Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யாதுமாகி ♥️37

யாதுமாகி #37

 நேத்து டைம் ஆச்சு சீக்கிரம் கிளம்பு! மகளை அவசரப்படுத்தினார் வேதம்.

 இல்லம்மா பிரணவ் அப்பா… தயங்கி தயங்கி சொல்லி முடித்தாள்.

மாப்பிள்ளை ஏதோ கோபத்தில் சொல்லியிருப்பார். அதுக்காக போகாம இருக்க முடியுமா? அது சரியா இருக்காது.



Advertisement

இல்லம்மா அங்க ஏதோ நடந்திருக்கு. இல்லாம அவர் இப்படி எல்லாம் பேச மாட்டார்.

 சரி,நீ உன் மாமனாருக்கு போன் போட்டு என்னன்னு கேளு?

 நேத்ரா உடனே வேணுவிற்கு அழைத்தாள்.

Advertisement

 அவருக்கு நடந்ததை சொல்ல சங்கடமாய் இருந்தது. லேசாக கோடிட்டு காட்டினார்.

Advertisement

 உனக்கு ஜோதியைப் பற்றி தெரியாதா?இங்கே சூழ்நிலை சரியில்லை இப்போ நீ வரவேண்டாம்.குழந்தையை பாரும்மா… நம்ம வீட்ல இருந்து சாப்பாடு வரும். நீ விஷ்ணுவுக்கு போன் பண்ணி பேசு! கொஞ்சம் டென்ஷனா கிளம்பிப் போனான்.

 நேத்ரா ஏற்கனவே காயப்பட்டு தானே தாய் வீடு போனாள் இப்போது பார்க்க வந்தால் ஜோதி மீண்டும் கருந்தேள்நாவால் கொட்டுவார். தேவையற்ற சங்கடம் வேண்டாம் என்று வேணு மருமகளை வர வேண்டாம் என்று கூறினார்.

நேத்ரா கணவனுக்கு அழைத்தாள். ஸ்விச்ட்டு ஆஃப் ஆகி இருந்தது.

Advertisement

நேத்ரா நிலை குலைந்து அமர்ந்து விட்டாள். இந்நிலையிலுமா மாமியார் இப்படி பேசுகிறார்? நொந்து போனாள்.அது ஏன் சில மனிதர்கள் எந்த நிலையிலும் இறங்கி வர தயாராக இருப்பதில்லை. இவர்களெல்லாம் என்ன விதமான படைப்பு?

“———————”

 கண் மண் தெரியாத கோபம் விஷ்ணுவிற்கு.பெத்த பிள்ளையை விட பேரப்பிள்ளை ஒசத்தி என்பார்களே…

அம்மாவுக்கு ஏன் பெத்த பிள்ளை மேலும் பிடிப்பு இல்லை,பேரப்பிள்ளை மேலும் அன்பு இல்லை?

 கட்டுப்படுத்த இயலாத கோபத்துடன் நேரே அவன் வந்து சேர்ந்தது சுரேனின் கடைக்கு.

 என்ன மச்சி ஹாஸ்பிடலில் இருப்பேன்னு பார்த்தேன்.

 சுரேன் விஷ்ணுவின் முகம் பார்த்தே கண்டு கொண்டான் ஏதோ பிரச்சனை என்று.

 பதில் பேசாது நாற்காலியில் அமர்ந்து சட்டையின் முதல் இரு போத்தன்களை கழட்டி விட்டு சற்று சரிந்து அமர்ந்து கண் மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

 குளிர்சாதன பெட்டியில் இருந்து சில்லென்ற நீரை கொண்டு வந்து நண்பனின் முன் வைத்தான் சுரேன்.

மட மடவென்று என்று குடித்து சூட்டை தனித்துக் கொள்ள முயன்றான்.

 என்னாச்சுடா? ஜோதிமா நல்லா இருக்காங்க தானே…

நேற்று இரவு முழுவதும் விஷ்ணுவோடு பேச்சு துணைக்கு மருத்துவமனையில் இருந்தது சுரேன் தான்.

 விஷ்ணுவிடம் பதில் இல்லை.

 என்னடா மச்சி… மிதமான அழுத்தத்துடன் ஆதரவாய் தோள் பற்றினான்.

ம்ச்…. சளிப்புடன் முகம் சுளித்தவன் நடந்த யாவற்றையும் நண்பனுடன் பகிர்ந்து கொண்டான். இதுவரை இப்படி மனம் விட்டு நண்பர்களிடம் குடும்பக் கதையை பேசியவன் அல்ல.இன்று ஏனோ பொறுக்க முடியாத அளவிற்கு மன அழுத்தம் அவனுக்கு.

