Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன் ♥️28

சாவதானமாய் எழுந்து காலைக் கடன்கள் முடித்து…. நெடு நேரம் தேய்த்து தேய்த்து குளித்தான்.

அடேய்…நீ இருக்கிறது ராஜஸ்தானில் இங்கே இவ்வளவு நேரம் குளியலா… மனசாட்சி காரி துப்பியதை இன்னும் தண்ணீர் ஊற்றி கழுவிக் கொண்டான்.

அழகாய் உடை உடுத்தி axe blue lavender body spray அடித்து கண்ணாடி முன் நின்று தன்னை வெகுவாய் ரசித்தான். ஹரி நீ கொள்ளை அழகுடா… கன்னம் கிள்ளி கொஞ்சி கொண்டான்.

குலாபி நீ இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கலாம்…. தன் அருகில் அவள் நிற்பது போல் எண்ணி ரசித்தான்.



Advertisement

முன்பு அவளை ஒட்டி நின்றபோது அவன் மனம் அளவிட்டு இருந்தது. தோள்பட்டையை ஒட்டி இருக்கிறாள். இன்னும் நாலு இன்ச் வளர்ந்திருக்கலாம் என்று அவன் மனம் லேசாய் வருத்தம் கொள்ள… அடேய் வளர்ந்து கெட்டவனே… நீ நாலு இன்ச் கம்மியா வளர்ந்திருக்கலாம் என்று உடனே தோன்றாமல் இல்லை.

காலை உணவாக Methi Bajra poori,Mirchi Bada என்று ராஜஸ்தானிய ஸ்பெஷல் உணவுகளை ஆராய்ந்து ரசித்து சுவைத்தான்.

ஜெய்சால்மர்  டாக்சி சர்வீஸில் இருந்து கார் வந்தது.

Advertisement

புகழ் பெற்ற ஜெயின் கோயிலுக்கு சென்றான். தனிமையில் கண்ட ஆழ்ந்த அமைதியான தரிசனம் அவன் ஆன்மாவை  ஆற்றுப்படுத்தியது.

Advertisement

Vyas Chhatri என்ற வரலாற்று சிறப்புமிக்க இடத்திற்கு சென்றான். மகாபாரதம் படைத்த வியாசர் நினைவாக கட்டபட்ட கோட்டை. அதன் அழகை,கலை நுணுக்கத்தை  ரசித்தான்.

திரும்பும் இடமெல்லாம் பழமையை பறைசாற்றும் கம்பீரமான  கோட்டைகளும் அரண்மனைகளும் நிறைந்த ஜெய்சால்மர் அவனுக்கு அவ்வளவு பிடித்தது.

சுற்றி திரிந்து களைத்து ஹோட்டலுக்கு திரும்பினான்.

Advertisement

கூட்டமாய் செல்வது ஒரு வகை மகிழ்ச்சி… தனிமையில் நாடோடி போல் அலைந்து திரிவது ஒருவகை மகிழ்ச்சி. தனிமை கொடுக்கும் ஆத்மார்த்தம் நமக்குள் இருக்கும் நம்மை காணும் வாய்ப்பு.

மதிய உணவை முடித்துக் கொண்டு  கேவர்(Ghevar)என்ற ராஜஸ்தானின் புகழ்பெற்ற இனிப்பை விரும்பி சுவைத்தான். பொதுவாகவே இனிப்பு அதிகம் உண்பவன் அல்ல… இன்றைய மனநிலை இனிப்பு உண்ண வேண்டும் என்று தோன்றியது. ரசனையுடன் தித்திப்பு நாவில் இருந்து இதயத்திற்கு இறங்கியது.

ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தவன் குளித்து கிளம்பிவிட்டான் … நினைவு வந்தவனாய் தன் கூலர் எடுத்து அணிந்து கொண்டு கண்ணாடியின் முன் நின்று முன்னும் பின்னும் வளைத்து வளைத்து பார்த்துக் கொண்டான்.

என்னடா ஹரி உன் லைஃப் இப்படி தலைகீழா மாறி போச்சே…. இதுவும் நல்லா தான் இருக்கு… சிரித்துக்கொண்டவன் மொபைலை பாண்ட் பாக்கெட்டில் சொருகிக் கொண்டு வெளியேறினான்.

“—————–“

டாக்சி டிரைவரிடம் மூல்சகர்(Moolsagar)செல்ல வேண்டும் என்றான். ஜெய்சால்மரில் இருந்து எட்டுகிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அழகான சிறிய கிராமம்.

