Skip to content
Post Views: 4,931
அந்தியூரான் எபிலாக்
பல வருடங்கள் சென்று..
இதமான இளம்வெயில் வேளை போலும் சிவராமன் விழுதுகள் அனைத்தும் ஒருவர் மடியில் இருவர் படுத்து கொண்டும், இன்னும் சிலர் கோவில் கல் தூண்களில் சாய்ந்து கொண்டும் இளைப்பாறி கொண்டிருந்தனர். சற்று முன் தான் பூஜை முடிந்தது போலும்.
Advertisement
ஆம் சிவராமன் குடும்பம் குலசாமி கோவிலுக்குப் பூஜை செய்ய வந்திருந்தனர்.ஆடி மாசம் குலசாமியை கொண்டாடி நிற்பார் சிவராமன்.அதன் பொருட்டு அவரது ஆண், பெண் மக்கள் அவர்கள் பிள்ளைகள் என்று கூடி இருந்தனர்.
எண்ணம் போல் வாழ்க்கை என்பதற்கு மிக சரியான சான்று இந்தச் சிவகாமி, சிவராமன் தம்பதியினர்கள் தான்.இன்னும் அவர்களது விழுதுகள் பெருகி சிறந்து நின்றது, நல்லோர் ஆசியின் முழுத் தொகுப்பாக.
Advertisement
Advertisement
அமுதன் – குமாரிக்கு இரு பிள்ளைகள் முதலாவது மகன் கவிராசன்,இரண்டாவது மகள் குழலி.
தணிகாசலம் – விசாலாட்சி தம்பதிக்கு, குமாரிக்கு பின்பு ஒரே மகன் வேதாச்சலம்.இவன் தந்தையைக் கொண்டு என்றாலும் அப்பன் விட்ட பொறுப்பை இளையவன் ஈடு செய்து விட்டான்.
Advertisement
சிவராமன் – சிவகாமிக்கு தற்போது பேரன் தான் துணை.அத்தனை பாந்தமாகத் தான் பெரியவர்களைத் தாங்கி நின்றான் இளையவன்.தணிகாசலம் கூட மகனின் பாங்கை எண்ணி உள்ளுக்குள் மெச்சி கொள்வான்.
இன்றும் விசலாட்சி மகனை கொண்டு என் அண்ணன் போல் என்று தணிகாவை வெறுப்பேற்றி இருவரும் மல்லுக்கு நிற்பதும் உண்டு.அது என்னவோ தணிகா சும்மா இருந்தாலும் அவனை சீண்டி பார்ப்பது விசாலாட்சியின் ஆக சிறந்த பொழுது போக்காகிப் போனது.
இளசுகள் எல்லாம் ஓய்வாகக் கிடைத்த இடத்தில வயதுக்கு ஏற்றவாறு வட்டமடித்துக் கொண்டிருக்க.சிறிய மக்கள் எல்லாம் ஒன்று கூடி ஆலமரத்தடியில் விளையாடி கொண்டிருந்தனர்.
சிவராமன் சிவகாமி இருவர் கண்களுக்கும் எதிரில் எல்லாரும் இருக்க.அனைவரையும் களிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பெரியவர்கள்.
“சிவா!”
“என்னங்க?”
“நம்மை போலப் பிள்ளைகளும் நிறைஞ்சு நிக்கனும்”
“கடவுள் புண்ணியத்துல கண்டிப்பா எந்த ஏற்ற தாழ்வு வந்தாலும் சமாளிச்சு ஒற்றுமையா கை கோர்த்து நிற்பாங்க” என்றவர் பார்வை வேதாசலத்தின் மீது பட. சிவகாமியின் பார்வையைத் தொடர்ந்து சிவராமன் பார்வையும் பேரனை தீண்டி நின்றது.
வேதாசலம் அத்தனை கோபமாக அமுதன் மகன் கவியரசனிடன் பேசி கொண்டிருந்தான், “வேதா குட்டி திரும்பி பார்க்கும் கொள்ள நல்லா வளர்ந்துட்டான் பாருங்களேன்”
“ஹ்ம்ம்! இப்பவெல்லாம் கோபம் மூக்கு மேல வருது ஐயாவுக்கு.ஒரு பார்வை தான் பார்ப்பார் அப்பாவ மாதிரி நம்ப தான் புரிஞ்சுக்கனும்” பேரனை எண்ணி பெருமை கொண்டாலும் போலியாகச் சலித்தார் சிவராமன்.
“ஆமா அப்பனை கொண்டு கொஞ்சம், ஆத்தாளை கொண்டு கொஞ்சம்” என்றவருக்கும் பேரனை எண்ணி அத்தனை பெருமை தான்.
