Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 22

தென்றல் – 22

 

செய்தி அறிந்து பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தார் அம்சவேணி.



Advertisement

 

“ஐயோ…. என் பிள்ளைகள். என்ன ஆச்சோ ஏதாச்சோ?

அப்போவே போகவேண்டான்னு சொன்னேன் கேட்டாதானே” என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு ஓடி வந்தார்.

Advertisement

“அம்மா…. அம்மா…. நில்லுங்க”என்று தடுத்தான் ஆதவ்.

Advertisement

“யாரு சாமி நீ? என் பிள்ளைகள இந்த ஆஸ்பத்திரியில தான் சேர்த்து இருக்காராங்கனு அந்த படம் பிடிக்குற தம்பி சொன்னிச்சு.”

“என் குழந்தைகள் எங்கையா?” என்றார்.

“அம்மா பயப்படாதீங்க உங்க பொண்ணுங்களுக்கு ஒன்னும் ஆகல. மூனு பேரும் நல்லா இருக்காங்க. என்ன கொஞ்சம் மயக்கம் அவ்ளோதான்” என்று அவரை தேற்ற.

Advertisement

“சாமி நீ தான் இங்க மருத்துவம் பாக்குறவேளாயா?

எப்படியாது என் பொண்ணுகளை காப்பாத்திருங்க சாமி” என்று கை எடுத்துக்கும்பிட்டார்.

 

“ஐயோ…. அம்மா. நான் டாக்டர் இல்லை.நான் உங்க பொண்ணோட பிரண்ட்.

அப்பறம் அதோ அங்க நிக்கிறாங்களே அவங்க தான் எங்க பாஸ். உங்க பொண்ணுக்கும்” என்றான் ஆதவ்.

 

“தம்பி நீங்க எப்படி தம்பி இங்க?”

என்று வியந்தார்.

“அதெல்லாம் பெரிய கதை உங்களுக்கு அப்புறம் சொல்றேன். வாங்க வந்து மொதல்ல உங்க பொண்ணுங்களை போய் பாருங்க” என்றான் ஆதவ்.

மருத்துவ அறைக்குள் சென்று பார்க்க மூவரும் மயக்கத்தில் கிடந்தனர்.

“ஐயோ….”என்று அவர்களை கண்டு சங்கடத்தோடு அழுதார் அம்சவேணி.

 

சில நிமிடங்களுக்கு பின் வெளியே வந்தவர் ஆதவை பார்த்து கை எடுத்துக்கும்பிட்டார்.

“ரொம்ப நன்றிங்க தம்பி நீங்க மட்டும் சரியான நேரத்துல வரலைனா என்ன நடந்து இருக்கும்னுனே தெரியல.”

“அதை யோசிக்கும் போதே எனக்கு பயம் வருது” என்றார் அவர்.

“ஐயோ அம்மா…. காப்பாத்துனது நான் இல்லை அதோ அவர் தான். எங்க மொதலாளி.

நன்றி சொல்றதா இருந்தா அவர் கிட்ட சொல்லுங்க” என்று விக்ரமை காட்டினான் ஆதவ்.

 

திரும்பி நின்று அலைபேசியில் பேக்கொண்டு இருந்தவனை தம்பி என்று அழைக்க அவர் புரம் திரும்பினான்.

“என்ன” என்று புருவத்தை சுருக்கி கேட்க, “ஆதவ் தம்பி சொன்னிச்சு நீங்க தான்….என் பொண்ணுங்கள காப்பாத்துனீங்கனு

ரொம்ப நன்றிங்க தம்பி” என்று கையெடுத்து கும்பிட, “இட்ஸ் ஓகே”என்றான்.

 

“அண்ட்…இங்க பாருங்கம்மா உங்க பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு.”

“ஆனா அவங்க கூட இருக்கிறா பாருங்க அந்த பொண்ணு தான் எப்போதும் எல்லா பிரச்சனைக்கும் காரணம்.”

