Skip to content
Post Views: 659
அத்தியாயம் – 4
தலைமை அமைச்சர் இல்லம், புது தில்லி.
புதிய அரசு பதவியேற்ற அடுத்த நாளே, அமைச்சரவையுடனான (கேபினட்) தலைமை அமைச்சரின் முதல் சந்திப்பு, குடியரசுத் தலைவர் மாளிகையில் அன்று காலை பத்து மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
Advertisement
காலையில் எழுந்த போது இருந்த வசுந்தராவின் உற்சாகமான மனநிலை வருணன் தேவராஜனை சந்தித்த பின், முற்றிலும் மாறி இருந்தது. வருணுடன் ஏற்பட்ட சிறு பிளவு மனதின் ஓரத்தில் அணையாத நெருப்பைப் போல தகிக்க, வருணின் வார்த்தைகள், அவரது மௌனம் – இரண்டுமே ஒரே நேரத்தில் வசுந்தராவை காயப்படுத்தின.
Advertisement
ஆனால் இன்றைய நாள், நாட்டின் முதல் அமைச்சரவை கூட்டம் – அவரது தலைமைக்கான முதல் சோதனை! மனவேதனையை வெளியில் காட்ட முடியாதே. எனவே தனிப்பட்ட வாழ்வின் போராட்டங்களை தற்காலிகமாக ஒதுக்கி, அன்றைய பணிகளில் முழுதாக மனதை செலுத்தினார் வசுந்தரா.
Advertisement
ஊடகங்களின் முக்கிய செய்திகளை காலை உணவின் போதே, ஒரு பார்வை பார்த்து விட, அதன் பின்னர் தலைமை அமைச்சர் அலுவலகத்தின் முழு கவனமும் அமைச்சரவை சந்திப்பிற்கான ஆயத்த வேலைகளின் மேல் இருந்தது.
Advertisement
“மேம், நீங்க நேத்து அனுப்பின பிளானை முழுசா பார்த்தாச்சு. சில கேள்விகள், கமெண்ட்ஸ் நான் இதுல மார்க் பண்ணிருக்கேன்” என்ற லலிதா ஒரு ஆவணத்தை வசுந்தராவிடம் கொடுத்தார்.
அலுவலகத்தில் நுழைந்தது முதலே வசுந்தரா, வேண்டுமென்றே சித்தார்த்தை கண்டு கொள்ளாமல் இருந்தார். யோசனையுடன் கண்கள் சுருக்கி, வசுந்தராவைப் பார்த்த சித்தார்த்,
“மேம், உங்களோட இந்த மிஷன் லெட் கவர்மெண்ட் ரொம்ப நல்ல ஐடியா. எஸ்.பி.பி எலெக்ஷன் அப்போ ப்ராமிஸ் பண்ண அஞ்சு விஷயத்தையும் ஒவ்வொரு மிஷனா மாத்தி, அதை இந்த 5 வருசத்தில எப்படி அச்சீவ் பண்ண போறோம்னு பிரசண்ட் பண்ணனும்னு சொல்றீங்க.
ஆனா கேபினட்ல இது கண்டிப்பா சேலஞ் பண்ணுவாங்க மேம். இது எல்லாம் எஸ்.பி.பி-யோட தேர்தல் வாக்குறுதிகள் தானேயொழிய, இப்ப ஆட்சில அமைச்சிருக்கிற கூட்டணி கட்சிகளோடது கிடையாது. மித்த சின்ன கட்சிகளுக்கு எல்லாம் கொடுத்திருக்கிற டிபார்ட்மெண்ட்ல பெருசா பிரச்சனை வர்ற வாய்ப்பு இல்லை. ஆனா விக்ரம் தேசாய், கண்டிப்பா பிரச்சனை பண்ணுவாரு” என்றார்.
“அண்ட் வாட் டு யூ சஜ்ஜஸ்ட் டு கவுண்டர் ஆக்ட் தேட்?” என்றார் வசுந்தரா கோப்பில் இருந்து கண்ணெடுக்காமல்.
