Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனை ஆராதித்த பூம்பாவை

அத்தியாயம் 14

அத்தியாயம் 14

 

அபயசிம்ஹாவும் சிற்பிகாவும் அந்த பார்ட்டி ஹாலில் நுழைந்த முதல் அனைவரின் கவனமும் அவர்கள் மேல் தான் விழுந்தது.. ஆண்மையின் மறு உருவாய் அபயும்.. பேரழகு பெட்டகமாய் சிற்பிகாவும் பார்ப்போரை மதி மயக்கச்செய்தனர்..

 



Advertisement

ஆண்களுக்கு.. அழகோவியமாய் திகழும் சிற்பிகாவை மீண்டும் மீண்டும் பார்க்க மனம் தூண்டினாலும்.. அபயை நினைத்து மனதையும் விழியையும் கட்டுப்படுத்தியிருக்க… பெண்களோ அபய் திருமணமானவன் என புரிந்தும்.. தெரிந்தும்.. சிற்பியின் முன்னேயே அவனிடம் நெருங்க முயற்சிக்க.. அவர்கள் யாவரையும் தன் ஒற்றை பார்வையில் தூர நிறுத்தியவன்.. சிற்பியின் இடையில் இருந்த தன் கரத்தை விலக்காமலே.. பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டிருந்தான்…

 

பென்னவளுக்கு ஆணின் கரம் சங்கோஜத்தை அளித்தாலும்.. அபயை பற்றி அறிந்ததால் எதுவும் கூறாமல் இருந்தாள்.. அப்பொழுது அங்குள்ளோர் அனைவருக்கும் மது விநியோகிக்கப்பட.. தனக்கென ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டவன்.. சிற்பிகாவிற்கு தனியாக பழரசம் வருவித்து… சற்று தூரத்தில் பெண்கள் மத்தியில் இருந்த இருக்கையில் அமருமாறு கூறினான்..

Advertisement

 

Advertisement

அபயிடத்தில் சிற்பிகா வீழ்ந்து கிடப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.. முதன் முதலாக இவள் கலந்துகொண்ட பார்ட்டியில் மது குடித்துக்கொண்டு சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்கள் பெண்கள் அனைவரும் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்க.. சிற்பி அதனையெல்லாம் அதிர்ச்சியுடன் பயந்து பார்க்க.. அவள் பயத்தை உணர்ந்தார் போல் அபய் அந்நேரம் மட்டும் அவளை பெண்கள் மத்தியில் விடுவான்.. மற்ற நேரம் முழுதும் அவள் அவன் கைவளைவிலே இருப்பாள்..

 

சிற்பிகா தன் கரத்திலிருந்த பழரசத்தை அருந்தியவாறு போனை பார்த்துக் கொண்டிருக்க.. சுற்றியுள்ள இளம்பெண்களின் மத்தியில் சலசலப்பு.. ” ஹே அது சோனியா.. தான எங்க ஒரு மாசமா அவள காணும்.. ”

Advertisement

 

” ஹ்ம்ம் அபய்க்கு கல்யாணம் ஆனத நினச்சு பீல் பண்ணிக்கிட்டு இருந்துருப்பா… நான் தான் அபய்சிம்ஹா சக்சேனாவோட கேர்ள் ப்ரெண்டுன்னு.. என்னமா சீன் போட்டா.. பாரு இப்போ எல்லாம் ஊத்திக்கிச்சு… ” என மற்றொருவள் கேலியாக சிரிக்க.. அதில் அனைவரும் கலந்துகொண்டனர்..

 

சிற்பியின் செவியில் இவையணைத்தும் விழுந்தாலும் எவ்வித உணர்ச்சியும் காட்டாது இருந்தாள்.. ஆனால் அவள் கண்கள் மட்டும் அவள் அனுமதியின்றி சோனியாவின் பக்கம் திரும்பியது..

 

பெண்களின் சராசரி உயரத்தை விட அதிகமான உயரத்தில் அதை மேலும் தூக்கி காட்டும் குதிங்கால் ஹீல்ஸுடன் பளப்பள வென்று மின்னும் அதிநவநாகரீக உடையில்.. கவர்ச்சி புயலாய் வந்துக்கொண்டிருந்தாள்.. சோனியா. அதுவும் அந்த உடை அவளின் மேலங்கத்தை பாதி மறைத்தும் மறைக்காது காட்டிக்கொண்டிருக்க.. பல ஆண்களின் கழுகு பார்வை அவளின் அங்கங்ககளை வெறித்துக்கொண்டிருந்தது..

