Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

விழி மொழி பேசு

அத்தியாயம் 17_2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்

அவனுடைய அத்துமீறலில் “விக்ரம்…. பிளீஸ்… இங்க வேண்டாமே…. நாம ஊருக்கு போகலாம்”, என்று முணுமுணுத்தாள். 

“பிளீஸ் டி, நீ இப்ப வேணும்”, என்று தாகத்துடன் சொன்னான் விக்ரம். 



Advertisement

“இல்லை ஹோட்டல்ல வச்சு… சேஃப்டி இருக்காதே….”

“இங்க அப்படி இல்லை. இது பணக்காரங்க வந்து தங்குற இடம்.. டோன்ட் வோர்ரி”, என்று சொன்னவனின் உதடுகள் அவளுடைய கழுத்து வளைவில் தஞ்சம் புகுந்தது. 

Advertisement

Advertisement

அவன் கைகளுக்குள் நிம்மதியாக கரைந்தாலும் “ஊருக்காது கிளம்பியிருக்கலாம்”, என்றாள். 

“போகலாம் போகலாம். அது வரைக்கும் வெயிட் பண்ண முடியாது”, என்று சொன்ன அவன் பாவனையில் அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது. சிரிக்கும் அவளுடைய இதழ்களை மீண்டும் சிறை பிடித்தான் விக்ரம். 

Advertisement

அவள் அவன் முத்தத்தில் மயங்க அவளை கட்டிலில் சரித்து அவள் மேல் சரிந்தான் விக்ரம். முழு வேகத்துடன் அவனுடைய அக்ரமிப்பு துவங்க துவண்டு போனாள் ரேகா. அவளின் கெஞ்சல்கள் சிணுங்கல்கள் எல்லாம் அவன் வேகத்தை அதிகப் படுத்தவே செய்தது. 

சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து விலகி அவளை இழுத்து தன்னுடைய மார்பில் போட்டுக் கொண்டவன்  “இப்ப உண்மையிலே பேசலாமா?”, என்று சொல்லி அவளைப் பார்த்துக் கண்ணடித்தான். 

அவன் நெஞ்சில் சாய்ந்து அவன் மார்பின் ரோமங்களை தன்னுடைய விரலால் வருடிய படியே “இப்ப சொல்லுங்க, அத்தை சொன்னது உங்களைத் தான்னு எப்படி நம்புனீங்க?”, என்று கேட்டாள். 

“முதல்ல உன் கிட்ட சாரி கேக்கணும் ரேகா. நான் பேசினதுக்கு. என்னை மன்னிச்சிரு”

“அதெல்லாம் மறந்து போச்சு. ஆனா ஒரே ஒரு சந்தேகம் அன்னைக்கு நாம ஒண்ணா சேந்து வாழ்ந்தப்ப என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்துச்சா இல்லையா?”

“சத்தியமா இருந்துச்சு டி. நம்பினதுனால தான் உன்னை நான் எடுத்துக்கிட்டேன். அன்னைக்கு தான் நீ தப்பானவளா இருக்க மாட்டேன்னு முழுசா நம்பினேன். கண்டிப்பா உன் மனசுல வேற யார் மேலயும் காதல் இல்லைன்னு எனக்கு அன்னைக்கு தான் புரிஞ்சது ரேகா. உன்னோட மனசை மயக்கினது நான் மட்டும் தான்னு தெரிஞ்சிக் கிட்டேன். முதல் நாள் நீ என்னைப் பேச விடாம செஞ்சது தான் எனக்கு பயங்கர கோபம். எப்படி நீ வேற ஒருத்தனை கட்டிக்க நினைக்கலாம்னு கோபம் வந்துச்சு? அப்ப என் மேல உனக்கு காதல் இல்லையானு கோபம் தான் என்னைக் கண்ட படி பேச வச்சிட்டு”

“எனக்கு நிஜமாவே காதல் வந்ததுன்னா அது உங்க மேல தான் விக்ரம். ஆனா அதை நான் உணரவே இல்லை. சரி நீங்க முதல்ல எப்ப என்னைப் பாத்தீங்க? நீங்க என்னோட காலேஜ்ல தான் படிச்சீங்களா? இப்பாவது உண்மையைச் சொல்லுங்க”

