Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

விழி மொழி பேசு

அத்தியாயம் 12_1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்

அத்தியாயம் 12

அன்னை மடியின் கதகதப்பை

உணர்ந்தேன் நான் உந்தன்

மார்பில் சாயும் போது!!!



Advertisement

“ஐயோ ஒண்ணுமே இல்லை. சொல்லு சொல்லுன்னா நான் என்ன சொல்லட்டும்? நகருங்களேன்”, என்று தவிப்பாக சொன்னாள் ரேகா. அவனுடைய அருகாமை அவளை அந்த நிலைக்கு தள்ளியிருந்தது.

Advertisement

“என்ன டி நியாயம் உன்னோடது? அண்ணி உன் காதில் என்ன சொன்னாங்கன்னு கேட்டேன். அதையும் சொல்லலை. சரி என்னவோ போல இருக்குனு சொன்னது எதுக்குன்னு சொல்ல சொன்னா அதையும் சொல்ல மாட்டிக்க? ரெண்டுல நீ எதையாவது சொல்லியே ஆகணும்”, என்று சொன்னான் விக்ரம்.

Advertisement

“இவன் உண்மையைச் சொல்லாம விட மாட்டான்”, என்று எண்ணிய ரேகா “இனியாவது ரெண்டு பேரும் சேந்து வாழுங்கன்னு சொன்னாங்க, போதுமா?”, என்று கண்களை மூடிக் கொண்டே சொன்னாள். அவள் சொன்ன விஷயமும் சொன்ன போது அவள் முகத்தில் இருந்த வெட்கத்தையும் கண்டு சிறகில்லாமல் வானில் பறக்கும் உணர்வை அடைந்தான். சந்தோசத்தோடு அவன் அவளை இன்னும் நெருங்கினான்.

Advertisement

வெகு அருகாமையில் “ரேகா”, என்று தாபத்துடன் அவன் குரல் ஒலிக்க அவளுக்கோ அவனை நிமிர்ந்து பார்க்க முடியாத நிலை. அவன் இன்னும் அவளை நெருங்க அவனது மீசை அவளுடைய முகத்தை உராய்ந்து மோகத் தீயை பற்ற வைத்தது.

முதலில் அவளுடைய கன்னங்களில் தன்னுடைய இதழ்களைப் பதித்த விக்ரம் அவள் முகம் முழுவதும் முத்தங்களை வழங்கினான். அவன் முத்தத்தில் அவள் மேனி நடுங்க ஆரம்பிக்க அவன் கைகளுக்குள் சரிய ஆரம்பித்தாள்.  அவனது கைகளும் அதற்காகவே காத்திருந்தது போல அவளை வளைத்து அனைத்துக் கொண்டது.

அவளை வேகமாக தழுவிக் கொண்டவன் அடுத்த நொடி அவளை தன்னுடைய கைகளில் அள்ளிக் கொண்டு படுக்கையை அடைந்தான்.

அவளை கட்டிலில் கிடத்தி அவன் அவள் மேல் படர அவள் கைகளும் அவன் முதுகில் பதிந்து அவனை அனைத்துக் கொண்டது. அவள் தோள் வலைவில் முகம் புதைத்த விக்ரம் “பழசை எல்லாம் மரந்துறலாம்  ரேகா”, என்றான்.

“ம்ம்”, என்றாள் ரேகா. ஏனென்றால் அவளும் அதற்குத் தானே ஆசைப் பட்டாள்.

“நீ செஞ்ச துரோகத்தை என்னால மறக்க முடியலைன்னாலும் இப்ப நீ என்னோட பொண்டாட்டி. இனியும் நாம இப்படி பிரிஞ்சு இருக்கணும்னு அவசியம் இல்லையே? எனக்கு உன் மேல உள்ள கோபத்தை விட காதலும் ஆசையும் தான் டி அதிகமா இருக்கு. இனி நாம சேந்து வாழ்ந்தா என்ன தப்பு? இதுல உனக்கும் சம்மதம் தானே?”, என்று கேட்டதும் சூடான தண்ணீர் முகத்தில் பட்டது போல துடித்துப் போனாள்.

