Skip to content
Post Views: 2,570

சுபா மயங்கி விழுந்தவள் எழவே இல்லை… பின் மருத்துவமனை அழைத்து சென்று அங்கு டாக்டர் பார்த்துவிட்டு “ரொம்ப ஸ்ட்ரெஸ்சா இருகாங்க… பிபி(bp) ரொம்ப அதிகமா இருக்கு… அதுனாலதான் மயக்கம் தெளியல… அரை மணி நேரத்துல கண் முழிச்சிடுவாங்க…” என்று கூறிவிட்டு சென்று விட்டார்..
Advertisement
இருந்த பதட்டத்தில் வர்ணனுக்கு தகவல் சொல்லவே அனைவரும் மறந்து இருந்தனர்.. அடுத்த ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பின் மெல்ல மெல்ல கண் திறந்த சுபா மீண்டும் அர்ஜுனன் நினைவு வரவே அழுக ஆரம்பித்து இருந்தாள்…. உடனே நான் அர்ஜுனனை பார்க்க வேண்டும் என்று கூறி அழுது கொண்டே இருந்தாள்….
Advertisement
முகுந்தன் அவளை அமைதிப்படுத்தி “பாப்பா இங்க பாரு… அர்ஜுனுக்கு ஒன்னும் ஆகி இருக்காது…. நாம அங்க போகலாம்… ஆனா நீ அழுதா அங்க கூட்டிட்டு போக மாட்டேன்…” என்று கூறினான்…
Advertisement
அழுகையை நிறுத்தவில்லை என்றாலும் கொஞ்சம் கம்மியாகி இருந்தது… ஆரவிற்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை… தன் அப்பாவிற்கு எதோ ஆபத்து என்று மட்டும் புரிந்து இருந்தது… கர்ணன் தான் அவனை பார்த்து கொண்டான்….
Advertisement
பெண்களை இங்கேயே விட்டுவிட்டு அவர்களுக்கு துணையாக மாரியப்பனும் தேவியின் அப்பாவும் இருக்க சுபாவிற்கு துணையாக தேவியின் அம்மாவும் செண்பகம் அம்மாவும் மட்டும் ஆண்களுடன் கேரளாவை நோக்கி சென்றனர்…. மருதாயி பாட்டியும் நான் வந்தே தீருவேன் என்று கூறி அவரும் கிளம்பிவிட்டார்….
அழுது அழுதே மயக்க நிலைக்கு சென்று இருந்தாள் சுபா…. முழுதாக மயக்கம் அடையாமல் இருந்தாலும் தெளிவில்லாமல் தான் இருந்தாள்…. அவள் ஒரு நிலையிலேயே இல்லை… அவள் மனம் முழுவதும் மாமா மாமா என்று மட்டும் தான் கூறிக்கொண்டு இருந்தது….
வாணனிடம் இடம் கேட்டு அங்கு சென்ற அனைவரும் அர்ஜுனன் இன்னும் கிடைக்கவில்லை என்று கேட்டு மிகவும் சோர்வு அடைந்தனர்… நந்தினி அப்போது கூட அவள் மேல் தப்பில்லை என நிரூபிக்க சுபாவை நோக்கி “எங்கடி வந்த… என் தம்பி உயிரோட இருக்கானா இல்லை செத்துட்டானானு பாக்க வந்தியா” என்று அவளை அடிக்க பாய்ந்தாள்
யாரும் எதிர்பார்க்கவில்லை… கடைசி நேரத்தில் சசி சுபாவை தன் பக்கம் இழுத்து கொண்டான்… அதில் மேலும் கோவமுற்று “டேய் சசி நீ என்ன பைத்தியமா அவ உன் அண்ணனை கொல்ல பாத்து இருக்காடா… உனக்கு எங்க ரத்த சொந்தத்தோட அருமை புரிய போகுது…. நீ என்ன எங்க குடும்பத்தோட வாரிசா???” என்று கேள்வி கேட்டாள்….
சசி அப்டியே உறைந்துவிட்டான்… அவனுக்கு என்ன பேச வேண்டுமென்றே தெரியவில்லை…. விஷயம் தெரிந்த பின்பு கூட அவனிடம் யாரும் இந்த வார்த்தையை கேட்கவில்லை…. அனைவரும் அந்த வீட்டின் வாரிசாகவே தான் நினைத்தனர்…..
