Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 22

அத்தியாயம் 22 

சாம்பவி விடிகாலையிலே மணிமேகலைக்கு அழைத்திருந்தாள்.



Advertisement

“சொல்லு சாம்பவி, எப்படி இருக்க? எப்படி இருக்காரு குட்டி பையன்? சார் நைட் டியூட்டி முடிச்சிட்டு இப்ப தான் தூங்குறாரா?”

“ஆமா அண்ணி.. இப்ப தான் தூங்குனான். பாப்பா எப்படி இருக்கா? “

Advertisement

Advertisement

“அவளும் இப்ப தான் தூங்குறா.. சொல்லு என்ன காலையிலே கூப்பிட்டிருக்க? எல்லாம் ஓகே தானே?”

“மாமா நேத்து தான் என்கிட்ட விஷயத்தை சொன்னாங்க. ஹரி உங்க வீட்டுக்கு வரப்போறதா.. உங்களுக்கு கஷ்டம் தானே? என்னால எல்லாருக்கும் கஷ்டம் இல்ல அண்ணி. அவர் உங்களை எப்பவுமே நல்லபடியா நடத்த மாட்டாரே?”

Advertisement

“நீ என்ன ரூம் போட்டு எதுக்கு கவலை படலாம்னு யோசிப்பியா? சும்மா யோசிச்சு உடம்பை கெடுத்துக்க கூடாது. இந்த யோசனையை சொன்னதே நாங்க தான். நீ நம்ம வீட்டுக்கு போனா ப்ரீயா இருப்பேன்னு தான்.. அதுக்கு ஏற்கனவே மகா அக்கா நான் நல்லா பார்த்துக்கலையானு ஒரு பஞ்சாயத்தை ஆரம்பிச்சு வச்சிருக்கா.. நீ அடுத்ததை ஆரம்பிக்காத.. உண்மையாவே நீ கொடுத்திருக்க தண்டனையில ஹரி மாற ஆரம்பிச்சிருக்கான். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்ன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க.. இங்க வரட்டும் சாம்பவி. இந்த இடைவெளி உங்க ரெண்டு பேருக்கும் ஒரு புரிதலை கொடுக்கும்னு நம்புறேன். காலம் தான் எல்லாத்துக்கும் மருந்து”

“எனக்கும் அவரை பார்க்காம இருக்க கஷ்டமா தான் இருக்கு. ஆனா நான் கொஞ்சம் இறங்கி வந்தா அப்புறம் அவரை எப்பவுமே திருத்தமுடியாது இல்ல அண்ணி..”

“எனக்கு புரியது சாம்பவி. நீ ஜாலியா நம்ம வீட்டுக்கு போ.. ஹரிகிட்ட உண்மையான மாற்றம் தெரிஞ்சா நல்லது தானே. ப்ரீயா விடு. சரி குழந்தைக்கு பெயர் எல்லாம் யோசிச்சிட்டியா? நாங்க பாப்பா பெயர் வைக்கிறதை ஒரு சின்ன பங்க்ஷன் மாதிரி வைக்கலாம்னு இருக்கோம். உன்னால இப்ப வர முடியாது. ஒரு மாசத்துல நாங்களே வந்து உன்னையும் குழந்தையையும் பார்க்கிறோம். சரியா?” 

“சரி அண்ணி.. நாங்க முன்னாடியே யோசிச்சு வச்ச பெயர் தான்.. ஷ்யாமப்ரசாத்”

“ஷ்யாம்ப்ரசாத்..  சூப்பரா இருக்கு சாம்பவி..”

“இங்க பாப்பாக்கு நான் தான் பெயர் செலக்ட் பண்ணுவேன்னு ஒரு பெரிய போட்டியே நடக்குது.. இன்னும் முடிவு செய்யலை..”

மேலும் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு வைத்தனர்.

அடுத்த வாரத்தில் குட்டி பம்ப்கின்னுக்கு ஒருமனதாக வைஷாலி என்று பெயர் சூட்டினார்கள். 

விழாவிற்கு சுந்தர்ராஜன் பரிமளாவுடன் வந்த ஹரி அங்கேயே நின்றுகொண்டான்.

