அத்தியாயம் 12
அத்தியாயம் 12
” என்னம்மா சொல்ற.. அவ அப்படியாக் கேட்டா..” என அதிர்ச்சியாக கேட்டார்.. ராஜாங்கம்.
Advertisement
” ஆமாண்ணே.. இத்தனை வருஷமா அந்த திருட்டுச்சிறுக்கி நம்மள நல்லா ஏமாத்திருக்கா.. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு கமுக்கமா நடந்திருக்கா.. அந்த ரூபாலி கழுதைக்கும் எல்லாம் தெரியும் போலயிருக்கு.. அதுனால தான் அவள நம்மகிட்ட தனியா விடாம கூடவே இருந்திருக்கா.. என புலம்பித்தள்ளியவருக்கு சிற்பிகா கேட்ட கேள்வியும் அப்பொழுது அவள் முகத்தில் தெரிந்த கோபமுமே மீண்டும் மீண்டும் அவர் கண்களில் வந்து போனது…
அபிராமி சிற்பிகாவின் மனதை கலைத்து.. இருவருக்கும் சண்டை மூட்டிவிடும் எண்ணத்தில்.. வார்த்தைகளைக் கொட்ட.. அவற்றில் கோபம் கொண்ட சிற்பிகா.. ” எனக்கு ஒரு சந்தேகம்.. ஊர்க்கூடி பெரியவங்க மத்தியில இவரக்கட்டிக்கிட்டதால உங்க குடும்பம் மானம் போகுமா.. என்ன.. இல்லை 17 வயசுல 55 வயசு கிழவனுக்கு ஒரு ராத்திரி என்னைய வித்திங்களே அப்போ உங்க குடும்ப மானம் என்னாச்சு.. இல்லை ஒரு மாசத்துக்கு முன்னாடி அஞ்சு கோடிக்கு ஆறு மாசத்துக்கு என்னைய மூனு பேர்க்கிட்ட வித்திங்களே.. அப்போ எல்லாம் உங்க குடும்ப மானம் போகாதா.. என விழி சிவக்க இத்தனை வருட கோபக்கனலையும் முகத்தில் தேக்கி அவள் கேட்டதும்.. அபிராமி உறைந்து விட்டார்..
Advertisement
Advertisement
அபிராமி.. ராஜாங்கத்தின் மறுபதிப்பு.. வெளியில் அனைவரிடமும் வெள்ளந்தி.. அமைதியான பாசமான பெண்மணி என பெயரெடுத்தவரின்.. உள்ளுக்குள் எல்லாம் வக்கிரமும் பணத்தாசையும் தான் நிறைந்திருந்தது..
தனது சகோதரிக்கு கிடைத்த வாழ்வு போல் தனக்கும் கிடைக்கும் என அவள் எதிர்பார்க்க.. அவ்வளவு எளிதில் அவளுக்கு வரன் கிடைக்கவில்லை.. கடைசியில் இருதய நோயாளிதான் அவளுக்கு மாப்பிள்ளையாக அமைந்தான்…
Advertisement
” இப்போதைக்கு இவன கல்யாணம் பண்ணிக்கோ அபிராமி.. கொஞ்ச நாள்ல இவன் செத்துட்டான்னா.. அவன் சொத்தும் உனக்கும் கிடைக்கும்.. வேறொரு பணக்கார மாப்பிள்ளையா பார்த்து உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சுடுறேன்.. ” என ராஜாங்கம் கூற அபிராமியும் சம்மதித்தாள்..
வேண்டா வெறுப்பாய் வாழ்க்கையை அவள் ஆரம்பிக்க.. அவனோ அவளை தங்க தட்டில் வைத்து தாங்கினான்.. அவர்கள் எண்ணப்படி அவன் ஒருமாதத்திலே இறந்துவிட.. அடுத்து அவன் பெற்றோருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து சிறிது மாதங்களில் அவர்களையும் பரலோகம் அனுப்பி வைத்தார்கள்.. அடுத்த ஒருவருடத்தில் துர்கா இறக்க.. சகோதரியின் இடத்திற்க்கு வந்துவிட்டாள்..
சிற்பிகாவிடத்தில் பாசமாக நடித்து அவளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள நினைத்தார்.. ஆனால் சிற்பிகாவினால் ஏனோ முதலிலிருந்தே அவருடன் ஒன்றமுடியவில்லை.. அதையும் தனக்கு சாதகப்படுத்திக் கொண்டு மற்றவர் முன்னால் பாவமாக நடிப்பார்..