 இன்னைக்கு இருக்கிறவன் வாழ்க்கை நாளைக்கு நிரந்தரம் இல்லை. இந்த நிலையில்லாத உலகத்தில் உங்க அம்மா ஏன் இப்படி நடந்துக்கிறாங்க? கடுப்பானான் சுரேன்.

 யார் சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்கடா…கோபமா வருது. நானும் எவ்வளவு நாளைக்கு நேத்ராவையே அடக்கி வைக்கிறது? யாருக்கும் கட்டுப்படலைன்னா என்ன மனுஷி அவங்க. டென்ஷனை குறைக்க நகம் கடித்தான்.

கொஞ்ச நாளைக்கு பிரிந்து இருந்தா உன் அருமை புரியும். எங்க கீழ் வீடு காலியா தான் இருக்கு, கொஞ்ச நாள் வந்து தனியாக இருடா! அப்போதான் அவங்களுக்கு உரைக்கும் நண்பனின் தோள் தட்டினான்.

 நண்பனின் கூற்றுக்கு சரி என்றோ வேண்டாம் என்றோ விஷ்ணு பதில் சொல்லவில்லை.

 சற்று நேரத்தில் வாசு உணவு பார்சலுடன் வந்து சேர்ந்தான்.

 என்னடா வாசு, விஷ்ணு இங்கே இருக்கான்னு உனக்கு தெரியுமா? சுரேன் வியப்பாய் கேட்டான்.

சும்மாதான்… எதேச்சையா வாங்கிட்டு வந்தேன். பேசியபடியே விஷ்ணு முன் தக்காளி சாதம் பார்சலை வைத்தான்.

பசிக்கலடா… முறைப்புடன் வாசுவின் பக்கம் பார்சலை தள்ளிவிட்டான்.

அது எப்படி பசிக்காம போகும்?மணி மூணு ஆகப்போகுது… ஒழுங்கு மரியாதையா சாப்பிடு! மீண்டும் விஷ்ணுவின் பக்கமே உணவை தள்ளிவிட்டான் வாசு.

டேய் வக்கீலு ஓவர் சீன் போடாம சாப்பிடு. சுரேன் தன் பங்கிற்கு கொஞ்சம் மிரட்ட…அதற்கு மேல் பிகு பண்ணினாலும் நண்பர்கள் விடமாட்டார்கள் என்பதால் சாப்பிட்டு முடித்தான் விஷ்ணு.

 என்னடா நேத்ரா போன் பண்ணி நான் சாப்பிடலைன்னு சொன்னாளா? சிரித்தபடி கேட்டான் விஷ்ணு.

 எப்படி மச்சி? எப்புட்ரா இப்படி? வாசு நண்பனை பாய்ந்து கட்டிக் கொண்டான்.

 அது அப்படித்தான்…நேத்ரா எப்போ, எப்படி என்ன செய்வான்னு எனக்கு நல்லாவே தெரியும்! பெருமையாய் புன்னகை பூத்தான்.

இதே அண்டர்ஸ்டாண்டிங் உங்க அம்மாக்கு இருந்தா நல்லா இருக்குமே சுரேந்தர் பெருமூச்சு விட்டான்.

 ஆமான்டா விஷ்ணு என்ன குறைச்சல் உங்க குடும்பத்தில்? கோடிக்கணக்கில் சொத்து சுகம் இருக்கு, நிறைவான வாழ்க்கை வாழற உங்க அம்மாவுக்கு என்னதான் பிரச்சனை? கூட்டிட்டு போய் நல்ல மனநல மருத்துவரிடம் காட்டணும் இந்த அம்மாவை.

 ஒரு மருமகளை வைத்து வாழறதில் அவங்களுக்கு அப்படி என்ன கர்வம் வேண்டி கிடக்கு? நீ எப்படித்தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போறியோ… எனக்கு நினைக்கவே மூச்சு முட்டுது வாசு கடுகடுத்தான்.

  என்னடா பண்ணப் போற? சுரேன் நண்பனுக்காய் கவலை கொண்டான்.

 சட்டுன்னு எல்லாத்தையும் உதறிப்போட்டு போக ரொம்ப நேரம் ஆகாது. அப்பா ஊருக்குள்ள நாலு பேருக்கு நியாயம் பேசுற பெரிய மனுஷன்.நான் போய்விட்டா அப்பாக்கு கௌரவ குறைச்சல் ஆகிடும்.பாட்டிக்கு கரைமேடு தான் உலகம். பிறந்ததும் கல்யாணம் கட்டிக்கிட்டதும் அதே ஊர்தான். அவங்களை விட்டுட்டு என்னால் போக முடியாது.அவங்க எங்க கூடேயும் வர மாட்டாங்க.

