Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 31.2

யாழினிக்கு நிச்சயம் தெரியும், இவன் தன் மீது கோவமாக இருப்பான் என்று ஆனால் இந்த அளவிலான கோவத்தை எதிர்பார்க்கவில்லை பெண். ஜெயனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை அமைதியாக நின்றான் யாழினியின் கெஞ்சல் பார்வைகளை புரிந்து. உதய்யோ ஜெயனுக்கு கட்டளைகள் பிறப்பித்து தன்ரை நோக்கி சென்றுவிட்டான்.

“என்ன உங்க சார் ரொம்ப தான் ஓவரா பன்றாரு என்னமோ பிரளயம் நடந்த மாதிரில கத்துறாரு” நெடிதுக்கொண்டாள் பெண்.

ஆனால் அவள் அறியாமல் போனது ஒன்று பிரியமானவர்கள் பிரிவும் ஒரு பிரம்மாண்டமான பிரளயம் தான் என்று…

“உனக்கு தெரியாது யாழினி அவரோட பிரச்சனைகள்” சொல்லி புரிய வைக்க வேண்டிய விஷயமா அது? சொன்னாலும் புரிந்துகொள்பவள் அவனை விட்டு தான் சென்றிருப்பாளா?



Advertisement

“அண்ணா நீங்க போங்க நான் பேசுகிறேன்”

“நடுல வந்து வந்து போறதா இருந்தா இனிமேல் நீ வராத யாழினி… அத தாங்கிகிற மனசு கண்டிப்பா சார்க்கு இல்ல” ஜெயனிடம் இருந்து வந்த பதில் யாழினியின் கண்களை கலங்கடித்தது.

அருவியாக நீர் சொட்டிட அதை துடைக்காமல், “சூழ்நிலைகள் எல்லாருக்கும் எந்த நேரமும் சாதகமா இருக்காது… என்னோட சூழ்நிலை அந்த மாதிரி”

Advertisement

“எல்லாமே எங்களுக்கு தெரியும் யாழினி” – ஜெயன்

Advertisement

“தெரிஞ்சும் உங்க சார் என்ன விட்டு தள்ளி இருந்தாரா அண்ணா?” உண்மையை கேட்டதும் மேலும் அழுகை வந்தது அவளுக்கு.

“காரணம் தெரியல எனக்கு ஆனா யார் பேச்சையும் கேக்குற நிலமைல அவர் இல்ல. இன்னொரு நாள் வந்து பேசு” அவன் பார்வை அவள் தயாரித்திருந்த உணவுகளின் மீது விழுந்தது,

“இதையும் சார் சாப்புடுவாரான்னு டவுட் தான்” இதற்கு மேல் உன் முடிவென ஜெயன் வெளியேறிவிட தயக்கத்தோடு வீட்டின் ஒவ்வொரு அறையையும் எட்டி எட்டி பார்த்து மேலே ஏறினாள்.

Advertisement

மேலே ஏறியதும் வலது புறத்தில் இறுதியில் உதய்யின் அறை இருக்க அத்தனையையும் தேடி பார்த்தவள் கண்களுக்கு அவன் கிடைக்காமல் போனான். இறுதியாக மொட்டைமாடி சென்றவளை ஈர்த்தது நிலவொயில் நின்றவனின் நிழல். நிழலை பிடித்து அவன் உருவத்தை அடைந்தவள் இறுகி நின்ற அவன் உருவத்தை பார்த்து மனதில் பெரும் பகுதி உறுத்த கால்கள் மெதுவாக வேகமெடுத்தது அவனை நோக்கி.

சிறு தயக்கமும் இல்லாமல் அவனின் இடையை பின்புறமாக கட்டி முகத்தை அவன் முதுகில் வைத்து மனதிலிருந்த காதலை கண்ணீரால் அவனிடம் மாற்றிக்கொண்டிருந்தாள். ஆனால் அடுத்த நொடி தான் உணர்ந்தாள் தன்னுடைய அணைப்பில் அவன் இன்னும் இறுகி நின்றான் என்று.

“சாரி… சாரி… ரொம்ப ரொம்ப சாரி. மன்னிச்சிடுங்க சார்” அவனோ எந்த எதிர்வினையும் ஆற்றாமல் கோவத்தை கட்டுப்படுத்தி அமைதியாய் நின்றான்.

“பேசுங்க… ப்ளீஸ்” அவன் மௌனம் அவளை கொல்ல, மனதிலிருந்த கூச்சத்தை எல்லாம் தூக்கி எரிந்து சுவற்றோடு சண்டையிட்டு அவன் முன் வந்து அவன் உடலோடு உடல் உரசி அவன் கழுத்தில் தன்னுடைய கைகளை கோர்த்தவள் கண்கள் உதய்யின் கண்களை ஆழம் பார்க்க, என்றும் இருக்கும் இணக்கம் இன்று அதில் இல்லை. அந்நிய பார்வை. நொடிந்து பெண் மனம்.

