Skip to content
Post Views: 1,071
அத்தியாயம் – 26
விடியலுக்கே காரைக்குடியில் கால் பதித்தவன் ஆழந்த உறக்கத்தில் இருந்தான்.அவன் விழிப்பதற்காகக் காத்திருந்தாள் சாலா.கடும் மன உளைச்சலில் வேலைக்குச் சென்றவன்.இப்போது எந்த மனநிலையில் இருக்கிறான் என்று அறியும் பதட்டம் அவளுக்கு.அவளுக்கு மட்டுமா மீனாளுக்கும் மகனிடம் பேசினால் தான் நிம்மதி என்ற எண்ணம்.
இருவரும் நொடிக்கு ஒரு முறை அறையைப் பார்த்து கொண்டிருப்பதைக் கண்ட கண்ணாத்தாள், “என்ன மாமியும், மருமாளும் சொக்க வாசல் திறப்புக்கு காத்திருக்க மாதிரி லட்சு வாச கதவையே பார்த்துகிட்டு இருக்கீக? என்ன ஆச்சு?” என்றதும்.
Advertisement
“மதனி! அவுக பேச்சை கண்டு எண்ணி லட்சு போகும் போது சங்கடப்பட்டுப் போனாக அதேன் பயந்து வருது”
Advertisement
“அவுக நல்ல படியாதேன் இருக்காக நீக. இதைப் பத்தி எதுவும் பேசி வைக்காதீக. மீனாளிடம் கொஞ்சம் கோபமாகச் சொல்லியவள் மகளிடம் திரும்பி உங்களையுந்தேன் சொல்லுதேன்”
Advertisement
“நான் அவுக சாப்பிட வேண்டி காத்துக் கிடக்கேன் இதைப் பத்தி பேச இல்லை” என்றவளை நம்பாத பார்வை பார்த்தவள் அதன் பின் எதுவும் பேசவில்லை.
Advertisement
இன்னும் ஒரு மணி நேரம் கடந்த பிறகே சொக்க வாசலை திறந்து கொண்டு வந்தான் லட்சுமணன்.பெருமாளை கண்ட பக்தர் போல மனைவியும், தாயும் அவனைப் பரவசமாகப் பார்த்து நின்றனர்.இதனைக் கண்ட கண்ணதாளுக்குச் சிரிப்பு தான் வந்தது.
நன்றாகத் தூங்கி எழுந்தவன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு பாய்யை விரித்து உணவுக்கு அமர.அவன் பாய்யை எடுத்த உடனே அடுக்கலைக்குள் சென்று விட்டாள் சாலா.அவள் உணவை எடுத்து வைக்கத் தட்டில் போட்டு மௌனமாக உண்ண தொடங்கினான் லட்சுமணன்.
அவனுக்குப் பிடித்த உணவு என்பதால் கண்ணை மூடி கொண்டு ஒரு விதமான உணர்வில் ரசித்து ருசித்துக் கொண்டிருக்க.அவனது மௌனம் வழமை போல இரு பெண்களையும் வாட்டி வதைத்தது.
சாலா அவனை உத்து உத்து பார்த்துக் கொண்டிருக்க.நாற்காலியில் இருந்து மகனை எட்டி பார்க்கிறேன் என்று மீனாள் விழுந்து வைக்கப் பார்க்க.அதற்குள் நாற்காலியை பிடித்து அமர வைத்தான் வள்ளியப்பன்.பதட்டத்தில் கொஞ்சம் படபடப்பாகி போனது போலும் மீனாளுக்கு.
“எங்கன இருக்குக் கவனம் மீனா? கொஞ்சம் விட்டிருந்தா விழுந்து வாரி வச்சிருப்பீக.. அப்படி என்னத்த எட்டிகிட்டு பார்க்குறீக? உங்க மகேந்தேன் கூப்புட்டு வச்சு நேருல பார்க்க வேண்டியது தானே” விளையாட்டு போல் சொன்னாலும் அவருக்கும் பதட்டம் தான் போலும்.விழுந்திருந்தால்? மீனாளின் தற்போதைய உடல்நிலையை எண்ணி பயந்து தான் வந்தது.
வள்ளியப்பன் பேச, பேச லட்சு உண்பதை நிறுத்திவிட்டு எழுந்து வந்து விட்டான்.அதற்குள் தன்னை ஆசுவாச படுத்திக் கொண்ட மீனாள்.தன் முன்னால் நிற்கும் மகனை கண்டு “ஒன்னுமில்ல லட்சு சும்மா..” என்றவரை மேலும் பேச விடாமல் தடுத்தவன்.
