Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 30

தென்றல் – 30

 

“சுசிலா அம்மா வாங்க, விக்ரம் தம்பி கூப்பிடறாரு” என்று சுசிலா கையை பிடித்து இழுக்க, கையை உதறிவிட்டு “போ நான் உன் கூட வர மாட்டேன். நான் என் இனியாக் கூட தான் வருவேன்”என்று சிந்துவின் பின்னே சென்று ஒளிந்துக்கொண்டார்.



Advertisement

“கீதா அக்கா, விடுங்க நான் அழைச்சிட்டு வறேன்” என்றாள் சிந்து.

“அம்மா…. வாங்க நானும் உங்க கூட வறேன்” என்று மேடைக்கு அழைத்துச் செல்ல, சிந்துவின் கையை இறுக்கி பிடித்தார் சுசிலா.

அதே சமயம் சிந்துவின் மற்றோர் கையை இறுக்கி பிடித்தான் விக்ரம்.

Advertisement

சிந்து அவன் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தாள்.

Advertisement

“ஏய் என்ன அப்படி பாக்குற அம்மா காலில் விழு” என்று சுசிலாவின் காலை தொட்டு வணங்கினான் விக்ரம்.

அவளையும் வழுக்கைட்டாயமாக ஆசிர்வாதம் வாங்கச் செய்தான்.

அவள் கையை விக்ரமிடம் இருந்து பிரிக்க போராடினாள்.அடக்கப்பட்ட குரலில் முகத்தில் கோபத்தை காட்டிக் கொள்ளாமல்

Advertisement

“என்ன விடுங்க விக்ரம். நீங்க ஏன் இப்படி எல்லாம் பண்றிங்க?

என்ன விடுங்க…

நீங்க ஏதோ பெருசா பிளான் பண்ணித் தான் இதை பண்றிங்க. ஆனா ஏன்? என் கிட்ட ஒரு வார்த்தைக் கூட கேட்காமல் எப்படி இவ்ளோ பெரிய முடிவை உங்களால எடுக்க முடிந்தது.

இப்போ நினச்சா கூட நான் உங்களை பிடிக்கல உங்களை கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்லைனு ஊரு அறிய சொல்ல முடியும். ஆனா இங்க ரெப்பிடேசன ஸ்பாயில் பண்ற எண்ணம் எனக்கு இல்லை.

அதுக்காக நீங்க என்ன பண்ணாலும் அமைதியா இருப்பேன் நினைக்காதீங்க சார்.”

“கல்யாணம் ஒன்னும் சின்ன பிள்ளைகள் விளையாட்டு இல்லை. இது ஃலைப். என்…. வாழ்க்கைல காதல் கல்யாணம் எதுக்கும் இடமில்லை.தயவு செஞ்சி என்ன பழி வாங்கணும் நினச்சா வேற விதமா பழிவாங்குங்க. ஆனா இப்படி கல்யாணங்கற பேருல என்ன மேலும் மேலும் காயப்படுத்தாதீங்க விக்ரம்.”

“ நான் ஏற்கனவே வாழ்வில் படக்கூடாத கஷ்டத்தை எல்லாம் பட்டுவிட்டேன், பார்க்க கூடாத காட்சியை எல்லாம் பார்த்துவிட்டேன் இனியும் ஒரு துன்பத்தை அனுபவிக்கும் சக்தி எனக்கில்லை என்னை விட்டு விடுங்கள்”என்று கெஞ்சினாள்.

விக்ரம் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

அவன் முகம் சொல்லப்போனால் சந்தோசத்தாள் ஒளிர்ந்தது.

ஆதவ் நடப்பதொன்றும் புரியாமல் விழித்தான்.

இன்னும் தன் காதலை இப்படி ஊர் அறிய சொல்லி, அதற்கான பதில் கிடைக்கும் முன்னே அவன் காதல் அவன் கண்முன்னே பறிப்போவதா?என்ன மாதிரியான விதி இது. இத்தனை நாட்கள் சிந்துவைக் கண்டாலே எரிந்து விழிந்த விக்ரம், இப்போது என்னவோ அவளைத்தான் மனைவி என்கிறான்.

இது விதியா இல்லை கடவுளின் சதியா? காலம் இன்னும் என்ன என்ன சுவாரஷ்யதை எல்லாம் ஒளித்து வைத்து இருக்கிறதோ?

