Skip to content
Post Views: 3,226
நடக்கும் நிகழ்வுகளை கண்டு உள்ளம் நொந்த தமயந்தி நீ அவங்களோட போயிடு என்று மகளை பார்த்து கை காட்டினார்.
மாட்டேன் என்பதாய் தலை அசைத்தாள் பவித்ரா.
போயிடுன்னு சொல்றேனில்ல… இன்னும் ஏன் எங்களை அசிங்கப்படுத்துற…? மொத்தமாய் உடைந்து விட்டார் தமயந்தி.
நான் ஏன் போகணும்? தாயின் முகம் பார்த்து கண்களில் ஊடுருவி கேட்டாள்.
Advertisement
அவன் தான் வேணும்னா போயிடு!
நீங்களும் வேணும் என்றவள் திரும்பி ஹரிசரணை ஒரு பார்வை பார்த்தாள்.
வதின கிளம்புங்க நம்ம வீட்டுக்கு போவோம்…தேவ் சரண் குதூகலமாகி விட்டான்.
Advertisement
பாவை அவள் அமைதியாக நின்றாள்.
Advertisement
சின்னயனா, ராம், தேவ் நாம கிளம்பளாம் என்றான் ஹரி.
பவித்ரா இல்லாம நாம போனா அண்ணையாக்கு ரொம்ப கோபம் வரும். வெங்கிக்கு செம்ம கடுப்பு.
நானாகிட்ட நான் பேசிக்கிறேன்… மேற்கொண்டு எதுவும் பேசாமல் வெளியில் வந்தான் ஹரி.
Advertisement
அண்ணையா வதன இங்கே இருக்கிறது எனக்கு சரியா படல…. கூட்டிட்டு போய் நம்ம ஊரில் வைத்து ஜாம் ஜாம்முனு விவாகம் பண்ணிடுவோம்…! ராம் பரபரத்தான்.
கார்ல ஏறு! கதவை திறந்து விட்டு கண்களால் கட்டளை பிறப்பித்தான்.
இவ்வளவு தூரம் வந்து பேசின எங்களுக்கு என்ன மரியாதை? எத்தனை பேர் வந்தாலும் அடிச்சு உதைச்சு பொண்ணை தூக்கிட்டு போனா தான் நம்ம பரம்பரைக்கு கௌரவம்.
இந்த வெங்கி ஒரு பிரச்னையில் தலையிட்டு அது முடியாம போனா அது நம்ம பரம்பரைக்கே கேவலம்.
உங்க மருமகள் சீக்கிரம் வருவா….!
நம்ம வீட்டு மருமகள் எந்தவித வம்பு தும்பும் இல்லாம பெருமையோடு மரியாதையோடு வருவா…
நீ எப்போவும் எங்க பேச்சை கேட்டதில்லை ஹரி…. மனம் ஆறவே இல்லை வெங்கிக்கு.
சின்னயனா நான் உங்களை மீறி போனதில்லை… எப்போவுமே உங்களுக்கு எட்டுற தூரத்தில் தான் இருப்பேன்.
எதையாவது பேசி எங்களை ஆஃப் பண்ணிடு! நான் அண்ணையா முகத்தை எப்படி பார்ப்பேன்?என்னோட கோபத்தை கண்ட்ரோல் பண்ணவே முடியல… கை முஷ்டியை மடக்கி தொடையில் குத்திக் கொண்டார்.
நோ டென்ஷன்….இப்போ என்ன நடந்து போச்சு? ஒரு பிரச்னையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி டீல் பண்ணுவாங்க!
கவலை படாம கிளம்புங்க!சந்தோஷமா எங்க விவாகம் நடக்கும்!
தேவ்வை பார்த்து கண்ணை காட்டினான்… அவன் காரை கிளப்பினான்.
நீ இங்கே என்ன பண்ண போற…? நீயும் கிளம்பு!கோபம் சற்று தூக்கலாகவே வெளிப்பட்டது வெங்கியின் குரலில்.
பின்னாடியே வரேன்…. தேவ் கிளம்பு!
“——————–“
மீண்டும் உள்ளே வந்த ஹரி மணவாளன் அருகில் சென்று நின்றான்.
சார் நான் கிளம்புறேன்! அவர் கரம் பற்றி குலுக்கினான்.
