Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் உன்னை சேருமா 29 2

அனைவரும் அப்போதுதான்  உண்டு  முடித்திருக்க ரதி மட்டும்  உண்டு  கொண்டிருந்தாள்…

 அக்னியை பார்த்ததும்  “அப்புக்குட்டி” என்று  ரதி பாதி சாப்பாட்டில்  எழுந்துக்கொள்ள பார்க்க..



Advertisement

 “ரதிம்மா முதலில் சாப்பிடுங்க, சாப்பிட்டு மாத்திரை போடுங்க அப்புறமா  உங்க அப்புக்குட்டி, தொம்புக்குட்டி, இம்சபிடிச்ச  குட்டியை போய் பார்க்கலாம், முதலில் சாப்பிடுங்க” என்று மாயா ரதியை  மிரட்ட..

 “மாயா எனக்கு சாப்பாடு போதும், நான் அப்புக்குட்டி கிட்ட போறேன்”, என்று ரதி கூற…

Advertisement

Advertisement

 “மா” என்று ரதியை மாயா மிரட்டி உண்ண வைத்து,,  ரதியின் கையில் மாத்திரையை கொடுத்து விழுங்க சொல்லிவிட்டு..

” இப்போ போங்க “என்று கூற..

Advertisement

  குதித்துக் கொண்டு வந்தாள் ரதி அண்ணன் மகனை பார்க்க..

 “அப்புக்குட்டி வந்துட்டியா நேத்து சொன்ன மாதிரியே வந்துட்டு வா வா” என்று சோபாவில் அவனோடு  அமர்ந்து பேச..

“அப்புக்குட்டியாம்,   அப்புக்குட்டி மூஞ்சப்பாரு,, நல்லா பனமரம்  மாதிரி வளர்ந்து இருக்கான்,, இவன்ன போய்  அப்புக்குட்டியாம்?  தொப்புக்குட்டி” என்று அக்னியை திட்டியவாறே  மாயா  அவள் அறைக்கு செல்ல பார்க்க..

 “ரதி அக்னிக்கு சாப்பாடு போடு” என்று  உலகநாதன் கூற..

ரதி அக்னியின் முகத்தை பார்த்தவள்  “வா” என்று  அழைக்க..

 “நான் காலையில சாப்பிட்டு தான் வந்தேன் மாமா” என்று சொல்ல..

 “பரவால்ல அக்னி  கொஞ்சமா சாப்பிடு” என்று கூற.

“இல்ல மாமா என்னால சாப்பிட முடியாது, காபி வேணும்னா குடுங்க குடிக்கிறேன்” என்றான்…

 உலகநாதன் வேலைக்கார  பெண்மணி அழைத்து  “இரண்டு காபி  கொண்டு வா” என்று கூற..

 அக்னி ரதியிடம் பேசிக் கொண்டிருந்தாலும், அவனின் பார்வை மாயாவை தான் தேடியது,, அவள் இவனை  பார்த்ததும் அவள் ரூம் சென்று விட..

 மாயாவை    தேடிக்கொண்டிருந்தான்..

 மாயா அக்னியின்  மேல் பயங்கர  கோபமாக  இருந்தாள்,, எங்கே இவனை திட்டி விடுமோ என்று நினைத்து அவள் விலகி செல்ல…

 காஃபியை  குடித்து முடித்த  அக்னி  “மாமா நான் மாயா கிட்ட கொஞ்சம் பேசணும்”என்று கூற..

” பேசு அக்னி” என்றவர்.

” ரதி நீ வா நம்ம தோட்டத்து பக்கம் ஒரு வாக் போகலாம்” என்று அழைக்க..

” நான் வரமாட்டேன் நான் அப்புக்குட்டி கூட தான் இருப்பேன்” என்று அவள் கூற..

 “உன் அப்புக்குட்டியும் பத்து நிமிஷத்துல வருவார் நீ வா” என்று ரதியை அழைத்துக்கொண்டு தோட்டத்து பக்கம் சென்றார் உலகநாதன்..

 உலகநாதனிடம்    கேட்டுக் கொண்டே மாயாவின்  அறைக்கு  சென்றான் அக்னி…

 அக்னி கதவைத் தட்டி விட்டு மாயா அறை  உள்ளே வர.

 அக்னி பார்த்தது மாயாவுக்கு பயங்கரம் கோபம் வந்தது,, வந்ததுட்டான்  எங்க அப்பாவை எப்படி அடிக்க வந்துட்டு இப்ப வெட்கமில்லாமல் எங்க வீட்டுக்கு வராங்க.. டாடியும் கூப்பிடுறாரு வெளிய போனு சொல்ல வேண்டியது தானே வந்துட்டான்..

