Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

ஓசை ❤️ 56(இரண்டாம் பாகம்)

பெயர் சூட்டும் விழா முடிந்து உறவினர்கள் சென்று இருக்க வீட்டு ஆட்கள் மட்டும் தான் இருந்தார்கள்… சிறிய பெண்கள் அனைவரும் ஒரு அறையில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க மற்ற அனைவரும் ஹாலில் தான் அமர்ந்து இருந்தனர்…

அப்போது ஆகாஷ் வெளியில் இருந்து வந்தவன் அனைவரையும் பார்த்து “உங்க எல்லார் கிட்டயும் கிட்ட ஒன்னு சொல்லனும்…” என்று கூறினான்…



Advertisement

“என்னடா பீடிகை எல்லாம் போடுற… ரொம்ப பெரிய விஷயமா” என்று முகுந்தன் கேட்டார்…

Advertisement

“நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்…” என்று அவன் கூறினான்….

Advertisement

“ஒரு வழியா சொல்லிட்டியா” என்று முகுந்தன் சிரித்து கொண்டே கேட்க ஆகாஷ் தான் திகைத்து விட்டான்…

ஆனால் கண்மணியோ “ஆகாஷ் என்ன சொல்ற நீ… நீயே உன் வாழ்க்கையை முடிவு பண்ற அளவுக்கு பெரிய ஆளா நீ”

Advertisement

என்று கோவமாக கேட்டார்…

ஆகாஷ் கண்மணிக்கு எல்லாம் பயப்படவில்லை…. முகுந்தன் தான் எதாவது கூறுவார் என்று எண்ணினான்… ஆனால் இங்கோ அதற்கு நேர் மாறாக இருந்தது…

“அம்மா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க..” என்று அவன் எதோ கூற வர போதும் “எதுவும் பேச வேண்டாம்…” என்று கோவமாக அவனிடம் கூறியவர் “நீங்க என்ன சிரிச்சிட்டு இருக்கீங்க… அப்படினா உங்களுக்கு அவன் லவ் பண்றது தெரியும்.. நீங்களும் என்கிட்ட மறைச்சு இருக்கீங்க…” என்று முகுந்தனிடமும் கோவமாக கேட்டார்…

முகுந்தன் அப்போதும் சிரித்த முகத்துடன் “ஆகாஷ் பொண்ணு யாருனு உங்க அம்மா கிட்ட காட்டு அவ சமாதானம் ஆகிடுவா…” என்று கூறினார்…

அதை கேட்டு இன்னும் கோவமடைந்த கண்மணி “என் கோவம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா… என் பையன் கல்யாணம் எனக்கு பிடிச்ச மாதிரி நடக்கனும்னு ஆசை இருக்காதா…” என்று அழுகை கலந்த கோவத்துடன் கேட்டார்…

முகுந்தன் அவர் அருகில் வந்தவர் “கண்ணம்மா நான் சொல்றதை கேளு.. நீயும் மத்தவங்க மாதிரி யோசிக்காத… நானும் நீயுமே லவ் மேரேஜ் தான்.. கண்டிப்பா பொண்ணு யாருனு தெரிஞ்சா ரொம்ப சந்தோச படுவ.. எனக்காக கொஞ்ச நேரம் கோவப்படாம நல்ல யோசி” என்று அவரிடம் கூறியவர் “ஆகாஷ் போ கூட்டிட்டு வா..” என்று கூறினார்..

அவன் தயக்கமாக நிற்க “போடா எனக்கு சந்தோஷம் தான்…” என்று கூறி அனுப்பி வைத்தார்.. மற்றவர்கள் புரியாமல் மூவரை தான் பார்த்து கொண்டு இருந்தனர்.. ஆரவும் சிவாவும் மட்டும் தான் அவனை சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தனர்..

சசி தான் கர்ணனிடம் “கர்ணா இவனுங்க ரெண்டு பேருக்கு தெரிஞ்சு இருக்கு பாரு சிரிச்சிட்டு இருக்கானுங்க..”. என சிரிப்புடன் கூறினார் இன்னும் சிறிது நேரத்தில் தனக்கு வர போகும் அதிர்ச்சி தெரியாமல்…

கர்ணனோ “அண்ணா எல்லாம் கூட்டு களவானிங்க தான்..” என்று அவரும் சிரிப்புடன் கூறினார்…

இங்கு ஆகாஷ் மேலே செல்ல அனைவரும் யார் என யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்… அனைவருக்கும் அவன் மேலே சென்றதும் அது நிரவியோ என்ற எண்ணம்.. ஆனால் அவன் அழைத்து வந்தவளை பார்த்து வாய் மேல் கை வைத்து கொண்டனர்..

