Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 34.3

“அவனுக என்ன நம்பல, சரி. உன் அப்பா மேல நான் பொய்யா பழி போட்டு பேர கெடுத்தேன்னு எவனோ ஒருத்தன் வந்து சொல்லுவான்… அதை நீ நம்புவ. ரெண்டுக்கும் என்ன வித்யாசம்? உன்ன மன்னிக்கல? அதே மாதிரி அவங்களையும் மன்னிச்சிடுவேன்” – உதய்

பேச்சற்று அமைதியாய் உதய்யின் முகத்தை பார்ப்பதை தவிர்த்தான். நண்பர்களை, உதய்யின் மொத்த குடும்பத்தையும் நிற்க வைத்து கேள்வி கேட்டவனுக்கு மனதில் இருந்த அந்த பெரிய பயத்தை நண்பன் மூலியமே வெளியிட்டான் ஆதி கேசவன்.

“என்னடா பதில் கானம்?” – உதய்

“நான் நேஷனல் லெவல் புட்பால் டீம்ல செலக்ட் ஆகாம தடுத்தது நீ இல்லனு சொல்லு” – ஆதி



Advertisement

“சந்தேகமே வேணாம், அது நான் தான்” – உதய்

“ம்ம்.. அப்ப என்ன அடிக்க நீ என்ன வேணாலும் பண்ணுவ-னு இதையும் அப்டியே யோசிச்சிட்டேன்” – ஆதி

“சரி தான் ஆனா உன்ன மட்டும் தான், நான் பண்றது பாதிக்கணும்னு உறுதியா இருந்தேன், உன் குடும்பத்தை இல்ல. சத்தியமா உன்னோட இறந்த அப்பாவை எல்லாம் இதுல இழுக்கிற அளவு நான் அவ்ளோ கீழ்தரமா போக மாட்டேன்” உதய் அழுத்தமாக ஆதியின் கண்ணை பார்த்து குற்றம் சாட்டினான்.

Advertisement

“சரிடா தப்பு பண்ணிட்டேன், ஆனா நீ கொலை பண்ணணு சொன்னா நம்புற அளவு நான் முட்டாள் இல்ல. தப்பு பண்ணிட்டேன் தான் அதுக்காக…” – ஆதி

Advertisement

“ஏற்கனவே தலை வலி அதிகமா இருக்கு, நீ டென்ஷன் ஆக்காத, நீ எத உன் இஷ்டத்துக்கே எல்லாத்தையும் செய்ரியோ, அதே மாதிரி தான் நானும் இருப்பேன்” – உதய்

“நீ ஓவரா பண்ற உதயா, எல்லாருக்கும் இவ்ளோ ஈஸியா இடம் கொடுக்குறது தப்பு” – ஆதி

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன், நீ போய் யாழினிய உள்ள அனுப்பு, அவகிட்ட தனியா பேசவே முடியல”

Advertisement

“நல்லா இருக்குடா உங்க ஊர் கதை. லவ் வந்ததும் நண்பன் எல்லாம் பின்னாடி போய்டுவான்னு ஊர்ல எல்லாரும் சொன்னப்ப எல்லாம் நம்பல ஆனா இப்போ தானே புரியுது. சொன்னவன் அனுபவசாலி” புலம்பிக்கொண்டே செல்லும் நண்பனை பார்த்து இதமாய் சிரித்தவன்,

“ஆதி” என்றழைத்தான்.

எரிச்சலோடு திரும்பி பார்த்த ஆதியிடம், “என் மேல சாத்தியமா சொல்றேன் உன்னால மாமா உயிர்க்கு ஏதாவது சேதாரம்னு தெரிஞ்சா கண்டிப்பா உங்கிட்ட பேச மாட்டேன்”

“ஓ இவரு எனக்காக மினிஸ்டர போட்டு தள்ளுவாராம் ஆனா நாங்க ஒருத்தர் மேல கை வச்சாலும் இவருக்கு கோவம் வருமாம்” – ஆதி

“நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ, நான் என் பேச்ச மாத்திக்கிறதா இல்ல” இன்னும் உறுதியாய் வந்தது உதய் வார்த்தைகள்.

