Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 34.2

கதவு திறந்த சத்தத்தில் உடனே திறந்திருந்த கதவினுள் நுழைந்த மனிதர், முதலில் தன் மேல் எந்த நாகமும் இல்லை என்பதை உறுதி செய்தவர், நொடியில் கதவினை இழுத்தி சாற்றிக்கொண்டார். ஆசுவாசமாக மூச்சை இழுக்க முடியவில்லை, தொண்டை வறண்டு பலவனமாகியிருந்தது. கால்கள் பின்னால் நகர எதிலோ முதுகுத்தண்டு தட்டுப்பட, திடுக்கிட்டு பின்னால் திரும்பினாள் சுவர்…

தரையில் அமர போனவரின் கால்கள் இரண்டு பக்கமும் எதிலோ தட்டுப்பட கை வைத்து பார்த்தார்… கண்ணாடி. இரண்டு பக்கமும் கண்ணாடியால் அடைக்கப்பட்டிருக்க சுதாரித்தவர் முன்னாள் இருந்த கதவில் கை வைக்க செல்லும் பொழுது எங்கிருந்து தான் வந்ததோ அந்த திடீர் கண்ணாடி அடைப்பு…

“இது என்னடா புதுசா… விட்ருங்கடா… முடியல” பேச கூட முடியவில்லை அவரால். குத்த வைத்து அமர்ந்தவர் அடியில் இரண்டு தண்ணீர் பாட்டில்கள் கிடக்க அதிலிருந்த தண்ணீரை பார்த்தவர் வேகமாக எடுத்து அரை பாட்டில் காலி செய்திருந்தார்.

பிறகு தான் தொண்டை, வயிறு என மொத்தமும் எரிய துவங்க, நடுங்கிய கைகளின் பலனாய் உடல் மொத்தமும் கொட்டியது.



Advertisement

“ஆ… ஆஆ…. ஆ….” அவஸ்தையில் அலறினார். அவர் குடித்தது, அரைகிலோ பச்சை மிளகாயை அரைத்து வடிகட்டிய தண்ணீர்.

“ஐயோ முடியல… ஐயோ” அவர் கதறலை பார்த்து திரும்பி நின்றுகொண்டான் ஆதவன். மனதினுள் இருந்த மனிதாபிமானம் தலைதூக்கியது.

கெளதம், தமிழும் கூட, “தண்ணி குடுக்க சொல்லு ஜெயன்” என்றதற்கு ஜெயனின் கையை பிடித்து வெறித்த கண்களோடு ஈஸ்வரனையே பார்த்து நின்றான் ஆதி.

Advertisement

“அவனை இப்டி பண்ணா நமக்கும் அவனுக்கும் என்னடா வித்யாசம்?” – தமிழ்

Advertisement

“வாத்தி, அவனை விட நான் மோசமானவன்… அத அவனுக்கு காட்டியே ஆகணும். அவன் குடலை உருவி வெளிய போடுவேனே தவற, சும்மா விட மாட்டேன்”

உறுதியாக நின்றவனை எதுவும் கூறி நிறுத்த முடியவில்லை நண்பர்களால். உடலில் இருந்த எரிச்சல் போதாதென்று, குடித்த தண்ணீரின் வீரியத்தில் வயிற்றில் எரிச்சல் அதிகமாக உருவாகியது.

“அவன் தோல உரிச்சு ரத்தம் வழிய வழிய அதே கூண்டுக்குள்ள அடைச்சு வச்சு கொதிக்கிற தண்ணிய உள்ள ஊத்தி வை”

Advertisement

ஆதி ஜெயனிடம் சொல்ல, “ஆதி வேணாம் டா” – ஆதவன்

“பகைல பன்றேன்னு நினைக்காத, வெறில பண்றேன்… ஜெயன் போ” ஆதியை விட சற்றும் கோவம் குறையாமல் நின்ற ஜெயனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.

ஜெயன் தன்னுடைய ஆட்களுக்கு அந்த வேலையை வைக்காமல் தானே இறங்கி செய்தான் ஈஸ்வரனின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கும் வேலையை. தமிழ், கெளதம் ஈஸ்வரனின் கதறல் சத்தத்தை கேட்க சகிக்காமல் வெளியில் சென்றுவிட, ஆதவன் ஆதியுடன் அமர்ந்திருந்தான். ஈஸ்வரன் உடலில் ரத்தம் வெளி வர துவங்க துவங்க ஆதியின் முகத்தில் திருப்த்தி பிறந்தது. ஓய்ந்து போய் வலியில் கதறி கிடந்த ஈஸ்வரன் அருகில் வியர்வை சொட்ட சொட்ட வெறியோடு நின்ற ஜெயன் தோளில் தட்டிய ஆதி, தான் பார்த்துக்கொள்வதாக கூறி ஈஸ்வரன் அருகே சென்று அமர்ந்தான்.

