Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மௌனமாய் ஒரு காதல் செய்வோம்

காதல் ❤️ 6

அருளுக்கு தேவிகாவை நியாபகமே இல்லை… அவனுக்கு தேவி என்று கூறியவுடன் அவனின் தேவி வானதி தேவி தான் நியாபகம் வந்து இருந்தாள்… எனவே அவன் எதுவும் கூறாமல் சம்மதம் கூறி இருந்தான்….



Advertisement

வேலன் ரஞ்சி தேவா யுகேன் யாரும் இவனிடம் பேசவில்லை….. அவர்கள் சொல்லாததை இவன் அவர்கள் சஸ்பென்ஸ்சாக வைத்து உள்ளனர் என நினைத்து கொண்டான்….

Advertisement

அவனும் இந்தியா வந்து இருந்தான்…. வந்ததில் இருந்து பத்மினி யாரையும் அவனிடம் பேச விடவில்லை…. அவனும் பயண களைப்பில் உறங்கி இருந்தான்… அடுத்த நாள் சடங்கு என சென்று இருந்தது…. கல்யாண நாளும் வந்து இருந்தது….

Advertisement

அவனின் நண்பர்கள் மணியும் மூர்த்தியும் கூறிய பின் பத்மினியை வர கூறி இருந்தான்…. அவர் வந்த பின் கதவை அடைத்து விட்டு நேரடியாகவே பத்மினியிடம் “அம்மா எனக்கு பார்த்த பொண்ணு உன்னோட அண்ணன் பொண்ணு வானதி தேவியா…. இல்ல உன் புருஷனோட தங்கச்சி பொண்ணா???” என்று அழுத்தமாக கேட்டான்..

Advertisement

அவரோ “இது என்னடா கேள்வி…. தேவிகா தான் நான் பார்த்த பொண்ணு….. அந்த ஊமச்சிய நான் ஏன் டா உனக்கு பார்க்க போறேன்…. சீ அவ எனக்கு மருமகளா????” என்று முகத்தை சுழித்து கேட்டார்…

அருள் முகம் அவர் கூற கூற ரௌத்திரமாய் மாறி இருந்தது…. என்ன பேச்சே காணவில்லை என்று நிமிர்ந்து பார்த்தவுடன் பத்மினி பயந்தே போய்விட்டார்…. அந்த அளவு கோபத்துடன் நின்று இருந்தான்…..

அருளு என்று எதோ கூற வந்தவரை கையயை அவர் முன் நீட்டி பேசவேண்டாம் என்று தடுத்து விட்டான்… “குட்டிமா பத்தி உன் வாய்ல இருந்து இனிமே ஒரு வார்த்தை தப்பா வந்துச்சு அம்மானு கூட பாக்க மாட்டேன்….  நீ ஏன் மா இப்படி ஆகிட்டீங்க… ச்சே” என்று கூறிவிட்டு சுவற்றில் கையை குத்தினான்…..

“சரி நான் நகை எடுத்து வைனு சொன்ன பணத்தை  என்ன பண்ணீங்க???” என்று சத்தமாக கேட்டான்….

“நீ தானு அருளு தேவிக்கு நகைனு சொன்ன அது தான் நான் எடுத்து குடுத்தேன்…” என்று மெல்லிய குரலில் கூறினார்…

“நான் தேவினு சொன்னது உன் அண்ணன் பொண்ணு வானதி தேவியை…. அவளை நான் சின்ன வயசுல இருந்து காதலிச்சிட்டு வரேன்…. நான் துபாய் போக நகை குடுத்தது அவ தா… நீ இப்ப தலைல தூக்கி வெச்சி கொண்டாடுறவங்க இல்ல…

என் குட்டிமா அவளுக்காக வெச்சு இருந்த எல்லா நகையும் குடுத்து என்ன துபாய் அனுப்பி வெச்சா…. நாங்க சண்டை போட்டுட்டே இருந்தாலும் நானும் அவளும் உயிருக்கு உயிரா விரும்பினோம்….. உன் நாத்தனார் என்ன சொல்லி வானதி மேல வெறுப்பை விதைச்சதுனு தெரியல…

உனக்கு யோசிக்குற திறனே இல்லையா ம்மா…. இப்போ உன் நாத்தனார் குடும்பம் எங்க இருக்குனு பாத்தியா…. நம்ம வீட்டுல… அதுவும் நம்ம அந்த வீட்டை குடுத்த பத்து நாள்ல அவங்க அங்க குடி வந்துட்டாங்க….

எப்படி அவங்களுக்கு அந்த வீட்டை வாங்குற அளவு பணம் வந்துச்சு…… ஏன்னா அப்பா கடன் வாங்கவே இல்லை…. எல்லாம் அந்த ஆளோட செட்டப்…… அதுனால தான் அந்த ஆளு மேல கேஸ் போட்டேன்… இப்போ கேஸ் நமக்கு சாதகமா வர மாதிரி இருக்கு…. அதுனால தான் இந்த கல்யாண ஏற்பாடு….  இப்பயாச்சும் புரிஞ்சுதா” என்று கேட்டான் அருள்மொழி….

