Skip to content
Post Views: 3,189
யாழினியை வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் ஜெயன் எண்ணிற்கு அழைத்தான், “ஜெயன் எங்க இருக்கீங்க?”
“ஸ்டீல் இண்டஸ்ட்ரில சார்… பேப்பர்ஸ் செக் பண்ணிட்டேன், ப்ராடக்ட்ஸ் மட்டும் செக் பண்ண வேண்டி இருக்கு” – ஜெயன்
“நம்ம ப்லேன்ன ரெடி பண்ண சொல்லுங்க ஜெயன், ஒன் ஹௌர்ல மும்பை போகணும் நான்” உதய் தன்னுடைய அறையில் எடுக்க வேண்டிய மொத்த கோப்புகளையும் வேகமாக எடுத்து வைத்துக்கொண்டிருக்க, சில எலக்ட்ரானிக் பொருட்களையும் மறக்காமல் உடன் எடுத்துக்கொண்டான்.
“அரேஞ் பண்ணிறேன் சார், நான் இன்னும் ஹால்ஃப் அன் ஹௌர்ல ஏர்போர்ட் வந்துடுவேன் சார்” – ஜெயன்
Advertisement
“வேண்டாம் ஜெயன். கஜபதி(மும்பை ஸ்டீல் கிளை சி.ஈ.ஓ) அவரோட டீம் இருப்பாங்க, யாழினி பின்னாடி செட் பண்ணிருக்க நம்ம கார்ட்ஸ வர சொல்லிடுங்க மாமா யாழினிய என்ன பன்றாருனு நான் பாக்கணும்” – உதய்
“சரி சார்… நான் பைலட்ஸ்ட்ட பேசிட்டு ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் பண்றேன்”
“ம்ம்ம்” உதய் அடுத்த மூன்று மணி நேரத்தில் மும்பையில் உள்ள அவர்களின் சிறு பிளாட்டில் இருந்தான், கஜபதி பாசுவுடன். முக்கியமான தொழில் சார்ந்த விசயங்களை பேசி முடித்தவர்கள் இரவு உணவிற்கு அங்கிருந்த உணவு மேஜைக்கு வந்து அமர்ந்தார்கள்.
Advertisement
“எல்லாமே அரேஞ் பண்ணிட்டேன் உதய், ஆனா நீங்க வரணும்னு அவசியம் இல்லையே நானே பண்ணிருப்பேன்”
Advertisement
உதய்க்காக பிரத்யேகமாக செய்யப்படும் தென் இந்திய உணவு வகைகளை ரசித்து உண்டு வேளையிலும் கவனமாய் இருந்தார் அந்த ஐம்பத்தி மூன்று வயது மனிதர்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இயங்கும் உதய்யின் அலுவலகங்கள் மொத்தமும் உதய்யின் பார்வையில் இருந்தாலும் அதன் பொறுப்புகளை நீண்ட நாட்கள் ஆராய்ந்து அதற்கு தகுதியான ஆட்களை நியமித்திது பொறுப்பை கொடுத்திருந்தான்.
“இல்ல கஜபதி நான் வந்தே ஆகணும். பாதுகாப்புக்கு யாரும் வர வேணாம், நீங்க மட்டும் கூட வரணும். புல்லட் ப்ரூப் கார் இருந்தா போதும்”
Advertisement
அவர் விரும்பி உண்ட இட்லியை அவர் தட்டில் ஒன்று வைத்தவன், “பேசாம சென்னை வந்துடுங்க கஜபதி, நாக்குல அந்த டேஸ்ட்ட மாத்தாம அப்டியே வச்சிருக்கும்”
அவன் கூற்றில் சிரித்தவர், “நீங்க இருக்கறப்ப எனக்கு அங்க என்ன உதய் வேலை? இப்பயே பேருக்கு ரெண்டு வேலை தான் பாக்குறேன், அதுவும் அங்க வந்தா இல்லாம போய்டும்”
மெல்லிய சிரிப்போடு, “கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறது தப்பில்லையே…” ருசியாக தான் இருந்தது உணவு ஆனால் அவன் வீட்டில் உண்பது போல் திருப்த்தி இல்லை, மூன்று இட்லிகளோடு உணவை முடித்தான்.
