Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 19.1

மாலை 4.30 மணி – Classio, The Earth Pure Form Hotels (க்ளாஸியோ, தி எர்த் ப்யூர் பார்ம் ஹோட்டல்ஸ்)

அரண்மனை போன்ற அமைப்பில் நாற்பது ஏக்கர் பரப்பளவில் பதினைந்து மாடிகளும் 650 அறைகள் கொண்ட அந்த மாளிகையை விளக்குகளாலும், அந்திக்காலைப் பொழுதில் ஆதித்தியனின் சுட்டெரிக்காத பொன் கதிர்களும் பிரகாசத்தை வழங்கும் வண்ணம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

சுற்றி சுமார் ஐந்து கிலோமீட்டர் பரப்பளவில் எந்த சிறு கட்டிடம் கூட இல்லாத வகையில் மொத்தமும் அந்த தங்கும் விடுதிக்குச் சொந்தமானதாக இருந்தது. சென்னை மாநகரின் முக்கியமான முன்னணி நிறுவனங்கள் பல தங்கள் தொழிற்சந்திப்புகளை அவ்விடம் தான் வைப்பர். அந்த விடுதியில் தான் இன்று உதய் மாதவனின் தந்தை பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

பொதுவாகப் பிறந்தநாள் கொண்டாடுவது ரகுநந்தனுக்கு பிரியமில்லாத ஒன்று ஆனால் தொழில் பழக்கத்தை விரிவுபடுத்திக் கொள்ளவும் புதிதாகச் செயல்திட்ட பணிகளைப் பெறவும் இது போன்ற கொண்டாட்டங்கள் அவசியமாகிவிட மார்க்கம் வேறு இல்லாமல் இன்முகமாய் ஏற்றுக்கொண்டார்.



Advertisement

தமிழக முதலமைச்சரிலிருந்து உலகின் முன்னணி தொழிலதிபர்கள் எல்லாம் பங்கேற்கப்போகும் இந்த விழாவிற்குப் பாதுகாப்பு மட்டுமே அத்தியாவசியமாக இருக்க மொத்த விடுதியையும் ஆய்வு செய்து இப்பொழுது நுழைவாயிலில் ரிபில்லிருந்து, கேர்பின், க்ரேனேட் லான்ச்சர், சூசட் வரை ரக ரகமாகக் கையில் துப்பாக்கியுடன் நின்ற பாதுகாப்புப் படை வீரர்களைப் பார்த்தே அச்சம் எழுவது உறுதி. அவ்வளவு மிடுக்கும், நிமிர்வும் அந்த துப்பாக்கிகளை போன்றே அதை தங்கியிருந்தவர்களின் முகமும் கடுமையாக இருந்தது.

வெண்மை ரோல்ஸ் ராய்ஸ் வளாகத்தினுள்ளே நுழைந்த பொழுதே அவனுக்கான வழியை விட்டு காவலர்கள் நின்றிட, வாகனத்திலிருந்து இறங்கிய உதய் மாதவனின் வேகத்திற்கு ஜெயனும் பின்னாலே ஓடினான். அவன் பின்னால் இன்னும் மூன்று மனிதர்கள்.

“ப்ரிப்பரேஷன்ஸ் ஒன்ஸ் செக் பண்ணிட்டிங்க தானே?”

Advertisement

“எவ்ரிதிங் இஸ் பேர்பக்ட்லி சார்டட் சார். நீங்க ஒருதடவை பாத்துட்டு கான்பர்ம் பண்ணிட்டிங்கனா பெட்டெர்-னு எனக்கு தோணுச்சு” என்றான் ஜெயன் தன் கையிலிருந்த டாக்குமெண்ட் ஒன்றை தனக்கு பின்னாளிருந்த தன்னுடைய அசிஸ்டென்ட் கையில் கொடுத்தவாறே.

Advertisement

“ம்ம் எந்த ஃப்லோர்?”

