Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி.

15. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி…..!

வெங்கடாசலம் வசிப்பது  வாடகை வீட்டில் தான். வீட்டின் உரிமையாளருக்கு நேற்று வெங்கடாசலம் போலீசில் சிக்கி இருப்பது தெரிய வர உடனே.. அங்கு வந்தவர் அனிதாவிடம் சத்தம் போட்டு வீட்டை காலி செய்யுமாறு கூற, அனிதா தான் அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அவளின் பேச்சில் செவி சாயாதவர் இன்னும் ஒரு வாரத்தில் வீட்டை காலி செய்யுமாறு கூறி விட்டு.. பல நாட்களாக பூட்டி இருக்கும் தன் மேல் வீட்டிற்கு பார்வையிட சென்றார்.



Advertisement

பூட்டியிருக்கும் வீட்டிலிருந்து.. புகைப்பிடிக்கும் வாடை வருவதால் சந்தேகமடைந்தவர் தன்னிடமிருக்கும் சாவியைக் கொண்டு வீட்டைத் திறக்க,    யாரும் வர மாட்டார்கள் என்ற தைரியத்தில் பதுங்கி இருந்தவனோ இதை எதிர்பார்க்காமல் ஸ்தம்பித்து நின்றான்.

வீட்டின் உரிமையாளர் அவனிடம் “யாரென” கேட்டு சண்டையிட ஆரம்பித்திருந்தார். அவரின் சத்தத்தில் பதறியவன் மாட்டி விடக் கூடாது என்பதற்காக .., வீட்டினுள் இருந்த கட்டையால் அடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.  தலையில் வழியும் ரத்தத்தோடு  கீழே வந்தவர்… அருகில் இருப்பவர்களிடம் விஷயத்தைக் கூற அவர்களும் மேலே சென்று தேட ஆரம்பிக்க.. அதற்குள் அவன் தப்பி இருந்தான்.

Advertisement

Advertisement

நடந்ததை முழுதாக அனிதா கண்ணனிடம் சொல்லி முடிக்க… அங்கிருந்த வெங்கடாசலத்தை தனிப்படை அதிகாரிகள்  அடிக்க ஆரம்பித்திருந்தனர். அவனின் அலறலில்… துடித்த அனிதா கண்ணனிடம் நிறுத்தச் சொல்ல,

“உன் புருஷன் கிட்ட நேத்து எவ்வளவு விசாரிச்சோம் தெரியுமா. ஒரு வார்த்தை சொல்லியிருந்தா இன்னைக்கு அவன் தப்பிச்சி போயிருக்க மாட்டான்.” கண்ணன் கோபமாக.. சொல்ல,

Advertisement

அடிவாங்கி அலறிக் கொண்டிருந்தவனோ, “சார் சத்தியமா சார். அவன் அங்க இருக்கிறது எனக்கு தெரியவே தெரியாது சார். இவ்ளோ சொல்லிட்டு அதை சொல்லாம இருப்பேனா சார். எனக்கு சத்தியமா தெரியாது சார். என் பொண்டாட்டி மேல சத்தியம். “

அவனை அடிப்பதை நிறுத்த சொன்ன கண்ணன்.. சக அதிகாரிகளோடு  அனிதாவின் வீட்டிற்கு சென்றான். அங்கே.., நேற்றிரவு சாப்பிட்டு வைத்த மீதி உணவும், குளித்துவிட்டு மாற்றிப் போட்ட ஆடைகளும், புகையிலையும்.., மதுபான பாட்டில்களும் அவன் அங்குதான் இருந்தான் என்பதற்கு சாட்சியாக காட்சி அளித்தது.

கண்ணனுக்கு தான் இது பெரிய அவமானமாக இருந்தது. மேல் வீட்டில் இருக்கும் குற்றவாளியை கண்டுபிடிக்க கீழ் வீடு வரைக்கும் வந்து சென்ற  தன் மடத்தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டவன்.. மேலும் தகவல்கள் சேகரிக்க அவ்வறையை நோட்டம் விட,

கபோர்ட்டின் ஒரு ஓரத்தில்.. ஒட்டு தாடியும் மீசையும் அவன் கண்ணில் பட்டது. மேலும் அங்கு ஒரு சிம் கார்டும் இருக்க… அதையும் கைப்பற்றினான்.

