Skip to content
Post Views: 3,933

கருப்பன் 2
மலர்விழி மயிலை அணைத்து அழுது கொண்டிருக்க, அவளை தன் அணைப்பில் வைத்துக் கொண்டே,
Advertisement
“அடியே கூறு கெட்டவளே! கல்யாணம் பிடிக்கலைன்னா அதுக்காக இப்படி முத்தத்துல தொங்கிட்டா எல்லாம் முடிஞ்சு போயிடுமா?
Advertisement
Advertisement
கல்யாணம் பிடிக்கலைன்னா அதை நிறுத்துறதுக்கு என்ன வழியோ அதைத் தேடுவாளா, இப்படி கூறுகெட்ட தனமா போய் சுருக்கு வச்சுக்க போற,
நீ சுருக்கு வச்சுக்கிட்டு செத்தா இங்கன யாரும் உனக்காக வருஷக்கணக்குல உக்காந்து ஒப்பாரி வைக்க போறது இல்ல. ஒரு நாள் அழுவாய்ங்க ரெண்டு நாள் அழுவாய்ங்க மூணாவது நாள் அவிங்க அவிங்க பொழப்ப பாத்துட்டு போயிருவாய்ங்க.
Advertisement
நீதான் பொறந்தும் ஒரு புண்ணியமும் இல்லாமல் செத்து போய் தொலைவ, நீ செத்துப் போறதுல எனக்கும் ஒன்னும் பிரச்சனை இல்ல. எனக்கு நீ ஒருத்தி தானே ஃபிரிண்டு ஊரு காட்டுல எத்தனையோ சிறிக்கிக இருக்காளுக” என்று கூறி அவளை தன்னிடம் இருந்து பிரித்து தள்ளிவிட்டால் மயில்.
“ஏய் லூசு அப்படியெல்லாம் சொல்லாதடி” என்று கூறி மேலும் அழுது விசும்பினால் மலர்.
“இதுக்கு அப்புறம் நீ இந்த மாதிரி பண்ண யோசிச்சேன்னு தெரிஞ்சா கூட, நீ ஏன் சிரமப்பட்டு சாகனும் நானே வந்து உன்னை தொங்க விட்டுட்டு போயிருவேன்” என்று அவள் மிரட்டி கூற,
“சாரிடி இனிமே நான் அப்படி பண்ண மாட்டேன்” என்று கூறி அழுதவளை,
“இப்போ உனக்கு என்ன, இந்த கல்யாணம் பிடிக்கல, இந்த கல்யாணம் உனக்கு வேண்டாம் அவ்வளவுதானே!” என்று மயில் கேட்க,
“அதைத்தானடி நான் இத்தனை நாளா சொல்லிட்டு இருக்கேன். எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் எனக்கு சுத்தமா பிடிக்கல” என்று அழுத்தமாக கூறினால் மலர்விழி.
“அதான் ஏன்? அந்தப் பையனுக்கு என்ன குறை, அந்த வீட்டுக்கு என்ன குறை ஏன் பிடிக்கலைன்னு சொல்ற?” என்று மயில் கேட்க,
“அந்தப் பையன் அழகுக்கும் வசதிக்கும் ஒன்னும் குறை இல்ல தான், ஆனா அவன் கல்யாண பேசுன முறை எனக்கு பிடிக்கல, எங்க அப்பா கிட்ட கம்பெனி விஷயமா டீலிங் பேசுறேன்னு வந்தவன் கம்பெனி விஷயமா மட்டும் பேசாம,
நீ உன் பொண்ண கட்டி கொடு நான் உன் கம்பெனி ப்ராஜெக்ட்டுக்கு உதவி பண்ணி உன்ன உச்சத்துக்கு கொண்டுட்டு போறேன்னு சொல்லி இருக்கான். எங்க அப்பா என்ன சொல்லியும் கேக்கல, கடைசியில வேற வழி இல்லாம எங்க அப்பா ஒத்துக்கிட்டாரு.
பணத்த மட்டுமே முன்னிறுத்தி சேர்ற இந்த கல்யாணம் எப்படிடி ஆரோக்கியமான அன்பான உறவா இருக்கும்? எனக்கு காசு பணம் எதுவும் ஒரு விஷயமே இல்ல, கல்யாணம் அப்படிங்கறது உன்னதமான ஒரு உறவு, உணர்வு அதை போயி இப்படி பணத்துக்காக ஒருத்தன் கிட்ட இலக்கனுமான்னு இருக்கு.
நான் இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு எவ்வளவு சொல்லியும் கேட்கவே மாட்டேங்கிறாங்க மயிலு. எனக்கு வேற வழி தெரியாம தான் நான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்” என்று அழுதவளை அமைதியாக அழுத்தமாக பார்த்து இருந்த மயில் சில கணம் யோசித்தவள்,
“வேணும்னா நாம இப்படி பண்ணலாமா?” என்று கேட்டாள்.