“எடுக்கலாம்… இன்னும் அஞ்சு வருஷம் வெயிட் பண்ணிட்டு அப்றம் எடுத்துக்கலாம் ஆனா அதுக்கு முன்னாடி நீங்க எனக்கு நிக்கவே இடம் குடுக்காத மாதிரி வேலை தரணும்” தானும் உண்டு முடித்து தன் மடியில் இருந்த டவலை எடுத்து இதழை துடைத்தார் திருப்த்தியில்.
“நிக்க முடியாத மாதிரி வேலையா?” சிரிப்போடு கேட்டான் உதய்.
ஆமாம் என்று அவர் தலையை ஆட்ட, “ஜேர்மன் போறிங்களா?” அவனது அந்த கேள்வியை சிறிதும் அவர் எதிர் பார்க்கவில்லை.
சில வருடங்கள் தான் கஜபதி பழக்கம், அதுவும் கல்கத்தாவில் ஒரு முறை தொழிற் கூட்டத்தில் பார்த்தது, அப்பொழுதே அவரது திறமை பிடித்திருக்க, தன்னுடைய தொழிற்சாலையில் அவரை வேலைக்கு வரவழைத்து முழுமையாக அவரை கண்காணிக்க துவங்கினான்.
அவரை அடுத்த வருடமே சி.ஈ.ஓ பதவியில் அமர வைத்தது அவரது நேர்மை, பொறுப்புணர்வு, அர்ப்பணிப்பு தான்.
“உங்க மாமா…” இழுத்தார் தயக்கத்துடன்.
“மாமா-கு நான் செய்ய வேண்டிய கடமை கொஞ்சம் இருக்கு” அவன் பேச்சுகளின் உள் அர்த்தத்தை அவர் என்று உணர்ந்திருக்கிறார் இன்று மட்டும் புரிந்துகொள்ள?
“சின்ன பையன் இப்ப தான் ஸ்கூல் முடிச்சிருக்கான் உதய்… டெல்லி ஐ.ஐ.டீ-ல படிக்க வைக்கலாம்னு இருந்தேன்…” அவர் குரலே யோசனையில் இருக்க பார்த்தான்.
“யூனிவர்சிட்டி ஆப் கேம்பிரிட்ஜ்-ல உங்க பையனோட டாக்டர் சீட்-கு நான் பொறுப்பு” அவ்வளவு பெரிய நிறுவனத்தை மறுக்க தோன்றுமா?
“திருப்த்தி இருந்தா சொல்லுங்க மேல ப்ரோசீட் பண்ணலாம். இல்லனா பரவால்ல ஐ வோண்ட் கம்பெல் யூ” நாற்காலியிலிருந்து உதய் எழ, கஜபதியும் எழுந்தார்.
“நாளைக்கு பாக்கலாம்” இருவரும் கைகுலுக்கி விடைபெற்றனர்.
மறுநாள் காலை மும்பை நெடுஞ்சாலையில் காலை எட்டு மணிக்கு உதய்யின் கைகளில் சீறி பாய்ந்தது அந்த புல்லட் ப்ரூப் கருப்பு ஆடி RS Q8 கார்.
மும்பையிலிருந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருக்கும் அந்த பயணத்தை முக்கால்வாசி நேரம் செய்தியையும் பங்கு சந்தைகளின் நிலவரத்தையும் கேட்டுக்கொண்டே உதய் வர, அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த கஜபதி தன் பங்கிற்கு கையில் ஒரு புத்தகத்தை வைத்திருந்தார்.