உள்ளுக்குள் அவ்வளவு சிரிப்பு அவனுக்கு.

மூல்சஹர் வந்திறங்கியவன் டாக்சியை அனுப்பி விட்டு கூகுல் ஆண்டவர் உதவியுடன் அங்குள்ள அரசு தொடக்க பள்ளியை தேடினான்.

அந்த ஊர், அந்த ஊரின் கட்டிட அமைப்பு,மக்களின் நடை உடை என்று வியந்து பார்த்துக் கொண்டே சென்றான்.

பள்ளிக்கு அருகில் வீடுப்போல் இருந்த அந்த சிறிய கட்டிடத்தை தேடினான்.

“——————–“

அபிஜித் கிளினிக் என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெயர்ப்பலகை வரவேற்றது.

சிவப்பு வண்ண பிளாஸ்டிக் சேர்கள் வரிசைகட்டி அணிவகித்திருக்க… அதிகம் கூட்டமில்லை… நான்கு ஐந்து பேர் அமர்ந்திருந்தனர்.

கொஞ்சம் பட படப்பாய் இருந்தது. இதயம் தட தடத்தது அவனுக்கே கேட்டது.

சற்று நேரம் குனிந்தபடியே மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்.

வேலை வேண்டி நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும் போதெல்லாம் இந்த நெர்வஸ்னஸ் இருந்ததில்லை. பத்து வயது குறைந்து விட்டதோ என்ற பீலிங்க்ஸ் அவனுக்கு இல்லாமல் இல்லை. கொஞ்சம் கூச்சமாக கூட இருந்தது.

இருந்த நான்கைந்து பேரும் சென்றுவிட…

ஸார் எக்ஸுஸ்யூமி யுவர் நேம் ப்ளீஸ் என்றாள் கையில் டோக்கன் வில்லைகளை வைத்துக்கொண்டு ஒரு பெண்.

அமைதியாய் குனிந்திருந்தவனுக்கு தேகம் சிலிர்த்தது.

Do you want to see a doctor?  what’s the problem? இந்தியோ ராஜஸ்தானியோ தெரியாமல் ஆங்கிலத்தில் கேட்டு நின்றாள்.

ஐ வாண்ட் டு சீ மை குலாபி ம்ம்ம்ம்ம்ம்… ஏன்னா எனக்கு ஹார்ட் டிசீஸ்… மெல்ல நிமிர்ந்தான்.

அவளுக்கு குப்பென வியர்த்தது.

நீ…. நீங்க எங்க? வார்த்தைகள் தந்தி அடிக்க…

கூலரை சற்று இறக்கி அழகாய் கண்ணடித்தான் அதில் உயிர் காதல் கொட்டி கிடந்தது.

பவி குட்டி என் ஹார்ட் அதிகம் துடிக்குது… நா குலாபி வேணும்னு கேட்குது.

நீ வேணா டெஸ்ட் பண்ணி பாரேன்… அவள் கரம் பற்ற வந்தான்.

உறைந்திருந்த அவள் உயிர் பெற்று கையை விலக்கி கொண்டாள்.

சரி உங்க டாக்டர் அபிஜித்தை கேட்போம்?

அய்யோ வேண்டாம்… பதறினாள்.

ஏன்டா பங்காரம்? அவ்வளவு குழைச்சல் அந்த குரலில்.

உங்களை யார் இங்கே வர சொன்னது?

உன்னை யார் அமெரிக்காவை விட்டு ஓடிவர சொன்னது?

ஸார் பிராப்ளம் கிரியேட் பண்ணாம போய் சேருங்க!

எது போறதா?

வா ரெண்டு பேரும் போவோம்!

ஸார் என் பொறுமையை சோதிக்காம போய் சேருங்க!

பவித்ரா Are there any patients? உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது.

No doctor என்றாள் பவித்ரா.

Iam here doctor என்று உரக்க கூறினான் ஹரி.

வாயை மூடுங்க… அவன் வாயை சட்டென்று பொத்தினாள்.

மூடிய கரத்திற்கு வஞ்சனை இல்லாது ஆசையாய் ஒரு முத்தம் வைத்தான்.

யூ… கோபமாய் கரத்தை விலக்கி கொண்டாள்.

என்ன குலாபி இப்படி நிற்கிற?

வா போய் டாக்டரை பார்ப்போம்?

வெளியில் போங்க… கோபம் பொங்கியது அவளுக்கு.

