Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 29

அத்தியாயம் 29

 

அன்னையோடு கீர்த்திஸ்வரன் வீடு திரும்பும் பொழுது நேரம் இரவு எட்டு மணி.

 



Advertisement

கொஞ்சமும் குறையாத தீஜூவாலைகள் அவனை சோர்வாக கூட விடவில்லை.

 

எங்கே தவறு ena யோசித்து யோசித்து அதிலிருந்து கவனம் எங்கும் செல்லாமல் கூடவே அன்னை தன்னை நொடிக்கொரு முறை திரும்பிப் பார்த்து வேதனை கொள்வதையும் தாங்க இயலாமல் என வீடு வந்து சேர்ந்தவனுக்கு வாசலில் நின்ற மகேஸ்வரனின் கார் இன்னும் அவனுக்கு வேகத்தை கொடுத்தது.

Advertisement

 

Advertisement

காரை சரியாய் கூட பார்க்க செய்ய நினைக்காமல் இறங்கி வேகவேகமாய வீட்டிற்குள் வர, அங்கே தேவி பரிமாற மகேஸ்வரன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

 

அஞ்சலி அவரை கவனித்தபடி சோபாவில் அமர்ந்திருந்தவள் அன்னை வரவும் எழுந்து அவரருகே சென்று,

Advertisement

 

“உங்களை அப்பா கேட்டாங்க. அண்ணா கூட போயிருக்காங்கனு மட்டும் தான் சொன்னேன்!” என கிசுகிசுப்பான குரலில் சொல்ல, அதை கவனித்தாலும்,

 

“ஏன் ப்பா இப்படி பண்ணீங்க?” என நேரே தந்தை முன் சென்று நின்றுவிட்டான் ஈஸ்வர்.

 

லதாவும் நின்ற இடத்தில் இருந்தே அதை கவனித்தவருக்கும் கணவன் மேல் அத்தனை கோபம். கொஞ்சமும் தன்னிடம் எதுவும் இதைpப் பற்றி வாய் திறக்கவில்லையே இந்த மனிதன் என்று.

 

“என்னாச்சு ம்மா?” என அண்ணனின் கோபத்தில் அஞ்சலி அன்னையை கேட்க,

 

“ஹ்ம்!” என அவள் கைப்பிடித்து தன்னருகே நிறுத்தி கணவனின் பதிலுக்கு பார்த்திருந்தார் லதா.

 

“என்ன பண்ணினேன்?” என சர்வ சாதாரணமாய் ஒரு கேள்வி. கூடவே அலட்சிய பாவமாய் சாப்பிட்டுக் கொண்டே கேட்டவர் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

 

“ப்பா!” என பேச வந்தவன் தேவி அங்கே நிற்பதைக் கண்டு அன்னையைப் பார்க்க, அவர் தேவியை அனுப்பி வைத்துவிட்டார் அடுத்த நிமிடமெல்லாம்.

 

“ஏன் ப்பா இப்படி இருக்கிங்க? நான், அம்மா, அஞ்சலினு வீட்டுல இத்தனை பேர் இருக்கோம். எங்களை எதுக்கும் தேடாம, கண்டுக்காம, என்னனு நீங்க இப்படி இருக்கீங்க? அதுவும் இப்படி நீங்க செஞ்சு வச்சிருக்க வேலைக்கு எனக்கு மண்டை காயுது!” என்றவன் சொல்லில் கூட கொஞ்சமும் நிமிர்ந்து பாராமல் செவ்வேனே தன் வேலையாய் சாப்பிட,

 

“ப்பா! உங்ககிட்ட தான் நான் பேசுறேன்!” என மேஜையில் தட்டினான் கீர்த்திஸ்வரன்.

 

“சாப்பிடும் போது டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு உன் அம்மா உனக்கு சொல்லி தரலையா ஈஸ்வர்?” என அவர் அதற்கு கேட்க, இன்னும் சுறுசுறுவென பொங்கி வந்தது அவனுக்கு.

 

“அடுத்தவங்க சாப்பாட்டுல மண்ணள்ளி போடக் கூடாதுனும் கூட என் அம்மா சொல்லி தந்திருக்காங்க” என்றவன்,

 

“சாப்பிடலாம். பொறுமையா நிதானமா சாப்பிடலாம். முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லுங்க!” என்றவன் அவ்வளவு பேசியபின் தான் அவனை பார்த்து நிமிர்ந்தார் மகேஸ்வரன்.