பல நிமிடங்கள் உலக நிலவரத்தை கேட்டுக்கொண்டிருந்த உதய் அதை நிறுத்தி வைக்க, கஜபதியும் புத்தகத்தை மூடி வைத்து, “இப்ப கூட நேரம் இருக்கு உதய், நீங்க சொன்னா நம்ம ஆளுங்கள வர வச்சிடுவேன். அங்க தனியா போகிறது அவ்வளவு சேப் இல்ல”
அவனோ சிரித்துவிட்டு, “பரவால்ல கஜபதி எனக்கு உயிர் மேல அவ்வளவு நாட்டம் இல்ல” எவ்வளவு எளிதாய் கூறிவிட்டான் ஆனால் அவனை நம்பி இருக்கும் உயிர்கள் கூட அவன் எண்ணத்தில் உதிக்கவில்லை.
இதழ்கள் பிரித்து, “போகலாமா?”
அப்பொழுது தான் அவர் அவர்கள் வர வேண்டிய Paradis Feu Resort என்ற பிரெஞ்சு எழுத்துக்கள் தூரத்தில் இருந்து பார்த்தாலே அந்த ரெசார்ட்டின் இருப்பு தெரிந்தது.
காரை ஓரமாக நிறுத்தி தன்னுடைய பையிலிருந்து ஒரு சிறு எலக்ட்ரானிக் பொருளை எடுத்து கைகளில் வைத்து எவருக்கோ அழைத்து, “ஆக்டிவேட் பண்ணிடுங்க” என்றான்.
சில நொடிகளில் அவன் கையிலிருந்த ஈயின் அளவே இருந்த சாதனம் தானாக காற்றில் பறந்தது.
“என்ன உதய் அது?”
“நானோபோட் ஸ்பை கேமரா” என்றவன் மீண்டும் வாகனத்தை இயக்கினான்.
“பயப்புடாம மட்டும் இருங்க கஜபதி மத்த எல்லாமே நான் பாத்துக்குறேன்” உறுதியோடு உதய் அந்த ரிசார்டின் வாயிலை அடைந்த சமயம் திறந்திருந்த அந்த இரும்பு கதவின் அருகில் நின்றிருந்த இரண்டு காவலர்கள் வந்து வழியை மறித்தனர்.
காரின் கண்ணாடியை இறக்க சொல்லி, உதய்யை பார்த்த உடனே அவர்கள் அவனை அடையாளம் கண்டுவிட உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை அவர்கள்.
உதய்யிடம் அந்த காவலாளி ஆணையிட்டுக்கொண்டிருக்கும் பொழுதே அவர்களை பார்த்த வேறு சிலரும் கையில் ஆயுதம் ஏந்தி வந்துவிட உதய்யை வெளியே துரத்துவதிலேயே குறியாய் இருந்தனர்.
அவர்கள் பேச்சிற்கோ அவர்களுக்கோ மதிப்பே கொடுக்காதவன் மௌனமாய் இறக்கியிருந்த காரின் கண்ணாடியை முழுதாய் மூடி காரை சற்று பின் நோக்கி செலுத்த அந்த காவலர்களின் கூட்டம் சிதறி தங்களுக்குள்ளே ஏதோ பேச துவங்க ரிசார்டின் உள்ளே பார்த்தான். அவனுக்கு கிடைத்த தகவலின்படி சில நூறு மீட்டர் நுழைவாயிலை தாண்டி தான் ரிசார்ட்டை அடைய முடியும்.
“உள்ள போக வழியே இல்லையா உதய்?” சந்தேகத்தோடு கஜபதி கேட்கவும்,
“வழி தானா வராது கஜபதி, நாம தான் உருவாக்கணும்” அவன் பேசியதன் அர்த்தம் அவர் மூளைக்கு எட்டும் முன்பே வாகனத்தின் வேகத்தை அதிகரித்து காரின் டயர்கள் கீரிச்சிட வேகமாக அந்த வாயிலை தாண்டி உதய்யின் சார் உள்ளே செல்ல செல்ல அவன் காரினை துரத்தி வந்த காவலாளிகளால் முடியாமல் போக அடுத்த சில நொடிகளில் உதய்யின் காரை நோக்கி துப்பாக்கி தாக்குதல் நிகழ்ந்தது.
