அத்தியாயம் 15.2 : இரவின் பனித்துளி!!!
அதற்கு மேல் அவளுடைய நெருக்கத்தை தாங்க முடியாமல் அவள் முகம் நோக்கி குனிந்தான் தீபக். அவனுடைய இதழ்கள் அவள் இதழ் மீது அழுந்தி பதிந்தது. அவனுடைய இதழ் தீண்டல் வெகு நேரம் நீடித்தது.
அவளை விட்டு பிரியும் எண்ணம் அவனுக்கு இருந்ததாகவே தெரியவில்லை. அவளும் அவனுடைய செய்கைக்கு உடன் பட்டு அசையாமல் இருந்தாள்.
Advertisement
அவனது முத்தமும், அவனுடைய இறுக்கமான அணைப்பும் அவளை மொத்தமாக சிதறச் செய்தது. ஒரு முத்தத்துக்காக அவளிடம் யாசகம் கேட்டவன் இன்று கணக்கில்லாமல் அவளிடம் இருந்து பெற்றுக் கொண்டான்.
அவன் கண்களில் வழிந்த காதலில் அவள் நடுங்கி தான் போனாள். இப்போது யாருமற்ற தனிமை, அவனுடைய நெருக்கம் அவளை
Advertisement
பயமுறுத்தியது.
Advertisement
தன்னுடைய தாகம் தீர்த்து முடித்து விட்டு அவளிடம் இருந்து விலகியவன் “தேங்க்ஸ் டி”, என்றான்.
Advertisement
போலியாக அவனை முறைக்க முயன்று தோற்றாள் காயத்ரி. “இதுக்கு மேல இங்க இருந்தா என்னோட கண்ட்ரோலை நானே இழந்துருவேன் டி. நான் கிளம்புறேன். சே எத்தனை நாளை வேஸ்ட் பண்ணிட்டேன். முன்னாடியே விளக்கம் கேட்டிருந்தா இதுக்குள்ள பல தடவை இந்த மாதிரி நடந்துருக்கும்”, என்றதும் அவள் முகம் குங்குமமாக சிவந்து போனது.
“இப்ப எப்படி இருக்க தெரியுமா காயு? அப்படியே சொக்குது. உன்னை விட்டு போகவே மனசில்லை டி”, என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அவளை நோக்கி குனிந்தவனுக்கு அவள் இதழ்களைத் தான் விட முடியவில்லை.
அவனுடைய இதழ் தீண்டலும், அவளுடைய கரங்கள் அவள் வெற்றிடையில் செய்யும் மாயாஜாலமும், அவன் பேசி விட்டதால் வந்த சந்தோஷமும் அவளுக்கு சொர்க்கத்தில் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தியது.
அவனுடைய கரங்கள் அவள் உடலில் ஏற்படுத்தும் ஆதிக்கம் அதிகமாக ஆரம்பித்ததும் அவனிடம் இருந்து பிடிவாதமாக விலகினாள்.
செல்ல சிரிப்போடு அவளை முறைத்தவன் சந்தோஸமாக அவளிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்கு சென்றான். அவன் சென்றதும் கதவை பூட்டி விட்டு சோபாவில் அமர்ந்தவள் உடை மாற்ற வேண்டும் என்பதைக் கூட மறந்து போனாள். அவன் ஏற்படுத்திய உணர்வலைகளில் மீண்டும் பயணிக்க ஆரம்பித்தாள்.
நமக்கு பிடித்த நிகழ்வுகளை அனுபவிக்கும் போது ஒரு சுகம் என்றால் அதை எண்ணிப் பார்க்கும் போது மற்றொரு சுகம். அதை தான் அவள் செய்து கொண்டிருந்தாள்.
சௌமி வந்து காலிங் பெல் அடிக்கவும் தான் நடப்புக்கே வந்தாள் காயத்ரி. “இவ்வளவு நேரமாவா அதை யோசிச்சிட்டு இருந்தேன்”, என்று எண்ணி அவளுக்கே வெட்கமாக வந்தது.
அவளுடைய முக மாறுதல்களை விசித்திரமாக பார்த்த சௌமி அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்தாள்.
காயத்ரி வீட்டில் இருந்து கிளம்பிய தீபக் நண்பர்களுடன் சுற்றி விட்டு தாமதமாக தான் வீட்டுக்கு சென்றான். குளித்து வேறு உடை அணிந்தவன் முதல் வேலையாக அவளைத் தான் போனில் அழைத்தான். ஆர்வமாக அவனது போனை எடுத்தவள் அவனுடன் சந்தோசமாக உரையாடினாள். நண்பர்களாக இருக்கும் போது அவர்கள் வெகு நேரம் போன் பேசுவார்கள். ஆனால் இன்று அவர்களுக்கு பேச ஆயிரம் விஷயங்கள் இருந்தது.