“7th Floor சார்”

ரிசப்ஷன் டெஸ்க்கை தாண்டி அந்த நீண்ட வைட்டிங் பகுதியில் இருந்த 6000 சதுரடி இடத்தில், கிரேக்கர்களை ஒத்து அதன் வடிவமைப்பில் ஏரிக்கரையில் படுத்திருந்தவாறே ஒரு வாத்துடன் விளையாடிக்கொண்டிருக்கும் தன் இரு குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்த தாய் மற்றும் குழந்தைகளின் சிலையே வெர்சாய்ல்லேஸ் பவுண்டைன் வகையில் அமைத்திருந்தனர். அதைத் தாண்டி சென்ற எந்த மனிதருக்கும் நிச்சியம் அதன் நேர்த்தியான வடிவத்தையும், அதன் நீரால் எ.சி காற்றையே விஞ்சிடும் குளுமை உடலில் பட்டு உரசுவதை உணருவர், அதில் உதய் மாதவன் என்ற சாதாரண மனிதனும் விதிவிலக்கல்ல.

Advertisement

கண் கவரும் செயற்கை அருவி போல் வழிந்துகொண்டிருந்த தண்ணீர் என்ன தான் பார்த்துப் பார்த்து கீழே விழாமல் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் குழந்தையைப் போல் அமைதியாகக் காட்சியளிக்கும் இயற்கையின் கணிப்புகளை நிர்ணயிக்க இயலாதே. தன்னை கண்டுகொலாமல் செல்பவனின் பார்வையை தன் பக்கம் ஈர்க்க அவன் மேல் பட்டும் படாமலும் சில துளிகளை தெளிக்கவிட, தன் மேல் விழுந்த நீரின் குளுமையை உணர்ந்த நொடி வேகத்தை குறைக்காமல் அந்த பவுண்டைன் பக்கம் திரும்பி, தன்னை கண் சிமிட்டி சிரிக்கும் அதன் அழகில் அவன் இதழ் கடையோரம் புன்னகை வந்ததோ? வாய்ப்பு அதிகம் தான்.

லிப்ட் வந்ததும் அதன் வலது பக்கம் Welcome என்ற ஆங்கில சொல்லும் அதன் கீழ் சிறிதாக 7 Floor லூஸிடியா கேல்லிகிராபி வடிவில் கைகளால் பொறிக்கப்பட்டிருந்த அழகிய எழுத்துக்களைத் தாங்கிய போர்டில் சுற்றிலும் ஆர்ச்சிட், கர்னேஷன், ரோஸ் மலர்கள் மற்றும் ஐவி, மைர்ட்லே மற்றும் க்ரேவிள்ளே இலைகள் கொண்டு கச்சிதமாகக் கண் பறிக்கும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்தாலே தெரிந்தது தன் தந்தையின் பிறந்த நாள் விழாவிற்குத் தான் இந்த ஏற்பாடுகள் என்று.

லிப்ட்டில் நுழைந்தவன் ஏழாவது தளத்திற்கான பட்டனை அழுத்தி பாண்ட் பாக்கெட்டில் கை விட்டு, “ஈவென்ட் ஆர்கனைஷர் யாரை சொல்லிருக்கீங்க”

“லாஸ்ட் டைம் ஃபோஷ் ஃபோனி ஈவென்ட்ஸ் கொஞ்சம் இஸ்யூ பண்ணிட்டாங்க அதுனால இந்த தடவை எல்லாமே ஹரி, விஷ்ணு சார் தான் ஃப்லுட்ஸ் & பைனீஸ் ஈவென்ட் ப்லானர்ஸ் கம்பெனி அவங்க ஃப்ரன்டோட ஸ்டார்ட் அப்-னு ஒரு ச்சான்ஸ் கேட்டாங்க…” எல்லா முடிவையும் உதயிடம் ஒரு தரம் கேட்டு முடிவெடுத்துச் செய்பவன் ஸ்டார்ட் அப் கம்பெனி ஒன்றை நம்பி இவ்வளவு தூரம் அலட்சியமாய் இருந்துவிட்டோமோ என்ற பயத்தில் குரலை இறுதியில் குறைத்துவிட்டான்.

அவன் தயக்கத்தை உணர்ந்து ஜெயனைத் திரும்பிப் பார்த்த உதய், “தப்பே பண்ணிருந்தாலும் பயம் குரல்ல தெரிய கூடாது ஜெயன். அண்டர்ஸ்டாண்ட்?”

