Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனை ஆராதித்த பூம்பாவை

அத்தியாயம் 2

அத்தியாயம் 2

பெங்களூர் நகரம்.. இந்தியாவின் கார்டன் சிட்டி (தோட்ட நகரம்) என்று முன்னர் அழைக்கப்பட்டது.. ஆனால் தற்போது பெங்களூர் ஐடி நிறுவனங்களின் மையமாக திகழ்வதால் இந்தியாவின் சிலிகான் வேலி என்று கூறப்படுகிறது..

பரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனம் நிறைந்து வழியும் சாலைகள், வானுயர கட்டிடங்கள் என தற்கால இளைஞர்களை பெரிதும் கவரக்கூடிய நகரம் தான் பெங்களூர்..

பெங்களூர் நகரத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற குழுமம்.. சக்சேனா குரூப் ஆப் கம்பெனீஸ்.. இப்பொழுது அதன் தற்போதைய நிர்வாகி சஞ்சீவ்ரதன் சக்சேனா..



Advertisement

கோவை மாநகரை பூர்வீகமாக கொண்ட.. சஞ்சீவ்ரதன் ஒன்றும் பெரிய செல்வந்தர் வீட்டு பிள்ளை இல்லை.. சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் தான்.. சிறிய வயதிலேயே தன் திறமையாலும்.. கடுமையான உழைப்பாலும்.. பெங்களூரின் சக்சேனா குழுமத்தில் பெரிய பதவியில் இருந்தார்..

அதன் உரிமையாளரின் ஒற்றை மகள் தான் சுஜாதா.. அவள் கம்பெனிக்கு வரும் நேரமெல்லாம் இருவருக்கும் காதல் பூக்க.. சுஜாதாவின் தந்தை இருவருக்கும் திருமணம் செய்து வைத்து.. கம்பெனியின் பொறுப்பையும் அவரிடம் கொடுத்தார்..

அதன் பிறகுதான் சக்சேனா குழுமம் அசுர வளர்ச்சி அடைந்தது.. சஞ்சீவ்ரதன் தன் திறமையால் சக்சேனா குழுமத்தை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தினார்.. பின் அக்குழுமத்தின் பெயரே அவர் திறமையின் அடையாளமாய் மாறிவிட்டது..

Advertisement

சஞ்சீவ்ரதன் சக்சேனா மற்றும் சுஜாதா தம்பதியரின் ஒற்றை மகன் தான்.. அபயசிம்ஹா சக்சேனா..

Advertisement

இப்பொழுது தந்தையை மிஞ்சிய தனையனாய் அபய் உருவெடுத்தான்.. தொழிலிலும் சரி சொந்த வாழ்க்கையிலும் சரி ராட்ஷசனாய் இருந்தான்.. நேருக்கு நேர் மோதுவோரை ஷத்ரியனாய் எதிர்கொள்பவன்.. கூடவே இருந்து குழி பறிப்பவர்களையும் துரோகிகளையும் அரக்கனாய் சித்திரவதை செய்வான்..

அவன் தொழிலில் காலடி எடுத்து வைத்து.. எவ்வளவு வெற்றிகளையும் புகழையும் பெற்றானோ.. அதற்கும் மேலாக எதிரிகளையும் பெற்றான்.. பெண்கள் விஷயத்தில் மிகவும் தாராளமாக நடந்துக்கொள்வான்.. அதற்காக கண்டவர்களையும் தன்னை நெருங்க விட மாட்டான்..

அபய் தன் பெற்றோருக்கு அடுத்தபடியாக இயல்பாக பழகும்.. மற்றொரு நபர் அதி அலைஸ் Ak.. அபயின் பள்ளித் தோழி.. ஆனால் அபய்யை விட மூன்று வயது இளையவள்.. ஒரே பள்ளியில் வேறொரு வகுப்பில் படித்தாலும் ஏதோ ஒன்று இவர்களை பிணைத்திருந்தது.. அது நட்பாக இருக்கலாம்.. இல்லை வேறு உணர்வுகளாகவும் இருக்கலாம்..

