Skip to content
Post Views: 708

அர்ஜுனன் உடம்பில் இருந்து அய்யனார் இறங்கியவுடன் அர்ஜுனன் மயங்கி இருக்க சுபாவிடம் வீட்டிற்கு போய் விசாரித்து கொள்ளலாம் என எண்ணி அர்ஜுனனை பார்க்க சென்றனர்… அர்ஜுனனும் மயக்கம் தெளிந்து எழுந்து இருக்க அனைவரும் வீட்டிற்கு சென்றனர்… அனைவரும் அர்ஜுனன் வீட்டில் தான் இருந்தனர்…
அர்ஜுனனை அறையில் தூங்க வைத்து விட்டு சுபாவை ஹாலிற்கு அழைத்து வந்த அவளின் அண்ணன்கள் “சொல்லு சுபா என்ன பண்ணுது உனக்கு.. இனிமே மறைக்க நினைக்காத.. சாமியே சொல்லிடுச்சு.. என்ன ஆச்சு” என்று கலங்கிய குரலில் கேட்டனர்…
அவர் அமைதியாக இருக்க “சொல்லு குட்டிமா.. உனக்கு என்ன பண்ணுது… எங்க கிட்ட சொல்லுடா…” என்று கேட்டனர்…
Advertisement
சுபா மெதுவாக “ண்ணா இப்போ எல்லாம் நெஞ்சுல சுருக்கு சுருக்குனு குத்துது… அப்போ என்னால வலியை தாங்க முடியல ண்ணா… அது எல்லார்கிட்டயும் சொல்ல கொஞ்சம் தயக்கமா இருந்தது.. திருவிழா முடிஞ்சதும் உங்க கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்…. அதுக்குள்ள ” என்று கூறி கொண்டு இருக்கும் போதே “உன் வலியை என்கிட்ட கூட மறைக்க கத்துக்கிட்டியா சுபத்ரா” என்று கோவமாக கேட்டு கொண்டே அர்ஜுனன் நிதானமாக கீழே இறங்கினார்..
அந்த நேரத்தில் அர்ஜுனனை அங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை.. அவர் சோர்வில் நன்றாக உறங்கிய பின் தான் அனைவரும் கீழே வந்தனர்… சுபாவுக்கு ஒன்று என்றால் அவரால் தாங்க முடியாது என எண்ணி தான் அவர் உறங்கிய பின் சுபாவிடம் கேட்டனர்.. நன்றாக தூங்கியவர் எழுந்து வருவார் என யாரும் எண்ணவில்லை..
அர்ஜுனன் எப்போதும் ரா பூசைக்கு பின் நன்றாக உறங்கிவிடுவார்… சுபா எப்போதும் அவரை தனியே விடாமல் அவருடன் இருப்பார்… ஆனால் இன்று அவரின் அருகாமை இல்லாமல் துயில் கலைந்தவர் என்ன நினைத்தாரோ கீழே வந்தார்..
Advertisement
கீழே சுபாவை சுற்றி நின்று அனைவரும் கேள்வி கேட்டு கொண்டு இருப்பதை புரியாமல் பார்த்தவர் சுபாவின் உடல்நிலை பற்றி கேட்பதை கேட்டு பதறி கீழேஇறங்கி வந்தார்… ஆனால் சுபா கூறும் பொழுது அந்த வலி நீண்ட நாட்களாக இருப்பதை போல் இருக்க தன்னிடம் மறைத்துவிட்டாள் என்ற விஷயம் அவரை கோவப்படுத்தி இருந்தது…
Advertisement
சுபா “மாமா” என்று அவர் அருகில் செல்ல பார்வையிலேயே தடுத்து நிறுத்தியவர் நிதானமாக கீழே இறங்கி வந்து தனி சோபாவில் அமர்ந்தவர் “சாமி என்ன வாக்கு சொல்லிச்சு” என்று சுபாவை அழுத்தமாக பார்த்து கேட்க அனைவரும் அமைதியாக இருந்தனர்.. “உங்களை தான் கேட்டேன்..” என்று கேட்டார்….
