Skip to content
Post Views: 2,107
அத்தியாயம் – 23
இளம் தென்றல் வீசும் மாலை வேளை ரம்யமாகக் காட்சி தந்தாலும்.அதனை ரசிக்க மனமில்லாமல் தலையை குனிந்து அமர்ந்திருந்தார் அண்ணாமலை.நேற்றைய நிகழ்வில் இருந்து இன்னும் அவரால் மீள முடியவில்லை போலும்.அது சரி அவரே இழுத்து கொண்டது அல்லவா.
.கண் முன் தோன்றும் காட்சிகளும், காதில் கேட்ட பேச்சுகளும் அவரின் நிம்மதியை குலைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.கனவிலும் எண்ணாத சூழ்நிலையை நேரில் கண்டவரால், அதனைக் கையாள முடியவில்லை.மகன் செய்த பாதகம் தன்னை தாக்கி நிக்கும் போது தான் வலியின் வீரியம் புரிந்தது.
Advertisement
“மாமா இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்?” மருமகன் கேட்க மௌனம் மட்டுமே பதிலாகக் கொடுத்தார் அண்ணாமலை.
Advertisement
“ஐயா! என்னான்னு சொன்னா தானே எதுவும் பேச முடியும்.திரும்ப லட்சுமணன் எதுவும் பேசி வச்சாகளா என்ன?” என்ற மகளைப் பார்த்து தலையை மட்டும் இல்லை என்பது போல் ஆட்டியவர்.சோமு செய்த செயல் பற்றியும், நேற்றைய நிகழ்வை பற்றியும் சொல்ல.கண நேரம் அமைதி கொண்டு உரக்க கத்த தொடங்கி விட்டாள் உண்ணாமலை.
Advertisement
“என்ன சொல்லி உங்கள அனுப்பி வச்சேன்? சொல்லுக? இப்போ எல்லாம் போச்சா? சந்தோஷம் ரொம்ப சந்தோஷம். சொன்னேன் அப்பவே சொன்னேன் பேரன் மார் கொல்லி வாங்க கொடுத்து வைக்காம போனாலும், முகத்தையாவது வந்து பார்த்து தூக்கி போட்டுருப்பாக இனி அதுவும் போச்சு.
Advertisement
எல்லாம் போச்சு, ஒத்த மகேன்னு சீராட்டி நின்னு இப்போ சீரழிஞ்சு நிக்கிறோம். சோமு தப்பு செஞ்ச உடனே அத்தினி பேசி வச்சேன்.அப்பவே தன்மையா சோமு கிட்ட பேசி கிடந்தா இந்நேரம் இதெல்லாம் நடந்திருக்குமா?
வாழ வந்த வாவரசிய பேசி என்னத்துக்கு? அவுக குணத்துக்கு கால் வணங்கி நிக்கனும்.போகும் போதே பாட்டா படிச்சுதேன் அனுப்பி வச்சேன், வார்த்தைய விட்டு புடாதீகன்னு.அந்த பொண்ணைப் பேசி வைக்க, வைக்க நம்பத்தேன் பாவத்தை சுமந்து நிற்க போறோம் பாருக.
காசு போனா போகுது அந்த சொத்து இல்லாம போனா என்ன? என் மகளுக்கும், பேத்திக்கும் என் பிறந்த சீர் கிடக்கு அதுவே போதும்.இது ஒரு பேச்சுன்னு வம்பை இழுத்து உறவை அங்கனையே புதைச்சு கிட்டு வந்திருக்கீக.
உங்கள என்ன செய்ய செட்டியாரே? போச்சு, போச்சு இனி என் பேரன் முகத்தைப் பார்க்க கூட முடியாது. அமைதியா கிடந்தாலும் பிடிவாதமும், அழுத்தமும் அதிகம் அவுகளுக்கு” பேரனின் குணம் கொண்டு மனம் தாங்காமல் புலம்பி கதறி தீர்த்த தாய்யை ஓடி வந்து அனைத்துக் கொண்ட நாகம்மை.