அங்கே வேதாசலத்திடம் கெஞ்சி கொண்டிருந்தான் கவிராசன், “அத்தான் கொஞ்சம் நான் சொல்லிடுறேன் கேளுங்களேன்”
“நீ பேசவே வேணாம் கவி நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? நான் இல்லாமா போக கூடாதுனு சொன்னேன்”
“அத்தான்!” சின்னவனுக்கு அழுகை வரும் போல் இருந்தது. ஆற்றுக்குப் போக வேண்டும் சொன்னவனிடம் கொஞ்சம் இரு நான் வருகிறேன் என்று சொல்லி சென்றான் வேதாசலம்.
அதற்குள் வைரம்,அன்பு,ராணி என்று மகள் வயிற்று கொள்ளு பேரனுகளுடன் விளையாட சென்று விட்டான் கவியரசன்.தான் சொன்னதை மீறி விட்டான் என்று தான் இத்தனை கோபம் வேதாசலத்திற்கு.
வேதாசலம் கோபம் கொள்வதைப் பார்த்த குழலி. தனது பட்டுப் பாவாடை சட்டையை அழகாகக் கையில் பிடித்து,தத்தையாக நடந்து வந்து வேதாசலத்தை நெருங்கி அவனது கால் சட்டையைப் பிடித்து இழுத்து தூக்க சொல்ல.
தன்னை இழுக்கும் பூ செண்டை குனிந்து பார்த்தவன்.அதுவரை இருந்த கோபம் மறந்து குட்டியை அழகாக கையில் ஏந்தி கொண்டான்,”என்னடா பட்டு?”
“ங்க போலாம்”
“ஆத்துக்குப் போலாம், ஆனா பாப்பாக்கு தண்ணி ஆகாதே” என்றதும் ரோஜா இதழை பிதுக்கி அழுக பார்க்க.அதன் அழகில் மயங்கி நின்றவன்,”பட்டு அழ கூடாது சரி போலாம்” என்றவன் அப்போது தான் கவிராசனை பார்த்தான்.
அவனோ கொஞ்சமே கொஞ்சம் முறைத்து நிற்க.சிறு புன்னகை கொண்டு வா! வா! அவனையும் அழைத்துச் சென்றான் பெரியவன்.கவிக்கும் அவனுக்கும் ஒன்றை ஆண்டுத் தான் இடைவேளை,ஆனால் வேதாசலம் அத்தனை முதிர்ச்சியாக நடந்து கொள்வான்.
அமுதனும் குமாரியும் கொஞ்சம் அருகில் தான் பிள்ளைகளுக்குக் காவலாக அமர்ந்திருந்தனர்.இவர்களும் சிறியவர்கள் பேச்சை கவனித்தனர் போலும்.
“தம்புடு அப்படியே அப்பா மாதிரி தானே மாமா” குமாரி தம்பியிடம் பார்வையைப் பதித்தவாறு அமுதனிடம் கேட்க.
“ஹ்ம்ம் நடை, உடை, அலட்சியம், திமிரு எல்லாமே உங்க அப்பா தான்டி” என்றவனை வெடுக்கென திரும்பி பார்த்து முறைத்தாள் குமாரி.
“கோச்சுக்காத தங்கம் உண்மை தானே” என்றவனைப் பலமாகக் கிள்ளி வைத்தாள் குமாரி.
“ஸ்ஸ்! வலிக்குது பாப்பா”
“அப்பாவ சொன்னா இப்படித்தான் பண்ணுவேன். அது என்ன அண்ணனும், தங்கையும் எப்போ பாரு எங்க அப்பாவை வம்பு பண்ணுறது”
“நான் என்னடி சொன்னேன் நீ கேட்ட நான் சொன்னேன்… சரி! சரி! முறைக்காத என்றவன் சிறு புன்னகையுடன் வேதா ரொம்ப பொறுப்பு குமாரி. உங்க அப்பாவை விட நல்லா திறமையா வருவான்”
“ஹ்ம்ம்!”
“பார்ப்போம் காலம் கை கொடுத்தா, பிள்ளைகளும் விருப்பப்பட்டா பையன கொத்தா தூக்கிட்டு போயிடுவேன்” அமுதன் தங்கை மகன் மீது சிறு அன்பு கொண்டு தன் எண்ணத்தை சொல்ல அதில் மலர்ச்சி கொண்டாள் குமாரி.