 எல்லாத்தையும் யோசித்து தான் மென்னு முழுங்கிட்டு இருக்கேன். கனத்த குரலில் கூறிய நண்பனை பாவமாய் பார்த்தனர் உயிர் தோழர்கள்.

 இதுக்கு என்னதான்டா முடிவு? வாசு பெருமூச்சுடன் கேட்டான்.

ஒரு சிட் பண்ட் கேஸ் விஷயமா கோயம்புத்தூர் வரைக்கும் போறேன். வர மூனு நாளாகும். வந்த பிறகு கண்டிப்பாக ஒரு முடிவு கட்டுறேன். தன்னை நிலைப்படுத்திக் கொண்டு தலைக்கு மேல் சுழலும் மின்விசிறியை வெறித்தான் .

“———————”

 அவ்வளவு கொடும்பாவியா நானு? பெத்தவ ஆஸ்பத்திரியில் செத்துப் பிழைத்து கிடக்கிறேன் என்ன ஏதுன்னு கண்டுக்கிட்டானா? அவன் இவ்வளவு மாறிட்டானா, அந்த சிறுக்கி மாத்திட்டாளா? தன் முன் நீட்டப்பட்ட இட்லியை தட்டிவிட்டார்.

 புரியாம பேசாத ஜோதி, விஷ்ணு கேஸ் விஷயமா கோயம்புத்தூர் வரைக்கும் போய் இருக்கான். என்கிட்ட சொல்லிட்டு தான் போனான். வேணு இடம் பொருள் கருதி தன்மையாய் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.

 உங்ககிட்ட சொல்லிட்டு போவான்,நீங்க வேண்டப்பட்டவரு! என்கிட்ட சொல்லுவானா? நான் என்ன அவனை பெத்தனா?வளர்த்தனா?ஜோதி தன் இராமாயணத்தை நீட்டி முழக்க ஆரம்பித்தார்.

ம்ம்மா…மண்டையில் அடிபட்ட மாதிரி நடந்துக்காதேம்மா. ஹாஸ்பிடலில் மானம் போகுது. வினிதா தலையில் அடித்துக் கொண்டாள்.

 வினி மூனு மணிக்கு டிஸ்டார்ஜ்னு சொல்லி இருக்காங்க.நீ எல்லாத்தையும் பேக் பண்ணு! அவ சாப்பிடட்டும் பட்டினி கிடந்து சாகட்டும். கோபமாய் வெளியேறினார் வேணு.

போங்க…எல்லாரும் போங்க. நான் செத்து தொலையறேன். அடிபட்டப்பவே போயிருந்தா உங்களுக்கெல்லாம் நிம்மதியாய் இருந்திருக்கும். உடைந்து அழுதார் ஜோதி.

 உதாசீனத்தை ஏற்காத அவர் மனது கடும் அழுத்தத்தில் இருந்தது. யார் மாட்டினாலும் கடித்து குதறிக் கொண்டு தான் இருந்தார்.

“——————”

 நேத்ராக்கு இருப்பு கொள்ளவில்லை தான் மட்டும் கோபித்துக் கொண்டு வரவில்லை என்றால் இவ்வளவு பிரச்சனை இல்லையே…தன்னை தானே நொந்து கொண்டாள்.

 இந்த பெண்ணுக்கு இந்த மண்டை குடைச்சல் தேவையா? மகாராணி மாதிரி நிம்மதியாய் வாழ்ந்திருக்கலாமே… வெங்கடாசலம் மகள் வாழ்க்கை செல்லும் திக்கை எண்ணி கவலை கொண்டார்.

 வீட்டுக்கு வந்த ஜோதி யாருடனும் எதுவும் பேசவில்லை. ஒரு வழியாக ஜோதி ஓய்ந்து விட்டார்.

 பிரச்சனை இதோடு அமுங்கி விட்டது என்று அன்னமும் வேணுவும் சற்று ஆசுவாசமடைந்தனர்.

 நேத்ரா இன்னும் கொஞ்ச நாள் அம்மா வீட்டில் இருந்துவிட்டு வரட்டும் என்றே அன்னம் எண்ணினார்.

“——————”

 நேத்ரா சாப்டியா? குழந்தை என்ன பண்றான்? கணவனின் குரல் கேட்டு விம்மினாள்.

நேத்ரா அழாதே ப்ளீஸ்.

எங்கே இருக்கீங்க?

கோயம்புத்தூர்.

அவள் விம்முவது அவனுக்கு நெஞ்சை அடைத்தது.

சாரிமா கொஞ்சம் மூட் அப்செட்.

 யாருகிட்டயும் பேசும் மனநிலையில் நான் இல்லை அதுதான் போன் சுவிட்ச் ஆப் பண்ணி வச்சுட்டேன்.

