Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -1

” கே.ஆர் ஜூவல்லர்ஸ் ” என்ற பெயர்பலகை கொண்ட நகைக் கடையானது அலங்கார விளக்குகளாலும், மலர்களாலும் அலங்காரிக்கப்பட்டு இருந்தது. “டேய் குணா இன்னுமாடா அந்த வேலைய முடிக்கல கதிரவன் தம்பி வர்ற நேரம் ஆச்சு வேகமா வேலைய முடிடா ” என்றார் அந்த நகைக்கடை மேனேஜர் முருகேசன்.

“இன்னும் அஞ்சு நிமிஷத்துல முடிச்சிருவேன் சார்”என்றான் அங்கு வேலை செய்யும் குணா .
“நீ கட்டி முடிக்குறதுக்குள்ள திறப்பு விழாவே முடிஞ்சுரும் போலடா, கதிரவன் தம்பி வர்றதுக்குள்ள முடிச்ச சரி, தம்பிக்கு கோவம் வந்துச்சினா அவ்வளவு தான்” என்றார் முருகேசன்.

சாலையில் காற்றை கிழித்துக் கொண்டு அதிவிரைவாக வந்து கொண்டிருந்தது கதிரவன் சக்கரவர்த்தியின் கார். “ஹலோ முருகேசன் சார் எல்லா வேலையும் முடிஞ்சதா இன்னைக்கு நடக்க போற விழால எந்த குறையும் வந்துட்டக்கூடாது சரியா பாத்துக்கோங்க “என்றான்

“கதிரவன் சக்கரவர்த்தி கே.ஆர் நிறுவனங்களின் உரிமையாளன் நம் கதையின் நாயகன் “.வேலுசாமி லட்சுமி தம்பதியின் இளையமகன் கதிரவன், மூத்தவள் கனிமொழி இவளுக்கு திருமணம் ஆகி கனடாவில் கணவன் மகேஷ் மட்டும் மகள் நிஷா உடன் வசித்துவருகிறாள்.



Advertisement

” கதிரவன் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும் தன் கடின உழைப்பால் இன்று ஸ்டார்வேர்ல்ட் , கே.ஆர் (ஜவுளிக்கடை, ஹோட்டல் & கேட்டரிங், ஜூவல்லர்ஸ்) மட்டும் இவற்றின் கிளைகள் அனைத்திற்கும் அதிபதியாக உள்ளான் “.

” கதிரவன் ஆணழகன் என்று சொல்ல முடியாது ஆனாலும் வசிகரமான முகமும், சற்று வெண்மை நிறமும், ஆறு அடி உயரமும், நிமிர்ந்த நடையும் சேர்ந்து அவனை பேரழகனாகவே காட்டும்”.

“இவனின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தொழிலில் ஏற்றத்தை தந்தது ஆனால் கோவம் பிடிவாதம் நினைத்ததை அடைய வேண்டும் என்ற வெறி கண்முடி தனமான அன்பு போன்ற குணங்களால் கதிரவன் தன் வாழ்க்கையையும் தன் காதலையும் இழந்துவிட்டான்”.அவன் காதல் திரும்ப கிடைக்குமா காலம் தான் பதில் கூற வேண்டும்.

Advertisement

கே.ஆர் நகைக்கடையின் திறப்புவிழா என்பதால் அந்த கடையானது உறவினர்கள் நண்பர்கள் விருந்தினர்கள் என்று அனைவராலும் நிரம்பி வழிந்தது.

Advertisement

கதிரவன் மிகவும் பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டு இருந்தான். இந்த கடை கே.ஆர் ஜூவல்லர்ஸின் ஐந்தாவது கிளையாக இருப்பினும் முதல் கடை போன்று மிகுந்த ஆர்வத்துடனும் பரபரப்புடனும் இருந்தான். “கதிரவனை இரு கண்கள் ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தது”.

“இன்னும் எத்தனை வருஷம் தான் என் பொண்ணு இப்படி பாத்துட்டு மட்டுமே இருக்க போறான்னு தெரியலையே”என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு கூறினார் லட்சுமியின் அண்ணன் மனைவி வடிவு.