மூடிய கண்களில் அங்கிருந்த தண்ணீரை ஊற்றியவன் ஈஸ்வரன் தன்னை பார்ப்பதை உறுதி செய்துகொண்டு, “நீயும் அந்த தழலும் அனுப்புன ஆளுங்க அவனை எங்க எங்க தெரியுமா வெட்டிருக்கானுக?” ஈஸ்வரன் கையை பற்றி உள்ளங்கையில் தன் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து சதையோடு அறுக்க, துடிதுடித்தார்.

“ஸ்ஸ்… உன்கிட்ட போய் கேக்குறேன் பாரேன், நீ தான் அங்க தானே இருந்த” ஈஸ்வரனின் கத்தல் மொழிகள் கோவத்தை தர எரிச்சலோடு தன்னுடைய கை குட்டையை எடுத்து அவர் வாயில் வைத்து அழுத்தி அமைதியாக்கினான்.

“எனக்கு நான் பேசுறப்ப யார் பேசுனாலும் புடிக்காது” பார்வை அவன் முகத்திலிருந்து வெட்டுப்பட்டு கிடந்த கைக்கு சென்றது, “இவ்ளோ ஆழம் இல்ல” கத்தியை வைத்து இன்னும் கொஞ்சம் ஆழமாக கிழித்தான் தயக்கம் சிறிதும் இல்லாமல்.

“ம்ம்ம் இப்ப சரியா இருக்கு” ஆதியின் கால்ச்சட்டையிலே அவன் ரத்தம் வழிய சுகப்பட்டது ஆதி மனம். மற்றொரு கையை எடுத்து அதே போல் கீறிவிட்டவன் முகத்தில் வெற்றி புன்னகை. வலியில் சோர்ந்து படுத்துவிட்டான் ஈஸ்வரன்.

“என்ன மாமா… இதுக்கே இப்டி சோர்ந்துட்டா மிச்சம் இருக்குற பரிசை யார் வாங்குறது?”

இனி அழுக கூட தெம்பில்லாத உடலை வைத்து எங்கு கதறுவது? அவரது நிலை புரிந்த ஆதி காயத்தில் தன்னுடைய கட்டை விறல் கொண்டு அழுத்த பறந்திருந்த கதறல் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது, “ஆ… ஆஆஆ”

“ம்ம்ம் இப்ப தான் பேச நல்லா இருக்கு மாமோய். நா பேச பேச நீ ம்ம் கொட்டு இல்லையா” மீண்டும் காயத்தை அழுத்தினான்.

“ஐயோ விடு…. டா எ… எ… என்ன” – ஈஸ்வரன் “ம்ம்ம் இந்த ரெஸ்பான்ஸ் கூட ஓகே தான்” – ஆதி

கையை ஆதியிடமிருந்து கடினப்பட்டு விளக்கியவர் அவன் முகம் பார்த்தார், தெளிவாக அவன் பிம்பம் தெரியவில்லை மங்கலாய் அரை கண் மட்டுமே அவரை கண்டது, “அவன் மேல கை வச்சதுக்கா என்ன இப்டி பண்ற?”

ஈஸ்வரன் கேள்வியில் வாய் விட்டு சிரித்தவன், “ச்ச ச்ச… இதெல்லாம் நீ அவன் மேல கை வைக்க நினைச்சதுக்கு மாமா, அவன் மேல கை வச்சதுக்கு, அவனோட ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும் இனி தான் பழி வாங்க போறேன்” – ஆதி

“வேணாம் டா… வய… வயசானவன இப்டி துடிக்க வக்கிரியே…”

ஒரே நொடியில் ஈஸ்வரன் இடையில் கத்தி கொண்டு சதையை வெட்டியவன், “நீ யோசிச்சியாடா? ஒரு பொண்ணு, ஒரு குடும்பம், அஞ்சு கோடி மனுசங்க நம்பி இருக்குறவன, இனி தான் வாழ்க்கையை ஆரமிக்க போற ஒரு சின்ன பையனோட வாழ்க்கையை அவன் ஆரமிக்கிறதுக்கு முன்னாடியே எடுக்க போறோமே-னு யோசிச்சியா? துடிக்க வைக்கல?”