“ஹ்ம்ம்! பார்ப்போம் மாமா நம்ப எதையும் முடிவு பண்ண முடியாது தானே” என்றவள் சுற்றி ஒரு பார்வை பார்த்துக் கொண்டு அமுதனை நெருங்கி அமர.சிறு புன்னகையுடன் அவளை தன் தோளோடு வளைத்துக் கொண்டான் அமுதன்.
திருமணமாகி இத்தனை வருடங்கள் கடந்த நிலையில் இருவரது புரிதலும், நெருக்கமும் வெகுவாக தான் கூடி இருந்தது.இவர்களது நெருக்கத்தை எண்ணி குடும்ப மக்களே அசந்து தான் நின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.
என்னடா இது? இது எப்படிச் சாத்தியம்? என்ற கேள்விகள் அவர்களைக் குடைந்தாலும் நடப்பில் சான்றாக நின்ற இருவரையும் கண்டு வியந்து தான் போயினர்.
யாரு கண்ணையும், கருத்தையும் உறுத்ததா வண்ணம் அவர்களது நெருக்கம் ராணி – கந்தனை கண் கலங்க வைத்தது,செல்வியே வாழ்ந்தது போல் அத்தனை மகிழ்வு அவர்களுக்கு.
தணிகாவை கொண்டு விசாலாட்சி என்று கதையெல்லாம் ஆண்டு மாறி சென்று.குமாரியை கொண்டு அமுதன்,அமுதனை கொண்டு விசாலாட்சி என்றாகி போனது.நாத்திகள் குழு மொத்தமும் விசாவிடம் சாய்ந்த கதையை எண்ணி, எண்ணி உள்ளுக்குள் மாய்ந்து போனது என்னவோ தணிகா தான்.
இனி காலம் எத்தனை கதை பேசி நின்றாலும். இவர்களது வாழ்வில் எந்த விதமான ஏற்ற தாழ்வு வந்தாலும் இருவரும் கை கோர்த்து கவிதைகள் கொண்டு அழகாகக் கதை பேசி நிற்பார்கள் என்பதில் ஐய்யமில்லை.
சிவராமன்- சிவகாமி ஜோடியும்,குமாரி – அமுதன் ஜோடியும் கண்களை அலைய விட. அது இறுதியாக நிலைத்து நின்ற இடம் தணிகாசலம் – விசாலாட்சி.அது என்னவோ இந்த முதுமகனுக்கு முதிர்ச்சி என்பது முகத்தில் கூடத் தெரியவில்லை.
முடி நரை தட்டி நின்றாலும். இன்னும் கொஞ்சம் கம்பீரமாக நிமிர்ந்து தான் நின்றான் தணிகாசலம்.கொஞ்சமே கொஞ்சம் மனைவியை படிக்கச் முயன்று அதில் சிறு வெற்றியும் கண்டான் என்று தான் சொல்ல முடியும்.கோவில் மண்டபம் போல் இருக்க. அங்குள்ள தூணில் தணிகாசலம் சாய்ந்து கொண்டு படிகளில் கால் நீட்டி அமர்ந்திருக்க.அவனுக்குக் கீழ் படியில் அமர்ந்திருந்தாள் விசாலாட்சி.
அவர்கள் கண்களும் சிறியவர்களிடமும் அவ்வப்போது குமாரி, அமுதனையும் தீண்டி கொண்டே இருந்தது.அதிலும் தணிகாவின் பார்வை மகன் மீது கொஞ்சம் கூர்மையாகப் படிந்தது.
தன்னைக் கொண்டே தன் மகன் என்று சொல்ல முடியாவிடிலும்.தன்னில் பாதிக் குணம் அவனிடம் உண்டு.சில நுண்ணிய வழமைகள்,முன் கோபம்,அலட்சியம்,சொன்னதை செய்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதம், கூடவே தணிகா தவறவிட்ட முக்கியப் பொறுப்பு,உறவுகளைத் தாண்டி நிற்பது. அவர்களுக்கு நேரம் கொடுப்பது என்பதை மகன் சரி செய்து விடுவான் என்று தான் தோன்றியதும்.
மகனை பார்த்தவன் பார்வை மனைவியைத் தீண்டி நிற்க.தணிகாவின் பார்வையை உணர்ந்தார் போல் கணவனை ஏற்றிட்டு பார்த்தவர்,”என்ன அந்தியூர் காரரே மகனை வெறிக்க வெறிக்கப் பார்க்கறீங்க”
“என்னாமா கோபம் வருதுடி அவனுக்கு. கொஞ்சமும் யாருனு வச்சு பாக்குறதில்லை” இவர்கள் இருப்பது குழந்தைகளுக்குப் பக்கவாட்டில் உள்ள மண்டபத்தில் என்பதால்.சற்று முன் மகன் குமாரி மகனிடம் கோபமாகப் பேசியது நன்கு கேட்டது.அதனை கொண்டு தான் மனைவியிடம் சொன்னான்.
“விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும் தணிகாவின் வேர், தணிகா கொண்டே தானே இருக்கு”என்றவளை எப்போதும் போல அலட்சிய பார்வை பார்க்க.
“இதோ! இதோ! இந்தப் பார்வை தான் இது மாறவே மாறாது ஐயோ! நம்ப ஆளு என்னடா கொஞ்சம் நல்ல பேசுதுன்னு எண்ணி நான் கொஞ்சம் கூடப் பேசுனாலும் என்னையெல்லாம் அங்கணமே பண்ண முடியாதுன்னு ஒரு அலட்சிய பார்வை பார்த்து வைக்குறது” என்றவளை பார்த்து இதழ் பிரித்துச் சிரித்தான் தணிகாசலம்.
“இப்போ என்ன சிரிப்பு?”
“சிரிக்கவே மாட்டிங்களேன்னு சொல்ல வேண்டியது. சிரிச்சா ஏன் சிரிச்சேனு? கேட்க வேண்டியது என்னமா நான் செய்ய?” கைகளை விரித்து சிரித்தவனைப் பார்த்து இப்போது அவளுக்கும் சிரிப்பு.
“ப்ப! பார்க்க பச்சை பிள்ளை மாதிரி இருக்குறது. எங்க வீடு ஜனமும் சரி, உங்க வீடு ஜனமும் சரி தணிகாவா? பேசவே மாட்டார், நல்ல பையன். எங்க அம்மா மாப்பிள்ளை தம்பி அத்தனை அமைதி.எனக்குள்ள தெரியும் உங்களைப் பத்தி தணிகா அமைதி இல்லை அழுத்தம்னு”
“ஒரு வார்த்தை தானே பேசுனேன்” பாவம் போல் சொன்னான் தணிகாசலம்.
“அந்த ஒரு வார்த்தை தான் முழுப் பேச்சுக்கு காரணமே” என்றதும் கப்பென வாயை மூடி கொண்டான் தணிகாசலம்.சில நொடிகள் மௌனம் கொண்டவனை மீண்டும் ஏற்றிட்டு பார்த்து
“என்ன பேச்சையே காணோம்” என்றதும் வெடுக்கெனச் சரிந்த வாக்கில் அவள் அமர்ந்திருக்கும் படியில் வந்தவனைப் பார்த்து அதிர்ந்து, “என்ன வேலை பார்க்கறீங்க விழுந்து வாரி வச்சா என்னத்துக்கு ஆகுறது”
“நீ கேட்டதுக்குப் பதில் இப்படித் தான் சொல்ல முடியும்”
“ப்ச் என்ன உளறீங்க”
“நீ கேட்டதுக்குப் பதில் தணிகா எப்போவோ இறங்கி, சறுஞ்சி இதோ உன் பக்கம் வந்துட்டான்னு அர்த்தம்” அவனது செயலிலும்,அவன் சொன்ன தோரணையிலும் அப்படி ஒரு சிரிப்பு சிரித்தாள் விசாலாட்சி.
“அந்தியூர் காரே நீங்க இறங்கி வந்த வரலாறு தான் ஊருக்கே தெரியுமே. வயசும்,வாழ்க்கை கொடுக்கும் பக்குவமும் தான் ஐயாவை கொஞ்சமே கொஞ்சம் மாத்தி இருக்கு.இதை மாறுதல்ன்னு கூடச் சொல்ல முடியாது வேற வழியில்லன்னு கூடச் செய்யலாம்” என்றவளை என்ன செய்தால் தகும் என்பது போல் பார்த்தவனைப் பாவனை மேலும் விசாலாட்சியைச் சிரிக்கத் தூண்ட இம்முறை அவள் சத்தமாகச் சிரித்து வைத்தாள்.
அமுதனும், குமாரியும் அவளது சிரிப்பை கண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு புன்னகைக்க.
சிவராமன் சிவகாமி முகத்தில் மீண்டும் ஒரு நிறைவான புன்னகை..
“சிவா?”
” வீட்டுக்கு போயி முத வேலையா சுத்தி வச்சுடலாம்”
“அதை செய்”
இனி எந்த ஏற்ற தாழ்வு வந்தாலும் வாழ்க்கை, எப்படி அமைந்தாலும்.காலம் எடுத்து, அமைதி கொண்டு,கொஞ்சமே கொஞ்சம் விட்டுக் கொடுத்து,சுயம் பேணி இவர்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுவோம்.
சுபம்..
error: Content is protected !!