 

“என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க? அப்படி என்ன கோபம் எங்க மேல?” என்றவன்,

 

“பல்லவி வீட்டுக்கு எதுக்காக போனீங்க? அங்க எதுக்கு அவ்வளவு மோசமா நடந்துகிட்டு வந்திங்க?” என அடுத்தடுத்து அவன் கேள்விகளை வைக்க, நிதானமாய் கைகழுவி எழுந்தார்.

 

“இதெல்லாம் என்னை நீங்க ஒதுக்கி வைக்கும் போது தெரியலையா?” என்றவர் பார்வையிலும் கேள்வியை போலவே ஒரு நக்கல் பாவனை.

 

“நாங்களா?” என்ற ஈஸ்வர் சீண்டிவிடப்பட்டவனாய் என்னவோ சொல்ல வர,

 

“நான் பல்லவியை கல்யாணம் பண்ணிக்கட்டுமானு உன் அம்மாகிட்ட நீ தானே கேட்ட?” என்ற கேள்வியில் சட்டென்று நிதானித்தான் கீர்த்திஸ்வரன்.

 

“அப்போ தெரியலையா நான் உன் அப்பான்னு? உங்க இஷ்டத்துக்கு கல்யாணம் வரை நீங்க முடிவு பண்ணிக்கலாம். அப்போ நான் யார்?” என்றவர் கேள்வியில் தான் அவர் தங்கள் பேச்சை கேட்டிருக்கிறார் என்றே புரிந்தது ஈஸ்வரோடு லதாவிற்கும்.

 

“சோ?” என்றவன் கேள்வியில்,

 

“உங்க முடிவை நான் ஏன் ஏத்துக்கணும்?” என்றார் கொஞ்சமும் சளைக்காமல்.

 

இவ்வளவு ஏளனத்தை தந்தையிடம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதாய் அவன் அதிர்ந்து நிற்க,

 

“என்னை எவ்வளவு ஜோக்கரா நீங்க நினைச்சிருந்தா உன்னோட கல்யாண முடிவை உன் அம்மாகிட்ட மட்டும் கேட்டு முடிவெடுப்ப நீ?” என்றவர் குற்றசாட்டுதலில்,

 

“ப்பா! எதுவுமே தெரியாம என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீங்க?” என்றவன்,

 

“நான் என்னோட ஆசையை மட்டும் தான் அம்மாகிட்ட கண்வே பண்ணினேன்.. அதைக் கேட்டு நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்கனு உங்களுக்கு தெரியுதா?” என்றான் ஆதங்கமாய்.

 

லதாவும் கோபமும் அதிர்ச்சியும் கூடவே கணவன் மேல் உண்டான எரிச்சலும் என அங்கே நிற்க,

 

“தெரியும்… நல்லா தெரியும்… இருக்க இடம் குடுத்தா படுக்க பாய் கேட்பானாம். அந்த கதை தான் நீ சொல்றது” என்றவர்,

 

“ஏன் டா… நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்.. எங்கேயாவது எதுலயாவது என் பேச்சை ஒரு வார்த்தை கேட்டிருப்பியா நீ?” என்ற மகேஸ்வரன்,

 

“காலேஜ் முடிச்சிட்டு அப்ராட் போக சொன்னேன். கேட்கல. என்னோட சரினு பிசினசை பார்க்க விட்டேன். அப்பவும் நான் சொல்றதையா நீ கேட்ட?” என்றவரை,

 

“ப்பா!” என மறுத்து அவன் பேச வர,

 

“இப்பவும் நான் சொல்றதை நீ கேட்கலைனா நீ சொல்ற எதையும் இனி நான் கேட்கவே மாட்டேன்!” என்றவர் சொல்லில் வாயடைத்து நின்றான் கீர்த்திஸ்வரன்.