ஆகாஷ் அறைக்கு செல்ல அங்கு பெண்கள் கூட்டணி பயங்கரமாக அரட்டை அடித்து கொண்டு இருந்தனர்.. வேகமாக தன்ஷிகா அருகில் அவன் செல்ல அனைவரும் அவனை கேள்வியாய்

பார்த்தனர்..அவனோ யாரையும் கண்டுகொள்ளாமல் “தனு வா என்கூட” என்று அவளை கையை பிடித்து எழுப்பி விட்டவன் வெளியில் அழைத்து செல்ல பார்த்தான்….

அவளோ “மாமா கையை விடு.. எனக்கு வலிக்குது…” என்று அவனிடம் இருந்து திமிறினாள்…

“பல்லை உடைச்சிடுவேன்டி வாயை மூடிட்டு வா” என்று அவளை இழுத்து கொண்டு கீழே வந்தான்…

சண்டை போட்டு கொண்டு சண்டைக்கோழிகளாய் கீழே வரும் இருவரை தான் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமாய் பார்த்து கொண்டு இருந்தனர்.. கண்டிப்பாக இருவரும் காதலிப்பார்கள் என யாருமே எண்ணவில்லை..

அனைவரின் முன்னும் இருவரும் எப்போதும் எலியும் பூனையும் தான்.. எனவே நிஜமாகவே இருவரையும் யாரும் எண்ணவில்லை..

மேலேயிருந்து வாயாடி கொண்டு இருந்தவள் கீழே அனைவரும் தன்னை பார்ப்பதை பார்த்து வாயை மூடி கொண்டவள் பாவமாய் என்ன என்னும் விதமாக அவனை பார்த்தாள்…

அவன் ஆம் என தலையாட்ட அனைவரையும் திரும்பி பார்த்தாள்.. அனைவரும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தனர்… சசியும் மித்ராவும் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை…

“என்ன கண்ணம்மா பொண்ணு ஓகேவா… இந்த பொண்ணு வேண்டாம்னா சொல்லு வேற பொண்ணு பாக்கலாம்…” என்று விளையாட்டாய் கூற தன்ஷிகா கண் எல்லாம் கலங்கிவிட்டது அதை பார்த்து… கண்மணி அதை பார்த்து “அச்சோ தன்ஷி மாமா விளையாட்டுக்கு சொல்றாங்க” என்று கூறி ஆகாஷை தள்ளிவிட்டு அவள் அருகில் நின்று கொண்டார்.. அவர் சம்மதம் கிடைத்தது சந்தோசமாக இருந்தாலும் தன் குடும்பத்தினர் எதுவும் கூறவில்லையே என எண்ணி தன் மூன்று அப்பாக்களை தான் பார்த்து கொண்டு இருந்தாள்..

அர்ஜுனன் சசி கர்ணன் ஒரே சோபாவில் அமர்ந்து இருக்க அவர்கள் அருகில் சென்ற முகுந்தன் “என்னங்கடா என் பையனுக்கு உங்க பொண்ணை தரீங்களா…” என்று கேட்டார்…

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு தங்கள் துணைவிமார்களை பார்க்க அவர்களும் அவர்களை தான் பார்த்தனர்.. அர்ஜுனன் தான் “அவ இன்னும் காலேஜ் கூட போகலையே” என்று யோசனையாக கேட்டார்…

அதற்கு முகுந்தன் “அவ படிச்சு முடிக்கட்டும்.. பிடிச்ச வேலைக்கு போகட்டும்.. அவன் வெயிட் பண்ணுவான்…” என்று கூறி “என்னடா வெயிட் பண்ணுவியா” என்று ஆகாஷிடம் கேட்டார்..

அவன் ஆம் என்று தலையாட்டி அவரை அணைத்து கொண்டான்… தன்ஷிகா தன் தந்தைகளை பார்க்க மூவரும் அவளை வா என்று கை நீட்டி அழைக்க அவள் ஓடி சென்று அணைத்து கொண்டாள்..

அதன்பின் சந்தோஷம் தான்… ஆனால் இருவருக்கும் தன்ஷியின் படிப்பு முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறிவிட்டனர்.. அவர்களும் ஒத்துக்கொண்டனர்…

அனைவரும் அவரவர் வீட்டிற்கு கிளம்பிவிட்டனர்.. ரித்திகாவும் சிவா மட்டும் அர்ஜுனன் வீட்டில் தங்கிவிட்டனர்.. அனைவரும் இரவு உணவை உண்டுவிட்டு கிளம்பியிருந்தனர்.. எனவே வீட்டினர் அவரவர் அறைக்கு உறங்க சென்று இருந்தனர்..

