Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 19.3

“வில்லியம் பிரவுன்ன ரிசிவ் பண்ணிட்டு வாங்க வித் ஆல் ரெஸ்பெக்ட்” விஷ்ணு சரி என்று மட்டும் தலையை அசைத்து முன்னே நடக்க, தன்னை பற்றி எல்லாம் துளியும் கவலை இல்லாமல் இப்பொழுதும் விஷ்ணுவிற்காகப் பேசுபவனை எந்த கேட்டகிரியில் சேர்ப்பதென்று தெரியாமல் விஷ்ணுவை பின் தொடர்ந்தான் ஹரி.

அடுத்த சில நிமிடங்களில் அவன் தந்தை, சித்தப்பா வரவும் வில்லியம் பிரௌனை தக்க மரியாதையோடு வரவேற்று உபசரித்தனர். அதன் பிறகு, முக்கிய பிரபலங்கள், திரைத் துறையினர், அரசியல் பிரமுகர்கள், தொழில் துறை நண்பர்கள் என அந்த மொத்த பார்ட்டி ஹாலும் நிரம்பி வழிந்தது. நிற்கவே நேரமில்லாமல் ரகுநந்தனும், ஜெயநந்தனும் முதலமைச்சரிலிருந்து, சிறிய தொழிலதிபர்கள் வரை அனைவருக்கும் கவனிப்பு சரி சமமாகக் கொடுக்க, மற்றொரு புறம் தன் சகோதரர்கள் இருவரையும் எந்நேரமும் அருகிலே வைத்து அங்கிருந்த அத்தனை மனிதர்களுக்கும் இருவரையும் அறிமுகம் செய்து வைத்து, தன் பேச்சில் இருவரையும் கட்டிப்போட்டு வைத்தான் உதய் மாதவன் என்னும் தொழில்வல்லுநன்.

அந்த நீண்ட ஹாலின் முன் இருக்கையிலிருந்து பேச்சும் அறிமுகமும் தொடர்ந்து, அவர்கள் அந்த ஹாலின் கடைகோடியில் இருந்த சமயம் அவன் அலைபேசி சிணுங்க அதில் வந்த ஆதவனின் எண் என்பதால் அழைப்பை ஏற்று, “ஒரே ஹால் குள்ள இருக்கறப்ப எதுக்கு கால் நேர்ல வா” என்றான்.

“உதய் கொஞ்சம் பிரச்சனை” என்றான் ஆதவன். அவன் குரலிலிருந்த தீவிரத்தினை புரிந்து, “எக்ஸ்க்யூஸ் மீ” என்று கூட்டத்தை விட்டு சற்று விலகி வந்து, “யார்?” என்றான்.



Advertisement

“ஆதி” அழைப்பைத் துண்டித்து வேகமாக உதய் மேடை பக்கம் செல்ல அங்குச் சரியாக வில்லியம் பிரவுன் அருகில் அமர்ந்து எதையோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தான் ஆதி கேசவன்.

அவனுக்கு சற்று தள்ளி ஜெயன் நிற்க உதய்யை கண்டதும் அவன் அருகில் வந்து எதுவும் பேசாமல் நின்றுகொண்டான்.

முகத்தில் வளர்ந்திருந்த தாடி இல்லாமல் இரண்டு நாள் பியர்ட் வைத்து, திருத்திய முடி, பார்மல் ஸ்கை ப்ளூ ஷர்ட் எனக் கச்சிதமாக அமர்ந்திருந்தான். அந்த நீல மேஜையில் உதயைப் பார்த்து ஆதி அமர்ந்திருக்க, வில்லியம் பிரவுன் முதுகு புறம் உதய்யை நோக்கி இருந்தது. வில்லியத்திடம் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்த ஆதி கண்கள் எதார்த்தமாக மேலே உயரும் பொழுது உதய்யை பார்க்க, அங்கு ஒருவன் அப்படி இல்லாதது போல் மீண்டும் அவரிடம் பேசும் தீவிரத்தில் மூழ்கினான்.

Advertisement

“உதய்” என்று ஆதவன் அவன் அருகில் வந்து நிற்க, “இவன் எப்படி ஆதவா இங்க வந்தான்?” கோவம் மட்டுமே இப்பொழுது உதய்யின் குரலிலும் கண்களிலும்.