 

“அந்த பொண்ணு லாவண்யா… அவ உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னது கூட நம்ம அதிர்ஷ்டம். வரதராஜன் எவ்வளவு பெரிய ஆள் தெரியும் உனக்கே. அவர் பொண்ணை அவரே தர்றேனு சொன்னா அது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் நமக்கு? அதையும் இந்தா அந்தானு இழுத்து வேண்டாம்னே சொல்லிட்ட.. நானும் என்னோட செல்ப்ரெஸ்பெக்ட் அந்த ஆள்கிட்ட கொடுக்கவானு நினைச்சு உன் வழிக்கே வந்தேன்.” என்றவர் பேசப்பேச அவரையே தான் பார்த்து நின்றனர் மற்ற மூவரும்.

 

“இவ்வளவு நடந்தும் நீ என்கிட்ட எவ்வளவு சாதாரணமா இருந்த? ஏன் அப்பல்லாம் உனக்கு குத்தல?” என்ற தந்தை கேள்வியில்,

 

“பைத்தியமா நீங்க? அவன் உங்க பையன் தானே? அவனுக்கு பிடிக்காததை தானே பிடிக்கலனு சொன்னான்? அதுக்கு பழிக்கு பழி வாங்குவீங்களா?” என்று பொறுக்க முடியாமல் கணவனிடம் கேட்டுவிட்டார் லதா.

 

“நீ எல்லாம் என் முன்னாடி நீக்கவே கூடாது. பேருக்கு தான் எனக்கு பொண்டாட்டி. அவன் க கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னான்னா அப்பாகிட்ட சொல்லுவோம்னு நீ சொன்னியா? இல்லையே. என்னை யாரு மதிச்சீங்க?” என்றார் அதனை கோபத்தையும் உடைத்து.

 

“அய்யோ ப்பா! எல்லாத்தையும் தப்பு தப்பா புரிஞ்சிட்டு பேசாதீங்க. என்னோட விருப்பத்தை ஒரு பிரண்ட்டா அம்மாகிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன். நீங்க அப்படி என்கிட்ட இருந்திருந்தா உங்ககிட்ட கூட சொல்லிருப்பேன். இது முழுக்க என்னோட தனிப்பட்ட விருப்பம். அது அந்த பொண்ணுக்கு கூட தெரியாது ப்பா. அவளைப் போய் என்னென்னவோ பேசிட்டு வந்திருக்கிங்க” என்றான் அவர் பேசியவிதம் கொடுத்த தாக்கத்தை ஜீரணிக்க முடியாமல்.

 

“எனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கு. ஆனா அவளுக்கு படிப்பு முடியனும். கூடவே எனக்கான ரெஸ்பான்ஸிபிளிட்டினு எவ்ளோ அமைதியா அதை மூவ் பண்ணினேன் தெரியுமா உங்களுக்கு?” என்றவன்,

 

“எல்லாத்துக்கும் மேல அவ நீங்க பார்த்த பொண்ணு மாதிரி இல்ல. எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு போய்டுவா.. என்னையும் சேர்த்துதான் சொல்றேன்!” என்றான் கோபமாய்.

 

“நல்லா எறிஞ்சா. அதான் அவ பேசினதை கேட்டனே! என்னையே வந்து பாருங்குறா. ஏன் உங்க பையனுக்கு தலையில கொம்பா முளைச்சிருக்குனு கேட்டவ, நான் உங்க பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னனு என்கிட்டயே கேட்குறா” என்றும் சொல்ல, அதற்கு மகிழ எல்லாம் முடியவில்லை அவனுக்கு.

 

மாறாய் அதனை வருத்தம் அதை அவள் எத்தனை கோபத்தில் சொல்லி இருக்க கூடும் என்று நினைத்து.

 

“நல்லா வளத்து விட்ருக்கா பொம்பள புள்ளைய. கொஞ்சமும் பயமில்லாம!” என்றவர் சொல்லில், 

 

“அவ தான் தப்பே பண்ணலையே. பின்ன ஏன் அவ பயப்படணும்?” என்று லதா கேட்க,

 

“உங்களுக்கு அதெல்லாம் என்ன தெரியும் முதல்ல? இப்படி என்ன ஏதுன்னு விஷயம் தெரியாம ஒரு பொண்ணை அவங்க வீட்டுக்கே போய் மிரட்டி இருக்கீங்களே! அது சரியா முதல்ல?” என்று கீர்த்திஸ்வரனும் விடுவதாய் இல்லை.