தெரியும் அவனுக்கு இந்நேரம் ஜெயன், ஆதவன் உதவியோடு ஆதி, ஈஸ்வரனை ஒரு வழி ஆகியிருப்பான் என்று. தலையை பிடித்தான் ஆதி இயலாமையில், “உன்ன விட எனக்கு தான் மண்டை சூடேறுது. உன் கை கால் மட்டும் ஒழுங்கா இருந்தது ஒடச்சு போட்டு போயிருப்பேன்” அறையே அதிரும் வகையில் கத்திவிட்டு கதவினை திறக்க போனவனை மீண்டும் உதய் அழைத்தான்,

“நான் இன்னும் பேசி முடிக்கல” என்று. உச் கொட்டி திரும்பியவன் என்ன என்று புருவத்தை உயர்த்தினான்.

“உன் கனவை ஒடச்சதுக்கு என்ன மன்னிச்சுடு ஆதி” ஏதோ ஒரு கோவத்தில் ஆதி விளையாடுவதை மாமனின் உதவியோடு செய்துவிட்டான் உதய்,

ஆனால் அதற்கு பிறகான ஒவ்வொரு நொடியும் கால்பந்தை பார்க்கும் பொழுதோ நினைக்கும் நேரத்திலோ மனம் துடிக்கும் உதய் மாதவனுக்கு. உயிர் கொடுக்கும் காற்றாய் அதை நேசித்தவன் அல்லவா நண்பன்?

“உன் குடும்பத்தையே ஒடச்சவன்கிட்ட மன்னிப்பெல்லாம் கேக்காத உதயா”

சிரிப்போடு நண்பனிடம் கூறி, “அப்படியும் கேட்டே தீருவேன்னு அடம் பிடிச்சா சரி, கால நீட்டுறேன் தொட்டு கண்ணுல ஒத்திக்கோ” – ஆதி “என்ன என்ன… என்ன சொன்ன?” உதய் கேட்காதது போல் பாவனை செய்தான்.

“ஒன்னும் இல்லைங்கோ… வெளிய போக இது தான் வாசலா-னு கேட்டேனுங்க” சமாளித்து வெளியேறிவிட்டான் ஆதி.

அவன் வெளியேறிய சில நிமிடங்களில் யாழினி அறைக்குள் நுழைந்தாள். உதய்யின் முகத்தை பார்த்து சிரிப்போடு அவன் அருகில் அமர்ந்தவள், “என்ன சார் கை கால்க்கு எல்லாம் ரெஸ்ட் கொடுக்கணும்னு முடிவு பண்ணது சரி. ஆனா ஒரேடியா ஒரு மாசம் எடுத்துகுட்டிங்க?”

அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன், “யாழினி…” அழைத்தான்.

ஆனால் அவளோ ஆர்வமாக அவன் கட்டுகளை பார்த்துக்கொண்டிருந்தாள், “இருக்கட்டும் இருக்கட்டும் எல்லாத்துக்கும் சேத்து பைசல் பண்ணிடலாம். ஆனா ஒன்னு, நான் கல்யாணம் ஆனதும் வேலை எல்லாம் போக மாட்டேன். என்ன வச்சு கண் கலங்காம பாத்துக்குவிங்க தானே?” – யாழினி

“யாழி…” – உதய்

“வீட்டுல அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டேன், ஒரே என்குயரி… விடலயே நான்” கைகள் வலியையும் பார்க்காமல் அவள் கையை தன்னுள் புதைத்தான், “தங்கச்சிக்கு டபுள் ஓகே… அம்மா தான் யோசிக்கிறாங்க… வசதியான இடம், அவங்க எதிர்பாக்குற மாதிரி நாம சீர் செய்ய முடியுமானு… ஏன் சார் ரொம்ப சீர் எதிர்பா…”

குனிந்திருந்த அவள் முகத்தை கழுத்தை வளைத்து பார்த்து, “யாழிமா…” அவன் அழைத்த மயக்கத்தில் துள்ளி அவன் கழுத்தில் கையை வளைத்து அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்து அடைத்து வைத்திருந்த கண்ணீரை எல்லாம் வெளியேற்றினாள்.