“சராசரி பொண்ணு சார் நான்… குடும்பத்தோட பாதுகாப்புன்னு வர்றப்ப என்ன வேணாலும் பண்ணிக்கோன்னு விட்டுட்டு ஒதுங்கி நிக்க முடியல” அவனோ தன்னுடைய கழுத்திலிருந்த அவள் கையை வம்படியாக விலக்கி நிறுத்தினான் பின்னே ஒரு அடி எடுத்து வைத்து.

இடைவேளையை அதிகப்படுத்தியவனை காயம் கண்ட கண்களோடு பார்த்தவள் விட மனம் இல்லாமல் அவனோடு நெருங்கி நின்றாள், “ஒதுங்கி தான் இருந்தேன், பிரிஞ்சு போகல சார்” என்ன செய்வது? அவனை சமாதானம் செய்ய பொய்கள் அவசியமாகியது.

“மாப்பிள்ளை தேடிட்டு இருக்கறப்ப அடுத்தவங்க வீட்டுக்கு இந்த நேரத்துல வர்றது தப்பு யாழினி. நீங்க கிளம்புங்க” அவளை முற்றிலும் அவன் கண்கள் வருட மறுத்தது.

விடும் நிலையிலும் அவள் வரவில்லை, “மாப்பிள்ளை பாக்க தான் போறேன்னு வீட்டுல சொல்லிட்டு தான் வந்தேன்”

உதய் எரிச்சலோடு அவளை பார்க்க, “கோவப்படாதிங்க சார்… ப்ளீஸ்”

அவள் முகத்தை கோவத்தோடு மேலும் உதய் முறைத்து, “கிளம்புங்க யாழினி… எனக்கு வேலை இருக்கு” முடிவோடு இன்று அவனிடமே மொத்தத்தையும் கொட்டி தீர்த்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தோடு வந்தவளை யாரோ என அவன் பார்க்கும் பார்வையும், மீண்டும் மரியாதையோடு அழைக்கும் பேச்சும் கோவத்தை தர அவனை நெருங்கி வந்து நின்றவள்,

“என்ன ரொம்ப ஓவரா பண்றீங்க? யாரோ மாதிரி பாக்குறீங்க… என்னமோ மாதிரி பேசுறீங்க? எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா நீங்க பண்றது?”

விழிகளில் நீர் நிறைய கேட்பவளை பார்த்து கோவம் எழுந்திட அவள் கழுத்தை பற்றியவன், “யாருக்குடி கஷ்டம்? உனக்கா? வெக்கத்தை விட்டு வா வானு எத்தனை தடவ சொன்னேன்? ஒவ்வொரு தடவையும் உன்கிட்ட வந்து என்ன கஷ்டம் வந்தாலும் என்கிட்ட சொல்லு-னு சொல்லிட்டே இருக்கணுமா? என்கிட்டே வேலை பாக்குற எல்லாருக்கும் தெரியிதுடி நான் உன் மேல எவ்ளோ பாசமா இருக்கேனு… ஆனா உனக்கு தெரியல”

கையிலிருந்தவளை உதறி தள்ளியவன், “போய்டு. ஒவ்வொரு தடவையும் என்னோட பாசத்தை எல்லாருக்கும் நிரூபிச்சு நான் கடைசில பைத்தியமா நிக்கிறேன்டி. இனிமேல் ஈஸ்வரன் ஆளுங்க உன் பின்னாடி வர மாட்டாங்க… போ”

“போ போ னு சொன்னா எப்படி போக முடியும்?” கோவமாய் நின்றாள் அவன் முன்.

“அன்னைக்கு போக தெரிஞ்சவளுக்கு இன்னைக்கு போக தெரியாதா?” – உதய்

“ஏன் நான் போனா தான் உங்க மாமா பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியுமா?” – யாழினி

“ஆமாடி… போதுமா?” கோவத்தில் தான் கூறினான் ஆனால் அவனை அந்த கோலத்தில் எண்ணி பார்க்கவே மனம் அதிகம் வலித்தது.

அவன் மேல் நம்பிக்கை வராமல் இத்தனை நாட்கள் தள்ளியிருக்க வில்லையே, அவன் மாமன் மீதிருந்த பயத்தில் தானே ஒதுங்கியிருந்தாள். மூக்கை உறிஞ்சி அழுகையை கட்டுப்படுத்த முயன்றும் பலன் இல்லாமல் போக, இயலாமை கோவமாய் வந்தது.

அவன் சட்டையை இரு கைகள் கொண்டு பற்றியவள், “அன்னைக்கு சொன்னேன்ல இன்டாரக்ட்டா ஃபோன்ல எதுக்காக இதெல்லாம் பன்றேன்னு… ஏன் அப்ப உங்க மேல நம்பிக்கை இல்லாமையா சொன்னேன்? எப்படியாவது அதுக்கு ஒரு சொல்யூஷன் கண்டு புடிபிங்கன்னு நம்பிக்கைல தான சொன்னேன். ஏன் அத சொல்ல மாட்டிக்கிறீங்க? அப்றம் என்ன சொன்னிங்க வா வா-னு நீங்க கெஞ்சுனாங்களா?