“ஆமா நானும் அங்க தான் படிச்சேன். உன்னை முதல் தடவை காலேஜ் பங்க்சன்ல வச்சுப் பாத்தப்பவே நான் பிளாட் ஆகிட்டேன். நீ பர்ஸ்ட் இயர் படிக்கும் போது எங்களுக்கு பைனல் இயர் பேர்வல் நடந்துச்சுள்ள? அன்னைக்கு தான். உன்னைப் பாத்த உடனே நீ தான் என்னோட வாழ்க்கைன்னு எனக்கு தோனிருச்சு. அப்புறம் கஷ்ட பட்டு உன் வீட்டு அட்ரஸ் எல்லாம் கண்டு பிடிச்சு உன் வீட்டுக்கு போனா பொண்ணுன்னு உன் அத்தை மகளைக் காட்டுறாங்க. நான் அப்பவே இந்த பொண்ணு இல்லைன்னு சொல்ல உன்னை எனக்கு கட்டித் தர மாட்டேன்னு உன் மாமா சொல்லிட்டார். அவங்களுக்கு உன் மாமா பொண்ணை எனக்கு கட்டி வைக்கணும்னு ஆசை. அந்த கோபத்துல உன்னை தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் உன் கிட்ட பேசலாம்னா அதுக்கு எனக்கு தைரியம் வரலை. உடனே தான் உன்னோட மாமாவை ஏதாவது பிரச்சனைல மாட்ட வைக்க நினைச்சேன். அவரும் உன்னோட வீட்டை ஏதாவது செய்ய துடிச்சார். உன்னோட வீட்டை நான் பணம் கொடுத்து வாங்கிருக்கலாம். ஆனா ஏன் அப்படிச் செய்யணும்னு தோணுச்சு. அது உனக்கு உரிமையானது. அதை எதுக்கு அவங்க கிட்ட பணம் கொடுத்து வாங்கணும்னு நினைச்சு என் ஃபிரண்ட் கிட்ட இருந்து பணம் வாங்கி உங்க மாமாவுக்கு கொடுத்து பத்திரத்தை வாங்கினேன். அப்புறம் என் ஃபிரண்ட் கூட உன் மாமாவை கோத்து விட்டுட்டேன்”

“அது தப்பு இல்லையா? மாமா எப்படி கடனை அடைப்பார்?”

“இவ்வளவு நல்லவளா இருக்காத ரேகா. நான் ஒண்ணும் அவங்க சொத்தைக் கொள்ளை அடிக்கலை. இப்ப அவங்க என் கிட்ட வாங்கின பணத்தை மட்டும் கொடுத்துட்டா போதும். பிரச்சனை முடிஞ்சிரும். அதுக்கு வட்டி கூட கிடையாது. இப்படி செஞ்சா தான் அவங்க இனி இந்த தப்பை செய்ய மாட்டாங்க. உன் அப்பாவோட நிலத்தை எல்லாம் வித்த பணம் நிறைய வச்சிருக்காங்க. அதை வச்சு அடைக்கட்டும். சரி அதை விடு. இந்த கடன் பிரச்சனையை உருவாக்கி உன் மாமாவை சிக்க வச்சு தான் உன்னைக் கல்யாணம் பண்ண நினைச்சேன். அவர் கடன் வாங்கின கொஞ்ச நாள் கழிச்சு அவர் கிட்ட பத்திரத்தை வாங்கிட்டு பணத்தைக் கொடுங்கன்னு கேட்டேன். அவர் உடனே முடியாதுன்னு சொன்னப்ப எனக்கு இப்ப பணத் தேவை இருக்கு. உடனே எனக்கு பணம் வேணும்னு நெருக்கடி கொடுத்தேன். அவர் முடியாதுன்னு சொல்லவும் அப்ப எனக்கு ரேகாவைக் கட்டிக் கொடுங்கன்னு கேட்டேன். கூடவே நீங்க பணமும் தர வேண்டாம். வீட்டுப் பாத்திரத்தையும் உங்க கிட்ட கொடுத்துறேன். எனக்கு ரேகா வேணும்னு சொன்னதுல உடனே சரின்னு சொல்லிட்டார்”, என்று அவன் சொன்னதும் தனக்காக அவன் எவ்வளவு போராடியிருக்கிறான் என்று புரிந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் ரேகா. 

அவனும் அவளை இறுக அனைத்துக் கொண்டான். “நீங்க என்னை விட்டுட்டு போனதும் நிஜமாவே நான் கல்யாணத்தை நிறுத்த தான் நினைச்சேன் விக்ரம். நீங்க என்னை நம்புறீங்க தானே? எனக்கு உங்களை மறந்து வேற ஒருத்தனை கல்யாணம் பண்ண முடியும்னு தோணலை. அத்தைக் கிட்ட நான் வேற ஒருத்தனை விரும்புறேனு சொன்னேன். அவங்களும் வர்ஷா உங்களை விரும்புறான்னு சொன்னாங்க. நான் கல்யாணத்தை நிறுத்தி வர்ஷாவை உங்களுக்கு கட்டி வச்சிட்டு ஜீப் டிரைவரைத் தேடத் தான் நினைச்சேன். ஆனா கார்ல வரும் போது மஞ்சு அண்ணி நீங்க என்னை விரும்புறதா சொன்னாங்க. அத்தை நீங்க தான் என்னைக் கூப்பிட வந்ததா சொன்னாங்க, அப்பதான் உங்க போட்டோவையும் காட்டினாங்க. அதுக்கு அப்புறம் எப்படி என்னால உங்களை வர்ஷாவுக்கு விட்டுக் கொடுக்க முடியும்? அந்த கோபத்துல தான் நேத்து வந்து கத்திட்டு போயிட்டாங்க. வர்ஷா பாவம்”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிருச்சு”

“அப்படியா? அப்படின்னா சரி தான். சரி நீங்க என்னை நம்புறீங்க தானே?”