“வடிவு நீ கவலைப்படாம இரு விழா முடிஞ்சி போகும்போது என் தங்கச்சி கிட்ட பேசி கதிரவனுக்கும் நாம பொண்ணு ஜோதிக்கும் கல்யாணத்தை முடிவு பண்ணிட்டுதான் போறோம் சரியா” என்றார் லட்சுமியின் அண்ணன் துரைப்பாண்டி.

Advertisement

“கடையை திறந்து வைப்பதற்காக அந்த தொகுதியின் எம்.எல்.ஏ சாந்த மூர்த்தி மட்டும் அவருடைய மகன் விமல் வந்திருந்தனார்”. ரிப்பன் வெட்டப்பட்டு அனைவரும் உள்ளே சென்று கடையை சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தனர்.விமலின் சட்டையில் சந்தனதின் கரை பட்டுவிட்டது அதை சரி செய்ய ஊழியர் ஒருவர் கதிரவன் அறைக்கு விமலை அழைத்து சென்றார்.

“வாவ், இந்த மெழுகுச்சிலை பார்க்க எவ்வளவு அழகா இருக்கு. யாரோட சிலை இது “. என்று கேட்டான் ஊழியனிடம் “எனக்கு தெரியாது சார்”. “இந்த பொண்ணு சிலைய பார்க்கவே இவளோ அழகா இருக்க நேருல பார்த்த எப்படி இருப்பா. இந்த பொண்ண அப்படியே” என்று சில ஆபாச வார்த்தைகள் கூறினான்.

“விமல் கூறியதை கேட்ட கதிரவன் கண்கள் கோபத்தில் சிவந்து அவனை ஏறிக்கும் பார்வை பார்த்தான் “. பின் அவனுடைய ஆட்களுக்கு போன் செய்து “என் ரஞ்சுவ தப்பா பேசுனவன் உடம்புல உசுர மட்டும் விற்று புரிஞ்சாத யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி பாத்துச்செய்”.என்று கூறினான்.

” கதிரவா வேண்டாம் நிறுத்திக்கோ, இந்த கோவத்தால தான் உன் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்குற இன்னும் ஏன்டா இப்படி பண்ணுற “என்றார் வேலுசாமி.

“கோவப்படாம எப்படிபா இருக்க சொல்லுறீங்க அவன் என் ரஞ்சுவ பத்தி அசிங்கமா பேசுனாபா எனக்கு வர கோவத்துக்கு அவன இங்கையே வெட்டி போதச்சிருப்பேன் எம். எல்.ஏ மகனா போய்ட்டான் அதுனால தப்பிச்சான் “என்று கோவமா கூறினான் கதிரவன்.

” கோவப்படாத தம்பி உன்னோட இந்த குணத்தை பார்த்து பயந்து போய்த்தான்டா ரஞ்சனி உன்னவிட்டு போய்ட்டா, என் தங்கம் இப்போ எங்க, எப்படி இருக்குறானு கூட தெரியலையே” “உயிரோட இருக்காளா இல்லையானு கூட தெரியலையே”என்று கூறி அழுதார்.

“அம்மா போதும்மா இனிமேல் ரஞ்சுவ பத்தி இப்படி பேசாதீங்க,என் செல்லம் எங்க இருந்தாலும் நல்லதான்மா இருப்பா அவளுக்கு எதும் ஆயிருக்காது “.

“கண்டிப்பா அவள கண்டுபிடிச்சி உங்க முன்னாடி கூட்டிடு வருவேன்மா, நானும் அவளும் சேர்ந்து சந்தோசமா வாழுறத நீங்க பார்க்கதான் போறீங்க “என்று கூறி அழுதான் கதிரவன்.

அப்பொழுது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது, கதிரவன் வேகமாக கண்களை துடைத்துக் கொண்டு வாங்க என்றான்.உள்ளே வந்தா துரைப்பாண்டி “லட்சுமி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்மா “என்றார்.
“சொல்லுங்க அண்ணா என்ன விஷயம் பேசணும் “.

“அதுவந்துமா ஜோதிக்கு வயசாகிட்டே போகுது இப்போவே 28 வயசு ஆச்சு அதான் அவளுக்கு சீக்கரமே கல்யாணம் பண்ணிரலாம்னு பாக்குறேன்”என்றார் துரைப்பாண்டி.