அவளையே மறந்து அவனுக்குள் அவள் கரைந்து கொண்டிருக்கும் போது அவன் இப்படிச் சொன்னதும் அவள் உணர்வுகள் அனைத்தும் வடிந்து போனது.

அவனை சட்டென்று விலக்கி விட்டு கட்டிலில் இருந்து எழுந்து கொண்டாள். உணர்வுகளை அடக்க முடியாமல் அவள் உடல் எல்லாம் நடுங்கியது.

அவனுக்கு அவள் விலகல் ஏன் என்று புரியவே இல்லை. “ஏன் ரேகா?”, என்று தாகத்துடன் கேட்டான்.

“உனக்கு சம்மதமான்னு கேட்டீங்க. எனக்கு சம்மதம் இல்லை போதுமா?”, என்று அடக்கப் பட்ட கோபத்துடன் சொன்னாள்.

அவன் சாதாரணமாக நீ எனக்கு வேண்டும் என்று கேட்டிருந்தால் அவளையே அவனுக்கு கொடுத்திருப்பாள். ஆனால் இன்னுமே தன்னை நம்பாமல் இருப்பவனுடன் எப்படி வாழ்வதாம்?

“ரேகா பிளீஸ்”, என்று சொல்லி அவன் அவளை நெருங்க “வேண்டாம் விக்ரம். இனி என் கிட்ட வராதீங்க”, என்றாள்.

“ஏன்? நான் உன் புருஷன் தானே?”, என்று கோபமாக கேட்டான் விக்ரம். அவளுடைய மறுப்பு அவனுக்கு சிறு கோபத்தைக் கொடுத்தது.

அவனுடைய தீண்டலால் சிறிது சேலை விலகியிருக்க தலை முடி அனைத்தும் கலைந்திருக்க அந்த நிலைமையிலும் அழகின் மொத்த உருவமாக இருந்தவளை ஆக்ரமிக்க அவன் மனம் துடித்தது. புதிதாக செய்த லட்டு போல இருந்தவளை கடித்து தின்னும் வேகம் வந்தது.

“நீங்க என்னோட புருஷன் தான். என்னைத் தொட கல்யாணத்துக்கு முன்னாடியும் கல்யாணத்துக்கு பின்னாடியும் உங்களுக்கு மட்டும் தான் உரிமை இருக்கு. ஆனா என்னை மட்டமா பேசுற நீங்க தொட்டா எனக்கு பிடிக்கலை. உங்க மனசுல என் மேல அன்பும் காதலும் இருக்கு ஒத்துக்குறேன். ஆனா நம்பிக்கை இருக்கா?”

“ரேகா”

“என் மேல நம்பிக்கை இல்லாதப்ப எப்படி உங்களால என் கிட்ட வர முடியுது? உங்க தாகத்தை தனிச்சிக்க நினைக்கிறீங்களா, இல்லை எனக்கு வாழ்க்கை பிச்சை போடுறீங்களா? இப்ப என் கூட வாழ்ந்த அப்புறம் திருப்பியும் நீங்க என்னைப் பத்தி தப்பா பேச மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? ஒரு துரோகி கூட வாழ்ந்துட்டேன்னு நீங்க சொன்னீங்கன்னா அடுத்த நிமிடம் நான் இந்த உலகத்துல இருக்க மாட்டேன்”

“ரேகா”

“என்னை விட்டுருங்க விக்ரம், நான் என் வழியை பாத்துட்டு போறேன். என்னால உங்க கூட போராட முடியலை”, என்று தளர்ந்து போய்ச் சொன்னாள் ரேகா.

“நான் உன் மேல பைத்தியமா இருக்கேன் டி. ஆனா நீ என்னை விட்டு போகணும்னு நினைக்கிற? நிஜமாவே உனக்கு என்னைப் பிடிக்கலையா? அப்புறம் எதுக்கு டி அன்னைக்கு என்னை அந்த பார்வை பாத்த? எதுக்கு நான் தொட்டதும் என் கைக்குள் வந்த? இதோ இப்ப கூட என்னை பிடிச்ச மாதிரி தானே டி நடந்துகிட்ட?”