தன்னுடைய முதலாளியின் அழுத்தமான குரலில் அவன் தலை தானாக அசைந்தது.

“அந்த ஈவென்ட் பிளானர்ஸ் பத்தி விசாரிச்சீங்களா?”

“பண்ணிட்டேன் சார் இது வரைக்கும் வெட்டிங், பேபி நேமிங் செரிமோனி அப்றம் கொஞ்சம் சின்ன சின்ன ஈவென்ட் ஆர்கனைஸ் பண்ணிருக்காங்க. பர்ஸ்ட் டைம் பெரிய ஈவென்ட் பன்றாங்க” என்றான் தேக்கி வைத்திருந்த தைரியம் அனைத்தையும் கொட்டி.

“லெட் மீ ஸ்பீக் ஸ்ட்ரெயிட் ஜெயன். மேல போய் நான் பாத்து ஏதாவது ஒரு மிஸ்டேக் கண்டுபுடிச்சாலும் உங்களோட போஸ்டிங்க்கு நீங்களே ஒருத்தர அசைன் பண்ணிட்டு போகலாம்” அவன் கோவப்பட்டிருந்தால் கூட ஜெயனுக்கு பெரிதாக உதறியிருக்காது, இவனோ வழக்கம் போல் ஒரு பார்வையில் தன்னுடைய மொத்த அபாய அறிக்கையை வாசித்துவிட்டான்.

‘டிங்’ லிப்ட் அவர்கள் வர வேண்டிய தளம் வந்ததை உணர்த்தத் தான் அணிந்திருந்த பிரௌன் நிற கூலர்ஸை கழட்டாமல் வெளியேறியவன், “டென் ரூம்ஸ் தனியா அலாட் பண்ணியாச்சா?”

“யா சார். உங்களுக்கும் ரகுநந்தன் சார்க்கும் ஸ்பெஷல் சுய்ட், ஜெயநந்தன் சார்க்கு ஒரு நார்மல் சுய்ட், உங்க சிஸ்டர்ஸ்க்கு ஒரு சுய்ட், அப்றம் ஹரி, விஷ்ணு சார்க்கு ஒரு சுய்ட். மத்த அஞ்சு சுய்ட் கெஸ்ட்ஸ்க்கு சுச்சுவேஷன் பாத்துட்டு குடுத்துக்குறேன் சார். இந்த ப்லோர்ல 9 ரூம்ஸ் மட்டும் தான் சார் அவைளப்பிலா இருந்துச்சு சோ எய்ட்த் ப்லோர்ல ஒரே ஒரு ரூம் மட்டும் அலாட் பண்ணிருக்கேன்”

பேசிக்கொண்டே செல்ல செல்ல அந்த மாளிகையின் பாதையும் நீண்டுகொண்டே செல்லும் எண்ணம். உள்ளுக்குள் இருப்பவர்களுக்கு அந்த இரவு போலவே காட்சியளிக்கும், அதற்குக் காரணம் கட்டிடத்தினுள் அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த மஞ்சள் விளக்குகளின் பிரகாசத்தை அந்த பளபளக்கும் தாஸோஸ் மார்பிலும் க்ரானைட் கற்கள் பதித்த தரையில் பட்டு எதிரொலித்து சுவர்களில் பாதியும் மேற்கூரையில் ஆங்காங்கு தொங்கும் கோஃகேட் மற்றும் கேப்பிடல் லைட்டிங் வகை சண்டிலீயர் விளக்குகளில் பட்டு கண்களைக் கூசாத வகையில் பளபளத்தது.

“எய்ட்த் ப்லோர்ல இருக்க ரூம் நான் யூஸ் பண்ணிக்கிறேன்” என்றான் உதய்.