தம்பி அது…கொஞ்சம் பொறுமையா… நீங்க தவறா… அவருக்கு வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை.உள்ளுக்குள் நடுக்கம் தான் அவருக்கு.
நான் கிளம்புறேன் பார்த்துக்கோங்க! மென் சிரிப்புடன் அவர் தோளணைத்து விடுவித்தான்.
யாரும் யார் முகத்தையும் பார்க்கும் நிலையில் இல்லை.
தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த தமயந்தியின் அருகில் சென்று நின்றான்.
அவர் திகிலுடன் நிமிர்ந்து பார்க்க….
அத்தம்மா வரேன்… என்றான் மிக மென்மையான குரலில்.
அவர் பொம்மையென அமர்ந்திருந்தார்.
அருகில் நின்றிருந்த யுவராஜை நிமிர்ந்து பார்க்க… அக்காவை அழைச்சுட்டு போங்க என்பதாய் ஜாடை காட்டினான்.
சிரிப்புடன் மறுத்த ஹரி அவன் தோளில் தட்டிவிட்டு கிளம்பினான்.
அமர்ந்தது அமர்ந்தபடி பவித்ரா சிலையாகி வீற்றிருந்தாள்.
அவனும் பவித்ராவை பார்க்கவில்லை பேசவில்லை அவளும் அவனுடன் பேச முனையவில்லை.
அய்யோ இந்த தம்பி போகுதே….ஆத்தாகாரி குணம் தெரிஞ்சும் இந்த பவி புள்ள தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்குதே….செல்லும் அவனையே கவலையுடன் பாத்துக் கொண்டிருந்தார் சுசிலா.
“———————“
அத்தை நான் கிளம்புறேன்… சுசிலாவை பார்த்து கூறிக்கொண்டே எழுந்து கொண்டார் மணவாளன்.
அவருக்கு தமயந்தி மீது கோபம், வருத்தம், பரிதாபம் எல்லாமே.
நாலுபேர் நாலுபேர் என்று சொல்லியே மகளுக்கு அமைய இருக்கும் நல்வாழ்வை தட்டிக்கழிப்பதா?
ஹரிசரண் பற்றி தமயந்திக்கு தெரியாது ஆனால் அவருக்கு தெரியுமே!
அவர்கள் அமைதியாய் போனதே அவருக்குள் குளிர் எடுத்து விட்டது.
அவர்களோடு மோதும் வல்லமை நமக்கு உண்டா?
ஒரு தலை காதலுக்கு வந்து அவர்கள் பெண் கேட்டு நிற்கவில்லையே… நம் வீட்டு பெண்ணும் காதல் வயப்பட்டிருக்காளே..
இதன் முடிவு என்னவாக இருக்கும் என்ற பல வித யோசனை, சங்கடம் அந்த மனிதருக்கு.
மாமா நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன்… முகத்தை ஷாலில் துடைத்துக் கொண்டே அவர் அருகில் வந்து நின்றாள் பவித்ரா.
நீ எங்கேயும் போக கூடாது…! சம்பாதிச்சு கிழிச்சு என் தலையில் கல்லை தூக்கி போட்டது போதும் தமயந்தி பொங்கி விட்டார்.
ஏன் தமயா இப்படி பண்ற?கடுப்பாகி விட்டார் மணவாளன்.
அவளுக்கு வரன் பார்க்க தொடங்குண்ணே…. மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.
பாருங்க காயத்ரிக்கு…. உறுதி தெறித்தது அவள் கண்களில்.
என்ன பேசற? கடுங்கோபம் தமயந்திக்கு.
எனக்கு கல்யாணமே தேவை இல்லைன்னு சொல்றேன்.
மிரட்டி பார்க்கறியா?
என் முடிவை சொல்றேன்…!
உன் பேச்சுக்கு நாங்க ஆட முடியாது.
நீங்க பார்க்கிற மாப்பிள்ளையை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.
அவன் நினைப்புல தான் இருப்பேன்னா அவன் கூடவே போய் தொலைய வேண்டியது தானே…?
நான் ஏன் அப்படி ஓடி போகணும்? அவ்வளவு கோபம் அவள் குரலில்.. விழிகளில் செவ்வரி ஏறி நரம்புகள் புடைத்தது.
