Skip to content
Post Views: 870
என் ஜீவன் உன்னை சேருமா
Advertisement
அத்தியாயம் 34
Advertisement
Advertisement
காலையில் முதலில் கண் விழித்தது அக்னி தான்.. மாயா நன்றாக தூங்கிக் கொண்டிருக்க அவள் தூக்கம் கலையாதவாறு எழுந்து சென்று அவன் காலைக்கடனை முடித்து குளித்து வந்தான்..
Advertisement
அவன் வெளியே செல்லும் முன் கண் விழித்திருந்தாள் மாயா..
மாயாவை பார்த்தவன் “குட் மார்னிங் பேபி” என்றான்..
அவளோ காலையிலே பேபின்னு சொல்லி வெறுப்பேத்தறான் பாரு..
என்றவள் .. கட்டிலியில் இருந்த மாயா காலை கீழே எடுத்து வைக்க..
மாயாவாள் காலை எடுத்து கீழே வைக்க முடியவில்லை கால் வலி எடுக்க,, “ஸ்ஸ்” என்று அவள் வலி தாங்க முடியாமல் சத்தம் போடவும்..
மாயாவின் பக்கத்தில் வந்தவன் “என்னாச்சுடா” என்றான்..
“கால் வலிக்குது,, காலை கீழே வைக்க முடியல” என்றாள்..
” இரு இரு” என்றவன்..
அவளிள் காலை எடுத்து தன் மாடி மீது வைத்து மெதுவாக அமுக்கிவிட..
மாயா “வேண்டாம்” என்று சொல்ல வருமுன்பாகவே,,..
அவள் கால் இரண்டையும் தன் கையால் இதமாக, பிடித்து விட்டவன்.. மஜாஸ் செய்து விட்டு….
“இப்போ நட” என்றான்..
மாயாவுக்கு நடக்கும்போது வலியில்லாமல் இருக்க..
பாருடா இவனுக்கு கூட இதெல்லாம் தெரியுது என்று பார்த்தவள்,,மெல்ல நடந்து ஓய்வு வரைக்கும் செல்ல போக..
“குளிச்சிட்டு வந்திடுமா, ஹாஸ்பெட்டல் போகனும்” என்றவன்..
“உனக்கு சாப்பிட என்ன வேண்டும்”…
“ஒரு தோசை, ஒரு இட்லி எனக்கு அது போதும்”..
“இது போதுமா மாயா?”என்றான்
‘எனக்கு இது போதும்” என்றவள் தன்னுடைய உடையை எடுத்துக் கொண்டு ஓய்வரைக்கு செல்ல..
அறையை விட்டு வெளியே வந்தவன் மாயா கேட்ட உணவை வேலைக்கார பெண்ணிடம் சமைக்க சொன்னான்..
” சரி தம்பி” என்று அவர் சமையல் செய்ய போக..
அக்னி பார்த்திபனிடம் இன்றைக்கு செய்யும் வேலைகளை பற்றி கேட்டுக் கொண்டிருந்தான்…
போனில் அடுத்த கால் வர.. “பார்த்திபா அம்மா கூப்பிடுகிறாங்க, நான் அப்புறம் கூப்பிடுறேன்” என்று காலை கட் செய்து..
பார்வதியின் அழைப்பை ஏற்று “சொல்லுங்க அம்மா”..
“மாயா எப்படி இருக்க அக்னி”??.
” நல்லா தூங்கி எந்திரிச்சாமா,, ஆஸ்பத்திரி கிளம்பிட்டு இருக்கோம்” என்றான்..
“சரிப்பா வேலைக்காரி வந்துட்டாளா” என்று கேட்க..
“காலையில வந்துட்டாங்க அம்மா சமைக்கிறாங்க”..
” சரிப்பா நீங்க ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்து அம்மாக்கு கால் பண்ணி பேசுங்க, நிலா பையன் அழுகிறான், நான் அப்புறம் கூப்பிடுறேன்” என்று போனை கட் செய்தார்..