“இப்போ எதுக்கு மாமியாரும், மருமகளும் மாத்தி, மாத்தி என்னைப் பார்த்து வைக்கிறீக? நான் நல்லா இருக்கேன் அத்தினி செஞ்சவுகளே நல்ல கிடக்கும் போது எனக்கு என்னத்த ஆக போகுது?
மனசை போட்டு வருத்தி வைக்காதீக என்றவன் சாலாவிடம் திரும்பி உங்களையுந்தேன்” கொஞ்சமாகத் தன்னை நிதான படுத்திக் கொண்டு தனது தாய் அருகில் அமர்ந்தவன். மீனாளின் கையை எடுத்து தன்னுள் பொத்தி கொண்டு.
“ஆத்தா அவுக பேச்சும், செயலும் என்னைக் குத்தித்தேன் வைக்குது.அதுக்கு வேண்டி எல்லாம் அதையே பிடிச்சிக்கிட்டு கிடக்க முடியாது.இரண்டு நாள் கழுத்து முட்ட கிடந்த வேதனையை என் வேலை குறைச்சு விட்டுருச்சு.
ஏன்னா நான் பாக்குறது புனிதமான வேலை.அதுல கிடக்குற நிறைவு கொண்டு என்னை நான் நகர்த்திக் கிட்டேன்.அதுவும் போக அவுகள எண்ணி வச்சா என் குடும்பத்தை யார் பார்க்க?
அதனால நான் நல்ல கிடக்கேன் எனக்கு ஒன்னுமில்லை.என்னை கொண்டு எல்லாரும் எண்ணி வைக்க வேணாம்.மனசு சங்கடம் கண்ட உங்க கிட்ட கண்டிப்பா சொல்லுவேன்.
கண்டதையும் எண்ணி கலங்கி நோவு கண்டு நிக்காதீக.எனக்கு உங்க கை இல்லாம நடக்கத் தெரியாது” என்றவன் மீனாளின் கையை இறுக்கப் பற்றிக் கொள்ள.உதடு துடிக்க வந்த அழுகையை அடக்கி கொண்டு மகன் தலையைத் தடவி கொடுத்தார்.
சிறு வேதனை கலந்த புன்னகையுடன் வள்ளியப்பன் மௌனமாக வெளியில் செல்ல. அவர் பின்னே கண்ணாத்தாளும் சென்று விட.அவர்களைப் பார்த்துவிட்டு லட்சுவின் அருகில் மெல்ல வந்து நின்று கொண்டாள் சாலா.
ஆறுதல் எல்லாம் சொல்ல தெரியவில்லை என்றாலும் இந்த உணர்வுகள் கொடுக்கும் அழுத்தம் அவளால் தாங்க முடியவில்லை.லட்சுவை கட்டி கொள்ள வேண்டும் போல் இருந்தது.
சில தயக்கங்கள் வளர்ப்பை கொண்டு உணர்வுகளைக் கட்டி படுத்தியது.இல்லையென்றால் அவளும் லட்சுவை கட்டி கொண்டு கதறி இருப்பாள்.கணவன் உறவுகள் மீது அத்தனை கோபம் வந்தது பெண்ணுக்கு.
யாருக்கு கிட்டும் குணம், நிறம், மனம் என்று அனைத்திலும் நிறைந்து நிக்கின்றவனை.அவனை கொண்டாட தெரியவில்லை என்றாலும் வதைக்காமல் இருக்கலாம் அல்லவா.அதன் பொருட்டே அவர்கள் மேல் அத்தனை கோபம் வந்தது.கூடவே இன்னும் லட்சுவை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்ற வெறி வந்தது.
சிலருக்கு மண்ணுக்குள் இருப்பது மாணிக்கம் என்று தெரியாமல் தவற விடுவார்கள் அது போலச் சேது மற்றும் அண்ணாமலை மண் என்று தவறவிட்டவை வள்ளியப்பன் கையில் மாணிக்கமாக மாறி நின்றது. விதியை கணித்தது போல் தான் கடவுள் அன்றே லட்சுவை தூக்கி வள்ளியப்பனிடம் கொடுத்து விட்டார் போலும்.
சில நொடிகளை மௌனத்தில் கழித்தவர்கள்,”லட்சு இனி நான் எதையும் எண்ணி வைக்க மாட்டேன் உங்களையும் சங்கடப்பட வைக்க மாட்டேன் போயி சாப்பிடுக”
“ஹ்ம்ம்!” என்றவன் மீண்டும் வைத்த சாப்பாட்டைத் தொடர்ந்தான்.
அமைதியாக அவனுக்கு அருகில் இருந்து பரிமாறியவளை ஒரு பார்வை பார்த்தவன்.உண்டு முடித்துவிட்டு,”வேலை முடிச்சிட்டு வாக” என்று அறையைக் கண்ணைக் காட்ட சரி என்பது போல் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் சாலா.