அனைவரும் அமைதியாக இருக்க “ரொம்ப நல்லது” என அவர் கூறி விட்டு வேகமாக அறைக்கு சென்று விட சுபா பாவமாக தன் குடும்பத்தினரை பார்த்தார்… யாவரும் அமைதியாக இருக்க சசி தான் “உனக்கு அவரை சமாதானம் செய்ய தெரியாதா… போ எங்க கிட்ட மறைச்சது கூட பிரச்சனை இல்லை… அவர் கிட்ட மறைச்சது தான் பிரச்சனையே… எத எத மறைக்கனும் இல்லை உனக்கு.. வயசு தான் ஆகிடுச்சு ஆனா பச்ச புள்ளையாவே இருக்க போ.. சிங்கம் எப்படி சீற போகுது தெரியல…” என்று கூறினார்… சுபா பாவமாக பார்த்து கொண்டே அறைக்கு சென்றார்…
அவரை கொஞ்சம் கேலி செய்து அனுப்பினாலும் அனைவரும் வருத்தமாக தான் இருந்தனர்.. அனைவருக்கும் சுபா என்றால் உயிராகிற்றே… முகுந்தன் தான் “நாளைக்கே ஹாஸ்பிடல் போய் காட்டலாம்… நம்ம பாப்பாவுக்கு ஒன்னும் ஆகாது… போங்க போய் எல்லாரும் தூங்குங்க…” என்று அனைவரையும் அறைக்கு அனுப்பி வைத்து விட்டு தானும் அறைக்கு சென்றார்…
Advertisement
அங்கு கோவமாக சென்ற அர்ஜுனன் தங்கள் அறையில் இருக்கும் சிறிய அறைக்குள் சென்று விட சுபா வரும் போது வெறுமையான அறையே வரவேற்றது..
அவர் எங்கு இருப்பார் என அறிந்த சுபா “மாமா சாரி… உங்க கிட்ட மறைக்கனும்னு நினைக்கல.. திருவிழா முடிஞ்சதும் உங்க கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்… உங்க கிட்ட சொல்லாம நான் யார்கிட்ட சொல்ல போறேன் மாமா…” என்று அழு குரலில் கூறினார்…
அர்ஜுனன் அமைதியாக இருக்க “மாமா நான் தான் சாரி சொல்றேன்ல.. உன் அம்மு தானே மன்னிக்க மாட்டியா” என்று அவர் அழுதவாறு கேட்க “நீங்க மட்டும் நம்ம மாமானு உங்க வலியை என்கிட்ட சொன்னிங்களா சுபத்திரா” என்று அழுத்தமாக கேட்டு கொண்டே வெளியில் வந்தார்…
“மாமா” என்று அவரை நெருங்கினார்… அதற்குள் அறையின் கதவு தட்டப்பட்டது… கதவை திறந்தால் அவர்களின் மகள்கள் தான் நின்று இருந்தனர்… இருவரும் பேசிக்கொள்ளவில்லை.. ஆனால் இருவரும் ஒரே போல் அவர்களின் அறையின் முன் நின்று இருந்தனர்..
கதவை திறந்ததும் ஆளுக்கு ஒரு பக்கம் சுபாவை கட்டிகொள்ள அர்ஜுனன் மூவரை தான் பார்த்து கொண்டு இருந்தார்…
சுபா இருவரையும் பார்த்து “எனக்கு ஒன்னும் இல்லடா…கொஞ்சம் வலி மட்டும் தான்.. டாக்டர் கிட்ட காட்டுனா சரி ஆகிடும்… கவலைப்படாதீங்க போய் ரெண்டு பேரும் தூங்குங்க..” என்று அவர்களாய் கஷ்டப்பட்டு அறைக்கு அனுப்பி விட்டு அர்ஜுனனை சமாதானம் செய்ய நெருங்கும் போது ஆரவ் அழைத்து விட்டான்…
(சுபாவின் மைண்ட் வாய்ஸ் என்னவா இருக்கும்?!?!?!?)
சுபா அட்டனெட் செய்தவுடன் “அம்மா… என்ன ஆச்சு உனக்கு.. நான் நான் இந்தியா வரட்டா.. இப்போ தேடுனேன் டிக்கெட் கிடைக்கல.. இங்க ஸ்னோ பால்லா(snow fall) இருக்கு.. சோ ப்லைட் எல்லாம் கேன்சல் பண்ணிட்டாங்க.. இங்க அல்லோவ் பண்ணதும் பர்ஸ்ட் ப்லைட்ல அங்க வரேன்” என்று தாயிடம் கலங்கிய குரலில் கூறிக்கொண்டு இருந்தான்..