Advertisement

“தெரியலடா இன்விடேஷன் இருந்தா மட்டும் தான் உள்ள அலோவ் பண்ணனும்னு சொல்லி தான இருந்தோம்?” ஆதவனுக்கும் ஒன்று புரியவில்லை, “ஆனா இவன் எதுக்கு உன்னோட கிளைன்ட் கிட்ட பேசணும்? அந்த நீரஜ் கூட அமைதியா தானடா இருக்கான்”

“அது ஆதி கேசவன் தான உதய்?” தன் அருகில் வந்து நின்ற தந்தையைப் பார்த்தவன் எதுவும் பேச முடியாத நிலையில், ‘ஆம்’ என்று தலையை மட்டும் ஆட்டினான்.

“எதையாவது எங்ககிட்ட மறைக்கிறீயா உதய்?” அவனுக்கு மற்றொரு பக்கம் வந்து நின்றார் ஜெயநந்தன், “கொஞ்ச நாளாவே நீ சரியில்ல உதய். வீட்டுலையும் சரி ஆபீஸ்லயும் சரி”

Advertisement

அவர் பக்கம் திரும்பியவன், “அப்டில்லாம் இல்ல சித்தப்பா. கொஞ்சம் ஒர்க் அதிகமாகிருக்கு அதுனால தான் நான் வீட்டுக்கு வரல. நான் பாத்துக்குறேன்” தன் பிரச்சனைகள் எப்பொழுதும் என்னுடனே முடியட்டும் என்று நினைப்பவன் இதையும் பெரியவர்களிடம் மறைத்தான்.

“அந்த ஒரே ஒரு நம்பிக்கைல தான் உதய் ஆபீஸ்க்கு கூட நாங்க வர்றது இல்ல. முப்பது வருஷம் உழைப்பு. அந்த உழைப்பையும் எங்க நம்பிக்கையையும் வீணாக்கிடாத” அழுத்தமாய் மகனிடம் கூறி அவ்விடம் விட்டு அகன்றார் ரகுநந்தன்.

“நீ செத்தா கூட பிஸ்னஸ் பாத்துட்டு சாவுன்னு சொல்லுவாங்க போல. என்னடா இப்டி இருக்காங்க” வருத்தத்தை மறைக்க கோவமாய் பேசினான் ஆதவன்.

“ஆதவா…” கண்டிக்க உதய் குரலுயர்த்த, “போடா எதுக்கு எடுத்தாலும் என் வாய அட. தோ அடுத்து ரெண்டு டிக்கெட் வருது. பக்கிங் இரிடேட்டிங்” தங்களுக்கு இடதுபுறம் வந்து நின்றனர் ஹரி, விஷ்ணு.

“என்ன பிரச்னை” என்று வந்த விஷ்ணுவை அப்படியே நிறுத்தி, “நீ தான்டா பிரச்சனை அப்டியே கீழ குதிச்சு செத்து போறியா? வந்துட்டான் பஞ்சாயத்தை தீக்க சொம்பை தூக்கிட்டு” ஆதவனின் கோவத்தில் வாயைத் திறவாமல் இருவரும் வந்த வழியே சென்று ஓரமாக நின்றுகொண்டனர்.

அப்பொழுது ஆதி ஒரு ஆவணத்தை எடுத்து அவர் முன் நீட்டி ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்து ஒன்று சொல்ல, உதய் தான் நின்ற இடத்திலிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து அவன் ஒவ்வொரு செயலையும் ஆராய்ந்தான்.

“இது உன் மாமா அன்னைக்கு ஆதியை பாக்க போறப்ப அவன்கிட்ட வச்சிட்டு வந்த பைல் தான?” உதய் ஆமாம் என்று ஆட்டினான் ஆனால் கண்கள் ஆதியை விட்டு அகலவில்லை.

“கண்டிப்பா ஏதோ சரி இல்ல ஏதாவது பண்ணுடா” உதய்யை விரட்ட முயன்றான் ஆதவன்.

“அவனை போய் தடுக்க முடியாதுடா அதையும் மீறி போனா நமக்கு தான் கெட்ட பேர். எவ்ளோ தூரம் அவன் போக முடியுமோ போகட்டும்” அமைதியான குரல் அவ்வளவு தெளிவாக இருந்தது.