லட்சுமணன் சொன்னது போல அனைத்தையும் ஒழுங்கு படுத்திவிட்டுக் கண்ணாத்தாளிடம் வந்தவள்,”செத்த சாஞ்சு கொடுத்துட்டு வரேன் ஆத்தா!”
வர மிளகாய் வத்தலை காய வைத்துக் கொண்டே மகள் முகம் பார்க்காது,”போய் வாக இங்கன நாங்க பார்த்துப்போம்” என்றதும் சிறு நிம்மதி பிறக்க.மீனாளிடமும் சொல்லி கொண்டு அறைக்குகள் நுழைந்து கொண்டாள்.
போகும் மகளைப் பார்த்தவாறு வந்த வள்ளியப்பன்,”என்ன கண்ணு?”
“செத்த நேரம் சாஞ்சு கொடுக்கிறேன்னு வந்து கேட்டாக போகச் சொன்னேன்”
“ஹ்ம்ம்! புள்ளை முகமே சரியில்லை”
“எல்லாம் அவுக பேச்சையே எண்ணி வச்சு மருகி கிடக்காக லட்சுவை எண்ணி மீனா அவுகல எண்ணி சாலான்னு தவிச்சு போறாக யாருக்கு ஆறுதல் சொல்லி நிக்கிறது?”
“எனக்கும் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு கண்ணு அதிகமா சொல்லு கொட்டி வச்சுட்டாக “
“கல்யாண பேச்சு தொடங்குன நாள் கணக்கா இந்தப் புள்ளைக்கு நிம்மதியே இல்லை ஒதுங்கி நின்னு வாழ்ந்தாலும் வம்படியா வந்து வம்பு செய்யிறவுகள என்ன செய்ய முடியும் சொல்லுக?
அது என்ன தறுதலை பிள்ளையா? வூட்டுக்கு எதுவும் செய்யாத பிள்ளையா? தங்கம் கணக்கா இருக்குற பிள்ளை
அதைக் கொண்டுதேன் என்னால எதுவும் பேச முடியல. இல்லன்னா அவுக பேசி வச்ச தோரணைக்கு நான் பதில் கொடுத்திருப்பேன்.
“ஹ்ம்ம்! மீனா குலசாமி கணக்கா பிள்ளைய பங்குடு பண்ணி கரையேத்தி நிக்கிறாக.அவுகள பேசி வைக்க எப்படி வாய் வருதுன்னு தேன் புரியல யாருக்குமே இடைஞ்சல் கொடுக்காத குணம்” என்றவளை சமாதானம் செய்யும் பொருட்டு.
“விடுக கண்ணு சிலரை எப்போதும் திருத்தவே முடியாது.அவுகளுக்கு எல்லாம் தப்பை உணர கூடிய பக்குவம் இல்லை.சரி தப்பாகி போச்சு அடுத்த என்ன? ஏன் செய்யக் கூடாது? அவுக ஏன் பண்ண கூடாதுன்னு?
இந்த பக்கமே இறங்கி போக எண்ணி வைக்கிறாக.அதுக்கு மீனாவும், லட்சுவும் எதிர்த்து நிக்கிறது தேன் பொல்லாப்பாகி போகுது” வள்ளியப்பன் அவர்களது நிலையைப் படம் பிடித்துக் காட்ட.
“இது எந்த வகை நியாயம்? அப்பப்பா மக்க மனுசாள் எல்லாம் இத்தினி சுயநலம் காட்டி நிக்கக் கூடாது சாமி” அவர்களது குணத்தையும், எதிர்பார்ப்பையும் எண்ணி பார்க்கவே அஞ்சி நின்றாள் கண்ணாத்தாள்.
“அவுக எல்லாம் பத்து மாசம் கண்ணு நம்ப எல்லாம் குறை கணக்குப் போல.கண்ணைக் கட்டி, காதையும் மூடி நிக்கிறவுக கிட்ட நியாயம் எல்லாம் செல்லா காசு.இவுக பேச்சை விடுக இனி பிள்ளைக நல்ல இருக்கனும்.ஒருதரம் சூடு கண்டாச்சு இனி அதுக யாரு கண்ணையும் உறுத்தி வைக்காம பார்த்துக்கனும் கண்ணு”
“மீனாளும் அதைச் சொல்லித்தேன் புலம்பி வச்சாக.நீக சொன்னது போலப் பிள்ளைங்க மேல கவனம் பண்ணிக்கலாம், இனி பார்த்துக்கலாம் ” அதன்பின் இருவரும் பொதுவாகப் பேசி கொண்டிருக்க.