“தம்பி அம்மா சொல்றதை கேளு.. நிஜமா ஒன்னும் இல்ல.. லைட்டா தான் வலிக்குது.. டாக்டர் கிட்ட நாளைக்கு காட்டுறேன்… அவசர அவசரமா கிளம்பி வராதா… லீவு கிடைக்குறப்ப வா… அம்மா நல்லா இருக்கேன் தம்பி.. என்னை பத்தி கவலைப்படமா ஒழுங்கா உன் உடம்பை பாத்துக்கோ…. யூனிவர்சிட்டி விட்டு வந்துட்டியா..” என்று கேட்டார்..
“அம்மா யூனிவர்சிட்டி விட்டு எப்பயோ வந்துட்டேன்.. இப்போ கொஞ்சம் வெளிய போயிட்டு கொஞ்ச நேரம் முன்னாடி தான் வந்தேன்… நிஜமா ஒன்னும் இல்லல ம்மா.. எனக்கு உன்னை பாக்கனும் போல இருக்கு ம்மா… நான் ஒருக்கு வரேன் ம்மா….” என்று வருத்தமாக கேட்டான்…
“தம்பி அம்மா வீடியோ கால் பண்றேன்.. பேசலாம்.. இதுக்கு எல்லாம் குட்டி பையன் மாதிரி பீல் பண்ணலாமா” என்று கூறி வீடியோ கால் செய்து விட்டார்..
உடனே அட்டென்ட் செய்தவன் “ம்மா உனக்கு நிஜமா ஒன்னும் இல்லல… உன்னை நேர்ல பாக்கனும் போல இருக்கு ம்மா” என கண் கலங்கி கூற… சுபாவோ “தம்பி நிஜமாவே அம்மாவுக்கு ஒன்னும் இல்ல.. நீ கவலைப்படாத.. லைட்டா வலிக்குது அவளோ தான்.. உன் எக்ஸாம்ஸ் எல்லாம் முடிச்சிட்டு ஊருக்கு வா சரியா… இல்லை பாக்கனும் போல இருந்தா நான் அங்க வரேன்.. இப்போ தான் யூனிவர்சிட்டில இருந்து வந்து இருக்க.. போ போய் ப்ரெஷ் ஆகிட்டு எதோ சாப்பிடு தம்பி.. எவளோ நேரம் சாப்பிடாம இருப்ப அம்மா போனை வைக்குறேன்…. திரும்பியும் சொல்றேன் தம்பி அம்மாவுக்கு ஒன்னும் இல்ல.. கவலைப்படாம படிப்புல கவனம் வை…” என்று திரையில் அவனின் முகத்தை தடவி கொடுத்தார்..
ஆரவும் “லவ் யூ ம்மா” என்று கூறி வைத்து விட்டான்.. சுபாவும் சிரிப்புடன் போனை பார்த்தவர் பின் திரும்பி தன் மாமனை பார்க்க அவர் எப்போதோ உறங்கி இருந்தார்….. அவரை பார்த்து உதட்டை பிதுக்கியவர் அவர் அருகில் சென்று அவர் நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டவர் அவரை அணைத்து கொண்டு உறங்கிவிட்டார்..
அர்ஜுனன் உறக்கத்திலும் அவரை அணைத்து கொண்டு உறங்கிவிட்டார்.. அடுத்த நாள் காலை சுபா எழுந்து பார்க்கும் அர்ஜுனன் அருகில் இல்லை.. திருவிழா முடிந்த அடுத்த நாள் அர்ஜுனன் நேரம் கழித்து தான் எழுவார்.. ஆனால் இப்போது இவர் எழும் போது அர்ஜுனன் இல்லாதை பார்த்து வேகமாக எழுந்து பார்க்க சிறிய அறையில் இருந்து சத்தம் கேட்டது… அந்த அறையில் முன்பு நின்று “மாமா” என்று அழைக்க “ம்ம்” என்ற உறுமல் மட்டுமே கேட்டது.. எனவே குளித்து விட்டு இவர் கீழே செல்லும் போது அர்ஜுனன் கீழே ஹாலில் ஆரமித்து இருந்தார்..
