Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 15

காலை எழும்போதே ஒரு வித பாரம் நெஞ்சில் , அவனோடு வந்த பிறகு அவன் அணைப்பில் அன்றி  உறங்கியதில்லை எழுந்ததும் இல்லை.

அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்பவன் , மீண்டும் வந்து அவளுடன் படுத்துக்கொள்வான் , அவள் எழும் நேரம் எப்பொழுதும் அவள் அருகில் இருப்பான்.

இன்று இல்லை , மீண்டும் மெத்தையில் சுருண்டு கொண்டவள் குளியலறை கதவு திறக்கும் சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்து பார்த்தாள் ஆவலாக .

ஆனால் வந்தது ரூபா அம்முவின் முகத்தை பார்த்து ரூபாவிற்க்கே கஷ்டமாக போய்விட்டது , யாராலும் ஒன்றும் செய்யா முடியாத சூழல்.



Advertisement

அவளை வேறு வேளைகளில் ஈடுபட வைக்க வேண்டும் முடிவு செய்தவள் “குட் மார்னிங்க்கா” என்க.

“ம்ம்ம்” என்றாள்.

“ரெடி ஆகுங்க அம்முக்கா , நாம கீழ போலாம்” என்க , மீண்டும் படுத்துவிட்டாள்.

Advertisement

சிறிது நேரம் சென்று வரலாம் என்று எண்ணிய ரூபா “சரி நீங்க அப்புறமா வாங்க , நா போய் கோலம்  போடுறேன்” என்று வெளியேறினாள்.

Advertisement

மனம் எல்லாம் எதோ சொல்ல தெரியாத ஒரு பாரம் , கண்ணீர்  நிற்காமல் வழிந்தோடியது , என்ன செய்ய என்று தெரியவில்லை , ஒரு வித பயம் சூழ்ந்தது .

தனக்கு யார் இவர்கள் , இங்கு தான் என்ன செய்ய வேண்டும் , இத்தனை நாள் அவன் இருந்தபோது சந்தோசம் மட்டுமே , மனம் நிறைந்த நிம்மதி.

உண்மையில் உறங்குவதோ , உண்பதோ எதுவும் அவளுக்கு தெரியவில்லை , அனைத்தும் அவளிடம் வந்து சேர்ந்தது , குழந்தையை போல கை அணைப்பிலே வைத்திருந்தான்.

Advertisement

இப்பொழுது எங்கோ கீழே இறக்கி விட்டு சென்ற போல , தன்விழிகள் சிறிது கலங்கினாலும் “அம்மு” என்று அனைத்துக் கொள்ளுவானே அந்த அணைப்பு  வேண்டும்  இப்பொழுது.

நித்தம் ஒரு முத்தம் வைப்பானே அந்த தித்திப்பு வேண்டும் இப்பொழுது,  அறையில் இருந்த அவனின் புகைப்படத்தை பார்த்து “புருஷ்” என்றாள் தொண்டை அடைக்க.

யாரிடம் சொல்லவேண்டும் என்றும் தெரியவில்லை சுருண்டு கொண்டாள் அங்கேயே.

நிழற் படம் போல ஏதோ நினைவுகள் ஓடுகிறது மூலையில்,  மழையும் தண்ணீர் சூழ்ந்த இடமும் , சில மனிதர்களின் தெளிவில்லா உருவமும் என்று , இறுதியில் தீ ஜுவாலை ஒன்று வானுக்கும் பூமிக்கும் நின்று எரிவதை போல.

தலை எல்லாம் பாறாங்கல்லை தூக்கி வைத்த போல வலித்தது, தலையை பிடித்துக் கொண்டு கட்டிலில் சுருண்டவளை பார்த்துக் கொண்டே வந்த ரூபா.

“அக்கா என்ன ஆச்சு அக்கா” என்க மெல்ல விழிகளை திறந்து பார்த்தாள்.

“ரூபா , அம்மு ரொம்ப தலைவலியால கஷ்டப்பட்டா இந்த மாத்திரையை  குடு , ரொம்ப யோசிக்கறதால தலை வலி அதிகம் ஆகும், கொஞ்சம் கேர்புல்லா பாத்துக்கணும்”  போவதற்கு முன் ரூபாவிடம் தெளிவாக சொல்லியிருந்தான் ஜெகன் .

மருந்தை கையில் எடுத்தாள் , அனால் வெறும் வயற்றில் எப்படி கொடுக்க வேகமாக கீழே சென்றவள்,  “அம்மா அம்முக்காவுக்கு ரொம்ப தலைவலி” என்க.