“ஆத்தா! மாமா ஒன்னும் நினைக்க மாட்டாக அவுக பசு குணம் “
“தெரியுமே அதைக் கொண்டு தானே உங்கள கொடுக்க எண்ணி வச்சேன். அந்த வைரத்தை விட்டது மட்டும் இல்லாம இப்போ தொலைச்சே போட்டாக அம்மாவு” என்று கதறியவரை பார்க்க முடியாமல் ராமநாதன் மாமனாரிடம் திரும்பி.
“மாமா! நீக என்ன செய்யல எங்களுக்கு? இப்போ எதுக்குச் சொத்து?”
“சோமுக்கு பிறகு இங்கன யாரு மாப்பிள்ளை? அதேன் பேத்திக்கு பண்ண எண்ணி வச்சேன்.அப்போதேன் சங்கதி தெரிஞ்சுது பழனியப்பனும் சொல்ல..” இந்த இடத்தில் அண்ணாமலை நிறுத்த உண்ணாமலை கணவனை முறைத்து வைத்தார்.
“சரி மாமா இப்போ என்னத்தேன் இருக்கு அதைப் பார்த்தீகளா?”
“நூறு ஏக்கர் இருக்கு முன்னூறு பக்கம் அழிச்சு வச்சிருக்காக”
“என்ன சொல்றீக?”
“ஒன்னும் சொல்றதுக்கில்ல மாப்பிள்ள என்றவர் கண்களை இறுக்க மூடி கொண்டு சபையில் நிக்க வச்சு செருப்பால அடிச்ச மாதிரி என் வளர்ப்பை பாருன்னு பேசிட்டாக” என்றவரை பார்த்து இன்னும் கோபம் பொங்க.
“இன்னும் நீக பேசுனது தப்புனு புரியல அவுக பேசுனதுதேன் பேச்சா இருக்கு. பிறவி குணத்தை எதை கொண்டு மாத்தி வைக்க? உங்களை திருத்த முடியாது திருத்தவே முடியாது” என்றவர் வெடுக்கென எழுந்து தனது அறைக்குள் சென்று கதவை சாத்தி கொள்ள.மனைவியின் பேச்சிலும், செயலிலும் இன்னும் வலி கண்டு நின்றார் அண்ணாமலை.
“ஐயா! நீக எதையும் எண்ணி வைக்காதீக, செத்த அவுக கூட நடந்து கொடுக” என்றதும் மகளின் பேச்சை கேட்டு எழுந்தவர் மருமகனுடன் நடந்து விட்டார்.தந்தையின் மனநிலையை மாற்ற கணவனுடன் அனுப்பி வைத்துவிட்டு அவர்கள் சென்றதும் நாகம்மையிடம் திரும்பியவள்.
“நாகு நீக லட்சு கிட்ட தெளிவா பேசுக ஆச்சி ரொம்ப அழுது வைக்கிறாக சொல்லுக “
“சரிம்மா மாமா நாளை மறுநாள் வருவாகப் பேசுறேன்”
“ஹ்ம்ம்!” என்றவர் தாய்யை பார்க்க உள்ளே சென்று விட்டார்.தாயின் புலம்பல் கொஞ்சம் பயம் கொடுத்தது போலும். இங்கு ரணகளமாக இருக்க.
அங்கு இரவு வேளை உணவை முடித்துக் கொண்டு அனைவரும் உறங்க செல்ல.லட்சுமணன் மட்டும் உண்ணாமல் அறைக்குள் முடங்கிக் கிடந்தான்.நேற்றுக் கொண்ட மௌனம் இன்னும் உடைக்கப் படாமல் இருக்க மீனாளுக்கு மகனை எண்ணி அத்தனை வருத்தமாக இருந்தது.