ஆபீஸ் வர சொன்னிங்க. ஏன் கொஞ்சம் இறங்கி வந்து எனக்காக வாடினு சொன்னா அடுத்த நிமிஷம் வந்துருக்க மாட்டேனா? உங்களுக்கு உங்க ஈகோ முக்கியம். பாசத்தை மனசுல மட்டும் வச்சிட்டு வெளிய காட்ட மாட்டேன்… என் கண்ண பாத்து நீயே தான் கண்டு புடிக்கணும்னு சொன்னா? யாருக்கு புரியும்? இங்க என்ன ஜோசியமா படிச்சிட்டு வந்துருக்கோம்?” குலுங்கியது அவள் கைகளோடு அவன் சட்டை மட்டும்.

“நல்லா கேட்டுக்கோங்க… தெரியாம பண்ண தப்புக்கு தெரிஞ்சு பண்ற தப்பு ஈடாகாது. அதே மாதிரி உங்க மாமா பொண்ண நீங்க கல்யாணம் பண்ண போறப்ப வாழ்க பல்லாண்டுன்னு அழுதுட்டே அச்சதை போட்டு வாழ்த்த மாட்டேன். ஆயிரம், பத்தாயிரம் பேர் இருந்தாலும் அத்தன பேர் முன்னாடியும் உங்க கொழந்த என் வயித்துல இருக்குனு சொல்லுவேன்”

மிரட்டியவளை பார்த்து சிறிதும் ஆச்சிரியம் கொள்ளவில்லை உதய்யின் கண்கள். தெரியுமே அவனுக்கு அவள் பஜாரி என்று.

“ஆனத பாத்துக்கோங்க யாழினி” அவன் சட்டையிலிருந்து சில நொடிகளுக்கு முன் விடைபெற்ற அவள் கைகள் மீண்டும் அதனை பற்றியது, “யோவ் மரியாதையா பேசாதீங்க” உன் மேல் முழு உரிமை எனக்கு மட்டுமே என வார்த்தையால் அவள் நிரூபிக்க அவள் கையை உதறினான் உதய்.

“முதல் பத்திரிகை உனக்கு தான்” தொழில் சார்பாக பேசும் உதய் மாதவனின் பிடிவாதம் உறுதியாய் இருக்க மீண்டும் கலங்கியது அவள் விழிகள்.

“ஏன் சார்… உங்க ப்ரன்ட் ஆதி உங்கள எவ்ளோ கஷ்டப்படுத்துனாலும் அவங்கள மன்னிப்பீங்க ஆனா நான் யாரோ தான உங்களுக்கு…”

“வாய ஒடச்சிடுவேன்… அவனுக்கும் இதுக்கும் என்ன சம்மதம்?” சினம் மீண்டெழ வைத்தது அவள் வார்த்தைகள்.

“அந்த திருடன் தான் சொன்னான்… நான் தான் மூனுபேரோட வாழ்க்கை இப்டி ஆனதுக்கு காரணமாம். உங்ககிட்ட பேச சொன்னதே அவன் தான்” – யாழினி

“ஓ அவன் சொன்னதை கேட்டு தான் இப்பயும் என்ன பாக்க வந்துருக்க… நீயா பாக்கணும்னு வரல” – உதய்

“காரணம் தேடிட்டு இருந்தேன் சார்… உங்க பக்கத்துல வர காரணம் தேடிட்டு இருந்தேன்” – யாழினி

“நமக்குள்ள என்ன இருக்குனு கேட்ட?” – உதய்

“பயத்துல…” – யாழினி அவனை முந்தினாள் சீற்றமாக… எத்தனை முறை தான் அவளும் கூறுவாள் தன்னுடைய காரணத்தை.

“ஜெயில்ல இருக்கவன் நாளைக்கு வெளிய வந்தா உன்ன அகைன் என்ன விட்டு போகாம எப்டி கூடயே வச்சுக்குறதுனு நான் டெய்லி யோசிச்சே சாகணுமா?”

“உங்களுக்கு மட்டும் தான் மனசு இருக்கா? எனக்கெல்லாம் இருக்காதா? டெய்லி செத்துடு இருக்கேன். என்னைக்கு உங்கள பாக்க மாட்டேன்னு அந்த சொட்டையன்கிட்ட சொன்னேனோ அன்னைக்கு நைட்ல இருந்து தூங்கலை நான்”

பட படத்த கைகளோடு தன்னுடைய கைபேசியில் இருந்த அவனை திருடன் போல் எடுத்திருந்த புகைப்படங்களை வரிசையாக தன் தொடுதிரையில் ஓட விட்டு காட்டினாள். “மனசில்லாதவ இதெல்லாம் பாத்துட்டு பைத்தியம் மாதிரி மன்னிப்பு கேட்டுட்டு இருப்பாளா?”

அவள் காட்டிய அத்தனையும் அவனுடைய புகைப்படங்கள்… வாகனம் ஓட்டும் பொழுது, அலுவலகத்தில், உண்ணும் பொழுது, சைட் விசிட் செல்லும் பொழுது என சித்தமும் அவனே.