ஈஸ்வரன் கழுத்தை பற்றியது ஆதியின் இரும்பு கரங்கள், “ஒரே நிமிசத்துல கத்திய குத்தி சொருகிட்டு போக எனக்கு நேரம் ஆகாது, ஆனா தங்கச்சி பையன்-னு கூட பாக்காம, அவனை சுட்டு, வெட்டி என் கைல அவன் துடிச்சு கெடந்த அந்த அரை மணி நேரம் அவன் அனுபவிச்ச வேதனை, என்னோட தவிப்பு எல்லாத்துக்கும் உன் வாய் பதில் சொன்னா என் மனசு ஆறாதுடா… அவன் ரத்தத்துக்கு உன் ரத்தமும், என் தங்கச்சியோட அழுகைக்கு உன்னோட கதறலும் தான் பதில் சொல்லணும்”

இரக்கமே இல்லாமல் கண்ணில் தோல் தெரிந்த இடத்தில் எல்லாம் வெறித்தனமாக கத்தியால் ஆதி கீற அவனது ஆக்ரோஷம் பார்த்த ஜெயன் ஆதியை அவனிடமிருந்து பிரித்து நிறுத்தினான்.

“விட்றா என்ன, இன்னைக்கு அவனை கொல்லாம இங்க இருந்து நான் வெளிய போக மாட்டேன்”

“சார் ப்ளீஸ்… இவன விட முக்கியமான விசியம் பேசணும்” துடிக்கும் இளம் ரத்தத்தின் வாசனை அங்கிருந்த அனைவருக்கும் அடித்தது ஆதியின் கண்கள் மூலம்.

“அப்றம் பாத்துக்கலாம்…” மீண்டும் ஈஸ்வரனை நோக்கி செல்லவிருந்தவனின் கையை பிடித்தான் ஜெயன் கெஞ்சல் பார்வையோடு.

“உதய் சார் முழிச்சிட்டார்…” அதிர்ச்சியில் மனம் உறைந்தது ஆதிக்கு.

நம்ப முடியாமல் ஜெயனை திரும்பி பார்த்தான், “நிஜமா சொல்றேன் சார்… டாக்டர்ஸ் சொன்ன டைம்கு முன்னாடியே முழிச்சதுக்கான அவரோட காரணம் கூட நீங்க தான்”

கையிலிருந்த கத்தியை போட்டவன் தன்னை பற்றி ஜெயன் கூறியதை கேட்கவில்லை, “வா அவனை பாக்க போகலாம்”

ஈஸ்வரன் பின்னுக்கு சென்றான், தானும் தன் சகோதரியும் அனுபவித்த வேதனைகள் கடல் கடந்து சென்றது, இப்பொழுது இந்த நொடி உதயன் மட்டுமே, அவன் பார்வை ஒன்று மட்டுமே தேவை என மனம் அடித்து துடித்தது.

கையிலிருந்த கத்தியை எக்கி மேலே இருந்த திட்டில் வைத்து வெளியேறினான் ஆதி. ஆதி வெளியில் வரும் பொழுது நண்பர்கள் அனைவரும் ஏற்கனவே காரில் அமர்ந்திருக்க, கெளதம் மட்டும் வெளியில் நண்பனின் வரவிற்கு காத்திருந்தான். ஆதி வரவும் வாகனம் மருத்துவமனை நோக்கி சீறியது.

“அவன் நல்லா தானே இருக்கான்?” – ஆதி

“ம்ம்ம் நல்லா இருக்கான்” நண்பனுக்கு பதில் கூறிய ஆதவன் தன்னுடைய கை பேசியை ஆதி கையில் கொடுத்தான். வாங்கி பார்த்தவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் போனது.

ஒரு சவப்பெட்டியில் கழுத்து வரை மண்ணை நிரப்பியிருந்தனர், கைகள் பின்னால் பிணைத்திருக்க உதவிக்கு நொடிக்கொருமுறை வெளியில் இருக்கும் ஆட்களை அழைத்துக்கொண்டிருந்தது அவன் உயிர் பயம். நீரஜ் தழல். பார்க்கவே பரவசமாக இருந்தது ஆதிக்கு.