“சத்தியமா நம்புறேன் டி, உன் வாழ்க்கையை கெடுக்க நினைக்கிற உன் அத்தையே நீ என்னை விரும்புறதை சொல்லிட்டாங்களே? இனியும் நம்பாம இருப்பேனா?”, என்று அவன் சொன்னதும் உள்ளம் குளிர்ந்து போனாள் ரேகா. 

அவன் மார்பில் அவள் சலுகையாக சாய்ந்து கொண்டு அவனைப் பார்த்தாள். அவள் முகத்தில் ஆசையும் காதலும் குவிந்திருந்தது. 

அவன் கிளர்ச்சியுடன் அவள் முகம் நோக்கிக் குனிந்தான். அவள் இதழ்களை தேடி அவன் இதழ்கள் தீண்டிய போது அவள் கைகள் அவன் கழுத்தில் மாலையாகக் கோர்த்தன. நீண்ட முத்தத்திற்கு பின்னர் அவளை விடுவித்தான் விக்ரம். அவள் முகம் சிவந்திருந்தது. சிவந்த அவள் முகத்தை அவன் விரல்கள் ஆசையுடன் வருடியது. 

அதன் பின் மதிய உணவை முடித்து விட்டு ஆபீஸ் சென்று வேலையை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தாள் ரேகா. அவளுக்கு கொடுக்கப் பட்டிருந்த புராஜெக்ட் முடிந்ததால் அவளிடம் எந்த பணமும் வாங்கப் பட வில்லை. பின் அங்கிருந்து ஹாஸ்டல் சென்று அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஊருக்கு கிளம்பினார்கள். 

வீட்டு வாசலில் கார் நின்றதும் உள்ளே செல்ல ரேகாவுக்கு தயக்கமாக இருந்தது. அனைவரும் என்ன சொல்வார்களோ? அது மட்டுமில்லாமல் அன்று சாரதாவே பணத்துக்காக திருமணம் செய்ததாக பேசிவிட்டாளே என்று கவலையாக இருந்தது. 

அவள் மனநிலை உணர்ந்த விக்ரம் அவள் கையை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டு “அம்மாவுக்கு என் மேல பாசம் ஜாஸ்தி ரேகா. அன்னைக்கு நான் அவங்களை ஏமாத்தினதைத் தான் அவங்களால தாங்க முடியலை. என் மேல உள்ள கோபத்தை தான் அவங்க உன் மேல காட்டிட்டாங்க. மத்த படி அவங்க மனசறிஞ்சு எதுவும் செய்யலை. என்னை மன்னிச்ச மாதிரி அவங்களையும் மன்னிச்சிரு”, என்றான். 

“சே சே மன்னிப்புன்னு எல்லாம் பேச வேண்டாம். அவங்க எனக்கு அம்மா மாதிரி. அவங்க ஏதாவது நினைப்பாங்கன்னு தான் தயக்கமா இருந்துச்சு”, என்று ரேகா சொல்லிக் கொண்டிருக்கும் போதே “என்ன வெளியவே நின்னுட்டீங்க? அதான் நானே வந்தேன். உள்ள வாங்க ரெண்டு பேரும்”, என்று வெளியே வந்து அழைத்தாள் சாரதா. 

இருவரும் காரில் இருந்து இறங்கியதும் “என்னை மன்னிச்சிரு டா. கோபத்துல என்னல்லாமோ பேசிட்டேன்”, என்று சொன்னாள் சாரதா. “ஐயோ அத்தை நீங்க என் கிட்ட மன்னிப்பு கேக்குறதா? அப்படி எல்லாம் நீங்க செய்யக் கூடாது. என்னை நீங்க புரிஞ்சிக்கிட்டதே போதும்”, என்று புன்னகைத்தாள் ரேகா. அப்போது சேதுபதி, காயத்ரி, ஆதி அனைவரும் அங்கே வர அனைவரும் விக்ரமை கேள்வி கேட்டு ஒரு வழி ஆக்கினார்கள். 

அதன் பின் இரவு உணவு முடிந்ததும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அறைக்குள் வந்த ரேகா அடுத்த நொடி விக்ரமின் இறுகிய அணைப்பில் இருந்தாள். 

“கதவு திறந்திருக்கு”, என்று அவன் கைக்குள் இருந்தே அவள் முனங்களாக சொல்ல “அடைச்சிட்டா போச்சு”, என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டே கதவை அடைத்தான். 

மீண்டும் அவளை கட்டில் அருகே அழைத்து வந்தவன் அவனுடைய அணைப்பை மேலும் இறுக்க அவள் தான் திணறிப் போனாள். 

அவன் சட்டையை இறுகப் பற்றியவள் அவன் அவளுடைய இதழ்களை தீண்டிய போது முழு மனதுடன் அவனுக்குள் மூழ்கிப் போனாள். 

அன்று இரவில் முழுமையாக அவனுடன் கலந்தாள் ரேகா. அந்த இரவு தான் அவர்களுக்கு மனதில் எந்த குழப்பமும் இல்லாத முதலிரவாக அமைந்தது. 

முற்றும்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!