“பதினாறு வயசுல அப்பா வாங்குன கடனால ஆரமிச்ச பயம்… படிக்காம, அம்மா கஷ்டப்படாம இருக்கணும்னு வீட்டுக்கு தெரியாம வேலைக்கு பயந்து பயந்து போய், கடன்காரங்களுக்கு பயந்து-னு பயத்துலையே நீந்திட்டு இருந்தவ சார் நான். ஆனா அந்த பயம் போய் நிம்மதியா மூச்சு விட்டது நீங்க என் ஏரியால கால் வச்ச அந்த நாள்… நான் கனவுலையும் எதிர்பாக்காத நிம்மதி சார் நீங்க. உங்கள மறக்கணும்னு நெனச்சாவே எனக்கு மன்னிப்பு கெடைக்காது”

“டயலாக் எல்லாம் ரொம்பவே நல்லா தான்டி பேசுற… ஆனா வீட்டுல மாப்பிள்ளை பாக்குற அளவுக்கு போனவை தானே நீ”

அவள் மீது கோவம் கூட அதிகமில்லை ஆனால் அவளுக்கு பெண் பார்க்கும் படலத்தை அவள் வாயிலே கேள்வியுற்றவன் மனம் துடித்தது.

“என்னமோ நானே பாருங்கன்னு சொன்ன மாதிரி பேசுறீங்க… அவங்களா பாக்குறாங்க, அவங்களா பேசுறாங்க. இவன புடிச்சிருக்கா, இவன புடிச்சிருக்கானு கேக்குறப்ப கத்தி அழுகணும் போல இருக்கும். அது தான் இன்னைக்கு மொத்தமா ஒடச்சிட்டேன்… நீங்க தான் எல்லாமேனு சொல்லிட்டு வந்துட்டேன்…”

“அதுக்கு நான் பொறுப்பா?” – உதய்

“இல்லையா பின்ன? சும்மா வேலை பாத்துட்டு இருந்தவல வச்ச கண்ணு வாங்காம அடிக்கடி பாத்துட்டே இருந்து ஆசைய வளத்து விட்டாச்சு… அப்றம் என்னமோ உங்க பொண்டாட்டி மாதிரி கைல தூக்கி மடில ஒக்கார வச்சிங்கள்ல… அந்த செகண்ட்லயே நான் உங்க பொறுப்புல வந்துட்டேன்”

யாழினி பார்வை ரசனையோடு மாறுவதை உணர்ந்தவன் மனமும் அவள் கெஞ்சலில் கரைய அந்த பார்வை தந்த தித்திப்பை தள்ளி வைக்க இரண்டடி பின்னோக்கினான்.

துளியும் இறுக்கம் இல்லாதிருந்தவன் தோற்றம் துணிவை தர அவன் கைகளுக்குள் செல்ல மாலையிலிருந்து துடித்த மனதிற்கு நிம்மதியை தர திரட்டிய தைரியத்தோடு ஆசையாய் முன்னேற அவனோ அதற்கு மேல் பின் செல்ல முடியாமல் ஆண் மனம் நிறுத்தியது.

“நில்லுடி” உரிமை கட்டளை அவளிடம் வேலை செய்யவில்லை. ஒரே நொடியில் அவன் அருகில் வந்தவள் அவன் காலில் ஏறி நின்று அவன் கழுத்தோடு கைகள் கோர்த்து கண்களை உற்று நோக்கினாள்.

“எனக்கு உங்கள ரொம்ப ரொம்ப புடிக்கும் சார்… தோ இங்க இருந்து கீழ குதினு சொல்லுங்களேன் குதிச்சிடுவேன்” – யாழினி

ஆசையாக மனதை கூற, “சரி குதி” என்றான் அவனும் வேண்டும் என்றே.

அவளோ நமட்டு சிரிப்புடன், “மாட்டேன். எனக்கு நாலு குழந்தைங்க வேணும்… உங்கள மாதிரி ரெண்டு, என்ன மாதிரி ரெண்டு”

எவ்வளவு தான் வீறாப்பாக முகத்தை வைத்தாலும் தன்னோடு மல்லுக்கு நிற்கும் இவள் மீது இருந்த கோவம் காற்றில் பறக்க துவங்கியது உதயனுக்கு,

“எப்பயும் நான் உங்ககூடயே இருக்கனும் சார்… கல்யாணம் பண்ணிக்கிறிங்களா?” கண்களில் காதல் மின்ன எதிர்பார்ப்போடு கேட்டவளின் ஆசையை அந்த கணமே செய்திட பேராவல் வந்தது.

ஆனாலும் ஒரு தயக்கம், அவனை அமைதி மனதை உடைக்க, “உங்க தகுதிக்கு நான் கம்மினு யோசிக்கிறீங்களா சார்?” துறந்தான் கோவத்தை, கர்வத்தை.

அவளை கட்டி அணைக்க பரபரத்த கைகளுக்கு மேலும் தடை விதிக்காமல் மிருதுவான அவன் இடையை பற்றி தன்னோடு இறுக்கினான்.

“தகுதினா இந்த வீடு, காசு, பதவி தான்னா… இனிமேல் நானும் உனக்கு சமமானவன் தான் யாழினி. என்ன சுத்தி இருக்க எல்லாம் இன்னும் ஒரு வாரம் தான் என் கூட இருக்கும்” புரியாமல் விழித்தவளுக்கு நடந்த அத்தனையையும் கூறினான்.