துணையை தோள் சாய விட்டவன் கைகள் அவளை அணைக்க முடியாமல் தவிக்க, அவன் தோளில் அழுபவள் மனதில் இருந்த வேதனையை கண் விழித்ததிலிருந்து பார்த்துக்கொண்டே தானே இருக்கிறான். அவனை சந்திக்கவில்லை அவள் கண்கள், சிரிக்கிறாள் மகிழ்ச்சியாக பேசுகிறாள் ஆனால் அவனை மட்டும் பார்க்கவில்லை.

“என்னால கட்டி புடிக்க முடியாதுன்ற தைரியத்துல இவ்ளோ டைட்டா ஹக் பண்ணிட்டு இருக்கியா?”

“பேசாதீங்க…” அவன் கழுத்தில் அவள் அணைப்பின் வீரியம் ஏறியது, இன்னும் இன்னும் அவன் உடலில் ஒன்றினாள் பெண்.

“என்ன பதில் சொல்ல மாட்டிக்கிறீங்க” அவன் அமைதியை உணர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்.

அவனோ சிரித்த முகத்தோடு, “நீ தானடி பேச வேணாம்னு சொன்ன?”

அவன் உதட்டில் அடித்தவள், “சிரிக்காதிங்க… என்ன பத்தி கொஞ்சமாவது யோசிச்சீங்களா? உயிரே போய்டுச்சு தெரியுமா உங்கள பத்தி தெரிஞ்சதும்?”

“கண்ண தொட யாழி… அது தான் எனக்கு எதுவும் ஆகலல?” – உதய்

“ஆகல. ஆனா ஏதாவது ஆகிருந்தா சாத்தியமா சொல்றேன் நானும் உங்க கூடயே வந்துருப்பேன்”

அவள் பேச்சை கேட்டு முகம் இறுகிய உதய், “ஒருத்தர் இருந்தா தான் நம்ம வாழ்க்கை இந்த உலகத்துல இருக்கணும்னா உன்னோட உயிர்க்கு என்ன 2மதிப்பு யாழினி? நான் என்னோட அம்மா போனப்பயே போயிருக்கலாமே” பரிதவிப்போடு அவனை பார்த்தாள் யாழினி.

“ஒடனே ஹிட்லர் கிளாஸ் ஸ்டார்ட் பண்ணிடாதீங்க. நான் இன்னும் உங்க மேல ரொம்ப கோவமா தான் இருக்கேன். அப்டி என்ன கன், கார்ட்ஸ் எல்லாம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கனும்? உங்களுக்கே உங்க மேல கோவத்துல இருக்கவங்கள பத்தி தெரியாதா? தெரிஞ்சு கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கலாமே. நீ அமைதியா வந்து படுத்துட்டீங்க பெட்ல, நாங்க தான் நேத்துல இருந்து உயிரை கைல புடிச்சிட்டு இருக்கோம். உங்க ப்ரன்ட் எல்லாம் இடிஞ்சு போய் நின்னவங்க தான் ஆனா அந்த கண்ணுல எப்பப்பா என்ன கோவம்… பயமா இருந்துச்சு எனக்கு”

நண்பனை பற்றி கூறியதும் இறுகிய முகம் உடனே இளகியது.

