செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் – 18
அத்தியாயம் – 18
கதிர் அவனுக்கு கமிஷனாக கிடைத்த இடத்தை அனுவின் பேரில் பத்திரப்பதிவு செய்ய நினைத்தான்.
“ரஞ்சு நாளைக்கு உனக்கு முக்கியமான கிளாஸ் எதுவும் இருக்குதா “
Advertisement
“இல்லடா புருஷா ரிவீயூ மட்டும் தான், அப்பறம் நாளைக்கு நர்மதா வரமாட்டா அதுல நாளைக்கு மதியம் போன் பண்ண முடியாது பா “
“நாளைக்கு காலைல 11மணிக்கு நான் சங்கர் அண்ணா ஆட்டோவ அனுப்பி வைக்குறேன். அவரு கூட வா ஒரு பத்து நிமிஷ வேலை தான் முடிஞ்சது அதே ஆட்டோல திரும்பி காலேஜ்க்கு போயிரலாம் “
Advertisement
Advertisement
“அப்படிலாம் வர முடியாது கதிர் HDO பார்த்த திட்டுவாங்க, அதுவும் இல்லாம எனக்கு ப்ராஜெக்ட் ஒர்க் நிறைய இருக்கு “
“எரும நீ ஆடிடோரியம்ல உக்காந்து வெடி கதை தான் பேசிட்டு இருப்பன்னு எனக்கு தெரியும் ஒழுங்கா நாளைக்கு நான் சொன்ன டைம்க்கு வரப்பாரு “.
Advertisement
மறுநாள் ரஞ்சனி காலேஜ்க்கு செல்லும் போதே அவளிடம் அவளுக்கு வாங்கிய போன்னை குடுத்தான்.
“இது யாரோட போன்டா “
“லூசு உன்னோட போன் தான், உன்கிட்ட குடுத்ததுக்கு நீ தானா வேண்டாம்னு சொல்லிட, இனிமேல் காலேஜ்க்கு போகும் போது வாங்கிட்டு போ, திரும்ப வரும்போது என்கிட்ட குடுத்துரு “.
“வேண்டவே வேண்டாம்பா, என்கிட்ட போன் இருந்தா நீ சும்மா சும்மா கால் மெசேஜ் ஏதாவது பன்னிட்டு இருப்ப “
“போடி லூசு, இன்னைக்கு மட்டும் கொண்டு போ ஈவினிங் என்கிட்ட குடுத்துரு சரியா “.
அனு ஆட்டோவில் ரெஜிஸ்டர் ஆபீஸ் க்கு வந்தாள் “எதுக்குடா என்ன இங்க கூட்டிடு வர சொன்ன மறுபடியும் நாம கல்யாணம் பண்ணிக்க போறோமா”.
“உனக்கு ரொம்ப தாண்டி ஆசை, ஒரு தடவ உன்ன கல்யாணம் பண்ணிட்டே ஒன்னுமே பண்ண முடியாம இன்னும் கன்னி பையனாவே இருக்கேன், இதுல இன்னொரு தடவை வேறையா “
“இப்போ எதுக்குடா இங்க வர சொன்ன அதை சொல்லு முதல்ல “
“எனக்கு கமிஷனா வந்தா இடத்தை உன் பேருல பதிய போறேன் அதுக்கு தான் உன்ன இங்க வர சொன்னே போதுமா “
“லூசாடா நீ இடத்தை உன் பேருல, இல்லனா அத்தை மாமா யாரு பேருலயாது பதிவு பண்ண வேண்டியது தானா “.
“செல்லமா அம்மா, அப்பா பேருல இருந்தா ஏதாவது அவசரம்னா விக்கிறதுக்கு அவங்க கையெழுத்து வேணும், மறுபடியும் அவங்க கனடா போய்ட்டா என்ன பண்ணுறது “
“நான் வேற நீ வேற இல்லடா உன் பேருல பதிவு பண்ணுறது தான் எனக்கு சந்தோஷம் “.
ஒரு வாரம் கழித்து கதிர் வண்டியில் போய் கொண்டிருந்தான். அப்பொழுது நான்கு பேர் வந்து கதிரின் வண்டியை நிறுத்தி
“டேய் தம்பி உன்கிட்ட எத்தனை தடவை சொல்லுறது. இந்த ரியல் எஸ்டேட் வேலைய விட்டுருனு கேக்க மாட்டையா டா நீ ” என்று கூறி அந்த நால்வரும் கதிரை அடிக்க ஆரம்பித்தனர்.