அது வரை, வசுந்தரா தன்னை தவிர்க்கிறாரா என்ற சந்தேகத்தில் மட்டுமே இருந்த சித்தார்த்துக்கு, தற்போது அப்படித்தான் என உறுதியாகத் தெரிந்து விட்டது. சித்தார்த் உடனே பதிலளிக்காமல் சில நொடிகள் அமைதியாக இருக்க, இப்போது கேள்வியாக நிமிர்ந்து பார்த்தார் வசுந்தரா.
அவரை கண்டனமாகப் பார்த்த சித்தார்த், குரலில் எந்த பேதத்தையும் காண்பிக்காமல்,
“நீங்க இன்னிக்கு மீட்டிங், பல்ஸ் செக் பண்ண யூஸ் பண்ணலாம் மேம். உங்களோட எதிர்பார்ப்பு என்னன்னு சொல்லிட்டு, கேபினட்ட ஃபுல் பிளான் ரெடி பண்ணி, அடுத்த வார மீட்டிங்ல உங்க ரிவ்யூக்கு பிரசன்ட் பண்ண சொல்லலாம்.
இது பாலை (ball) அவங்க கோர்ட்ல போடுற மாதிரி. அவங்க குடுக்குற திட்டம் எவ்ளோ திருத்தமா இருக்கு, அதை நிறைவேத்துறதுக்கு அமைச்சர்கள் எவ்ளோ முனைப்பா இருக்காங்கன்னு எல்லாம் தெரிஞ்சிக்கலாம். தேட்ஸ் ஒன் வே ஆஃப் டூயிங் இட்” என்று பதிலளித்தார்.
சித்தார்த்தின் ஆரம்ப கண்டனப்பார்வையை கண்டு கொள்ளாமல், அவர் கூறியதை மட்டும் உள்வாங்கிய வசுந்தரா, இந்தப் பதவியில் நிரம்ப அனுபவம் வாய்ந்தவர் என்ற காரணத்தால் லலிதாவிடம் திரும்பி,
“நீங்க என்ன நினைக்கிறீங்க லலிதா?” என்றார்.
ஒரு விதத்தில் சித்தார்த் தான் லலிதாவுக்கும் தலைமை அதிகாரி. எனவே சில நொடிகள் தயக்கத்துடன் சித்தார்த்தைப் பார்த்த லலிதா,
“கண்டிப்பா நல்ல பிளான் தான் மேம். நீங்க இவ்ளோ க்ரவுண்ட் வொர்க் பண்ணி அவங்க கைல கொடுத்தா, தே வில் ஹேவ் அ ஈசி ரைட். மினிஸ்டிரில ஒரு ஓனர்ஷிப்பும் எடுக்க மாட்டாங்க.
கடைசி வரைக்கும் எல்லாத்துக்கும் உங்களையே எதிர்பார்த்துட்டு, எதுவும் பிரச்சனை வந்தாலும் பேக் அடிச்சிருவாங்க. இது வரைக்கும் நான் சப்போர்ட் பண்ண பிரதம மந்திரிகள் எல்லாரும் ஒன் லைனர் ஆர்டர் தான் மேம் போடுவாங்க. யூ ஆர் டிஃபரண்ட்” என்றார்.
“ம்ம்ம், ஐ ஹேவ் டு பி லலிதா. இந்த வேலைக்கு யாரும் என்னைய டிரெயின் பண்ணல. சோ நான் நமக்குக் குடுத்த ஐ.ஏ.எஸ் டிரையினிங் தான் அடிப்படையா எடுத்துக்கிட்டேன் அண்ட் ஐ ஆம் லேர்னிங் ஆன் த ஜாப்” என்ற வசுந்தரா தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்து, சித்தார்த்தை இப்போது நேராகப் பார்த்து,
“சித்தார்த், நீங்க சொல்ற அப்ரோச்சே வைச்சிக்கலாம். அண்ட் எனிவே நம்ம பண்ண ப்ரெப் வொர்க் அவங்க கொண்டு வர்ற பிளான் எல்லாம் சரி பார்க்குறதுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும். நீங்க விக்ரம் என்ன மாதிரி இஸ்யூஸ் கொண்டு வருவாருன்னு கொஞ்சம் ப்ரீ-எம்ப்ட் பண்ணி எனக்கு ஒரு ப்ரீஃபிங் ரெடி பண்ணித் தாங்க ப்ளீஸ்” என்க, சிறு முறைப்புடன் தலையசைத்து விடைபெற்ற சித்தார்த், அவர் அறைக்கு சென்று விட்டார்.