“ம்ம்ம் அது தான் நட்பு. நாளைக்கு நடக்கபோறத பத்தி எல்லாம் கவலையே இருக்காது, அந்த நிமிஷம் சந்தோசம் மட்டும் தான் பெருசா தெரியும். கண்ணு சிவந்து வந்தான் பாரு, சட்டைல ரத்த கரை வேற இருக்கு. கண்டிப்பா மாமா இன்னைக்கு ஒருவழி ஆகிருப்பாரு… அவனோட எதிர்காலம் பத்தி கொஞ்சம் கூட யோசிச்சிருக்க மாட்டான் என் மேல கை வச்சவன கொல்லாம விட மாட்டான். அது தான் வார்ன் பண்ணி அனுப்பிவச்சேன்”

“போதும் போதும் உங்க நட்பு புராணம். அவரை பத்தி பேசுன ஒடனே கைக்குள்ள இருக்குறவ எண்ணம் எல்லாம் மறந்து ஓடிடும்”

குற்றம்சாட்டியவளின் முகம் தனக்கு மிக அருகில் இருப்பதாய் மறந்து தான் போனாள் போலும். ஆங்காங்கு உடல் அதிகமாய் வலித்தாலும் அதை எல்லாம் தூக்கி எரிந்து மெதுவாய், அழுத்தமாய் அவள் இதழில் தன்னுடைய அச்சாரத்தை வைத்து விலக மனம் இல்லாமல் தவித்தான். ஒரே ஒற்றலில் சூடேற்றிய அவள் அங்கங்களை தன்னுடலோடு ஒன்றியே வைத்துக்கொள்ள அவா எழுந்தது.

“ஹே பட்டாசு… இப்பயே பர்ஸ்ட் வச்சுக்கலாமா?” மோகம் தூண்டிவிடும் குரலில் அவன் பேசியவை அவள் செவிகளை சந்தித்து மயிர் சிலிர்த்தது.

வலிக்கின்றது தான் மொத்த உடலும். அதற்காக இந்த சொர்கத்தை விடவும் மனம் வரவில்லை உதய்க்கு. மேலும் முன்னேறிய அவன் தலை சாய்ந்து அவள் காதின் ஓரம் முளைத்திருந்த பூனை முடியை தன் சூடாம காற்றை ஊதி அவள் உடலுக்கும் தன்னுடலிலிருந்த உஷ்னத்தை பகிர்ந்துகொண்டான்.

“நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலேயே…”

அவன் அருகாமை தந்த சுகத்தில் அவன் நிலை மறந்து யாழினிக்கு. இதழ்கள் விரிய அவள் கழுத்தில் உதய் முத்தம் பதிக்க கைகளை மேலும் அவன் கழுத்தில் இறுக்கி அவனுக்கு எளிமையாய் மேலும் தன்னில் முன்னேற வழி வகுத்துக்கொடுத்தான் அந்த காதலன்.

“அதுக்கெல்லாம் என்ன அவசரம்? அவசர தேவைகல மட்டும் இப்போ பாக்கலாமே” இன்னும் தாபமாய் அவள் மேல் விழுந்தது அவன் இதழ்கள்… அஞ்சி கிடந்த ஆசைகளை தட்டி எழுப்பியவள் மீது இரக்கமே காட்டாமல் தன்னுடைய ஆட்டத்திற்கெல்லாம் அவளை ஆட்டுவிக்க புரண்டு தவித்தது மனம்.

அவன் கூற்றில் தெளிந்தவள் அவன் பிடரி மயிரை பற்றி தள்ளி நிறுத்தி, “யோவ் ஹிட்லர், எனக்கெல்லாம் எந்த வேலை பண்ணாலும் அதுல தெளிவு இருக்கனும். உன் அவசரத்துக்கெல்லாம் என்னால முடியாது ப்பா” கூச்சத்தை விளக்கி அவனுக்கு சரி சமமாய் நிற்கும் இந்த பெண் சிட்டு அவனுக்கு புதியவளே.

சிரித்தவன், “கொஞ்சம் இடம் மட்டும் குடேன், அய்யாவோட வித்தையெல்லாம் பத்தே நிமிசத்துல காட்டுறேன்” கண் சிமிட்டி போதையேற்றினான் அவளுள்.