“இது தான் விக்ரம் நீங்க. சரியா சொல்லிக் காட்டிட்டீங்க பாத்தீங்களா? இதுக்கு தான் நான் விலகினேன்.  உங்க மனசுல நான் உங்களை ஏமாத்தினன்னு பதிஞ்சிருக்கு. அது கண்டிப்பா மாறாது விக்ரம்”

“நான் உன்னை அவ்வளவு லவ் பண்ணுறேன் டி. நீ பண்ணினதைக் கூட மன்னிக்கத் தயாரா இருக்கேன்”

“நீங்க மன்னிக்க கூடிய தப்பை நான் செய்யலை விக்ரம்”

“பொய் சொல்ற?”

“அப்படியே நினைச்சிக்கோங்க. என்னை விட்டுருங்க. நான் கெட்டவளாவே இருந்துட்டு போறேன்”

“அப்ப நான் உனக்கு வேண்டாமா? என் காதல் வேண்டாமா உனக்கு?”

“அது வேணும்னு எனக்கு ஆசையா தான் இருக்கு. ஆனா எனக்கு இந்த ஜென்மத்துல அது கிடைக்க கூடாதுன்னு விதி இருக்கும் போது நான் என்ன செய்ய முடியும்? கடவுள் எதுக்கு தான் இப்படி ஒரு வாழ்க்கையை எனக்கு கொடுத்தாரோ தெரியலை. எதுக்கு எடுத்தாலும் போராடிட்டே இருக்கேன். எனக்கு பெத்தவங்க இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா?”, என்று கண்களில் நீருடன் கேட்டாள்.

“நான் இருக்கேன் டி உனக்கு”, அவ்வளவு அவசரமாக சொன்னான் விக்ரம். அவன் வேகத்தில் அவன் காதலை உணர்ந்த ரேகா விரக்தியாக அவனைக் கண்டு சிரித்தாள்.

“ஏன் டி இவ்வளவு வேதனைப் படுற? எல்லாத்தையும் மறந்துறலாம் டி. நான் இனி உன்னை காயப் படுத்துற மாதிரி பேச மாட்டேன்”

“அப்படியா? சரி நாம இப்ப சேந்து வாழலாம். ஆனா உங்க மனசு நான் உங்களை மட்டும் தான் காதலிச்சேன்னு நம்புதா?”, என்று கேட்டாள் ரேகா.

அவன் எதுவோ சொல்ல வரவும் “எனக்கு உண்மையான பதில் வேணும். முழு மனசா நீங்க என்னை நம்புறீங்களா? உங்க காதல் மேல சத்தியம் பண்ணிச் சொல்லுங்க”, என்று அவள் சொன்னதும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

பதில் சொல்ல முடியாத எரிச்சலுடன் “இப்ப என்னை என்ன தான் டி செய்ய சொல்ற?”, என்று கேட்டான்.

“என்னை விட்டுருங்க, நான் போறேன்”

“ரேகா”

“ஆமா நான் நாளைக்கு வேலைக்கு போகணும். என்னை இங்க இருந்து அனுப்பிருங்க”, என்று தீவிரமான குரலில் சொன்னாள் ரேகா. அவளுக்கு இந்த நரகம் சுத்தமாக பிடிக்க வில்லை. ஆசைத் தீயை மூட்டி விட்டு அவனுக்குள் அவள் கரைந்து கொண்டிருக்கும்  ஒவ்வொரு நொடியும் அவனது குத்தல் பேச்சை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

“நீ வேலைக்கு போகணும்னு என்ன இருக்கு? உன்னைப் பாத்துக்க நான் இருக்கேன் டி. நான் உன்னைத் தொடுறது பிடிக்கலைன்னா சொல்லு, நான் உன் கிட்டவே வரலை. ஆனா இங்க இருந்து போகாத”, என்றான் விக்ரம்.

அவன் மனைவியாக அவன் சொன்னதைக் கேட்டு கர்வம் வந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் “நமக்குள்ள ஒத்தே வராதுங்குறப்ப ஒண்ணா இருந்து வெறுப்பை வளக்கணுமா? பிரியுறது தான் நல்லது”, என்றாள்.