‘ஓ மேடம் நான் சொன்னா கேட்க மாட்டாங்க போல. என் மேல இருக்க கோவத்துல, பாவம் லலிதா, அவங்கள வேற படுத்தி வைக்குறா’ என்ற கடுகடுப்பு அவரிடம்.
“இன்னிக்கு வேற என்ன பிளான் இருக்கு லலிதா?” என்ற வசுந்தராவுக்கு, லலிதா அன்றைய நாளுக்கான அட்டவணையை விளக்கினார். ஒரு முப்பது நிமிடங்கள் உணவு இடைவேளை கூட இல்லாமல் வரிசையாக பல்வேறு சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“என்ன லலிதா இது? ஏன் இப்டி பேக்ட் (packed) ஸ்கெட்யூல்? எதுவும் மூவ் பண்ண முடியாதா? அட் லீஸ்ட் ஐ நீட் அ லஞ்ச் பிரேக்” என்றார் யோசனையாக.
“இல்ல மேம், நீங்க நேத்து தானே பதவி ஏத்துக்கிட்டீங்க. சோ, இதெல்லாம் மோஸ்ட்லி ஃபார்மாலிட்டிஸ். டிபார்ட்மெண்ட் ஹெட்ஸ் சம்பிரதாயமா உங்கள வந்து மீட் பண்றது. சீக்கிரம் செட்டில் டவுன் ஆகிடும். ஈவ்னிங் உங்க பார்ட்டி மீட்டிங் இருக்கு. அதை எதுவும் பண்ண முடியாது.
ஆனா ஒரு விஷயம் மேம். இந்த வேலைல டைமுக்கு லஞ்ச் சாப்பிடறது, தூங்குறது எல்லாம் நீங்க மறந்துட வேண்டியது தான். வெல்கம் டு பி.எம்.ஓ (Prime Minister’s Office – PMO) மேம்!” என்றார் லலிதா சிரித்தபடி.
“ம்ப்ச், நீங்க வேற. எனக்கு மீல்ஸ் ஸ்கிப் பண்ணா, ஸ்லீப் ரொட்டீன் எல்லாம் மாறிச்சுன்னா மைக்ரேன் வந்துடும் லலிதா. ஏகப்பட்ட டிரிகர்ஸ் இருக்கு, அதெல்லாம் அவாய்ட் பண்ணி கண்ணாடி பாத்திரம் மாதிரி தான் என்னை நான் பாத்துக்கணும்.
அப்டி என்ன தான் பாத்துக்கிட்டா கூட மாசத்தில சில நாள் கண்டினியுசா தலை வலிக்கும். நான் என்ன மாசத்துல மூனு நாள் சிக் லீவா எடுக்க முடியும்? கண்டிப்பா நான் ஹெல்த்தியா இருந்தா தான் என்னால ப்ரொடெக்டிவ்வா வேலை செய்ய முடியும். அதுக்கு தான் யோசிக்கிறேன். வேற ஒன்னும் இல்லை.”
“சாரி மேம், ஐ டிண்ட் நோ! நான் எதையாவது லஞ்ச் மீட்டிங்கா மாத்த முடியுமா பாக்குறேன். இல்லாட்டி மத்த செக்ரட்டரிஸ் கிட்ட பேசி கொஞ்சம் டீ பிரேக் மாதிரியாவது செட் பண்ண முடியுமா பாக்குறேன்.
ஆல்சோ டோண்ட் ஃபர்கெட். யூ ஆர் ஒன்லி ஹுயூமன் அன்ட் நாட் அ மெஷின்! சோ உடம்பு சரி இல்லாட்டி நீங்க ரெகவர் ஆக டைம் எடுத்துக்கிட்டு தான் ஆகணும். நான் வேணும்னா நம்ம டாக்டர் கிட்ட ஒரு கைனக்காலஜி ரெஃபரல் வாங்கட்டுமா?”