“எப்படி பண்ணலாமா?”என்று மலரும் ஆர்வமாக கேட்டாள்.
“சரி நீ போய் ஒரு பேக்ல உன்னுடைய டிரஸ் ஒரு நாலஞ்சு எடுத்து வச்சுக்கோ” என்று மயில் கூறினாள்.
அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் “சரி டி, ஆனா எதுக்கு?”
“உனக்கு கல்யாணம் நிக்கணுமா! வேண்டாமா?”என்று கேட்க,
‘ஆம்’ என்பது போல் தலையசைத்தால் மலர்.
“அப்ப நான் சொன்னதை செய் போ” என்று கூறிய மயில் எழுந்து அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள்.
மயில் கூறியதை போலவே ஒரு பேக்கில் தனக்கு வேண்டிய உடைகளை எடுத்து வைத்து தானும் சிம்பிளான ஒரு உடைக்கு மாறிய மலர்,
“நான் ரெடி ஆயிட்டேன் டி” என்று கூறினாள்.
“எல்லாமே எடுத்துட்டியா?
“ஆமாண்டி”
“சரி உன்னோட சர்டிபிகேட் எல்லாம் எடுத்து வச்சுட்டியா?” என்று கேட்க,
“அய்யய்யோ அதை மறந்துட்டேனே!” என்றவர் தன்னுடைய சர்டிபிகேட் அனைத்தையும் பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டாள்.
“மணி அதிகாலை 4 என காட்டவே பொறுமையாக அந்த அறையில் இருந்து வெளியில் வந்தவள் எட்டிப் பார்க்க, அங்கே அந்த கூடம் முழுவதும் இருளாக இருந்தது.
தன் நெஞ்சில் கைவைத்தவள் “அப்பாடா பெருசுக எல்லாம் இன்னும் தூங்கிட்டு தான் இருக்குதுங்க, சரி வாடி கிளம்பிடலாம்” என்றவள் மலரின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.
அந்த வீட்டின் வாசலில் இருந்த செக்யூரிட்டி நன்றாக குறட்டை விட்டு கொண்டு உறங்குவதை பார்த்தவள் “ம்ம்கூம்… இவன மாதிரியான செக்யூரிட்டி வீட்ல இருந்தா எதுக்குமே பயப்பட வேண்டாம். திருட்டுப் பயலும் வீட்டுக்குள்ள வரலாம், இந்த மாதிரி திருட்டுத்தனமான வேலைகளும் சுலூவா செய்யலாம்” என்று பேசிக்கொண்டே அங்கு யார் கண்ணிலும் படாமல் அந்த வீட்டிலிருந்து வெகுதூரம் மலரை அழைத்துக் கொண்டு வந்திருந்தால் மயில்.
மயில் திருமணத்தை நிறுத்துகிறேன் என்னுடன் வா என்றதும் மலரும் எந்த கேள்வியும் கேட்காமல் அவளுடன் வீட்டிலிருந்து கிளம்பி விட்டாள்.
ஆனால் அவள் மனம் முழுவதும் ‘இவ எங்க கூட்டிட்டு போறா?’ என்ற கேள்வி அவளுக்குள் இல்லாமல் இல்லை.
மலரும் மயிலும் ஒரு ஆட்டோவை பிடித்து சென்னை பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சென்னை மாநகராட்சியில் இருந்து மதுரைக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர்.
தனது இருக்கையில் அமர்ந்த பிறகு ஒரு பெருமூச்சுனை இழுத்து விட்ட மயில் சுற்றும் முற்றும் யாரேனும் தங்களை பார்க்கிறார்களா? என்று பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க,
அவளைக் கேள்வியாக பார்த்த மலரோ “ஏய் மயிலு இப்ப நம்ம எங்கடி போறோம்?” என்று கேட்டாள்.
“எங்க போறோம்னா, என்ன கேள்வி என் ஊருக்குத்தான்” என்றால் மயில்.
“என்னது உங்க ஊருக்கா! என்னடி சொல்ற! உங்க ஊருக்கு எப்படி நான் வர முடியும்? என்று மலர் அதிர்ந்து கேட்க,
“ஏன் வர முடியாது, இப்ப மட்டும் நான் உன்னை இங்கேயே விட்டுட்டு போனேன்னா உங்க அப்பாவும் அந்த பணக்கார பரதேசியும் எப்படியாவது உன்னை கண்டுபிடிச்சிடுவாங்க பிறவு அவனுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க.