“என்னமா சொல்ற”  ,  “ஆமாமா ஞாபகம் வருது போல” என்றவுடன் மாதவிக்கு மிகுந்த சந்தோஷம்.

“ஆண்டவா சீக்கிரம் எல்லாம் சரி ஆயிடனும் , இனிமேலாவது ரெண்டு பேரும் நிம்மதியா இருக்கட்டும்” என்றவர்.

“சரி டி இப்போ என்ன பண்ணனும்”.

“தலைவலி வரும்போது குடுக்க மருந்து இருக்கு , ஆனா வெறும் வயித்துல எப்படி குடுக்க பால் மட்டுமாவது குடுத்துட்டு கொடுப்போம்” என்றாள் ரூபா .

“சரியா சொன்ன , நீ போ அம்முகூட இரு , நான் பால் எடுத்துட்டு வரேன்” என்றவர்.

காச்சியப்பாலில்  கொஞ்சம் இனிப்பு சேர்த்து மேலே எடுத்து சென்றார், அவளுக்கு பால் கொடுத்து மாத்திரையும் கொடுக்க மெல்ல மெல்ல ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள் அம்மு.

அத்தையிடமும் ரூபாவிடமும் பல முறை கேட்டுவிட்டான் ஜெகன், “அவளை கொஞ்சம் கவனமாக கையாள வேண்டும்  பழைய நினைவுகள் திரும்பும் நேரம் , நான் அவளை பார்த்துக்கொள்ள ஒரு நர்ஸ் ஏற்பாடு செய்கிறேன்” என்று.

இருவரும் மறுத்து விட்டார்கள் , பிரகாஷை பார்த்துக்கொள்ள இரண்டு பேரை பணியில் வைத்திருக்கிறான் .

உண்மையில் மாதவிக்கு அங்கே மேல்பார்வை வேலை மட்டுமே, குடும்பத்திற்கு சமைப்பார்,  அதும் காய்கறிகள் வெட்டிக்கொடுப்பது அசைவம் சுத்தம் செய்வது அனைத்தும் ஒரு அக்கா செய்துவிட இவர் அடுப்பில் நின்று பக்குவம் பார்த்து எடுப்பார் .

“என்னால முடியும் தம்பி வீட்டுக்கு சமைக்க கூடவா முடியாது , நான் பார்த்துக்கிறேன்” என்று கூறியும் அவன் மறுத்துவிட்டான்.

தங்களுக்காக இங்கேயே வந்து தங்கி பார்த்துக்கொள்கிறார்கள், தங்கள் மீது இருக்கும் அன்பில் தானே இதை செய்கிறார்கள், அவர்களுக்கு எந்த கஷ்டமும் இருக்க கூடாது என்று அனைத்திற்கும் ஆட்களை வைத்திருந்தான்.

மாமனின் வீட்டை பராமரிக்கவும் நம்பகமான ஆட்களை வைத்திருந்தான்,  இடையில் அவர்கள் வீட்டிற்கு சென்று வருவார்கள்.

அதனாலேயே அம்முவை தாங்களே பார்த்துக் கொள்கிறோம் அவளை பார்க்க யாரையும் வைக்க கூடாது என்று மாதவி திடமாக மறுத்துவிட்டார்.

கீழே ஹாலில் அமர்ந்திருந்த நீலவேணி அனைத்தையும் கேட்டார், கோபமாக சின்ன மருமகளை பார்க்க.

“என்ன அத்தை” என்றார் அவர்.

“இன்னும் என்ன ?? கேட்டியா , அவளுக்கு பழைய ஞாபம் வர போகுது , இன்னும் அவளுக்கு நீ மருந்து வாங்கிட்டு வரல , நீ போறியா நான் போகவா” என்றவரை என்ன செய்ய.

“நானே போறேன்” என்றவர்  மேலே ஜெகனின் அறைக்கு செல்ல, உறங்கும் அம்முவின் தலை கோதி அமர்ந்திருந்தார் மாதவி .

“அண்ணி எனக்கு கொஞ்சம் பொருள் வாங்கணும் , இங்க வந்ததுல இருந்து எதுமே வாங்கல , நான் தேனீ வரைக்கும் போயிட்டு வரேன், உங்களுக்கு ஏதும் வேணுமா” என்க.

“ஒன்னும் வேண்டாம் பூரணி , எப்படி போவ” என்றார் மாதவி.

“டாக்ஸி வர சொல்லிருக்கேன்” என்றவர்  “ரூபா அம்முக்கு எப்படி இந்த மன்த்திலி  விஷயங்கள் அதுக்கு ஏதும் வேணுமா” என்க.