 

அதைப்பார்த்து கர்வமாய் புன்னகைத்தவள்.. சிற்பிகாவின் அருகிலுள்ள பெண்கள் கூட்டத்தின் அருகே வந்தாள்…

 

” ஹாய் காய்ஸ்…”

 

” ஹாய் சோனியா.. என்ன ஒரு மாசமா ஆளையேக் காணும்.. ”

 

” ஹ்ம்ம் பிரெண்ட்ஸ்சோட யூரோப் ட்ரிப் போயிருந்தேன்.. இன்னைக்கு மார்னிங் தான் வந்தேன்.. ”

 

” ஓஹ் அப்படியா நான்கூட அபய் மேரேஜ் செஞ்சுக்கிட்டதால வெக்சாகி எங்கயோ போயிட்டியோன்னு நினச்சேன்.. ” என கேலியாக கூற.. உள்ளுக்குள் கனன்றாலும்.. வெளியில் ஆர்ப்பாட்டமாக புன்னகைத்தவள் ” வாட் ரப்பிஷ்.. அபய்க்கும் எனக்கும்மான ரிலேஷன்ஷிப்ப இந்த ஸ்டுபிட் மேரேஜ் ஸ்டாப் பண்ணுமா.. ” என அலட்சியமாக தோளை குலுக்க.. சில பெண்களின் பார்வை சிற்பிகாவை தொட்டு மீண்டது…

 

” சோ.. அபய்கூட இன்னும் ரிலேஷன்ஷிப்ல தான் இருக்கேன்னு சொல்றியா.. ” என அவர்கள் சிற்பியை ஓர விழியில் பார்த்தவாறு கேட்க..

 

சோனியாவும் வஞ்சம் சூழ்ந்த விழிகளால் சிற்பியை பொசிக்கிக் கொண்டே.. ”கண்டிப்பா.. வேணும்னா இப்போ ஒரு டெமோ காமிக்கட்டுமா.. ” என திமிராக அனைவரையும் பார்த்தவள்.. நேரே அபயிடம் நெருங்கி.. அவன் எதிர்பாராத நேரம் அவனை அணைத்து விடுவித்தாள்..

 

அதை அபய் விரும்பாது அவளை கடுமையாய் முறைக்க.. அதை கவனியாதவள் போல்.. ” ஹாய் பார்லிங்.. மேரேஜ் செஞ்சுக்கிட்டிங்களாம்.. பிரெண்ட்ஸ் சொன்னாங்க.. ஹாப்பி மேரிட் லைஃப் என அவனிடம் வாழ்த்து தெரிவித்தவள்.. உங்க ஒயிவ் ரொம்ப அழகாயிருக்காங்க.. யூ ஆர் லக்கி.. ” என கிள்ளை மொழியில் கொஞ்சி விட்டு மீண்டும் பெண்கள் கூட்டத்திற்கு வந்தாள்.. தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு இருவரும் கட்டியணைத்து பேசுவது போல் அவள் உருவகப்படுத்தியிருக்க.. அதையே அனைவரும் நினைத்தனர்..

 

” பார்த்தியா.. சோனியா சொன்னது உண்மை தான் போல.. பாரேன் நம்மள கிட்டக்கூட விடாத அபய்.. அவள மட்டும் கட்டிப்பிடிச்சுட்டு இருக்காரு.. ”

 

” ஹ்ம்ம் ஆமாப்பா.. ” என அனைவரும் ஆமோதித்து சிற்பிகாவை கேலியாக பார்க்க.. அவளோ யாரையும் பார்க்கும் துணிவின்றி போனிலேயே தன் முகத்தை புதைத்தாள்… அவள் முகத்தை மட்டும் இப்பொழுது யாரேனும் கண்டால்.. உயிருடன் வதைக்கும் பொழுது ஏற்படும் உயிர்வலியை புரிந்திருக்கக்கூடும்..

 

” ஹ்ம்ம் பார்த்தீங்களா.. அபய் யார வேணாலும் கல்யாணம் பண்ணிக்கட்டும்.. ஆனா அவருக்கு எப்போதும் நெருக்கமானவ நான்தான்.. அதோட பச்சையா சொல்லனும்னா என்னால மட்டும்தான் அவர திருப்தி படுத்த முடியும்.. ” என மேலும் மேலும் அவளும் அபயுமான நேரத்தில் அவனின் வேகத்தையும் அவன் உடற்கட்டையும் என பேசவே கூசும் படியான அந்தரங்க பொழுதுகளை அவள் வர்ணித்துக் கூற.. சிற்பிகா முகம் கன்றி அதற்க்கு மேல் அங்கிருக்க முடியாது எழுந்து வெளியே சென்றாள்…