ஆதவை அனைவரும் பாவமாக பார்த்தனர்.

அவனால் இன்னும் அங்கு எப்படி இருக்க முடியும். என்ன தான் இருந்தாலும் அவனும் ஒரு மனிதன் தானே.

தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கியவன் அங்கிருந்து விழகினான் ஆதவ்..

“பேலர் கேக் எடுத்துட்டு வாங்க” என்று சிந்துவின் கையை விடாமல் அழுத்தி வெளியே சிரித்தான்.

அவள் தான் பாவம். கேக் வர சுசிலா அம்மாவின் கையில் கத்திக் கொடுக்கப்பட்டது.

கத்தியைப் பார்த்து பயந்து இனியா என்று அலற,அவள் பின்னே ஓடி ஒழிய “என்னமா…இது ஒரு சாதாரண மர கத்தி. இதுல கேக் மட்டும் தான் வெட்ட முடியும். இது மனிதர்களை வெட்டாது பாருங்க எனக்கு வலிக்கவே இல்லை” என்று தன் கையில் வெட்டிக் காண்பித்தாள்.

“ஆமாம்….”என்று சிரித்தபடி கத்தியை கையால் வாங்கினார் சுசிலா.

மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டது.

பிறந்தநாள் வாழ்த்து பாடல்கள் ஒலிக்க, சுசிலாவின் கையப்பிடித்து கேக்கை வெட்டினாள் சிந்து.

அதற்குள் கூடத்தில் சலசலப்பு…

சுசிலா அம்மாவை குறிவைத்து வந்தது ஒரு தொட்டா.

ஆ…என்று கதியப்படியே சுசிலாவை அங்கிருந்து விளக்க கனப் பொழுதில் உயிர் தப்பித்தார் சுசிலா.

விக்ரம் கூட்டத்தை பார்க்க அங்கு ஆறடியில் ஒரு ஆண் மகன் முகத்தை மறைத்துக் கொண்டு கையில் துப்பாக்கியோடு நின்று இருந்தான். மறுமுறையும் குறியை விக்ரம் மீது வைக்க

“ஏய்…யாருடா நீ” என்று கூட்டத்தில் கொலைக்காரணை நோக்கி ஓடினான்.

 

விக்ரம் இறங்கி வருவதற்குள் அவன் ஆகிருந்து சென்று இருந்தான்.

அங்கு சற்று நேரத்துக்கு பதஷ்டம் நிலவியது.

“அம்மா” என்று சுசிலாவை தரையில் இருந்து எழுப்ப, சிந்துவின் கையை இறுக்கி பிடித்துக்கொண்டு இருந்தார் சுசிலா. ஆனால் சிந்து அசைவின்றி தரையில் கிடந்தாள்.

“சிந்து…. சிந்து….”என்று கன்னத்தை தட்ட அவள் எழவில்லை.

சீக்கிரம் டாக்டரை கூப்பிடுங்க.

போலீஸ்க்கு இன்ஃபோர்ம் பண்ணியாச்சா? அங்கு சற்று நேரத்துக்கு பதஷ்டம் நிகழ்ந்தது.

கண்களை திறந்தாள் சிந்து.

அருகில் ரஞ்சிதா அமர்ந்து இருந்தாள்.

அவள் விழி சூழல ஒரு மூலையில் அமர்ந்து “இனியாக்கு ஒன்னும் ஆக கூடாது. என் இனியாவுக்கு ஒன்னும் ஆகக் கூடாது. காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்று நடுங்கிக் கொண்டு இருந்தார் சுசிலா.

வெளியே விக்ரம் நடந்த சம்பவம் குறித்து போலீஸ்சிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

“சிந்து…ஒன்னும் இல்லைடி.நீ பேனிக் ஆனதுனால வந்த சின்ன மயக்கம் தான்” என்று ரஞ்சிக் கூற படுக்கையில் இருந்து எழுந்தாள்.

“சுசிலா அம்மா எனக்கு ஒன்னும் இல்லை. பாருங்க நான் நல்லாத்தான் இருக்கேன் நீங்க பயப்படாதீங்க” என்று சமாதானம் செய்தாள் சிந்து.