தன்ஷிகா தயங்கியவாறு தன் பெற்றோர் அறைக்கு சென்றாள்.. இருவரும் அமர்ந்து பேசி கொண்டு இருக்க தயங்கி தயங்கி வரும் தன் மகளை சிரிப்புடன் பார்த்தனர்.. தன்ஷிகா வந்தவள் கண்மணியின் மடியில் படுத்து கொண்டு “என் மேல கோவமா அம்மா.. ” என கேட்டாள்…

“கோவம் எல்லாம் இல்லடா.. உன் விருப்பத்தை சொல்லி இருக்க எங்களுக்கு சந்தோஷம் தான்… ஆனா உன் ஸ்டடீஸ் ரொம்ப முக்கியம்…” என்று கூறினார்..

“சரிங்க டீச்சரம்மா..” என்று கூறி அவரின் வயிறோடு ஒன்றிக்கொண்டாள்… அப்போது அவர்களின் இரண்டாவது புதல்வி தர்ஷிகா வர” ஓ.. உங்க பெரிய பொண்ணு தான் முக்கியமா நான் இல்லையா” என்று கேட்டு கொண்டு வந்தவள் சசியின் மடியில் படுத்துகொண்டாள்… இரு பெண்மக்களையும் ஆதுரமாக பார்த்து கொண்டு இருந்தனர சசியும் மித்ராவும்.. நால்வருமாக பேசிக்கொண்டே எப்போது உறங்கினார்களோ அவர்களுக்கே வெளிச்சம்…

அங்கு முகுந்தன் வீட்டில் பெரியவர்கள் அனைவரும் உறங்கி இருக்க யாதவ் எப்போதும் மருதாயி பாட்டியிடம் தான் உறங்குவான்.. எனவே அவன் அவருடன் உறங்கிவிட்டான்….

கண்மணி அறையில் கோவமாக இருக்க முகுந்தன் அவரை சமாதானம் செய்து கொண்டு இருந்தார்.. “கண்ணம்மா உனக்கு என்ன கோவம்.. தன்ஷி மருமகளா வரது பிடிக்கலையா” என்று கேட்டார்..

“எனக்கு தன்ஷி மருமகளா வரது ரொம்ப ரொம்ப சந்தோஷம் தான்.. ஆனா அப்பாவும் பையனும் என்கிட்ட மறைக்குறதுல எப்பவும் ஒற்றுமையா இருக்கீங்கல…அப்பவும் இப்பவும் நான் உங்களுக்கு ஈஸியா போயிட்டேன்ல.. இவ தான் கடைசில சொன்னா போதும்.. இல்ல சொல்லவே தேவேயில்ல.. அப்படினு நினைச்சிட்டிங்கல” என்று கோவமாக கேட்டார்..

அவர் கூறிக்கொண்டு இருக்கும் போதே வந்த ஆகாஷ் அவரை அணைத்து கொண்டு “ம்மா நிஜமா அப்படி இல்ல ம்மா.. அப்பாவுக்கு எப்படி தெரியும்னு எனக்கு தெரியாது. உங்க கிட்ட மறைக்கனும்னு நினைக்கல ம்மா.. அவ இன்னும் காலேஜ் போகல.. கொஞ்ச நாள் கழிச்சு சொல்லலாம்னு இருந்தோம்.. ஆனா ரெண்டு நாள் முன்னாடி நீங்க பேசுனதை அந்த லூசு கேட்டுருச்சு… என்கிட்ட வந்து ஒரே அழுகை.. அந்த டைம்ல என்ன பண்றதுனே தெரியல அவளுக்கு.. அது தான் இன்னிக்கே சொல்லிட்டேன்.. சாரி ம்மா உங்களை ஹர்ட் பண்ணி இருந்தா சாரி ம்மா…” என்று கூறினான்..

“போடா” என்று அவனை தள்ளிவிட்டு “உன் அப்பா இன்னும் பதில் சொல்லல..” என்று கோவமாக கூறினார்..

“கண்ணம்மா எனக்கு ரெண்டு மாசம் முன்னாடி தான் தெரியும்… இதுங்க ரெண்டும் நான் பார்த்தப்பவும் சண்டை தான் போட்டுட்டு இருந்ததுங்க. சொல்றப்ப சொல்லட்டும்னு விட்டுட்டேன்..” என்று கூறி தன் மனைவியை தோளோடு அணைத்து கொண்டவர் இன்னொரு கையால் ஆகாஷின் தோள் மேல் கை போட்டு “தம்பி லவ் பண்றது முக்கியம் இல்ல.. அவளை நல்லா பாத்துக்கனும்.. தன்ஷி படிப்பு முடியுற வரை வெயிட் பண்ணனும்டா..” என்று கூறினார்

“கண்டிப்பா ப்பா… அவளுக்கு அவ ட்ரீம் அச்சீவ் பண்ண ஹெல்ப் பண்ணுவேன்.. ரெண்டு பேரும் தூங்குங்க” என்று கூறி இருவருக்கும் கன்னத்தில் முத்தமிட்டவன் தன் அறைக்கு சென்றுவிட்டான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!