கண்ணாத்தாளும்,வள்ளியப்பனும் தான் மீனாளை சரி செய்து உண்ண வைத்து அவர்களுடன் அழைத்துச் சென்று விட்டனர், எஞ்சி இருப்பது சாலா,லட்சு மட்டுமே.
அறைக்குள் நுழைந்தவள்,”லட்சு!” என்றழைக்க சிவப்பேறிய கண்கள் கொண்டு சாலாவை பார்த்தான் லட்சுமணன்.
“சாப்பிட வரீகளா?”
” வேணாக”
“இப்படி கிடந்தா என்ன அர்த்தம்?”
“……. ” சாலாவின் கேள்விக்கு மௌனத்தை பதிலாக கொடுத்தவனை பார்த்து தளர்ந்தவள்.
“பேச மாட்டீகளா?” மனைவியின் பேச்சில் பெருமூச்சை வெளியிட்டவன்.
“வாக! என்று தனது மடியை காட்ட திருத் திருவென முழித்த வண்ணம் நின்றவளை இழுத்து தனது மடியில் வாகாக அமர்த்திக் கொண்டான் லட்சு.கண்ணில் கோபமும் கையில் கருணையும் காட்டி நின்ற தோற்றம் நரசிம்மர் லக்ஷ்மியை மடி தாங்கி நின்றது போல் அத்தனை பாந்தமாக இருந்தது.
கழுத்தில் முகத்தை வைத்து தேய்த்துக் கொண்டே, ” அன்னைக்கு என்னை விருப்பித்தேன் கல்யாணம் முடிசீங்களான்னு கேட்டிகளே அதுக்கு இப்போ பதில் சொல்லவா” என்றவனைத் திரும்பி பார்க்க சாலா முயற்சி செய்ய.
அதனைத் தடுத்து இன்னும் இறுக்கி கொண்டவன் சாலாவின் கழுத்தை சாய்த்து கவ்வி கொள்ள.உணர்வின் தாக்கத்தில் கண்ணில் நீர் நிரம்பியது சாலாவுக்கு.
“லட்சு!”
“சொல்லுக இப்போ சொல்லவா?”
“சாப்பிட வாக லட்சு பிற்பாடு இதையெல்லாம் பேசிக்கலாம் ” சாலா பேசியதை கவனம் கொள்ளாமல்.
“சாலா ஆச்சி என்னைக் கொஞ்சுக” என்று கன்னம் காட்டியவனைக் கண்டு உண்மையில் மிரண்டு தான் போனாள் சாலா. அவனது குணம் தெரிந்தாலும் கோபத்தை கூட வெளில காட்டாமல் இருப்பவனை கண்டு பயம் தான் வந்தது.
“லட்சு?”
“ப்ச்! சின்னதுல உங்க கூட விளையாடும் போது என் கன்னத்தைத் தொட்டு கிட்டே கிடப்பீக தானே.அது போலக் கொஞ்சுக” என்றவனை இது என்னடா வம்பு என்பது போல் பார்த்தவள்.
“நீக சரியில்லை லட்சு எதையும் எண்ணி வச்சு மனசை கெடுத்து வைக்காம கொஞ்சம் உறங்கி வைக”
“உறக்கம் புடிக்காது சாலா ஆச்சி. அதை விடுக நீக இப்போ என்னை கொஞ்சுக என்று குழந்தையாக முட்டியவனைச் சமாளிக்க முடியாமல் திணறி நின்றாள் சாலா.
“குட்டி கை வச்சு சோறு அள்ளி தருவீக. நான் உங்களைக் கண்டு முகத்தைத் திருப்பி வச்சிப்பேன்.ப்ச்! அப்போ தெரியல சாலா ஆச்சி நீக இத்தினி ஆழமா மனசுக்குள்ள இறங்கி வைப்பீங்கன்னு.தெரிஞ்சிருந்தா அப்பவே சுகம் கண்டு கிடந்திருப்பேன்” என்றவனைக் கலவரமாக பார்த்து.