“அதுக்குன்னு சும்மா இருக்க போறியா உதய்?”

“அவன் அறிவாளிடா, அத விட என்ன நல்லா படிச்சவன். இந்த ப்ராஜெக்ட் எனக்கு எவ்ளோ முக்கியம்ன்னு தெரிஞ்சு தான் என்னோட பலத்தோட மோத வந்துருக்கான். அதுக்கு தான் என்னோட கோவத்தை தூண்டி விட்டு வேடிக்கை பாக்குறான். இந்த இடத்துல நான் கோவப்பட்டு அவனை ஜெயிக்க வைக்கணுமா?” மென் சிரிப்பு ஒன்றுடன் விளக்கத்தை கொடுத்தான் உதய்.

எரிமலையை அடக்கி அடக்கி வைத்தால் அதன் சீற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர இயலா நிலை வரும். அதை போலவே தன் கோவத்தை கட்டுப்படுத்தி நிற்கும் உதய் மாதவனின் சிரிப்பு கூட ஆதவனுக்கு திகிலை உருவாக்கியது.

“அவன் ஏதோ கோவத்துல பன்றான்டா” ஆதியை காப்பாற்ற தன்னால் இயன்ற முயற்சியை எடுத்துக்க துடித்தான் ஆதவன்.

“கைல பென்ன ஒழுங்கா புடிக்க முடியல, கழுத்து வலி அதிகமா இருக்கு, முதுகுல வாங்குன கத்தி குத்து கூட இப்பையும் வலிக்கிறனால கழுத்து வலிக்கு சார்ல சாஞ்சு கூட அவனால ஒக்கார முடியல. இவ்வளவு வலியோட இருக்கறவன் கோவத்துல வந்துருப்பான்னு நனைக்கிறியா ஆதவா? நிறுத்தி நிதானமா யோசிச்சு வெறில இந்த அடிய எடுத்து வச்சிருக்கான். அவன் ஓன் பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ற மாதிரி ஐடியா இருக்கானு விசாரி அடுத்த அடிய நான் எடுத்து வைக்கிறேன்” என்றான் தீர்க்கமாக.

“இல்லடா…”

“வேணாம் ஆதவா. தப்பே பண்ணாம அதோட பழியை ஏத்துக்குற அளவு நான் நல்லவன் இல்ல. இங்க இருக்குற எல்லாரையும் பொறுத்த வரைக்கும் நான் கெட்டவன் தான? அப்டியே இருந்துட்டு போறேன், அது அவனுக்கும் சேத்து தான்”

“உங்களுக்குள்ள எதுக்குடா ஈகோ எல்லாம்? நீங்க அப்டி இல்லடா” ஆதவனால் இவர்கள் இருவரையும் இப்படி பார்க்க முடியவில்லை. எந்நேரமும் ஒன்றாக, ஒருவருக்கு ஒருவர் துணையாக, தன்னுடைய தாய் தந்தையை விட அதிகம் நேசம் கொண்டது நண்பன் மேல் தான், அப்படி இருந்தவர்களை இந்நிலையில் பார்க்க வேதனையாக இருந்தது ஆதவனுக்கு.

“ஒரு வேலை நாங்க அப்டி தான் போல, அது இப்ப தான் எங்களுக்கு புரிஞ்சிருக்கலாம். ஊர் உலகமே அவனை பத்தி என்கிட்டே தப்பா சொல்லிருந்தாலும் என் மனசுக்கு தெரிஞ்சிருக்கும்டா அவனோட குணம். அப்றம் ஏண்டா அவனுக்கு என்ன பத்தி தெரியாம போச்சு? நான் அவனோட அப்பா பிஸ்னஸ் பேர கெடுத்துருப்பேனா? அதுவும் அவர் இந்த உலகத்துலயே இல்லாத சமயம்? அத விட போலீஸ் ஸ்டேஷன்ல சொன்னான் பாரு, அவனை கொல்ல டாக்டர் கூட்டிட்டு வந்தேனாம்”

தோள் குலுங்க சிரித்தான், “ம்ம்ம் நடக்கட்டும்” என்றவன் அதே சிரித்த முகத்துடன் பார்வையை மாற்றினான்.