நாங்க மனசு மாறி அந்த தெலுங்குகாரனுக்கு கட்டி வைப்போம்னு நினைப்பா…?
நீங்க மனசும் மாற வேண்டாம்… எனக்கு கல்யாணமும் பண்ண வேண்டாம். நான் என் வாயால ஹரிசரணுக்கு என்னை கட்டிக் கொடுங்கன்னு கேட்க மாட்டேன்.
நான் சங்கரநாராயணன் பொண்ணா இப்படியே இருந்துட்டு போறேன்…
பிடிவாதமா…? நித்திய கல்யாணியா இருந்து எங்க உயிரை வாங்க போறியா?
இங்கிருந்தா உங்க உயிரை வாங்குவேன்னு தோணுச்சுன்னா நான் வேலை தேடிகிட்டு ஹாஸ்டலுக்கு போயிடறேன்.
அண்ணே… அவ இவ்வளவு பேசறா… நீ அமைதியா நிற்கிற…. வழியும் கண்ணீரை துடைக்க கூட இயலாமல் சோர்ந்து நின்றார் தமயந்தி.
உன் பொண்ணு தமயா அவ… உன் வைராக்கியத்தில் பாதி கூடவா அவளுக்கு இருக்காது?
அண்ணே எல்லாரும் ஒரு கட்சியா இருக்கீங்க போல… உள்ளம் வலியில் துடித்தது அவருக்கு.
விடு தமயா…. பவி உன்னை மீறி அந்த பையன் கூட போயிட மாட்டா… உன் மகளை பற்றி உனக்கு நானே பாடம் எடுக்க அவசியம் இல்லை.
அண்ணே இப்படி பேசினா இதுக்கு என்ன தான் முடிவு?
உன் முடிவில் இருந்து நீயும் இறங்க மாட்ட… அவ முடிவில் அவளும் தீர்க்கமா இருப்பா… ஆத்தாலும் மகளும் இப்படியே முறைச்சுட்டு நில்லுங்க!
ஏன் இன்னும் பொண்ணை கட்டிக் கொடுக்கலன்னு அக்கம் பக்கம் காரி துப்பும்… அப்போ அவங்கட்ட போய் காரணம் சொல்லு… கடுகாய் பொறிந்து விட்டார் சுசிலா.
அத்தை நீங்க வேற….. தமயந்திக்கு தொண்டை அடைத்தது.
எம்புள்ள இருந்திருந்தா அவன் பொண்ணு ஆசைப்பட்டவனை கட்டி வச்சு அழகு பார்த்திருப்பான்.
யாரு நாலு வாய் சோறு போடுவான்னு அண்டி பிழைக்கிற இந்த வயசான கிழவி பேச்சா சபைக்கு ஏற போகுது…? தன் போக்கில் புலம்பிக் கொண்டே தோட்டத்துபுறம் சென்றார் சுசிலா.
போங்க…. ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டே நிற்காம போய் வேலையை பாருங்க…
யுவி நீ ஹாஸ்டலுக்கு கிளம்பு! காயத்ரி நாளைக்கு காலேஜ் இருக்கு போ போய் வேலையை கவனி…மணவாளன் கிளம்பி விட்டார்.
“——————–“
டேய் இத்தனை பேர் போய் வெறுங்கையை வீசிட்டு வறீங்க…. நீங்க நந்தமூரி வம்சமா… காரி உமிழ்ந்தார் சுப்ப கிருஷ்ணா.
பார்த்தாயா என்பது போல் ஹரியை முறைத்துக் கொண்டிருந்தார் வெங்கி.
அவ்வளவு பெரிய குடும்பமா அவங்க? என் பிள்ளைக்கு பொண்ணு கொடுக்க அவங்களுக்கு என்ன பிரச்சனை?
பெதநயனா அவங்க குலம் கோத்திரம் பார்க்கறாங்க…! முகம் கடுத்தான் தேவ்.
ஏன் நம்ம குலம் கோத்திரத்துக்கு என்ன? மனிதர் வெகுண்டெழுந்து விட்டார்.
அவங்க அம்மா, பெதநயனா பேமிலி கடுமையா எதிர்க்கிறாங்க… ராம் வருத்தமுடன் கூறினான்.