Advertisement

ப்ளூ ரோஸ் ஹோட்டலை அபய் அதி இருவரும் சேர்ந்துதான் நடத்துகின்றனர்.. ஆனால் அபய் பார்ட்னர் என்று வெறும் பெயருக்கு தான்.. மற்றபடி எல்லா அதிகாரமும் இவளிடமே.. தொழில் முறையில் அனைவருக்கும் இவளது பெயர் Ak.. அபய்க்கு மட்டும் அதி.. மற்றபடி இவளின் முழுமையான உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது..

அவளுக்கு மிகவும் பிடித்தமான நிறம் ப்ளூ.. மிகவும் பிடித்த பூவும் ப்ளூ ரோஸ் தான்.. அதனாலேயே ஹோட்டலிற்கு அதன் பெயரே வைத்து விட்டனர்.. அதி அபய் இருவருக்கும் பெரிதாய் எந்த வித்தியாசமும் இல்லை.. அபய் ராட்ஷசன் என்றால் இவள் ராட்ஷசி.. அபய் அதி இருவருக்கும் டாட்டூ மிகவும் பிடித்தமான விஷயம்.. அபய் அவன் முதுகிலிருந்து முன்பக்கம் வரையிலும் ட்ராகன் டாட்டூ வரைந்திருப்பான்.. அதியோ தன் கை கால்கள் முதுகில் ஊதா நிற ரோஜாக்களை வரைந்திருப்பாள்..

******************************************

கன்னம் இரண்டும் பண்ணு போல் வீங்கி.. பார்க்கவே பரிதாபமாய் நின்றிருந்தவளைக் கண்டு சிறிதும் இரக்கம் காண்பிக்காமல்.. அவளை கனல் சுமந்த விழிகளுடன் முறைத்துக் கொண்டிருந்தனர்.. அதியும் அபயும்..

சொல்லு.. உன்னைய யார் அனுப்பினா என்று சீறலான குரலில் எதிரில் இருந்தவள் கேட்க.. அப்பெண்ணின் கன்னத்தசைகள் யாவும் இறுகி வலித்தாலும்.. அடிவாங்கிய வீரியத்தில்.. வாய் தானாக அவர்களுக்கான பதிலைக் கூறிக் கொண்டிருந்தது..

அபயின் தொழில் முறை எதிரி ஒருவர்.. அவன் பல பெண்களோடு சுற்றியதை வைத்து.. அபய் பெண்கள் விஷயத்தில் பலவீனமானவன் என எண்ணினார்.. அதனால் அவரே ஓர் அழகான பெண்ணை அவனிடம் அனுப்பி அவனை மயக்கி.. கடைசி நேரத்தில் அரைகுறை உடையுடன் கண்ணீரும் கம்பளையுமாக அனைவரிடத்திலும் அபய் தன்னை கெடுக்க பார்த்ததாக கூறுமாறு சொன்னார்.. அப்பெண்ணிற்கு இதெல்லாம் சர்வசாதாரண விஷயம்.. தன் அழகின் மேல் உள்ள கர்வத்தில் இவனெல்லாம் பெரிய ஆளா என அலட்சியமாக நினைத்து சிங்கத்தின் குகைக்குள் காலடி எடுத்துவைத்து கன்னம் வீங்குமளவிற்கும் அடியும் வாங்கிவிட்டாள்.. ஐயோ பாவம்..

அவள் அனைத்தையும் கூறிவிட்டு இருவரையும் பயப்பார்வை பார்க்க… அதி அபயிடம் அவன் யாரென விழிகளால் கேள்வி எழுப்பினாள்..

மதுரசத்தை முடித்து விட்டு.. கோப்பையை கீழே வைத்த அபய்.. தன்னருகில் அமர்ந்திருந்தவளிடம்.. ஹ்ம்ம் s.s கம்பெனி ஓனர் பட்டேல்..