சுபா கீழே வரும் போது வாணனிடம் “அத்தான் கிளம்ப சொல்லுங்க ஹாஸ்ப்பிட்டலுக்கு” என்று அழுத்தமாக கூறினார்..
சுபா எதோ மறுத்து பேச வர அர்ஜுனனின் பார்வையில் தானாக வெளியில் போய் நின்று கொண்டார்.. அர்ஜுனன் ஹாஸ்பிடல் செல்வதாய் கூறிவிட்டு ஜீப்பை எடுத்தார்…
ஏற்கனவே அப்பாயின்மென்ட் வாங்கி இருக்க எனவே முதலாவதாக டாக்டரை பார்க்க சென்றனர்… இருவரையும் வரவேற்ற “டாக்டர் சொல்லுங்க என்ன பிரச்சனை…” என்று கேட்டார்..
“டாக்டர் கொஞ்ச நாளா நெஞ்சு அடிக்கடி வலிக்குது… வலிக்குதுன்னு சொல்றத விட சுருக்கு சுருக்குனு குத்துது.. அதை தான் என்னால தாங்க முடியல..” என்று கூறினார்…
“எத்தனை நாளா வலிக்குது என்று கேட்டு மூச்சை நல்லா இழுத்து விடுங்க..” என்று கூறி ஸ்டெதஸ்கோப் மூலம் அவர் செக் செய்தார்…
நன்றாக மூச்சை இழுத்து விட்ட சுபா “ஒரு மாசமா தான் டாக்டர் இப்படி வலிக்குது..” என்று கூறினார்….. அவர் கூறவும் அர்ஜுனன் முறைத்து விட்டு “டாக்டர் புல் பாடி செக்கப் பண்ணனும்.. இன்னும் மார்னிங் சாப்பிடல..” என்று கூறினார்…
“ஓகே சார்… நீங்க வெயிட் பண்ணுங்க.. சாப்பிடுறதுக்கு முன்னாடி பண்ண வேண்டிய டெஸ்ட் எல்லாம் எழுதி தரேன்.. அது எல்லாம் முடிச்சிட்டு சாப்பிட்டு ஒன் அன்ட் ஹாப் அவர் கழிச்சு வாங்க.. அதுக்கு அப்பறம் மத்த டெஸ்ட் எல்லாம் எடுக்கலாம்” என்று கூறி அனைத்தையும் எழுதி கொடுத்தார்…
அர்ஜுனன் ஒரு வார்த்தை கூட சுபாவிடம் பேசவில்லை… சாப்பிடும் முன் எடுக்க கூடிய டெஸ்ட் எடுத்த பின் சசியின் ஹோட்டலுக்கு தான் சென்றனர்… அது அவர்கள் சென்ற மருத்துவமனையில் இருந்து ஐந்து நிமிட பயணம் தான்.. அங்கு அர்ஜுனன் சுபா இருவரும் இட்லி மட்டும் சாப்பிட்டனர்.. “நீங்க ஏன் மாமா இட்லி சாப்பிடுறிங்க.,.. வேற வாங்கி சாப்பிடுங்க” என்று சுபா கூறினார்…
அர்ஜுனன் கடுமையாக ஒரு முறைப்பு முறைத்து விட்டு அமைதியாக சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.. சுபாவிற்கு தான் முனுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது… அமைதியாக சாப்பிட ஆரம்பித்து இருந்தார்.. அப்போது தான் சசி அங்கு வர “டாக்டர் என்ன அண்ணா சொன்னாங்க..” என்று கேட்டார்…
“மேடமுக்கு ஒரு மாசமா வலி இருக்காம் சசி.. உன் ப்ரெண்ட் அதை மறைச்சு இருக்காங்க.. நான் புல் பாடி செக்கப் பண்ண சொல்லி இருக்கேன்…… மார்னிங் பிரேக் பாஸ்ட் சாப்பிடுறதுக்கு முன்னாடி எடுக்க வேண்டிய பண்ணி இருக்காங்க.. சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழிச்சு போகனும்… உன் ப்ரெண்ட் இங்கயே இருக்கட்டும்.. நான் வெளிய போயிட்டு வரேன்” என்று கூறி வேகமாக சென்றுவிட்டார்…
