Skip to content
Post Views: 1,552
காதலுக்கு வேலி கட்டலாமா?..
20.01.2021
Advertisement
நேரம் மதியம் மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது..
Advertisement
Advertisement
காலையில் இருந்து ஒரு மணி வரை வெயில் நெருப்பாக கொளுத்தியது..
Advertisement
பூமிதாய் மீது இரக்கம் கொண்ட வருண பகவானோ தன்னால் முடிந்த அளவு சாந்தப்படுத்துவதற்காக மழையை பரிசாக அளித்தார்..
கொஞ்ச நேரமே ஆனாலும் நல்ல மழை தான்.. மழை பெய்து ஓய்ந்த பொழுது.
பூமி தாயின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி கொண்டிருந்த நேரம் அது
“ அப்பா, அப்பா அப்பா ஆஆஆஆ ப்ளீஸ் ப்ளீஸ் பா அடிக்காதீங்க பா. வலிக்குது. நான் எந்த தப்பும் செய்யலப்பா பிளீஸ் பா ஆஆஆஆ அப்பா, அம்மா சொல்லுமா நான் எதுவும் பண்ணலம்மா.. ” என்று 13 வயது தமிழ் தனது தந்தையை அடிக்க வேண்டாம் எனக் கூறி அழுது கதறிக் கொண்டிருந்தாள்..
ஆனால் சரவணனுக்குள் எந்த ஆவி புகுந்ததோ தெரியவில்லை அவரது கோபத்தை காட்ட வழி தெரியாமல் மகளை ஈவு இரக்கம் பார்காமல் அடித்தார்..
இன்று இரண்டு குடும்பம் நிலை குலைந்து போவதற்கு தன்மகள் காரணமாகிவிட்டாள். என்னும் கோபம் ஒரே பொண்ணு என பொத்தி பொத்தி ஆசையாக வளர்த்த அன்பு பாசத்தை அந்த கோபம் மறக்க வைத்தது..
கிட்டத்தட்ட 15 நிமிடமாக அவள் வாங்கிய அடி கொஞ்சம் இல்லை.. அவள் உடல் எல்லாம் தடித்து சிவந்து போய் இருந்தது..
அவர் கை வலித்து மகள் வலியில் துடிப்பதை பார்த்தும் சந்தோஷின் தாய் மகளையும் அவர் குடும்பத்தையும் பற்றி பேசியதை இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அந்த கோபம் இன்னும் அப்படியே இருக்க மீண்டும் அவளை அடிக்க கை ஓங்கினார்..
அப்பொழுதுதான் பஜாருக்கு பேத்தி காலுக்கு கொலுசு வாங்குவதற்காக சென்ற பேபியம்மா பஸ்ஸில் இருந்து இறங்கி சற்று தூரம் நடந்து வரும் பொழுது தெருவில் அடிபட்ட பேச்சை காதில் கேட்டவாறு வேகமாக அவரது வீட்டை நோக்கி வந்தார்..
அப்போதுதான் சரவணன் தன் மகளை மீண்டும் அடிக்க கையை ஓங்கிய நேரம் அது..
தூரத்திலேயே தன் பேத்தி நின்ற கோலத்தையும் மகனின் கோபத்தையும் பார்த்த பேபியம்மா வேகமாக அவர்களை நோக்கி அவர் வயதையும் மறந்து ஓடி வந்தார்..
“ அடேய் எடுபட்ட பயலே..! இனி ஒரு அடி என் புள்ள மேல பட்டுச்சு. இப்பவே உன் கையை ஒடிக்கிறேன் பாரு..
அந்த பச்சை மண்ணு பிறந்த நேரம் கிடந்த கிடையை பார்த்த உனக்கு எப்படி தான் அடிக்க மனசு வருது.. ஒவ்வொரு துளி பாலையும் சங்குல எடுத்து துளித்துளியா பருக்கினேன்.. அப்பறம் வளர வளர ஒவ்வொரு பருக்கை சாதத்தையும் மசிச்சு பார்த்து பார்த்து ஊட்டி பக்குவமா வளர்த்த புள்ள அது.. தங்கத்து உசுர காப்பாத்தி புடிச்சு வைக்க நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.. யாரோ என்னமோ பேசினா நீ என் புள்ள மேல கை வைப்பியா?.. நீ பெத்துட்டா உனக்கு யாரு அடிக்கிற உரிமையை கொடுத்தது. நீ பெத்தது மட்டும்தான். வளர்த்து ஆளாக்கினது எல்லாம் நான்தான்.. நான் மட்டும் அந்த நேரம் இருந்திருக்கணும் வந்தவ சிண்டு முடிய பிடிச்சு இழுத்து அடி வெளுத்துருப்பேன்..
