Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனை ஆராதித்த பூம்பாவை

அத்தியாயம் 13

அத்தியாயம் 13

 

லிங்கேஸ்வரன் குடும்பத்தினர்.. ரிஷப்ஷன் முடிந்த மறுநாளே கோயம்பத்தூர் கிளம்பிவிட்டனர்.. அபிராமியும் ராஜாங்கமும் ஒவ்வொரு நிமிடமும் சிற்பிகா என்ன செய்வாளோ என்ற பயத்தினில் இருக்க.. அவளோ அவர்களை துளியும் கண்டுகொள்ளவில்லை… அங்கு இருந்த பொழுதும் சரி.. ஊருக்கு வந்தப்பொழுதும் சரி.. அபய் குறித்தும் சிற்பிகா குறித்தும் பயத்துடனே இருந்தனர்..

 



Advertisement

நடந்ததையரிந்த ரூபாலியும்.. இனி சிற்பிகாவின் வாழ்வில் இவர்களின் தலையீடு இருந்தால் அபயிடம் அனைத்தையும் கூறிவிடுவதாய் மிரட்டியிருக்க.. மொத்தமாய் அடங்கிவிட்டனர்..

 

*************************************************

Advertisement

 

Advertisement

பிறை நெற்றியில் குங்குமம் கொஞ்ச.. இதழில் தவழும் மெபுன்னகையுடன்.. சின்ன கண்ணனை மனதில் வைத்து நடனமாடிக் கொண்டிருந்தாள்.. சிற்பிகா..

 

விஷமக்காரக் கண்ணன்

Advertisement

பொல்லாத விஷமக்காரக் கண்ணன்

பொல்லாத விஷமக்காரக் கண்ணன்

 

வேடிக்கையாய் பாட்டுப் பாடி

வித விதமாய் ஆட்டம் ஆடி

நாழிக் கொரு லீலை செய்யும்

நந்த கோபால கிருஷ்னன்.

விஷமக்காரக் கண்ணன்..

 

நீலமேகம் போலே இருப்பான்

பாடினாலும் நெஞ்சில்

வந்து குடியிருப்பா…ன்

கோலப் புல்லாங் குழலூதி

கோபிகைகளை கள்ளமா………….டி

கோலப் புல்லாங் குழலூதி

கோபிகைகளை கள்ளமாடி

கொஞ்சம் போல வெண்ணை தாடி

என்று கேட்டு ஆட்டமாடி

 

விஷமக்காரக் கண்ணன்…விஷமக்காரக் கண்ணன்

 

பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்

முகாரி ராகம் பாடச்சொல்லி

வம்புக் கிழுப்பா…ன்

 

எனக்கு அது தெரியாது என்றால்

நெக்குருகக் கிள்ளி விட்டு..

அவளை நெக்குருகக் கிள்ளி விட்டு.. அவள் விக்கி விக்கி அழும்போது

இதுதான்டி முகாரி ராகம் என்பான்

விஷமக்காரக் கண்ணன்.. பொல்லாத விஷமக்காரக் கண்ணன்

 

என அபிநயம் பிடித்து ஆடிகொண்டிருந்தவள் சுழலுவதற்க்கேர்ப்ப.. அவளின் மாங்கல்யம் உள்ளீயிருந்து வெளியே வந்து அவள் மார்பினை தொட்டுக்கொண்டிருந்தது..

 

செழுமையேறிய கன்னங்கள்.. கனிந்த அங்கங்கள்.. இதழில் குடிக்கொண்டிருக்கும் மோகன புன்னகை எல்லாம்.. அவளின் இந்த ஒரு மாததாம்பத்தியத்தின் மகிழ்ச்சியை கூறுகிறது..

 

ஆம் சிற்பிகா அபய் திருமணம் முடிந்து ஒருமாதமாகிவிட்டது.. இந்த ஒரு மாதத்தில் அபயை பற்றியும் அவனின் குணாதிசயங்களை பற்றியும் நன்கு தெரிந்துக் கொண்டாள்.. அவனின் பார்வையை வைத்தே அபயின் மனநிலையை புரிந்து நடந்துக்கொள்ளும் அளவிற்கு… உயிர்வரை அவனை தெரிந்து வைத்திருக்கிறாள்.. ஆனால் அபய்தான் அவளின் காதல் பார்வைகளை இனம் காண முடியாது முழித்தான்.. எதிரிகளின் சிறு செயலிலே மொத்தத்தையும் கண்டறிபவனுக்கு… சிறுப்பேதை பெண்ணின் காதல் பார்வைகளை கண்டறிய முடியவில்லை…