 

**********************************************

 

சோனியாவிற்கு.. 45 வயதில் ஒரு கொழுத்த பணக்காரன் அறிமுகமாக.. அவளும் அவனுடன் சுற்றிக்கொண்டிருந்தாள்.. ஒன்றரை மாதம் முன் அவனுடன் யூரோப் சென்றவள்… இன்று காலைதான் வந்தாள்… அப்பொழுது தான் அவளுக்கு அபய் திருமணம் செய்துக்கொண்டதே தெரிந்தது…

 

அபயின் குணத்திற்கு அவன் திருமணமே செய்ய மாட்டான் என அவள் மெத்தனமாய் இருக்க.. அவனோ அழகு ரதியினத்தவளை மணந்துக் கொண்டான்..

 

அதுவும் வலைத்தளத்தில் இருந்த அவர்களது ரிஷப்பஷன் மற்றும் திருமண புகைப்படத்தைக் கண்டு உள்ளுக்குள் புகைந்துக் கொண்டிருந்தாள்.. சிற்பியின் இயற்கை வனப்பு அவளை கொதிப்படைய செய்தது..

 

பார்ட்டிக்கு அபய் சிற்பிகா வந்த நேரத்தில் தான் அவளும் வந்தாள்.. இருவரின் நெருக்கமும்.. சிற்பியின் முகச்சிவப்பும் அவர்களின் மகிழ்ச்சியான வாழ்வை பறைசாற்ற.. அதனை நாசம் செய்யும் குயுக்தியுடன் வந்தவளுக்கு.. வாய்ப்புகள் தானாய் தேடிவர.. அழகாய் அதனை பயன் படுத்திக்கொண்டாள்..

 

அபய் எப்பொழுதும் போல் இருந்திருந்தால் அவளின் கயமத்தனத்தை கண்டுகொண்டிருப்பான்.. ஆனால் சிற்பிகாவின் மீதே அவன் கவனம் இருந்ததால் சோனியாவின் கள்ளத்தனம் கருத்தில் பதியவில்லை.. அதனை தனக்கு சாதகமாக்கி அனைவரின் முன்பும்.. தங்களுக்குள் இன்றும் உறவு இருப்பதாக காட்டிக்கொண்டவள்.. மனம் நொந்து அமைதியாக வெளியேறிய சிற்பிகாவை ஏளனமாக பார்த்தாள்…

 

முகம் சிவந்து.. விழிகளில் நீர்க்கோர்க்க.. பார்க்கவே பரிதாபமாய் நிராதாரவான தோற்றத்தில் நின்றுக்கொண்டிருந்தாள்.. சிற்பிகா. இப்போது அவள் மனம் முழுவதும் வேதனை மட்டுமே நிறைந்திருந்தது… சோனியா கூறிய ஒவ்வொரு வார்த்தையும்.. மறுபடி மறுபடி அவள் காதினுள் ஒலித்துக்கொண்டிருக்க.. இருக்கும் இடம் மறந்து கத்தி விடுவோமோ என பயந்தவள்.. வேகமாய் அங்கிருந்து செல்லப்பார்க்க.. அவள் கரத்தை பிடித்து இழுத்த அபய் தங்கள் காரை நோக்கி செல்ல உயிருள்ள சிலையாய் எவ்வித உணர்ச்சியும் காட்டாது அவனுடன் சென்றாள்..

 

அபயின் அந்தரங்க பொழுதின் வேகத்தையும் அவனின் உணர்ச்சிகளையும் சோனியா கூறியது சிற்பியின் மனதை மிகவும் பாதித்தது.. என்னதான் அபயை பற்றி அவன் மூலமாகவே அனைத்தையும் அறிந்தாலும் மாற்றாள் தன் கணவனுடன் உல்லாசித்ததை பற்றி மற்றவளிடம் கூறும்பொழுது அவள் உள்ளம் அருவருத்து போனது…

 

அவனுடன் அவள் காதலோடு கூடிய கூடல் பொழுதுகளெல்லாம் சிந்தைக்கு வந்து அவளை கூசச்செய்ய… அந்நேரத்திலும் எங்கே இதனால் தன்னவனை வெறுத்து விடுவோமோ என மிகவும் பயந்து போனாள் பெண்ணவள்…

 

வீட்டுக்குள் நுழைந்த மறுநிமிடம் சற்று தன்னை நிலை செய்ய பெண்ணவள் தனிமை வேண்ட.. அவள் உணர்வுகள் புரியாத ஆடவன்.. அவளை பின்னிருந்து அணைத்து முன்மாலையில் விட்டதை தொடரும் முயற்சியில் இருந்தான்…