ஆனா இதுவே நீ என்கூட ஊருக்கு வந்துட்டேனா உன்னை அவ்வளவா யாருக்கும் தெரிஞ்சுக்காது. நீ பத்தரமா இருப்ப அதனாலதான் உன்னை எங்க ஊரு கூட்டிட்டு போறேன்.
“ஆனா மயிலு இது சரியா வருமாடி” என்று மலர் தயங்கிக் கொண்டே கேட்க,
“நானே முதல்முறையா ஒரு கல்யாணத்தை நிறுத்தி கல்யாண பொண்ண கூட்டிட்டு போற அட்வென்ச்சர கையில் எடுத்து பயந்து பயந்து பண்ணிட்டு இருக்கேன். பேசாம வாடி உன் பாதுகாப்புக்கு உனக்கு நான் பொறுப்பு” என்று மயில் கூறவும்
தனக்கும் தற்சமயம் வேறு வழி இல்லையே என்று நினைத்த மலர் அமைதியாகி விட பஸ் அங்கிருந்து கிளம்பி மதுரை நோக்கி புறப்பட்டது.
இங்கே அந்த ஊரே வாயில் கை வைத்துக் கொண்டு நடந்த விஷயங்களை பார்த்துக் கொண்டும் பேசி கொண்டும் இருக்க,
அந்த நிகழ்விற்கு காரணமான கருப்பனை பெற்ற பெண்மணியோ ஒரு சிறிய கூடம், ஒரு படுக்கை அறை, சிறிய கிட்சன் உள்ள வீட்டின் உள்ளே, தனது மகன் வருவானா? மாட்டானா என்று குழப்பத்தில்,
அவனுக்கு என்று மண்ணடுப்பில் தண்ணீர் ஊத்தாமல் பாலை காய்ச்சி டீயை போட்டு இறக்கி வைத்தவர் அதன் பின் அடுப்பில் உலை வைத்து அதில் அரிசியை களைந்து போட்டுக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அந்த வீட்டின் வாசலில் வந்து நின்ற ஒரு பெண்மணியோ வாசலில் நின்ற அவரை அழைத்தார்,
“ஏய் பொண்ணு தாயி! பொண்ணு தாயி! உள்ள என்னடி பண்ணிட்டு இருக்குறவ?” என்று கேட்டார்.
வெளியில் இருந்து வந்த குரல் கேட்டு விறகை அடுப்பில் இருந்து வெளியே இழுத்து வைத்து தீயின் வேகத்தை குறைத்து வைத்த பொன்னுத்தாயி அந்த வீட்டின் உள்ளிருந்து வெளியில் வந்தவர்,
வெளியில் நின்றிருந்த ராக்குவை பார்த்த பொண்ணு தாயோ “என்னடி ராக்கு காலங்காத்தால வந்து என் வீட்டு வாசலில் நின்று கத்திக்கிட்டு இருக்கிறவ?” என்று கேட்க,
“அடியே பொண்ணு உனக்கு விஷயமே தெரியாதா?” என்று கேட்டார் ராக்கு.
“என்னடி விஷயம், சொன்னாதானே தெரியும். ஒன்னும் சொல்லாம இன்ன புதுசா வந்த விஷயம் தெரியுமான்னு கேக்குற பொசை கேட்டவளே!” என்றால் பொண்ணு தாயி.
“அங்க உன் மவன் கவுன்சிலர் சக்காளத்தி வீட்டு வாசல்ல இருந்த வக்கை புல்ல கொளுத்தி விட்டுட்டாண்டி” என்றார்.
“என்னடி சொல்ற!!?” என்று தனது மார்பில் கை வைத்து அதிர்ச்சியில் விழிவிறிய கேட்டார் பொண்ணுத்தாயி.
“ஆமாண்டி உன் மவன்காரன் தான்
கொளுத்தி உட்டுபுட்டானாம். ஊருக்குள்ள அதான் பேசிகிட்டு திரியுறாளுங்க.
“ஏய் ராக்கு என்னடி சொல்ற! என் மவன் கதிரா செஞ்சயான்”
“ஆமாண்டி உன் மவன் தான் கருப்பன் பண்ணது சரிதானே! அந்த கவுன்சிலர் பய ஊர்க்காரய்ங்க காசு பூராம் கொள்ளை அடிச்சான்ல அவனுக்கு எல்லாம் அப்படித்தான் பண்ணனும்.
ஏன் இன்னும் போனா அவனையே கூட எரிச்சிருந்தாலும் தப்பு இல்லேன்குறேன். பாவி பய கொஞ்ச நஞ்சமா ஊர் ஜனம் காசு அடிச்சு தின்னு இருப்பியான். அதுக்கு தான் தண்டனை கொடுத்து இருக்கியான் கருப்பன்”
“என்னடி சொல்ற! என்ன தண்டனை கொடுத்தான்?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டார் பொன்னுத்தாயி.