ஆதி மற்றும் பிரவுன் இருவரின் பேச்சு அடுத்த சில நிமிடங்கள் தொடர அவர் எழுந்து ஆதியிடம் கை குலுக்கி அவன் தோளில் தட்டி பிறகு உதய் நோக்கி வந்து, “வில் காண்டாக்ட் யூ சூன் மிஸ்டர் உதய்”

“லெட் மீ வாக் வித் யூ சார்” என்று அவருடன் ஹாலை விட்டு வெளியில் நடந்தவன் ஜெயனை வர வேண்டாம் என்று சைகை செய்து சென்றான்.

அவர் செல்லும் வரை காத்திருந்தவன் சிறிது நேரம் அங்கிருந்த ஒரு இருக்கையில் முகத்தை மூடி அமர்ந்தவன் சில நிமிடங்கள் தன்னையே ஆசுவாசப்படுத்தி மீண்டும் பார்ட்டி ஹால் சென்றவன் நுழைவாயிலை நெருங்கிய பொழுது தன் சட்டையிலிருந்த ஒரு மாத்திரையை எடுத்து உண்டவன் உள்ளே நுழைந்ததும் ஒரு கண்ணாடி டம்ளரிலிருந்த தண்ணீரை எடுத்து அருந்தி ஆதி எங்கிருக்கிறான் என்று ஆராயத் துவங்கினான்.

“அங்க இருக்கான் பாரு” பின்னாலிருந்து வந்த ஆதவன் அவர்களுக்கு வலது பக்கத்துக்கு மூலையில் நின்று யாழினியுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

“அவ கூட இவனுக்கு என்னடா பேச்சு?” – உதய்

“அவன் எங்க பேசுறான்? உன் ஆளு தான் பேசுது… ஆதியை ஒருத்தன் பேச விடாம, தானே பேசி பாத்துருக்கியா? அங்க பாரு சரக்கு எடுக்க போறேன்னு போனவனை பத்து நிமிசமா வச்சு செஞ்சிட்டு இருக்கா” அந்த நிலையிலும் உதய் மாதவனுக்கு சிரிப்பு வரவில்லை.

உள்ளுக்குள் அத்தனை ஆதங்கம், கோவம், ஏமாற்றம். எதுவும் பேசாமல் ஒரு ஜூஸ் டம்ளர் எடுத்து அந்த நீண்ட சமையல் மேஜையின் முண்மை நாற்காலியில் அமர்ந்துகொண்டான், அந்த மொத்த ஹாலையும் பார்க்கும் வண்ணம்.

ஷார் ஹோல்டர்ஸ் மீட்டிங்கில் நாகரிகமே இல்லாமல் இப்படியா வந்து பேசுவாய் அதுவும் என் முதலாளியிடம் வந்து என்று உதய்யின் பி.எ என்று நிரூபிக்க ஆதியை கேள்விகளாலும், வசவாலும் வறுத்து எடுத்துவிட்டாள்.

அவளிடமிருந்து தப்பித்து வந்தவனுக்கு நேராக மணிமேகலை நிற்க, தன்னை ஓரக்கண்ணால் பார்த்தவளைச் சிறிதும் கண்டுகொள்ளாமல் அவளைத் தாண்டி நின்றிருந்த நளினியிடம் சென்றான்.

அவரிடம் பேசிக்கொண்டிருந்தவன் தனக்கு பின்னாளிருந்த மதுபானத்தை எடுத்த ஆதிக்குத் தன்னையே கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த உதய் கண்ணில் பட்டான்.

தன்னை போலவே ஒரு கண்ணாடி கோப்பையைக் கையில் வைத்திருந்தவனிடம் ‘சியர்ஸ்’ என்று புன்சிரிப்புடன் வாயசைத்தான் ஆதி. உதயிடமிருந்து எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லை, உயிரியைப் படிக்கும் பார்வையைத் தவிர. புருவத்தை உயர்த்தி ஏளன சிரிப்புடன் மீண்டும் நளினியிடம் திரும்பினான் ஆதி கேசவன்.

அதன் பிறகு ரகுநந்தனிடம் சென்று இரண்டு வார்த்தை பேசியவனுக்கு அவரது ஓட்டுதல் இல்லாத பேச்சில் ஏதோ புரிய மெதுவாக நழுவி உதய்க்கு பத்து நாற்காலிகள் தள்ளி அவனைப் பார்த்து அமர்ந்துவிட்டேன், கையில் ஒரு மதுக்கோப்பையுடன்.