“சார் அது நார்மல் சுய்ட் ரூம் தான், உங்களுக்கு கீழ இருக்க ஸ்பெஷல் லக்சுரி சுய்ட்”

“வேணாம் ஜெயன் தம்பிகளுக்கு குடுங்க. அவங்க தான் ஆசைப்படுவாங்க. எனக்கு நார்மல் ரூம் போதும். இன்னும் ஒன் ஹௌர்ல வீட்டுல இருந்து எல்லாரும் வந்துடுவாங்க, கி அவங்கிட்ட ஹாண்ட் ஓவர் பண்ணிடுங்க”

பேசிக்கொண்டே வலது புறமாகத் திரும்ப, அந்த நீண்ட தளம் முழுதும் அந்த ஒரே ஒரு பார்ட்டி ஹால்க்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. தூரத்தில் இருந்து பார்த்தாலே தெரிந்தது அந்த வட்ட வடிவிலான வெல்க்கம் கார்டு. முற்றிலும் ஆர்டிபிசியல் இலைகள் அடைந்திருக்க அதன் நடுவே பொன்னிற எழுத்துக்களால் வெல்க்கம் டு ரகுநந்தன்’ஸ் பர்த்டே பார்ட்டி என்ற எழுத்துக்கள் அழகாய் மின்னியது.

அதில் இடதுபக்க மேல் மூலையிலும், வலது பக்கத்தின் கீழ் மூலையிலும் வைட் மற்றும் கோல்டன் நிற பலூன்கல் சிறிதும் பெரிதுமாய் அலங்கரித்திருக்க வலது புறம் கீழே கோல்டன் ஸ்டாண்டில் வகை வகையாக கேன்டில்கள் சரியான நேரத்திற்கு ஏற்ற தயாரான நிலையிலிருந்தது. மொத்தத்தில் பேர்பக்ட். மெச்சும் பார்வையோடு உள் நுழைந்தான் உதய் மாதவன்.

மெல்லிய கிரீம் கலர் எண்ணப்படும் நிறத்தில் பிலௌன்ஸ் துணிகளும் அதற்குப் பின்னால் வண்ண விளக்குகளும் ஆங்காங்கு மிளிரி எளிமையான, அதே நேரம் பார்வைக்கு விருந்தாகவே இருந்தது.

அந்த நீண்ட ஹாலின் நடுப்பகுதி மொத்தத்தையும் ஆக்கிரமித்து ஒரு நீண்ட நெடிய இருநூறிலிருந்து முந்நூறு மனிதர்கள் அமரும் வகையில் டைனிங் டேபிள். அதிலிருந்த நாற்காலிகளுக்கு எல்லாம் கவர் அணிவிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. அப்படியே அந்த மேஜைக்கு இடது புறம் வட்ட வடிவில் குறைந்தது நாற்பது சிறிய டைனிங் டேபிள், அதைச் சுற்றி அழகிய நாற்காலிகள் ஏழு.

அந்த மேஜைகள் மேல் வெண்மை நிற டேபிள்கிலாத். அதன் நடுவில் கண்ணாடிக் குடுவைகளில் சிறிதளவு தண்ணீர் நிரப்பி ஒவ்வொரு மேஜையில் ஒவ்வொரு வித வண்ண மலர்க் கொத்துகளால் அலங்கரித்திருந்தனர்.  அதனூடே விலையுயர்ந்த கிரிஸ்டல் தட்டுகள் அதன் மேல் பூ வடிவில் டவல் ஒன்றும், அதன் இரு பக்கங்களிலும் கத்தி, போர்க், ச்சாப்ஸ்டிக், லைடில் வகை ஸ்பூன், சால்ட் என்று சகலமும் நேர்த்தியாக இருந்தது. வலது புறம் ஃபப்ட் வகை உணவிற்குப் பாத்திரங்கள் அனைத்தும் தயாராக இருந்தது.

அந்த அரை முழுதும் கொத்து கொத்தாகப் பூக்கள் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் அலங்கரித்திருக்க, அதன் நறுமணம் செயற்கை நறுமணத்திற்கு அதிகம் வேலை வைக்கவில்லை. இவை அனைத்தையும் தாண்டி பெரிதாய் அமைக்கப்பட்டிருந்த மேடையில் வண்ண விளக்குகள், பூக்கள் மட்டுமே வைத்து அவ்வளவு அழகாய் கண்களை வேறு எங்குமே மாற்ற இயலாத வகையிலிருந்தது.

“டேய் கைய எடுங்கடா” ஆக்ரோஷமாய் கத்தி பேசிய யாழினியின் பேச்சு தான் உதய் மாதவனின் நினைவைத் திருப்பி கொடுத்தது, அவளுக்கு ஏதோ என்று பயத்தில் உதய் திரும்ப அங்கு அவளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டான்.