போறதா… உன்னை தேடி வந்திருக்கேன் ஆசையாய் ஓடி வந்திருக்கேன்… பாவாவை போக சொல்வியா நீ..? செல்லமாய் முறைத்தான்..

ஒரு இளைஞன் இருமியபடியே வந்து நின்றான்.

இவன் நேற்று வந்தானே…? யோசனையுடன் அவனுக்கு அருகில் சென்றாள்.

அவன் உதடு தான் எதையோ முணு முணுத்துக் கொண்டிருந்ததே தவிர கண்கள் அப்பட்டமாய் மேய்ந்தது.

பீவர் இருக்கா…?

ம்ம்ம்ம்… நீங்களே பாருங்க… அவள் கரம் பற்றி தன் கழுத்தில் அவனே வைத்தான்.

ஹரிக்குள் எரிமலை வெடிக்க தயாரானது.

அவள் கரத்தை விடாது கழுத்தோடு இறுக்கிக் கொண்டு அரை குறை ஆங்கிலத்தில் அவன் பேசிக் கொண்டிருக்க…

நாசுக்காய் கரத்தை விலக்கி கொண்டவள் போய் டாக்டரை பாருங்க… நாலு இன்ஜெக்ஷன் போட வேண்டி இருக்கும் என்றாள் கோபத்தை காட்டிவிடாத பொறுமையுடன்.

நீங்க தானே போடுவீங்க…? அவ்வளவு வழிச்சல் அவன் குரலில்.

போங்க சார்… நேத்து காட்டின சீட்டையும் டாக்டரிடம் காட்டுங்க!

அவன் பல்லை இளித்துக் கொண்டே மருத்துவர் அறைக்குள் சென்றான்.

டாமிட்….மரண ஊசி போடுடி அவனுக்கு… அவளிடம் காய்ந்தான்.

சரி நீங்க கிளம்புங்க!

அடிச்சு பல்லை உடைக்க போறேன்…

நீ ராஜஸ்தான் வந்து எங்கேயோ ஒரு குட்டி கிராமத்தில் ஒளிஞ்சுகிட்டு என் உயிரை வாங்குவ… நான் உன்னை கண்டுப்பிடிச்சு ஓடி வரணுமா? நீயும் நானும் சின்ன பிள்ளைங்க பாரு ஹைடுஅன் சீக் விளையாட.

உங்களை யார் வர சொன்னது? முடிந்தவரை கிசுகிசுப்பாக பேசினாள்.

மணிரத்னம் மூவி மாதிரி இருக்கு… என்றான் அவனும் கிசுகிசுப்பாய்.

அந்த இளைஞன் கண்கள் மின்ன அவளை பார்த்துக் கொண்டே வர…

ஹரியை கண்டு யார் இவர்… எந்த ஊர் என்று கேட்டான்.

அந்த கிராமமாக இருந்தால் அவனுக்கு தெரிந்திருக்குமே…

Iam Harichran From Andrapradesh.She is My wife Pavithra Haricharan என்றான் அலட்டல் இல்லாமல்.

அவள் மட்டுமல்ல அந்த இளைஞனும் ஆடித்தான் போனான்.

சரி நான் டாக்டரை பார்த்துட்டு வரேன்… ஹரி உள்ளே சென்றுவிட… அய்யோ இவன் என்ன உளறி கொட்ட போறானோ என்று பின்னால் ஓடினாள் பவித்ரா.

Hello Doctor Iam Haricharan. அவன் அறிமுகம் செய்து கொண்டான்.

Hello Mr Haricharan please welcome to our Rajasthan என்றான் அந்த அபிஜித்.

பவித்ரா இருவரையும் மாறி மாறி பார்க்க…

Can we take Pavithra outside for a while.

Yeah Sure… Almost closing time.There are no patients.

Thank you என்று கை குலுக்கினான்.

நாகரிகம் கருதி அமைதியாக நின்றவள் நான் உங்க கூட வர மாட்டேன் என்றாள் சின்ன குரலில்.

சரி வா உன் ரூமுக்கு போவோம்.

என் ரூமா?

ஆமா நீயும் சந்தியாவும் தங்கி இருக்கீங்களே அந்த ரூமுக்கு.

எந்த சந்தியா? எச்சில் விழுங்கினாள்.

Dream Hospital இருக்கே அதாம்மா Jawaharlal Nehru Colony ல் இருக்கே Dream Hospital அங்கே வேலை பார்க்கும் உன் பிரண்ட் சந்தியாவை தான் சொல்றேன்.