 

ஆனால் அவளோ அவனை தன்னிடமிருந்து பிரிக்க முனைய.. ஏற்கனவே மது போதையில் இருந்தவனுக்கு அவளை அனைத்தவுடன் அவளின் ஸ்பரிசம் மேலும் போதையை இரட்டிப்பாக்க அவளின் மறுப்பை சட்டை செய்யாது அவளை தன் ஆதிக்கத்தினுள் கொண்டு வர.. அவளின் பொறுமையும் பறந்தது…

 

அய்யோஓஓஓ… என்ன விடுங்களேன்.. என தன் ஒட்டுமொத்த பலத்தையும் கரத்தில் கொண்டுவந்து அவனை தள்ளியவள்.. ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க.. உங்களுக்கு தான் சோனியா தானியான்னு நிறைய பேர் இருக்காங்கள்ல.. அவளுங்ககிட்ட போக வேண்டியதுதான.. அப்புறம் ஏன் என்னை தொல்லை பண்றிங்க.. எனக்கு உங்க கூட இருக்க முடியல.. அருவருப்பா இருக்கு என தன் இயல்புக்கும் மாறாய் தன்னிரு செவியிலும் கரத்தை பதித்து விழி மூடி அவள் கத்திய மறுநொடி அவள் செவிப்பறை கிழயும் அளவிற்கு அறை விழ.. சுழன்றுக் கீழே விழுந்தாள்…

 

கண்கள் இருட்டி… கன்னம் ஒருபக்கம் தீயாய் எரிய… தள்ளாடும் சிரத்தை கரம் கொண்டு பற்றி மெல்ல விழியை திறக்க.. தன் ஆரறையடி உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று.. விழி சிவக்க புஜங்கள் முறுக்கேரி முழு அரக்கனாய் நின்றிருந்தான் அபயசிம்ஹா சக்சேனா…

 

அப்பொழுது தான் அவனவளுக்கு தான் கூறிய வார்த்தைகளும் அதன் வீரியமும் புரிய.. அடுத்து அபய் என்ன செய்வானோ என பயந்து நின்றாள்…

 

அவளின் பயத்தை மெய்யாக்குவது போல் தான் அபயும் பேசினான்… ” என்ன சொன்ன.. நான் உன்கிட்ட வந்தா அருவருப்பா இருக்கா.. ” என அவள் கரத்தை இழுத்து அவள் தோள்களை உலுக்கி கேட்க.. பென்னவளுக்கு கையிரண்டும் அவன் கரத்தோடே சென்றது போல் அப்படியொரு வலிக்கொடுக்க.. சிற்பிகா அலறினாள்…

 

ஆனால் அவ்வரக்கனோ அதனை கண்டு சிறிதும் கலங்காது… எது அருவருப்பா இருக்கு இதோ இப்படி நான் உன்ன பிடிக்குறதா என அவள் எலும்பு நொறுங்கும் அளவிற்கு தன்னோடு சேர்த்து அணைக்க சிற்பி மூச்சு விட முடியாது திணறினாள்…

 

இல்ல இப்படி முத்தம் கொடுக்குறது அருவருப்பா இருக்கா என அவள் மென் இதழை மென்று அவள் குருதியோடு சேர்த்து உறிஞ்ச.. அவள் விழிகளிலிருந்து கண்ணீர் பெறுகியது…

 

அவள் ஆடையை கிழித்து எறிந்தவன்… இப்படி பண்றது அருவருப்பா இருக்கா.. இல்லை இப்படி பண்றது அருவருப்பா இருக்கா என சில அந்தரங்களை வெளிப்படையாக கூறி அவளின் பெண்மையை வதைக்க பெண்ணவள் துடிதுடித்து போனாள்… போதும் போதும்மென அளவிற்கு அவளை வேட்டையாடினான்… விடியல் வந்தும் அவளை விடாது இருந்தவன்.. ஒருக்கட்டத்தில் அவள் மயங்கியது தெரிந்தே அவளை விலக்கினான்… அவள் கன்னத்தில் நீர்க்கோடுகளின் தடத்தோடு அபயின் விரல்த்தடமும் இருந்தது…

 

அபய்க்கு இன்னும் மனக்கொதிப்பு அடங்கவில்லை… என்னைய பார்த்தா அருவருப்பா இருக்குன்னு சொன்ன.. உனக்கு இருக்குடி என அவளுக்கான அடுத்த தண்டனையோடு அவன் காத்திருக்க.. இதையரியாத பூமேனியவள்.. மயக்கமும் உறக்கமுமாய் இருந்தாள்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!