என்ன தான் புல்லட் ப்ரூப் வாகனமாக இருந்தாலும் கஜபதிக்கு உடல் மொத்தமும் நடுங்கியது, “சார் என்ன சார் கன் வச்சு சுடுறாங்க… இதுக்கு தான் இந்த கார் கேட்டீங்களா நீங்க?” கைக்கு கிடைத்த பிடிமானதை இறுக பற்றி பதட்டத்தோடு கேள்வி எழுப்பினார்.
சிரிப்பை மட்டுமே அவன் பதில் அளிக்க இன்னும் தங்கள் வாகனத்தில் குண்டுகள் சரமாரியாக பாய, வாகனத்தில் வேகத்தை குறைத்து அப்டியே நடுவில் நிறுத்திவிட்டான். ‘இவன் என்ன பைத்தியமா?’ என்ற பயம் கலந்த சந்தேகத்தில் கஜபதி மிரட்சியுடன் அவனை பார்த்தார்.
“உதய்…” பயத்துடன் அவர் அவனை கேள்வியாக பார்க்க, “பயம் வேண்டாம் கஜபதி ஒரு குண்டு கூட உள்ள இறங்காது” ஆனாலும் இவ்வளவு அசட்டு நம்பிக்கை ஒரு மனிதனுக்கு இருக்க கூடாதென்று தோன்றியது.
சில நொடிகள் நீண்டுகொண்டே சென்ற தாக்குதல் அப்டியே நின்றுவிட, அதை கணித்த உதய் மாதவன் மீண்டும் தன்னுடைய வாகனத்தை இயக்கி சிறு சிறு காட்டேஜ்களாக இருந்த ரெசார்ட்டின் மைய பகுதியை அடைந்தான். கருப்பு கண்ணாடியை அணைந்து காரின் கதவை திறந்து உதய் இறங்க, கஜபதி இன்னும் குண்டு மழையை எதிர்பார்த்தது போல் உள்ளேயே அமர்ந்திருந்தார்.
“ஷூட் பண்ணாம விட்டதே நாம உள்ள போகுறதுக்கான பெர்மிஷன் தான். வாங்க இனி சுட மாட்டாங்க” அரைகுறை நம்பிக்கையுடன் கீழே இறங்கி உதய்யுடன் சென்றார். அந்த ரெசார்ட்டின் ஒரு ஓரத்தில் வெறும் மரத்தினால் வடிவமைக்கப்பட்ட உணவகத்தை நோக்கி நடந்தவன் கண்களுக்கு சற்று தொலைவில் இருந்த கடலும் அதன் அலை ஓசையும் கேட்க அதையும் பார்த்துக்கொண்டே அமைதியாக ஒரு காலி மேஜையில் அமர்ந்தான்.
பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்த கஜபதி, “உதய் ஏன் எல்லாரும் நம்மள இப்டி பாக்குறாங்க?” என்றார் சந்தேகமாக.
தோளை குலுக்கி அமைதியாகிய உதய்யின் முன்னாள் ஆவேசமாக கோட் சூட் அணிந்து வந்தமர்ந்த நீரஜ் தழலை சிறிதும் பொருட்படுத்தாது, “காலைல டிபன் சாப்பிடலல? போஹா (அவல் உப்மா) சாப்பிடலாம்னு இருக்கேன்” என்றவன் திரும்பி ஒரு பேரரை அழைத்தான், “எனக்கு ஒரு போஹா, கஜபதி உங்களுக்கு?”
கஜபதி நீராஜின் வரவை எதிர்பார்த்தே இருக்க, உதய் பக்கம் திரும்பி, “உதய்…” என்றார் குழப்பத்தில்.
அவனோ அதே பேரரிடம், “ஓகே ஒன் போஹா மட்டும்” என்றான்.