என்ன வகையான உணர்வு இவன் முகத்தில் என்று பகுத்தறிய முடியவில்லை அவளால், “கஷ்டமா இல்லையா சார் உங்களுக்கு?” அவளது கை அவன் பின்னந்தலையில் ஆறுதலாக துழாவியது.

தோளை குலுக்கினான் உணர்வுகளை மறைக்க. நொடி யோசனையின்றி எக்கி அவன் நெற்றியில் ஆழமான ஒரு முத்தத்தை யாழினி வைக்க, மன பாரத்தை குறைக்க அவள் தோளில் முகம் புதைத்து கண்களை மூடி சாய்ந்துவிட்டான்.

“வலிக்கிது யாழி” அவன் வார்த்தைகள் அவள் நெஞ்சில் அம்பை பாய்ச்சியது. எத்தனை கம்பீரமானவன் சுணங்கி கிடக்கிறான்…

கண்களில் நீர் சுரக்க, அணைப்பை கூட்டி, “என்ன நினைச்சிட்டு இருக்காங்க? கேக்க ஆள் இல்லனா? வீடு அட்ரஸ் தாங்க நாலு வார்த்தை கேட்டுட்டு வர்றேன்”

அவள் அணைப்பிலிருந்து விழகியவன், “என்ன?” என்றான் சிரிப்பாய்.

“அட்ரஸ் கேட்டேன். உங்க ரெண்டு தம்பிகளுக்கு நாலு வார்த்தை, தங்கச்சிகளுக்கு நாலு வார்த்தை, உங்க அப்பாக்கு இருவது வார்த்தை. லெப்ட் ரைட் வாங்கணும். இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சே ஆகணும். கணக்கு வேணுமாம்ல கணக்கு… பைசல் பண்றேன் எல்லா கணக்கையும் இன்னைக்கு”

உதய்யின் கை பிடித்து இழுத்தவளை ஒரே இழுவையில் தன்னுள் அடக்கியவன் அவள் கன்னம் பற்றி விடாது பேசிக்கொண்டே இருக்கும் அந்த ஸ்ட்ராபெர்ரி இதழ்களை சிறை செய்திருந்தான். அவன் திடீர் தாக்குதலில் விக்கித்து விழி விரித்து நின்றவள் அவன் நெஞ்சில் கை வைத்து நிறுத்த முயல, அவள் கைகளை தூக்கி தன்னுடைய பின்னந்தலையில் வைத்துவிட்டான்.

உறைந்து நின்ற அவள் தேகத்தை இடை தொட்டு தன்னோடு இறுக்கியவன் கரங்களில் பாவை துவண்டுவிழ, இதழ் முத்தம் தரும் மயக்கத்தில் கண்கள் மூடி அவனுடன் ஒன்றி போனவள் கை அவன் கழுத்தில் ஆசையாய் மாலையாகியது. மலரின் தேனை அவளில் பருகியவன் இதழ்களில் முத்தம் விழகா சிரிப்பு. நிலவின் குளுமையோடு முதல் முத்த அச்சாரத்தை பதிவு செய்தவன் அவள் மூச்சிற்கு ஏங்குவதை பார்த்து விலகி அவள் நெற்றி முட்டி நின்றான்.

அந்த மாநிற காரிகையின் கன்னங்கள் சிவக்க, மேலும் போதையூட்டியது அவனுக்கு, “இந்த வாய் ஓயவே மாட்டிக்கிது… பிஜிலி பட்டாசுலாம் இல்ல… ஸ்ட்ரையிட் டென் தொளசண்ட் வாளா தான். ம்ம்ம்?”

குனிந்த தலை நிமிரவில்லை அவள், வெட்கத்தில்.

“ஏற்கனவே குடும்பத்தை விட்டு, ப்ரன்ட்ஸ் இல்லாம-னு நொந்து போயிருந்தேன்… அதே நேரம் ஒரே ஆறுதல் என்ன உரிமையா மிரட்டி திட்டு வாங்குற நீ மட்டும் தான். அப்ப நீயும் இல்லனா நான் எவ்ளோ கஷ்டப்படிருப்பேனு யோசிக்கவே இல்ல-னு தான் உன் மேல கோவம் யாழினி” – உதய்

“உங்க நிலைமை புரியாம இல்ல சார்…” – யாழினி

“உதய் சொல்லு யாழினி… சார் வேணாம்” அவள் ம்ம் கொட்டியது அவன் நெஞ்சத்தின் அதிர்வில் புரிய, காற்றிலாடிய அவள் சிகையை வருடிக்கொண்டே இதமாய் உள்வாங்கினான்.

“உன் நிலைமையும் புரியாம இல்ல யாழினி ஆனா என்கிட்டே உனக்கு சொல்ல தோனலனு நினைக்கிறப தான் ரொம்ப கஷ்டமா போச்சு… எப்படி எல்லாம் உன்ன பாத்துக்கணும்னு ஆசைப்பட்டேன் அதெல்லாம் இனி இல்ல… நீ ரொம்ப ஆசையா நேசிக்கிறவங்க எல்லாரும் உன்ன விட்டு போயிட்டே தான் இருப்பாங்கன்னு மூளை சொல்றப்ப வருமே ஒரு வலி… சாத்தியமா தாங்கிக்க முடியல”

அவன் இதயத்தின் மீது கை வைத்து அதை அவள் வருட, அவள் கையை பற்றியவன் மிருதுவான அந்த கையில் மென்மையாய் ஒரு முத்தம் வைக்க, அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த பெண்ணின் உடலில் மின்சார அதிர்வு. அந்த ஒரு அசைவு போதாதா… தன்னால் மட்டுமே தன்னவள் இது போன்ற அழகிய உணர்வுகளை அடைய முடியும் என்ற எண்ணமே ஆணுக்கு வரும் முதல் காதல் கர்வம்.