Ohh.. தாத்தாவா அதான் அவர் பிளானும் ரொம்ப ரொம்ப பழைய டெக்னிக்கா இருக்கு.. என நக்கலான புன்னகையை சிந்தியவள்… தன் போனில் சிறிது நேரம் மூழ்கினாள்.. பின் மீண்டும் அப்பெண்ணிடம் தன் விசாரணையை தொடர்ந்தாள்..

” ஹ்ம்ம்… ஹேய் உன்னோட பேரு என்ன? ”

” சோனல்.. ”

” ஹான் சோனல்.. நீ என்ன பண்ற.. எந்த திட்டத்தை ப்ரொசீட் பண்ண அவன் இங்க உன்னை அனுப்பினானோ அதை நீ அங்க போய் எக்சிகியூட் பண்ற.. ஓகே..” என அதி கூற.. அவள் தலையசைத்து அங்கிருந்து போகப்பார்க்க..

அப்பொழுது அவளை சொடக்கிட்டு அழைத்த அதி ” இங்க எங்ககிட்ட தலைய தலைய ஆட்டிட்டு அங்க எங்களுக்கு எதிரா எதாவது கேம் ப்ளே பண்ண.. ” என்று அவளின் விழிகளை அழுத்தமாய் பார்க்க.. அப்பெண்ணோ..” இல்ல மேடம் அப்படியெல்லாம் ஒன்னும் பண்ணமாட்டேன்.. ” என காலில் விழாத குறையாய் கெஞ்சியவாறு அங்கிருந்து ஓடினாள்..

இதுவரை அங்கு நடந்தவற்றை வெறும் பார்வையாளனாக பார்த்துக் கொண்டிருந்த அபய்.. ” பேப்.. இது ரொம்ப சிம்புளான பனிஷ்மென்ட்டா தெரியல.. ”

” ஹ்ம்ம் சிம்புள் தான்.. பட் இதோட எபெக்ட்ஸ் பவர் புள்ளா இருக்கும்… இங்க பாரு அந்த பட்டேல்லோட பேமிலி போட்டோ.. ” என்று தன் மொபைலை அவனிடம் நீட்டினாள்..

அதில் ஐம்பத்தைந்து வயதான பட்டேல்.. தன் மனைவி இரண்டு மகள் மகன் பேரக்குழந்தைகள் என அனைவருக்கும் மத்தியில் ஜம்பென்று அமர்ந்திருந்தார்..

பட்டேல் தொழில்ல தான் முன்ன பின்ன.. ஆனா அவரோட குடும்ப வாழ்க்கையில நல்ல கணவன் நல்ல அப்பான்னு இமேஜ் வச்சிருக்காரு.. இப்போ அத நம்ம தூள் தூளா உடைச்சம்னா.. அந்தாளு ஒன்னுமேயில்ல ஜஸ்ட் ஸிரோ.. அவன் பொன்னே மூஞ்சியில காறித்துப்புவா அண்ட் அவன் மருமக கூட இனிமே பட்டேல்ல சந்தேகமாத்தான் பார்ப்பா.. உடம்புல கொடுக்கிற அடியவிட மனசுல கொடுக்கிற அடிக்கு வலியும் வீரியமும் ஜாஸ்தி.. என புருவத்தை உயர்த்தி அதி கூற.. அபயின் முகத்தில் வஞ்சப்புன்னகை.. ” ஹ்ம்ம் நாட் பேட்.. பேப்.. அப்புறம் நானும் கொஞ்சம் பைனல் டச் கொடுத்துக்கிறேன்.. ” என அபய் புருவத்தை உயர்த்தி புன்னகைக்க.. அதி தோளைக் குலுக்கினாள்..