 

திருமணம் முடிந்த சில தினங்களிலே மறுபடியும் அவளுக்கு அரங்கேற்றம் செய்வதற்கான வாய்ப்புகள் வர.. அபய் தடுத்தான்.. சிற்பிகாவும் மறுப்பு கூறாது ஒப்புக்கொண்டாள்.. சிற்பிகா பரதம் கற்றுகொண்டதற்கு முக்கிய காரணமே அவள் தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காகத்தான்.. அதனால் அவள் பெரிதாக வருந்தவில்லை..

 

ஆனால் தினமும் வீட்டிலே பயிற்சி செய்ய ஆசை.. ஆனால் அபயின் மேல் கொண்ட பயத்தில் தன் ஆசையை மனதினிலே புதைத்தாள்..

 

ஆனால் அவள் மன்னவனோ அவளின் ஆசை புரிந்தார்ப்போல் அன்றே அவர்களுக்கான தளத்தில்.. நடராஜர் சிலையோடு சுற்றிலும் கண்ணாடி பதிக்கப்பட்டு சிற்பி நடனம் ஆடுவதற்கு ஏதுவாய் ஓர் அறையை ஏற்படுத்த.. சிற்பிகாவின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை..

 

சின்ன கண்ணனை மனதில் வைத்து.. அவனின் குறும்புகளையும் சேட்டைகளையும் அனுபவித்து நர்த்தனமாடி முடித்தவளின் முகமெங்கும் புன்னகையும்.. சிறு சிறு வியர்வைத் துளிகளும் இடம்பெற்றிருக்க.. எதேர்ச்சையாக எதிரில் இருந்த தன் பிம்பத்தின் மேல் பதிந்த அவள் விழிகள்.. அங்கு சுவரொரமாய் சாய்ந்திருந்த தன்னவனைக் கண்டதும் இமைக்க மறந்து போக.. அபயும் அவளின் மாயவிழி சூழலில் சிக்குண்டிருந்தான்..

 

இருவரும் ஒருவரையொருவர் பார்த்தப்படி இருக்க.. சிற்பிகாவின் நெற்றியில் இருந்த வழிந்த வியர்வைத்துளி அவளின் நாசி வழியே வந்து மென்இதழில் சிறு சொட்டாய் விழுந்தது…

 

அவள் நடனமாடும் போதே அங்கு வந்த அபய்.. முகத்தினுள் மோகனப்புன்னகையுடன் தன் இடையையும் உடலையும் வில்லாய் வளைத்து அவள் ஆடுவதைக் கண்டு மெய்மறந்து நின்றவன்.. தனக்கு மட்டுமேயுறிய அவளின் பட்டான இதழ்களை… வியர்வை துளி ஆக்கிரமப்பதை விரும்பாது.. விரைந்து அவளிடம் நெருகியவன்… கண்ணாடியில் அவளைச்சாய்த்து.. சிறிது நேரமாகினும் வியர்வைக்கு இடமளித்த இதழுக்கும் வியர்வைத் துளிக்கும் சேர்த்து தண்டனை வழங்க ஆரம்பித்தான்… எதிர்பாராத அந்த இனிய தண்டனையில் விரும்பியே தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள் சிற்பிகா…

 

அபய்சிம்ஹாவின் ஒற்றை முத்தத்திலே அவளின் சக்தியனைத்தும் வாய்வழி அவனுள் கடத்தப்பட பெண்ணவள் நிற்கமுடியாது தள்ளாடி அவன் மேல் விழ… தன் வன்கரங்களால் அவனவளை ஏந்திக்கொண்டு முத்ததாக்குதலை மேலும் தொடரும்பொழுது சிற்பிகாவை காப்பாற்றும் பொருட்டு அபயின் தொலைபேசி இடைவிடாது தொல்லை செய்தது..

 

அதில் தன்நிலை அடைந்தவன்.. அவளை ஒரு கரத்தால் தன்னோடு சேர்த்தனைத்தது கொண்டவன்.. போனை ஆன் செய்து பேச ஆரம்பித்தான்.. மறுமுனையில் என்ன சொன்னார்களோ அதுவரை இளகியிருந்த அவன் முகம்… பழையப்படி இருக ஆரம்பித்தது..

