Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 19.2

ஜெயனிடம் திரும்பி, “இத அரேஞ் பண்ண சொல்லுங்க ஜெயன், என் கீ தாங்க” சாவியை வாங்கி, “யாழினி மிஸ்டர் பிரவுன் பைல் வச்சிருக்கீங்களா?” சில மணி நேரங்களாகச் சற்று கலைத்திருந்தவள் சேலை இப்பொழுது அவள் குதித்ததில் மொத்தமாகக் கலைந்திருந்தது, அவள் உடனடியாக அதைச் சரி செய்திருந்தாலும் இன்னும் சீராகவில்லை.

“ஜெயன் அண்ணா கிட்ட தான் சார் இருக்கும்” ஜெயனும் உடனே அதை உதய்யிடம் கொடுக்க, அதை வாங்கி யாழினியைப் பார்த்து “கம் வித் மீ” சுற்றிலும் ஆண்கள் கூட்டமே இருக்க அவளை அவ்விடம் விட்டு அழைத்துச் செல்லத் தான் அந்த கோப்பு ஒரு காரணம்.

நிச்சயம் ஒரு மாரல் கிளாஸ் உள்ளது என்று தன்னையும் தன் நாக்கையும் கருவிக்கொண்டே அவன் பின்னால் சென்றாள்.

வேகமாகச் சென்றவன், மார்பில் கல்லில் அவள் பிம்பம் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே படியை நோக்கிச் செல்ல, “சார் லிப்ட்” என்றாள் வேகமாக.



Advertisement

“ஒரு ப்லோர் தான் வாங்க” என்று மேலும் நடக்கலானான்.

“சார் கால் வலிக்கிது” சுருங்கிய முகத்துடன் அவள் வலியை கூற, அதற்குமேல் போவானா? லிப்ட் இருந்த பக்கமே நடந்தான்.

லிப்ட் கதவு திறந்ததும் அதில் முதலில் உதய் மாதவன் செல்ல அவனைத் தொடர்ந்து யாழினி அவனுக்கு முன்னால் நிற்க, அவளுடைய தெளிவான இடை மேலும் அவன் கண்களுக்கு விருந்தானது. நல்ல வேலை லிப்ட் வெகு சீக்கிரமே அடுத்த தளத்திற்கு வந்தது. அதைத் தொடர்ந்து உதய் அவனுடைய அறைக் கதவைத் திறந்து உள்ளே செல்ல ஒரு தயக்கத்தோடு நெளித்துக்கொண்டு வெளியிலே நின்றாள் யாழினி.

Advertisement

உள்ளே சென்று ஹோட்டல் கீ கார்டை உதய் மாட்ட, அந்த மொத்த அறையுமே வெளிச்சத்தில் மின்னியது, அதன் பிறகு தான் உதய் யாழினி இல்லாததை உணர்ந்து பார்க்க அவள் அப்டியே வெளியிலேயே தன்னுடைய ஹாண்ட் பாக்கை கெட்டியாகப் பிடித்து நின்றாள்.

Advertisement

“என்ன? உள்ள வாங்க” என்றான் உதய்.

“சார் நான் இங்கையே நிக்கிறேனே…” என்றாள் சங்கடமாக.

அவள் தயக்கத்தை உணர்ந்த உதய், “உள்ள வாங்க யாழினி” கதவை அப்படியே திறந்து உள்ளே சென்றுவிட்டான். யாழினிக்கு வேறு வழியே இல்லாமல் உள்ளே சென்று கதவை மூடாமல், “கதவு தொறந்தே இருக்கட்டும் சார், வேற்குது காத்து வரும்ல” இவள் எதற்காகக் கூறுகிறாள் என்று உணர்ந்தவன், பேசாமல் சென்று கதவை அடைத்து எ.சியை உயிர்ப்பித்து முதலில் அவளை ஆராய்ந்து அவள் கால்களைத் தான்.

Advertisement

“கால் வலி இன்னும் இருக்கா?”

அவனுக்கு பின்னாளிருந்த கதவையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள், “ம்ம்ம் நல்லா இருக்கு சார்” புடவையைச் சற்று தூக்கிக் காட்டினாள்.

‘ம்ம்ம்ஹ்ம்’ மனதிலே பெரும் மூச்சு விட்டு, “போய் ரெப்ரெஸ் ஆகிக்கோங்க” சேலையைச் சரி செய்யுமாறு நேரடியாகக் கூற முடியாமல் மறைமுகமாய் ஆணையிட்டான்.

“தேவையில்லை சார். நான் கீழ போகவா?” நின்ற இடத்திலே நெளிந்துகொண்டே பேசினாள்.