ஆனால் பார்வை என்னவோ விக்ரமின் மீது தான் இருந்தது.

“ரஞ்சி ஆதவ் எங்க?”

“தெரியல சிந்து.”

“ஆனா பாவம் சிந்து ஆதவ்.அவர் மனசு ரொம்ப காயப்பட்டுருக்கும்”அவர் உன்னை விரும்புவாருன்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவேயில்லை” என்றாள் ரஞ்சி.

“ஹ்ம்ம்…உண்மை தான் ரஞ்சி.எனக்கும் கூட சற்று வியப்பாகத் தான் இருந்தது.அவருக்கு கொஞ்சம் கால் பண்ணி பேசு. எங்க இருக்குறாரு கொஞ்சம் கேள். அவர் கிட்ட நான் கொஞ்சம் பேசனும்” என்றாள் சிந்து.

“மொதல்ல நீ ரெஸ்ட் எடு. இது என் ஆர்டர் இல்லை. உன் ஹஸ்பண்ட் ஆர்டர்”என்றதும், “சட் ஆப்…ரஞ்சி” என்று எரிந்து விழுந்தாள்.

“ஐயோ…நான் இல்லப்பா” என்று எழுந்து ஓடியே விட்டாள் ரஞ்சி.

விக்ரம் என்ன செய்கிறான். ஏன் செய்கிறான் என்று சுத்தமாக புரியவில்லை.

ஒரு வேளை சுசிலா அம்மாவின் நலம் கருதி தன்னை மனைவியாய் ஏற்றுக்கொள்கிறானா?

இல்லை உண்மையாக என்னை பழிவாங்கவா?

எது எப்படியாயினும் என்னால் இந்த ஜென்மத்தில் யாரையும் திருமணம் செய்துக்கொள்ள முடியாது. நான் உடனே என் ஊருக்கு கிளம்பி செல்கிறேன். இனியும் இங்கே இருக்கே முடியாது. ஒரு பக்கம் ஆதவ், மற்றொரு பக்கம் விக்ரம் என்று சிந்துவின் மனம் குழம்பி தவித்தது.

ரஞ்சி சிரித்துக்கொண்டே வெளியே வந்தவளின் முகம் மாறியது.

“ஆதவ்….. நீங்க…நீங்க…சிந்துவை தான் இத்தனை நாள் பார்த்தீங்களா?

நான்…என்னைத் தான் நீங்க நேசிக்கிறீங்க.

ஒரு நாள் இல்லை ஒருநாள் உங்க மனசுல இருக்குற ஆசையை என் கிட்ட நேரடியாக சொல்லுவிங்கனு நினச்சேன்.”

“ஆனா உங்க மனசுல நான் இல்லை…நீங்க சிரிக்குற சிரிப்பு எனக்கானதுனு நினச்சேன்.

உங்க பார்வை, உங்க செயலுனு இப்படி எல்லாமே நான் ரசிக்கத்தான் நீங்க பண்றிங்கனு நினச்சேன். ஆனா நீங்க சிந்துவைத் தான் இத்தனை நாள் நேசிச்சிட்டு இருக்கீங்கன்னு எனக்கு தெரியாம போச்சு ஆதவ்.”

“தெரிஞ்சு இருந்தா என் மனசுல உங்களைப் பற்றிய என் காதல் எண்ணத்தை நான் வளர விட்டு இருக்க மாட்டேன்.

இப்போ எப்படி ஆதவ் என் மனசுல இருந்து உங்களை நான் எடுப்பேன்”என்று கதறி அழுதாள் ரஞ்சி.

ஒவ்வொரு நாள் சிந்துவை எட்டி எட்டி யாருக்கும் தெரியாமல் பார்ப்பான் ஆதவ்.

இதை முதலில் சாதாரணமாக எடுத்துக்கொண்ட ரஞ்சி, நாள் அடைவில் அவன் செயல்களை ரசிக்க துவங்கினாள்.

அவன் தவிப்பது தனக்காகத் தான் என்ற கற்பனையை வளரத்துக்கொண்டு ஆதவ் மீது ஒரு தலைக் காதல் கொண்டாள் ரஞ்சி.

ஆனால் இன்றோ எல்லாம் சுக்கு நூறானது.