இதுக்கு நான் உனக்கு என்ன செய்கிறேன் மட்டும் பார். பெத்த அப்பா அம்மான்னு என் புள்ள மேல உரிமை கொண்டாடிவிட்டு யாராவது வந்தீங்கன்னா ரெண்டு பேரையும் வகுந்திடுவேன் ..
அடியேய்.. பெத்தவளாடி நீ கல்நெஞ்சகாரி அவன் தான் கண் தெரியாத கோவத்துல முரட்டுத்தனமா புள்ளைய போட்டு அடிக்கிறான்னா குறுக்கால போய் என் தங்கத்தை இழுத்து விட்டு காப்பாத்த உனக்கு என்னடி நோவு.. நீயும் கல் மனசு படைத்தவ மாதிரி பார்த்துக்கிட்டே நிக்கிற.. அந்த பச்சை மண்ணு இந்த பெல்ட் அடி தாங்குமா?. இதே பெலிட் வாங்கி நான் சாத்துறேன் பாரு உங்களை.. ” என்று சொன்னது மட்டும் அல்லாமல் செயலில் காட்டினார்..
பேபி அம்மாக்கு வந்த கோபத்துக்கு அவர் தமிழ் பிறந்ததும் கையில் வாங்கியதில் இருந்து அவளை ஒவ்வொரு நொடியும் கண்ணை இமைக்காப்பது போல் காத்து அவள் உயிரை உடலில் தக்க வைத்து அவளை நடமாடவைத்து வளர்த்து அவள் உண்ணும் பொழுது கவனமாக அவர் ஒவ்வொரு சாதமாக ஊட்டி வளர்த்து ஆளாக்கிய தன் செல்ல பேத்திக்கு உடம்பெல்லாம் தடித்து வீங்கி இருப்பதை பார்த்து கண்மண் தெரியாத கோபத்தில் அவரது வயதையும் மீறி அனைத்து பலத்தையும் ஒன்று திரட்டி மகன் மருமகள் இருவருக்கும் அதே பெல்டால் அடித்து வெளுத்தார்..
இதை யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.. எப்படி சரவணன் கையில் இருந்து பெல்ட் வாங்கினார் அடித்தார் என்று அவர்களாலும் உணர முடியவில்லை.. சிறிது நேரத்தில் இந்த சம்பவம் நடந்துவிட்டது.. தமிழ் அடி வாங்கிய போது பார்த்திருந்த அனைவரும் அதையும் பார்த்தனர்.. சரவணன் எதுவும் பேசாமல் தாய் அடிக்கும் போது வாங்கிக்கொண்டு உடனடியாக அங்கிருந்து சென்று விட்டார்..
தன் தாய் தன்னை அடித்ததெல்லாம் விசயம் இல்லை.. தன் மகளை தானும் பிறர் சொல் கேட்டு அடித்து காயப்படுத்தி விட்டோமே எனும் குற்ற உணர்வு மனதிற்குள் ஆழமாக பதிந்து தான் விட்டது.. அவள் ‘ அப்பா அடிக்க வேண்டாம். ’ என ஒவ்வொரு முறையும் மகள் அழும் போதும் அதை காதால் கேட்டும் தன்மகள் படும் கஷ்டத்தை பார்த்தும் தன்னை கட்டுப்படுத்த முடியாது போன கோபத்தின் மீதும் கோபம் வந்து..
ஒரு சொல் பொறுக்க முடியாத மனிதன் சரவணன்.. தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர்.. சரவணன் தச்சு மில் என்றால் தெரியாத ஆட்கள் இருக்க மாட்டார்கள்.. பஜாரின் மையபகுதியில் அவரது பெரிய தச்சு மில் இருக்கிறது ..
வீட்டுக்கு தேவையான அனைத்து மர பொருட்களும் செய்து கொடுப்பார்..