மாயா குளித்து ரெடியாகி அவளின் ஹெல்த் ரிப்போர்ட்டை எல்லாம் எடுத்துக் கொண்டு வெளியில் வர..
மாயாவை வச்ச கண் வாங்காமல் பார்த்திருந்தான் அக்னி..
” என்ன பார்வை” என்றாள் மாயா..
அவளை பார்த்தபடியே “ரொம்ப அழகா இருக்க அதான் பார்த்தேன், பார்க்க கூடாதா” என்றான்..
மாயா பிங் பூ போட்ட லாங் டாப்பும், அழகான ஸ்கர்டும் அணிந்து அழகாக இருந்தாள்..
“தம்பி சமையல் ரெடி” என்று டைனிங் டேபிளில் சமைத்த உணவை வேலைக்காரி பெண்மணி வைத்து விட்டு போக..
வேலைக்கார பெண்மணியை பார்த்து “யாரு இவங்க”? என்றாள் மாயா..
” அம்மா அனுப்பி வச்சிருக்காங்கடா வா சாப்பிடலாம்” என்று மாயாவை உண்ணும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்…..
இருவரும் உண்டு முடிந்து ஹாஸ்பெட்டலுக்கு வந்து சேர்ந்தனர்..
இவர்கள்தான் இன்று முதலாவது ஆள் சரியான நேரத்திற்கு டாக்டர் வந்துவிட முதலில் மாயாவும் அக்னியும் டாக்டரை பார்க்க சென்றனர்.
டாக்டரை இருவரையும் பார்த்து “ஃபஸ்ட் பேபியா?”..என்று கேட்க. மாயா “ஆமாம் டாக்டர்” என்றாள்..
மாயாவின் பழைய ரிப்போர்ட் வாங்கி பார்த்த டாக்டர் “வெரி குட், மூணு பேபியா சூப்பர்” என்றவர்..
“நல்லபடியாக உங்களுக்கு மூன்று பேபியும் பிறக்கும் மிஸ்சஸ் அக்னி மாயா” என்றவர்..
“நீங்க வேற ஹாஸ்பெட்டலுல செக் பண்ணி இருந்தாலும் நீங்க இங்கேயும் எல்லா டெஸ்டும் எடுக்கணும் எடுத்துட்டு வாங்க பார்க்கலாம்” என்றவர்..
நர்சை அழைத்து மாயாவுக்கு எடுக்க வேண்டிய டெஸ்ட் எல்லாம் அனைத்தும் எழுதி தர “ஓகே டாக்டர்”என்று மாயாவை அழைத்து சென்றாள் அந்த நர்ஸ்….
மாயாவுக்கு அனைத்து டெஸ்டுகலும் எடுத்துவிட்டு,, அக்னியோடு வெளிய அமர்ந்திருக்க..
அனைத்து ரிப்போர்ட்களும் வந்திருந்தது..
டாக்டர் மாயாவையும், அக்னியை இருவரையும் உள்ளே அழைத்தவர்.. அனைத்து டெஸ்ட்டையும் பார்த்துவிட்டு..
மாயா ரிப்போர்ட்டை பார்த்தவர், உள்ளே வந்தவர்களிடம்.. “எல்லாம் ரிப்போர்ட்டும் வந்துருச்சு மாயா மூணு பேபீஸ் நல்லா இருக்காங்க 28 வீக்ஸ் தான் ஆகுது இன்னும் 12 வீக்ஸ் இருக்கு பாத்துக்கலாம் நல்லபடியா உள்ள இருக்குற புள்ளைங்களை நல்லா வளர்க்கலாம்” என்றார்….
“ஒரு பேபி மட்டும் தான் இப்போ வெயிட் கம்மியா இருக்கு,,அந்த பேபிக்கும் வெயிட் ஏத்திடலாம்” என்றவர்..
“சொல்லுங்க காலையில என்ன சாப்டிங்க மாயா” என்றார் டாக்டர் ஹரி..