அவன் மனதில் தான் இல்லை என்று தெரிந்ததும் புழுவாய் துடித்தாள்.

வாய் விட்டு அழவும் முடியவில்லை. தன் காதலை தன்னுள்ளே போட்டு புதைத்துக்கொண்டு வெளியே சிரிப்பதாய் நடித்தாள்.

“ரஞ்சி…. என்ன ஆச்சு?

ஏன் உன் கண்கள் இப்படி சிவந்து இருக்கு”என்று வினவினாள் சிந்து.

“ஒன்னும் இல்லை சிந்து, திடீருனு நீ மயக்கம் அடைந்ததும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.கொஞ்சம் அதிகமாகவே பயந்துட்டேன் சிந்து”என்று கட்டி அணைத்தாள் ரஞ்சி.

“ஹ்ம்ம்…”என்று அவளும் தன் தோழியை கட்டிக்கொண்டு மெல்லிதாய் புன்னகைத்தாள்.

அப்போது அங்கு வந்தவன் இதை கண்டு சிரித்தான்.

“என்ன செண்டிமெண்ட் சீனா?”

என்ன உங்களுக்கு பிரச்சனை என்று திட்ட போன சிந்துவின் கையை பிடித்து வேண்டாம் என்று தடுத்தாள் ரஞ்சி.

“என்ன புலி திரும்ப பாய ஆரம்பிச்சிருச்சு போல” என்றான்.

“சார் வார்த்தைகளை ஒழுங்கா பேசுங்க”.

“இப்போ நான் என்ன தப்பா பேசிட்டேன். இல்லை உங்களை மாதிரி ஆள் மாறாட்டம் எதுவும் பண்ணினேன்னா?” என்றான்.

சிந்துவின் முகம் கருத்தது.

“சார் நாங்க கிளம்பறோம்” என்று நகர சிந்துவின் கையை பிடித்து, “எங்க போற?” என்றான்.

“சார் கைய விடுங்க. நீங்க என் கிட்ட ஏன் இப்படி நடந்துக்குறீங்க. உங்களுக்கு என்னை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்த உரிமையும் இல்லை.

கையை விடுங்க. வழியில் இருந்து நகருங்க” என்று அவனை கடக்க அவன் பிடியின் இறுக்கம் கூடியது.

“ரஞ்சி நீங்க கிளம்பலாம்” என்றான்.

“சார்…அது வந்து சிந்து”.

“கவலைபடாதீங்க உங்க பிரண்ட்க்கு ஒன்னும் ஆகாது. நீங்க கவலைபடாமல் போயிட்டு வாங்க. இனி அவங்க வீடு இது தான்.நீங்க பார்க்கணும்னா தாராளமா இங்க எப்போது வேண்டுமானாலும் வரலாம்” என்றான் விக்ரம்.

அவள் அமைதியாய் “ஓகே சார்” என்று சிந்துவை பார்த்துக்கொண்டே வெளியே சென்றாள்.

“என்ன செல்லம் நம்ம நிச்சயதார்த்தம் எப்போ வச்சிக்கலாம், அத்தே, கொழுந்துக்கு எல்லாம் நம்ம காதலை பற்றி சொல்ல வேண்டாமா.

துளசிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிய வந்தது ரொம்ப சந்தோசம் அடைவாள்” என்றான் விக்ரம்.

“சார் என்ன உளறிங்க. உங்க கிட்ட எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன். நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க விரும்பல. உங்களை நான் காதலிக்கவும் இல்லை புரியுதா.

மொதல்ல வழியை விடுங்க” என்றாள் சிந்து.

“அப்போ நான் சொன்னா கேக்க மாட்ட அப்படி தானே.

என்ன பிடிக்காது அப்படி தானே.” “ஆமாம்…ஆமாம்…ஆமாம்…”என்று கத்தினாள்.

“சரி இருக்கட்டும் எனக்கு உன்னை பிடிச்சுருச்சு..

இனி என் மனச என்னால மாத்திக்க முடியாது” என்றான்.

என்ன பைத்தியக்கார தனம் இது ஆதவ்…நீங்க எங்க இருக்கீங்க என்ற அழைப்பில் விக்ரமிற்கு தேகம் சூடானது.

தென்றல் மீண்டும் வீசும்….

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!