“இல்ல இட்ஸ் ஃபைன். லெட்ஸ் சீ ஹௌ ஐ கோப் அப் திஸ் மந்த். அதுக்கப்புறம் வேணும்னா பார்த்துக்கலாம். அதோட நான் இன்னும் நீங்க நேத்திக்கு கொடுத்த ஃபைல்ஸ் எல்லாம் பாத்து முடிக்கல லலிதா. ஐ வாண்ட் டு ஸ்டே ஆன் டாப் ஆஃப் திங்க்ஸ். அதுக்கும் சேர்த்து தான் கொஞ்சம் டைம் கிடைக்கும்னு பார்த்தேன்”
“நோ வொரீஸ் மேம். ஒரே நாள்ல எல்லாத்தையும் தலைல ஏத்திக்க தேவை இல்ல. உங்களுக்கு என்ன தகவல் வேணும்னாலும் நானும், சித்தார்த்தும் இருக்கோம். நம்ம முழு டீம் இருக்காங்க, ஆல் ஐ.ஏ.எஸ் ஆஃபிசர்ஸ், ஸ்பெஷலைஸ்ட் இன் டிஃபெரண்ட் ஏரியாஸ். வீ ஹேவ் இட் ஆல் இன் அ கிளிக் ஆஃப் அ பட்டன்.
கேபினட் மீட்டிங்கு நாங்க வர முடியாது. ஆனா உங்களுக்கு மீட்டிங் நடுவுல கூட எதுவும் தேவைப்பட்டா, நம்ம பி.எம்.ஓ டீம்க்கு ஒரு க்ரூப் மெசேஜ் தட்டி விட்டா போதும். ஒன் ஆஃப் அஸ் வில் பிக் இட் அப் அண்ட் ரெஸ்பாண்ட் குவிக்லி” என்று உதவிக்கரம் நீட்டினார் லலிதா.
அதற்கு ஆமோதிப்பாக தலையசைத்த வசுந்தரா,
“நீங்க எங்கூட ராஷ்டிரபதி பவன் வரலையா அப்போ?” என்றார்.
“இல்லை மேம், சித்தார்த் தான் உங்க கூட வந்து வெயிட் பண்ணுவார். நான் இங்க பார்த்துப்பேன். அண்ட் வி வில் ஆல் பி ஆன்லைன் டு யுவர் இமிடியட் சப்போர்ட். மதியத்துக்கு மேல நீங்க அட்டெண்ட் பண்ண வேண்டிய மீட்டிங்க்கு சித்தார்த்த ரீலீவ் பண்ணிட்டு நான் வந்துடுவேன். அண்ட் ஃபுல் டைம் ப்ரதாப் இருப்பாரு. ஹீ கேன் பிக் திங்க்ஸ் அப் அட் த பிளிங்க் ஆஃப் யுவர் ஐஸ் அண்ட் தேவைப்பட்டா எங்கள டக்குன்னு உள்ள கொண்டு வந்துடுவாரு”
“சரி, ஐ’ல் கெட் ரெடி” என்றவர் சில நிமிடங்களில் தயாராகி வெளியில் வந்து விட, சித்தார்த்தும் அவருடன் இணைந்து கொண்டார்.
வாகனத்தில் ஏறி அமர்ந்ததுமே,
“வாட் இஸ் யுவர் பிராப்ளம் மேம்? எதுக்கு என்னைய அவாய்ட் பண்றீங்க?” என்றார் சித்தார்த் நேரடியாக எந்தவிதமான பீடிகையுமில்லாமல்.
“பிராப்ளம் என்னன்னு உங்களுக்குத் தெரியாதா சித்தார்த்?”