மின்ட் நிற பட்டுப் புடவையில் வெள்ளி நிற ஜரிகை மின்ன, அதே வெள்ளி நிற ரவிக்கை அணிந்து தன் கூந்தலைச் சிறு கிளிப் கொண்டு முடிந்து வைத்திருக்க, அவள் அசைந்தாடும் செயல்களுக்கு எல்லாம் அவளைப் போலவே அடங்காத அவள் கூந்தலைக் கூட அடக்க விரும்பாமல் தன் கையிலிருந்த பெரிய தட்டையே ஹரி, விஷ்ணு மற்றும் ஒரு சிலரிடமிருந்து பாதுகாப்பதில் மும்முரமாய் இருந்தாள்.

“யாழினி, டேஸ்ட் பண்றதுக்கு தான எடுத்துட்டு வந்த அப்றம் ஏன் குடுக்க மாட்டிக்கிற?” என்றான் விஷ்ணு. ஆனால் அந்த கூட்டத்தில் எவரும் தங்களுக்குச் சற்று தொலைவிலிருந்த உதய்யை பார்க்கவில்லை.

“சார், இது நமக்கு கொண்டு வரல, உங்க உம்மனான் மூஞ்சி அண்ணன் வருவாருன்னு உளவு துறைல இருந்து தகவல் வந்துச்சு”

மொறு மொறுவென பொறித்திருந்த சிக்கன் லாலிபாப் ஒன்றில் கை வைக்க வந்த ஹரியின் கையில் ஒரு அடி போட்டு முறைத்தவள், அந்த சிக்கன் அருகிலிருந்த ட்ரை குலாப் ஜாமுன் ஒன்றை எடுத்து வாயில் போட்டு, “அதுக்கு தான் அவருக்கு டெஸ்டிங் குடுக்க எடுத்துட்டு வந்துருக்கேன்” என்றாள் இன்னும் ஒன்று எடுத்து வாயில் போட்டு பேசினாள்.

“எங்க வீட்டுல கூட என் அண்ணனுக்கு நாங்க சாப்பிட்டது குடுத்தது இல்ல. இங்க நீ அசால்ட்டா எடுத்து சாப்பிட்டு அவனுக்கு குடுக்குற?” என்றான் ஹரி சகோதரனுக்காக, சற்று கோவம் கூட அவன் குரலிலிருந்தது.

“எதுக்கு சார் கோவ படுறிங்க. இந்தாங்க எல்லாத்தையும் ஒரு நாள் மாத்தி தான ஆகணும்? இன்னைக்கு மாத்திடலாம். உங்க சார் என்ன மஹாராஜாவா? அண்ணன் தம்பி சாப்பிட்ட எச்சிலை சாப்புட மாட்டாராமா?” இப்பொழுது அவள் வாயில் சுழற்றி சுழற்றி தள்ளியது சைனீஸ் கிரீமி ராமன்.

அவள் பேசுவதைத் தெளிவாகக் கேட்ட உதய் அமைதியாக நின்று அவளைப் பார்க்க, அவனுக்குப் பின்னால் நின்று அனைத்தையும் ஒரு பதட்டத்துடன் கேட்ட ஜெயன் அவளை நோக்கி நடக்கவிருக்க அவனைப் போக வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினான் உதய்.

“இன்னைக்கு சாப்பிடட்டும் சார். சார்ர்ர்ர்… இந்த நூடுல்ஸ் அப்டியே பால் குடிக்கிற மாதிரி சூப்பரா இருக்கு ஆனா என்ன எங்க தெரு முக்குல இருக்க நூடுல்ஸ் கடை தான் டாப், ஒரு நாள் வாங்க சாப்பிடலாம்…” தலையில் அடித்து, “பாருங்களேன் எங்க இருந்து எங்க போய்ட்டேன். ம்ம்ம் நான் எல்லாம் என் தங்கச்சிகிட்ட இருந்து ஒரு வாயாவது வாங்கினா தான் என்னோடதுல கை வைப்பேன், அதோட ருசியே தனி சார். இன்னைக்கு உங்க அண்ணனை சாப்புட வச்சிடலாம்.

