Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இதயத்தின் ஓசை கேட்குதோ 27

பிரசவ நாளுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்க சுபா அர்ஜுனனை அதிகம் தேடினாள்… இப்பொழுது எல்லாம் அவனின் சட்டையை தன்னோடு போட்டு கொண்டு தான் தூங்குகிறாள்….

முன்பு யாருக்கும் தெரியாமல் தான் போட்டு கொண்டு தூங்குவாள்… ஆனால் தற்போது அனைவரும் பார்க்கும் படியே தான் போட்டு கொள்கிறாள்….



Advertisement

அவளின் தவிப்பு அனைவருக்கும் புரிந்தாலும் அவளாகவே அர்ஜுனனை அழைக்கட்டும் என விட்டு விட்டனர்… சுபா தற்போது இருப்பது அர்ஜுனன் வீட்டில் தான்… அவளின் பிறந்த வீட்டிற்கு அழைத்தாலும் வர மறுத்துவிட்டாள்…

அதனால் அவளுடன் மருதாயி பாட்டியும் தேவியின் பெற்றோரும் அங்கேயே தங்கிவிட்டனர்… அவர்களுடன் ராஜம்மாவும் கருப்பையாவும் உதவியாக இருந்தனர்…. மற்ற ஜோடிகள் யாரவது ஒரு ஜோடி அங்கு தங்குமாறு  பார்த்து கொண்டனர்…

Advertisement

Advertisement

அன்று ஒரு நாள் வீட்டில் அனைவரும் இருக்க மதிய உணவு தயாராகி கொண்டு இருந்தது… வாணன் தோளில் சாய்ந்து கொண்டு இருக்கும் போது சுபாவிற்கு வலி ஏற்பட்டது…

அவளின் சத்தத்தில் அனைவரும் வந்துவிட்டனர்… மருதாயி பாட்டி அவளை பரிசோதித்து விட்டு இது சூட்டு வலியா தான் இருக்கும் என நினைத்து  செண்பகம் அம்மா பக்கம் திரும்பி ” அம்மாடி மருமகளே கஷாயம் கொண்டு வா… சூட்டு வலியா தான் இருக்கும்… கஷாயம் குடிக்கட்டும்… வலி குறையலனா ஆசுப்பதிரிக்கு(மருத்துவமனைக்கு) அழைச்சிட்டு போய்டலாம்”  என்று கூறினார்…

Advertisement

செண்பகம் அம்மாவும் கஷாயம் கொண்டு வந்து சுபாவிடம் கொடுத்தார்… அது குடித்தவுடன் வலி குறைந்தது….. பின் அவளை ஓய்வு எடுக்க கூறி அனுப்பி வைத்தனர்… கீழ் உள்ள அறையில் தங்கு என்று கூறினர்….

அவள் அதை மறுத்துவிட்டு அவர்களின் அறையிலேயே தங்கி கொண்டாள்… அந்த அறை அர்ஜுனனின் கதகதப்பு தந்தது….

மேலே அறைக்கு சென்று அர்ஜுனனின் சட்டையை அணிந்து கொண்டாள்… பின் அவன் போட்டோவை எடுத்து நெஞ்சோடு அணைத்து கொண்டு தூங்கிவிட்டாள்…

மேலும் இரண்டு நாட்கள் கழிந்தது…. ஏற்காட்டில் அர்ஜுனனுக்கு மனது ஒரு மாதிரியாக இருந்தது எதுவோ தவறாக நடக்க இருப்பதை போல்…  அய்யனார்புறம் கிளம்பலாம் என்று முடிவு எடுத்து அனைத்தும் எடுத்துக்கொண்டு வெளியேறும் போது சுபாவிடம் இருந்து அழைப்பு…..

அவன் அதை ஏற்று பேசும் முன் அவள் “மாமா… சீக்கிரம் வா மாமா… உன்னை பாக்கணும்… மாமா… வா”  என்று வலியுடன் அவனுக்கு அழைத்தாள் …..

இங்கு அவன் பதறிவிட்டான்…. “அம்மு அம்மு ஒன்னும் இல்ல டாவந்துருவேன்மாமா வந்துருவேன் டாஅழுகாத….” என்று அவளை ஆறுதல் படுத்தினான்….

வாணன் சுபாவிடம் இருந்து அலைபேசியை வாங்கிஅர்ஜுன் நீ பொறுமையா வாடென்ஷன் ஆகாம பொறுமையா வண்டி ஓடிட்டு வா டாவேகமா வராத…” என்று கூறி வைத்துவிட்டான்….