அவள் தன் மேல் நம்பிக்கையில்லாமல் தான் இப்படி வெளியில் செல்ல துடிக்கிறாள் என்றதைப் புரிந்து அவனுக்கு கோவம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறியது, “நம்பிக்கை இல்லனா அப்டியே வெளிய போ, எதுக்கு பெர்மிஷன் கேட்டுட்டு நிக்கிற? டிஸ்கஸ்டிங்” மொத்த கோபத்தையும் குரலில் கொட்டி வேகமாக அங்கிருந்த மேஜை ஒன்றில் அமர்ந்து கோட் சுய்ட்டை கழட்டி மெத்தையில் எரிந்து தான் கொண்டு வந்த கோப்பை எடுத்து அமர்ந்துவிட்டான்.

“எப்ப பாரு முட்டையை பாதுகாக்குற டிராகன் மாதிரி நெருப்பை கக்கிக்கிட்டே இருக்குறது. ஒரு பொண்ணு தனியா ஒரு ரூம்குள்ள கூட்டிட்டு வந்து கதவை சாத்த இது என்ன அவரு ஆபீஸா இல்ல நான் தான் அவரு பொண்டாட்டியா? பாக்குறவன் என்ன பேசுவான்னு ஒரு நெனப்பு வேணாம்?” உரிமையாய் அவனைத் திட்டிக்கொண்டே குளியலறை நோக்கிச் சென்று அதன் அழகில் மொத்தமாய் தன்னை மறைந்து நின்றாள்.

அந்த குளியலறையே அவள் வீட்டின் பாதி அளவிலிருந்தது, அத்தனை ஆடம்பரம், அதையும் தாண்டி வார்டிரோப் அந்த குளியலறையை விடப் பெரிது, அதில் அயர்ன் பாக்ஸ், ஹேர் ட்ரையர், ஐந்தாறு டவல், பாத்ரோப் எனச் சகலமும் இருந்தது, வியப்பாக அனைத்தையும் பார்வையிட்டவள் முகத்தைக் கழுவி, சேலையைச் சரி செய்து, தன் பையிலிருந்த சீப்பை வைத்து தலை வாரி அனைத்தையும் முடித்து வெளியில் வந்தாள். அவள் வெளியில் வந்த பொழுது ஏதோ புத்துணர்ச்சியாக உதய்யின் மணம், அவன் இப்பொழுது தான் குளித்து வந்துள்ளான் என்று கூறியது.

‘எப்படி குளிச்சாறு?’ கேள்வி ஒரு பக்கம் மறு பக்கம் வெளியில் செல்லலாமா என்ற தயக்கம். மெதுவாக எட்டிப் பார்த்தவளுக்கு, கருப்பு நிற சட்டையை அணிந்துகொண்டிருந்தவன் தெரிய, நிம்மதியாக வெளியில் வந்தாள். அவள் கொலுசொலியை அறிந்தும் திரும்பாமல் வுட் அண்ட் மேடொவ் வைட் சுய்ட்டை அணிந்தவனை பின்னாலிருந்து வெறித்து வெறித்துப் பார்த்தாள்.

“சார் கோவமா?” தன்னுடைய முதலாளியிடம் பேசுகிறோம் என்ற எண்ணமே மறந்து போனது அவனது உரிமை கோவத்தில்.

மௌனம்.

“சார்ர்ர்ர்…”

மீண்டும் மௌனம்.

“பாக்குறவங்க தப்பா நினைப்பாங்க சார். உங்களுக்கு ஒன்னும் அது பெருசா அபக்ட் பண்ணாது ஆனா நான் தான் தான் தப்பே பண்ணாம எல்லா போரையும் வாங்கிக்கணும். அதுக்கு தான் சார் வெளியவே நின்னேன், உங்க மேல நம்பிக்கை இல்லாம இருந்தா வெறும் ஸ்கிரீன் க்லாத் மட்டும் மூடி இருக்குற வாஷ்ரூம்ம யூஸ் பண்ணிருக்க மாட்டேன்”

எத்தனை அழகாய் அவன் மேல் இருக்கும் நம்பிக்கையைக் கூறிவிட்டாள் ஆனால் அவனுக்குத் தான் பதில் பேச முடியவில்லை. அமைதியாகத் திரும்பி தன்னை ஆழ்ந்து பார்த்தவன் கம்பீர தோற்றத்திலும் உடை தேர்விலும் யாழினிக்குப் பெருமூச்சு தான் வந்தது.

“நீங்க கீழ போங்க” என்றான் எதுவும் நடக்காதது போல்.

உடனே அவள் குரலின் தீவிரத்தை மொத்தமாய் மாற்றி, குறும்பாய், “அப்ப நீங்க என் மேல கோவமா இல்ல தான?”