தடவியல் நிபுணருக்கு அழைப்பு விடுக்க அவரும் வந்து அங்கிருக்கும் கைரேகையும், கால் தடத்தையும் சேகரிக்க ஆரம்பித்தார். இதற்கிடையில் மதுபாட்டில்கள் எங்கு வாங்கப்பட்டது என்ற தகவலும் ஒருபுறம் சேகரிக்க, தப்பி ஓடியவன் பற்றிய தகவல்களை கொல்கத்தா முழுக்க தெரியப்படுத்தி இருந்தான்.

ஹாரன் ஒலியில் தலையை வாசல் பக்கம் திருப்பி பார்த்த ரதி தேவிக்கு சித்துவின்  வருகை புரிய உடனே மஹாலட்சுமியிடம் சொல்லி அழைத்து வந்தாள். மகாலட்சுமியும், இருவரிடமும் சண்டையிட கோபமாக வெளியில் வர…. ஆரதியின் கைப்பிடித்து இறங்கும் ராசாத்தியை கண்டு அமைதியானார்.

காரை விட்டு இறங்கிய சித்து… காரிலிருந்து வானதிக்கு உதவும்  வில் சேரை எடுத்து ஆரதியிடம் கொடுத்து விட்டு, ராசாத்தி அம்மாவை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல மஹாலட்சுமி எதுவும் கூறாது வழிவிட்டார்.

ஆரதி வானதியை காரில் இருந்து இறக்க சிரமப்பட.. அதை புரிந்து கொண்ட ரவி தேவியும், மகாலட்சுமியும் அவளுக்கு உதவி செய்ய வானதியும் வீட்டிற்குள் அழைத்துச் செல்லப்பட்டாள். உள்ளே வந்தவர்களை மஹாலட்சுமி அடையாளம் தெரியாமல்.. அமைதியாக பார்த்திருக்க,

சித்துவும் எதுவும் கூறாமல் தன் அறைக்கு செல்ல, சரஸ்வதி வருவதை கண்டு ஆனந்த அதிர்ச்சியாக “அத்தை!! என்ன சர்ப்ரைஸ் இது! எப்போ வந்தீங்க. மாமா வந்து இருக்காங்களா.” சித்துவின் வார்த்தையில் ஆரதியும் தன் அன்னையைக் கண்டு கொள்ள,

“அம்மா!!! நீங்க எப்போ வந்தீங்க… அப்பா வந்து இருக்காங்களா.”என்றவளை முறைத்து பார்த்தவர் சித்துவிடம் திரும்பி,

“எங்க சித்து போனீங்க ரெண்டு நாளா. அண்ணி கிட்ட சொல்லிட்டு போகனும்’ ன்ற அறிவு இல்ல. சின்ன குழந்தைங்க  மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கீங்க. அம்மா கிட்ட சொல்லாம போற அளவுக்கு நீங்கலாம் வளர்ந்துடிங்களோ.”

“அட அட அட என் செல்ல அத்தைக்கு எவ்ளோ கோவம். கோவத்துல கூட ரொம்ப அழகா இருக்கீங்க அத்தை. நாங்க சொல்லாம போனதால தான நீங்க இங்க வந்திருக்கீங்க. இல்லனா இந்த சின்ன மருமகன் மேல உங்களுக்கு அக்கறை  இருக்குமா.” என்றவன் அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்க,

கோபத்திலும் அதை மறுக்காமல் பெற்றுக்கொண்டார் சரஸ்வதி. பின்னர் தான் வீட்டில்  இருக்கும் இருவரை காண ,

தன் அன்னைக்கும் சேர்த்து பதில் அளிக்கத் தொடங்கினான் சித்து, “அத்தை இவங்க பேரு ராசாத்தி. அது அவங்களோட பொண்ணு வானதி. ராசாத்தி ஆன்ட்டியோட மூத்த பொண்ணு காணாம போயிட்டாங்க. அது சம்பந்தமான கேச இப்போ நான் தான் பார்த்துட்டு இருக்கேன். அவங்க வீட்டுல ஒரு சின்ன பிரச்சனை. அவங்க பொண்ணு கேஸ் முடியிற வரைக்கும் நம்ம வீட்டுல தான் இருக்கப் போறாங்க.”