“சோ நான் சொல்றதை கேளுங்க நீங்க அந்த பொண்ணை உங்க பொண்ணு கூட சேர விடாதீங்க.

வெரி டேஞ்சரஸ்” என்றான் விக்ரம்.

“தம்பி அந்த பொண்ணு ரொம்ப நல்லப் பொண்ணு தம்பி. ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து நட்பா இருக்குறாங்க.”

“சொல்லப்போனா என்னோட இன்னொரு பொண்ணு மாதிரி தான் அவளும் எனக்கு.

நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசுறீங்க” என்றார் அம்சவேணி.

விக்ரம் குறை கூறிக்கொண்டு இருப்பது தன் பெண்ணைத்தான் என்று அறியாமல், ரஞ்சிதாவிற்கு வக்காலத்து வாங்குகிறார் அவர்.

விக்ரமிடம் தாக்குப்படுவது சிந்து தான் என்பது என்று புரியப் போகிறது.

அச்சமயம் “அம்மா…உங்க பொண்ணுங்களுக்கு முழிப்பு வந்துருச்சு” என்று விட்டு கடந்தார் செவிலியர்.

விக்ரமின் கால்கள் தானாக அறையை நோக்கி விரைந்தது.

ஆதவிற்கு இது சந்தேகத்தை வரவழைத்தது.

பெரும்பாலும் விக்ரம் இப்படி எல்லாம் நடந்துக்கொள்ளமாட்டான்.

“ஒரு வேலை நம்ம பாஸ் ரஞ்சிதாவை லவ் பண்றாரோ” என்று தனக்குள்ளே நினைத்தவன் “ஹ்ம்ம்…சரி என்ன நடக்குதுன்னு பொறுத்து இருந்து பாப்போம்” என்று அவன் பின்னே ஆதவும் சென்றான்.

மூவரும் படுக்கையில் அமர்ந்து இருக்க விக்ரமின் கண்கள் முதலில் சிந்துவின் மீது படர்ந்து மீண்டது.

சிந்துவும் அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து பின் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“துளசி இப்போ எப்படி இருக்கு” என்று கேட்க, “ஹ்ம்ம்.. கொஞ்சமா தலை வலிக்குது. மத்தபடி ஆல் ரைட்” என்றாள்.

“ஹ்ம்ம்….” என்று

ரஞ்சிதாவின் படுக்கையில் சென்று அமர்ந்தான் விக்ரம்.

 

அவள் தலையை குனிந்து இருந்தாள்.

“ரஞ்சி ஏன் இப்படி பண்றிங்க? ஒரு வார்த்தை என் கிட்ட சொல்லி இருக்க கூடாதா?”

“பணத்துக்காக இது மாதிரி ஆளுங்களை எல்லாம் நம்பி இவ்ளோ தூரம் துணை இல்லாம தனியா வரலாமா?”

“உங்களுக்கு ஏதாவதாகி இருந்தா”என்று வார்த்தையை முடித்துக்கொண்டான்.

ரஞ்சிதா அவன் வார்த்தையில் கரைந்தாள்.

எதிர் படுக்கையில் அமர்ந்து இருந்த சிந்து இதை ரசித்து பார்த்தாலும் அவள் மனம் வலிக்கவே செய்தது.

தனக்கு கிடைக்க வேண்டிய அன்பும், கருணையும், காதலும் தன் தோழிக்கு தாரைவார்த்ததின் துக்கம்மது.

ரஞ்சிதா ஒரு வார்த்தை கூட பேச மறுத்தாள்.

“ரஞ்சி இனி பழகும் போது பார்த்து பழகுங்க. யார் கிட்ட பழகனும்.எப்படி பழகணும் அவங்க லிமிட் என்னவோ அங்கையே வைங்க.

அப்படி இல்லைனா இப்படி தான் பெரிய பிரச்சனையில் மாட்டி விட்டுருவாங்க புரியுதா என்றான் விக்ரம்.

ஆனால் அவன் பார்வை என்னவோ சிந்துவின் மீது தான் இருந்தது.