சிற்பிகாவின் பதினேழாம் வயதில் ஒரு அரங்கேற்றத்தில் அவளைக் கண்டு சபலம் கொண்ட அமைச்சர்.. சிற்பிகாவை அடைய நினைத்தார்.. முதலில் அவள் பெரிய இடத்துப்பெண் என தயங்கியவர்… ராஜாங்கத்தையும் அவன் பண ஆசையையும் அறிந்துகொண்டு.. அவனிடம் அச்சிறு பூவை சுகிப்பதற்கு ஓர் இரவிற்காக பேரம் பேசினான்…
ராஜாங்கம் முதலில் ரொம்பவே தயங்கினார்.. அது பாசத்தினால் வந்த தயக்கம் அல்ல.. மாட்டிக்கொண்டால் என்னாவது என்ற தயக்கமே.. சிற்பிகா இதற்கு முதலில் சம்மதிப்பாளா என நிறையவே யோசித்தவர்… அவரின் நாற்பது லட்சம் என்ற தொகையில் மொத்தமாக வீழ்ந்துவிட்டார்..
ராஜாங்கம் அபிராமியிடம் மினிஸ்டரின் எண்ணத்தை கூறியதும்.. அவர் அதிகம் யோசிக்கவில்லை.. சிறிது நேரத்திலேயே சரியென்று விட்டார்..
சிற்பிகா.. ஏற்கனவே தாயின் இறப்பால் தனக்குள் உழன்று.. இப்பொழுது தான் கொஞ்சம் மீண்டிருந்தாள்.. ஆனால் இவர்கள் செய்யும் செயலால்.. தன்னைச்சுற்றி உள்ள உறவுகளின் உண்மையான முகத்தை அறிந்து மேலும் தனக்குள் ஒடுங்கினாள்..
லிங்கேஸ்வரன் ஊரில் இல்லாத வேளை.. இரவு சிற்பிகாவிற்கு மயக்க மருந்து கலந்த பாலை அருந்தச்செய்தவர்.. அவள் மயங்கியதை உறுதி செய்த பிறகே அவளை மினிஸ்டரின் கெஸ்ட் ஹௌஸிற்கு அழைத்துச் சென்றார்.. ஆனால் போன சில மணிநேரத்திலேயே மினிஸ்டர் இறந்துவிட்டார் என்று செய்தியுடன் முகம் வெளிறி வந்த ராஜாங்கத்தைப் பார்த்து.. இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என நினைத்து அதனை அப்படியே விட்டுவிட்டார்கள்..
ஆனால் அன்றிலிருந்து சிற்பிகா அவர்களிடத்திலிருந்து மேலும் ஒதுங்கியது.. அநேக நேரம் வீட்டில் உணவருந்தாமல் இருந்தது.. என அப்போது யோசிக்காததை எல்லாம் இப்பொழுது யோசிக்க ஆரம்பித்து.. தூக்கத்தை தொலைத்து அமர்ந்திருந்தனர்..
***********************************************
தொழில் முறை உறவுகள், பிரபல சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் என அந்த மண்டபமே பெரும் பணக்காரர்களால் நிறைந்திருந்தது… அதிலும் அபயின் உடன்படித்தவர்கள் தொழில்முறை நண்பர்கலென சில வெளிநாட்டவர்களும் வருகை தந்திருந்தனர்…
அந்த மண்டபத்தின் நுழைவாயில் முதல் கடைக்கோடி வரை ஒவ்வொரு இடத்திலும் பணத்தின் செழுமை மிளிர்ந்தது.. தேவலோகம் போல் ஜொலித்த அம்மண்டபத்தின் மேடையில் தேவக்கண்ணிகை போல் சிற்பிக்காவும்.. யட்சன் போல அபயசிம்ஹாவும் பார்ப்போர் விழிகளை நிறைத்தனர்..
ஒவ்வொருவராய் மேடையேரி தங்கள் வாழ்த்துக்களை மணமக்களிடம் தெரிவித்தனர்.. அபய்யை கட்டியணைத்து கைகுலுக்கியவர்கள்.. அவ்வாறே சிற்பிகாவை நெருங்கும் பொழுது.. அவள் ஓர் மென் சிரிப்புடன் கரம் குவித்தாள்.. அதைக்கண்ட அபய்க்கு கோபத்திற்கு பதில் திருப்தியும் கர்வமும் உண்டானது.. ஆனால் அதனை தன் முகத்தில் காண்பிக்காது.. வருபவரையெல்லாம் அவளுக்கு அறிமுகப்படித்துக் கொண்டிருந்தான்..
ராஜாங்கமும் அபிராமி நீரஜாவும்.. பொறாமையும் வெறுப்பும் சூழ்ந்த விழிகளால் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர்.. சிற்பிகாவிற்கு அனைத்தும் தெரியும் என்றவுடனே.. அபிராமிக்கு வயிற்றில் சொல்ல முடியா பயப்பந்து உருள ஆரம்பித்துவிட்டது.. அப்பொழுது ராஜாங்கமும் அபய் தன்னை கடத்தியது அடித்தது பற்றி கூறி மேலும் அவள் வயிற்றில் புளியை கரைத்தார்..