கதிர் அவர்கள் நான்கு பேரையும் அடித்து துரத்தி விட்டான். இருந்தும் அவன் தலை மட்டும் கையில் அடி பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான்.
கதிர் மருத்துவமனையில் இருப்பதை கருப்பு அனுவிடம் கூற அனு கதிரை உடனே பார்க்க வேண்டும் என்று அழ ஆரம்பித்தால் கருப்பு கதிர் தனியா இருக்கும் போது அனுவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.
கதிர் தலை மட்டும் கையில் கட்டுப் போடப்பட்டு இருந்தது. அனு கதிரை பார்த்ததும் ஓடி சென்று அவனை அடிக்க ஆரம்பித்தால். ” என்டா இப்படி பண்ண உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன் யாரு கூடயும் சண்டைக்கு போகத்தனு நான் சொல்லுறத கேக்கவே மாட்டைய நீ “
” உனக்கு ஏதாவது ஆகிருந்தா நான் என்னடா பண்ணுறது, என்ன பத்தி கொஞ்சமாது யோசிச்சு பாத்தியாடா” என்று கூறி அவனை கட்டி பிடித்து அழுதாள்.
“ரஞ்சு ப்ளீஸ் அழாதமா,நான் வேணுன்னு சண்டை போடல அவங்க தான் என்ன அடிக்க வந்தாங்க அதன் நான் அடிச்சேன், இனிமேல் இந்த மாதிரி நடக்காம பாத்துக்குறேன் டா “
“ரொம்ப வலிக்குதா கதிர், உன்ன இப்படி பாக்குறதுக்கு கஷ்டமா இருக்குடா அழுகையா வருது “என்று கூறி மேலும் அழுதாள்.
“லூசு சின்ன காயம் தாண்டி இதுக்கு போய் ஓவரா அழுகுற “
” சின்ன காயமா இருந்தா என்ன பெரிய காயமா இருந்த என்ன நமக்கு பிடிச்சவங்களுக்கு ஒண்ணுன்னா அழுகை வரத்தான் செய்யும் “
“எனக்கு ஏதாவது ஆன தான்டா உனக்கு தெரியும் என்னோட கஷ்டம் என்னனு “.அனு கதிருடன் சிறிது நேரம் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
கதிர் மேலத் தெருவில் பேசி வைத்திருந்த இடத்தை அவன் பேரில் வாங்கி பழைய இடம் புது இடம் ரெண்டும் சேர்த்து ஒரு பெரிய கடையாக கட்ட ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருந்தான். கருப்புவின் அப்பா கொத்தனாராக இருப்பதால் அவரிடமே கடையை கட்டும் பொறுப்பை கொடுத்தனர்.கதிர் கடையில் ஒரு தளம் மட்டுமே எடுக்க நினைத்தான்.
கருப்புவின் அப்பா சொக்கன் கதிரிடம் அண்டர் கிரௌண்டில் ஒரு தளம் அமைத்து அதில் பாதியை பார்க்கிங்காகவும் மிதியை குடோனாகவும் அமைத்துக் கொள்ளலாம் என்று கூற, கதிர் தன்னிடம் இரண்டு தளம் அமைக்க பணம் இல்லை என்று கூறினான்.
கட்டுமான பொருள்களை மட்டும் முதலில் வாங்கித் தருமாறும், வேலை ஆட்களுக்கு கூலியை கடைசியாக தருமாறுக் கூறினார். சொக்கனே கதிரை உடன் அழைத்துச் சென்று மணல், செங்கல், சிமெண்ட் ஆகியவை தரமானதாகவும் விலை மலிவானதாகவும் வாங்க செய்தார்.
கடையின் பூமி பூஜைக்கு நல்ல நாள் பார்த்து குறிக்கப்பட்டது. கதிர் பூஜைக்கு அனுவை அழைக்க அனுவும் வருவதாக கூறினாள். திடீரென்று அனுவின் ப்ராஜெக்ட் ப்ரெசென் டெசன் நாள் மாற்றம் செய்ய பட்டது.