உழைப்புக்கு அஞ்சாதவர்.. சிறு வயதில் தந்தையை இழந்தாலும் தன் சுய முயற்சியால் தந்தை விட்டுச் சென்ற சில உபகரணங்களை வைத்து தானே தனக்கு தெரிந்த அளவு சிறு சிறு விளையாட்டு பொருள்களை மரத்தினால் செய்து தொழில் பழகினார்.. இப்பொழுது அந்த இடத்தில் சரவணன் போன்று யாரும் வேலை சுத்தம் இல்லை எனும் அளவிற்கு பெயர் பெற்றிருந்தார்..
திருமணம் மற்றும் வீடு குடி போவதோ என்ன நிகழ்வாக இருந்தாலும் வீட்டுக்கு தேவையான பொருட்களை மூன்று மாதத்திற்கு முன்பே அவரிடம் முன்பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்களுக்கு உறிய நேரத்தில் அவர்கள் கேட்ட வடிவத்தில் அவர்களுக்கு பிடித்தமானதாக செய்து கொடுக்க முடியும்..
முன்பதிவு செய்யாதவர்கள் உடனடியாக வேண்டும் என குறுகிய காலத்திற்குள் கேட்டால் எவ்வளவு லாபம் வரும் வேலையாக இருந்தாலும் செய்து கொடுக்க முன்வர மாட்டார்.. அவரது கோட்பாடு அவரை ஒருபோதும் மீற மாட்டார்..
அவரைப் பற்றி தெரிந்தவர்கள் அவர் வேலை திறமையை பார்த்து முன்கூட்டியே அவரது வீட்டுக்கும் தொழில் தளங்களுக்கு தேவையான தளபாடங்களை உரிய முறையில் பாதி பணத்தை கொடுத்து பதிவு செய்து விடுவார்கள்.. அதன் பின்பு அதைப் பற்றிய கவலையே இல்லாமல் அவர்கள் இருக்க வேண்டியதுதான்.. சில நேரங்களில் அவர்களே மறந்தாலும் இவரே ஒருநாள் முன்பு அனைத்தையும் அவர்கள் குறிப்பிட்டு கொடுத்த அட்ரஸுக்கு அனுப்பி வைத்துவிட்டு தொலைபேசியின் மூலம் அது சரி பார்த்துக்கொண்டு மிகுதி பணத்தை வாங்கிக் கொள்வார்..
தச்சு மில்லை தவிர பத்து ஏக்கர் வயல் காணி, தோட்டக்காணியும் அவர் பெயரில் இருக்கிறது..
பேபி அம்மா ஆறுமுகம் தம்பதியருக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள்..
மூத்தவர் சரவணன், இளையவர் இந்திரன்..
பேபியம்மாவுக்கு பெண் பிள்ளைகள் என்றால் கொள்ளை பிரியம்..
21 வயதிலேயே சரவணனுக்கு அண்ணன் மகளான கோமதியை திருமணம் செய்து வைத்துவிட்டார்..
சரவணனுக்கும் கோமதிக்கும் முதல் பிறந்ததும் ஆண் வாரிசு தான்.. பெண் பிள்ளையை காணும் அவர் ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ என்று மிகவும் பயந்துவிட்டார்..
கோமதிக்கு அப்பொழுது கர்ப்பப்பை ரொம்ப பலவீனமாக இருந்த காரணத்தால் அடுத்த குழந்தை வேண்டாம் என முடிவு செய்திருந்தார்கள்..
பேபியம்மாவுக்கு மிகவும் மன வருத்தமாகிவிட்டது.. தனக்கு ஒரு பெண் பிள்ளை வேண்டும் என்று ஏக்கம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று மிகவும் கவலை கொண்டார்..
அப்போதும் பேபியம்மா சும்மா இருக்கவில்லை. நாட்டு மருத்துவ முறையில் மருமகளின் கர்ப்பப்பை பலப்படுவதற்கு மருந்து கொடுத்து கோமதிக்கு ஆரோக்கியமான உணவுகளையும் கொடுத்து நன்றாக பார்த்துக் கொண்டார்..
செழியன் பிறந்து தவழ்ந்து நடந்து என குழந்தை பருவத்தில் அவரது கண் முன் சுற்றி திரிந்தாலும் தூக்கி கொஞ்சுவாரே தவிர வாஞ்சையோடு கட்டி அணைத்து உணவு கொடுத்து வளர்த்து ஆளாக்கவில்லை அவனை..