ஒருநிமிடம் அவள் சொல்வதே புரியவில்லை… பிறகு தான் அவனுக்கே ஞாபகம் வந்து இருந்தது….
வாணன் வானதியை பேசும் போதும் எதுவும் கூறவில்லை… சசியை பேசும் போதும் எதுவும் கூறவில்லை… பாலா தான் அவளை கன்னத்தில் அடித்து “அவன் என் பிள்ளை…. அவனை பத்தி நீ பேசாத… அப்பறம் என்ன சொன்ன… சுபா தான் அவனை கொல்ல பாத்திச்சா… அந்த பொண்ணு வேணாம் வேணாம்னு எவளோ சொல்லி இருக்கு… நீ தானு போக சொன்ன… நீ தானு நிரவி குட்டிய அழுக வெச்சு அவனை கட்டாய படுத்தி அனுப்புன… சிவா கூட சொல்லி இருக்கான்… அந்த சின்ன பையனுக்கு இருக்க அறிவு கூட உனக்கு இல்லை…. நீ எனக்கும் சிந்தியாவுக்கும் எனக்கும் தான் பிறந்தியா…. என்னோட புத்தி உனக்கு வந்துச்சு போல… கேட்பார் பேச்சை கேட்டு ஆடுறது…. நான் சொல்லட்டா சொத்துகாக கூட பிறந்த தம்பியை கொல்ல பாத்த அப்டினு… என் பையனுக்கு மட்டும் எதோ ஆச்சு உன்னையும் சும்மா விட மாட்டேன்… அங்க இருக்காளே அவளையும் விட மாட்டேன்…” என்று கோவமாக கூறினார்…
அவரின் இந்த கோவத்தை யாரும் எதிர்பார்க்கவே இல்லை…. வாணன் இதில் கூட பொய் சொல்லி நந்தினி தன்னை ஏமாற்றி உள்ளாள் என தெரிந்து கொண்டு மிகவும் உடைந்து போய் விட்டான்…
ஒரு நாள் சென்று இருந்தது…. யாருக்கும் கொஞ்சம் தூக்கம் கூட இல்லை…. பாட்டி மற்றும் தேவியின் அம்மா செண்பகம் அம்மா மூவரையும் வற்புறுத்தி சாப்பிட வைத்து முகுந்தன் அங்கிருக்கும் அறையில் உறங்க வைத்து இருந்தான்….
எங்கு தேடியும் அர்ஜுனன் உடல் கிடைக்கவே இல்லை…எனவே அவன் இறந்துவிட்டான் என முடிவு செய்துவிட்டனர்…..
அப்போது கூட வர்ணன் ஞாபகம் யாருக்கும் வரவில்லை… இரண்டு நாட்களாக அவன் இருக்கும் நாட்டில் பயங்கர பனிபொழிவு காரணமாக அவனால் யாரையும் தொடர்புகொல்ல முடியவில்லை….
ஜனனியின் அப்பாவிற்கு மிகவும் உடம்பு சரி இல்லாமல் போனதால் அவன் அங்கு பார்த்தாக வேண்டிய கட்டாயம்….. அதனால் அவனும் இவர்களுக்கு அழைக்கவில்லை….
சுபா பித்து பிடித்தது போல் அமர்ந்துவிட்டாள்…. யாராலும் அர்ஜுனன் இல்லை என்று சொன்னதை ஏற்க முடியவில்லை…. ஊரில் உள்ளோருக்கு தகவல் சொல்லிவிட்டு கனத்த மனதுடன் அனைவரும் அய்யனார்புரம் நோக்கி சென்றனர்…
சுபா அங்கிருந்து வர மறுத்தாள்… அவள் நம்பவே இல்லை அவளுக்கு உள்ளுணர்வு சொல்லியது அர்ஜுனன் சாகவில்லை என… ஆனால் அவள் சொன்னதை தான் கேட்க ஆளில்லை அங்கு…
கண்மணி முகுந்தனிற்கு அழைத்து இருந்தாள்… அவன் அதை ஏற்று கலங்கிய குரலில் “சொல்லு கண்ணம்மா” என்று கூறினான்…
அவன் கலங்கிய குரலை கேட்டு மேலும் அவனை கலங்க செய்யாமல் “மாமா… நீ தான் தைரியமா இருக்கனும்… நீயே இங்க கலங்கி போய் இருந்தா என்ன பண்றது….” என்று கேட்டாள்…
“என்னால முடியல கண்ணம்மா அவன் யாரோ இல்லையே என் உயிர் நண்பன் அவன் இப்போ இல்லனு என்னால ஏத்துக்க முடியலயே” என்று கலங்கிய குரலில் கேட்டான்….