“போஹா ஓவர் சார்…”
“ஓ சாரி அப்ப கன் கிடைக்குமா?”
கனல் விழிகளுடன் அவ்வளவு நேரம் அமைதியாக உதய்யை பார்த்துக்கொண்டிருந்த நீரஜ் தழல் குரல் ஓங்கியது, “மாதவன்…” என்று.
அப்பொழுது தான் எதேச்சையாக அவனை பார்ப்பது போல் திரும்பிய உதய், “ஓ ஹாய் தழல். நீங்க என்ன இங்க… பயந்துட்டீங்களா?”
‘பயத்தில்’ சற்று அழுத்தம் கொடுத்தவன், “வர்றப்ப ஒரு சின்ன இன்சிடென்ட் அதே நியாபகத்துல சொல்லிட்டேன். டோன்ட் மைன்ட் மீ”
நீரஜ் அந்த பேரரை பார்த்து முறைக்க அவன் சென்றுவிட்டான்.
“சார்” தழல் பி.எ அவனை அழைக்க, ஏற்கனவே தன்னுடைய ரெசார்ட்டிற்கு உதய் ஆட்கள் அனுப்பியது அவனுக்கு கோவம், இதில் இன்று தன்னுடைய இடத்திற்கு வந்ததும் மட்டும் இல்லாமல் துப்பாக்கியை கேட்டது கிலியை கிளப்பியது தழல் மனதில் ஆதலால் கையை நீட்டி அவனுடைய பேச்சை தடுத்தான் தழல்.
“எதுக்கு மாதவன் என்னோட இடத்துக்கு வந்த?” சீற்றமாக கேள்வி எழுப்பினான்.
“நிஜமா இது உங்க இடமா? கஜபதி இது தழல் பார்ட்னர் ரிசார்ட்-னு என்கிட்டே பொய் சொல்லிருக்கீங்க” சிரிப்போடு கஜபதியை குற்றம் சாட்டினான்.
“குட் மார்னிங் மிஸ்டர் தழல்” – நட்பாய் புன்னகை சிந்தினார் கஜபதி.
ஆனால் முழு சீற்றத்தில் இருந்த நீரஜ் கண்களுக்கு உதய் மட்டுமே தெரிந்தான்.
எவ்வளவு திமிர் இருந்தால் இவ்வளவு தெனாவெட்டாக தன்னுடைய ஆட்களையே மீறி தன்னுடைய இடத்தில் தனக்கு எதிரில் கால் மேல் கால் போட்டு கண்ணாடியை அணிந்து… பார்க்க பார்க்க நீரஜ் மனதில் நெருப்பு பற்றிக்கொண்டு வந்தது.
“மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க மாதவன்?” வன்மம் வார்த்தைகளாக வந்தது.
நீண்ட மூச்சு ஒன்றை விட்டு, “இதே மாதிரி சென்னைல ஒரு ரிசார்ட் கட்டணும்-னு நெனச்சிட்டு இருந்தேன் கரெக்ட்டா நீங்க கேட்டுட்டீங்க தழல்… என்ன டைமிங்…?” சிலாகித்தவனின் குரல் நக்கலில் வழிந்தோடியது.
“எல்லாமே உன் கண்ட்ரோல்ல இருக்குன்ற தைரியம் உனக்கு அளவுக்கு அதிகமாவே இருக்கு… அதையும் உடைக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது” – நீரஜ் தழல்.
“எல்லாமே என் கண்ட்ரோலா?” வியந்தது போல் நடித்தவன், “இப்ப கூட ஆதி கேசவன் பின்னாடி அடிக்க ஆள் அனுப்புன உன்ன இந்த டேபிள் மேல போட்டு அடிச்சு துவக்கணும்னு என் மூளை என் கண்ட்ரோல் தாண்டி போகுது… இதுல எப்படி தழல் எல்லாமே என் கண்ட்ரோல்ல இருக்கும்?” உதய்யின் கண்களில் தெரிந்த கோவம் தன்னுடைய அவசர புத்தியை எண்ணி சற்று சுணங்கியது.