ஆதவ் இதை கவனித்தான்.

சிந்துவை காயப்படுத்தும் நோக்கில் தான் விக்ரம் இப்படி நடந்துக்கொள்கிறான் என்பதை உணர்ந்துக்கொண்டான்.

“சரி ரஞ்சி நடந்தது நடந்து போச்சு அதை பற்றி இனி யோசிக்க வேண்டாம்.நான் துளசிக்கு எனக்கு தெரிஞ்ச மெடிக்கல் காலேஜ்ல சீட் சொல்லி இருக்கேன்.

நாளைக்கு போய் அட்மிசன் ஃபார்ம்ல சைன் போட சொல்லு போதும்”என்றான் துளசியை பார்த்தப்படி.

அவள் முகம் மலர்ந்தது. “என்ன மா இப்போ சந்தோசம் தானே” என்றான் விக்ரம்.

“ரொம்ப நன்றி அண்ணா” என்றாள் துளசி.

“இப்ச்…. நன்றி எல்லாம் வேண்டாம் நல்லா படிச்சு நீ டாக்டரானாலே போதும்” என்றான்.

சிந்துவின் கண்கள் கலங்கியது. தன் கனவை ஒரே நொடியில் நிறைவெற்றிய தெய்வமாய் தெரிந்தான் விக்ரம்.

“ரஞ்சி இனிமேயாச்சும் நல்லவங்க யாரு கெட்டவங்க யாருனு பார்த்து பழகுங்க”என்றவன் ஒரு அழைப்பு வர வெளியே சென்றான்.

அவன் பேச்சு ஆதவிற்கு ஏதோ செய்தது. அவன் காயப்படுத்திக்கொண்டு இருப்பது தன்னவளை அல்லவா.

சிந்துவை நோக்கி “கவலைப்படாதீங்க சிந்து. அவர் அப்படி தான். ஒருத்தரை தப்பா புரிஞ்சிகிட்டா கடைசி வரைக்கும் தன் எண்ணத்தை மாத்திக்கவே மாட்டாரு.

அதனால அவர் பேசுறதை எல்லாம் நீங்க மனசுல வச்சுக்காதீங்க சிந்து” என்றான் அவள் மனதிற்கு ஆறுதலாய்.

“ச்ச.. ச்ச…நான் எதுவும் வருத்தப்படல ஆதவ். அவர் எனக்கு யாரு? நான் அவர் வீட்டில் வேலை செய்கிறேன் அவ்ளோ தான்.அவர் என்னை எப்படி புரிந்துக்கொண்டால் என்ன?!

வேலை செய்கிறேன் சம்பளம் தருகிறார்.

இதை தவிர வேற என்ன இருக்கப்போகிறது எங்களுக்குள்ளே.”

“எனக்கு என் தங்கையின் கனவு நினைவாக வேண்டும். அதற்கு நான் எத்தனை அவமானத்தை வேண்டும் என்றாலும் சுமப்பேன். அவருக்கு நான் யார் என்று தெரியாமலே போகட்டும் ஆதவ் சார்.”

“ஒரு வேளை நான் ஏமாற்றியது அவருக்கு தெரிந்தால் என் தங்கையின் லட்சியம் தடைப்படும். ஒரே நிமிடத்தில் என் துயரத்தை துடைத்தவர் அவர். என்ன வேண்டும் என்றாலும் என்னை பேசிக்கொள்ளட்டும். நான் அவரை ஏமாற்றியது தெரிந்தால் நிச்சயம் அவர் மனது காயப்படும். எனக்கு உதவிய அவரை ஒரு போதும் கஷ்டப்படுத்த மாட்டேன்.அதனால் எப்போதும் நான் தான் அந்த குரலுக்கு சொந்தக்காரி என்ற உண்மையை இறுதி வரை தெரியாமல் பார்த்துக்கொள்வேன்” என்றாள் வலி நிறைந்த புன்னகையோடு.

தென்றல் மீண்டும் வீசும்…..

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!