Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனின் தாலாட்டு இவள் 💜

அசுரனின் தாலாட்டு இவள் 💜 29



காலை கிளம்பிய வாசு மாலை நெருங்கும் வேளையில் தான் கேரளா போய் சேர்ந்தான்… அங்கு கவினின் நண்பன் அவனுக்காக காத்து இருந்தான்… அவனிடம் பேசி விட்டு சாவி வாங்கி கொண்டு மலை அடிவாரத்தில் இருக்கும் வீட்டை நோக்கி சென்றான்…
அங்கு மலை அடிவாரத்திற்கு செல்ல செல்ல அவன் மனம் லேசானது போல் இருந்தது…. உள்ளே சென்றவன் தான் கொண்டு வந்த பொருட்களை அறையில் வைத்தவன் வெளியில் வந்து நின்றான்… அந்த இடமே அவன் மனதுக்கு கொஞ்சம் நிம்மதியை தந்து இருந்தது…

அப்போது கவினின் நண்பன் ஒரு நடுத்தர வயதுடைய பெண்ணுடன் வந்தான்…. அவன் வாசுவிடம் “இந்த அக்கா இங்க கிராமத்துல தான் இருக்காங்க… கொஞ்சம் மலையில ஏறி போனா இவங்க இருக்க கிராமம் வந்துரும்… இவங்க தான் உங்களுக்கு சமைக்க வந்து இருக்காங்க… காலைல மதியம் டைமுக்கு சமைச்சிடுவாங்க… ஆனா நைட் சாப்பாடு மட்டும் ஆறு மணிக்குள்ள சமைச்சிட்டு கிளம்பிடுவாங்க… நைட் அங்க தனியா மேல ஏற முடியாது…. அதை மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ தம்பி” என்று கூறினான்….

அவனும் சரி என தலையசைத்து ஏற்று கொண்டான்… வாசு அந்த அக்காவிடம் “அக்கா நாளைல இருந்து வந்துருங்க க்கா… இப்போ கிளம்புங்க… இப்பயே ஆறு மணியாக போகுது… இன்னிக்கு எனக்கு எதுவும் வேண்டாம்” என அனுப்பிவிட்டவன் கவினின் நண்பனுக்கும் நன்றி கூறி அனுப்பி வைத்தான்…

சமையல் செய்ய வந்த பெண்ணும் வாசுவை திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்றார்… அவர் கிராமத்திற்கு சென்றதும் சைந்தவியின் வீட்டிற்கு தான் சென்றார்… அவள் மட்டும் இருப்பதை பார்த்தவர் குருவிடம் பேச வேண்டும் அவர் எங்கு என கேட்டார்…. அவளும் அவர் தலைவர் வீட்டிற்கு சென்றுள்ளார் என கூறினாள்… அந்த பெண்மணியும் சுவற்றில் இருந்த வாசு போட்டோவை ஒருமுறை பார்த்தவர் தலைவர் வீட்டிற்கு சென்றார்…



Advertisement

அங்கு ஊர் தலைவரும் குருவும் பேசி கொண்டு இருக்க இந்த பெண்மணி வேக வேகமாக வருவதை பார்த்தவர் “என்ன ஆச்சு விமலா ஏன் இப்படி வேகமா வர… டவுனுக்கு சமைக்க கூப்பிட்டாங்கல… அங்க எதோ பிரச்சனையா….” என்று அவர் வேகமாக வருவதை பார்த்து கொஞ்சம் பதட்டமாக கேட்டார்…

“ஐயா அது பிரச்சனை எல்லாம் இல்ல… அது எப்படி சொல்றது சைந்தவி பாப்பாவோட வீட்டுக்காரர் தான் அந்த வீட்டுக்கு வந்து இருக்கார்… முதல்ல பார்த்ததும் எனக்கு தெரியல.. ஆனா கொஞ்சம் உத்து பார்த்ததும் இவர் தான் தெரிஞ்சது… அது தான் குரு ஐயா கிட்ட சொல்ல வந்தேன்… நான் நல்லா பாத்தேன் ஐயா அது அந்த தம்பி தான்… தாடி வெச்சு இருக்காரு.. அதுனால தான் பார்த்ததும் எனக்கு தெரியல” என்று கூறி முடித்தார்…

அந்த ஊர் தலைவர் “விமலா நல்லா தெரியுமா அது ஐயாவோட மாப்பிளை தானா” என்று மீண்டும் கேட்டார்..