போகும் அவரையே கண் கலங்க பார்த்து கொண்டு இருந்தார் சுபா… “இப்போ அழுது என்ன ஆக போகுது.. நீ மறைச்சது தான் அவருக்கு கோவம்.. ஒரு மாசமா வலிச்சு இருக்கு.. வீட்டுல யார்கிட்டயாவது சொல்லி இருக்கலாம்ல… உனக்கு எதோ ஆகி இருந்தா அவர் தாங்கி இருப்பாரா சொல்லு சுப்பு… அவர் தாங்கி இருப்பாரா… உன் மேல உசுரையே வெச்சு இருக்காரு மனுஷன்… அவரை பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்து இருக்கனும் நீ.. அவரோட கோவத்தை பத்தி உனக்கே தெரியும்… இத்தனை வருஷம் வாழ்ந்து இருக்க அவரை சமாதான படுத்துறது எவளோ கஷ்டம்னு.. எதுக்கு எடுத்தாலும் அழுது வைக்காம அவரை சமாதானப் படுத்த பாரு… எதுவும் யோசிக்காம உக்காந்துட்டு இரு… வேலை இருக்கு நான் என்னனு பாத்துட்டு வரேன்” என்று கூறி சசி சென்றுவிட்டார்…
சுபா சசியின் அறைக்கு சென்றுவிட அங்கு சோபாவில் அமர்ந்து உறங்க ஆரம்பித்து இருந்தார்… ஒரு மணி நேரம் கழித்து அர்ஜுனன் வந்து விட சுபா எங்கே என்று சசியிடம் கேட்டார்…
அறையில் உறங்குவதாக கூறினார்… அறைக்கு சென்று பார்க்கும் போது சுபா எழுந்து முகம் கழுவி விட்டு தயாராகி அமர்ந்து இருந்தார்… அர்ஜுனன் வந்ததும் எழுந்து நின்றவர் அவர் வெளியேறியதும் அவர் பின்னே வெளியே சென்றுவிட்டார்… சசியிடம் விடைபெற்று மீண்டும் மருத்துவமனைக்கு சென்று விட அங்கு சுபாவுக்கு எடுக்க வேண்டிய ஏனைய டெஸ்ட்டும் எடுக்கப்பட்டது…
அணைத்து டெஸ்டும் எடுத்து முடிக்கவே மதியம் ஆகி விட டாக்டரை பார்க்க சென்றனர்… “சார் மத்த டெஸ்டுக்கு ரிப்போர்ட் நாளைக்கு வந்துடும்.. இப்ப ஹார்ட் வலிக்குதுன்னு சொன்னாங்கள அது மட்டும் பார்க்கலாம்” என கூறி டெஸ்ட் ரிப்போட் பார்க்க ஆரம்பித்து இருந்தார்.. அவர் பார்க்கும் வரை அமைதியாக இருந்த அர்ஜுனன் சுபாவிற்கு ஹார்ட் ட்ரான்ஸ்பிளான்ட் செய்ததை கூறினார்.. அதை கேட்டு விட்டு இன்னொரு முறை ரிப்போர்ட்டை படிக்கச் ஆரம்பித்த டாக்டர் படித்து முடித்து விட்டு “சார் கொஞ்சம் லேட்டா டிரீட்மென்டுக்கு வந்து இருந்தா ஹார்ட் அட்டாக் வர கூட வாய்ப்பு இருக்கு.. பரவால்ல சீக்கிரமே வந்துட்டீங்க… இப்போ எந்த பிரச்னையும் இல்ல… டேப்ளெட்ஸ் போட்டே வலியை ரெடூயூஸ் பண்ணிடலாம்.. ஆனா கொஞ்ச பூட் கன்ட்ரோல் வேணும் சார்.. இந்த டேப்லெட் எடுக்குற வரை அதை கன்டினீவ் பண்ணுங்க… பட் ரெகுலரா எடுத்தா பெட்டெர்.. இப்போ டேப்ளெட்ஸ் எழுதி தரேன்.. மத்த ரிப்போர்ட்ஸ் நாளைக்கு வாங்கிக்கோங்க சார்..” என்று கூறி மாத்திரைகள் எழுதி கொடுத்தார்…