“நீ சொல்றதை எப்படி நம்புறது அருளு…. அந்த சிறுக்கி அன்னிக்கு உன்ன அடிச்சதை பார்த்து தான் அவளை வீட்டை விட்டு அனுப்புனேன்…. அவ கூடாது சேர்ந்து உன் தம்பி தங்கச்சியும் கெட்டு போய்டுவாங்கனு நினச்சேன்….. அவ அன்னிக்கு ஒரு நாள் யார் கூடவோ இளிச்சிட்டு நின்னுட்டு இருந்தா….. அவ நம்ம குடும்பத்துக்கு சரி பட்டு வரமாட்டா…. தேவிகாவை ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோ…. அண்ணன் அப்டிலாம் பண்ணி இருக்க மாட்டாரு”என்று கோவமாக கூறினார்

“ஹான் அந்த பையன் உன் மாப்பிளை தான்…. உன் பொண்ணு தான் அவன் தான் பேசிட்டு இருந்தா..  கூட துணைக்கு வானதியை இழுத்துட்டு போய் இருக்கா உன் பொண்ணு..   அவ தான் அவளை கெடுத்து இருக்கா….” என்று நக்கலாக கூறினான் அருள்

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அருளுக்கு அலைபேசியில் செய்தி வந்தது…. அந்த செய்தியில் காணொளி வந்து இருந்தது… எண்ணை பார்த்தால் மேலூரில் இருக்கும் ஒரு பையனின் எண்….

அந்த வீடியோவை பார்த்து அருள் மிகவும் கோவம் அடைந்து இருந்தான்….. அதில் கண்ணப்பன் நேற்று இரவு குடித்துவிட்டு அவர் செய்ததை அனைத்தையும் பட்டியல் இட்டு கொண்டு இருந்தார்….. அதை அந்த வழியாக வந்த பையன் ஒருவன் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து இருந்தான்….

அந்த வீடியோவில் கண்ணப்பன் சாமியப்பன் கடையை எரித்தது…. அதில் சாமியப்பன் இருந்தது…. அதன் பிறகு கடன் நாடகம்…. வானதி பற்றி நாயகி பத்மினிக்கு தப்பு தப்பாக சொன்னது…. இப்போது கேஸ் அருள் பக்கம் வருவதால் தற்போதே கல்யாணம் செய்ய முடிவு எடுத்தது….. என்று அனைத்தையும் போதையில் உளறி கொண்டு இருந்தார்…..

அதை பார்த்து பத்மினி அதிர்ந்து போய் நின்று விட்டார்…. தன்னை எப்படி எல்லாம் ஏமாற்றி உள்ளனர்…. தன் கணவனை கொன்று அதை மறைத்து தன்னிடமே நாடகம் ஆடி உள்ளனர் என்று மிகவும் கோவம் அடைந்து விட்டார் பத்மினி….

அதன்பின்  அருளை கூட பார்க்காமல் வேகமாக வெளியே வந்து இந்த திருமணம் நடக்காது என்று கூறிவிட்டார்…. அதை கெட்டு அங்கு சலசலப்பு ஆகியது… ஒரு சிலர் பத்மினியிடம் கேட்டு கொண்டு இருந்தனர்….

அப்போது தான் அருள் அந்த காணொளியை காட்டினான்… அதை பார்த்து அனைவரும் அமைதியாகி விட்டனர்….

நாயகி அருளின் குடும்பத்துக்கு அனைவருக்கும் சாபம் விட்டார்…. பத்மினி அவரை வேகமாக ஒரு அறை விட்டார்…. அதற்குள் போலீஸ் வந்து கண்ணப்பனை கைது செய்தனர்…. அந்த காணொளியை போலீஸ்க்கும் அனுப்பி இருந்தனர்….

கண்ணப்பனை கைது செய்து அழைத்து சென்றவுடன் நாயகியும் தேவிகாவும் அப்டியே வெளியே சென்று முயன்றவர்களை பிடித்து பத்மினி அவர்களுக்கு போட்ட முப்பது பவுன் நகையை வாங்கிக்கொண்டு தான் அனுப்பி வைத்தனர் அங்கிருந்தவர்கள்…..