 

அந்நேரத்தில் முத்த மயக்கத்திலிருந்து வெளிவந்த சிற்பிகா.. அவனிலிருந்து மெல்ல விலக முயற்சிக்க.. தன் ஒற்றை பார்வையில் அதனை தடுத்தவன் அதற்கு தண்டனையாய் மேலும் அவளை தன்னோடு இறுக்க… பென்னவளின் மதிமுகம் வலியில் சுருங்கியது… ஆனால் முயன்று அதனை தடுத்தாள்…

 

இந்த ஒருமாத வாழ்க்கையில் அவள் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் இதுதான்… அபய்க்கும் அவளுக்குமான நெருங்கிய தருணத்திலும் வெட்கத்தின் பொருட்டு அவள் விலகினால் கூட அவனின் அக்னிக்கு ஒத்தானா சொற்களையோ இல்லை உடல்வேதனைகளையோ காண நேரிடும்.. அப்பொழுது சிறிதாக கூட அவள் முகம் சுருங்கினாலோ இல்லை வேதனையின் பொருட்டு நீர் முத்துக்களை பிரதிபலித்தாலோ.. ஒன்றுக்கு மூன்று மடங்காய் வேதனை அதிகரிக்கும்..

 

ஆனால் அதுவே அதனை முகத்தினுள் காட்டாமல் சாதாரணமாக இருந்தாள்.. அடுத்த நிமிடம் அவனே அவளின் வேதனைக்கும் உடல் வலிக்கும் மருந்தாக அமைவான்…

 

அபய் சிற்பிகா என்றொரு பெண்ணின் தனி உணர்வுகளை உணராது தன் உணர்வுகளுக்கேற்ப அவளை ஆட்டிவிக்க… சில நேரங்களில் விருப்பமாய்.. சில நேரங்களில் வேதனையாய்.. அவளவனின் கைப்பாவையாய் ஆடிகொண்டிருந்தாள்.. சிற்பிகா..

 

சிறிது நேரத்திலேயே தன்பிடியிலிருந்து அவளை விடுவித்தவன்.. ” இன்னைக்கு ஒரு பார்ட்டி இருக்கு.. சீக்கிரம் கிளம்பு ” என்று கூறிவிட்டு செல்ல.. மனதில் எழுந்த ஒவ்வாமையை புறந்தள்ளிவிட்டு.. பார்ட்டிக்கு கிளம்ப ஆரம்பித்தாள்..

 

மனதினுள் விஷத்தை வைத்து வெளியினுள் போலி சிரிப்புடன் இருப்பவர்கள் தான் அவன் அழைத்து செல்லும் பார்ட்டியினுள் நிறைந்திருப்பார்கள்.. முக்கியமாக இளம்பெண்களின் கண்கள் யாவும் அபயை ஏக்கத்துடன் மொய்க்கும்…

 

அதுவே சிற்பிகாவை என்றால் பொறாமையும் துவேஷமும் வழிய பார்க்கும்.. முதல் முறை இதனையெல்லாம் பார்த்து அவள் பயந்து விழித்த பொழுது அதி கூறிய யோசனை.. அதனையெல்லாம் ஓர் சிரிப்புடன் கடந்துவிட வேண்டும்.. அதையே ஒவ்வொரு முறையும் கடைபிடித்து வருகிறாள்…

 

************************************************

 

கருப்பு நிற கோட்சூட்டில் அபய் தயாராகியிருக்க.. சிற்பிகா கையில்லா மேல்த்துணியணிந்து சிவப்பு நிற மெல்லிய புடவையில்.. கரத்தில் சிவப்பு நிற வலையல்கள் கலகலக்க.. காதில் பவளம் பதித்த பெரிய தொங்கட்டான் உடன் நெற்றியில் குங்குமமிட்டு.. பழமையும் புதுமையும் கலந்த தேவதையாய் வர.. அபயின் விழிகள் அவள் மேல் ரசனையுடன் படிந்தது…

 

இன்றைய பார்ட்டியில் உயிருடன் தன்னை வதைக்கும் அதிர்ச்சி காத்திருப்பது அறியாமல்.. தன்னவனின் உயிர் குடிக்கும் பார்வையினில் அவள் தேகம் மெல்லிதாய் நடுங்கியது.. அதைக் கண்டு கர்வம் கொண்ட அபயசிம்ஹா அவள் இடையினூடு கையிட்டு நெருக்கமாக அழைத்துச்செல்ல.. புடவையின் நிறத்திற்கு போட்டியாய் பென்னவளின் முகமும் சிவந்தது..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!