“ஆமாண்டி பொன்னுத்தாயி அந்த கவுன்சிலரோட வலது கை கட்டை விரலை வெட்டி போட்டுட்டானாம் உன் மவன்” என்றால் ராக்கு.
“அடியாத்தி!! என்னடி சொல்ற என் மவனா அப்படி பண்ணான்?” என்று மார்பில் கை பதித்தவர் கேட்டார் பொண்ணுத்தாயி.
“ஆமாண்டி பொண்ணு தாயி உன் மவன் தான் இதெல்லாம் பண்ணானாம். ஊருக்குள்ள தீயணைக்கிற வண்டி வந்து இருக்கு, தீய அமத்திட்டு இருக்காய்ங்க.
இனிமேதான் போலீஸ் எல்லாம் வரும் போல” என்று ராக்கு வந்து விஷயத்தை கூறிவிட்டு சென்று விட,
“இந்த பையன் சும்மா இல்லாம ஊரு விவகாரத்தை தூக்கி மடியில போட்டுக்கிட்டு திரியிறானே!” என்று நினைத்தவர், தனது வீட்டிற்குள் நுழைந்து கொதித்துக் கொண்டிருந்த உலையை அப்படியே இறக்கி கீழே வைத்தவர் கவுன்சிலர் வீட்டை நோக்கி பயணித்தார்.
முத்து போட்டுக் கொடுத்த வர டீயை ஒரு சிப் குடித்த கருப்பன் “இதெல்லாம் என்னய்யா டீயி,
வர டீன்னா எப்படி இருக்கணும் தெரியுமா?
இந்த வர டீய குழுதாடியில ஊத்துனா கூட மாடு குடிச்சுபுட்டு செத்துப் போயிடும். இதே மாதிரி இன்னொரு தடவை நீ எனக்கு வர டீ போட்டு கொடுத்தேன்னு வையி,
வக்கை புல்ல கொழுத்துன மாதிரி உன்னையும் உன் கடையவும் கொளுத்தி புடுவேன் பாத்து சுதானம் இருந்துக்க” என்று கருப்பன் கூறவே,
“ஐயா கருப்பா உனக்கு புண்ணியமா போகட்டும். இதுக்கு அப்புறம் என் ஆத்தா கிட்ட கேட்டு எப்படி வர டீ போடணும்னு கத்துக்கிட்டு வந்து நல்லா போட்டு தரேன்ப்பா,
தப்பி தவறி கூட என் கடையில் கைவச்சுடாத சாமி, இதை நம்பி தான் என் பொழப்பே ஓடிட்டு இருக்கு” என்று கருப்பன் முன்பு கையெடுத்து கும்பிட்டான் முத்து.
சரியாக அந்த நேரம் கருப்பன் தோளில் ஒரு அடியை வைத்துவிட்டு அவனின் அருகில் வந்து அமர்ந்தான் ஒரு ஆண்மகன். கருப்பனுக்கு நிகரானவன்.
அருகில் அமர்ந்தவன் தனது கையை உதறிக் கொண்டிருக்க, அதனை பார்த்த கருப்பனோ, “தேவையா இது பேசாம வந்தமா சூ** மூடிட்டு இவன் போட்டு தற்ற விஷத்தை குடிச்சிட்டு போனமான்னு இல்லாம உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை!” என்று கருப்பன் கேட்க,
“நீ சொல்றதும் சரிதாண்டா மச்சான், ஏண்டா எப்படிடா!, உடம்பை இப்படி வளர்த்து வச்சிருக்க லேசா தட்டறதுக்கே இந்த வழி வலிக்குது” என்று மேலும் தனது கையை உதறிக் கொண்டே கூறினான் கருப்பனின் ஆருயிர் நண்பன் தர்மன்.
கருப்பன் வேட்டை தொடரும்…
கருப்பனின் காரிகையவள் 💝
உங்களுடைய கருத்துக்கள் எனக்கு மிக முக்கியம் நண்பர்களே😊 கமெண்ட்ஸ் ப்ளீஸ் 🙏🏻😊
error: Content is protected !!
மயில் ொன்ன அறிவுரை மிக அருமை..
அந்த கல்யான மாப்புள்ளை குறித்து மலர் ேசிய அனைத்தும் மிக அருமை….
Tea kadai kaara annan koduththa counter super…
Karuppan alapparai mass..
Daruman entry super..
Thank you so much அக்கா 🥰
Kathir super super super avanuku நல்ல frnd… Mayil super ah idea panni frnd ah kutitu vandhuta pakalm inimay enna nadakum 😍😍😍😍😍😍😍😍
Thank you so much 🥰🙏🏻🙏🏻🫶🏻