இத்தனை நாள் மனதுக்குள் புதைத்திருந்த ஏக்கங்களை எல்லாம் அவளிடம் பகிர்ந்து கொண்டான் தீபக். அவன் மீது எந்த நொடி காதல் வந்தது என்று தெரியாமல் குழம்பியவள் அவனிடமே கேட்டாள்.
முதல் நாள் அவனை பார்த்த உடனேவா? அவளைப் பார்த்து கண்ணடித்ததாலா? அதன் பின் அவனுடைய திறமைகளை எல்லாம் கண் கூடாக கண்ட பொழுதா? நண்பர்கள் ஆன போதா? சாரு அவர்கள் வாழ்க்கையில் வந்த போதா? இல்லை முதல் முறை அவளிடம் அதிக உரிமை எடுத்த போதா? எப்போது என்று தெரியாமலே அவனை காதல் செய்த கதையை அவனிடம் பேசினாள் காயத்ரி.
அன்று தான் மனதுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்யும் சந்தோஷத்தை உணர்ந்தான் தீபக். இது வரை இருந்த தவிப்புகள், தடுமாற்றங்கள் அனைத்தும் இல்லாமல் சென்றது.
இருவரும் தங்களை மறந்து கதை பேசிக் கொண்டிருக்க அன்று இரவு உறக்கம் தொலைந்தது இருவருக்கும். தீபக்கின் மனம் முழுவதும் அவளையே தேடியது. அவளுடைய கதகதப்பு இப்போதும் தன்னுடனே இருப்பது போல உணர்ந்தான்.
அதன் பின் நாட்கள் மின்னல் வேகத்தில் நகர்ந்து திருமண நாளும் அழகாக விடிந்தது. அனைவரின் ஆசியோடு காயத்ரி கழுத்தில் தாலியை கட்டினான் தீபக்.
இருவரின் நண்பர்கள் அனைவரும் மணமக்களைக் கிண்டல் செய்ய பொழுது அழகாக சென்றது. அதன் பின் இரண்டு குடும்பமும் குல தெய்வ கோயிலுக்கு சென்றார்கள். அதன் பின் விருந்து, மறுவீடு அழைப்பு என்று நேரம் சென்றது.
அன்று இரவு முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது என்பதால் அவனது அறை அலங்கரிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. எப்போதடா இரவு வரும் என்று ஆவலாக காத்திருந்தான் தீபக்.
காயத்ரி பற்றி அவன் யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அப்போது “என்ன டா, ஒரு மார்கமா உக்காந்து இருக்க?”, என்று கேட்ட படி அவன் அருகே வந்து அமர்ந்தாள் சாரு.
“ஈ.. ஒண்ணும் இல்லையே”, என்று சிரித்தான் தீபக். அப்போது ரேவதியும் அங்கே வந்து அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தாள்.
அப்போது “கொஞ்சமாவது உனக்கு மனசாட்சி இருக்கா?”, என்று சீரியஸான குரலில் கேட்டாள் சாரு.
“என்ன ஆச்சு சாரு? எதுக்கு இப்படி கேக்குற?”, என்று கேட்டாள் ரேவதி.
“பின்ன என்னக்கா? வார்த்தைக்கு வார்த்தை என்னை தங்கச்சி மாதிரின்னு சொல்லிட்டு அலையுறான்? ஆனா எனக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கிட்டான். எனக்கு ஒரு மாப்பிள்ளை பாக்கணும்னு இவனுக்கு தோணுச்சா? கேளுங்க ரேவதி அக்கா”, என்று சாரு சொன்னதும் தீபக்கும் ரேவதியும் சிரித்தார்கள்.
“ஆமா, எங்க கூட படிச்சிட்டு கிடைச்ச வேலையை பாக்காம பாரின்ல போய் மேல படிக்கப் போனா. அதுக்கு அப்புறம் டாக்டர் பட்டம் வாங்குறதுக்கு படிச்சிட்டே இருக்கா. இப்படி இருந்தா அத்தையும் மாமாவும் இவளை எப்படி கரை சேப்பாங்க? எனக்கு என்னமோ எங்க பிள்ளைகள் ஸ்கூல்க்கு சேந்த அப்புறமும் இவ படிப்பான்னு தான் தோணுது”, என்று தீபக் சொன்னதும் அவன் தலையில் ஒரு கொட்டு கொட்டினாள் சாரு.
அப்போது அரவிந்த் அழைத்ததும் ரேவதி எழுந்து செல்ல சாருவும் தீபக்கும் மட்டும் தான் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது எதற்காகவோ ரேவதியை அழைக்க வந்த காயத்ரி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து விட்டாள்.
அவள் பார்ப்பது அவனுக்கு தெரியாததால் அவன் சாருவிடம் கடலை வறுத்துக் கொண்டிருக்க அவள் காதில் இருந்து புகையாக வந்தது.