“இப்ப கூட உள்ளுக்குள்ள ஒரு பயம்…”

அவன் நெஞ்சிலிருந்து எழாது அவன் முகத்தை பார்த்தவள், “எதுக்கு இவ்ளோ பீல் பண்றீங்க?” வருத்தமாக இருந்தது வாடிய அவன் முகத்தை பார்க்க.

“ஒன்னு வந்தா ஒன்னு போகுது யாழி… நீ வந்த, ஆதவன் போனான்…” சில நொடி மௌனத்திற்கு பிறகு, “ஏதோ பெருசா நடக்க போகுது… ரெண்டு வாரமாவே மனசு சஞ்சலமா இருக்கு”

மனதில் பல நாட்களாக அரித்த உண்மை அது. மாறி மாறி ஏதோ ஒன்று நடந்துகொண்டே இருக்க, மனதில் இருந்த ஒரு குடைச்சல் மட்டும் நீங்கவில்லை.

“ரொம்ப யோசிக்கிறீங்க” அவன் அளவான மீசையை முறுக்கி முறுக்கி பார்த்தும் அவள் எதிர் பார்ப்பது போல் முறுக்காமல் விறைப்பாய் நின்றது.

“உங்கள மாதிரியே இதுக்கும் திமிரு அதிகம்” முகத்தை கோவமாக வைத்து மீசையை சரி செய்துகொண்டே பேசினாள், “மீசையை மட்டும் முறுக்கி விட்டா அப்டியே பாக்க எங்க ஊர் அய்யனார் மாதிரியே இருப்பிங்க… ஆனா எங்க ஊர் அய்யனார் எதுக்கும் பயப்பட மாட்டார்”

அவள் ஊக்கத்தை சிரிப்போடு ஏற்றவன், “ஆஹான்” என்றான் கிண்டலாய்.

மேலும் கீழும் தலையை ஆட்டி, “ஆமா… திமிரா, விறைப்பா, தெனாவெட்டோட இருங்க… அப்ப தான் என்னோட ஹிட்லர் மாதிரியே இருப்பிங்க, இது பால்வாடி பாப்பா மாதிரி இருக்கு” வாய் விட்டு சிரித்துவிட்டான்.

“ஹாஹா… ஹாஹா… அது என்னடி ஹிட்லர்?” – உதய்

“அது தான் சொன்னேனே… திமுரா, தெனாவெட்டா, யார் பேச்சையும் கேக்காம” – யாழினி

“நான் எப்படி திமுரா இருப்பேன்… ஆமா இது என்ன டிரஸ்?” உதய்யின் கண்கள் அவளை முழுதாய் அளந்தது ரசனையோடு.

“பாட்டியாலா… ஓல்ட் மாடல் தான்… ஆனா எனக்கு ரொம்ப புடிக்கும்… ஏன் நல்லா இல்லையா?” வாடியது அவள் முகம்.

“நல்லா தான் இருக்கு… ஆனா இது என்ன லோ நெக்?”

கழுத்தை ஒட்டி கிடந்த துப்பட்டாவை சட்டென கீழ் இறக்க முறைத்தான் உதய், “இத போட்டு தான் வேலைக்கு போனியா?”

“இல்லையே அங்க போய் வேற மாத்திக்குவேன்” – யாழினி

“ம்ம்ம்” அவன் மேலும் முறைக்க, “சரி இனி போடல” சோகமாக கூறினாள்.

அந்த துப்பட்டாவோ காற்றில் மீண்டும் அவள் கழுத்தோடு ஒட்டிக்கொண்டது. சிரித்தவன், குனிந்து மீசை உரச அவள் கன்னத்தோடு கன்னம் தேய்த்து, “என் கூட இருக்கறப்ப போடலாம்” அவன் மீசை உரசி கன்னம் சிவந்ததா இல்லை வார்த்தைகளில் சிவந்ததா என்று தெரியவில்லை.

“அழகா இருக்க யாழி…” குலைந்து வந்த அவன் குரலில் மயங்கியவள் அவன் கன்னத்தை தொட, அந்த சுகமே அழகாய் இருந்தது உதய்க்கு. கன்னத்தில் இதழ் அச்சாரம் பதித்தவன் அவள் மூக்கோடு மூக்கை உரசி மீண்டும் நெற்றியில் முட்டி நிறுத்தினான்.

“உனக்கு என்ன புடிக்குதோ அத போடலாம்… ஆனா இப்டி டெம்ப்ட் பண்ற மாதிரி என்கூட இருக்கறப்ப மட்டும் தான் போடணும்” கேலி செய்தவனின் உள் அர்த்தம் புரிய உடனே அவனை விட்டு வெட்கத்தோடு தள்ளி நின்றாள்.