“மாமா நீ தயவு செஞ்சி அழுகாத…. நீ இப்போ தைரியமா இருக்க வேண்டிய நேரம்…அப்புறம் மாமா வர்ணன் அத்தானுக்கு சொல்லிட்டியா” என்று கேட்டாள்….
“இன்னும் இல்ல… அவன்கிட்ட சொல்லவே பயமா இருக்குடி எனக்கு…” என்று அழுகை குரலில் கூறினான்….
“வேற வழி இல்ல மாமா… கிட்டதட்ட ரெண்டு நாள் ஆக போகுது… நாம இன்னும் சொல்லவே இல்லை… இதுக்கு மேல சொல்லாம இருக்க முடியாது… சொல்லிடு நீ…” என்று கூறிவிட்டு “மாமா திரும்பியும் சொல்றேன் அங்க நீதான் எல்லாரையும் பார்க்கணும்…. பத்திரமா வாங்க… முக்கியமா சுபாவை ரொம்ப பத்திரமா கூட்டிட்டு வாங்க” என்று கூறி வைத்து விட்டாள்…
முகுந்தன் சிறிது நேரம் தன்னை ஆசுவாச படுத்தி கொண்டு வர்ணனுக்கு தயங்கி தயங்கி அழைத்தான்… இரண்டு நொடியில் அந்த பக்கம் ஏற்ற வர்ணன் “முகி யாருக்கும் ஒன்னும் இல்லல நேத்துல இருந்தே மனசுக்கு ஒரு மாதிரி இருக்குடா… நீ.. நீ எனக்கு கால் பண்ணவே மாட்ட… நீ எனக்கு கால் பண்ணா கண்டிப்பா யாருக்கோ எதோ ஆகி இருக்கு… சொல்லுடா எல்லாரும் நல்லா இருக்காங்கல… அர்ஜுன் ஏன் டா கால் எடுக்கவே இல்ல… நான் நேத்துல இருந்து பண்றேன்… ஏன் அவன் எடுக்கல” என்று பட படவென்று கேட்டான்…
அவன் கேட்க கேட்க இந்த பக்கம் முகுந்தன் வெடித்து சிதறிவிட்டான்… அவன் அழுகையை பார்த்து “டேய் முகி என்ன ஆச்சு சொல்லி தொல…” என்று கோவமாக கேட்டான்…
“வர்ணா அர்ஜுன் நம்ம எல்லாரையும் விட்டுட்டு போயிட்டான் டா…” என்று கூறி கதறிவிட்டான்….
“முகி விளையாடத டா… அர்ஜுனுக்கு ஒன்னும் ஆகி இருக்காது பொய் சொல்லாத” என்று கோவமும் அழுகையும் கலந்து கேட்டான்..
முகுந்தன் நடந்த அனைத்து விஷயத்தையும் கூறி இருந்தான்… “அந்த மலை செங்குத்தான மலை.. மேல இருந்து கீழ விழுந்தா அந்த நதில தான் விழுகனும்…. அங்க கீழ இருக்க காட்டுல இருக்குற மக்கள் கிட்ட கேட்டு அந்த நதி முழுக்க தேடி பாத்தாச்சு… அவன் கிடைக்கவே இல்லடா” என்று அழுதவாரு கூறினான்…
“டேய் நான் சீக்கிரமா அங்க வரேன்… நீ பொய் சொல்ற… நான் நேர்ல வந்து அவனை பாக்குறேன்” என்று கூறி வைத்துவிட்டு திரும்பினால் அங்கு ஜனனி கண்ணீருடம் நின்று இருந்தாள்….
அவளுக்கு கண்மணி தான் அழைத்து அழுதுக்கொண்டே அனைத்தையும் கூறி இருந்தாள்…. அவளை பார்த்தவுடன் அவள் முன் மண்டியிட்டி “ஜானு சொல்லு முகி பொய் தானு சொல்றான்… அர்ஜுனுக்கு ஒன்னும் இல்ல தானு… நீயே சொல்லுடி அவனுக்கு எதுவும் ஆகி இருக்காது தானு… முகி எதோ எதோ சொல்றான்….” என்று கலங்கிய குரலில் கேட்டான்….