இருவரும் மாற்றி மாற்றி அடித்துக் கொள்ள காயத்ரிக்கோ எரிச்சல் உச்சத்தில் சென்றது.
அப்போது “என்ன ஆச்சு காயு, இன்னும் சேலை கட்டாம இருக்க?”, என்று கேட்ட படி வந்த ரேவதி காயத்ரியை அறைக்குள் அழைத்து சென்று விட்டாள். கடுப்புடன் முதலிரவுக்கு தயாரான காயத்ரி “ரூமுக்கு வா டா உனக்கு இருக்கு?”, என்று எண்ணிக் கொண்டாள்.
சாருவும் தீபக்கும் தங்களின் காலேஜ் கதையைப் பற்றி பேசி அரட்டை அடித்துக் கொண்டிருக்க “ஏய், அவனை ரூமுக்கு போக சொல்லுன்னு சொல்லுறதுக்கு தானே டி உன்னை அனுப்பி வச்சேன்? நீ என்ன டான்னா அவன் கூட பேசிட்டு இருக்க? நீ எழுந்து வா. உன் அம்மா உன்னைக் காணும்னு தேடுறா. நல்ல நேரம் ஆரம்பிக்க போகுது? தீபக் உன் ரூமுக்குள்ள போ”, என்று சொல்லி விட்டு காயத்ரியை பார்க்கச் சென்றாள் மீனாட்சி.
“அடப்பாவி, என்னை அம்மா ரூமுக்கு போக சொல்லி உன்கிட்ட சொல்லி விட்டாங்களா? அதைச் சொல்லத்தான் நீ வந்தியா? அப்புறம் எதுக்கு டி அதைச் சொல்லாம என் கூட மொக்கை போட்டுட்டு இருக்க?”, என்று கேட்டான் தீபக்.
“என்ன டா அவசரம்? நீ என் கூட பொறுமையா உக்காந்து கதை பேசிட்டு நாளைக்கு உன்னோட ரூமுக்கு போ. வா வா உக்காரு. நாம கதை பேசுவோம். ”
“என்னது நாளைக்கா? கதையை கெடுத்த போ. இந்த நாளுக்காக மனுஷன் எத்தனை வருஷமா காத்திருக்கான்? நீ என்ன டான்னா உன்கிட்ட மொக்கை போடச் சொல்ற?”
“வெக்கமா இல்லையா டா? இப்படி அலையுற?”
“இதுல என்ன வெக்கம்? உனக்கு கல்யாணம் ஆனா தெரியும். இதுக்காவது உனக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பாக்கணும் டி? இரு நான் மாமா கிட்ட சொல்றேன். அப்புறம் பேசினது போதும். நான் என்னோட ரூமுக்கு போறேன் பா. அப்ப தான் என் டார்லிங் வருவா. அவளை சீக்கிரம் ரூமுக்கு அனுப்பி விடு. அவ கிட்டயும் மொக்கை போட்டுட்டு இருக்காத”
“உன் பொண்டாட்டி கிட்ட எங்க பேசுறது? கல்யாணம் முடிஞ்ச அப்புறம் கூட என்னை வில்லி மாதிரியே பாக்குறா?”
“அதுக்கு காரணம் நீ தான். வேணும்னே அவளும் நானும் பேசிட்டு இருக்கும் போது எங்களுக்கு இடைல வந்து உக்காந்துட்டு என் கிட்ட மட்டும் பேசி அவளை வெறுப்பேத்துற? பின்ன அவ அப்படித் தான் நினைப்பா”
“என்ன டா நின்னுட்டு பேசிட்டு இருக்க? உக்காந்து பேசு டா. உன்கிட்ட ஒரு முக்கியமான கதை பேசணும்?”
“என்ன கதையா இருந்தாலும் ஒரு மாசம் கழிச்சு வந்து சொல்லு. பை”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்கு வந்தான் தீபக்.
அவன் வந்து ஒரு பத்து நிமிடம் கழித்து அழகு தேவதையாக அறைக்குள் வந்தாள் காயத்ரி.
ஆவலாக அவன் அவளை நெருங்க அவளோ அவனை தீப்பார்வை பார்த்தாள்.
அவள் பார்வை அவனுக்கு கலவரத்தைக் கொடுத்தது. “எதுக்கு முறைக்கிறா?”, என்று யோசித்த படியே “என்ன ஆச்சு காயு? ஏன் ஒரு மாதிரி இருக்க?”, என்று கேட்டான்.
அவள் முறைத்துக் கொண்டே இருக்கவும் அவளை நெருங்கியவன் அவளுடைய கரத்தைப் பற்றினான்.
“ஒழுங்கு மரியாதையா கை எடு. இன்னைக்கு ஒண்ணுமே கிடையாது. எடு டா கையை”, என்றாள் காயத்ரி.