” ஹ்ம்ம் அபி எல்லாரும் உன் வீக்னஸ் கேர்ள்ஸ்ன்னு நினைக்கிறாங்க… நீ நினைச்சிருந்தா இதை எப்பயோ முடிச்சுருக்கலாம்.. ”

” ஹ்ம்ம் ஐ னோ பேப்.. பட் என் எனிமிஸ் எனக்கு வெரைட்டி வெரைட்டியா சப்ளை பன்றாங்களா அதான் அப்படியே நினைச்சுக்கட்டும்னு விட்டுட்டேன்” என நக்கலாக கூறினான்..

” ஹ்ம்ம் உண்மைதான் பட்.. உன்னை ஒரேயடியா அழிக்க ஹச் ஐ வி உள்ள பொண்ண அனுப்ப போறாங்க.. எதுக்கும் வர பொண்ணுங்களுக்கு மெடிக்கல் டெஸ்ட் எடுத்துடு.. இல்லை உன் கேர்ள் பிரென்ட் சோனியாகிட்ட மட்டும் ரிலேஷன்ஷிப் வச்சுக்க.. ” என தீவிரமான முகபாவனையுடன் கூறினாள்..

அவள் கூறி முடித்ததும்.. அபய் ராட்ஷசன் போல் சிரிக்க.. அதி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

” பேப்.. என்னோட கேர்ள் பிரெண்ட்ஸ் லிஸ்ட் எல்லாம் என்னைய விட உனக்குத்தான் நல்லா தெரியும்னு எனக்கு தெரியும்.. என்னைய ஒருத்தி நெருங்க முயற்சி பண்ணா அவள பத்தி அவளுக்கே தெரியாத விஷயத்தையெல்லாம் நீ தெரிஞ்சு வச்சுருப்பன்னும் எனக்கு தெரியும்.. ” என கேலியாக கூறிய அபய்.. அவளின் பிடித்தமான ஒயிட் ஒயினை கிளாஸில் ஊற்றி அதில் சில ஐஸ் கட்டிகளையும்.. வட்ட வட்டமாக அழகுற வெட்டிவைத்திருந்த லெமன் துண்டுகளையும் போட்டு அவளிடத்தில் கொடுத்து.. தனக்கும் ஒன்று எடுத்துக் கொண்டான்..

அதி அபயை பார்த்தவாறு கிளாஸை உயர்த்த.. அவனும் உயர்த்தி அதனை லேசாக இடித்து கண்ணடித்தான்..

************************************************

கோவையில் சிற்பிகா வீட்டின் ஹாலில் கூண்டு புலி போல் நடைப்பயின்றுக் கொண்டிருந்தார்.. ராஜாங்கம்.. அவர் விழிகள் அடிக்கடி சிற்பிகாவின் அறையையே வெறித்துக் கொண்டிருந்தது.. என்றும்மில்லாமல் இன்று அவர் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டார்..

அவர் காதுகளில்.. 5 கோடி ரூபாய் என்ற சொல்லே.. ரீங்காரித்துக் கொண்டிருந்தது.. அதுவே அவரை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது..

” என்னங்க என்னாச்சு ஏன் இப்படி குட்டி போட்ட பூனை மாதிரி சுத்திக்கிட்டு இருக்கீங்க.. ” என அவர் மனைவி அனுராதா கேட்டார்..

தீவிர யோசனையில் இருந்தவருக்கு மனைவியின் குரல் எரிச்சல் படுத்தியது.. இருந்தும் அதனை வெளிக்காட்டாமல்.. ஒன்னுமில்ல ராதா ஒரு யோசனை.. என்றவர் மனைவி அடுத்த கேள்வி கேட்கும் முன்பே.. ஆமா ரகு போன் பண்ணான்னா.. எப்போ வரானா என மனைவியின் சிந்தனையை மகன் மேல் திருப்பினார்..

ப்ச்.. அத சொல்ல மறந்துட்டேன் பாருங்களேன்.. ரகு இன்னும் ஒருவாரத்துல இங்க வந்துடுவானாம்.. போன வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சதாம்.. என உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தவரின் முகம் மாடியிலிருந்து வந்து கொண்டிருந்த சிற்பிகாவை கண்டதும் கடுத்தது..