இதுக்கே அந்த சமையல் மாஸ்டர் என்ன பாத்து மொறைச்சான் இன்னொரு தடவ எல்லாம் கேக்க முடியாது. இதுலையே ஆளுக்கு ஒரு பீஸ் எடுத்துக்கோங்க வேகமா சாப்புடுங்க சார்… அப்றம் உங்க மார்டன் இந்தியன் ஹிட்லர் கிட்ட பேச்சு எல்லாம் வாங்க முடியாது” என்று ஆளுக்கு ஒன்றைக் கையிலே எடுத்துக் கொடுத்தாள்.

“உண்மை தான் யாழினி, இப்ப வேலை பாக்காம நாம சாப்புடுறத பாத்தாலும் ரெண்டு நாள் கிளாஸ் எடுப்பான். ஆனா அவனுக்கு எங்க நான் திருட்டு மாங்கா வச்சு  சாப்புடுறது எல்லாம் தெரிய போகுது? இந்த மலாய் சாப்பிட்டு பாரு சூப்பரா இருக்கு” என்று கூறி விஷ்ணு சிரிக்க, யாழினியும் அவனுடன் இணைந்து சிரித்தாள்.

“யாழினி எப்படி இங்க? நான் இன்னைக்கு லீவு தான குடுத்தேன்” ஹரி, விஷ்ணு, யாழினி மூவரின் இந்த நெருக்கமான பேச்சு உதய்க்குச் சற்று ஆச்சிரியம் தான்.

“லீவு வேணாம்னு சொல்லிட்டு யாழினி தான் சார் என்கிட்ட பார்ட்டி அரேஞ்மென்ட்ஸ் பாக்கணும்னு கேட்டாங்க. நான் தான் ரொம்ப ஆசையா கேக்குதுன்னு பாஸ் குடுத்தேன்” இன்று ஏன் அனைத்தும் என் தலையில் விழுந்தது என்ற வருத்தம்.

இந்த பார்ட்டி ஹாலினுள் நுழைந்ததிலிருந்து அதன் அழகைக் கூட முழுமையாகக் காணாமல் உதய் முகத்தில் கோவமோ, புன்னகையோ, அதிருப்தியோ ஏதோ ஒன்று தெரியாதா என்று ஆராய்வதிலே ஜெயன் பொழுதைச் செலவழித்தான். இப்பொழுது யாழினி…

“ம்ம்ம் சார் நெஜமாவே டேஸ்ட் பிச்சு உதறுது. உங்க சார்…. சீய் உங்க அண்ணனுக்கு புடிக்குமா?” போக்காச்சியா என்ற இத்தாலியன் வகை உணவை வாயில் போட்டு கேட்டாள் யாழினி.

“குடுங்க டேஸ்ட் பாத்துட்டு சொல்லிர்றேன்” சில நொடிக்கு முன் உண்ட உணவின் ருசியைப் பற்றிப் புகழ்ந்து தள்ளலாம் என்று வாயைத் திறந்த யாழினிக்கு உதய்யின் குரல் தொண்டையை அடைத்துவிட்டது.

திடுக்கிட்டு தன்னை திரும்பி பார்த்த யாழினியை பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி உதய் என்ன என்று கேட்ட நொடி அனைத்தும் அவ்வளவே… என்னமோ ஆகிவிட்டது அவளுக்கு.

அசடு வழிந்து அந்த பெரிய தட்டிலிருந்து ஒரே ஒரு சிறு பௌல் எடுத்து உதய் முன் நீட்டி, “இது மஸ்ரூம் கிரேவி, ஏதோ மெக்ஸிகன் குசைன்-னு சொன்னாங்க சார் சாப்பிட்டு பாருங்க” என்றாள்.

“ஏன் யாழினி உங்களுக்கு இது புடிக்காதோ?” முதலில் உண்மையை மறைக்காமல் அவள் தலை ஆமாம் என்று ஆட பிறகு வேகமாக இல்லை இல்லை என்று ஆட்டிவிட்டாள்.