 பெரிய நல்லவன் மாதிரி இவ்வளவு நாள் எங்கே போனான் என்றவளுக்கு அவனைப் பார்த்ததிலிருந்து கண்ணீரும், ஆத்திரமும் வர..

 அவன் மீது எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதைவிட  பல மடங்கு  வெறுப்பும்  சேர்ந்து கொள்ள அவனைப் பார்த்த முறைத்த வண்ணம் அமர்ந்திருந்தாள்..

 அவனை  பார்த்தது மனமுருகத்தான் செய்தது.. உருகிய  மனதை, தூ  அறிவில்ல உனக்கு,,   நீயேல்லாம் என்ன பொண்ணு அவன் உனக்கு  என்னவெல்லாம் பண்ணி இருக்கான்,,  உங்க அப்பாவை கொல்ல வந்தவன் உன்னை அடித்து தள்ளி விட்டவன் என்று ஒரு மனம் சொல்ல இன்னொரு மனமோ,  அவன்,  அவன் அத்தைக்காக தானே  இவ்வளவும்  செய்திருக்கிறான் அதில் தப்பென்ன  இருக்கு என்று கூற..

 உன் அத்தைக்கு இப்படி நடந்தா நீ சும்மா இருப்பியா மாயா?என்று அவள் மனம் சொல்ல..

 “மாயா “என்று  அக்னி அவள் அருகில் வந்து நின்றவனை பார்த்தவள்,

 இவனை யாரு உள்ளே   விட்டது என்பது போல்  ஒரு பார்வை  பார்க்க,,

  ‘மாயா” என்று அவளிடம் எதோ பேச வர,,

“நீங்க எதுக்கு இப்ப வந்தீங்க” என்றாள்.,..

“மாயா சாரிடா நான் பண்ணது தப்புதான் சாரி” என்று..

 அவள் அருகில் வர..

“ப்ளீஸ் பக்கத்துல வராதீங்க நீங்க சொல்றத கேக்குற மனநிலையில் நான் இல்லை ப்ளீஸ் வெளியில போங்க” என்று மாயா சொன்னதும்..

 “மாயா நான் சொல்லுறதை கேளுடா”என்றான்  அக்னி..

 “நான் சொன்னத அன்னைக்கு  நீங்க கேட்டீங்களா?”என்று  அவன்  அருகில் வந்து அவனிடம்  சண்டை போடுவது போல் பேச..

 “நீ சொன்னத  நான் என்ன கேட்கல  சொல்லு” என்றான்..

 “நான் எவ்வளவு ஆசையா வந்தேன் அன்னைக்கு,,

 நம்ம பிள்ளைகள்  உருவாகி இருக்கிறது உங்க கிட்ட சொல்றதுக்கு நீங்க அத கேட்டீங்களா?”..

 “நீ என்னைக்குடி வந்த,,  என்கிட்ட எப்ப சொல்ல  வந்த?” என்று அவன் கேட்க ..

” நீங்க அந்த லால் பொண்ணா  அணைச்சு புடிச்சு போஸ் கொடுத்தீங்களே அன்னைக்கு தான்” என்றவளுக்கு மூச்சு வாங்கியது..

 அக்னி யோசித்தவன்  பின்பு ஞாபகம் வந்தவனாக..

” நீ  அன்னைக்கே  இந்த விஷயத்தை தான், என்கிட்ட  சொல்ல வந்தேன்னு   எனக்கு  எப்படி தெரியும்?  என்கிட்ட  அன்னைக்கே சொல்லி இருக்க  வேண்டியது தானே “?..

 “ஆமா சொல்ல வந்தவளை  போ போ நீங்க  விரட்டி விட்டுட்டு,, வந்துட்டாரு,,,  நீயேன்  சொல்லல்ல. நீ ஏன் சொல்லல்லன்னு”…

 “சாரி நான் பண்ணது எல்லாம் தப்பு தான், சாரி ஏதோ கோபத்துல அப்படி  பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிரு வா நம்ம வீட்டுக்கு போகலாம்  மாயா” என்று அவன் அவளை   அவன் வீட்டுக்கு அழைக்க..

” எது  நம்ம வீடு?  எது சார் நம்ம வீடு?!  என்றாள்..

” எங்க வீடு தான் உன் வீடு

 மாயா…

 வா போகலாம்”.. என்று அக்னி  அழைக்க..

” அவ்வளவு   தான்  உங்களுக்கு மரியாதை போயிடுங்க'” என்றாள்..

 “மாயா” என்று அவள் கை பிடிக்க வர..