மெதுவாக கூட்டம் களைய உதய் ஆதியை பார்ப்பதும், ஆதி மதுவை பார்ப்பதும் என அடுத்த ஒரு மணி நேரம் சென்றது.

மெதுவாக கூட்டம் எல்லாம் களைய ரகுநந்தன், ஜெயநந்தன், நளினி மற்றும் இரட்டை சகோதரிகள் அனைவரையும் ஆதவன் பேசி இல்லம் அனுப்பி வைத்தான். இப்பொழுது அங்கு இருப்பது உதய், ஆதி, ஆதவன், யாழினி, விஷ்ணு, ஹரி, ஜெயன் மற்றும் உதய்யின் ஆட்கள் சிலர் மட்டுமே. மொத்த இடமும் நிசப்தமாக இருந்தது.

இவ்வளவு நேரம் தன்னையே ஏளனமாய் சிரித்தபடி அமர்ந்திருந்த ஆதியை ஒரு சிரிப்புடன் கடந்து நாற்காலியிலிருந்து எழுந்தவன் அப்படியே அந்த நீண்ட டைனிங் டேபிள் வலது பக்கம் சென்று ஹரி, விஷ்ணு நின்றிருந்த இடத்திற்கு வந்தான்.

சாதாரணமாக நின்றிருந்த விஷ்னு அருகில் வந்தவன் நொடி நேரத்தில் அவன் கன்னத்தில் ஓங்கி அரை ஒன்றை கொடுக்க இரண்டடி தள்ளி கால் தடுமாறி நின்றான் விஷ்ணு. யாழினி தனக்கே அந்த அடி விழுந்தது போல் கன்னத்தில் கை வைத்து நின்றுவிட்டாள்.

“உதய்…” ஆதவன், ஹரி ஒரு சேர கத்தினர் பதட்டத்தில். ஆனால் அவன் முழு ஆளுமையான பார்வையில் வேறு எதுவும் அவர்களால் பேச முடியவில்லை.

“உன்னால ஜெயிலுக்கு போனான்னு விஸ்வாசமா இருக்கீங்களோ?” சத்தமாக பேசவில்லை, அதிகம் கோபப்படவில்லை ஆனால் அவன் குரல் அத்தனை அழுத்தமாய் வந்து விழுந்தது.

“ஆமா, அவர் மேல தப்பே இல்லனு நான் சொல்லியும் நீ போலீஸ் ஸ்டேஷன் அனுப்புனல?” ஆங்காரமாக குரலை உயர்த்தி தன்னுடைய கோவத்தை வெளிப்படுத்தினான் விஷ்ணு.

“என்கிட்ட சொன்னியாடா நீ? ஆஹ்… என்கிட்டே நீ சொன்னியா இல்ல என் ஆளுங்ககிட்ட சொன்னியா… இல்ல இவன நான் தான் போலீஸ் ஸ்டேஷன் அனுப்புனேன்னு நீ பாத்தியா?”

மேலும் மேலும் விஷ்ணுவை நோக்கி உதய் கோவத்தில் அடியெடுத்து வைக்க ஆதவன் உதய்யின் கையை பிடித்தான், உதய் பின் திரும்பி ஆதவனை முறைக்க, “வேணாம்டா…” என்றான் ஆதவன் மெதுவாக.

அவன் கையை உதறி அதே கோவத்தை மீண்டும் விஷ்ணு மீது காட்ட உதய் முன்னேற இப்பொழுது விஷ்ணுவை தனக்குப் பின்னால் தள்ளி ஹரி அவன் முன் வந்து நின்றான், “அண்ணா அவன் என்னன்னே தெரியாம பண்ணிட்டான்.  இந்த ஒரே ஒரு தடவ விட்டுடுங்க” கண்களைச் சுருக்கி கெஞ்சினான் ஹரி.

“சரி அவனை மன்னிக்கிறேன் எனக்கு ப்ராஜெக்ட் வாங்கி தர சொல்லு” நிதானமாக உதய் கூறினான்.