“வணக்கம் ம்மா. நாங்க வேணாம்’னு எவ்வளவோ சொன்னோம். தம்பி தான் கட்டாயப்படுத்தி இங்க கூட்டிட்டு வந்தாங்க. எங்களால உங்களுக்கு சங்கடம் வேணா ஒரு வீடு பார்த்து கொடுங்கம்மா… நாங்க அங்க தங்கிகிறோம். ” ராசாத்தியின் வார்த்தையில் கனிந்த மகாலஷ்மி,

“எதுக்காக வெளியே தங்கனும். இங்க இவ்ளோ பெரிய வீடு இருக்கும் போது. பிள்ளைக்கு வேற கால்ல அடிபட்டு இருக்கு. இந்த நிலைமையில நீங்க தனியா இருக்கறது சரிவராது. உங்க வேலை முடியுற வரைக்கும் இங்கேயே தங்கலாம். எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல.” என்றார்.

“ஆரதி பாப்பா சொன்ன மாதிரி உண்மையாவே நீங்க ரொம்ப நல்லவங்க தான். கார்ல ஏறி , இறங்குற வரைக்கும் பேச்சு உங்கள பத்தி மட்டும் தான் இருந்துச்சு. நீங்க இத தான் சொல்லுவீங்கன்னு முன்னாடியே பாப்பா சொல்லிடுச்சு.” என்றவரின் வார்த்தையில் தானாக பார்வை தன் மருமகளின் மேல் விழுந்தது.

எப்போதும் துறுதுறுவென துடிக்கும் முகம் களையிழந்து சோர்வாக காணப்பட உள்ளுக்குள் பதறியவர், “எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம். எல்லாரும் சாப்பிட வாங்க.” என்ற தாயின் மறைமுக பேச்சு வார்த்தையில் உணர்ந்துகொண்ட சித்து… சிரித்துக்கொண்டே மாடி ஏற,

ஆரதி வானதிக்கு ஒரு அறையை ஏற்பாடு செய்ய கிளம்ப அதை புரிந்தவர் போல் … “அண்ணி! அவங்க எதிர்ல இருக்க ரூம்ல தங்கட்டும். மத்த ஏற்பாடெல்லாம் நம்ம பண்ணலாம். மத்தவங்கள ரெடி ஆயிட்டு வந்து சாப்பிடச் சொல்லுங்கள்.”என்றவர் கையோடு வானதியை அழைத்துக் கொண்டு அறைக்கு செல்ல,

சரஸ்வதி தான் தன் மகளை பிடி பிடி என பிடித்து விட்டார். அவரின் அர்ச்சனையில்  இருந்து தப்பித்த ஆரதி அறைக்கு சென்று தயார் ஆகி வர.. அவளுக்குப் பிடித்த உணவுகளே அங்கு நிரம்பி இருந்தது. உணவு பரிமாற வந்த ரதி தேவியை தடுத்தவர் தானே அங்கு இருப்பவருக்கு பரிமாற தொடங்கினார் மஹாலட்சுமி.

“பார்த்தியா”‘ என்பதுபோல் சித்து சைகை செய்ய.. ஆரதியும் அதை ஆமோதித்து உண்ணத் தொடங்கினாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரதி தேவிக்கு தான் .. உஷ்ண மூச்சுக்கள் வரத்தொடங்கியது.