 

“இதுக்கு தான் நான் அந்த வீடு தேடி போனேனே! இப்பவே அவளுக்காக என்னை நிக்க வச்சு இவ்வளவு பேசுறியே! அப்ப அவ இந்த வீட்டுக்கு வந்தா?” என்று மகேஸ்வரன் எண்ணம் போகும் திசையில் இன்னுமே அதிர்வு தான் தாய்க்கும் மகனுக்கும்.

 

அஞ்சலிக்கு பேச்சு வார்த்தைகள் நீள நீள தான் அங்கே என்ன நடக்கிறது என்றே புரிந்தது.

 

“ம்மா! என்ன ம்மா இப்படி பேசுறாங்க. நான் என்ன சொல்றேன். அப்பா என்ன பேசுறாங்க. நீங்க சொல்லுங்க. பல்லவிக்கு இப்ப கூட என் விருப்பம் தெரிய வாய்ப்பில்லை. அவகிட்ட போய் கண்டபடி பேசினா அவ எப்படி கேட்டுட்டு இருப்பா?” என்று அன்னையிடம் முறையிட,

 

“நீ என்ன வேனா சொல்லிக்கோ ஈஸ்வர். உனக்கு அந்த பொண்ணு வேண்டாம். அவ்வளவு தான்” என்று முடிவாய் சொல்லிய மகேஸ்வரன்,

 

“வீட்டு வேலைக்கு வந்த பொண்ணை போய் கல்யாணம் பண்ணிக்க நிக்கிறியே! உன் பேச்சை கேட்டு வரதராஜன் பொண்ணை வேண்டாம்ன்னு சொன்ன என்னை எதால அடிச்சுக்கவோ” என்றும் சொல்ல,

 

“மறுபடியும் மறுபடியும் தப்பு தப்பா தான் பேசுறீங்க.. பல்லவி உங்க தங்கச்சி பொண்ணு!” என அழுத்தமாய் அவன் சொல்ல,

 

“அந்த சொந்தமே வேண்டாம்னு சொல்றேன். எனக்கே வேண்டாம்னா என் குடும்பத்துக்குள்ள எப்படி கொண்டு வர விடுவேன்?” என்றவர்,

 

“முடிவா சொல்றேன் ஈஸ்வர்! லாவண்யாவை உன் பேச்சை கேட்டு வேண்டாம்னு முடிவு பண்ணின அதே முட்டாள்தனத்தை திரும்ப இந்த பொண்ணு தான் வேணும்னு சொல்ற உன்னோட முடிவுக்கு மறுபடியும் தலையாட்டி வைப்பேன்ன்னு கனவுல கூட நினைக்காத. எரியுறதை பிடுங்கினா கொதிக்குறது தானா அடங்கும்னு தான் அன்னைக்கு நீ உன் அம்மாகிட்ட பேசினதை கேட்ட அன்னைக்கே போய் அந்த வீட்டுல பேசிட்டு வந்தேன். இனி இதை பத்தி உன்கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை. உன் கல்யாணம் என்னோட கனவு. அதுல நமக்கு நிறைய லாபமும் வேணும் அடையாளமும் வேணும். உனக்கு புரியும்னு நினைக்குறேன்!” என்றார்.

 

“ப்பா!” என்றவன் சொல்ல வருவதை கேட்க நினைக்கவே இல்லை என்பதை போல,

 

“இனி இதை பேச வேண்டாம்னு சொல்லிட்டேன்ல?” என்று சொல்லி மாடி ஏறி அவர் சென்றுவிட, தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் ஈஸ்வர்.

 

“என்னம்மா அம்மா இப்படி சொல்லிட்டு போறாங்க?” அஞ்சலி அன்னையிடம் கேட்க,

 

அவளோடு மகன் அருகில் வந்த லதா, “இப்ப எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ணிட்டு இருக்க நீ?” என மகன் தோளை தொட்டு திருப்பி,

 

“அவர் சொல்லிட்டா எல்லாம் நடந்துடுமா? அதான் பல்லவி சொல்லிருக்காளே உங்க பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னனு! நடத்துவோம்!” என்றவரை நம்பிக்கை இன்றி தான் பார்த்தான் கீர்த்திஸ்வரன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!