ஆனாலும் நிலையை சமாளிக்க எண்ணி, “அப்ப மாதவன் வீக்னஸ் ஆதி கேசவன் தான்-னு முத்திரை குத்திடலாமா?” வாய் விட்டு யார் கவனத்தையும் உறுத்தாமல் சிரித்த உதய், அதே சிரிப்போடு தன்னுடைய கைபேசியை எடுத்து பார்த்து பிறகு மீண்டும் தழல் முகத்தை பார்த்தான்.
“இப்டியே அடுத்தவன் வீக்னஸ் பாத்துட்டே இருந்தா உன்னோட பிசினஸ எவன் டா பாப்பான் முட்டா பயலே”
எப்பொழுதும் உதய்யிடம் இருக்கும் மரியாதை அந்த நொடி காற்றில் பறந்தது அதே நேரம் எள்ளல் சிரிப்போடு தன்னை பார்த்து சிரித்தவனை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறினான் தழல்.
“உன் பின்னாடி ஒருத்தன் பி.பி பேஷன்ட் மாதிரி வேர்க்க வேர்க்க நிக்கிறான்ல அவன்ட்ட என்னனு தான் கேளேன்…”
நீரஜ் திரும்பி அவனை பார்க்க, “பெரிய ப்ராப்லம் சார்” உடனே இருக்கையிலிருந்து எழுந்தவன் தன்னுடைய பி.எ வை அழைத்து சில அடி தூரம் தள்ளி நிருத்தினான். “எ.டீ.எப் ரைட் சார்… டால்பின் பிளாக்ல”
பி.எ வின் கையை வலிக்கும் அளவிற்கு இருக்க பிடித்தவன், “ஆர் யூ ட்ரங்க?” என்றான் பற்களை கடித்து.
வலி தாங்க முடியாமல் முகத்தை சுருக்கி, “சீஸ் பண்ணிட்டாங்க சார் பொருள் எல்லாம். சீலும் வச்சிட்டாங்க” பெரிய அடி தான் தழலுக்கு இது.
அந்த டால்பின் பிளாக்கில் தான் சிறிய அளவில் சட்டவிரோதமான துப்பாக்கிகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தான். அதை வெளியில் இது நாள் வரை தெரியாமல் வைத்திருந்தவன் எப்படி வெளியில் செய்து சென்றது என்று சத்தியமாக தெரியவில்லை.
“டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட்ல இருந்தும் ரைட் என்ஜின் ஒர்க்ஸ் எல்லாமே பாத்துட்டாங்க” இந்த தகவலையும் கேட்ட பிறகு மொத்த கோவமும் உதய் மாதவன் மீது படிந்தது, அவன் பக்கம் திரும்பி எல்லை இல்லாத கோவத்தை காட்டினான் கண்களாலே…
“உங்கள அர்ரெஸ்ட் பண்ண வந்துட்டு இருக்காங்க… நெக்ஸ்ட் செவன் இயர்ஸ் எந்த கவெர்மென்ட் ப்ராஜெக்ட்லயும் நாம பிட் பண்ண ரெஸ்ட்ரிக்ஷன் போட்ருக்காங்க”
தன் மேல் படிந்த நீராஜின் கண்களை உணர்ந்தவன் கைபேசியிலிருந்து தலையை தூக்கிய உதய், எகத்தால சிரிப்போடு, “ஸ்பை கேமரா உன்னோட லேப்ல வச்சேன்னு நினைச்சியா? உன்னோட பிஸ்னஸ்கு வச்சேன்டா சாலா”
இருக்கையிலிருந்து உதய் எழுந்து தழல் அருகில் வர, தன்னுடைய கோவத்தை கட்டு படுத்த முடியாத நீரஜ் உதய்யின் சட்டையை கோவத்தில் பிடித்தான்.