“அண்ணா…” அதற்குமேல் பேச முடியவில்லை ஹரியாலும் ஆனாலும் விஷ்ணுவைக் காக்கத் துளியும் அசையவில்லை.

“ஜெயன்… நடுல யாரும் வர கூடாது” கோவமும் ஏமாற்றமும் அவன் குரலில் சரி விகிதத்திலிருந்தது, உடனே ஜெயன் ஹரியை விஷ்ணுவை விட்டுப் பிரித்து நிறுத்த, ஹரி எவ்வளவு முயன்றும் ஜெயனின் பாலத்தின் முன்னால் ஹரி பூஜ்யமானான்.

“ம்ம்ம் சொல்லு எனக்கு நாளைக்கே அந்த ப்ராஜெக்ட் உன்னால வாங்கி தர முடியுமா?” மீண்டும் மீண்டும் அதிலே வந்து நின்றான் உதய் ஆனால் இம்முறை விஷ்ணுவைக் காத்தது ஆதி.

“கோவம் என் மேல தான்டா எதுக்கு அவன்கிட்ட குதிச்சிட்டு இருக்கனும்?” தானும் கோவமாய் விஷ்ணுவைப் பாதுகாக்க முன் வந்தான், காரணம் உள்ளே நுழையும் இன்விடேஷன் மட்டுமே ஏதேதோ சமாளித்து வாங்கினான் ஆதி வேறு எதுவும் விஷ்ணுவிற்குத் தெரியாது.

“நீ இதுல நடுல வராத. நான் என் தம்பிகிட்ட தான் பேசுறேன்” பல்லைக் கடித்து ஆத்திரத்தை அடக்கி வைத்தான்.

“உன் தம்பியா இருந்தாலும் என்னால அவன் அடி வாங்குறப்போ பாத்துகிட்டு சும்மா இருக்க முடியாது, நான் இப்டி தான் வந்து நிப்பேன்… என்ன பூச்சாண்டி காட்டுறியா? என்னடா பண்ணிடுவ பண்ணுடா பாப்போம்” என்று ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்த ஆதியின் சட்டையைக் கொத்தாகப் பிடித்த உதய் ஒரே அழுத்தத்தில் ஆதியை சுவரில் மோதவிட்டு நிறுத்தினான்.

“உன்னால தான்டா உன்னால மட்டும் தான் இவ்ளோ பிரச்சனையுமே” ஆதியின் நெஞ்சில் ஒற்றை விரலைக் குத்தி கோவத்தை வெளிப்படுத்தினான், “எனக்கு எந்த ப்ராபிட்டும் இருக்க கூடாது அது தான உன்னோட ஆசை, சரி எனக்கு அந்த ப்ராஜெக்ட்ல இருந்து ஒரு பைசா கூட காசு வேணாம். என் கம்பெனிக்கு ப்ராபிட் வேணாம். என்னோட எம்பிளாய்ஸ்க்கு சாளரி மட்டும் கரெக்ட்டா வந்தா போதும்டா. உன்னால அத திருப்பி வாங்கி தர முடியுமா? ஆஹ்…” நிதானமாகத் துவங்கியவன் இறுதியில் ஆக்ரோஷமாகக் கத்தினான் உதய் மாதவன்.

தன்னை பிடித்திருந்த உதய்யின் கையை உதறித் தள்ளிய ஆதி கோணலாகச் சிரித்து வைத்தாலும் அவன் நெற்றி நரம்பு புரிந்து அவன் கோவத்தை உரைத்தது, “என்னது ப்ராபிட் இல்லாம மிஸ்டர் மாதவன் பிஸ்னஸ் பன்றாரு? காதுல பூ சுத்த பாக்குறியோ…” உதயின் முகம் மொத்தமும் ரௌத்திரத்தால் சிவந்திருந்தது.

“சரி ப்ராபிட் விடு. இந்த ப்ராஜெக்ட் பண்ணுனா உன் கம்பெனிக்கு எவ்ளோ பெரிய பேர்-னு எனக்கு தெரியும். ஏண்டா நீ கொஞ்சம் கொஞ்சமா சரியிறத பாக்கணும்னு ஆசை படுற நான் எப்பிடிடா உன்ன நல்ல பேர் எடுக்க விடுவேன்? என் அப்பா பேர் கெட்டு போனப்ப நான் எவ்ளோ துடிச்சேனோ, என் தங்கச்சி எவ்ளோ அழுதாலோ அத விட பத்து மடைந்து நீ கதரனும்”

“ஆதி அவன் அப்டிலாம் பன்னலடா…” அவசர அவசரமாக வந்தது ஆதவனின் குரல்.