அவள் மீதான மோகம் அவனை சுற்றி வளைக்க அவளோ பிரிவை பத்தி பேசியதும் அவளுக்கு எரிச்சல் மேலும் மேலும் அதிகமானது.

“இப்ப எதுவும் பேச வேண்டாம் ரேகா. எல்லாம் காலைல பேசிக்கலாம் படு. கோபத்துல எடுக்குற முடிவு சரியா இருக்காது”, என்று அவன் சொன்னதும் “இல்லை எனக்கு முடிவு இப்பவே தெரியணும். உங்களால என்னை எப்பவுமே நம்ப முடியாது.  கூடவே இருந்து நீங்க இப்படி காயப் படுத்துறது எனக்கு பிடிக்கலை. அதனால எனக்கு முடிவு சொல்லிட்டு படுங்க”, என்றாள்.

“என்னை விட்டு ஒரேடியா போகணும்னு முடிவு பண்ணிட்ட, அப்படி தானே?”, என்று கசந்த குரலில் கேட்டான் விக்ரம்.

“உங்களை விட்டு நான் போகணும்னு நினைச்சா அது என் கடைசி நாளா தான் இருக்கும்”

“ரேகா”

“ஆமாங்க, எப்பவுமே நான் உங்களை விட்டு போக நினைக்க மாட்டேன். அதே மாதிரி என்னை விட்டு விலகணும்னு நீங்களும் நினைக்க மாட்டீங்க. கண்டிப்பா உங்களால என்னை விட்டுட்டு வேற வாழ்க்கையை நினைச்சு பாக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். ஏன்னா எனக்கு உங்க மேலயும் உங்க காதல் மேலயும் அவ்வளவு நம்பிக்கை இருக்கு. அதே நம்பிக்கை என் மேல உங்களுக்கு எப்ப வருதோ அது வரைக்கும் உங்களை விட்டு ஒதுங்கி இருக்கணும்னு தான் இப்ப போறேன்னு சொல்றேன்”

“கடைடி வரை நான் மனசு மாறலைனா என்னை விட்டு ஒதுங்கியே தான் இருப்பியா?”

“ஆமா, கடைசி வரை பிரிஞ்சு தான் இருக்கணும். வேற வழி இல்லை”

“அப்ப என் வாழ்க்கை?”

“என்னை மாதிரி ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவளை காதலிச்சு கல்யாணம் பண்ணினதுக்கு தண்டனைன்னு நினைச்சிக்கோங்க”

“நீ போகணும்னு முடிவு பண்ணிட்ட? இனி பேச என்ன இருக்கு? நீ போகலாம்”, என்று விரக்தியாக சொன்னான்.

அவள் அமைதியாக இருக்கவும் “திரும்பி எப்ப வருவ?”, என்று கேட்டான்.

“உங்க மனசு என்னை கடைசி வரைக்கும் நம்பலைன்னா நான் உங்க கூட இருக்குற கடைசி நாள் இது தான்”

“ஓ”

“சரி வீட்ல இருக்குறவங்க கிட்ட என்ன சொல்ல? அத்தை மாமா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?”

“பையன் சந்தோஷமா இருக்கான்னு நினைக்கிற அவங்க நிம்மதியை கெடுக்க வேண்டாம். இப்போதைக்கு லீவ் முடிஞ்சிட்டு வேலைக்குப் போறேன்னு மட்டும் சொல்லு”

“சரிங்க, நாளைக்கு காலைல கிளம்புறேன். இங்க இருந்து எப்படி போக? நீங்க நாளைக்கு என்னை கொண்டு போய் விடுவீங்களா? பஸ் ஏத்தி விட்டாக் கூட போதும்”

“என்னை விட்டுட்டு போற உனக்கு டிரைவர் வேலை பாக்க என்னால முடியாது”

“ஏன் இதுக்கு முன்னாடி நீங்க எனக்கு டிரைவரா இருந்ததே இல்லையா?”, என்று முதல் நாள் நிகழ்வை மனதில் வைத்துக் கொண்டு சொன்னாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!