“உங்க மனசு கிடக்குற கிடப்புல, ஏன் என்ன என்னமோ பேசி வைக்கிறீக? எதுக்கு இப்போ இந்தப் பேச்சு? நீக மனசை உலப்பி வைக்காம இருக எனக்கு பயந்து வருது ” என்றவளை பார்த்து பல் தெரியாமல் புன்னகை செய்தவன்.
“நீக ரொம்ப கூர் புத்தி சரியா கொக்கி போட்டீக சாலா ஆச்சி. மனசு ரணமா வலிக்குது.அத்தினி ரணத்தை தாங்கி நிற்க எங்க மாமா அயித்த, நீங்கன்னு இருதீக பார்த்தீகளா.இந்த சுயநலந்தேன் உங்களை கட்டிக்கக் காரணம்.இதுவே உங்க இடத்துல வேற ஒருத்தரை கட்டி இருந்தா நேத்து நடந்த பேச்சுக்கு நாக்கை பிடிங்குற கணக்கா குடும்பமா இதுன்னு கேட்டுருப்பாக “
“லட்சு!” இந்த பேச்சு வேண்டாம் என்பது போல் அழைத்தவளை.
“உண்மைக்கும் நான் சுயநலவாதிதேன் சாலா ஆச்சி எங்க அய்யன் போல. உண்மை கசந்து நின்னாலும் ஏத்து கிடத்தேன் வேணும் “என்றவன் கண்கள் கலங்க அதனை காண முடியாமல் அவனை இறுக்கி அனைத்து கொண்டவள்.
“லட்சு! அழுது வைக்காதீக பயந்து வருது “
“அழுகலைங்க ஆச்சி நெஞ்சு அடிச்சுக்கிட்டு வருது அதுக்கும் சுயநலமா உங்களைக் கேட்டு நிக்கிறேன் என்னை உங்களுக்குள்ள புதைச்சு வைக அப்போதேன் என் கொதிப்பு அடங்கும்” என்றவன் சாலாவை சாய்த்து அவள் மேல் படர்ந்து கொள்ள, கண் மூடி அவனது உணர்வுகளை உள் வாங்கிக் கொண்டவள்,
“லட்சு!” ரகசியமாக அழைத்தாள் அழைப்பில் அத்தனை வாஞ்சை.
“ஹ்ம்ம்!” என்றவன் அவளது சுண்டு விரலை நீவி விட.
“எதையும் மனசுல போட்டு வைக்காதீக பேசுனது நம்ப ஐயா! தாத்தா தானே அயித்ததேன் அவரைப் பேசி வச்சுட்டாகளே பிறகு என்ன?”
“அவரை கொண்டு கோபப்பட்டு என்ன செய்ய? எங்க ஐயா மேல தேன் கோபம்.காலம் கடந்து ஐயான்னு பேசி எனக்குத் தீராத பழியைத் தூக்கி கொடுத்துட்டு போயிட்டாக சாலா ஆச்சி அந்தக் கோபந்தேன் மத்தபடி ஐயா தாத்தா மேல கோபம் இல்ல, ஆனா நெஞ்சை நெரிக்கிற அளவுக்கு வருத்தமிருக்கு” என்றவனை பார்த்து வழமை போல் பிரமித்து நின்றாள் சாலா.
அவன் இடத்தில இந்நேரம் வேறு ஒருவர் இருந்திருந்தால் இத்தனை பொறுமையாக இந்த விஷியத்தை கையாண்டு இருப்பார்களா என்று தெரியவில்லை.தன்னை குறை பேசியும், பழி சொல்லியும் நின்றவர்களை, மௌனம் கொண்டே கடந்தவனின் பொறுமை அரிவையை வியக்க தான் வைத்தது.