பார்வையை உதயிடமிருந்து மாற்றாமல் கையை மட்டும் ஆதவன் பக்கம் நீட்டி எச்சரிக்கை செய்தவன் மீண்டும் உதய்யிடம், “உன் குடும்பமே உன்ன தூக்கி எரியனும்… எரிய வைப்பேன். நான் என் தங்கச்சியோட நடு தெருவுல நின்ன அந்த நிமிஷம் அனுபவிச்ச வலிய நீயும் அனுபவிப்ப. அது வரைக்கும் ஓயமாட்டேண்டா…”

“என்னடா மிரட்டுறியா?” உதய்யின் உஷ்ண மூச்சுக் காற்று ஆதியின் கன்னத்தைத் தொட்டுச் சென்றது.

“ம்ம்ம் இருக்கலாம்… மிரட்டல், எச்சரிக்கை…” ஒரு நொடி நிறுத்தியவன், “பயம்” அழுத்தமாய் பயத்தைக் கூறி, “இதுல எதுவா வேணாலும் நீயே முடிவு பண்ணிக்கலாம்” ஆதியின் கேலியில் இன்னும் இன்னும் சினம் ஏறியது, அதிலும் பயம் என்னும் வார்த்தை அவன் ஆங்காரத்தை மொத்தமாய் தட்டி எழுப்பிவிட்டது.

“நடு தெருவுல உன்ன நிக்க வச்சது நானா இல்ல உன்னோட அப்பாவா?” தன்னுடைய தந்தையைப் போல் எண்ணிய மனிதரை அவ்வாறு இளக்காரமாய் பேச உதய்க்கும் கசந்தாலும் அவன் கோவம் அத்தனை நிதானத்தையும் விழுங்கி தின்றது.

இப்பொழுது ஆத்திரத்தில் உதய்யின் சட்டையைப் பிடிப்பது ஆதியின் முறையானது, “என் அப்பா பத்தி பேச கூட அருகதை இல்லாதவன்டா நீ”

எரிச்சலாக அவன் கையை தட்டி விட்ட உதய், கசங்கியிருந்த தன் சட்டையைக் கூட சரி செய்யாமல், “உனக்கு என்ன இப்ப நீயா நானான்னு தெரியணும் அப்டி தான? தப்பு செஞ்சவன் கூட தோல்விய ஒத்துக்க மாட்டான், இங்க தப்பே செய்யாம என்னோட கனவை ஒடச்ச உன்ன சும்மா விட்ருவேனா? வா டா. வா… ஆடலாம் நீ உன் ஆட்டத்தை ஆரமிச்சு விட்டுட்ட அடுத்து என்னோட ஆட்டத்தை பாரு”

“என்னடா படம்காட்டுறியா உன்னோட உருட்டல் மெரட்டலுக்கெல்லாம் இம்மியளவும் அசருற ஆளு நான் இல்ல… நல்லா நிறுத்தி நிதானமா பிளான் போட்டு வை. எப்படியும் உன் பிளான் நீ குடுத்த சரக்கு மாதிரி கிக்கே இருக்காது… இருந்தாலும் பரவால்ல பாத்து ஷாக் ஆகுற மாதிரி நடிக்கிறேன்”

உதய் தோள் தட்டி, “என்ன வர்ட்டா… உதயா” உதய்யை எப்பொழுதும் எரிச்சலூட்ட ஆதி பயன்படுத்தும் அதே குரல், அதே பெயர் உச்சரிப்பு… சிரிப்புடன் உதய்யின் கோட் சுய்ட்டில் அவன் மாட்டி வைத்திருந்த கூலர்ஸை எடுத்துத் தான் போட்டுக் கொண்டு விஷ்ணு பக்கம் திரும்பியவன், “வர்றேண்டா அரை போதை நாயே…” அந்த அரங்கமே கேட்கும் வண்ணம் ராகமாகப் பாடி வெளியேறினான் ஆதி கேசவன்.

Podunga comments ah…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!