படாரென கதவு திறக்கவும் இதற்கு மேல் இவனிடம் இருந்தால் பேசியே அவன் இச்சைக்கு இழுத்துவிடுவான் என்று அவனை விட்டு தள்ளி நின்றவளை ஏகமாய் துரத்தி சென்றது உதய்யின் கண்கள். இவர்களின் நெருக்கத்தை பார்த்த மணிமேகலை, ஆதி தயக்கத்துடன் உள்ளே வர, அவனை கண்டுகொண்ட உதய், “என்ன ஆதி?” என்றான்.

“வீட்டுக்கு கிளம்புறேன் மாமா… நாளைக்கு வர்றேன். அப்பா இன்னைக்கு ஈவினிங் உங்கள பாக்க வர்றேன்னு சொன்னாங்க” வாடிக்கிடந்தது மணிமேகலையின் முகம்.

“எப்படி மணி போற? வண்டில வந்தியா” – உதய்

அவளோ ஆதியின் முகத்தை பார்த்தாள், “எப்டியோ போறேன் மாமா” எந்நேரமும் அழுது விடுவாள் என்று பார்க்கும் பொழுதே தெரிந்தது.

உதய் ஆதியை முறைத்து பார்க்க அவனோ மணிமேகலையை மட்டுமே பார்த்து நின்றான்.

‘கண்களில் உள்ள தவிப்பை செயலில் தான் காட்டினால் என்ன?’ மணிமேகலை வெளியில் சென்றதும், “ஏன்டா அவள காரணமே இல்லாம அழுக வக்கிர?” – உதய்

“ச்… விடுடா” – ஆதி

“கண்மூடி தனமான பிரியம் இருந்தா தான்டா காதல். உன்னோட சூழ்நிலை மாறுச்சுனா அவள போக சொல்லுவியா? இதே இடத்துல தான் அப்பாக்காக அவ உன்ன வேணாம்னு சொன்னா சரி போ-னு விட்டுட்டு போய்டுவியா? என்ன நடந்தாலும் நம்மளையே சுத்தி சுத்தி வர்ற உறவெல்லாம் கிடைக்கிறது வரம் ஆதி… அதுவும் மணி கொழந்தை… புரிஞ்சு நடந்துக்கோ” – உதய்

“அதுக்குன்னு சஹானாவை விட முடியலடா…” – ஆதி

“அவளுக்கு தான் டாக்டர் பாத்து சொன்னேன்ல?” – உதய்

“அவனை தான் உன் மாமனோட ஆளுங்க கொன்னுட்டாங்களேடா” உச்சபட்ச குரலில் கத்தினான் ஆதி.

ஏமாற்றம் தாங்க இயலவில்லை ஆதிக்கு. ஒரே ஒரு கதவு திறந்து சொர்கவாசலை காட்டாமல் விட்டாலும் கூட பரவாயில்லை, நரகத்தை காட்டாமல் இருக்கலாம் அல்லவா? விதியை நினைத்தால் ஆத்திரமும், வலியும் மட்டுமே மிஞ்சியது.

“யார் சொன்னா?” – உதய்

“அந்த தழல் அனுப்புன மெசேஜ உன் மொபைல்ல நான் பாத்தேனே” கைகளை முகத்தில் வைத்து தேய்த்து பலவீனமாய் நிற்கும் ஆதியை பார்க்கவே யாழினிக்கு கஷ்டமாக இருந்தது.

ஆனால் உதய்யோ சிரிப்போடு, “இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு ஆக வேண்டியத நான் அந்த செகண்டே பண்ணி முடிச்சிட்டேன்” கண்ணீர் குளம் கட்டி நின்றது ஆதியின் கண்களில்.

அன்று ஆதி சென்ற பிறகு கைபேசியை எடுத்து பார்த்தவன் நீரஜ் தழலின் குறுந்செய்தியை பார்த்து உடனே தனக்கு தெரிந்த ஒரு நபரின் உதவியோடு அந்த மருத்துவரின் உயிருக்கு எந்த தீங்கும் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற மன்றாட்டினை வைத்துக்கொண்டிருக்கும் பொழுதே உதய்யை தங்கியிருந்தனர்.

