Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தேவை... பாவை பார்வை...

தேவை… பாவை பார்வை – 1

தேவை… பாவை பார்வை – 1

“ம்மா… சாப்பாடு பண்ணிடீங்களா?…” என்று அறையிலிருந்து வெளியே வந்தாள், மதுரவாணி.

“இதோ முடிஞ்சது வாணி… இன்னும் நேரமிருக்குது தானே?….” என்று சமையல் செய்துக் கொண்டே வினவினார், அவளின் அன்னை பத்மாவதி.

“இன்னைக்கு புது ஹெட், எங்க ஆபீஸ்ல ஜாயின் பண்ணுறாங்க… அதான் முதல் நாள் வரும் போதே லேட்டா போனா நல்லாருக்காதுனு தான், கொஞ்சம் டிராபிக் முன்னாடி போலாம்னு பாத்தேன் ம்மா…”



Advertisement

“சரி வாணி… சாம்பார் தாளிச்சிட்டேன்னா வேலை முடிஞ்சிடுச்சி… உக்காரு, தோசை ஊத்துறேன்…”

“நானே ஊத்துறேன்… நீ சாம்பாரை தாளி ம்மா…”

“வேணாம், நான் இந்தா ஊத்திட்டேன்… நீ எடுத்து போய்ட்டு சாப்பிடு…”

Advertisement

“சரி…” என்று சொல்லிக்கொண்டே சாப்பிட அமர்ந்தாள்.

Advertisement

ஒரு வழியாக உணவை முடித்து விட்டு, கையில் மதியச் சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு, அவள் வேலைச் செய்யும், மென்பொருள் நிறுவனத்திற்கு புறப்படும் முன், “ம்மா… நான் கிளம்புறேன்… நீங்க பார்த்து இருங்க… எதுனாலும் எனக்கு போன் போடுங்க…” என்று எப்பொழுதும் சொல்லும் வார்த்தையை கூறி வெளியே செல்ல முனைகையில்,

அவளின் அம்மா, “வாணி…” என்று தயக்கத்துடன் அவளை அழைக்க,

“என்னம்மா…” என்றாள். சற்று சூடாக,

Advertisement

“அது… அது தான்… நான் நேத்து ராத்திரி உங்கிட்ட கேட்டேனே, ஊருக்கு போறது பத்தி, நீ ஒண்ணுமே சொல்லலையே…”

“ஒன்னும் சொல்லலைனா?… உங்களை போக வேணாம்னு சொல்லுறேன்… ஏன் உங்களுக்கு தெரியாதா என்ன?…”

“இல்ல வாணி… நான் போய்ட்டு, ஓரெட்டு பார்த்துட்டு வரேன்…”

“வேணாம்னு சொல்லுறேன்… நீங்க மறுபடியும் போய்ட்டு வரேன்னு சொன்னா என்ன அர்த்தம்…”

“அங்க போகணும்னு அர்த்தம்…” என்றார் திடமாக,

“அந்த ஊருக்கு போக வேண்டிய அவசியமில்லை… அங்க வேணாம்னு சொல்லித்தான் இங்க வந்திருக்கோம்… இவ்வளோ நாள் இல்லாம இப்போ என்ன புதுசா கிளம்புறேன்னு நிக்குறீங்க…”

“ஒரு வருஷம் கிட்ட ஆகப்போகுது இங்க வந்து, அதான் போனும்னு தோணுது… அதுக்கு என்ன பண்ணனும் சொல்லு இப்போ?…”

“நமக்கு நம்ம மட்டும் தான், அதுனால நீங்க ஒன்னும் பண்ணாம, இங்கயே இருந்தா ரொம்ப சந்தோசம்… போதுமா?…”

“என்ன நீ…” என்று என்னவோ கூற வர,

“ம்மா… நான் இந்த டிராபிக்ல ஆபீஸ் போயிட்டு சேர ஒருமணி நேரமாகிடும்… வரேன்…” என்று அவர் பேசுவதற்கு, இடம் கொடுக்காமல் வெளியே சென்றாள்.