அந்த சிரித்த முகத்தைப் பார்த்து தன் இதழில் வந்த சிரிப்பை அடக்கியவன், “நாளைக்கு உங்க ஒர்க்க ரெண்டு மணி நேரம் எக்ஸ்டெண்ட் பண்றேன்” என்றான் சீரியஸாக.

அவன் கூறியதில் சற்று துள்ளிக் குதித்துச் சிரித்தவள், “மூணு விசியம் சொல்லணும் சார்…”

ஏதோ சொல்ல வருகிறாள் என்று அவன் பார்க்க, “ஒன்னு இந்த மாதிரி பனிஷ்மென்ட் கூட நல்லா தான் இருக்கும் நீங்க இருந்து லக்சர் கொடுத்துட்டே இருந்தா…

ரெண்டு, போங்க வாங்க வேணாம். கோவத்துல பேசுனீங்கள்ல நீ, போ-னு அப்டியே கூப்புடுங்க. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்”

அவள் கண்கள் அவன் சீராக வாரிய தலை முதல் கிரிஸ்ப் சுய்ட்டை அணிந்த கால்கள் வரை பார்த்து, “நீங்க ரொம்ப ஹாண்ட்சமா இருக்கீங்க” சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.

“உன்ன விட கம்மி தான் யாழி” ஓடி சென்ற பெண்ணை பார்த்து மனதிலே பேசி சிரித்தான்.

யாழினி சிரிப்பு செய்த சிறிய மாயத்தில் அகம் மகிழ்ந்து புத்துணர்ச்சியோடு சிறிது வேலைகளைப் பார்த்து விழா தொடங்க அரை மணி நேரம் முன்பு வந்தவனை நிறுத்தி யாழினி சில சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டிருக்க, “மாமா” என்ற உற்சாகமான குரலில் உதய் இதழ்கள் பெரிதாக விரிந்து புன்னகை சிந்தியது.

யாழினிக்கோ அதிர்ச்சி, இவனா சிரிப்பது என்று? சிரிப்பிற்குக் காரணமான குரலைப் பார்த்து அவளுக்கு மேலும் அதிர்ச்சி. அழகாய் சிறு குழந்தையின் முகம், அதில் அப்படி ஒரு சாந்தம்.

ஆஷ் கலர் எ லைன் பார்ட்டி கவுன் அணிந்து அழகாய் காட்சியளித்த அந்த பெண் உதய் அருகில் வந்து, “மாமா நீங்க வழக்கம் போல ஹாண்ட்சமா இருக்கீங்க” உதய் திரும்பி யாழினியைத் தான் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான்.

“தேங்க்ஸ் மணி. சென்னைக்கு வந்த இத்தனை நாள்ல உனக்கு இப்ப தான் என்ன பாக்குற நேரம் வந்துச்சா?”

வேகமாகத் தலையைத் தலையை ஆட்டி, “இல்ல மாமா எனக்கும் உங்கள பாக்கணும்னு ஆசை தான் ஆனா அப்பா தான் உங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்க”

ஆம் அதே மணிமேகலை தான். ஆதியின் மான்குட்டி. மணிமேகலையின் தந்தை தான் நளினியின் சகோதரர்.

“மாமா கைக்குள்ள இருந்து நீயும் வர மாட்ட அவரும் விட மாட்டாரு, எப்ப உனக்காக நீ வாழுறன்னு நானும் பாக்றேன்”

“அதெல்லாம் இருக்கட்டும் எங்க எங்க எடுங்க” என்று அவன் முன் கையை நீட்டி உரிமையாய் கேட்க யாழினி கண்ணைச் சிமிட்டி சிமிட்டி பார்த்தாள் நம்ப முடியாமல்.

அவனும் சிரித்துக்கொண்டே, “என்ன எடுக்கணும்?”

அவளைச் சீண்ட உதய்க்கு மிகவும் பிடிக்கும். சிணுங்கிக்கொண்டே, “ம்ம்ஹ்ம்ம் மாமாஆஆ…” கால்களை உதைத்து உதைத்து அவனிடம் வேண்டினாள்.

“சரி அழுகாத” தன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து அவள் வருவாள் என்று அறிந்து ஒரு பெரிய டைரி மில்க் ப்ரூட் அண்ட் நட்ஸ் சாக்லேட் ஒன்றையும் அதோடு ஒரு டைரி மில்க்கின் கூப்பனையும் கொடுத்தான். இது அவர்களுக்குள் இருக்கும் சிறு வயது பழக்கம். எப்பொழுதெல்லாம் உதய் மணிமேகலையை பார்க்கிறானோ அப்பொழுதெல்லாம் அவளிடம் சாக்லேட் பார் ஒன்றைக் கொடுத்துவிடுவான்.