“சாப்பிடலாம் வாங்க” தன் அணைப்பிலிருந்து விடுபட போனவள் கை பற்றி மீண்டும் தன்னோடு அடக்கியவன் அவள் இதழ் வருடி, “தாராளமா” என்றான் விஷம சிரிப்பாய்.

“இந்த ஹிட்லர்க்கு ரொமான்ஸ் எல்லாம் வருமா?” – யாழினி

“டார்க் ரொமான்ஸ் கூட தாராளமா வரும்” – உதய்

அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி நிறுத்தியவள் முறைப்போடு, “ஆத்தி… நீங்க எட்டையே நில்லுங்க.. நான் ஜெயன் அண்ணாகிட்ட உங்களுக்கு சாப்பாடு குடுத்து அனுப்புறேன்”

கீழே செல்ல அவள் பின்னே அவள் துப்பட்டாவை பிடித்து அருகில் நிறுத்தி, “ஊட்டி விடுறியா பட்டாசு?” ஆசையாய் அவன் கேட்க மறுப்பாளா பெண்? இரண்டு மூன்று உண்பவன், இன்று அவள் கதைகளை கேட்டு கணக்கே இல்லாமல் உள்ளே சென்றது பூரிகள்.

அன்று யாழினியை வீட்டிற்கு அனுப்ப மனம் வரவில்லை உதய்க்கு. அதனால் அவளும் வீட்டினரிடம் ஏதேதோ காரணம் கூறி வேறொரு அறையில் தங்கிவிட, மறுநாள் சற்று மன நிம்மதியோடு கண் விழித்த உதய் குளித்து அலுவலகம் செல்ல தயாராகி கீழே வந்த பொழுது சமைலறையிலிருந்து யாழினியின் சிரிப்பொலி கேட்க அந்த பக்கம் நோக்கி உதய் செல்ல, சரியாக அப்பொழுது தான் சமையலறையிலிருந்து சிரித்த முகத்தோடு வெளி வந்தான் ஜெயன்.

“குட் மார்னிங் சார்” – ஜெயன்

“மார்னிங் ஜெயன். ஹல்ஃப் அன் ஹௌர்ல வரேன்” – உதய்

“ஓகே சார்” – ஜெயன்

“நீங்க சாப்டாச்சா?” – உதய்

“சாப்பிட்டேன் சார்… ஆக்சிடென்ட் பத்தி விசாரிக்க சொல்லிருக்கேன் சார்”

சஹானாவை பற்றிய எண்ணங்களே அவனை இரவு முழுதும் உறங்கவிடாமல் தடுத்திருந்தது, “சஹானா எப்படி இருக்கா ஜெயன்?” – உதய்

“இன்னும் டாக்டர்ஸ் எதுவும் சொல்லல சார்” – ஜெயன்

“நான் சொன்ன டாக்டர்ஸ் எல்லாம் கூட தானே இருக்காங்க?” – உதய்

“இல்ல சார், ஆதவன் சார் விட மாட்டிக்கிறாரு” – ஜெயன்

பற்களை கடித்தவன், “அவன் கைய கால ஒடச்சு போட்டாலும் பரவால்ல, நான் அனுப்புன டாக்டர்ஸ் எல்லா செக் அப் டைம்லயும் அங்க தான் இருக்கனும்”

புரிந்ததாக தலையை ஆட்டி ஜெயன் வெளியேற சிந்தனையோடு சமையலறை நோக்கி வந்தவன், “யாழினி பிளாக் காபி” என்று கூறிக்கொண்டே சமையலறை வந்தடைந்த பொழுது கண்கள் விரிந்தது அவனுக்கு.

காரணம், அங்கு சமைத்துக்கொண்டிருந்தது அவன் சித்தி நளினி. போதாக்குறைக்கு யாழினி அவன் உடையில் சமையல் திட்டில் அமர்ந்திருக்க நளினி சமையலில். இவனை பார்த்ததும் யாழினி விரிந்த புன்னகையோடு ஒரு ஹாய் சொல்ல, அவன் கேட்ட பிளாக் காபியை அடுப்பில் வைத்தவர் அவனை பார்த்து திரும்பி, “என்ன பா இவ்ளோ நேரமாவே ஆபீஸ் கெளம்பிட்ட?” என்றார்.

“இல்ல சித்தி இன்னும் டைம் ஆகும்”

சங்கடமாக உணர்ந்த உதய், நளினி அந்த பக்கம் திரும்பவும் யாழினி அருகே வந்தவன் கிசுகிசுப்பாக, “யாழினி போ வேற டிரஸ் மாத்து” என்றான்.

முகத்தை சோகமாக வைத்தவள் மாட்டவே மாட்டேன் என்று தலையை ஆட்டி அவன் சட்டையை பிடித்து தன் உயரத்திற்கு குனிய வைத்து அவன் காதில், “இது தான் உங்கள கட்டி புடிச்ச மாதிரி இருக்கு” கண்ணடித்து சிரித்தாள்.