போகும் அவளை பார்த்துக் கொண்டே, “இவளோட வாழ்க்கையை, நான் போயி சேர்ரதுக்குள்ள ஒரு வழியை காமிச்சிக்குடுத்துடு ஆண்டவா…” என்று நின்ற இடத்திலேயே அவரின் வேண்டுதலை எப்போதும் போல வைத்தார்.

– – – – –

டிராபிக்கில் முட்டி மோதி, தனது அலுவலகத்திற்கு பத்து நிமிடம், பின் தங்கியே வந்து சேர்ந்து அவளின் இருக்கையில் அமர,

அவளை பார்த்த, அவளின் நண்பி ரேகாவோ, “என்னடி டிராபிக் ஆஹ்?…”

“அதே தான்… கொஞ்ச சீக்கரம் வரலாம்னு நினைச்சாலும், இந்த டிராபிக்ல அது முடியவே முடியாது போல…”

“பாரு… நான் எப்படி சரியான நேரத்துக்கு வந்துட்டேன்…” என்று பந்தாவாக சொல்ல,

“எனக்கு தான் தெரியுமே… எப்படியும் நீ இன்னைக்கு சீக்கரம் வந்துடுவேன்னு…”

“பின்ன… புது லீட் வராங்க, யாருனு பாக்கணும்ல…”

“வந்தாச்சா என்ன?…”

“அதுலாம் சரியான நேரத்துக்கு வந்துட்டார்… செமயா இருக்கார் பாக்குறதுக்கு… எனக்கு தெரிஞ்சி கல்யாணம் ஆகிருக்குறதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மினு தான் நினைக்குறேன்… பட் மனுஷன் ரொம்ப ஹாண்ட்சமா இருக்கறதுனால கமிட்டேட் ஆஹ் இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு…”

“எப்படி இருந்தா நமக்கென்ன…”

“அதானே… உனக்கு ஒண்ணுமில்லை, ஆனா… எனக்கு இருக்கே…”

“என்ன இருக்கு?…”

“உன் வீட்டுக்கார் வெளிநாட்டில் இருக்கார்… எனக்கு அப்படி ஏதும் இல்லையே… அதுனால நான் இவரை என் க்ரஷ் லிஸ்ட்ல சேத்துக்கலாம்னு இருக்கேன்…”

இவர்கள் பேசுவதை பார்த்தவாறே வந்த விமல், “ஹலோ லேடீஸ்… என்ன காலையிலேயே டிஸ்கஷன் போய்ட்டு இருக்கு…”

ரேகா, “அதுவா புது லீட் பத்தி தான்…”

“அதுக்குள்ளவே வந்துட்டாரா?…”

“அதுலாம் டான்னு வந்துட்டார்… அவருக்கு கீழ தான், இப்போ கிடைச்சிருக்க புது ப்ராஜெக்ட் பண்ணனும்…”

மது, “ஓஹ்… அப்படியா… எனக்கு புதுசா வேணாம்… நான் இந்த ப்ராஜெக்ட்லேயே இருக்குறேன்…”

ரேகா, “ஏன் மது?… இப்படி சொல்லுற?”

நீயேன் அவங்க டிசைட் பண்றதுக்குள்ள முடிவு பண்ணுற?… உன் நேம் அந்த ப்ரொஜெக்ட்ல இருந்தா, நோ சொல்லாத சொல்லிட்டேன் என்றான், விமல். 

“ஹ்ம் பாக்கலாம்…”

“பாக்கலாம் இல்ல… இப்போ நீ இருக்குற ப்ராஜெக்ட்ல இருக்க வேணாம்…”

ரேகா, “ஏன்டா விமல் அப்படி சொல்லுற?… நானும் அதுல தானே இருக்கேன்…”

“அதுலாம் அப்படித்தான்… என்ன மது அப்படிதானே?…”

அவனை உனக்கும் தெரியுமா என்பதுபோல் மது பார்க்க,

“என்னடி சொல்லுறான் இவன்?… நீயும் ஒன்னும் சொல்லாம பாக்குற… ரெண்டு பேருல யாராச்சும் சொன்னாத்தானே எனக்கு புரியும்…”

“என்ன சொல்லணும் இப்போ உனக்கு?… எவனை பார்த்தாலும் அவனை க்ரஷ்னு சொல்லுவ… வேற என்ன தெரியும், புரியும் உனக்கு…” என்று காட்டமாக சொல்ல,

ரேகா பதில் சொல்லவர்ரதுக்குள், மது அவனை கண்டிப்புடன், “என்ன விமல்?… அமைதியா பேசு… சாரி சொல்லு அவகிட்ட…” என்றாள்.

