Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

92. பவித்ரா புருஷோத்தமன் - இருளில் தொலைத்தேன் ஒளியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை-20

     தன் பிம்பத்தை இரசித்தவளின் மனதில் ஏதோ தோன்ற, சட்டென்று திரும்பி பார்த்த ஆழினியின் கண்களுக்குள் நிறைந்திருந்தான் அவளவன். விஜய சிவமாறனை கண்டதும் இத்தனை நேரம் மலர்ந்திருந்த முகமானது இறுகிவிட, அவளது கைகளில் தவழ்ந்திருந்த ஆதவ் கிருஷ்ணனை தன் கரங்களில் ஏந்த வந்தவனை தவிர்க்கும் விதமாய் இரண்டடி பின்சென்றிருந்தாள் அவள்.

     தன்னவளின் ஒதுக்கத்தை கண்டு மனம் வலித்தாலும் தன் மீது அவள் கோபம் கொண்டதற்கான காரணத்தை உணர்ந்தவன்



Advertisement

     “ஆறுமுகம் சித்தப்பாவும் ராணி சித்தியும் உனக்காக வெய்ட் பண்றாங்க…. ஆதவ் கூட்டிட்டு வா….” என்று விஜய சிவமாறன் கூறிவிட்டு முன்னே செல்ல, அவனை பின்தொடர்ந்தவள் இல்லத்தின் வாயிலில் ஆறுமுகம், ராணி, நீலவேணியுடன் ஆழினிக்கு விடைக்கொடுக்க நின்றிருந்த இன்பனை கண்டவளது கண்கள் இரண்டும் கலங்க தொடங்கிவிட்டது.

     இத்தனை வருடங்கள் தன்னுடன் வளர்ந்தவள், தாய் தந்தை இழப்பிற்கு பிறகு அவர்களுக்கு சமமாய் குறிப்பாக அவள் வாழ்க்கையையும் உயிரையும் பணயம் வைத்து தன்னுயிரை காத்த அவனின் தமக்கையின் பிரிவை எண்ணி இன்பனின் மனமும் கண்களும் கலங்கி கொண்டிருந்தது. அதை தனக்குள் சிரமப்பட்டு கட்டுப்படுத்தியவன் தன் கணவன் மற்றும் குழந்தையுடன் இல்லத்தின் கூடத்தில் நின்றிருந்த ஆழினியை இரசித்தவாறு இன்முகமாய் நின்றிருந்தான் இன்பன்.

Advertisement

Advertisement

     ஆறுமுகம், ராணி மற்றும் நீலவேணி மூவரும் கலங்கிய விழிகளுடன் ஆழினியிடம் விடைப்பெற்று, சிவமாறன், பருவதம்மா மற்றும் செல்வியிடம் ஆழினியையும் ஆதவ் கிருஷ்ணனையும் பத்திரமாக பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு பிரியாவிடை அளிக்க, இங்கு ஆழினியோ தன் தம்பி இன்பனை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.

     ஆழினியின் கைகளில் தவழ்ந்திருந்தவன் அவளிடமிருந்து கீழிறங்கி இல்லத்தின் வாயிலிலிருக்கும் அவனது காலணிகளை மாட்டியவாறு

Advertisement

     “பன்னு, வீட்டுக்கு போகும்போது எனக்கு பட்டர் குக்கீஸ் வாங்கி தரியா?” என்று அங்கு நடக்கும் நிகழ்வினை அறியாத ஆதவ் கிருஷ்ணன் இன்பனின் கரங்களை பிடித்து ஆசையாய் வினவியவனை தன் கரத்தில் ஏந்தி அவனின் கொழுகொழு கன்னங்களில் அழுந்த முத்தமிட்டவன்

     “ஆது கண்ணா, இனிமேல் நீ இங்க தான் இருக்கனும்….” என்று இன்பன் நாதழுதழுக்க கூறியதை கேட்டு ஆதவ் கிருஷ்ணன் மட்டுமல்லாது ஆழினியின் கண்களும் கலங்க தொடங்கிவிட்டது.