“அப்படியா அண்ணா நானும் எனக்கு தெரிஞ்ச இடத்துல ஏதாவது பையன் இருந்தா சொல்லுறேன்”.என்றார் லட்சுமி.

துரைப்பாண்டியின் முகம் மாறி விட்டது அதை மறைத்து கொண்டு
“நாம எதுக்குமா வெளிய மாப்பிளை பாக்கணும் அதான் நம்ம கதிரவன் இருக்கான்ல, ஜோதி கல்யாணம் பண்ணா இவனை தான் பண்ணிப் பேன்னு சொல்லுறா , கதிரவனும் எவளோ நாளைக்கு தான் அந்த ஓடுக்காளிய நினைச்சிட்டே இருக்கமுடியும் “.

“பேசாம அந்த ஒடுக்களியா தலையமுழுகிட்டு ஜோதியா இவனுக்கு கட்டி வச்சிருவோம் ” துரை பேசி முடிப்பதற்குள்ள “கதிரவனின் கைகள் அவன் கன்னத்தில் பதிந்தது பளார் என்ற சத்தத்துடன் “

.”யார பார்த்துடா ஓடுகாளினு சொன்ன என்று கேட்டு கொண்டே துரையை அடித்து வெளுத்து விட்டான் ” லட்சுமியும், வேலுசாமியும் கதிரவனை தடுத்து அழைத்து சென்றனர்.”இனிமேல் என் கண்ணு முன்னாடி வந்தா உன் உடம்புல உயிர் இருக்காது”என்றான் கதிரவன்.

விட்டால் போதும் என்று துரை தன் மனைவி மகளை அழைத்துகொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

“அப்பா அம்மா நீங்க இங்க இருந்து வந்தவங்கள கவனிங்க எனக்கு முக்கியமான வேலை இருக்கு நான் கிளம்புறேன், அம்மா நைட் நான் வீட்டுக்கு வரமாட்டேன் ” என்று கூறிவிட்டு அங்கிருந்து காரில் ஏறி சென்றுவிட்டான்.

“தங்கம் எங்க இருந்தாலும் வந்துருடா இந்த அத்தை கிட்ட, நீ கூட இல்லாம என் புள்ளை நிம்மதி இல்லாமல் அலையுறான் வந்துருமா எங்ககிட்ட “என்று அழுதார் லட்சுமி,

“கடவுள் நம்மள கைவிடமாட்டார் நீ கவலைபடாத, ரஞ்சனி வந்துருவா மா “என்றார் வேலுசாமி.

கதிரவனின் கார் மிகுந்த வேகத்துடன் சென்று நின்றது ஒயின் ஷாபில் முழு சரக்குபாடிலை திறந்து ஒரே மூச்சில் குடித்து முடித்தான் முழு போதையில் “ரஞ்சு தெரியாம உன் மேல கோவப்பட்டுட்டேன்டி அதுக்காக என்ன விட்டு போய்டுவியா நீ”.

” ரஞ்சு நான் பண்ணாது தப்பு தான் அதுக்கு தண்டனையா அஞ்சு வருஷம் என்னவிட்டு பிரிஞ்சி இருந்துட்ட போதும் செல்லம் வந்துருடி என்கிட்ட”.

” ப்ளீஸ்டா செல்லம் வந்துருடா, நீ இல்லாம வாழுற வாழ்க்கை நரகமா இருக்குடி “.

“உன் கதிர் நீ இல்லாம ரொம்ப கஷ்ட படுறேண்டா வந்துருடா, இனிமேல் நான் யாரு மேலயும் கோவப்பட மாட்டேன்டா “

“மன்னிச்சிருடா ரஞ்சு, ப்ளீஸ் டி வந்துருடி, உனக்காக உன் கதிர் காத்துட்டு இருக்கேன் வேகமா வாடி “
என்று முழு போதையில் தன்னை மறந்து புலம்பிக் கொண்டிருந்தான்.

கதிரவனின் ரஞ்சு அவனை தேடி வருவாளா, அவனை மன்னிப்பாளா விதியின் விளையாட்டு எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் 🙏🙏🙏.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!