“யூ கன்னிங்…”
“உஷ்…” தன் வாயில் விறல் வைத்து அவனை அமைதி படுத்தினான் உதய், “என்னோட ப்ராஜெக்ட் மட்டும் என் கைக்கு வரணும்னு தான் நினைச்சேன், என்னைக்கு ஆதி மேல கை வைக்கணும்னு நினைச்சியோ அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன் உன்ன விட்டு வைக்க கூடாதுனு. யோசிச்சதுக்கே இந்த அடி விழுந்துச்சுனா, உன் ஆளுங்க கை அவன் மேல பட்ருந்தாலும் உன் உயிரையே எடுத்துருப்பேன் தழல்”
தன் சட்டையிலுருந்த அவன் பிடியை எடுத்து தன்னுடைய வாகனம் நோக்கி சென்றவனை இயலாமையோடும், வற்றாத க்ரோதத்தோடும் பார்த்தான் நீரஜ் தழல்.
சென்றவன் ஒரு நொடி நின்று, “என்னோட வீக்னெஸ்க்கு முத்திரை குத்தணும்னு யோசிச்சதுக்கே உன்னோட கம்பெனிகு முத்திரை நச்சுனு ஒன்னு குத்திட்டேன். என்ன சொன்ன என்னோட வீக்னஸ் அவனா?” வாய் விட்டு சத்தமாக சிரித்தான், “என்னோட ஸ்ட்ரென்த் டா அவன்” மீசையை நீவிவிட்டு பெருமையாய் கூறினான்.
“எல்லா நேரமும் இதே பொறுமை என்கிட்ட இருக்காது” எச்சரித்து சென்றவனை அந்த இடத்திலே வைத்து உயிரோடு எரிக்கும் வேகத்தை கட்டுப்படுத்தினான் தழல்.
கஜபதியை அங்கு இருந்து செய்ய வேண்டிய சில வேலைகளை இருந்து பார்த்துவிட்டு வர கூறியவன் வாகனத்தை அங்கையே நிறுத்தி வைத்து சாலையில் சிறிது தூரம் நடக்க தன் தலைக்கு மேல் வந்த ஹெலிகாப்டர் ஒன்றை தலை தூக்கி பார்த்தவன் ஆள் அரவமற்ற அதே நெடுஞ்சாலையில் இறக்க ஆணையிட்டான். இவ்வளவு அவசரமாய் ஹெலிகாப்டர் வர கூறியிருப்பதன் காரணம், நேற்றே தன்னுடைய கைபேசியில் வந்த யாழினியின் புகைப்படம்.
*************
தங்கையின் அழுகுரலை கேட்ட யாழினிக்கு கால்கள் நடுக்கமாகவே இருந்தது குழலினி குறிப்பிட்டிருந்த காவல் நிலையம் செல்லும் வரை. தங்கை கூறிய சாலையில் இருக்கும் காவல் நிலையத்தை வந்தடைந்தவள் கால்கள் அதற்கு மேல் செல்ல அச்சம் கொண்டது, உண்மையில் கால்கள் கூசியது என்று தான் கூற வேண்டும்.
காவல் நிலையத்திற்கும், மது கூடத்திற்கும் மட்டும் எந்த நிலையிலும் செல்லவே கூடாதென்பது தான் அவள் சிறு வயதில் இருந்து உறுதி. காரணம் தந்தை செயலால் ஒரு முறை காவல் அதிகாரிகள் அவர்கள் இலத்தின் முன்னாள் வந்து அந்த மொத்த தெருவும் கேட்கும்படி சகட்டுமேனிக்கு பேசி சென்றனர்.
இப்பொழுதும் அவர்கள் தந்தையை வரம்பு மீறி பேசியது காதில் விழ, கண்களில் நீர் திரள நடையை மேலும் தொடர்ந்தாள். வாயிலிலேயே கண்ணீர் மல்க நின்றிருந்த சகோதரியை பார்த்தவள் வேகமாக அவளை நோக்கி சென்றாள் யாழினி.