“அத்தை அவங்களுக்கு மெடிசின் குடுத்து மூலைல பதிஞ்ச சில வருஷ நினைவுகளை அடக்கி வெச்சு இருக்காங்க அவ்ளோ தான் , மத்தபடி ஒரு பொண்ணா அவங்களுக்கு அதெல்லாம் தெரியும் “.

“சில விஷயங்கள் ஒரு தடவ சொன்னாலே அவங்க புரிஞ்சுகிட்டு பாலோ பண்ணிடுவாங்க , அதுகூட கொஞ்ச நாள் தான் நீங்க பாருங்க சீக்கிரமே அவங்களுக்கு  ஞாபகம் வந்துடும்” என்றாள் குதூகலமாக.

“அண்ணி அப்போ போயிட்டு வரேன்” என்ற பூரணி டாக்ஸி வந்ததும் தேனிக்கு புறப்பட்டார்.

அங்கு பெரிய ஒரு மருந்தகம் முன்பு இறங்கி கொண்டார் கூகுளில் தேடி வைத்திருந்த சில மருந்துகளை வாங்கிக்கொண்டவர் , தன்னுடைய மருந்து சீட்டை காண்பித்து தூக்க மாத்திரையும் வாங்கி கொண்டார்.

வெளியில் வந்து சிறிது தூரம் நடந்து அங்கிருந்த ஒரு ஹோட்டலில் சாப்பிட ஆர்டர் செய்து அமர்ந்துகொண்டார் , மனம் மிக மிக அமைதியாக இருப்பதாக பட்டது.

இரண்டு தினங்களாக இதே யோசனை ஒரு குற்றமும் செய்யாத இந்த பெண்ணை தன்னுடைய சுயநலத்திற்கு எதற்காக பயன்படுத்த வேண்டும்.

ஜெகனிடம் அல்லது பிரகாஷ் மாமாவிடம் சொன்னால் நிச்சயம் தங்களுக்கு உதவுவார்கள் , இல்லை என்றாலும் வேறு வழி யோசிக்கலாம் இது தவறு… ஒரு பெண்ணின் கண்ணீரில் தன் பிள்ளைகளின் வாழ்வு சிறக்காது .

எத்தனை வருட போராட்டத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் , அம்முவிற்கு நினைவு சீக்கிரமே வந்துவிடும், ஞாபகங்கள் கொஞ்சம் மங்கியிருக்கிறது அவ்வளவுதான்.

ஜெகனை பற்றிய அழியா நினைவுகள் தானே அவனிடம் அவளை அதிகம் ஒற்றவைத்திருக்கிறது , இன்று காலை கண்ட அவளின் கோலம் மனதை பிசைந்தது .

அவன் சென்று ஒரே நாளில் ஆளே சோர்ந்து விட்டாள் , அவனை பிரிந்து நான்கு வருடங்கள் எத்தனை துன்பங்களை கடந்து வந்திருப்பாள்.

மொத்தமாக அனைத்தும் நினைவு வரும் வேலை அவனின் மனைவியாக அவனுடன் இருப்பதை எண்ணி எத்தனை பூரிப்பு உண்டாகும் அவளுக்கு , அந்த சந்தோஷத்தை பார்க்க வேண்டும்.

இனியும் துன்பம் வேண்டாம் என்று எண்ணியவர் நன்றாக உண்டார் நான்கு நாட்களாக உணவே இறங்கவில்லை இந்த மனப் போராட்டத்தில்.

மனச்சாட்சியை கொஞ்சம் பேசவிட்டாலேபோதும் மனிதன் பல தவறுகளில் இருந்து தப்பித்து விடலாம்.

ரூபாவிற்கும் அம்முவிற்கும் தன்  மகளுக்கும் அழகான சுடிதார் எடுத்துக் கொண்டார் நிம்மதியாக வீடு வந்தார் பூரணி.

கூகுளில் பார்த்து சில விட்டமின் டேப்லெட் மட்டும் வாங்கிக்கொண்டார் , நல்ல வேலை நீலவேணிக்கு ஆங்கிலம் படிக்க தெரியாது.

என்றாலும் அணைத்து மாத்திரைகளையும் அந்த அட்டையில் இருந்து எடுத்து ஒரு கவரில் போட்டுக்கொண்டார்.

அவர் கேட்டால் “மற்றவர் கையில் மருந்து அட்டை கிடைத்தால்  பிரச்சனை அதனால் அதை எடுத்துவிட்டதாக” சொல்லி சம்மாளித்துவிடலாம் என்று முடிவு செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!