வைஷாலியை தூக்கியே வைத்திருந்தான் ஹரி. ஹரியின் குழந்தை ஏக்கம் அனைவருக்கும் புரிந்தது. ஆனாலும் யாரும் வெளி காட்டிக்கொள்ளவில்லை.

மணிமேகலை படிக்கும் கல்லூரியிலே ஹரிக்கு வேலையும் கிடைத்துவிட்டது.

கீழே இருந்த கெஸ்ட் ரூமில் ஹரி தங்கிக்கொண்டான்.

எதார்த்தமாகவே அவனை சேர்த்துக் கொண்டார்கள். மணிமேகலை மட்டும் அவனோடு அதிகம் பேசமாட்டார். மற்றபடி பிள்ளைகள் வந்தியத்தேவன் பத்தும்மா என்று அனைவரும் இயல்பாகவே பேசினார்கள்.

பத்தும்மாவிடம் ஒரு நாள் தனிமையில்,

“நான் செஞ்சது தப்புன்னு புரியது அத்தை. அதை எப்படி சரி செய்றதுன்னு தான் தெரியலை” என்றான். 

“எது தப்புன்னு புரிஞ்சுது?”

“எல்லா தப்பும் புரிஞ்சுது அத்தை” என்றான் உள்ளடங்கிய குரலில்.

“உனக்கு என் உதவி தேவைன்னா, நீ செஞ்ச தப்பை சொல்லு, அதை சரி செய்ய நான் ஐடியா தரேன்”

“மணி அக்கா படிப்பை கெடுத்தது, அவங்க மனசை காயப்படுத்தினது, அப்புறம் சாம்பவிகிட்டயும்..சாம்பூ.. சாம்பூ..” என்று கூறும்பொழுதே தேம்பிவிட்டான்.

“இங்க பாரு டா ஹரி..  லவ்ஸ்ஸா?” என்றார் பத்தும்மா கேலியாக.

அவன் பாவமாக கண்ணில் கண்ணீருடன் பத்தும்மாவை பார்க்க, அவருக்கும் அவனை பார்த்தால் கொஞ்சம் பாவமாக போய் விட்டது.

“குழந்தை அழகா இருக்கணும்னு நான் பிடிவாதமா இருந்தது தப்பு தான். அக்கா அழகா இல்லைன்னு அவங்களுக்கு செஞ்சது எல்லாம் தப்பு தான்.. இப்ப புரியுது..”

“சரி சரி.. எனக்கு எப்பவுமே உங்க குடும்பத்து இத்து போன பிளாஷ்பேக் கேட்கப்  பிடிக்காது. இப்ப சொன்னது தான் லாஸ்ட்.. இனிமே இந்த கதையை சொல்லக்கூடாது.. புரியதா?”

“ஆங்.. சரி அத்தை..”

“முதல்ல செஞ்ச தப்பை முதல்ல சரி பண்ணு.. அதுவே உனக்கு பலன் தரும்”

“என்ன செய்யலாம். அக்காக்கிட்ட சாரி கேட்டா மட்டும் எல்லாம் சரி ஆகாது இல்ல?“

“முதல்ல மேகாக்கு உன் மேல இருக்கிற கோபம் குறையனும். அதுக்கு அவ படிப்புக்கு நீ உதவி செய்.. அவளுக்கு பிடிச்சது எல்லாம் செய்.. மன்னிப்பு வார்த்தையில இல்லாம செயல்ல காட்டு..”

“எனக்கு அப்பப்ப என்ன செய்யணும்னு சொல்லி தரீங்களா?”

‘அட பாவமே! நம்ம கிட்ட வான்டெட்டா சிக்குறானே?’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டு மகிழ்ச்சியாக தலையை ஆட்டினார்.

“முதல்ல சோகமா இருக்கிறதை நிப்பாட்டிட்டு சந்தோசமா இருக்க பாரு ..  மூஞ்சிய சிரிச்சா மாதிரி வச்சுக்கணும், புரியுதா?”