மகனிடம் பேசி தெளிந்ததால் மீனாள் மதிய உறக்கத்திற்குச் சென்று விட்டாள்.அறைக்குள் சாலாவை சமாதானம் செய்து கொண்டிருந்தான் லட்சு.
“என்னங்க சாலா ஆச்சி! சின்னப் பிள்ளை கணக்கா ஏங்கி, ஏங்கி அழுது வைக்கிறீக” என்றவன் உண்மைக்கும் அவளது செருமலில் பயந்து தான் போனான் சிறு பிள்ளை தோல்வி கொள்ளும் போலும் இவளது அழுகைக்கு.
அத்தனையாகச் செருமி வைத்தாள். ஓர், இரு நிமிடம் பார்த்த லட்சு இதற்கு மேல் அழுதால் உடல் சூடு கண்டு சுருண்டு விடுவாள் என்று எண்ணி அவளைத் திசை திருப்பும் பொருட்டு.
“என்னங்க இது? நீகதேன் ரொம்பத் தைரியம். படப் படப் பட்டாசு உங்களைக் கட்டிக்கிட்டு உங்க முந்தியில ஒழிஞ்சுக்கிட்டுப் பாதுகாப்பா கிடக்கலாம்னு பார்த்தா? நீக இந்த அழுக அழுது வைக்கிறீக” என்றதும் அவன் எண்ணியது போலவே அழுகை கொஞ்சம் மட்டுப்பட.
“வம்பு செய்யாதீக லட்சு! நீக எத்தினி தூரம் காயம் கண்டிருக்கீகன்னு எனக்குத் தெரியும்” என்றதும் சிறு புன்னகையாக அவளை அனைத்தவன்.
“இந்தப் புரிதலுக்கு வேண்டி, இந்தக் கரிசனத்துக்கு வேண்டித்தேன் உங்களை வேண்டி வச்சேன்இப்போ புரியுதா? நான் ஏன் உங்களை விரும்பி வச்சேன்னு.இனி எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணீங்கன்னு கேட்டு வைக்காதீக என்ன?” என்றவன் அவளை அனைத்து கொள்ள.
“ப்ச்!” சலிப்பாக அவளும் லட்சுவை அனைத்துக் கொண்டு.
“பொல்லா செட்டியார் பேச்சை திருப்பி விடுறீக” என்றதும் பல் தெரிய சிரித்தவன்.
“நான் பொல்லா செட்டிதேன் ஆச்சி, நீக சமாளிச்சுத்தேன் ஆகணும் உங்களைத் தவிர என்னை யாராலும் சமாளிக்க முடியாது” என்றதும் அவனை இன்னும் இறுக்கி கொள்ள.
“இனியும் எதையும் எண்ணி வைக்க மாட்டேன் நீகளும் எதையும் எண்ண கூடாது சரியா?”
“சரி”
“சமத்து ஆச்சி நீங்க” என்றவன் கன்னம் உரசி காதல் செய்ய.
“நீங்களும் சமத்து வெள்ளந்தேன் என்றவள் இன்னும் அவனோடு வாகாக ஒட்டி கொள்ளப் பெரும் புன்னகை மன்னனுக்கு.
“ஆச்சி சலுகை தரீகளா கொஞ்சமா உங்களைக் கொஞ்சிக்கிறேன்” என்றதும் வெட்கம் கொண்டு அவனது கழுத்தில் புதைந்தவள்.
“அது என்ன கொஞ்சமா நான் என்ன லட்சு செட்டி கணக்கா கஞ்சாம் பட்டியா? நான் வள்ளியப்பன் மக அள்ளி தாரேன்” என்றதும் அப்படி ஒரு சிரிப்பு சிரித்தவன்.
“அதேன் பத்திரம் பாத்து தூக்கி வச்சேன்” என்றவன் பேச்சில் சடாரென எழுந்தவள் அவனது வாயில் செல்லமாக அடித்து.
“இப்படி எல்லாம் பேசாதீக எனக்குக் கோபம் வரும்”
“உண்மை அது தாங்க நீக வைரம்”
“நீகதேன் மாசு மரு இல்லா மாணிக்கம்” என்றவள் மீண்டும் அவனை இறுக்கி கொண்டாள்.
சேதுவின் ஒரு தவறு அதாவது ஒரு குடும்பத்தின் ஆண் மகனின் ஒரு பிழை. மீனாள், லட்சு அவர்களைக் கொண்டு வள்ளி கண்ணு சாலா என்று நால்வரையும் பாதித்து நின்றது.எதோ புரிதல் கொண்ட உறவுகள் இருந்ததால் சமாளித்து நின்றான் லட்சுமணன்.இங்கனம் கசடுகள் மறந்து லட்சுமணனின் காதலும் அன்பும் கதை பேசி நின்றது.
error: Content is protected !!