” நான் டாக்டர் ஒரு தோசை, ஒரு இட்லி” என்று மாயா சொல்ல ஹரி டாக்டர் அவளை பார்த்து சிரித்தார்..
“இது ஒரு டயட்டா?! உங்க மூணு குழந்தைக்கு போதுமா? இது அவங்களுக்கு பத்தாது மாயா?” என்றார்….
மாயா முளித்துப் பார்க்க..
“இனி நான் சொல்லுற டயட்டை ஃபாலோ பண்ணுங்க,, இனிமே நீங்க தோசை இட்லி ரைஸ் இந்த மாதிரி எல்லாம் சாப்பிடக்கூடாது..
ஒன்லி ஹெல்த் ஃபுட் காலையில ஒரு பவுல் சுண்டல்,, மூணு முட்டை ஒரு கப் சூப், கொஞ்சம் பசிச்சா பழம் அவ்வளவு தான்,,.
மத்தியானம் கொஞ்சம் சிவப்பு ரைஸ் இல்லன்னா சிறு தானியா ரைஸ் ஒரு கப் கீரை,, ஒரு கூட்டு ஒரு பொரியல், அவ்வளவு தான்..
சாயங்காலம் டீ, காப்பி இந்த மாதிரி எதுவும் குடிக்கக்கூடாது,, பால் மட்டும் போதும், மோர் குடிக்கலாம்,, மத்தியானம் வெஜிடேரியன்,, இல்ல நான் வெஜிடேரியன் மட்டன்,மீன், சிக்கன் அந்த மாதிரி கொஞ்சமா எடுத்துக்கோங்க..
நைட்டுக்கு சப்பாத்தி பன்னீர் இல்ல மஸ்ரூம் இல்ல ஏதோ காய்கறி போட்ட கிரேவி மாதிரி செஞ்சு சாப்பிடலாம், இல்ல கிச்சடி மாதிரி சாப்பிடலாம்.. அந்த மாதிரி நைட் லைட்டா சாப்பிட்டுக்கோங்க, அவுட் சைடு ஃபுட் சாப்பிடவே கூடாது, ஐஸ்கிரீம் கூல்ரிங்ஸ் இந்த மாதிரி எதையுமே சாப்பிடவே கூடாது” என்றார்..
இதை ஏற்கனவே பார்வதி சொல்லி இருந்தார்,, ஆனால் மாயா தான் கேட்கவில்லை இன்று டாக்டர் செல்லவும் “சரி” என்று தலையாட்டி இருந்தாள்..
“மாயா நான் சொன்னது சீரியஸா ஃபாலோ பண்ணுங்க,, தோசை சாப்பிட ஆசையா இருந்தா சிறுதானியத்தில் தோசை, கம்பு, கேழ்வரகு இந்த மாதிரி தோசை சாப்பிடலாம்”..என்றவர்..
“பேபிஸ்க்கு ரொம்ப சத்து, விட்டமீன் தேவைப்படுது மாயா நீங்க ஹெல்த்தியான ஃபுட்டு சாப்பிட்டா தான் பேபிஸ்க்கு நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும்.. ஓகேவா 10 டேஸ்க்கு ஒரு வாட்டி நீங்க டெஸ்டுக்கு இங்க வரணும்.. இப்போ பிளட் டெஸ்ட் பண்ணி பார்த்ததுல, உங்களுக்கு கொஞ்சம் சத்துக்கள் கம்மியா இருக்கு.. இப்போ ஒரு ட்ரிப்ஸ் ஏத்துவோம் ஏத்தி முடிச்சதும் நீங்க கிளம்பலாம் ஓகேவா” என்றவர் ஒரு நர்சை அழைத்து..
“மாயாவுக்கு ஒரு ரூம் போடுங்க,, அக்னி சார் மாயாவை கூட இருந்து பாத்துக்கோங்க” என்றார்…
மாயா அமைதியாக இருக்க..
“மாயா ஹாப்பியா இருக்கணும்”..