செழியன் அதிகமாக கோமதியின் தாயிடம் தான் இருப்பான்..
அதோ இதோ என்று நான்கு வருடங்கள் முடிந்ததும் தான் கடவுளுக்கும் பேபியம்மாவின் ஆசை, கனவு நிறைவேற்ற நேரம் வந்ததோ தெரியவில்லை.. மீண்டும் கோமதி கருத்தரித்தார்..
பேபியம்மா வைக்காத நேத்திக்கடன் இல்லை.. அவர் வேண்டுதலை கடவுள் வரமாக கொடுத்தார்.. அழகான பூக்குவியலாக ஏழாம் மாதத்தில் அவசரப்பட்டு தாயின் வயிற்றிலிருந்து வெளியேறினாள் கதையின் நாயகி..
பிறக்கும் போது வெறும் 1.5 kg தான் அவளது நிறை.. பேபியம்மாவுக்கு பெண் குழந்தை பிறந்ததில் மிக்க மகிழ்ச்சி தான்.. ஆனால் குழந்தை நிறை குறைந்து குறைமாத்தில் பிறந்ததால் பிள்ளை பிழைக்குமா என மீண்டும் காலை கொண்டார்.. குழந்தை பிழைக்க வேண்டும் ஆரோக்கியமாக வளர வேண்டும் என மீண்டும் இறைவனை தஞ்சம் அடைந்து நேத்திகடனை வைத்தார்..
குழந்தையை இன்குபேட்டரில் தான் ஒரு மாத காலமாக மருத்துவமனை வைத்திருந்து ஓரளவுக்கு சங்கின் மூலமாக அவளுக்கு பால் கொடுக்கலாம் எனும் நிலை வந்து பின் தான் பேபியம்மாவின் கையில் கொடுத்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்..
தமிழை கையில் வாங்கிய நாளிலிருந்து இதோ இன்று அடி வாங்கி நிற்கும் வரை அவர் அவளை பாதுகாக்க பட்ட பாடு கண் முன் படமாக ஓடி மறைந்தது பேபியம்மாவிற்கு..
தான் அடி வாங்கியதைப் பற்றிக் கூட கவலைப்படாமல் மகளின் உடலில் கண்ட காயத்திற்கு உடனடியாக கை மருந்து செய்து பேபியம்மா இருக்கும் சிறிய வீட்டுக்கு எடுத்துச் சென்றார் கோமதி..
ஆம் பேபியம்மா தனி வீட்டில் தான் இருக்கிறார்..
அவர் தற்பொழுது இருக்கும் அந்த சிறிய வீடு தான் முன்பு அவர்கள் வாழ்ந்த இடம் அதாவது அவர் கணவனோடு திருமணம் முடித்து இங்கே வந்து அந்த பூமியில் அந்த இடத்தில் மண்ணால் ஆன சிறிய வீடு கட்டி சந்தோசமாக மகிழ்ந்து வாழ்ந்த இடம்..
சரவணன் தலைபட்டு தான் அவர்கள் இப்பொழுது இருக்கும் அந்த பெரிய வீட்டை அவர் கட்டினார்.. எவ்வளவு தான் வசதி வாய்ப்புகள் வந்தாலும் தன் கணவனுடன் வாழ்ந்து அந்த இடத்தை விட்டு அவர்களது பெரிய வீட்டிற்கு கூட பேபி அம்மா தங்குவதற்கு செல்வதில்லை..
முக்கியமான எந்த சொந்தக்காரர் திருமணம் மற்றும் விசேஷ விடுகளுக்கு சென்றாலும் எங்கும் இரவு தங்க மாட்டார்.. அவரது அந்த சிறிய வீட்டில் படுத்து உறங்கினால் தான் அவரால் நிம்மதியாக உறங்க முடியும்..
சமையல் எல்லாம் ஒன்றுதான்..
மருமகளின் கையில் இருந்த மருந்தை முறைப்போடு வாங்கி கொண்டு பேத்தியின் உடைய கலைந்து பார்த்தார்.. முதுகு,கை,கால், தொடை என அனைத்து இடங்களிலும் பெல்ட் பட்டு தடித்து சிவந்து போய் இருந்தது..
மயிலிறகால் மெதுவாக பேத்திக்கு வலிக்காத படி அந்த மருந்தை எடுத்து காயப்பட்ட இடத்தில் தடவிக் கொண்டே மகனை வசை வாடிக் கொண்டிருந்தார்..