“அய்ய்ய்ய்… தேங்க் யூ சோ மச்” என்றவள் அவன் கைகளை கெட்டியாக பிடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த. ஆனால் இதை பார்த்த யாழினி தான் உதட்டை சுளித்து பொறாமையை வெளிப்படுத்தினாள்.

“பை மாமா. அப்பா தேடுவாங்க” என்றவள் யாழினியையும் பார்த்து விரிந்த புன்னகையுடன், “பை” என்று சிட்டாய் பறந்துவிட்டாள்.

“பாக்கெட்ல எப்பையுமே சாக்லேட் வச்சிருப்பீங்களோ சார்?” பொறாமை இல்லை, ஆனால் சிறு பொறாமை தான் யாழினிக்கு.

“ஏன் உங்களுக்கு வேணுமா?”

“ச்ச ச்ச நான்லாம் சாக்லேட் சாப்புடுற ரகம் இல்ல சார். சூடா, காரமா வகை வகையா சாப்புடுவேன்”

கண்களில் கனவு மின்னப் பேசிய அவளைக் கண் திருப்பாமல் பார்த்தவன் பிறகு சுற்றம் உணர்ந்து, “கேக் ஒரு தடவ செக் பண்ணிட்டு வாங்க” என்று திசை திருப்பி அனுப்பி வைத்தான்.

அதே நேரம் ஜெயன் உதய்யிடம், “சார் மிஸ்டர் பிரவுன் ஹோட்டல் இன்னும் பிப்டீன் மினிட்ஸ்ல ரீச் ஆகிடுவாரு. சி.எம் இன்னும் ஹலஃப் அன் ஹௌர்ல வந்துடுவார்”

“ஓகே நான் தம்பிகளை போய் ரிசிவ் பண்ண சொல்றேன். மாமா வந்துட்டாரா?”

“யா சார் ரகுநந்தன் சார் கூட அவர் ரூம்ல இருக்காங்க”

“ஓகே அப்பாவையும் சித்தப்பாவையும் முன்னாடி வந்து நிக்க சொல்லுங்க கெஸ்ட் எல்லாரும் வர ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. முக்கியமா மிஸ்டர் பிரவுன் பக்கத்துலயே நீங்க இருங்க இன்னைக்கு ஒரு நாள் அவர் மட்டும் தான் உங்க போக்கஸ் என்ன நான் பாத்துக்குறேன்” என்றவன் ஜெயனை அனுப்பி வைத்து ஹரியை அழைத்தான்.

“பிரவுன் கீழ வந்துடுவார் போய் ரெண்டுபேரும் ரிசிவ் பண்ணிட்டு வாங்க”

“சரி ண்ணா” என்று நடக்கவிருந்தவனை மீண்டும் அழைத்து, “ட்ரிங்க்ஸ் பக்கம் ரெண்டுபேரும் போகவே கூடாது அவன்கிட்ட முக்கியமா சொல்லிடு” ஹரியிடம் எச்சரிக்கையாக கூறினான்.

“நீங்களே அவன்கிட்ட சொல்லிடுங்க” என்றான் ஹரி முகத்தைச் சுருக்கி வைத்து.

“இது பிஸ்னஸ். நம்மளோட சொந்த விருப்பு வெறுப்பை தள்ளி வச்சுக்கணும்” மேலும் அவனை நெருங்கி வந்து அவன் ப்லேஷரை சற்று தளர்த்திவிட்டு டையை அவிழ்த்தான், “இன்னும் டை ஒழுங்கா கட்ட தெரியலல? ஸ்கூல் பழக்கம் இன்னும் உன்ன விட்டு போகல” என்றான் மெலிதாக புன்னகைத்து.

அவன் பாசத்தில் மொத்தமாய் கரைந்த ஹரி இன்னும் தயக்கத்தோடு கேள்வி எழுப்பினான் “எங்க மேல உனக்கு கோவமா ண்ணே?”

ஹரியின் கேள்வியில் உடனே முகத்தை உணர்ச்சிகளற்று மாற்றி, “பொறந்ததுல இருந்தே ஒண்ணா ஒட்டி வளந்தவங்கள தூரத்துல வச்சு பாக்குறதோட வலி உயிரோட நெருப்புல நிக்கிறதுக்கு சமம்” அந்த நேரத்திலும் தன்னை பற்றி யோசிக்காமல், விஷ்ணுவை பற்றியே யோசிக்கும் சகோதரன், ஹரியின் மனதில் உயர்ந்த இடத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துகொண்டான்.

டையை மாட்டி விட்டு காலரையும் சரி செய்து தங்களையே ஏக்கமாகத் தூரத்தில் நின்று பார்த்த விஷ்ணுவைத் தலையை அசைத்து அருகில் அழைத்தான் உதய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!