     “ஏன் பன்னு? அப்போ நீ என் கூட இருக்கமாட்டியா?” என்று ஆதவ் கிருஷ்ணன் கூறி தன் உதட்டை பிதுக்க, அதே கேள்வியை தாங்கிக்கொண்டு கண்ணீர் தேங்கிய விழிகளுடன் தன்னை நோக்கும் ஆழினியை பார்த்தவன் தன் பாப்பாளியிடம்

     “நான்…. நான் அடிக்கடி வந்து…. உன்னையும் உன் அம்மாவையும் பார்த்துட்டு போறேன்….” என்று இன்பன் கூறிய மறுநொடியே வெடித்து அழ ஆரம்பிக்க, அவன் அழுவதை பொறுக்க முடியாதவள் ஓடி சென்று இன்பனை அணைத்து கொண்டாள்.

     ஆழினியும் இன்பனும் அழுகையில் கரைய, அவர்களின் பாசப்பிணைப்பை கண்டு அங்கிருந்தவர்களின் கண்களும் கலங்க தான் செய்தது. தன் அன்னையும் மாமனும் அழுவதை கண்டு ஆதவ் கிருஷ்ணனும் ஆழ ஆரம்பிக்க, இன்பனின் அருகில் வந்தவன் அவனது தோள்களை ஆதரவாக பற்றியவாறு

     “அழாத இன்பா, நீயும் உன் அக்காவும் அழுறதை பார்த்து ஆதவும் அழறான் பாரு…. முக்கியமா, உங்களோட நவீன பாசமலர் படத்தை எங்களால பார்க்க முடியலடா….” என்று சூழ்நிலையை மாற்றும் பொருட்டு விஜய சிவமாறன் நக்கலாக கூற, அவனது யோசனை வேலை செய்வது போல் தன் அழுகையை நிறுத்திய ஆழினியும் இன்பனும் தன்னெதிரிலிருப்பவனை முறைத்து கொண்டிருந்தனர்‌.

     அவ்விருவரையும் கண்டு அழகாக குறுநகை புரிந்தவன்

     “முறைக்கிறதுல நீயும் உன் அக்காவும் ஒரே மாதிரி தான் இருக்கீங்க…. நீலவேணி, போய் அதை எடுத்துட்டு வாடா….” என்று கூறிய விஜய சிவமாறனை ஆழினி மற்றும் இன்பன் இருவரும் புரியாமல் பார்த்து கொண்டிருக்க, அவர்களுக்கு விடையளிக்கும் விதமாய் ஓர்‌ பெட்டியை எடுத்துக்கொண்டு அவ்விடத்திற்கு வந்திருந்தாள் நீலவேணி.

     நீலவேணி கைகளிலிருக்கும் பெட்டியை கண்டு விழித்தவன்

     “இது…. இது என் பெட்டியாச்சே?” என்று வினவிய இன்பனிடம்

     “உன் பெட்டி தான்…. இனிமே நீ இங்க தான் இருக்கப்போற….” என்று பருவதம்மா கூற, அவர் கூறியதை கேட்டு அதிர்ந்தவனிடம்

     “உன் அக்காவும் பப்பாளியும் இல்லாம நீ எப்படி தனியா இருக்கமுடியும் இன்பா? உனக்கும் நீலவேணிக்கும் கல்யாணமாகுற வரைக்கும் நீ இங்க தான் இருக்கனும்….” என்று முடிவாக கூறிய விஜய சிவமாறனிடம் இன்பன் எவ்வளவு மறுத்து போராடினாலும் இறுதியில் வேறு‌ வழியில்லாமல் சம்மதித்தவனின் தோள்களை சுரண்டிய சிறியவன்

     “பன்னு, இனிமேல் உன்னாலையும் வேணி அத்தையாலையும் லவ்ஸ் பண்ண முடியாது பன்னு….” என்று ஆதவ் கிருஷ்ணன் தன் நீலநிற கண்களை உருட்டியவாறு இரகசியமாக கூறுகின்றேன் என்ற பெயரில் அங்கிருந்தவர்கள் காதுகளில் விழுமளவிற்கு சத்தமாக கூற, அவன் கூறியதை கேட்டு இன்பனும் நீலவேணியும் கூச்சத்தில் நெளிய, மற்ற அனைவரும் சுருள் முடி அழகனின் மழலை பேச்சில் தங்களின் சூழ்நிலையை மறந்து சத்தமாக சிரிக்க தொடங்கிவிட்டனர்.