காலையில் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என இரவு முழுதும் இவர்கள் பயந்து.. பொட்டுத்தூக்கமின்றி விழித்திருந்தனர்.. ஆனால் அவர்கள் பயந்ததற்கு மாறாக.. சிற்பிகா எப்பொழுதும் போல் இவர்களை கண்டுகொள்ளாமல் இருக்க.. ராஜாங்கமும் அபிராமியும் குழப்பத்திலும்.. எப்பொழுது என்ன வெடிக்குமோ என்ற பயத்தினிலும் உலாவிக்கொண்டிருக்கின்றனர்..
ரிஷப்ஷன் முடிவதற்கு நள்ளிரவாக.. மிகவும் சோர்ந்து போயி கட்டினில் வீழ்ந்தாள் சிற்பிகா… அவளின் ஒவ்வொரு அணுவும் ஓய்விற்கு கெஞ்ச.. தன்னவனையும் காலையில் அவன் இட்ட கட்டளைகளையும் மறந்து.. அவள் விழி உறக்கத்தை தழுவியது.
சிறிது நேரத்தில் தனதறைக்கு வந்த அபய் மெத்தையின் குறுக்குவாட்டில் உடை நழுவி அலங்கோலமாய் படுத்திருந்தவளை உச்சி முதல் பாதம் வரை பார்த்தவன்.. ஏசியின் அளவை அதிகரித்தான்.. அறை சில நொடிகளிலே குளிர்ச்சியாகியது.. ஆழ்ந்த உறக்கத்திலும் குளிரை உணர்ந்த பெண்ணவள் உடலைக்குறுக்க.. அதனை சலனமில்லாமல் பார்த்தவன் ஓர் ஜாடி நீர் முழுவதையும் அவள் மேல் கொட்டினான்..
அதில் பதறியடித்து எழுந்தவள்.. குளிரில் நடுங்கிய உடலைக் குறுக்கிக்கொண்டு.. தன்னெதிரே விழிகளில் மட்டும் கோபத்தை தேக்கி.. முகத்தில் எவ்வித உணர்வும் இல்லாமல் நின்றிருந்தவனை பார்த்து.. ஒன்றுமறியா பிள்ளை போல் மலங்க மலங்க விழித்தாள்.. ஆனால் அதைக்கண்டு சிறிதும் இரக்கம்கொள்ளாதவன்.. ” காலைல சொன்னதையெல்லாம் மறந்துட்ட போல என நிறுத்தி நிதானமாக அவன் கேட்டதும்.. தன் தவறு புரிந்து.. செய்வதறியாது விழித்தவளுக்கு காலையில் நடந்ததெல்லாம் கண்முன்னே வந்தது..
***********************************************
முற்றும் துறந்த துறவி போல்.. ஆடை துறந்து பிறந்த மேனியுடன்.. அங்கங்கள் உரச.. காற்று தன்னை தாண்டி கூட அவளை தீண்டாக்கூடாது என்ற பிடிவாதத்துடன்.. உறக்கத்திலும் சிற்பிகாவை தன் ஆளுகைக்குள் பொத்திவைத்திருந்தான்.. அபயசிம்ஹா..
இரவின் களியாட்டாங்களால்.. பெண்ணவளின் ஒவ்வொரு அணுவும் வலியிலும் சுகத்திலும் துடித்துக் கொண்டிருந்தது.. அதற்கேற்றார் போல் இமைகளும் பிரிவதற்கு சண்டித்தனம் செய்ய.. மிகவும் சிரமப்பட்டு விழிகளை திறந்தாள்.. சிற்பிகா..
அபயின் வெற்று மார்பில் அவள் முகம் புதைந்திருக்க.. அபயின் வலிமை மிகுந்த கரங்கள் அவளை தனக்குள் பதியவைப்பது போல் இருக்கமாக அனைத்திருந்தது.. ஆடையில்லா மேனியையும் தன் நிலையையும் கண்ட பெண்ணவள் நாணம் மேலோங்க.. மெல்ல அவனிடமிருந்து விலக முயன்றாள்.. ஆனால் பலன் தான் இல்லை..
அவள் அசைவினிலே உறக்கம் கலைந்த அபய்.. அவள் அசைவினால் ஏற்பட்ட முன்னழகு உரசலில் புதியதொரு சுகம் அனுபவித்தவன்.. விழி திறந்து.. தன்னை இம்சித்த முன்னழகு மொக்குகளுக்கு தண்டனை வழங்க ஆரம்பித்தான்…
செவ்வரளி போல் நாணிச்சிவந்த பெண்ணவள்.. டைம் ஆகிடுச்சுங்க கீழே எல்லாரும் நம்மளுக்காக காத்திட்ருப்பாங்க என்றவளின் பலவீனமான மறுப்பையெல்லாம் அந்த ஆறடி கிரேக்க சிலை நொடியில் தகர்த்து தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டான்..