“லட்சு நீக இத்தினி சமத்து சக்கரையா இருக்கக் கூடாது? என்றவள் அவனது தாடை பிடித்துக் கொஞ்சி முத்தி வைத்து. அமைதியா உத்து பார்க்கிறதை வேற மாறி எண்ணி வச்சுட்டேன்” யோசனை போல சொன்னவள்.
நீக அமைதியா கிடந்து வச்சா பயந்து வருதுக எதையுமே வாய் விட்டு சொல்ல மாட்டேன்னு கிடந்தா எப்படி? அயித்த உங்களை எண்ணித்தேன் பயந்து வைக்கிறாக. அவுகளுக்கு வேண்டியாவது எதுனாலும் உடைச்சு பேசுக” என்றவளை பார்த்து வழமையான சிரிப்பை உதிர்த்தவன்.
“இதோ இந்த அக்கறை அன்பு இது எல்லாந்தேன் உங்க பக்க இழுத்து வைக்குது.உங்கள மாதிரி எங்களைப் பார்த்துக்க யாரு இருக்கா சாலா ஆச்சி” என்றவன் பேச்சில் கண்கள் கலங்க.
“ஏன் லட்சு?”
“பிடித்தம் தொடங்குன இடத்தைக் கோடி காட்டுறேன் சாலா. விவரம் பிடிபட்ட நாள் தொடங்கி உங்க மேல விருப்பம். மாமாவை கொண்டு நீக விருப்பமா இல்ல, அயித்தைய கொண்டு நீக விருப்பமா இல்ல, உங்களை கொண்டே நீக விருப்பமான்னு சொல்ல தெரியல, ஆனா நீங்கன்னா ரொம்ப விருப்பம்.
ரொம்பக் கனா உங்களை எப்படியெல்லாம் கை பிடிக்க எண்ணிருந்தேன் தெரியுமா? ப்ச்! கனா காணலாகி ஒன்னுமே நடக்கல எனக்கு எதுவுமே நடக்க மாட்டேங்குது பாருங்களேன்”
“இது என்ன பேச்சு? எதுவுமே நடக்காமதேன் பெரிய பொறுப்புல இருக்கீகளா? இப்பவும் நல்லாத்தேன் கல்யாணம் நடந்துச்சு நம்ப நல்லா இருக்கோம் இனியும் இருப்போம் லட்சு.
குடும்பம்ன்னு வந்தா சண்டை இருக்கத்தேன் செய்யும்.உங்க ஐயா தாத்தாக்கு உரிமைய விட முடியல.அவுக பேத்திக்கு முடிக்கலன்னு வேற கோபம்.அதுவும் போக உங்க ஐயா இப்படிச் செஞ்சதை அவுகளே எதிர் பார்த்திருக்க மாட்டாகத் தேன்.எல்லாம் சேர்ந்து அவுகள வெடிக்க வச்சிருச்சு போல விடுக”
“ஹ்ம்ம்! அவுக பக்கம் நின்னு பார்த்து நியாயம் பேசுறீக அவுக அதை செய்யலையே.நியாயத்துக்கு இதை அவுக எண்ணி வைக்க வேண்டியது “
“லட்சு இதுக்கு மேல இந்த பேச்சு வேணாம் சாப்பிட வாக”
“வேணாம் விட்டுருக நல்லா தூங்கனும்” என்றவன் சாலாவிடம் நெருங்கி படுத்துக் கொள்ள அவளும் ஒரு பெருமூச்சுடன் அவனை அனைத்து கொண்டாள்.
அலட்டல் அல்லாது, ஆர்ப்பரிப்பு அல்லாது, ஆர்ப்பாட்டம் அல்லாது, மெல்ல மெல்ல கால்களைத் தழுவி செல்லும் சிறு அலை போன்றது இவர்களது நேசம்.யார் கண்ணையும் கருத்தையும் கவறாது கண்ணியம் கொண்ட இவர்களது காதல் நிச்சயம் கவி படைக்கும் போலும்.
error: Content is protected !!