“எப்படி அத்தை சந்தோசமா இருக்கிறது. பொண்டாட்டி பிள்ளையை பார்க்காம இருக்கேன்..”

“நம்ம எண்ணங்களுக்கு எப்பவுமே சக்தி அதிகம். நல்லதே நினைச்சோம்னா நல்லதே நடக்கும். எப்பவுமே நேர்மறையா யோசிக்க பழகு புரியதா?” 

ஹரியும் புரிவதாக தலையை ஆட்டினான்.

மணிமேகலைக்கு பரீட்சை ஆரம்பமானது. இந்த செமெஸ்டர் பரீட்சைக்கு மட்டும் போய் வர வேண்டும்.

வந்தியத்தேவன் மனைவியுடன் செல்ல தயாராக, ஹரி “நான் கொண்டு போய் விடறேன் அக்கா. நானே திரும்ப கொண்டு வந்து விட்டுடறேன்” என்று கிளம்பி நின்றான். ஊரில் இருந்து அவனது பைக்கை கொண்டுவந்திருந்தான்.

“உனக்கு எதுக்கு கஷ்டம் ஹரி, நானே ட்ராப் பண்றேன்” என்றார் தேவ் வேகமாக.

“இல்ல அத்தான், நானும் காலேஜ் தானே போறேன். மதியம் மட்டும் பர்மிஷன் போட்டு அக்காவை விட்டுட்டு திரும்ப போறேன்”

“நான் உன்கூட பைக்ல வந்தா உனக்கு பிடிக்காது இல்ல ஹரி, நான் தேவ் கூட போயிக்கிறேன்” என்றார் மேகா இப்பொழுது.

“நான் பழைய ஹரி இல்லக்கா.. அதே மாதிரி முன்ன நடந்ததை இப்ப மாத்தவும் முடியாது. உனக்காக இதையாச்சும் செய்றேனே?” 

அதற்கு மேல் எப்படி மறுப்பது என்று மணிமேகலை ஹரியுடனே கிளம்பி சென்றார்.

தேவ் முகத்தை தூக்கி வைத்து கொண்டு இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார்.

“இங்க பாரு பம்ப்கின் உங்க அப்பாவை.. காத்து போன பலூன் மாதிரி இருக்கு அவன் மூஞ்சி” என்றார் பத்தும்மா பேத்தியிடம் சத்தமாக.

“எல்லாம் உங்க ஐடியா தானே? கொஞ்ச நேரம் நான் என் பொண்டாட்டி கூட தனியா போனா உங்களால தாங்க முடியாதே?”

“ஆமாம் மகனே..” 

“போங்க ம்மா.. வர வர எனக்கு மேகா கூட பேசக்கூட நேரமில்ல”

“டேய் டேய்.. உனக்கே அடுக்குமாடா.. நீயும் உன் பெண்டாட்டியும் மாடிக்கு போனா, பம்ப்கின் அழுதா கூட கேட்காம காதல் பண்ணிட்டு தானே இருக்கீங்க? நேத்து ராத்திரி டிஃபன் நாங்க சமைக்கிறோம்னு போயிட்டு, சமைக்கணும்ங்கிறதே மறந்து நீங்க காதலிச்சிட்டு, உங்க காதல் நதில நாங்க எல்லாம் பசியில மிதந்தது தானே டா மிச்சம்”

“அம்மா…” என்றார் பல்லை கடித்துக்கொண்டு.

“போடா போடா..” 

பாட்டி பேசுவதை கேட்டு, அவர் மடியில் படுத்து கொண்டிருந்த குட்டி பம்ப்கின்னுக்கு என்ன புரிந்ததோ அப்படி ஒரு சிரிப்பு. மகளின் பொக்கை வாய் சிரிப்பை  பார்த்து வந்தியத்தேவன் முகத்திலும் மலர்ந்து விரிந்த சிரிப்பு.

—————–

ஹரிக்கு பத்தும்மாவை மிகவும் பிடித்து போனது. சொல்லப்போனால் வாழ்க்கையை எப்படி ரசித்து வாழ வேண்டும் என்பதனை அவரிடம் தான் கற்றுக்கொள்ள தொடங்கினான்.