“தெரியாம தான் கேட்குறேன். நான் நேத்திக்கே எல்லாம் கிளியர் பண்ணிட்டேன். அண்ட் வென் ஐ ஆம் அட் வொர்க், ஐ ஆம் அட் வொர்க்! நத்திங் எல்ஸ். அண்ட் யூ ஹேவ் டு ஹெல்ப் மீ டு ஹெல்ப் யூ”
“ஹெல்ப்?” என்று நக்கலாக சிரித்த வசுந்தரா,
“நீங்க உங்க வேலைய தான் பாக்குறீங்க சித்தார்த். எனக்கு ஹெல்ப் பண்ணல. அதை நல்லா ஞாபகம் வைச்சிக்கோங்க” என்றார்.
அவரின் அந்த தொனி சித்தார்த்தை வெகுவாக சீண்டினாலும், எதையும் வெளிக்காட்டாமல்,
“ரைட், அப்டியே இருக்கட்டும்! நீங்களும் என்னைய உங்களுக்கு யாருன்னே தெரியாதுன்னு நினைச்சிக்கோங்க. எப்படி உங்க மத்த ஸ்டாஃப் ட்ரீட் பண்ணுவீங்களோ அது மாதிரி என்னையும் ட்ரீட் பண்ணுங்க. நத்திங் லெஸ், நத்திங் மோர்!” என்றார் சித்தார்த், வசுந்தராவின் நக்கல் குரலுக்கு நேரெதிரான அமைதியான, அழுத்தமான குரலில்.
“இதை எல்லாம் சொல்றது ஈசி!” என்று அதற்கும் சீறினார் வசுந்தரா.
“உங்களுக்கு செய்யறதும் ஈசி தான்! வீ’ல் ஜஸ்ட் ஃபோகஸ் ஆன் அவர் ஜாப்ஸ். ஷால் வீ?” என்று இந்த முறை சற்று காட்டமாகவே, பற்களைக் கடித்துக் கூறிய சித்தார்த், வசுந்தரா கேட்டிருந்த, விக்ரம் தேசாய் எழுப்பக்கூடிய பிரச்சனைகள் மற்றும் அதற்கான பதில்கள் அடங்கிய கோப்பை அவர் கைகளில் அளித்தார்.
வசுந்தரா கோப்பைத் திறந்து, அதில் சித்தார்த் குறித்து வைத்திருந்த பகுதிகளை கவனமாக வாசிக்கத் துவங்கினார்.
தான் எழுதி வைத்ததில் இருந்து முக்கியமானவற்றைப் பகிரும் விதமாக,
“மோஸ்ட்லி மஹாராஷ்டிரா அசெம்பிளி எலெக்ஷன் வருதுல, அதுக்கு ஏதாச்சும் அவசர கதில செஞ்சு பேர் வாங்கணும்னு பிரஷர் போடுவாரு. முடிஞ்ச அளவு அவர் பேச சான்ஸ் தராதீங்க மேம். விக்ரம நாம உங்களோட கட்சி மூலமா தான் சமாளிக்கணும். அவர் மித்த கேபினட் மினிஸ்டர்ஸ் இன்ஃபூலயன்ஸ் பண்ணாம பார்த்துக்கிட்டா அதுவே பாதிப் பிரச்சனைல இருந்து காப்பாத்திடும்.
அதுவும் வொர்க் ஆகலைன்னா, ஜஸ்ட் டிலே த டிஸ்கஸன். கொஞ்சம் டைம் எடுத்தோம்னா ஈசியா ரிசால்வ் பண்ணிடலாம். விக்ரம் சைட் நமக்கு நம்பகமான ஆள் ராஜேஷ் பவார் தான். அவரை எப்படி புடிக்கிறதுன்னு தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்” என்றார் சித்தார்த்.
அதுவரை கோப்பை பார்வையிட்டுக் கொண்டே, சித்தார்த் பேசுவதை குறுக்கிடாமல் கேட்ட வசுந்தரா, அதை பட்டென்று மூடி வைத்து விட்டு,
“பேசாம ஒன்னு பண்ணுங்க சித்தார்த். எனக்கு பதிலா நீங்களே மீட்டிங் அட்டெண்ட் பண்ணிடுங்களேன். எனக்கு தான் எதுவும் தெரியலையே” என்று கூற, அவரை அதிர்ந்து பார்த்த சித்தார்த்,
error: Content is protected !!