     தன் நட்சத்திரங்கள் படையினருடன் நிலவவள் உலா சென்று கொண்டிருக்க, விஜய சிவமாறனின் அறையிலிருந்த பால்கனி வழியாக அக்காட்சியை வெறித்து கொண்டிருந்தாள் ஆழினி. கடந்த இரண்டு நாட்களாக தன் வாழ்நாளில் அவள் கனவிலும் கண்டிராத மாற்றங்கள் அத்தனையும் நிகழ்ந்து இன்று விஜய சிவமாறனின் மனையாளை அவனது அறையில் நின்றிருக்கும் தன்னை நினைக்க நினைக்க ஆழினியின் மனமானது அலைக்கடலாய் கொதித்து கொண்டிருந்தது. பால்கனியிலிருந்து அறைக்குள் வந்தவள் விசாலமான அவ்வறையின் மெத்தையில் அமர்ந்து பொம்மைகளுடன் விளையாடி கொண்டிருந்த தன் மகனை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.

     விஜய சிவமாறன் மற்றும் ஆழினியின் திருமண முடிந்து இல்லத்திற்கு வந்தவுடன் பருவதம்மாவும் ராணி அத்தையும் இரவு சடங்கிற்காக அறையை தயார் படுத்துவதை பற்றி பேசி கொண்டிருக்க, அதை கேட்டு மனதில் பயப்பந்துகள் உருண்டோட நின்றிருந்த ஆழினியின் மனநிலையை அறிந்தவன் போல், அவர்களது பேச்சில் இடைப்புகுந்து அவர்களின் திட்டத்திற்கு தடைவிதித்திருந்தான் அவளின் கணவன்.

     சற்று நேரத்திற்கு முன்பு விஜய சிவமாறனின் அறைக்குள் நுழைவதற்கே பலவித உள்ளுணர்வுகளின் போராட்டத்தில் சிக்கி தவித்தவள் பெரியவர்களின் எண்ணப்படி இரவு சடங்கான சாந்தி முகூர்த்தத்தை ஒருவேளை ஏற்பாடு செய்திருந்தால்? நானும் அவனும் மட்டும் தனியாக இவ்வறையில் இருக்க நேரிட்டிருந்தால்? தன் கணவன் என்பதை மறந்து யாரோ மூன்றாவது மனிதருடன் அறையில் தனியே இருப்பதை போல் தவித்தாள் அவள். ஆம், மூன்றாம் மனிதர் தானே? பார்த்து பழகி முழுதாக இரு வாரங்கள் கூட முடியவில்லை அதற்குள் அவன்‌ தான் உன் கணவன் அவனுடன் தான் நீ வாழவேண்டும் என்று கூறினால் அதற்கு பெயர் என்ன? நினைக்க நினைக்க மனதில் எரிச்சலும் பயமும் சூழ்ந்து கொண்டது ஆழினிக்கு.

     தன் அன்னையின் மனநிலையை அறியாதவன் அவளருகில் சென்று அவளது புடவை முந்தானையை பிடித்து இழுக்க, அவனது செய்கையால் சுயமடைந்தவளிடம்

     “அம்மா…. தூக்கம் வருதும்மா….” என்று ஆதவ் கிருஷ்ணன் தன் கண்களை கசக்கியவாறு அரைத்தூக்கத்தில் கூறவும் அவ்வறைக்குள் விஜய சிவமாறன் நுழையவும் சரியாக இருந்தது.

     விஜய சிவமாறனை கண்டதும் மகிழ்ந்தவன் தூக்க கலக்கத்துடனே

     “அப்பா….” என்று அழித்தவாறு அவனருகில் ஓடிவிட, அந்நிகழ்வை பார்க்க பார்க்க ஆழினியின் மனநிலை தான் பலவித உணர்ச்சிகளில் சிக்கி தவித்தது.

     ஆழினியின் மனதை அறிந்தவன் அதனை அறியாதவாறு

     “ஆது கண்ணா, இன்னும் தூங்கலையா நீங்க?” என்று வினவிய தன் தந்தையிடம்

     “ம்ம்…. தூக்கம் வருது…. அம்மாவை பாட சொல்லுங்க….” என்று ஆதவ் கிருஷ்ணன் கூறியதை கேட்டவன் தன் மகனை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு ஆழினியை பார்க்க, அவளோ தன் கணவனை ஒருநொடி பார்த்துவிட்டு அறையின் வாசலை பார்த்து கொண்டிருந்தாள்.

     ஆழினியின் கண்கள் கூறிய செய்தியை புரிந்தவன்

     “அம்மா பாடுவாங்க, நீங்க சமத்தா தூங்குங்க….” என்று விஜய சிவமாறன் கூறி ஆதவ் கிருஷ்ணனின் நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு எழுவதற்குள் தனது தந்தையின் இடது கரத்தினை கெட்டியாக பிடித்து கொண்டான் மாயக்கண்ணன்.