அவன் ஒன்றும் சொல்லாமல், அவனின்  இருக்கையில் சென்று அமர்ந்தான்.

ரேகாவோ பாவமாக மதுவை பார்த்து, “நான் எல்லார்கிட்டயும் அப்படிதான் சொல்றேன்னா மது…”

“ஹேய்… விடு ரேகா… நீ சும்மா ஜாலிக்குதான் எங்ககிட்ட சொல்லுற… எல்லார்கிட்டையுமா சொல்லுவ இப்படி… அவன் எதோ கோவத்துல சொல்லிட்டான்…”

“என்னமோ போ மது… என்னை கடுப்பேத்திட்டான்… அவனுக்கு இருக்கு…”

“ஹா ஹா… அவ்வளோதான் அவனை வச்சி செஞ்சிடலாம்…”

“ஏன் மது, நம்ம லீட் மதன் சரியில்லையா?…”

“என்னனு தெரியலடி, இப்போ கொஞ்ச நாளா அவன் என்கிட்ட ரொம்ப அட்வான்டேஜ் எடுக்குற மாறி இருக்கு… ஒருவேளை எனக்கு தான் அப்படி தோணுதான்னு யோசிச்சி விட்டுட்டேன்… இப்போ விமல் சொல்லவும் தான், அது உண்மைன்னு தெரியுது…”

“அப்போ நீ இந்த புது ப்ராஜெக்ட்போயிடு, அவன் சொல்லுற போல…”

“யோசிக்குறேன்… புதுசுனா அதுக்கு நிறையா, திரும்ப ரெஃபர் பண்ணுறப்போல இருக்கும்… அந்த ப்ராஜெக்ட்குள்ள செட் ஆகுறதுக்கு டைம் எடுக்குமேனு பாக்குறேன்…”

“ஹே… இதுலாம் ஒரு விஷயமா, அதுலாம் நீ பண்ணிடுவ…”

“சரி… நான் மெயில் செக் பண்ணுறேன்… என்னமோ அனுப்பி இருக்கான் மதன்…”

“இல்லனா கம்ப்ளயின் பண்ணிடு மது அவனை…”

“பாக்கும்… வேற வழி இல்லனா பண்ணிடவேண்டியது தான்…”

– – – – –

“வரீங்களா கஃபேக்கு … பிரேக் டைம்…” என்று அவர்களிடம் வந்தான் விமல்.

“டேய் விம்பார்… என்னைய திட்டுனல்ல… உன்ட பேச மாட்டேன் போடா…”

“பேசமாட்டேனு சொல்லிட்டு பேசுற…” என்றான் கிண்டலாக,

“உன்னைய…” என்று எழுந்து அவனின் மண்டையில் கொட்ட,

“எரும… என் மண்டையே அமிங்கிடுச்சி…” என்று தலையை தேய்க்க,

“சரி சரி… வாங்க போவோம்…” என்று முன்னே சென்றாள் மது.

இவர்கள் மூவரும் சென்று ஒரு டேபிளில் அமர,ரேகா விமலிடம் “டேய்… நீயே எல்லாத்துக்கும் ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வர, இதுதான் உனக்கு பனிஷ்மெண்ட்…”

“அப்படியே ஆகட்டும்…” என்று சொல்லி அவர்களுக்கு என்ன வேணும் என்று வாங்கி கொடுத்து உண்டனர்.