பூஜை அன்று தான் ப்ரெசென்ட்சேன் இருந்தது. அனு கதிரவனிடம் கூற அவன் பூஜை தேதியை மாற்றுவதாக கூற அனு மருத்துவிட்டாள். பூஜை அன்று அனு காலேஜ்க்கு செல்லும் முன்பு அவளை கோவிலுக்கு அழைத்து சென்று அங்கு அவளிடம் ஒரு செங்கலை கொடுத்து அதற்கு ஐயர் மந்திரம் சொல்ல அனு பூஜை செய்தால்.
அனு பூஜை செய்த செங்கலை பூமி பூஜையின் போது நடப்படும் செங்கலுடன் வைத்துவிட்டான்.ஒரு பக்கம் கடையின் வேலைகள் நடந்துக் கொண்டிருந்தன மற்றொரு பக்கம் அனுவின் கல்லூரிப் படிப்பு நிறைவு நாளை எட்டியது. அன்று தான் அனு அந்த கல்லூரிக்கு செல்லும் கடைசி நாள். கல்லூரி முடிந்து அனு கதிரை பார்க்க கடைக்கு சென்றாள்
“வாங்க மேடம் ஒரு வழிய BCA முடிச்சிட்டிங்க, அடுத்து என்ன பண்ண போறீங்க, இனிமேல் இந்த பக்கம்ல வருவீங்களா இல்ல வர மாட்டிங்களா “
அனுவின் படிப்பு முடிய போவதை நினைத்து கதிர் மிகவும் கவலையுடன் இருந்தான். இனிமேல் அவளை தினமும் பார்க்க முடியுமோ முடியாதோ என்று எண்ணினான்.
“என்டா இப்படிலாம் பேசுற, இந்த பக்கம் வரமா நான் வேற எங்கடா போக போறேன், கண்டிப்பா மாசத்துக்கு ஒரு தடவை உன்ன பாக்க வந்துருவேன் சரியா “
கதிர் மிகவும் அதிர்ச்சி அடைந்தான், அனு கூறியதை கேட்டு “என்னடி சொன்ன மாசத்துக்கு ஒரு தடவை தான் என்ன பாக்க வருவியா, மத்த நாள்லாம் என்ன பாக்க வர மாட்டையா”
“கதிர் காலேஜ்ல இருந்து மாசத்துக்கு ஒரு தடவை தான்டா வீட்டுக்கு அனுப்புவாங்க, நான் வீட்டுக்கு போகும் போதுலாம் இங்க வந்து உன்ன பாத்துட்டுதான் போவேன் ஓகே வா “
” நீ எந்த காலேஜ்ல சேர போற “
“திண்டுக்கல் GTN காலேஜ்ல சேர போறேன் கதிர் “
“அங்க எதுக்குடி போற இப்போ நீ படிக்குற காலேஜ்லையே படிக்க வேண்டியது தானா “
“இந்த காலேஜ்ல MCA இல்லடா, அதான் திண்டுக்கல்ல படிக்க போறேன் “
“GTN காலேஜ்க்கு பஸ் இங்க இருந்து தான் டெய்லி போகுதுல அப்போ நீ போகும் போதும் வரும் போதும் பார்க்கலாம் அப்படி தானா “
“நான் காலேஜ் பஸ்ல போக போறது இல்லடா, டெய்லி பள்ளப்பட்டில இருந்து இங்க வரவே 45நிமிடம் ஆகிரும் இங்க இருந்து திண்டுக்கல் போக 45நிமிஷம் ஆகும், டெய்லி போக வரனு சேர்த்து 3மணி நேரம் ட்ராவல் பண்ண வேண்டி இருக்கு அதுனால “
“அதுனால என்ன முழுசா சொல்லித் தொலை டி “
“நான் ஹாஸ்டல்ல சேர போறேன்டா, ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு மாசத்துக்கு ஒரு தடவை தான் அனுப்புவாங்க அதுவும் வெள்ளிக் கிழமை மதியம் வீட்டுக்கு போய்ட்டு, ஞாயிற்று கிழமை சாயங்காலம் அங்க போயிரனும் “
“யாரக் கேட்டு டி நீ ஹாஸ்டல்ல சேர முடிவு பண்ண “என்று கண்கள் சிவக்க கோவமாக கத்தினான்.
“அப்பா, அம்மா கிட்ட கேட்டேன் அவங்க சரினு சொல்லிட்டாங்க “.