ச்ச.. ஒரு நல்ல விஷயம் பேசுறப்போ வெருவாக்கட்டை மூஞ்சில முழிக்க வேண்டியதா இருக்கு.. ஏங்க நம்மளுக்கு வீடு வாசல் இல்லையா.. ஏன் இங்கயே பலியா கிடக்குறிங்க.. வாங்க போகலாம்.. ஒரு நல்ல காரியம் பேசுறப்போ இவ இருந்தா அந்த காரியம் விளங்குமா.. என வார்த்தைகளை நெருப்பு கங்குகளாய் கொட்டியவர்.. ராஜாங்கத்தின் மறுப்பை சட்டை செய்யாது.. அவரை இழுத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு சென்றார்..

சிற்பிகாவின் மதி முகமோ உணர்ச்சியின்றி நிர்மூலமாக இருந்தது.. அனுராதா செல்வந்தர் வீட்டு செல்லமகள்.. ராஜாங்கத்தின் காதல் வலையில் வீழ்ந்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்து பெரிய பிரச்சனையாகி.. ஒருவழியாக இவர்களின் திருமணம் நடந்தது.. அவர் மேல் இருக்கும் சொத்துக்களுக்காகவே அனுராதவை தங்கத்தட்டில் வைத்து தாங்கி.. அவரின் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் பொறுத்துக் கொண்டிருக்கிறார்.. அவர்களுக்கு ரகுநந்தன் என்ற மகனும் பல்லவி என்ற மகளும் உண்டு.. பல்லவி மூத்தவள் அவளை தன் அண்ணன் மகனுக்கே கட்டி வைத்துவிட்டார் அனுராதா..

அனுராதா சிற்பிகாவை கொண்டாடியதுமில்லை.. வெறுத்ததுமில்லை.. ஆனால் அவளுக்கு எப்பொழுது பருவ வயது வந்ததோ அன்றிலிருந்தே அவரிடமிருந்து இம்மாதிரியான பேச்சுக்கள் தான் வருகிறது.. முக்கியமாக அவள் ரகுவுடன் சிறிது சிரித்து பேசினால் போதும்.. அன்று முழுக்க இவளுக்கு நரகம் தான்..

அதற்கு மேல் அங்கு நிற்க பிரியமில்லாமல்… தன் தோழியைக் காண சென்றாள்.. சிற்பிகா.

******************************************

ராஜாங்கம் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தார்… இத்தனை வருட காத்திருப்பிற்கும் நல்ல பலன் கை மேல் வந்திருந்தது.. சிற்பிகாவின் ஒற்றை கையெழுத்து மூலம் அதன் பலனை முழுமையாக அனுபவிக்கலாம்.. அதற்காகத்தான் காலையிலிருந்து சிற்பிகாவிடம் எவ்வாறு பேசலாம் என ஒத்திகை பார்த்திருந்தார்.. ஆனால் அதற்குள் அவர் தர்மபத்தினி அனைத்தையும் கெடுத்து விட்டார்..

ச்ச.. எவ்வளவு நல்ல வாய்ப்பு கிடைச்சுச்சு.. அந்த சனியன் பிடிச்ச ரூபாலியும் இல்ல.. இத பயன்படுத்தி அவகிட்ட கையெழுத்து வாங்கியிருந்தா அஞ்சு கோடி கிடைச்சுருக்கும்.. எல்லாம் போச்சே.. இனி இந்த மாதிரி வாய்ப்பு வருமா வராதான்னு தெரியலையே.. என உள்ளம் வெம்பி புலம்பிக் கொண்டிருந்தார் ராஜாங்கம்..

சிற்பிகாவின் ஒற்றை கையெழுத்தின் மதிப்பு அஞ்சு கோடியா.. ஆனால் அக்கையெழுத்தின் பின்னிருக்கும் விஷயம்..????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!