள் அமைதியாக அவன் முகம் பார்க்க…

 நான் மெயின் டோரை தட்டும்போதே என்னை உன்னி பாய் பார்த்தாங்க நான் சாப்பிடவில்லை என்று புரிஞ்சுகிட்டாங்க.

 “அதுதான் எங்க அம்மா” பெருமையாய் கூறியவளை வலியுடன் பார்த்தான்.

 அவன் தாய் அப்படி இல்லை என்பதன் மறைபொருள் அதில் ஒளிந்து இருப்பது புரியாத மட்டி அல்ல அவன்.

 சரி சாப்பிடுங்க! என்று உணவு தட்டை அவன் முன் வைத்தாள்.

 அவளுக்கு ஊட்டி விட்டபடியே அவனும் சாப்பிட்டு முடித்தான்.

 நேத்ரா கொஞ்ச நாள் இங்கேயே இரு!அவளை மார்பில் சாய்த்து விரல் நீவினான்.

 என்னால உங்களை பார்க்காமல் இருக்க முடியாது! அவனை காதலுடன் கட்டிக் கொண்டாள்.

என்னால் மட்டும் உன்னையும் குழந்தையையும் விட்டுட்டு இருக்க முடியுமா?

 வீட்டுல ஏதாவது பிரச்சனையாங்க? கவலையுடன் கேட்டாள்.

அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீ கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ஸா இருக்கிற மாதிரி தோணுச்சு. உனக்கும் ரெஸ்ட் இல்ல.இங்கே இருந்தா கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பேல்ல,

அதுக்காகத்தான் சொன்னேன்.

 கொஞ்ச நாள் உன் அம்மா அப்பாவோட ஹேப்பியா இரு! நான் வாரம் ரெண்டு முறை வந்து பார்த்துட்டு போறேன்.

 அவள் முகம் வருடி இரு கன்னங்களிலும் முத்தமிட்டான். வீட்டில் நடந்தது பற்றி அவளிடம் மூச்சு விடவே இல்லை.

“—————————”

 அழுது அரற்றினாரஜோதி.

என் நிலை இப்படியா ஆகணும்? எண்ணி எண்ணி குமுறினார்.

இத்தனை ஆண்டில் அதிர்ந்து பேசாத கணவனா இன்று கை நீட்டியது?இன்னமும் அவரால் நம்ப முடியவில்லை.

ஆசையாய் பெற்ற செல்ல மகனோ பெற்றதோடு உன் கடமை முடிந்தது. நீயா வளர்த்தாய்?என்று சம்மட்டி கொண்டு அடித்துவிட்டான்.

 தன்னிடம் முகம் சுழித்து நேருக்கு நேர் குறை கூறாத மாமியார் கிழவி இன்று இவ்வளவு பேசிவிட்டதே.

 எங்கிருந்தோ வந்து என் ஆட்சி அதிகாரத்தை ஆட்டம் காண வைத்து விட்டாளே…அவர் உள்ளம் கொதித்தது.

 அழுது,அழுது ஆற்றாமையில் உறங்கிப் போனார் ஜோதி.

“———————-”

 விஷ்ணு குழந்தை நினைப்பாவே இருக்கு.நேத்ராவை கூட்டிட்டு வாப்பா! வேணு மகனிடம் வேண்டினார்.

 கொஞ்ச நாளில் வந்துடுவாப்பா. அவங்க அம்மா அப்பாவுக்கும் குழந்தை மேல ஆசை இருக்கும் இல்லையா?

தந்தையை சமாதானம் செய்தான் விஷ்ணு.

 பேசாம வடலூர் பக்கம் வீடு பார்த்துட்டு போயிடுப்பா. அன்னம் வேதனையுடன் பேரன் முகம் பார்த்தார்.

பேரன் படும்பாடு அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.அதுதான் மனதை திடப்படுத்திக் கொண்டு அவனை தனிக்குடித்தனம் போக சொல்லிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!