ஒருவழியாக அவன் விட்டதும்… கட்டிலின் கீழ் இருந்த தன் புடவையை எடுத்து போர்வை போல் சுற்றிக்கொண்டவள்.. குளியலறை செல்ல முற்பட அவன் தடுத்தான்..
அவள் தன்னவன் முகம் காணாது.. ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சுங்க.. விடுங்க என வெட்கத்துடன் சிணுங்க.. பெண்மையின் வெட்கத்தை புதுமையாக பார்த்தவன்.. ” ஹ்ம்ம் குளி.. ஆனா என்கூட என்றதும்.. அவள் மேனியின் ஒவ்வொரு இடமும் குறுகுறுக்க மறுப்பாக தலையசைத்தாள்..
அவள் மறுப்பில் அந்நேரம் வரை இலகியிருந்த அவன் முகம் கடினம் கொண்டது.. சிற்பிகாவின் வெட்கத்தை புரிந்துகொள்ளாமல் அவள் தன்னை மறுப்பதாய் நினைத்து.. அவள் கன்னத்தை அழுத்தி பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் ” என்ன புதுசா முரண்டு பிடிக்கிற.. ஒரு நைட்டுலயே நான் உன் காலடியில விழுந்துட்டேன்னு நினைப்பா.. எனக்கு இது ஒன்னும் புதுசு கிடையாது என வார்த்தையை கங்குகளாய் அவள் மீதுக்கொட்ட.. துடிதுடித்து அவனை பார்த்தாள்.. சிற்பியின் மனவலி அவள் விழியில் தெரிய.. அதனை சட்டை செய்யாதவன்.. ” உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன் இனிமேல் எனக்கு எல்லாம் நீதான் பார்க்கனும்.. என்கூட தான் குளிக்கனும்.. சாப்பிடனும்.. தூங்கணும் அண்ட் நான் ஆபீஸ் போற வரைக்கும் என்னோட வேலையெல்லாம் செய்துக்கிட்டு என்கூட தான் இருக்கணும் புரியுதா என அவள் கன்னத்தை அழுத்த.. இப்பொழுது அவள் மனம் தன்னவனின் வார்த்தைகளால் குளுகுளுவென சில்லிட்டிருந்தது..
ஜலக்கீரிடையை தவிர்த்து மத்ததெல்லாம்.. அபய் சொல்லாமலே அவளே செய்திருப்பாள்.. இதுப்புரியாது அவன் அவளை மிரட்ட.. அதை சட்டை செய்யாது செல்லகுட்டி புஜ்ஜுக்குட்டி என அவனையே பார்வையால் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்… சிற்பிகா.
ஆனால் அபயசிம்ஹாவோ பெண்ணவளின் பார்வை புரியாது.. அவளின் விழியையே பார்க்க.. அது ஆழ்கடல் போல் அவனை உள்ளிழுக்க தயாராக இருந்தது.. அவனும் அந்த சுழலுக்குள் சிக்கி உள்ளே மூழ்கும் நொடியில் சுதாரித்தவன் அவள் பார்வை வீரியம் தாங்காது தலையை குலுக்கி.. தன்நிலை அடைந்து அவளைத்தூக்கி தோளில் போட்டுக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்..
பெண்ணவள் தன் வருத்தம் மறைந்து.. காதலோடு அவனுக்கு ஒத்துழைத்தாள்.. அடுத்து அவனுக்கு தலைத்துவட்டி.. சட்டையிட்டு கோட்டெல்லாம் போட்டுவிட்டாள்.. இவற்றையெல்லாம் அவளே மனநிறைவோடு காதலாக செய்ய… அபய்தான் முதன் முதல் ஓர் பெண்ணின் பார்வை மாற்றம் அறியாது அமர்ந்திருந்தான்…
********************************************
சிற்பிகாவிற்கு தான் செய்த தவறு புரிய.. ” சாரிங்க நான் அசதியில படுத்துட்டேன் இருங்க உங்களுக்கு துணி எடுத்துட்டு வரேன்.. என நடுங்கியவாறு அங்கிருந்து நகரப்பார்க்க அவளைத்தடுத்தவன்.. ஏசியின் அளவைக் குறைத்து.. அவளை வெப்பமாக்கும் வேலையில் இறங்கினான்.. சிற்பிகாவும் அணைத்தும் மறந்து அவனோடு ஒன்றினாள்.. அவளை வதைப்பவனும் அவன்தான்.. அதற்க்கு மருந்தாக அமைவதும் அவன்தான்…