தாயம்மாள் பாட்டி இங்கு மண்டபத்துக்கு வரவே இல்லை…. அவருக்கு வர பிடிக்கவே இல்லை… அதனால் வேலுவின்  வீட்டில் இருந்து கொண்டார்…

மண்டபத்தில் இருந்தவர்கள் அனைவரும் அருளின் குடும்பத்தை கஷ்டபடுத்தாமல் கிளம்பிவிட்டனர்…. வீரவேலன் ரஞ்சினி தேவதரண் யுகேந்திரன்  நால்வரும் அருள் பத்மினியிடம் பேசாமல் வீரவேலன் வீட்டுக்கு சென்றுவிட்டனர்…

பத்மினியிடம் எதுவும் பேசாமல் அருள் வீட்டில் விட்டுவிட்டு நேராக வீரவேலன் வீட்டுக்கு தான் சென்றான்…. அவன் வந்தவுடன் வேலனிண் பெற்றோர் வரவேற்றுவிட்டு அமர்ந்து கொண்டனர்…. யாரும் அவனிடம் பேசவில்லை…,

முதலின் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்துவிட்டு ரஞ்சனியிடம் சென்றான்…. அவளை சமாதானம் செய்தால் மற்ற இரண்டு டிக்கெட் பேசிவிடும் அவனிடம்….

ஆனால் ரஞ்சனியை சமாதானம் செய்யவே அவனுக்கு நீண்ட நேரம் ஆகியது…. அவளை ஒருவழியாக காலில் விழாத குறையாக சமாதானம் செய்து இருந்தான்…. இரண்டு டிக்கெட் சமாதானம் ஆகும் என்று எதிர்பார்த்ததில் யுகேந்திரன் ஒருவன் தான் ஆகி இருந்தான்…. தேவதரண் மிகவும் கோவத்தில் இருந்தான்….

அவனுக்கு அருளை விட வானதியை தான் மிகவும் பிடிக்கும்… எப்போதும்  வானதி உடன் தான் இருப்பான் அவன்…. அதனால் அவனுக்கு கோவம்…. ஒருவேளை கல்யாணம் நடந்து இருந்தால் அவளின் நிலமை அதனால் தான் அவனுக்கு அருளின் மீது கோவம்….

அருளை விட தேவா எட்டு வயது சிறியவன்…. எப்போதும் அவன் சொல்வதை கேட்கும் தேவா இன்று அவனிடம் கோவப்படுவது சந்தோசமாக தான் இருந்தது…. அந்த கோவம் தன்னவளுக்கான கோவம்…. அவள் மேல் அவன் வைத்த பாசம்….

பாட்டி வேலன் தேவா மூவரும் அவனிடம் எவ்வளவு கெஞ்சிக்கேட்டும் பேசவேயில்லை…..

*********************************************

வானதி கல்லூரி முடித்துவிட்டு டெப் அன்ட் டம்ப் (deaf and dumb school) ஸ்கூலில் தான் பணி புரிகிறாள்… கல்லூரி முடிந்தவுடன் இந்த பள்ளியில் சேர்ந்து கொண்டாள்….  கல்லூரி படித்து கொண்டு இருக்கும் போதே இந்த பள்ளிக்கு அடிக்கடி வருவாள்…. காது கேட்க முடியாத மாணவ மாணவியருக்கு தான் வகுப்பு எடுத்து கொண்டு இருக்கிறாள்…..

அனைத்து மாணவர்களும்  சென்றபின்  பாரதி படிக்கும் பள்ளிக்கு வண்டியை விட்டாள்…. அங்கு பாரதி ரெடியாக நின்று இருந்தாள்… பாரதியின் முகத்தில் கவலையின் சாயல் இருந்தது….

அவளின் கவலையை பார்த்து வண்டியை ஓரமாக நிறுத்தி “ஏன் கவலை” என்று சைகையில் கேட்டாள்…… அவள் அவளை அணைத்தவாறே “இந்நேரம் அருள் மாமாக்கு அந்த பேய் கூட கல்யாணம் ஆகி இருக்கும்ல க்கா…. நீ இனிமே என்ன பண்ணுவ ” என்று கேட்டாள்…

அவளை தன்னிடம் இருந்து பிரித்து “கல்யாணம் நடந்து இருக்காது…. அழுகாத…. வா போகலாம்…” என்று அழைத்து சென்றாள்…

அவளும் குழப்பத்துடன் அவளுடன் சென்றாள்…. பாரதியை அவளின் வீட்டில் விட்டுவிட்டு வீட்டை திறக்க போகும் போது கதவு ஏற்கனவே திறந்து தான் இருந்தது…  அவளுக்கு தெரிந்து விட்டது அவளின் மாமன் தான் வந்து உள்ளான் என..   உள்ளுக்குள் சிரித்தவாரு வெளியில் இறுக்கத்துடன் கோவமாக வீட்டுக்குள் சென்றாள்….

அவள் நினைத்தது போல் அவளின் மாமன் அருள் தான் அப்பாவி முகத்துடன் வீட்டில் அமர்ந்து இருந்தான் அவன்….. அவனை கண்டும் காணாமல் தாண்டி சென்றாள்…. போகும் போது ஓர பார்வை பார்த்துவிட்டே சென்றாள்…. அந்த ஓர பார்வையிலேயே விழுந்து விட்டான் அவளின் மாமன் அருள்மொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!