இங்கு அர்ஜுனனோ மின்னல் வேகத்தில் தன்னுடைய ஜீப்பை செலுத்தினான் அய்யனார்புரம் நோக்கி……

அய்யனார்புரத்தில் அர்ஜுனன் வீட்டில் அனைவரும் கூடி இருந்தனர்…  சசியை தவிர்த்து… அவன் இன்னும் பெங்களூருவில் தான் உள்ளான்….

பட்டு பாட்டியும் அங்கு தான் இருந்தார்அவரிடம் அர்ஜுனன் ஏற்காடு சென்று ஒரு வாரம் பின் தான் நடந்த விஷயத்தை அனைத்தையும் கூறினர்அவர் அதை கேள்விப்பட்டு மிகவும் வருந்தினார்

ஆனால் அவர் அர்ஜுனன் வீட்டில் தங்குவது இல்லைஇங்குங்குமாறு கூறியும் தங்குவது இல்லைகாலையில் பாலாவுடன் வந்து விடுவார்பின் மாலை யாரவது ஒருவர் சென்று விடுவருவர்

ராஜம்மாவும் அவரின் கணவர் கருப்பையாவும் பழனி சென்றுவிட்டு இன்னும் மற்ற கோவில்களுக்கு சென்றுவிட்டு ஒருவாரம் சென்றபின் தான் வந்தனர்அதன்பின் தான் பட்டு பாட்டிக்கு விஷயத்தை கூறினர்

பாலா பட்டு பாட்டியை விட்டுவிட்டு சுபாவை பார்த்து விட்டு செல்வார்.. கிரிஜாவுக்கு யாரும் கூறவில்லை.. சொல்ல போனால் அவரை யாரும் கண்டுகொள்வதே இல்லைஅவருக்கு அவரே சமைத்து சாப்பிட்டு கொள்வார்பாலா அவரிடம்உன்னை கல்யாணம் செஞ்ச பாவத்துக்கு நீ சாப்பிட உனக்கு காசு தந்துருவேன்நீயே சமைச்சி சாப்பிட்டுக்கோ” என்று கூறிவிட்டார்

பாலாவுக்கு பட்டு பாட்டிக்கும் சமைக்க ஒரு ஆளை ஏற்பாடு செய்துவிட்டனர்அவர் மூன்று வேலையும் சமைத்துவிட்டு வீட்டை சுத்தம் செய்துவிடுவார்

கிரிஜா அவரே சமைத்து சாப்பிடுகொள்வார்… தற்போது தனிமையை மிகவும் உணர்கிறார்… கர்ணன் சசியிடம் பேச முற்படும் போது இருவரும் அவருக்கு பேச வாய்ப்பு அளிக்காமல் அங்கிருந்து நகர்ந்து விடுவர்… தற்போது கூட எந்த விஷயத்தையும் யாரும் அவரிடம் கூறவில்லை…

அர்ஜுனன் வீட்டில் தற்போது பாலா பட்டு பாட்டியை விட்டுவிட்டு வயலுக்கு சென்றுவிட்டார்.. பட்டு பாட்டியை தவிர்த்து அனைவரும் செண்பகம் அம்மா கொண்டு வந்த காலை உணவை உண்டு முடித்து பேசி கொண்டு இருந்தனர்….

அப்போது தான் சுபாவிற்கு பிரசவ வலி வந்தது… அனைவரும் அவளை மருத்துவமனை அழைத்து செல்ல முற்படும் போது அவளோ அர்ஜுனனிடம் பேச வேண்டும் இல்லையென்றால் மருத்துவமனை வரமாட்டேன் என்று கூறிவிட்டாள்….

அதன்பின் தான் அவளுக்கு அலைபேசியை கொடுத்து  அர்ஜுனனிடம் பேச வைத்தனர்… பின் அவளை மருத்துவமனை அழைத்து சென்றனர்…. இந்த வலியில் தான் பேச வேண்டுமா என்று தான் அனைவரும் நினைத்தனர்… ஆனால் யாரும் அவளிடம் கேட்டுக்கொள்ளவில்லை…

முதலில் முகுந்தன் வண்டியோட்ட அதில் வாணன் அமர்ந்து கொண்டான் பின் சுபாவுடன் நந்தினி ஏறிகொணண்டாள்… இன்னொரு வண்டியில் கர்ணன் வண்டியோட்ட மற்றவர்கள் எறிக்கொண்டனர்…

குழந்தைகள், மாரியப்பன், தேவியின் பெற்றோர், இரண்டு பாட்டிகள், சுப்ரியா அனைவரும் வீட்டில் இருந்து கொண்டனர்….

மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர் செக் செய்துவிட்டு “இன்னும்  வலி வரணும்… நடக்க வைங்க… இன்னிக்கு நைட்குள்ள பேபி பிறந்துடும்…. ஆனா இது பால்ஸ் பெயின் தான்…. விட்டுவிட்டு தான் வரும் இது…. நடக்கட்டும் நல்லா” என்று கூறி அவர் சென்றுவிட்டார்…

அவளின் அண்ணன்கள் தான் அவளை நடக்க வைத்தனர்…. இரண்டு மணி நேரம் நடந்தும் அவளுக்கு வலி வரவில்லை… ஆனால் சுபா மிகவும் சோர்ந்து விட்டாள்…

வலி வருவதும் போவதுமாய் இருந்தது… டாக்டர் நடக்க வேண்டும் நடந்தால் தான் வலி வரும் என்று கூறிவிட்டார்… அவளுக்கு எப்டியோ ஆனால் அவளின் அண்ணன்கள் இருவரும் தான் மிகவும் பயந்துவிட்டனர்….

அவள் தான் அவளின் அண்ணன்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு இருந்தாள்… அப்போது தான் அர்ஜுனன் வந்தான் மருத்துவமனைக்கு… அவனை பார்த்து அனைவரும் அதிர்ந்துவிட்டனர்…. அந்தளவுக்கு இளைத்து இருந்தான்….

சுபாவிற்கு அவனை பார்த்தவுடன் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது…அர்ஜுனனும் அவனை பார்த்து தான் நடந்து வந்து கொண்டு இருந்தான்… அவர்களுக்கு என்று தனி அறை கொடுத்துவிட்டனர்… தற்போது அனைவரும் அறையின் வெளியில் நின்று தான் பேசிக்கொண்டு இருந்தனர்… அவன் வந்தவுடன் இருவரையும் உள்ளே அனுப்பி வைத்தனர்…

வாணன் தான் அவனை கடிந்து கொண்டான்… மற்றவர்கள் எதுவும்  பேசிக்கொள்ளவில்லை அர்ஜுனனிடம் ….  உள்ளே சென்ற இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை… சுபா வந்தவுடன் அவனை பார்த்தது தான்.. அதன்பின் அவனை பார்க்கவே இல்லை…

ஆனால் அர்ஜுனன் அவளை மட்டும் தான் பார்த்து கொண்டு இருந்தான்… அவளால் அமரவும் முடியவில்லை.. அதை பார்த்து தான் அர்ஜுனன் அவளை நோக்கி சென்றான்… அவன் சென்று “அம்மு” என்று அழைத்த நொடி பட்டென்று அவனின் கன்னத்தில் அறைந்து விட்டாள்… மீண்டும் அவன் “தாரும்மா” என்று அழைத்தான்… தற்போது கணக்கே இல்லாமல் அறை அவனுக்கு கன்னத்தில் நெஞ்சில் என மாத்தி மாத்தி விழுந்தது….

அவன் எதுவும் சொல்லாமல் அவளை அணைத்து கொண்டான்…. பின் அவளின் காதின் அருகில் சென்று “சாரி அம்மு… உன்னை விட்டுட்டு போய் இருக்க கூடாது தான்… ஆனா உன்னோட கோவ பார்வையை கூட என்னால தாங்க முடியாது அம்மு அது தான் போயிட்டேன்… உன் கிட்ட சொல்லிட்டு போயிட்டேன்… ஆனா நீ இல்லாம உன்னோட வாசனை இல்லாம உன்னோட அரவணைப்பு இல்லாம என்னால இருக்கவே முடியல அம்மு ” என்று கூறி அணைத்து கொண்டான்…

மெதுவாக அவளின் இதழை தன் இதழுடன் பொருத்தி முத்தமிட்டு விட்டு உடனே அவளிடம் இருந்து விலகி விட்டான்… அவளோ அவனிடம் “பாப்பா இருக்குறதுனால உன்கூட சண்டை போட முடியல… பாப்பா வெளிய வந்ததும் உனக்கு இருக்கு டா” என்று கூறினாள்….

பின் அவளை மீண்டும் முத்தமிட்டுவிட்டு “ரெண்டு பேரும் என்கிட்ட பத்திரமா வந்தவாட்டி எவ்வளவு வேணா என்கூட சண்டை போடு அம்மு…” என்று கூறினான் அவன்….