Advertisement

“ஆமா ஐயா எனக்கு நல்லா தெரியும் அது ஐயாவோட மாப்பிளளை தான்…. “என்று உறுதியாக கூறினார்…

Advertisement

“சரி விமலா இப்போதைக்கு சவி குட்டிக்கு தெரிய வேண்டாம்… அந்த தம்பி எத்தனை நாள் இருப்பாங்கனு தெரியுமா…” என்று கேட்டார்…

“ஐயா தம்பி இன்னும் பத்து நாளைக்கு இங்க தான் இருப்பாங்க…” என்று கூறினார்….

“சரி அப்டினா இன்னும் ஆறு நாள்ல எல்லை திருவிழா வருது… அப்போ நீ அந்த தம்பியை திருவிழாக்கு கூப்பிடு…. வரட்டும் ரெண்டு பேரும் பாத்துட்டு பேசிக்கட்டும் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பாத்து பேசிக்கிட்டா பிரச்சனை தீர்ந்துரும்….” என்று கூறினார்…

Advertisement

ஊர் தலைவரும் குரு சொல்வதை ஆமோதித்து “ஆமா விமலா தம்பி எங்க ஊருல திருவிழா ரொம்ப சக்திவாய்ந்த திருவிழா கண்டிப்பா நீங்க வாங்கனு கூப்பிடு.. அவர் மறுத்தாலும் கூப்பிட்டு வந்துரு….” என்று கூறினார்… விமலாவும் சரி என்று கூறிவிட்டு தன் வீட்டிற்கு சென்றார்…

அதன்பின் தினமும் வாசு தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று வீட்டை சுத்தம் செய்து அவனுக்கு சமைத்து வைத்து விட்டு வீடு திரும்புவார்… நடுவில் வாசு தன் ஜீப்பை எடுத்து கொண்டு சோலோ ட்ரிப் சென்று வந்தான்… அவளை மறந்து விட்டானா என்று கேட்டால் சத்தியமாக இல்லை…

அவன் நினைத்தது எல்லாம் இது தான் “அம்மு இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு… கண்டிப்பா நீ என்கிட்ட திரும்பி வந்துருவ.. அப்போ நாம கண்டிப்பா இந்த இடத்துக்கு எல்லாம் வருவோம்…”

இப்படியே ஐந்து நாட்கள் சென்று இருக்க விமலா வாசுவிடம் வந்து “தம்பி நாளைக்கு ஒரு நாள் வர முடியாது எங்க கிராமத்துல எல்லை திருவிழா… நீங்களும் கண்டிப்பா வாங்க தம்பி…” என்று அழைத்தார்…

அவன் வரவில்லை என்று மறுக்க அவரோ “தம்பி அது ரொம்ப சக்திவாய்ந்த அம்மன்… நீங்க நினைச்சது கண்டிப்பா நடக்கும்… கண்டிப்பா வாங்க தம்பி… நாளைக்கு காலைல நீங்க தயாரா இருங்க… என் தம்பி வந்து கூட்டிட்டு போவான்… நீங்க கூட ரெண்டு நாள் முன்னாடி பாத்திங்கல அவன் தான் வருவான்… கண்டிப்பா வாங்க தம்பி” என்று கூறி கிளம்பிவிட்டார்… அவனும் சென்று தான் வருவோமே என்று நினைத்து அடுத்த நாள் தயாராகிவிட்டான்….

விமலாவின் தம்பியும் அவனை அழைக்க வந்துவிட்டான்… கிராமம் அருகில் செல்ல செல்ல வாசுவின் இதயம் தடதடக்க ஆரம்பித்துவிட்டது… அனைவருக்கும் ஓரளவு வாசு தான் சைந்தவியின் கணவன் என தெரிந்து இருந்தது… நல்லபடியாக அவனை வரவேற்று உபசரித்தனர்….