அவன் சித்தி மட்டும் இல்லையெனில் உலகம் மறக்கும் அளவிற்கு ஆழ்ந்த இதழ் அச்சாரத்தை வழங்கியிருப்பான். ஆனால் இப்பொழுது அவன் அசௌகரியம் இன்னும் கூடியது அவன் சிற்றன்னை முன். தள்ளி நின்றான் அவளை விட்டு முறைத்துக்கொண்டு.

ப்ரிட்ஜ் திறந்து பிரட் பாக்கெட் எடுத்தவன் அதில் ஜாமை தடவியவாறே, “ஏதாவது பிரச்சனையா சித்தி வீட்டுல? ஜெயன்கிட்ட சொல்லிருந்தா அவனே என்கிட்டே விசயத்த சொல்லிருப்பான். நீங்க ஏன் சிரமப்படுறீங்க?”

தலை குனிந்து தன்னை பார்ப்பதை தவிர்த்தவனின் சங்கடத்தை உணர்ந்த நளினி அவன் கையிலிருந்த பிரட்டை வாங்கி ஓரம் வைத்து காபியை கையில் திணித்தார்.

“ஏன் உதய், எங்களுக்கு தேவைன்னு ஒன்னு இருந்தா தான் உன்ன தேடி வருவோமா?”

வலியோடு சிரித்தார், “உன் மேல தப்பு இல்ல பா… நாங்க அப்டி தானே இத்தன வருஷம் நடந்துட்டோம்” என்றவர் மேலும் நாடியில் கை வைத்து அவன் தலையை தூக்கினார், “நீ தல குனிஞ்சு நிக்காத உதய்… உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றவர் பார்வை யாழினி மீது படிய அவளோ அழகாய் நளினியை பார்த்து சிரித்தாள்.

சற்று ஆசுவாசமடைந்தவன் நிம்மதி மூச்சு விட்டான். “எப்ப கல்யாணம் வச்சுக்கலாம்?” – நளினி

“பெரிய மாமா இவர்கிட்ட மன்னிப்பு கேட்டதும் தான்” உதய்யை முந்திக்கொண்டு வந்தது யாழினியின் பதில்.

“யாழினி..” அவளை உதய் எச்சரிக்கை செய்ய,

“அவ சொல்றதுல என்ன தப்பு இருக்கு உதய்? உன் அப்பா உன்கிட்ட மன்னிப்பு கேட்டு தானே ஆகணும்?” யாழினிக்கு துணை நின்றார் நளினி.

“அவர் எவ்ளோ பெரிய மனுஷன், என்கிட்டே மன்னிப்பு கேக்கலாமா? அதுவும் அப்பா பையன்கிட்ட… நல்லா இல்ல சித்தி இது” – உதய்

“தப்பு யார் செஞ்சாலும் தப்பு தான். பெரியவங்களா இருந்தா தப்பில்லன்னு ஆகிடுமா?” ஹரியின் குரல் கேட்டு உதய் வேகமாக திரும்ப அங்கு தோளில் ஒரு பெரிய பையும், கையில் இரண்டு பையும் வைத்து நின்றான்.

“அதானே” கோரஸாய் மேலும் இரண்டு குரல்கள் ஹரி பின்னால். பல்லவி, திவ்யா. அவர்கள் கையிலும் பைகள்..

வெடுக்கென நளினியை பார்த்தவன், “சித்தி இது தப்பு” என்றான் வாடிய முகத்துடன்.

“இல்ல ண்ணா… உங்கள நம்பாத அந்த வீட்டுல எங்களுக்கு மட்டும் என்ன வேலை? அதான் அம்மா பின்னாடியே நாங்களும் வந்துட்டோம். கட்டி அழுகட்டும் கம்பெனி, கணக்குன்னு”

காரமாக கூறிய ஹரியின் கண்கள் அடிக்கடி தனக்கு கை காட்டிக்கொண்டிருந்த யாழினியை சிரிப்போடு பார்த்தது. ஒருவழியாக சகோதரனின் வாயை அடைந்தவன், “அடடே நம்ம சரோஜா க்கா இங்க என்ன பண்ற”

“டேய் அரிப்புழு…” யாழினியின் அழைப்பில் சிரித்துவிட்டான் ஹரி.

“ஹரி அண்ணி சொல்லு…” – நளினி

அடுத்த சில நொடிகளில் யாழினிக்கு ஒரு சிறு இன்டெர்வியூ நடக்க காலை உணவு சிரிப்பிற்கு பஞ்சமே இல்லாமல் சென்றது. ஆர்ப்பாட்டமான உணவு வேளையில் ஜெயன் உதய்க்கு அழைத்தான். சிரிப்போடு அழைப்பை ஏற்ற உதய், “வந்துட்டேன் ஜெயன். நீங்க கார் ரெடி பண்ணுங்க”

“சா.. சார்…” தடுமாறியது ஜெயன் வார்த்தைகள். ஏதோ நெருடியது உதய்க்கு மனதில், “சொல்லுங்க ஜெயன்…” பயம் வந்தது… “சஹானா ஒரு கால்ல நரம்புல ஏதோ பெரிய பாதிப்பு போல. ஒரு கால் நடக்க முடியாதுன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!