அந்த மருத்துவர் உயிருக்கு ஆபத்து நேர்த்திட வில்லை என்ற உறுதி செய்தியை அறிவதற்காக தான் கை கொண்டு மாறி மாறி வெட்ட வந்தவர்களின் அரிவாளை கையில் கெட்டியாக உதய் பிடித்தது. அந்த மருத்துவனுக்கு ஆபத்தில்லை என்றதும் தன்னால் உதய்யின் கைகள் இலகிட, பின்னாலிருந்து ஈஸ்வரன் ஆதியை துப்பாக்கி குண்டுகள் கொண்டு தங்கியிருந்தது. அதன் பிறகு தானே உடலில் இருந்த பலம் சரிந்து கீழே விழுந்தது.

வேக எட்டுகளோடு உதய் நோக்கி வந்த ஆதி, அவனை கட்டி அனைத்து தோள் சாய்ந்து அழுதான்.

“எப்படிடா நான் உனக்கு கடன் அடைக்க போறேன்… கடைசி வர என்ன கடனாளியாவே இருக்க வைக்கணும்னு முடிவோட தான் இருக்கியா?”

கட்டுகளோடிருந்த கையை கொண்டு ஆதி முதுகில் தட்டிய உதய், “என் மாமா மகளை கல்யாணம் பண்ணிக்கோ… கடன் அடைஞ்சிடும்” அழுகையோடு சிரிப்பு வந்தது ஆதிக்கு.

“விலகுங்க விலகுங்க… நான் மட்டும் தான் இருக்க வேண்டிய இடம் அது” இருவரையும் விலகினாள் யாழினி பொய் கோவத்தோடு.

“எங்க இருந்து தான் இந்த மாதிரி சரோஜாக்காவ புடிச்சியோ தெரியல… இப்போ கூட ஒன்னுமில்ல, என் கூட வேலை பாத்த பொண்ணு ஒன்னு நச்சுனு அசின் தங்கச்சி மாதிரி இருக்கும். கரெக்ட் பண்ணி விடவா?” – ஆதி “அவர் நோ சொல்லிடுவாரு” உறுதியாக யாழினி உதய்யை பார்த்து சிரிப்போடு கூறினாள்.

“அவனுக்கு அசின் ரொம்ப புடிக்கும். டேய் மாப்பிள்ளை, ம்ம்ம் சொல்லுடா” யாழினியுடன் மல்லுக்கட்ட துடித்தான் ஆதி.

“டேய்…” சத்தமாக சிரித்த உதய், “கோர்த்து விடாத…”

“அதெல்லாம் முடியாது… அசின் வேணுமா வேணாமா?” – ஆதி

உதய்யோ ஓரக்கண்ணால் யாழினியை பார்த்து ஆதியிடம், “அசின் வேணாம்னு சொல்ல மனசு வருமா?” என்றதும் கொண்டாட்டமாகி போனது ஆதிக்கு. சிரிப்பே வராமல் யாழினி முன்னாள் சுற்றி சுற்றி சிரித்தான்.

அதில் கடுப்பான யாழினி உதய்யை பார்வையாலே எரிக்க அவன் தன்னை பார்த்ததும் முகத்தை வெட்டு வெட்டி திரும்பினாள், சுதாரித்தவன், “ஆனா எனக்கு இப்போல்லாம் சரோஜாக்கா மேல தான் ஒரே கண்ணா இருக்கே”

அழகாக யாழினி பக்கம் சென்றது உதய் வார்த்தைகள். தன்னை அதிர்ச்சியில் கண்கள் மின்ன பார்த்த யாழினியிடம் கண்ணடித்து மௌனமாக காதல் பேச சென்றது உதய்யின் கண்கள்.

“ரைட் புரிஞ்சு போச்சு… நான் என் கிளம்புறேன்”

“ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ ஆதி, நம்ம வெறும் கைய வெற்றிடமே இல்லாம புடிக்கிற கைக்கு தான் வெற்றி நிறைஞ்ச நம்ம கைய புடிக்க தகுதி இருக்கு”

Comments kedaikuma? Plz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!