“அவங்க சரினு சொல்லிட போதுமா நான் சரினு சொல்ல வேண்டாமா, இப்போ சொல்லுறேன் நல்லக் கேட்டுக்கோ நீ ஹாஸ்டல்ல சேர நான் ஒதுக்க மாட்டேன், டெய்லி போய்ட்டு வர மாதிரி இருந்தா அந்த காலேஜ்க்கு போ, இல்லனா இப்போ படிக்கிற காலேஜ்லையே என்ன குரூப் இருக்கோ அதை எடுத்து படி “என்றான் முடிவாக.
“என்னால டெய்லி 3மணி நேரம் ட்ராவல் பண்ண முடியாது, நான் ஹாஸ்டல்ல இருந்து தான் படிப்பேன்” என்றாள் அனு பிடிவாதமாக.
“நான் சொல்லுறத பேச்சை கேக்க போறியா இல்லையா ,நீ ஹாஸ்டல் போக கூடாது “
“நான் ஹாஸ்டலுக்கு தான் போவேன்” என்றாள் அனு சத்தமாக.
கதிர் அனுவின் கன்னத்தில் ஓங்கி அரைந்து விட்டு.
“நீ இப்போ படிக்குற காலேஜ்ல படிக்குறதா இருந்தா படி இல்லனா நீ படிக்கவே வேண்டாம், நீ படிச்சா வரைக்கும் போதும் வீட்டுலயே இரு ஒழுங்கா “
அனுவின் கன்னங்கள் சிவந்து விட்டது,அவள் அழுதுக் கொண்டே கதிரிடம் “நான் MCA படிக்குறதுக்கு நீ சரினு சொன்ன நாளா தானடா நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன், இப்போ ஏன்டா இப்படி பேசுற “என்று கதிரின் சட்டையை பிடித்துக் கொண்டு கேட்டாள்.
“உன்ன சம்மதிக்க வைக்குறதுகாக தான் நான் அப்படி சொன்னே, என்னால உன்ன பாக்காம இருக்க முடியாது, அதுனால நீ ஹாஸ்டல் போக கூடாது “
“ஓ உன்னால என்ன பாக்காம இருக்க முடியாதுங்குற ஒரே காரணத்துக் காக நான் டெய்லி 3மணி நேரம் பஸ் ட்ராவல் பண்னாலும் உனக்கு பிரச்சனை இல்லை, நான் படிக்காம வீட்டுலயே இருந்தாலும் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை அப்படி தானா”
“கதிர் நீ இவ்வளவு சுயநலகாரன இருப்பன்னு நான் நினைச்சிக் கூட பாக்கலடா ” என்று கூறி அழுதாள்.
“ரஞ்சுமா ப்ளீஸ் புரிஞ்சிக்கோ டா என்ன “
“நீ முதல்ல என்ன புரிஞ்சிக்கிட்டையா டா, நீ லவ் பண்ண சொன்ன பண்ணனும், கல்யாணம் பண்ணிக்க சொன்ன பண்ணிக்கணும், நீ காலேஜ்க்கு போக கூடாதுனு சொன்ன போகமா இருக்கனும், நீ நில்லுனு சொன்ன நிக்கணும், உக்காருன்னு சொன்ன உக்காரனும் “
“நான் என்ன பொம்மையா நீ கீ குடுத்ததும், நீ சொல்லுறதுலாம் செய்யுறதுக்கு “
“முடியாதுடா இனிமேல் நீ சொல்லுற எதையும் கேக்க முடியாது. நான் GTN ல தான் படிப்பேன், ஹாஸ்டல்ல தான் தங்குவேன், நாளைக்கே போய் அங்க அப்ளிகேஷன் வாங்குறேன் ” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினால்.
“ரஞ்சு ப்ளீஸ் டி அங்க போகாத டி “
“கதிர் ப்ளீஸ் இதுக்கு மேல ஏதும் பேசாத,நான் கிளம்புறேன்”என்று கூறி வீட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
கதிர் அனுவின் ஆசைகள், விருப்பங்களை பற்றி யோசிக்காமல் அவனை பற்றி மட்டுமே சுயநலமாக எண்ணியத்தின் விளைவு தான் அனுவின் இந்த கோவம், அவளின் கோவம் குறையுமா கதிரிடம் திரும்பி வருவாளா என்பதை காலம் தான் கூற வேண்டும்.