அவள் அவனை செல்லமாக முறைத்துவிட்டு ” மாமா தம்பி கூட  பேசிடு மாமா…. தம்பி உன்னை ரொம்ப தேடுனான்… அவன்கிட்ட நீ சொல்லிட்டு போனாலும் ஒருவாரம் கழிச்சு உன்னை தேட ஆரம்பிச்சிட்டான்….” என்று கூறினாள்…

“கர்ணன் கிட்ட சொல்லி கூட்டிட்டு வர சொல்றேன் அம்மு… வா நடக்கலாம்… ” என்று கூறி வெளியில் அழைத்து வந்தான்….

“ஆமா டாக்டர் என்னை நடக்க சொன்னது  உங்களுக்கு எப்படி தெரியும்” என்று புருவம் உயர்த்தி கேட்டாள்….

அவளின் அந்த பாவனையில் சொக்கி போனாலும் தற்போது இருக்கும் நிலைமையில் எதுவும் செய்யாமல் “கிளம்புனவுடனே கர்ணனுக்கு போன் பண்ணி டாக்டர் என்ன சொன்னாங்கனு அப்ப அப்ப கேட்டுட்டே தா இருக்கேன்” என்று கூறிவிட்டு அவளை நடக்க வைத்தான்…..

இருவருக்கும் எல்லாம் சரியாகி விட்டதா என்று கேட்டாள் இல்லை என்று தான் சொல்வார்கள்… ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் எதுவும் பேசாமல் தங்கள் மகவை வரவேற்க தயாராகி இருந்தனர் இருவரும்…

அவர்களின் மகவோ தந்தை வந்தவுடன் தான் பிறப்பேன் என்று நினைத்ததோ என்னவா அவன் நடக்க வைத்துக்கொண்டு இருக்கும் போதே வலி வந்துவிட்டது…

மருத்துவர் அவளை பரிசோதித்து விட்டு செவிலியரை அழைத்து இவங்களை ரூமுக்கு கூட்டிட்டு போங்க என்று கூறி அவர் சென்றுவிட்டார்….

உள்ளே சென்று கால்மணி நேரத்தில் அவர்களின் இளவரசி இந்த உலகில் கால் பதித்துவிட்டாள்… சுபாவோ அரை மயக்கத்தில் தான் இருந்தாள்… “கங்கிராட்ஸ் சுபா உங்களுக்கு பொண்ணு பிறந்து இருக்காங்க….” என்று கூறினார்….

அவளோ வலியிருந்தாலும் அதை தாண்டி அவர்களின் மகள் வந்த சந்தோசத்தில் சிரித்துவிட்டு “டாக்டர் என் ஹஸ்பண்ட் கிட்ட பேபியை தாங்க “என்று கூறி மயங்கிவிட்டாள்…..

நர்ஸ் குழந்தையை சுத்தம் செய்து வெளியில் அனைவரிடமும் காட்ட எடுத்து சென்றார்… அர்ஜுனன் கையில் கொடுத்து “கங்கிராட்ஸ் சார் உங்களுக்கு பொண்ணு பிறந்து இருக்காங்க…” என்று கூறினார்…

அவனோ முதலில் கேட்டது “சுபா நல்லா இருக்காளா..?”  என்று கேட்டான்… அதற்கு அவரோ “நல்லா இருக்காங்க… இப்போ மயக்கத்துல இருக்காங்க  எழுந்ததும் அவங்களை பாக்கலாம்” என்று கூறினார்….

அதன் பின் தான் அவர்களின் இளவரசியை பார்த்தான்… பார்த்ததும் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது அவனுக்கு… தேவியின் பெற்றோரும் குழந்தையை பார்த்து அழுதுவிட்டனர்… அனைவரும் என்ன என்று கேட்டனர்… தேவியின் அப்பாவோ ” தேவிக்கு இருக்குற மாதிரியே கண்ணுகிட்ட நட்சத்திர மச்சம் இருக்கு”  என்று கூறி அழுதார்….

அர்ஜுனனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை…. அவன் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு மற்றவர்களிடம் தந்துவிட்டான்…

மற்றவர்கள் கொஞ்சிவிட்டு குழந்தையை செவிலியரிடம் தந்துவிட்டனர்…. அவரும் சுபாவிடம் தாய்ப்பால் தர கொண்டு சென்றுவிட்டார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!