விமல், “எங்க புது லீட் கண்ணுலயே காணும்… நானும் பாக்கலாம்னு பாக்குறேன்…”

“எனக்கு தெரியல விமல்… நான் பாக்கல… இவ தான் சொன்னா, வந்தாச்சுனு…” என்று ரேகாவை மது சொல்ல,

“நான் உள்ள வரும் போது பார்த்தேன். அவ்வளோதான், அதுக்கு அப்பறம் வெளிலயே ஆளக்காணும்…”

மது, “ப்ராஜெக்ட் டிஸ்கஷன்ல இருப்பாரோ என்னமோ…”

விமல், “லஞ்ச் முன்ன மீட்டிங்னு மெயில் வந்திருக்கு… அவரோட சேர்த்து ஆறு பேர், அந்த ப்ராஜெக்ட்ல அசைன் பண்ணுறாங்க…”

“நாம மூணு பெரும் ஒண்ணா இந்த ப்ரொஜெக்ட்ல இருந்தா சூப்பர் ஆஹ் இருக்கும்ல…” என்று ரேகா சந்தோசமாக கூற,

“ஆமாம்… மேடம் நல்லா ஒப்பி அடிப்பீங்க… அப்படித்தானே ரேகா…” என்று மது சிரிக்க,

விமல், “அவ இப்பயும் அதுதானே பண்ணுறா…”

“இதுக்கு மட்டும் நல்லா, ரெண்டு பேரும் என்னைய பேசுவீங்களே… நீங்க சின்சியர் சிகாமணி இல்ல?…”

“ஹா ஹா… எங்க வேலையை முடிப்போம்… மேடம் போல இல்லனு, வேணும்னா நான் சொல்லுவேன்…” என்று மது நக்கலடிக்க,

“ஒத்துக்குறேன்… நான் ஒத்துக்குறேன்… இனிமேலும் இப்படி உங்க தலையில என் வேலையைக் கட்டத்தான் செய்வேன்… அதுனால நீங்க என்னை என்ன வேணும்னாலும் சொல்லிக்கலாம்…”

விமல், “அப்படியே உண்மை விளம்பி தான் நீ…”

ரேகா, “போடா விம்பார்… வா போலாம், மீட்டிங் டைம்…”

விமல், “பாருடா… காக்கா, சின்சியர் ஆஹ் இருக்கு மீட்டிங்க்கு…”

“டேய்… காக்கானு சொல்லாத சொல்லிட்டேன்…”

“நீ அப்போ விம்பார்னு என்னைய சொல்லுற?…”

“அது நான் சொல்லுவேன் டா விம்பார்…”

“அப்போ நானும்…” என்று ஆரம்பிக்க,

உங்க சண்டையை அப்பறம் போடலாம், வாங்க அங்க மீட்டிங் ஹாலுக்கு போலாம் என்று மது சொல்ல,

மூவரும் மீட்டிங் அறைக்கு சென்று அமர, அங்கு ஏற்கனவே மற்றும் சிலர் குழுமியிருந்தனர்.

ரேகா, “என்னடி இன்னும் வரல…”

“அமைதியா இரு கொஞ்ச நேரம், லீட்டை பாக்கணும்னு தானே மீட்டிங் நேரமாச்சுனு சொன்ன?…”

“ஹி ஹி… உனக்கு காமிக்கலாமேன்னு தான் மது…”

“ரொம்ப சிரிக்காத… வழியுது…”

இங்கு இவர்கள் மெதுவாக பேச, அப்போது மூவர் உள்ளே நுழைய, அவர்களுள் ஒருவனாய் அவன் பிரகதீஸ்வரன்.

ரேகா அவளின் முகத்தைத் திருப்பி அவர்களை பார்க்க செய்ய, அவனைக் கண்டதும், ஒரு நிமிடம் உற்று நோக்கிவிட்டு, பின்பு சாதாரணமாகினாள்.

அவனும் அவளை பார்க்க, அப்போது அவள் இவனை கவனிக்காமல் போக, அதானே இவ எப்போ பாத்துருக்கா, என்று மனதினுள் நினைத்துக் கொண்டே இருக்கையில் சென்று அமர்ந்தான்.

பார்வை வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!