“எஸ்டிமேட்ட் டைம் பிப்டி மினிட்ஸ் தான். அதுக்கு மேல மூச்சு முட்டி இறந்துடுவான்” ஆதவன் கைகளில் வாகனம் லாவகரமாக அந்த மருத்துவமனை வாசலில் அலுங்காமல் நின்றது.

ஆதி வேகமாக முன்னே செல்ல, மற்ற மூவரும் தயக்கத்துடனே உள்ளே செல்வதை பற்றி யோசித்துக்கொண்டிருந்தனர். நண்பர்கள் தன்னை தொடர்ந்து வரவில்லை என்பது உணர்ந்து ஆதி அவர்களை சந்தேகமாய் கண்கள் சுருக்கி பார்க்க, அவனிடம் கெளதம், “உள்ள வர மனசு உறுத்துது…” என்றான்.

“சரியா தான் வேலை செய்யிது” இன்னும் கோவம் தீரவில்லை என்று ஆதி நேரடியாகவே கூறி உள்ளே விரைந்தான். சத்தமில்லாமல் அமைதியாக இருந்த வளாகத்தை தாண்டி, வி.வி.ஐ.பி மனிதர்களுக்கென்று தனியாக இருந்த ஒரு கட்டிடம் அதில் இருந்தது உதய் இருந்த அரை.

ஒரு தளத்தில் இரண்டு நோயாளிகள் மட்டுமே இருக்க முடியும். அந்த தளத்தில் நுழைந்ததுமே சிறு பேச்சு சத்தங்கள். மின்தூக்கியை விட்டு வெளி வந்தவன் கண்களுக்கு மகிழ்ச்சியாய் சிரித்து பேசும் நளினி, உதய்யின் சகோதரிகளையும் அவர்களுடன் கதை அளந்துகொண்டிருக்கும் ஆதவன், தமிழின் அன்னையும். அவர்களை தாண்டி உதய் வீட்டின் ஆண்கள் மற்றும் நண்பர்களின் தந்தைகளை பார்த்தவன் அவர்களிடம் எதுவும் பேசாமல் நேராக உதய் இருக்கும் அறைக்குள் செல்ல எத்தனித்த பொழுது, “ஆதி அண்ணா… வெயிட் பண்ணுங்க” ஆதி பின்னால் வந்தது தமிழ் சகோதரி பவித்ரா குரல்.

அவளை அதிர்ந்து பார்த்தவன், “நீ இங்க என்ன பண்ற? சஹானா தனியா இருப்பால?” அவனுக்கு பதில் கூறாமல் அவள் கண்கள் சென்றது உதய் இருக்கும் அறையை தான். அவள் கண்கள் கூறும் செய்தியில் உள்ளே எட்டி பார்த்த ஆதிக்கு சிரிப்பில் முகம் பிரகாசித்திருந்த நண்பன், சகோதரி, யாழினி மற்றும் தன்னுடைய மனம் கொய்தவள் தெரிந்தனர்.

அவன் வரவை உணர்தானோ என்னவோ, உதய் கண்கள் உடனே நண்பனிடம் வந்தது. அதற்குள் ஆதியும் உள்ளே செல்ல, அவனை பார்த்த மணிமேகலையின் கண்கள் பிரகாசித்தது. அனைவருக்கும் சிறு சிரிப்பை தந்தவன், நண்பன் அருகே சென்று கை கட்டி நின்றுகொண்டான். உரியவளுக்கோ முகம் உடனே வாடியது. ஆதி நண்பன் முகத்தை மட்டுமே பார்த்திருந்தான். மிகவும் சோர்ந்திருந்தான். பேச கூட உடலில் சத்து இல்லாதது போல் அமைதியாக இருந்தான்.

“என்ன லவர்ஸ் ரெண்டு பேரும் தனியா பேசணுமா?” யாழினி தான் பேச்சை துவங்கி வைத்தாள்.

“ஆமா-னு சொன்னா எந்திரிச்சு போய்டுவீங்களா?” – ஆதி

அவளோ உதய் அருகே ஒட்டி அமர்ந்து அவன் கையை பற்றிக்கொண்டு, “மாட்டேன் பா” என்றாள் சிறுபிள்ளையின் சிரிப்போடு.

அவள் செயலில் ஆதியும் சிரித்திட உதய்யின் கண்கள் தன்னவள் மேல் ஆசையாக படிந்தது.