அவர் என்ன சொன்னாலும் அவனுக்கு அது வேத வாக்கு போல. பத்தும்மா சொல்வதை எல்லாம் ஹரி கேட்டு நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த வீர்யாவிற்கு  தான் காதில் இருந்து புகை வந்தது.

“உன் அப்பரெண்ட்டிஸ் நீ சொல்றத கேட்பானா? நான் என்ன சொன்னாலும் என் அப்பரெண்ட்டிஸ் கேட்பான்” என்று அவளிடம் வம்பு வளர்த்து கொண்டிருக்கிறார் பத்தும்மா.

“உங்களுக்கு இப்ப தானே புதுசா ஆள் கிடைச்சிருக்கு.. எனக்கு நான்காம் வகுப்பில் இருந்தே என் கூட இருக்கான் சம்பவ்” என்றாள் வீர்யா கெத்தாக.

“எப்ப இருந்து இருக்கிறாங்கன்றது முக்கியம் இல்லை.. யாரு யாரு சொல்றதை எவ்வளவு கேட்குறாங்கன்றது தான் முக்கியம்”

“ஓ.. அப்படியா? பார்க்கலாமா?” என்று வீர்யா களத்தில் இருங்க, “பார்க்கலாம்” என்று பத்தும்மாவும் தயராகினார்.

வராஹிக்கு தான் சம்பவ், ஹரி இருவரையும் நினைத்து கொஞ்சம் பாவமாக இருந்தது. இவர்கள் மூவரும் ஹாலில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

சரியாக அப்பொழுது வந்த சம்பவ்விடம், 

“ஹரி சித்தப்பா வண்டி டயரை பஞ்சர் பண்ணு சம்பவ்” என்று வீர்யா கூற, அடுத்த நிமிடமே ஏன் எதற்கு என்று ஒரு கேள்வி கூட கேட்காமல், பாக்கெட்டில் இருந்த காம்பஸை எடுத்து தோழி சொன்னதை கச்சிதமாக முடித்திருந்தான்.

பார்த்துக்கொண்டிருந்த பத்தும்மாவிற்கு ‘அட’ என்று தான் இருந்தது.

பின்னே இது இவர்கள் இருவரின் வாடிக்கை செயலாச்சே.. எத்தனை வண்டி டயரை பஞ்சர் செய்திருப்பார்கள், வந்தியத்தேவனுது உள்பட.

‘எப்படி?’ என்று வீர்யா பத்தும்மாவை ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

அப்பொழுது தான் வெளியே செல்ல  கிளம்பி வந்தான் ஹரி. பத்தும்மா அவனிடம் “ஹரி, நான் சொன்னா நீ ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்காம செய்வியா?”

“சொல்லுங்க அத்தை.. செய்றேன்”

“அங்க நிக்குது பாரு உங்க அத்தானோட காரு அதுல ஒரு டயர்ல காத்தை  பிடிங்கி விடு”

“என்ன அத்த சொல்றீங்க? எதுக்கு?” என்று கொஞ்சம் அதிர்ச்சியாக கேட்க,

“டேய்.. இப்ப தானே ஏன் எதுக்கு கேட்க கூடாதுன்னு சொன்னேன். போய் ஒரு டயர்ல காத்தை பிடுங்கிட்டு வா”

“அது எப்படி அத்தை செய்ய முடியும்? வேற ஏதாவது சொல்லுங்க அத்தை கண்டிப்பா கேட்கிறேன்”

 இவர்களே குறுகுறு என்று பார்த்துக் கொண்டு  அமர்ந்திருந்தனர் வராஹி  வீர்யா  சம்பவ் மூவரும்.

 பத்தும்மாவிற்கு கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டது. ‘சின்ன பிள்ளைங்க முன்னாடி நம்ம மானத்தை வாங்குறானே’ என்று.

“ஹரி, இப்ப நான் சொல்றதை நீ செய்ய போறியா இல்லையா? நான் என்ன செய்ய முடியாத கஷ்டமான வேலையை சொன்னேனா? ஒரே ஒரு டயர்ல காத்து பிடுங்க சொன்னேன். எனக்காக அது கூட பண்ண முடியாதா?”