அவளை உங்களுக்கு… நா வறண்டு வார்த்தைகள் இன்றி காற்று தான் வந்தது.

அவளுக்கு எங்கேஜ்மெண்ட் ஆகிடுச்சு போல.. மாப்பிள்ளை துபாய் பார்ட்டியோ?

துடைக்க துடைக்க வியர்வை வழிந்தது அவளுக்கு. எத்தனை தூரம் தன்னை பற்றி மட்டுமல்லாது தன் தோழி வரை விபரம் சேகரித்து வைத்திருக்கிறான்…

“—————-“

மொபைல் எடுத்து டாக்சிக்கு அழைத்தான்.

உன் விஷயத்தில் ஹரிக்கு தெரியாமல் எதுவுமே  இருக்க முடியாது.

அவள் பேச்சிழந்து நிற்க…உள்ளுக்குள் பயப்பந்து உருண்டது.

டாக்சி வந்து நிற்க… அவன் முறைத்த முறைப்பில் டாக்சிக்குள் ஏறிக் கொண்டாள்.

பின்னிருக்கையில் அவனோடு அமர சங்கோஜப்பட்டு இடைவெளி விட்டு நகர்ந்து நகர்ந்து அவள் கதவோடு ஒண்டிக் கொண்டே செல்ல… பொறுத்து பொறுத்து பார்த்தவன் அவளை இழுத்து தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டு அமர்ந்தான்.

அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வர…

ஷ்…. என்று எச்சரித்தவன்.

ஊசி போட வந்தவன் இந்த கையை பிடிச்சு இப்படி வச்சுக்குறான்… நான் உரிமையாக போறவன் உன் மேல கை கால் பட்டால் தான் என்ன? பல்லை கடித்து வார்த்தைகளை துப்பினான்.

இப்படி பேசாதீங்க?

வேறெப்படி பேச? உன் மேல செம்ம கோபமா இருக்கேன். இழுத்து வச்சி அடிக்க மாட்டேன்… கடிச்சு வச்சுடப் போறேன்.

அவள் வாயை திறந்தால் தானே…?

“—————-“

டாக்சி அவன் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு வந்து நின்றது.

இங்கே ஏன்?

கொஞ்சம் பேசணும்!

அவள் எச்சில் விழுங்கி நிற்க…

கொஞ்சி பேசணும்னா சொன்னேன்… கொஞ்சமே கொஞ்சம் பேசணும் அவ்வளவு தான்!

அவள் முகம் அப்போதும் தெளியவில்லை.

இங்கே பார்க் பீச் எல்லாம் இல்லை… ஏழு மணிக்கு எங்கே போக…?

இல்ல… நான் வரல… அவள் நடுங்கினாள்.

ஏய் வாடி… தோளில் இடித்து விட்டு சென்றான்.

அவள் அங்கேயே தேங்கி நின்றுவிட…

ஏய் குலாபி இண்டிலே தான் ஆரத்தி எடுக்க முடியும்… இது ஹோட்டல்… உள்ளே வா என்றான்.

ஹோட்டலின் பிரம்மாண்டம் அவளை பயமுறுத்தியது.

என்ன பார்க்கிற… அழகா இருக்கா…இந்த ஹோட்டலை வாங்கிடுவோமா? கண்ணடித்து சிரித்தான்.

அவள் முறைத்து பார்க்க… சும்மா சொன்னேன்மா… பாவா அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லரா…

வரவேற்பில் சென்று ஏதோ பேசிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு மூன்றாவது தளத்திற்கு சென்றான்.

அறைக்கதைவை திறந்து உள்ளே அழைத்தான்.

என்னை ஏன் இங்கே கூட்டிட்டு வந்தீங்க? பயம் பிடித்துக்கொண்டது அவளுக்கு.

இது ஹனிமூன் சூட் தெரியுமா? அவன் வில்லங்கமாய் கண் சிமிட்ட அவளுக்கு நாடி நரம்பெல்லாம் ஆட்டம் கண்டது.

———-தொடரும் ————

இந்த கதை கொஞ்சம் தெலுங்கு மூவி மசாலா தூவி இருக்கும் அட்ஜஸ்ட் ப்ளீஸ். ஒரே மாதிரி எழுதினா ரொம்ப கனமா அழுத்தமா இருக்கும். கொஞ்சம் ஹீரோயிசம் தூக்கலா இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!