 “பக்கத்தில் வந்தீங்க கொன்னுடுவேன் உங்களை. என் உணர்வுகளை எல்லாம் கொன்னுட்டு வந்துட்டாரு வா மாயா நம்ம வீட்டுக்கு போகலாமுன்னு  இப்படி கேட்க உங்களுக்கு எப்படி மனசு வருது” என்றவள் அவரை சரமாரியாக திட்ட..

 அவள் திட்டுவதை காதில் வாங்காதவன்..

” போதும் நிப்பாட்டு நான் பண்ணது தப்புதான்,,  நீ என்னை திட்டுறது சரிதான் என் அத்தை வாழ்க்கை போயிருச்சேன்னு கோவத்துல அப்படி பண்ணிட்டேன் நான் பண்ணது தப்பு. நான் அதை இல்லன்னு  சொல்லல்ல..

 ஆனா உன் அப்பன் எப்போ கல்யாணம் ஆகாம என் அத்தை நினைவா இருக்காருன்னு தெரிஞ்சிச்சோ.. அப்பவே என் கோபத்துக்கு ஒரு அர்த்தம் இல்லாமா ஆகிபோச்சு,  என் கோபமும்   போயிடுச்சு…

 நான் உனக்கு பண்ணது பெரிய துரோகம் தான், தப்பு தான் என்னை என்ன  பண்ணனுமோ பண்ணு, எனக்கு தண்டனை கொடுக்கனுமா கொடு,,  நீ என்ன சொன்னாலும் அதை நான் ஏத்துக்கிறேன்,,   அது என் கூட இருந்து நீ பண்ணு போதுமா உன்னை இவ்வளவு நாள் நான் தனியா தவிக்க விட்டது போதும்..  என் கூட வா மாயா,  எனக்கு நீ வேணும்டி  ப்ளீஸ் என்ன புரிஞ்சுக்கோ,  உன்னால தான் எனக்கு வாழ்க்கையே, எனக்கு வாழ்க்கை பிச்சை போடு வா” என்றான் கெஞ்சுவது போல்..

” வர முடியாது நான் வரமாட்டேன்” என்றாள்..

” நான் என்ன பண்ணா, நீ என் கூட வருவ சொல்லு அத நான் பண்றேன்”..

 “என்ன திடீர்னு உங்களுக்கு ஞானயுதயம் வந்திருக்கு, ரதியம்மா  எங்க வீட்டுக்கு வந்ததாலயா?  இல்ல வேற ஏதாவது காரணம் இருக்கா,

 எனக்கு பக்க பலமா இருக்கிறப்ப எல்லாம் பக்க பலமா இல்லாம,,? என்னை  வேதனைப்பட  விட்டுட்டு  இப்போ வா வாண்ணா நான் வந்துருவேனா”?.

 “மாயா போதும் நான் எல்லாருக்காக வாழ்ந்தது போதும்..  என் ரதி அத்தைக்காக  உன்னை நான்   காயப்படுத்தியது எல்லாம் போதும்,,  இனிமே நான் உனக்காக நம்ம  பிள்ளைக்காக வாழனும்முன்னு  நினைக்கிறேன் ப்ளீஸ்டி,,

 உன்னை உனக்கு ரொம்ப பிடிக்கும்  மாயா என்னை புரிஞ்சுக்கோ,,, என்னை கெஞ்ச வைக்காதே ப்ளீஸ் நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லைடி  புரிஞ்சுக்கோ  என் கூட வாடா”…

மாயா ஒன்றும் பேசவில்லை அமைதியாக கட்டலில் அமர்ந்திருந்தாள்,  “பதில் சொல்லு மாயா” என்றான்..

 அவளோ மீண்டும் அமைதியாக அமர்ந்திருக்க..

 அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன்.. ” நான் அவ்வளவு

கெட்டவனா  மாயா?  உன்னை இப்படி பார்க்க என்னால முடியலடி, என்னை  நீ புரிஞ்சுக்கோ,, என்னால தான்,  எல்லாமே என்னால தான்  எல்லாம் தப்பா போச்சு, அது  எனக்கு புரியுது,,  இனிமே நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும் மாயா,,  எனக்கு ஒரு வாய்ப்பு கொடு” என்று கெஞ்சுவது போல் அவள் முன்  மண்டியிட்டு அமர்ந்திருக்க..

 “நான் வரமாட்டேன் “என்ற தலையை ஆட்ட..

 இவளை எப்படி சமாதானப்படுத்த,  என்று தன்  தலை மேல்  கைவைத்து எழுந்து நின்றவன்..