“எலி புலிகிட்ட சிக்கிடுச்சு” அமைதியாக   இருந்த தடையாமே தெரியாமல் ஆளுக்கு ஒரு பக்கம் நழுவ முயன்ற ஹரி, விஷ்ணுவை கண்டு கொண்ட உதய் யாழினியிடமிருந்து தலையை திருப்பி, “ஹரி” அந்த அழைப்பிலே இருவரும் நின்றனர்.

“ஜெயன் கிட்ட கீ வாங்கிட்டு ரூம்க்கு போ” சகோதரன் மேல் இன்னும் கோவமிருந்த விஷ்ணு ஜெயனிடம் சென்று சாவியை வாங்க, ஹரியும் அவனிடம் கை நீட்டினான்.

“ஒரு ரூம் தான் சார்” என்றான் ஜெயன்.

“அண்ணா எனக்கு ரூம் இல்லையா?” சகோதரனிடம் கேட்டான் ஹரி.

“ஒரு ரூம் தான் இருக்கு. கெளம்பு நேரமாச்சு” இருவரும் சென்றால் நிச்சயம் பெண்களை விட தயாராக நேரமெடுப்பார்கள் என்று அறிந்து தான் முதலில் அவர்களை அனுப்ப எத்தனிக்கிறான் உதய். ஆனால் அதற்கு மற்றொரு காரணம் ஒரே அறையிலிருந்தால் இருவரும் பேசிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்று தான் இந்த வழி. மறுப்பு எதுவும் கூற முடியாமல் வேகமாக முகத்தை வெட்டி விஷ்ணு செல்ல, ஹரி தலையை வேண்டா வெறுப்பாக அசைத்துவிட்டு சென்றான்.

அவர்கள் இருவரும் சென்றவுடன் வேகமாக தன் கையிலிருந்த அந்த பெரிய தட்டை அருகிலிருந்த மேஜையில் வைத்து கையை கூட துடைக்காமல் அவனைப் பார்த்து நிமிர்ந்து, “சார் எல்லா அரேஞ்மென்ட்ஸ் பண்ணியாச்சு. ஒருத்தர ஒக்கார விடல சார், வெரைட்டி வெரைட்டி வேலை வாங்குனேன். இங்க பாருங்களேன் இந்த டேபிள் ஆர்டர் கூட நான் தான் சொன்னேன்”

அப்படியே நடந்தவள் சுவரைச் சுட்டிக்காட்டி, “இங்க அவங்க பலூன் வித் ப்லவர் வைக்கலாம்னு சொன்னாங்க. நாம என்ன குழந்தையோட பர்த்டேவ செலிப்ரேட் பண்ணையா வந்துருக்கோம்? ஆசை தான் எல்லாரும் பலூன் பாத்தா நல்லா தான் இருக்கும் ஆனா இங்க சார்க்கு தான பர்த்டே அதுக்கு தான் போதும் சுத்தி பூவா வச்சு விடுங்கனு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன்.

பாருங்க இதுல கூட கொஞ்சம் வளைஞ்சு கோணலா இருக்கு” என்றவள் அந்த பூங்கொத்தினை சரியாக வைக்க எக்கி முயல, அவள் உயரத்திற்கு அது எட்டவில்லை ஆனால் அவளை மொத்தமாய் உதய் பார்க்க வழி செய்து கொடுத்தாள். எப்பொழுதும் அடக்கி பின்னியிருக்கும் அவள் வளர்ந்து நீண்டிருந்த கூந்தல் இப்பொழுது அவள் இடையைத் தொட்டு விரிந்து படர்ந்திருந்தது.

செய்த தவற்றை மறைக்கப் போராட அவள் படும் பாடை அவள் கழுத்தில் பூத்திருந்த வேர்வை துளிகள் கூற, அதை இன்னும் வலுக்கும் பொருட்டு அந்த பூவை சரி செய்கிறேன் என்று சற்று குதித்து முயன்றும் தோல்வியே. ஆனால் அவன் கண்களுக்கு விருந்தாக, அவள் புடவை மடிப்பு விலகி அப்பழுக்கற்ற இடையைக் காட்ட, அவளிடம் ஏற்கனவே மயங்கி நின்றவன் இப்பொழுது உரிமையோடு கண்கள் அவளைத் தொடர்வதைத் தவிர்க்க முடியாமல் நின்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!