“கொஞ்சமாவது மரியாதை கொடு டி. நான் உன் புருஷன். அத்தை எத்தனை தடவை என்னை வாங்க போங்கன்னு சொல்லச் சொல்றாங்க? ஒரு தடவையாவது கூப்பிடுறியா?”
“இப்ப அது ரொம்ப முக்கியம்?”
“ஆமா ஆமா அதுவா முக்கியம்? இன்னைக்கு வேற முக்கியமான விஷயம் எல்லாம் இருக்கு அப்படித் தானே செல்லம்?”, என்று சொல்லி மீண்டும் அவள் கரம் பற்ற “கையை எடு டா. என் கிட்ட வரக் கூடாது”, என்றாள்.
பசியில் இருப்பவனின் முன்னே விருந்து சாப்பாடை பரிமாறி விட்டு சாப்பிடாதே என்றால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு மனநிலையில் இருந்தான் தீபக்.
அவளது வாசனை, அருகாமை, அவனை தகிக்க செய்தது. அவளுடைய அழகு அவனுக்கு போதை ஏற்றியது.
“ஏய் ஏண்டி அப்படிச் சொல்ற? அம்மா இப்ப தான் நல்ல நேரம்னு எல்லாம் சொன்னாங்களே?”, என்று அதிர்வாக கேட்டான்.
“ஆமா இப்ப அது ஒண்ணு தான் குறைச்சல். நீ பண்ணுறதுக்கு உன் மண்டையை உடைக்கணும்னு எனக்கு ஆத்திரம் வருது. நீ திருந்தவே மாட்டல்ல?”, என்று கேட்டாள் காயத்ரி.
“நான் என்ன டி பண்ணுனேன்? எதுக்கு திருந்தனும்?”
“அவ கிட்ட என்ன இளிப்பு வேண்டி கிடக்கு? இன்னும் அடிச்சு அடிச்சு அவ கூட விளையாடிட்டு இருக்க. எவ்வளவு திமிர் இருந்தா நீ அப்படிச் செய்வ?”, என்று அவள் கேட்டதும் தான் அவனுக்கு விஷயம் புரிந்தது.
“அது சும்மா டி? அவ வேணும்னே உன்னை சீண்டுவான்னு உனக்கு தெரியும்ல? சாரு எனக்கு தங்கச்சி மாதிரி மா”, என்று சொல்லிக் கொண்டே அவள் இடையை வளைத்தான். அதை அவள் உணரவே இல்லை.
“இருந்தாலும் நீ எப்படி அவ கூட பேசலாம்?”, என்று கேள்வி கேட்டாள் அவள். அவள் மனம் முழுவதும் அதிலே இருந்தது. தீபக்கின் நெருக்கம் அதிகரிப்பதை அவள் உணரவே இல்லை.
அவன் இன்னும் அவளை நெருங்கி அவள் காது மடலில் தன்னுடியாய இதழ்களை புதைக்க, அப்போது தான் அவன் தொடுகை உணர்ந்து அவனுக்குள் தொலைய ஆரம்பித்தாள் காயத்ரி.
அவளை முதல் முறையாக பெண்ணென்று உணர வைத்தவன் அவன் தான். அவளிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டதும் அவன் தான். அவன் தொட்டதும் அவள் மனம் கிளர்ந்தது.
அவன் பார்வை அவள் மீது வேட்கையுடன் பதிந்தது. அவன் பார்வையில் இருந்தே வேட்கையில் அவள் உடல் நடுங்கியது.
“தீபு”, என்று தடுமாற்றத்துடன் ஒலித்தது அவள் குரல். அவள் குரல் நடுங்கியது. அவள் பேசவே அவசியம் இல்லை என்பது போல அவள் முகம் நோக்கிக் குனிந்தவன் அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான். சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து விலகி அவளை அப்படியே கட்டிலில் சரித்து அவள் மீது படர்ந்தான்.
அவன் ஏற்படுத்திய உணர்வலைகளை தாங்க முடியாமல் அவன் மார்பிலே முகம் புதைத்தாள். அவன் கையில் இருந்து அவள் விடுபட விரும்பவில்லை என்பது போல அவனுக்குள் தொலைந்து போனாள்.
அதன் பின் அவன் அவளை விடவே இல்லை. அவள் தூங்குவதற்கு அவன் அனுமதிக்கவே இல்லை.
அதிகாலையில் ஆதவன் தன்னுடைய செங்கதிர்களை இப்புவியில் செலுத்தி தன்னுடைய ஆதிக்கத்தை ஆரம்பிக்கும் போது மீதமிருக்கும் இரவின் பனித்துளி போல அவர்கள் கண்களில் தூக்கம் மிச்சம் இருந்தது.
……முற்றும்…….
.