அவரிடம் விடைபெற்று கொண்டு மாத்திரைகள் வாங்கி கொண்டு இருவரும் வீட்டிற்கு கிளம்பினர்… சுபா அவரிடம் பேச முயற்சித்தாலும் அவர் எதுவும் பேசவில்லை… வீட்டிற்கு சென்றதும் அனைவரும் சுற்றி நின்று கேள்வி கேட்க “பின்னாடி வர மேடம் சொல்லுவாங்க” என்று கூறிவிட்டு மீண்டும் வெளியில் சென்றுவிட்டார்…
சுபாவை சுற்றி நின்று அனைவரும் கேள்வி கேட்க அவரும் அனைத்தையும் கூறினார்… வாணன் தான் அவரை தோளோடு அணைத்து “என்ன பாப்பா இது.. ஒரு மாசமா வலி இருந்து இருக்கு.. நீ மறைச்சு இருக்க… எதாவது பெருசா ஆகி இருந்தா என்ன ஆகி இருக்கும்.. அர்ஜுன் கிட்டயாவது சொல்லி இருக்கலாம்ல.. அது தான் அவனக்கு கோவம்… போய் ரெஸ்ட் எடு…” என்று கூறி அனுப்பி வைத்தார்…
அர்ஜுனன் சென்றதும் சுபா கூறியதை கேட்ட பின் அவரை தேடி வர்ணனும் முகுந்தனும் சென்று விட்டனர்… அர்ஜுனன் கோவமாக தோப்பு வீட்டிற்கு சென்று இருக்க இருவரும் அவர் பின்னே வந்தனர்… அங்கு அர்ஜுனன் கோவமாக வெளியில் இருக்கும் கட்டிலில் அமர்ந்து இருக்க இருவரும் அவர் பக்கம் அமர்ந்தனர்…. “அர்ஜுன் உன் கோவம் புரியுது ஆனா பாப்பா பயத்துல தான் மறைச்சு இருப்பா… இப்போ நீ தானே அவ கூட இருக்கனும்… நீயும் கோவப்பட்டா அவ பாவம்ல… அவ கூட போய் பேசு… என்ன தான் டாக்டர் ஒன்னுமில்லனு சொல்லி இருந்தாலும் அவளை பத்திரமா பாக்கனும்ல போ அவ கூட பேசு” என கூறினார் முகுந்தன்…
“என்னடா உன் பாசமலருக்கு சப்போர்ட் பண்ணி நீ பேசலையா ..” என்று கேலியாக அர்ஜுனன் கேட்டார்…
வர்ணனோ “மச்சா பாப்பா மேல இருக்க பாசத்துல தானே நீ கோவப்படுற.. ஆனா உன் கோவம் இன்னும் வலியை தான் குடுக்கும்… அதுனால சீக்கிரம் பேசிடு…” என்று கூறி தோளை தட்டி கொடுத்தார்…
“நான் பேசாம இருந்தா தான் வேற விஷயத்தை மறைக்காம இருப்பா.. அதுனால கொஞ்ச நாள் பேசாம இருக்கேன்… எவளோ தைரியம் இருந்தா என்கிட்டயே மறைச்சு இருப்பா.. கொஞ்ச நாள் பேசாம இருக்கேன்.. என்ன பண்றா அப்படினு பாக்குறேன்…” என்று கூறி விட்டு “முகுந்தா கம்பெனி விஷயமா நெஸ்ட் வீக் டெல்லி போகனும் அம்முவை தனியா விட்டுட்டு என்னால போக முடியாது… நீ போறியா” என்று கேட்டார்… அவரும் சரி என்று கூறிவிட்டார்… அதன்பின் மூவரும் வீட்டிற்கு கிளம்பினர்…
அங்கு அறையில் சுபா அமர்ந்து இருக்க அவர் மடியில் நிரவி படுத்து இருந்தாள்.. அப்போது தான் ரித்திகா சுபாவை பார்க்க வர நிரவி படுத்து இருப்பதை பார்த்து திரும்பி போக பார்க்க சுபா “ரித்து” என அழைத்து பக்கத்தில் அமர கூறினார்.. ரித்துவும் அவர் மற்றொரு பக்கம் மடி சாய தன் பெற்ற மகளின் பெறாத மகளின் தலையை தடவி கொடுத்து கொண்டே அவரும் உறங்கி இருந்தார்…
அர்ஜுனன் அப்போது அறைக்கு வர மூவரையும் தான் பார்த்து கொண்டு இருந்தார்..
error: Content is protected !!