 ஹரி என்ன செய்வது என்று தெரியாமல் திருத்திரு என்று முழித்து கொண்டு இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டு நின்றான்.

‘இப்ப என்ன சொல்றீங்க’ என்ற பார்வை பார்த்து வெறுப்பேற்றினாள் வீர்யா.

பத்தும்மாவை அது  மேலும் சீண்டிவிட, “இப்ப மட்டும் நீ இதை செய்யல அப்புறம் உன் லவ்வுக்கு ஐடியா கேட்டா, நான் ஒரு ஐடியாவும் கொடுக்க மாட்டேன்” என்றார் கோவமாக.

சரியாக அப்போது வந்தியத்தேவனும் மணிமேகலையும் கீழே வந்தனர்.

ஹரி பாவமாக நிற்பதை பார்த்து,”என்ன ஹரி?” என்று கேட்டார் வந்தியத்தேவன்.

“இல்லத்தான் அது வந்து அத்தை என்கிட்ட ஒரு விஷயம் செய்ய சொன்னாங்க.. அது எப்படி செய்யறதுன்னு தெரியாம நான் செய்யல…  அதான் என் மேல கோவமா இருக்காங்க” என்றான்  ஹரி சோகமாக.

“பத்து சொன்னா செய்ய வேண்டியது தானடா?” என்றார் மணிமேகலை. 

“மேகா.. அம்மா என்ன சொன்னாங்கன்னு தெரியல.. எடக்கு முடக்கா ஏதாவது சொல்லி இருப்பாங்க.. என்னன்னே தெரியாம நீ அவங்களுக்கு சப்போர்ட்டுக்கு வராதே” என்றார் வந்தியத்தேவன்.

“அதானே.. என்ன சொன்னாங்கன்னு கேளுங்க நானா”என்று ஆஜரானாள்  வீர்யா. பிள்ளைகள் அனைவருமே இப்பொழுது வந்தியத்தேவன், மணிமேகலையை நானா,அத்தம்மா என்றே அழைக்கின்றனர்.

 “சொல்லு ஹரி அப்படி அத்தை என்னதான் செய்ய சொன்னாங்க?” என்றார் மணிமேகலை.

“அது வந்து.. அது வந்து..” என்ற ஹரி இழுக்கவும்,

“டேய் தேவ், உன்னையும் உன் பொண்டாட்டியையும் நான் ஒன்னும் இங்க பஞ்சாயத்து செய்ய கூப்பிடல.. அவங்க அவங்க வேலையை பார்த்து கிளம்புங்க” என்று பத்தும்மா சபையை கலைக்க நினைக்க,

“அப்படி என்ன தான் செய்ய சொல்லி இருப்பாங்க?” என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது மணிமேகலைக்கு.

“ப்ளீஸ் சொல்லுங்களேன் என்ன சொன்னாங்க?” என்றார் ஆர்வமாக பிள்ளைகளை பார்த்து.

“அது ஒன்னும் இல்ல உங்க காரோட டயர்ல ஒன்னை பஞ்சர் செய்ய  சொன்னாங்க.. அதுதான் ஹரி சித்தப்பா யோசிச்சிட்டு இருந்தாங்க” என்று விஷயத்தை போட்டு  உடைத்தாள் வீர்யா.

என்னது என்று வந்தியத்தேவன் ஜெர்க்காகி அம்மாவை திரும்பி முறைக்கவும், பிள்ளைகள் மூவரும் வெளியே ஓடி விட்டார்கள்.

“அவன் செய்ய மாட்டான்னு எனக்கு தெரியும். சும்மா அவன் எவ்வளவு திருந்தி இருக்கான்னு கண்டுபிடிக்க ஒரு டெஸ்ட் வச்சேன். அதான் நீங்க வந்து கெடுத்திட்டீங்களே.. கிளம்புங்க கிளம்புங்க” என்று நொடித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார் பத்தும்மா.