அதுக்காக சொல்லாம போவீங்களா?

ஸாரி சொல்லிட்டேன்.

அவன் குரலில் இருந்த வருத்தம் அவளுக்கு புரிந்தது.

எப்போ வருவீங்க?

 ஆன் த வே. நைட் வீட்டுக்கு வந்துடுவேன்.

அப்படியா?நாளைக்கு நான் நம்ம வீட்டுக்கு வந்துடவா?

 வேண்டாம்! கொஞ்ச நாள் போகட்டும். நானே வந்து உன்னை அழைசுட்டு போறேன்.

நீ சாப்பிட்டு தூங்கு.

 ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? உங்க மனதில் என்ன தான் நினைப்பு? என் மேல என்ன கோபம்னு சொன்னா தானே புரியும்? அவளுக்கு கோபமான கோபம்.

ஒன்னும் இல்லம்மா நீ சாப்பிட்டு தூங்கு ப்ளீஸ் .

“——————”

 வரும் வழியில் உணவை முடித்துக் கொண்டு நள்ளிரவு வீடு வந்து சேர்ந்தான் விஷ்ணு.

நள்ளிரவு வந்ததினால் காலை 9 மணி வரை தூங்கி எழுந்தவன் குளித்து முடித்து உணவிற்காக கீழே வந்தான்.

 வினிதா மகளுக்கு இட்லி ஊட்டி கொண்டு இருந்தாள்

 தியா குட்டி மாமாக்கு இட்லி தரிய? குழந்தையின் கன்னம் பற்றி செல்லமாய் கிள்ளினான்.

இது பாப்பா இட்டலி. நான் தரமாட்டேன்… நீங்க வேற சாப்பிடுங்க! முகத்தை சுருக்கி கண்களை உருட்டியது தியா குட்டி.

 தட்டு வைக்கவா அண்ணா? வினிதா அண்ணன் புறம் திரும்பினாள்.

 அம்மா சாப்பிட்டாங்களா?

ம்ம்ம் இப்போது தான் கொடுத்தேன். சரியாவே சாப்பிடலை. நான் மிரட்டி ரெண்டு இட்டலி சாப்பிட வைத்தேன்.

சரி நான் போய் பாத்துட்டு வரரேன்.நீ டிபன் எடுத்து வை!

 லேசாக மூடியிருந்த கதவை விலக்கிப் பார்த்தான் ஜோதி படுத்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.

உள்ளே நுழைந்த மகனை கண்டவுடன் அவனுக்கு முதுகு காட்டி புரண்டு படுத்துக்கொண்டார்.

 உடம்புக்கு பரவாயில்லையா? தயக்கமாய் கேட்டான்.

 அவரிடம் இருந்து பதில் இல்லை.

சற்று நேரம் மௌனமாக நின்றான்.

ஜோதியிடம் இருந்து எந்த அசைவும் இல்லை, பள்ளிகொண்ட பெருமாள் போல் இறுமாப்புடன் சயனித்து இருந்தார்.

 அதற்கு மேல் நிற்க விரும்பாதவன் வெளியேற முற்பட்டான்.

ஆத்தா வீட்டுக்கு போனவ போனவதான்… அங்கேயே புதைந்துட்டாளா?கேள்வி கேட்க ஆளிருந்தால் தானே… அவுத்து விட்ட காளை கணக்கா திமிறிகிட்டு திரியறா.

 அவ எக்கேடு போகட்டும். எங்கேயாவது கிடக்கட்டும்.என் பேரனை கொண்டு வந்து விடச் சொல்லு!

 யாரு யாருக்கு பேரன்? உச்சஸ்தாயியில் கேட்டான் விஷ்ணு.

 என்னடா குரலை உசத்துற? பதிலுக்கு எகிறினார் ஜோதி.

 உங்ககிட்ட பேசி டென்ஷனாக நான் விரும்பலை.

 அது சரி இன்னைக்கு ஆளும் தோளுமா வளர்ந்திட்ட என்ன வேணாலும் பேசுவ.

சிரமப்பட்டு தன்னை நிலை படுத்திக் கொண்டவன் வெளியேற திரும்பினான்.

 சொன்னது கேட்டுச்சா… என் பேரனை கொண்டு வந்து விட சொல்லு! எனக்கு பார்க்கணும் போல இருக்கு. அவ்வளவு ஆணவத்துடன் அதிகார தொனியில் கட்டளையிட்டார்.

 பேரனா? உங்களுக்கா? எனக்குத்தான் பிறந்தானாங்கிற சந்தேகம் தீர்ந்துடுச்சா? விஷ்ணுவின் கர்ஜனையில் வேணு, அன்னம், வினி உட்பட அனைவரும் வெல வெலத்து நின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!