அவள் என்ன சொல்வாள் அவளே இவனிடம் ஆறுதல் தேடி வந்தால் இவனே இப்படி புலம்பியவாரு இருந்தால் இருவருக்கும் யார் ஆறுதல் கூறுவது….
வர்ணனின் நண்பன் பக்கத்து ஊர் தான்… எனவே அவனுக்கு வேறு ஒருவர் மூலமாக தகவல் தெரிந்து இவர்களை பார்க்க ஓடி வந்து இருந்தான்…
ஜனனியின் அம்மாவிடம் “அம்மா அவங்க ரெண்டு பேரும் எங்கம்மா…??” என்று கொஞ்சம் வருத்தமான குரலில் கேட்டான்…
அவரோ “ரூமுக்கு போய் இருக்காங்க ப்பா என்ன ஆச்சு ஏன் முகம் வருத்தமா இருக்கு”… என்று கேட்டார்
அவன் தயங்கி தயங்கி அவரிடம் விஷயத்தை கூறி இருந்தான்.. அவர் அதிர்ந்தே போய் விட்டார்… “என்ன ப்பா சொல்ற????” என்று அதிர்ந்து போய் கேட்டார்….
“ஆமா ம்மா அர்ஜுனன் பாடி கிடைக்கவே இல்ல போல… இப்போ எல்லாரும் ஊருக்கு போயிட்டு இருக்காங்க….ஊருல இருக்கவங்க தான் தகவல் சொன்னாங்க…. அது தான் சொல்ல வந்தேன்….” என்று கூறினான்
ஜனனியின் அம்மா அழுக ஆரம்பித்துவிட்டார்… பின் வர்ணனின் நண்பன் அவரை சமாதானம் படுத்தி உள்ளே சென்று பார்க்க கூறினான் … அங்கு உள்ளே இருவரும் அழுத நிலையிலேயே நின்று இருக்க ஜனனி அவளின் அம்மாவை கண்டு இன்னும் அழுக ஆரம்பித்து இருந்தாள்..,
வர்ணனின் நண்பன் தான் “டேய் நீயும் தங்கச்சியும் ஊருக்கு கிளம்புங்க… அப்பா அம்மாவை நான் பாத்துக்குறேன்… என் வைப் இருக்கா… நாங்க பத்துக்குறோம்… நில்லு பிலைட் இருக்கானு செக் பண்ணிட்டு சொல்றேன்” என்று செக் செய்துவிட்டு “ஷிட்” என்று தலையில் அடித்து கொண்டான்….
“டேய் எல்லா பிலைட்டும் கேன்சல் பண்ணிட்டாங்க டா… கடுமையான ஸ்னோ பால்… அதுனால இன்னிக்கு எந்த பிலைட்டும் இல்ல” என்று கூறினான்…
“நாளைக்கும் டவுட் தான்… இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ டா நாளைக்கு கண்டிப்பா பிலைட் இருக்கும் என்று கூறிவிட்டு கவலை படமா இருங்க” என்று கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான்….
ஊரே அர்ஜுனன் வீட்டின் முன்பு தான் கூடி இருந்தனர்…. யாராலும் நம்ப முடியவில்லை… அங்கு அவன் தான் ராஜா எப்போதும்… அந்த ஊரின் ராஜா தற்போது இல்லை என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை….
சுபா வந்து இறங்கியவுடன் அனைவரும் அவளை அனைத்து கொண்டு அழுதனர்… ஆனால் அவள் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை….
அவள் யாரையும் கண்டுகொள்ளவே இல்லை… ஆரவ் கர்ணனிடம் தான் இருந்தான்… ஆனால் நிரவி குட்டி தன் தாயை தான் தேடினாள்… ஆனால் அவளை பார்த்துக்கொள்ளும் சூழ்நிலையில் சுபா இல்லை…
ஒரு வயதான பெண்மணி சுபாவிற்கு சடங்கு செய்ய கூறினார்… அவள் வளையல் எல்லாம் உடைத்து பொட்டை அழித்து தாலியை அறுக்க வரும்போது சுபா சத்தமிட்டு அழுது இருந்தாள்…. அவள் தாலியை விடவே இல்லை….