“எங்க அம்மா இப்படி தான் ஹரி.. நீ அவங்க சொல்றதை எல்லாம் யோசிக்காம செஞ்சுடாத.. அப்புறம் மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியது தான்..” என்றார் வந்தியத்தேவன் ஹரியிடம் ஸ்னேகமாக.

“நாங்க கோவிலுக்கு போறோம், நீயும் வரியா?” என்றார் மணிமேகலை.

“இல்லக்கா, நான் இங்க என் காலேஜ் ப்ரண்ட் ஒருத்தனை பார்க்க கிளம்பிட்டு இருந்தேன்”

“பார்த்து போய்ட்டு வா.. பாய்” 

“சரிக்கா.. என்று கூறி பைக்கை எடுத்தான் ஹரி..

அந்தோ பரிதாபம்.. “அய்யயோ ! “ என்றான் ஹரி.

என்னாச்சு என்று இவர்கள் சென்று பார்த்தால், பைக்கின் பின் டயர் பஞ்சர்.

“இது அந்த குட்டி பிசாசு வேலையா தான் இருக்கும்..” என்றார் வந்தியத்தேவன் பல்லைக்கடித்து கொண்டு.

“யாரு அத்தான்?”

“நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டியது ஒன்னு எங்க அம்மா கிட்ட, இன்னொன்னு வீர்யா கிட்ட..”

“எதுக்கு இப்படி செஞ்சிருப்பா?”

“இங்க தெருமுனைல ஒரு பஞ்சர் ஷாப் இருக்கு. அங்க போ.. சீக்கிரம் சரி பண்ணி கொடுத்திடுவாரு. அவர்கிட்ட போனா அவரே சொல்லுவாரு.. பல பேர் வண்டி பஞ்சர் ஆன கதையை.. நாங்க கிளம்புறோம்” என்று மனைவியுடன் கிளம்பிவிட்டார் வந்தியத்தேவன்.

————

ஹரி இங்கே வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது.

இன்னும் அவன் குழந்தையை பார்க்கவில்லை. இருந்தாலும் துவண்டு போகாமல் பத்தும்மா கொடுத்த ஐடியாவின் படி, தினமும் ஒரு வாய்ஸ் மேசேஜ் மனைவிக்கு அனுப்பி விடுவான். அவன் என்னவெல்லாம் செய்தான்.. எங்கே சென்றான்.. வைஷாலி என்ன செய்தாள்.. அக்காவுடன் அவனுக்குண்டான இணக்கம் என்று ஒன்றுவிடாமல் அனைத்தையும். 

‘பதில் வருதோ இல்லையோ, நீ பேசு..’ என்று கூறி இருந்தார் பத்தும்மா.

அப்பப்ப நல்ல நல்ல ஜோக் எல்லாம் சொல்லி மெசேஜ் போடு என்று கூறி அவரே சில பல மொக்கை ஜோக்குளையும் கூறுவார்.

இப்படியாக ஹரி சாம்பவிக்கு மெசேஜ் போட ,

அதை கேட்க கேட்க சாம்பவிக்கு பூரிப்பாக இருந்தது. மொக்கை ஜோக்குகளை மீண்டும் மீண்டும் கேட்டு  சிரித்துக்கொண்டிருப்பாள். ஹரியின் மாற்றம் நன்றாக புரிந்தது.

சுந்தர்ராஜனிடம்,” மாமா ஹரி ரொம்பவே மாறிட்ட மாதிரி தெரியுது. அவரை கூப்பிட்டுப்போமா” என்றாள்.

“அப்படியா ம்மா சொல்ற…”

“ஆமா மாமா.. நீங்க என்ன சொல்றீங்க?”

“நீங்க சேர்ந்தா சந்தோசம் தான். ஆனா இப்பதானே அங்கே வேலையில சேர்ந்திருக்கான். ஒரு வருஷம் கூட ஆகாம வேலையை விட்டுட்டு வந்தா சரியா இருக்குமா? மணிகிட்ட பேசிட்டு முடிவு செய்வோமா?”

“சரி மாமா..”

—————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!