“ அடியே என்னதாண்டி நடந்து தொலைச்சிது சொல்லு.. இன்னைக்கு என் தங்கத்துக்கு கொலுசு வாங்கி கொடுக்க பஜார் வரை அப்பதானே போயிருந்தேன்.. அதுக்குள்ள என் புள்ளையை போட்டு இந்த பாடு படுத்தி வச்சிருக்கீங்க இனி ஒரு நிமிஷம் கூட என் பிள்ளை உங்க கையில ஒப்படைக்க மாட்டேன்.. இனி இந்த கட்டைக்கு உசுரு போற வரைக்கும் என் தங்கம் என்கிட்ட தான் இருப்பா..
தங்கம் கால்ல போட்டு இருக்க கொலுசு பழசா போயிடுச்சு நிறைய முத்து வைத்த புது கொலுசு வாங்கலாம்னு போய்ட்டு வர்ற கொஞ்ச நேரத்துக்குள்ள அந்த எடுபட்ட பைய என்ன வேலை பார்த்து வச்சிருக்கான்.. ” என்று மகனை மீண்டும் திட்ட ஆரம்பிக்கும் பொழுது
“ போதும் விடுங்க அத்தை.. உங்க மகனை பத்தி உங்களுக்கு தெரியும் தானே.. ஒரு சொல் தாங்க மாட்டார்.. அவர் மேல எனக்கும் கோவம் தான் அந்த கோபத்தை நான் எப்படி காட்டுறேன்னு மட்டும் பாருங்க..
மகன்கள், மருமகள், பேரன் என அனைவரையும் விட பல படிகள் அதிகம் தமிழ் பேபியம்மாக்கு..
அதனால் அவர் மகனை திட்டினார்.. ஒரு நேரம் இல்லாமல் அவர் மனம் நொந்து திட்டும் பொழுது அது பழித்து விடுமோ என கோமதியும் பயந்துவிட்டார்..
“ இனிமே அவர எதுவும் திட்டாதீங்க அத்த. இந்த காயம் மருந்து போட்டா ரெண்டு நாளில் ஆறிடும் ஆனா பெத்த நீங்க மனசு நொந்து திட்டி அதனால் அவருக்கு ஏதும் ஆகிட்டா அது நம்மளை தானே பாதிக்கும்.. இதுதான் அவர் கடைசியும் முதலும் நம்ம பாப்பா மேல கை வைக்கிறது.. இனி நீங்களும் நானும் அவரை கை வைக்க விட்ருவோமா?.. இதோட விடுங்க அத்தை பிளீஸ் எனக்காக .. ” என்று கெஞ்சினார் கோமதி..
மருமகள் சொன்னதற்காக மகனை திட்டாமல் விட்டுவிட்டு மருமகளிடம் பேத்திக்காக பால் எடுத்து வரும் படி அனுப்பினார்..
பேத்தியை மடியில் இருத்திக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பால் கொடுக்க தமிழும் சமத்தாக அதை குடித்து முடித்தாள்..
தமிழ் மிகவும் மெலிந்த தேகம் கொண்டவள் பலமாக காத்தடித்தால் கீழே விழுந்து விடுவாள் அப்படியான உடல் அமைப்பு..
அங்க வளைவுகள் அதற்கேற்ற மாதிரி கச்சிதமாகவே இருந்தது..
கறுப்பு என்றும் சொல்ல முடியது பொதுநிறம் அவள்..
கடந்த மாதம் தான் 13 வயது முடிந்து 14 வயது ஆரம்பித்து இருக்கிறது.. இன்னும் அவள் வயதுக்கு வரவில்லை.. அதுவே பேபியம்மாவின் மனதில் மிகப்பெரும் கவலையாக ஆகிவிட்டது..
பெண்ணாக பிறந்தநாள் வயதுக்கு வந்தே ஆக வேண்டும். அது ஒவ்வொரு பெண்ணின் பரம்பரை மற்றும் உடல் அமைப்பே நேரமாக வயதுக்கு வருவதற்கும் தாமதம் ஆவதற்கும் காரணமாகும்..
தமிழ் என்னும் பூ எப்பொழுது மலருமோ?..
error: Content is protected !!
அருமை சகோதரி 👌🏻👌🏻👌🏻💖