“கொஞ்ச நேரம் வெளிய இருக்கீங்களா?” உதய் யாழினியிடம் கேட்க, புரிந்த மற்ற மூவரும் வெளியில் சென்றனர்.

மூவரும் வெளியில் சென்றதும், “என்ன பாதிரியார் மாதிரி எல்லாருக்கும் பாவ மன்னிப்பு குடுத்து நிம்மதியா இருக்க போல?” ஆற்றாமையுடன் கேட்டான் ஆதி.

“மன்னிச்சுடு-னு கண்ணு முன்னாடி அழுகுறவங்க கிட்ட வீராப்பு காட்ட சொல்றியா?” – உதய்

“ஏன் காட்டுனா தான் என்ன? இத்தனை நாள் நீ அழுதப்ப ஒரு கை வந்து தொடச்சதா?” – ஆதி

“நான் அழுகவே இல்லடா” சிரித்தான் உதய்.

“நடிச்சு தொலையாத” எரிச்சலுற்றான் ஆதி.

“சரி என்ன பண்ண சொல்ற? சொந்தம்-னு இருந்தா என் கண்ணீரை துடைக்கிறதுக்கு தான் அவங்க வேலையா?” – உதய்

“பின்ன சொந்தம் எதுக்கு? பின்னாடி நின்னு பெரனி பேசவும், விசேஷம் நடக்குறப்ப பக்கத்துல சிரிச்சிட்டே நிக்கவும் தானா? அதுவும் நான் இங்க பேசுறது மூணாம் மனுஷங்கள பத்தி இல்ல, உன் சித்தி சித்தப்பா தம்பி தங்கச்சி, முக்கியமா உன் அப்பா” கோவமாக ஒரு நாற்காலியை தூக்கி உதய் அருகில் போட்டு அவன் காயங்களை ஆராய்ந்தான் ஆதி. அத்தனை கட்டுகளும் இன்று காலை தான் மாற்றியிருந்தனர்.

“இன்னும் அடுத்து மூணு தடி மாடுக வருவானுக… அவனுகளையும் நெத்தில திருநீர் பூசிவிட்டு ஆசீர்வாதம் பண்ணி வை” ஆதியின் பேச்சில் இடுப்பை பிடித்துக்கொண்டு மெதுவாக சிரித்தான் உதய்.

“எதுக்குடா உனக்கு இவ்ளோ கோவம் வருது?”

“கோவம் இல்ல, வெறில இருக்கேன்”

“அடிக்கடி கோவம் வந்தா அதுக்கு மரியாதையே இல்லாம போய்டும் ஆதி… ஆமா எங்க போயிருந்த இவ்ளோ நேரம்?” – உதய்

“சும்மா வெளிய தம் அடிக்க” முகத்தை திருப்பினான் ஆதி.

“என் மேல சத்தியம் பண்ண தம் அடிக்க மாட்டன்னு. உண்மைய சொல்லு, ஜெயன், ஆதவன் யாரையும் கானம்” – உதய்

ஆதி அமைதியாக இருந்தான்.

“ஜெயன் எங்க?” ஆதியின் மௌனத்தில் ஏதோ தவறு உள்ளதென்று புரிந்தது உதய்க்கு.

“அவனை எதுக்கு நீ கேக்குற? அது தான் மொத்த பொறுப்பையும் உன் அப்பன் தலைல கட்டிடல, வாய மூடிட்டு ரெஸ்ட் எடு. உன்ன பாக்க அவனுகள எல்லாம் வர வேண்டாம்னு சொல்லி அனுப்பியாச்சு” – ஆதி

“சரி ஆதவன் தமிழ் கெளதம் எங்க?” – உதய்

“அவன் பண்ண தப்புக்கு வெளிய நிக்கிறானுக” – ஆதி

“என்ன பெரிய தப்பு பண்ணிட்டாங்க?” புருவம் உயர்த்தி ஆதியிடம் கேள்வி எழுப்பினான் உதய். பேச முடியவில்லை ஆனால் இந்த அழுத்தக்காரனின் மனதை மாற்றி உண்மையை உரைக்க வைக்க வேண்டும்.

“ஓ உன்ன பேசுனது எல்லாம் கேட்டதும் இந்த கன்னத்துல அடிச்சா அந்த கன்னத்தை காட்டுற ஆளோ நீங்க?” நீ மனிதன் தானா என்ற பாவனையில் ஆதி உதய்யை பார்த்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!