சாப்பிட தயங்கிய ராசாத்தியை பார்த்துக்கொண்டிருந்த சரஸ்வதி.. “அக்கா எதுக்காக சாப்பிடாம இருக்கீங்க. நல்லா சாப்பிடுங்க இது நம்ம வீடு. கூச்சப்படாம நல்லா சாப்பிடுங்க. வானதிக்கு நான் சாப்பாடு கொடுத்துட்டு வர ” எனக்கூற,

“ஐயோ அதெல்லாம் வேணாங்க நானே வானதிக்கு சாப்பாடு தரேன். ஏற்கனவே எங்களால உங்களுக்கு நிறைய சிரமம். “

“இப்போ தான அண்ணி சொன்னாங்க இது நம்ம வீடுன்னு. நீங்க சாப்பிடுங்க அண்ணியே வானதிக்கு சாப்பாடு கொடுத்துட்டு வருவாங்க.”என்ற மஹாலட்சுமியின் வார்த்தையில் அமைதியாக உண்ணத் தொடங்கினார் ராசாத்தி.

உடற்பயிற்சி முடித்துவிட்டு வந்த நாராயணன், சண்முகத்தை ஆரதி அணைத்துக்கொள்ள.. இருவரும் கோபமாக விலக முற்பட , விலக விடாது சித்துவும் சேர்ந்த அணைத்துக்கொண்டான். இருவரும் சென்ற காரியம் நல்லதாய் இருப்பதால் அவர்களும் கோபத்தை மறக்க….அதன் பின்னான பேச்சுக்கள் இனிமையாக அவ்வீட்டை நிறைத்தது. கண்ணன் இல்லாத குறை மட்டுமே அங்கு இருப்பவருக்கு.

அறையில் வானதி தனிமையை உணர ஆரம்பிக்க.. அதை அவள் வெளிக்காட்டும் முன்னே… ஹாலிற்கு அழைத்துச்செல்ல வந்தார் மஹாலட்சுமி. வானதியின் பேச்சும், பொறுமையும்.. அவள் பட்ட கஷ்டங்களும் அங்கு இருப்பவரை வருந்த செய்ய.. ஹாலட்சுமியின் ஆதரவுக்கரம் அவளை சேர்த்தணைத்து.

தடவியல் அறிக்கையில்.., ஏற்கனவே உள்ள ராபர்ட் கை ரேகையோடு அங்கு சேகரித்த எந்த கைரேகையும் பொருந்தாததால் அங்கு இருந்தவன் ராபர்ட் இல்லை என்பதை உறுதி செய்தது. மேலும் வீட்டின் உரிமையாளரை சந்தித்த கண்ணன்…, பார்த்தவனை அடையாளம் காட்டச் சொல்ல.. அவரும் ராபர்ட் புகைப்படத்தை பார்த்துவிட்டு இவன் இல்லை என்று உறுதி செய்தார்.

வீட்டின் உரிமையாளர் மட்டுமே இப்பொழுது அவனை பார்த்து இருக்கும் ஒரே சாட்சி. அவரின்  உதவியோடு… தப்பி ஓடியவனின் அங்க அடையாளங்களை  தெரிந்துகொண்ட கண்ணன்.. அதைப் புகைப்படமாக வரைய ஏற்பாடு செய்திருந்தான்.

சேகரித்த தடயங்களை வைத்து மதுபான கடைகளில் விசாரிக்க தெளிவான தகவல் கிடைக்கவில்லை. மனம் தளராத அதிகாரிகள் உணவகத்தில் அடுத்த கட்ட விசாரணையை முன்வைக்க….

அதில் பலனும் கிட்டியது.

நேற்றிரவு அவன் உணவு வாங்கிய உணவகத்தில்  சிசிடிவி கேமரா இருப்பதால் முதல் முறையாக  ஆட்டம் காட்டியவனின் முகம் கிடைத்தது.

அதில் வெங்கடாச்சலம் சொன்னது போலவே முகம் முழுக்க தாடியுடன் தலையில் தொப்பி அணிந்து கொண்டு உணவு வாங்கும் காட்சி இடம் பெற்றிருக்க.. வீட்டில் சேகரித்த ஆடைகளும், ஒட்டு தாடியும், உணவகத்தின் பெயரும்  உறுதி செய்தது  தப்பி ஓடியவன் இவன்தான் என்று.

இத்தனை நாள் தேடி ஓடிய  வேட்டையில்.. சிக்கிய சிறு பொறியாய் அவனின் தோற்றம் கண்ணனுக்கு கிடைக்க.. பல நாள் கழித்து நிம்மதியான மூச்சு கண்ணனின்  நாசியில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!