“குழல்…” படபடப்போடு சகோதரி அருகே சென்றவன் அவளுடைய வாடிய தோற்றத்தை கண்டு குழலினியின் கையை தன் கைகளுக்குள் அள்ளி, “உனக்கு ஒன்னும் இல்லையே” ஏனோ அந்த இடம் பயத்தை தந்தது யாழினிக்கு.
“கா… அப்பா” சகோதரியை பார்த்தவுடன் மனதில் தேக்கி வைத்திருந்த வார்த்தைகள் வர மறுத்தது.
“உனக்கு ஒன்னும் இல்லல குழல்?” தந்தையை விட தனியாக கையை பிசைந்து கண்ணீருடன் நின்ற சகோதரி அந்த நொடி யாழினிக்கு முக்கியமாய் பட்டாள்.
“இல்ல க்கா எனக்கு ஒன்னுமில்ல…”
“அம்மா எங்க?”
“நம்ம ஏரியா கவுன்சிலர் கிட்ட பேசி ஏதாவது லாயர் ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாக்க போயிருக்காங்க” – குழலினி
புசு புசு வென கோவம் யாழினிக்கு தலைக்கு ஏறியது, “அறிவில்ல? இப்படியா இங்க எல்லாம் தனியா நிப்ப? உன்ன சொல்லி என்ன பண்றது அந்த அம்மா-கு அறிவு இருக்கனும். உன் அப்பா என்ன சின்ன குழந்தையா அவருக்கு பாதுகாப்புக்கு நீ வெளிய நிக்க?”
“அக்கா…” காரணமே இல்லாமல் கோவப்படும் சகோதரியை குழப்பமாய் அழைத்தாள்.
குழலினியின் கையை பிடித்து உள்ளே சென்றவள் அங்கிருந்த ஒரு காவல் அதிகாரியிடம், “சார் அப்பா மேல என்ன கேஸ்…”
பயத்தோடு அவள் கேட்க, எதையோ எழுதிக்கொண்டிருந்த அந்த போலீஸ் அதிகாரி, யாழினியை தலை தூக்கி பார்த்தார், பிறகு குழலினியை பார்த்து, “ஏன் மா ஒவ்வொருத்தருக்கா நான் சொல்லிட்டே இருக்கணுமா?”
எரிந்து விழுந்தவர் மீண்டும் யாழினி பக்கம் திரும்பினார், “உன் அப்பன் கொலை செஞ்சிருக்கான். அவனோட மச்சான் கம்ப்லைன் குடுத்து உன் அப்பனா காப்பாத்தி வச்சிருக்கான். இல்லனு வை உன் அப்பன் கொலை பண்ண ஆளோட பசங்க, மருமகனுக இந்நேரம் உன் அப்பன் உரு தெரியாம ஒடம்ப வெட்டி வீசிருப்பானுக” அவர் கூறியதை கேட்ட குழலினி யாழினியின் கையை இறுக பற்றி சகோதரியின் தோளில் சாய்ந்து சத்தம் வராமல் விசும்பினாள்.
சகோதரியின் கையில் அழுத்தம் கொடுத்து, “அப்பா அப்டி பண்ண மாட்டாரு சார்… எங்களை கூட அடிக்க மாட்டாரு” தந்தைக்கு வக்காலத்து வாங்க அதில் கடுப்பான அந்த போலீஸ்,
“அப்ப நாங்க பொய் சொல்றோமா? ஆதாரம் எல்லாம் பக்காவா இருக்கு. குடிச்சிட்டு அவன் ஆடுன ஆட்டம் என்ன… பேசுன பேச்சு என்ன… பொம்பள புள்ளைங்க-னு நிதானமா பேசிட்டு இருக்கேன்” தன்னுடைய வேலை பளு எல்லாவற்றிலும் இருந்த கோவத்தை அவள் மீது இறக்கினார்.
error: Content is protected !!