என்றார்…
“மூணு பேபி இல்லையா அதனால கொஞ்சம் கஷ்டம்தான் அதனால உங்க ஒத்துழைப்பும் எனக்கு தேவை அக்னி சார் பார்த்துக்கோங்க” என்று சொல்லி அனுப்பி வைத்தார்….
நர்ஸ் மாயாவையும், அக்னியையும் அழைத்துக் கொண்டு ஒரு ரூமில் விட்டவள்.
இன்னொரு நர்சை உடன் அழைத்துக் கொண்டு மாயாவுக்கு டிரிப்ஸ் போட வந்தனர்..
மாயா இப்பொழுது கொஞ்சம் எடை கூடி இருந்தாள், டிரிப்ஸ் போட அவளுக்கு நரம்பு கிடைக்கவே வில்லை.. அவளுக்கு நரம்பு கிடைக்காமல் நர்ஸ் அவளின் கையை பிடித்து அமுக்கி, நரம்பை தட்டி ஊசியை வைத்து குத்தி, குத்தி எடுக்க,, வலி தாங்க முடியாமல் கத்தி விட்டாள் மாயா.
அக்னி அவள் கத்தியதும் “பார்த்து போடுங்க சிஸ்டர், ரொம்ப கஷ்டபடற” என்றிருந்தான்..
எப்படியோ இரண்டு நர்ஸ்சும் சேர்ந்து மாயாவின் கையில் நரம்பை கண்டு பிடித்து ஊசியை ஏற்றி டிரிப்ஸை ஆன்பண்ணி விட்டு செல்ல…
கண் கலங்கிய வாறே பெட்டில் படுத்திருந்த மாயாவின் அருகில் வந்த அமர்ந்தான் அக்னி..
மாயை பார்க்கவே அவனுக்கு பாவமாக இருந்தது..
“வலிக்குதா” என்றவன்..
அவளின் டிரிப்ஸ் போட்ட கையை மெல்லமாக நீவி விட….
“தண்ணீர் வேண்டும்” என்றாள் தண்ணியை எடுத்து வந்து மாயாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க கொடுத்தவன்,,.
” போதுமா” என்று அவளுக்கு தண்ணீரை கொடுத்தவுடன்.. அவள் வாயை துடைத்து விட்டு..
“படுத்துக்கோ” என்றான்..
தொடர்ந்து அடுத்து, அடுத்து மூன்று, நான்கு சிறிய, சிறிய பாட்டில் மருந்து மாயாவுக்கு டிரிப்ஸ் ஏறிக்கொண்டே இருக்க…
மாயாவுக்கு ஒரே இடத்தில் படுக்க முடியவில்லை கை கால் எல்லாம் வலியெடுக்க ஆரம்பித்து இருந்தது..
ஒரே மாதிரியாக அவளால் ஓரிடத்தில் படுத்திருக்க முடியவில்லை,, அவளோ புரண்டு, புரண்டு படுத்துக்கொண்டே கை கால்களை அசைத்தபடியே இருக்க..
அவள் வலியை உணர்ந்து கொண்ட அக்னி மீண்டும் ட்ரிப்ஸ் போட வந்த..நர்சிடம் “போதும் அப்புறமா ஏத்துங்க இன்னும் அவ சாப்பிடவே இல்லை” என்று சொல்ல..
“டாக்டர் ஏத்த சொன்னாங்க சார்”.. என்றவள்.
“நீங்க ஊட்டி விட வேண்டியதுதானே”.. என்று நர்ஸ் சொல்லிவிட்டு செல்ல..
மாயா சாப்பிடமால் சோர்ந்து போய் இருப்பதை பார்த்தவன்” “நான் ஊட்டி விட்டா நீ சாப்பிடுவியா” என்றான்..
அவளோ செம்ம பசியில் இருக்க “சரி” என்று தலையாட்டி இருந்தாள்..