     “நீயும் என் கூட படுங்கப்பா…. அம்மா, நீ பாட்டு பாடும்மா எனக்கு தூக்கம் வருது….” என்று ஆதவ் கிருஷ்ணன் கூறி சிணுங்க ஆரம்பித்த மறுநொடியே விஜய சிவமாறன் அவனருகில் படுத்துவிட, தன் கணவனை முறைத்தவள் வேறுவழியின்றி தனது மகனின் அருகில் படுத்து கொண்டாள்.

     மெத்தையின் வலதுபுறத்தில் விஜய சிவமாறன் படுத்திருக்க, இடதுபுறத்தில் ஆழினியும் அவ்விருவர்களுக்கு நடுவில் ஆதவ் கிருஷ்ணனும் உற்சாகமாக படுத்திருந்தான். ஆதவ் கிருஷ்ணனின் முகமானது இத்தனை நாட்களை விட இன்று மகிழ்ச்சியில் மிகவும் பிரகாசமாக இருப்பதை போல் ஆழினிக்கு தென்பட்டது. தன்னருகில் தன் கணவன் என்றொருவன் இல்லை என்பதை போல் அவளின் கண்ணனை மட்டுமே இரசித்தவாறு அவனை உறங்க வைக்கும் முயற்சியில் தன் பாடலை பாடத் தொடங்கியிருந்தாள் ஆழினி.

லாலி லாலி லாலி லாலி

லாலி லாலி லாலி லாலி

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி

ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி

ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி

குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி, ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி

ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி

ஆரிராரோ ஆரிராரோ

ஆரிராரோ ஆரிராரோ..

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே

யது வம்ச வீரனுக்கு யசோதை நானே

யது வம்ச வீரனுக்கு யசோதை நானே

கரு யானை முகனுக்கு மலையன்னை நானே

கரு யானை முகனுக்கு மலையன்னை நானே

பார் போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி

ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி

ஆரிராரோ ஆரிராரோ

ஆரிராரோ ஆரிராரோ….

என்ற பாடலை ஆழினி பாடி முடித்ததும் ஆதவ் கிருஷ்ணன் உறங்கிவிட, அவளது குரலில் இத்தனை நேரம் இலயித்திருந்தவன் தன் மகன் அருகில் படுத்திருக்கும் ஆழினியின் கண்களில் கண்ணீர் துளிகளானது அவளது கன்னத்தை தீண்டி செல்வதை கண்டு திடுக்கிட்டிருந்தான்.

     தன் மனையாள் எதை நினைத்து அழுகையில் கரைகிறாள் என்பதை சரியாக யூகித்தவன் அவளின் தற்போதைய சூழ்நிலையை மாற்றும் பொறுட்டு

     “நானே நானேன்னு பாடுனா மட்டும் எல்லாமே நீயாகிடுவியா?” என்று விஜய சிவமாறன் பீடிகையுடன் வினவ, அவன் எதை பற்றி கூறுகிறான் என்பதை அறிந்தவள்

     “நீ சொன்னாலும் சொல்லாட்டியும் என் ஆது கண்ணனுக்கு எல்லாமே நான் மட்டும் தான்….” என்று கூறிய ஆழினியின் கண்களானது கண்ணீர் சிந்துவதை நிறுத்திவிட்டு தன் மகன் அருகில் படுத்திருப்பவனை முறைத்து கொண்டிருந்தது.

     நினைத்தது நடந்தது என்ற திருப்தியில் தன்னவளை கண்டு குறுநகை புரிந்தவன் ஆதவ் கிருஷ்ணனின் கன்னத்தில் முத்தம் பதித்துவிட்டு பால்கனி நோக்கி சென்றுவிட, அவன் சென்ற திசையை கண்டு முறைத்தவள் தன் மகனை தன்னுடன் இறுக்கமாக அணைத்தவாறு படுத்துக்கொண்டாள்.

     நேரம் தான் சென்றதே தவிர உறக்கம் என்ற ஒன்றை கைவிடுத்திருந்தவளின் கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பிக்க, அவளது மனக்கண்ணில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஆழினியின் முன்பு ஒளிப்பரப்ப தொடங்கியிருந்தது. இவளை போலவே, பால்கனியில் நின்று நிலவினை வெறித்த விஜய சிவமாறனும் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வினை பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தான்.

ஒளி வீசும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!