திருவிழாவும் ஆரம்பித்தது… அது அந்த கிராமத்து எல்லையில் இருக்கும் எல்லையம்மன் திருவிழா… எல்லையம்மன் திருவிழா அந்த கிராமத்தில் பிரசித்தி பெற்றது… அந்த ஊரே அந்த ஒரு நாளுக்காக தான் காத்துகொண்டு இருப்பர்… அந்த அளவு சிறப்பாக செய்வர் அந்த திருவிழாவை…
ஊருக்கு வர வேண்டும் என்றால் எல்லையம்மனை தாண்டி தான் வர வேண்டும்… அந்த கோவிலை பார்க்கும் போதே வாசுவுக்கு ஒரு நம்பிக்கை வந்து இருந்தது… அந்த திருவிழா இரவு தான் கோலகமாக நடக்கும்…

சைந்தவிக்கும் உடம்பு சரியில்லாத காரணத்தால் காலை கோவில் வரவில்லை…. அவளுக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று தான் ஆசை… ஆனால் அவளால் தான் முடியவில்லை.. குரு தான் இரவு வா என்று அவளிடம் கூறிவிட்டார்… அவருக்கும் ஆசை தான் வாசுவும் சைந்தவியும் உடனடியாக பார்த்து பேச வேண்டும் என… ஆனால் சைந்தவிக்கு தான் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது… எனவே இரவு பார்த்துக்கொள்ளட்டும் என விட்டுவிட்டார்…

மாலையே கிளம்புகிறேன் என்று கூறியவனை இரவு பூஜை தான் மிகவும் சக்திமிக்கது இரவு இங்கயே தங்குங்கள் என்று கூறி சம்மதிக்க வைத்தனர்…

திருவிழாவில் கவினின் நண்பனும் இருந்தான்… அவன் தான் “தம்பி நானும் நைட் இங்க தான் தங்குவேன்… எல்லையம்மன் ரொம்ப சக்தி வாய்ந்தது… எது வேண்டுனாலும் கிடைக்கும்… கவின் சொன்னான்.. இந்த அம்மன் கிட்ட வேண்டுங்க… எல்லாமே கிடைக்கும்” என்று கூறினான்… அவனும் சரி என்று கூறிவிட்டான்…

இரவு பூஜையும் ஆரம்பமானது… நேரமாக ஆக அவனின் நெஞ்சம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது… அவன் பார்வையை மெல்லமாக சுழற்ற அவன் கண்ணில் விழுந்தது தேவதை போல் புடவையில் நடந்து வரும் தன் அம்மு தான்…

“அம்மு” என்று அவன் உதடு தானாக அசைந்தது… அவள் வர வர அனைவரின் பார்வையும் அவனை தான் பார்த்தது… அவன் யாரையும் பார்க்கவில்லை… அவளை நோக்கி செல்ல கவினின் நண்பன் அவனை பிடித்து “தம்பி இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் திருவிழா முடிஞ்சதும்… ரொம்ப ஆசையா இங்க இருக்க மக்கள் இதை செய்வாங்க.. ரெண்டு வருஷம் காத்து இருந்திங்க.. இன்னும் ரெண்டு மணி நேரம் மட்டும் தான்…” என்று கூறி அவனை கொஞ்சம் மறைவாக நிற்க வைத்தான்..

அவளுக்கு நெஞ்சம் எல்லாம் படபடவென அடித்து கொண்டது… இருந்தும் தன்னை திடப்படுத்தி கொண்டு பூஜை முடிந்ததும் சாமியை வணங்கி விட்டு வீட்டிற்கு சென்றாள்… குரு “பாப்பா நீ முன்னாடி போ… எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு….” என்று கிளம்ப சொல்லிவிட்டார்….

அவளும் கிளம்ப மனமே இன்றி வீட்டிற்கு சென்றாள்… அவள் வீட்டிற்கு சென்றதும் இதற்கு மேல் முடியாது என கவினின் நண்பனின் கையை எடுத்து விட்டு அவளை நோக்கி சென்றான்…. அவள் வீட்டிற்கு சென்று அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்தாள்… எங்கேயோ வெறித்து கொண்டு இருந்தவள் தன் மடியில் பாரம் ஏறியதை போல் இருக்க கீழே குனிந்து பார்த்தவள் தன் மடியில் தலை சாய்த்து இருக்கும் வாசுவை பார்த்து அதிர்ந்தாள்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!