கணவன்களை இழந்த பெண்கள் மட்டுமே அந்த அறையில் இருக்க வெளியில் அவளின் அழுகையை கேட்டு அனைவரும் அழுது இருந்தனர்…. வாணன் அவளின் அழுகையை கேட்டு செத்தே விட்டான்….
மருதாயி பாட்டி உள்ளே செல்லவில்லை… அவரால் சுபாவின் அழுகையை கேட்கவே முடியவில்லை… உள்ளே அவளின் மறுப்பையும் மீறி தாலியை அறுத்து இருந்தனர்….
சடங்குகள் அனைத்து முடிந்ததும் தாலியை ஒரு பாலில் போட்டு வைத்தனர்… சுபாவை வீட்டிற்கு வெளியே வரவேண்டாம் என கூறிவிட்டு நெருங்கிய உறவினர்கள் ஊரில் உள்ளோர் என அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்று இருக்க முகுந்தன் வீட்டினரும் அவன் வீட்டிற்கு சென்று இருந்தனர்….
இப்போது அந்த வீட்டில் வாணன் குடும்பம் சசி குடும்பம் கர்ணன் குடும்பம் சுபா ஆரவ் நிரவி குட்டி மட்டுமே இருந்தனர்….
இரவு யாரும் உணவு வேண்டாம் என கூறிவிட்டனர்… நந்தினி தான் அனைவருக்கும் வற்புறுத்தி பாலை குடுத்து இருந்தாள்….
ஆனால் குடுத்த அரை மணிநேரத்தில் அனைவரும் உறங்கி இருந்தனர்…. அனைவரும் உறங்கி விட்டனரா என்று பார்த்துவிட்டு சுபா இருக்கும் அறைக்கு சென்றாள்… அனைவரையும் பார்த்த அவள் சிவனேஸும் ஆரவும் உறங்கி விட்டனரா என்று பார்க்காமல் விட்டுவிட்டாள்…
சுபாவின் அறைக்கு சென்று “என்ன அடுத்து யாரை கொல்லனும் யோசிச்சிட்டு இருக்கியா… எத்தனை பேரை தாண்டி கொல்லுவ உன் ராசியால… ஒழுங்கா இந்த வீட்டை விட்டு போயிடு….” என்று அவளை பேச கூடவிடாமல் அவளை முடியை பிடித்து இழுத்து வந்து வீட்டை விட்டு வெளியே தள்ளி இருந்தாள்…..
இதை அனைத்தும் ஆரவும் சிவனேஸும் வீடியோ எடுத்து இருந்தனர்…. சிவனேஸ் ஆரவிடம் “ஆரவ் அத்தய வெளிய தள்ளிட்டாங்க… நீ அவங்களுக்கு தெரியாம அத்தய கூட்டிட்டு முகி சித்தப்பா வீட்டுக்கு போயிடு… காலைல பேசிக்கலாம்” என்று அந்த இரவிலும் கரெக்ட்டாக யோசித்து ஆரவை நந்தினி பார்க்காமல் வெளியே போக வைத்து இருந்தான்….
நந்தினி சுபாவை வெளியில் அனுப்பிய மிதப்பில் வேறு ஒரு அறைக்கு சென்று உறங்கி இருந்தாள்…. ஆனால் சிவனேஸ் நந்தினியை தன் தாய் என சொல்லவே வெட்கமடைந்து கோவத்துடன் உட்காந்து இருந்தான்…. அந்த பதினான்கு வயது பிள்ளை தன் தாயை நினைத்து மிகவும் வேதனை அடைந்து இருந்தான்…. தாயை பற்றி அவனே தெரிந்து கொண்டு தன் தாயா இப்படி என்று அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை…
அவனுக்கு பால் பிடிக்கவே பிடிக்காது… குழந்தைகள் தானே என்று அவளும் ஆரவிற்கு பாலில் தூக்க மாத்திரை கலக்கவில்லை… நிரவி சசியுடன் உறங்கிவிட்டாள்…
நிரவி அர்ஜுனன் சுபாவை தவிர்த்து சசியுடன் தான் அதிகம் இருப்பாள்… அதனால் தான் இப்போது இருவர் இல்லாமல் சசியுடன் தான் அழுது கொண்டே தூங்கிவிட்டாள்….
error: Content is protected !!