 “நான் என்னடி பண்ணனும் சொல்லு பண்றேன்,, என்னை  அடிக்கணுமா அடி, திட்டணுமா திட்டு இப்படி அமைதியா இருக்காத,, அது பேபிக்கு நல்லது இல்ல, உன்னை இப்படி வருத்திக்காத”….

“பேசு மாயா”.. என்றான்..

 மாயாவுக்கு உடல் மிகவும் சோர்ந்து போய் இருந்தது..

 “உங்ககிட்ட  பேச  எனக்கு விருப்பமில்லை நீங்க கிளம்பலாம்” என்றாள்..

“இப்படி சொன்னா என்ன அர்த்தம் மாயா, நான்  கேட்டதுக்கு  பதில் சொல்லு”  என்றான்…

” என்ன பதில் சொல்லணும் இந்த ஆறு மாசத்துல எவ்வளவு வேதனைப்பட்டு துடிச்சு போயிருப்பேன்,, அப்போ  எல்லாம் நீங்க வரல, இப்போ உங்க குழந்தை உருவாகி இருக்கிறது தெரிஞ்ச உடனே வந்தீங்க.. இல்லன்னா  இப்ப கூட வந்திருக்க மாட்டீங்க அப்படித்தானே”..

 “அப்படி  எல்லாம் இல்ல டா மாயா”.

” போதும் நான் பட்டது எல்லாம் போதும்,, இந்த ஆறு மாசத்துல எனக்கு நரகத்தை காட்டிட்டிங்க,,  நான் அனுபவிச்ச வேதனை கொஞ்சம்,  நஞ்சம் இல்ல, இது  எல்லாத்துக்கும் காரணம் நீங்க,, இதெல்லாம் நான்  மறந்துட்டு இப்ப நான் உங்க கூட வரணும்”..

“மாயா”… என்றவன்  என்னோடு நீ வா என்பது போல் கண்களால் பேச..

” உங்க மேல எனக்கு காதல் இருக்கு,  அன்பு இருக்கு,  ஆசை இருக்கு, உங்க கூட வாழ ஆசை இருக்கு,, எல்லா உணர்வும் என்கிட்ட இருக்கு,  ஆனா நீங்க எனக்கு என் அப்பாவுக்கு பண்ணது நான் மன்னிக்க மாட்டேன்,,  நம்பிக்கை துரோகம் பண்ணிட்டீங்க என்ன நம்ம வச்ச  கழுத்த அறுக்குற மாதிரி காரியம் பண்ணிட்டு இப்ப வந்து வா மாயான்னு  சொன்னா எப்படி வருவேன்,  வரமாட்டேன்”.. என்றவள்…

” உங்க மேல எவ்வளவு பாசம் இருக்கோ,, அதைவிட பல மடங்கு உங்க மேல எனக்கு வெறுப்பு இருக்கு,,  நீங்க கிளம்பலாம் என்னால முடியல போங்க” என்று  வாசலை  காட்டியவள் சோர்ந்து போய் கட்டிலில் சாய..

 அக்னிக்கு மாயா பேசுவது எல்லாம் நான் பண்ணுனதுக்கு எதிர்வினை என்று புரிய..

 உடனே அவளால் அதை மறக்க முடியுமா,  என்னை  ஏத்துக்க முடியுமா?  அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கணும் என்று யோசித்தவன்..

” சாரி மாயா”என்றவன்..

 மாயா அமைதியாக கட்டிலில்  சாய்ந்திருக்க..

“நாளைக்கு வரேன் மாயா” என்று கிளம்பி விட்டான்..

 மாயாவுக்கும் மனதில் உள்ளதை  எல்லாம் கொட்டி விட்டது போல் மனது லேசாக இருந்தது..

 அக்னி கிளம்பியதும்  மகள் அறைக்கு வந்தார் உலகநாதன்..

” மாயா ஹாஸ்பெட்டல் போகலாமா” என்று மகளை  அழைக்க..

  அக்னியை பற்றி ஏதாவது தன்னிடம் கேட்பார் என்று மாயா   எதிர் பார்த்திருக்க..

 அவரோ  ஒன்றும் கூறாமல்,,  உன் வாழ்க்கை உன் கையில் என்பது  போல்,, நடந்து கொண்டவர்…

“ஹாஸ்பெட்டல் கிளம்பலாமா மாயா?”  என்று மறுபடியும்  கேட்க..

 நீ என்னோடு  இருக்கிற வரை என்னோட பொறுப்பு என்பது போல் அவர் வார்த்தை இருக்க..

“இன்னும் கொஞ்ச நேரத்துல  கிளம்பி வர்ரேன்  டாடி “என்றவள்..

  சிறிது நேரத்தில் ஹாஸ்பெட்டலுக்கு  கிளம்பி சென்றாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!