அவன் வாங்கி வந்திருந்த சாதத்தை காய்கறி கலவையோடு ஸ்பூனில் எடுத்து ஊட்ட ஆரம்பித்தான்.. மாயாவுக்கு நல்ல பசி நன்றாக உண்டாள்.. உண்டு முடித்ததை 10 நிமிடத்தில் அனைத்துமே வெளியே வர..
பயந்து போனான் அக்னி..
மாயா டிரிப்ஸை வேகமாக எடுத்து விட்டு, ஓய்வு அறை நோக்கி வாமிட் எடுக்க ஓடினாள்.. பயந்து போனவன் உடனே அவள் பின்னாடி சென்று “என்னாச்சு மாயா” என்று கேட்க..
மாயா உண்டதை எல்லாம் வெளியேற்றியவள்,,
அந்த பாத்ரூம் கதவின் பக்கத்திலே சோர்வாக அமர்ந்து விட..
அவன் தான் அவள் வாமிட் செய்ததை எல்லாம் சுத்தம் செய்து அவளுக்கு தண்ணீர் கொண்டு வந்து வாயை கொப்பளிக்க வைத்து, குடிக்க தண்ணீர் கொஞ்சமாக கொடுத்தான்…
மாயா கண் மூடி அப்படியே சாய்ந்து இருக்க..
மெல்ல அவளின் கையை பிடித்து அழைத்து வந்து பெட்டில் படுக்க வைத்தான்..
நர்ஸ் மாயாவை பார்த்து “என்ன மேடம் பண்றீங்க,, ரெஸ்ட் ரூம் போன, என் கிட்ட சொல்ல வேண்டியது தானே” என்றவள்..
அவளின் கையை பார்க்க ஊசியும் பிய்ந்து இருந்தது..
“என்ன மேடம் பண்ணி வச்சிருக்கீங்க”, என்றவள் அவள் கையில் ரத்தம் வந்து கசிந்து இருந்ததை சுத்தப்படுத்தியவள்..
“உங்களுக்கு நரம்பு கிடைக்கிறது கஷ்டம் இதுல மறுபடியும் நான் எப்படி நரம்பு கண்டுபிடித்து இன்ஜெக்ஷன் போடுவது” என்றவள்.
“படுங்க மேம்” என்று இன்னொரு நர்சை சென்று அழைத்து வந்தாள்..
மாயாவின் கையில் சிறிய பெல்ட்டு வைத்து இறுக்கமாக மாட்டி. “மேம் உங்க கையை இறுக்கமா மூடிக்கோங்க” என்று நரம்பைத் தேடிக் கொண்டிருந்தனர்.. நரம்பு சரியாக தெரியவில்லை மீண்டும், மீண்டும் நரம்பை தேடி மாயாவின் கையில் ஊசியை குத்த…
“வலிக்கு” என்று சத்தம் போட்டாள் மாயா..
‘”சாரி மேம் நாங்க என்ன பண்றது உங்களுக்கு நரம்பு தெரிய மாட்டேங்குது” என்று மறுபடியும் நர்ஸ் இன்ஜெக்ஷனை குத்தி எடுக்க…. அவள் கத்தியதும் பதறிப்போன அக்னி…
மாயாவின் தலை அருகே வந்து “ஒன்னும் இல்லடா, ஒன்னும் இல்லடா அழாத” என்று அவளின் தலை கோதியவன்..
“சிஸ்டர் பார்த்து சிஸ்டர் அவ வலிக்குதுன்னு அழறா” என்றான்..
நர்ஸ் எப்படியோ நரம்பை கண்டுபிடித்து டிரிப்ஸ் இன்ஜெக்ஷனை செலுத்தியவள் “அவ்ளோதான் மேடம் பேசாம தூங்குங்க” என்று சொல்லிவிட்டு சென்றாள்….
மாயா வலியில் கண் மூடி முணங்கிக் கொண்டே இருக்க..
அவள் கண்களை துடைத்து விட்டவன்.. அவள் படும் வேதனையை பார்த்து அவனுக்குமே கண் கலங்கியது…
error: Content is protected !!