என் பிள்ளை போய் நின்னானே… அந்த பொண்ணு பின்னாலே வர வேண்டியது தானே…?
லவ் பண்ணும் போது தெரியாதா இப்படி எல்லாம் பிரச்சனை வரும் எப்படி சமாளிக்கலாம்னு யோசித்து இருக்கணும்!
இப்படடிபட்ட பெண்ணுக்கா இவன் ஏங்கி நிற்கிறான்? கசந்து போனது சுப்புவிற்கு.
உங்களுக்கு பொறுமையாவே பேச வராதா? சிடு சிடுத்தார் ஷியாமளா.
என்ன பொறுமை வேண்டிகிடக்கு…எம்புள்ள ஆசைபட்டது நடந்தே தீரணும்!
வெங்கி நம்ம நாராயண ராவ்கு கால் பண்ணு!
அண்ணையா அவர் ரஷ்யாக்கு போயிருக்கார்.
இருக்கட்டும்… அவன் வெளியுறவு துறை அமைச்சரா இருந்தாலும் என் உயிர் சினேகிதன். நான் சொன்ன பேச்சுக்கு மறுத்து பேச மாட்டான்.
தமிழ்நாடு CM க்கு பேச சொல்லு… இல்ல அந்த பொண்ணு ஏரியாவில் இருக்கும் MP, MLA க்கு பேச சொல்லு.
இப்போ எதுக்கு இந்த பிரச்னையை பெருசு பண்றீங்க? தலையில் அடித்துக் கொண்டான் ஹரி.
டேய் தேவ்… நம்ம ஆளுங்களை கூட்டிட்டு போய் அந்த பொண்ணை தூக்கிட்டு வாங்க…. அடுத்த முகூர்த்தத்தில் விவாகம் பண்ணிடுவோம்… குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்.
தயவு செய்து அமைதியா இருங்க… எல்லாம் தன்னாலே நடக்கும்.
என்ன ஹரி இதெல்லாம்? தாரணிக்கு விதிர்விதிர்த்து போனது.
ஒன்னும் பிரச்சனை இல்லைம்மா கொஞ்ச நாள் பொறுமையா இருங்க… எல்லாம் நல்லபடியா நடக்கும்!
எது கொஞ்ச நாளா? எப்போ உனக்கு அறுபது வயது ஆகும்போதா..? மனிதர் காண்டாகி போனார்.
அவங்க உங்க அளவிற்கு முற்போக்கான மனுஷங்க இல்ல… சாதி மத கட்டுப்பாட்டில் வாழும் கிராமத்து மனுஷங்க. நம்ம அந்தஸ்து பார்த்து அவங்க இன்னும் பயப்படறாங்க.
வீரனோட மோதுவது தான் வீரம்.நாம அடித்தா அவங்களால திருப்பி அடிக்க முடியாது.
அப்படிப்பட்டவங்களுக்கு ஏன் வறட்டு பிடிவாதம்? ஷியாமளாவிற்கும் கோபம் தான் நம் வீட்டு பிள்ளையை மறுப்பதா?
ஷியாம்மா ஏழையா இருந்தா கோபம் ரோஷம் இருக்க கூடாதா?
என்னடா இப்படி பேசற…?அப்போ என்ன தான் பண்ண போற…?
பொறுமையா இருந்தா பெருமையா வாழலாம்.
“——————“
என்னடா ஹரி நடக்குது? அகிலன் மண்டையை பிய்த்துக் கொண்டான்.
நான் பவித்ராவோட அம்மாட்ட பேசிப் பார்க்கவா? சௌமி கவலையுடன் கேட்டாள்.
வேண்டாம் என்பதாய் மறுத்தான்.
என்ன தான் முடிவு பண்ணியிருக்கீங்க?
தெரியாது என்பதாய் உதடு பிதுக்கினான்.
எது தெரியாதா?
ம்ம்ம்ம்ம்… என்றான் மிக சாதாரணமாய்.
என்னடா விளையாடறியா? அகிலனுக்கு கடுமையான டென்ஷன்.
இப்போ என்னடா உனக்கு? அரைமணி நேரமா என்னை கேள்வி கேட்டு குடையறீங்க.
நானே எர்ரபள்ளியில் இருக்க முடியாமல் தான் அமெரிக்கா வந்தேன்.
என்னடா… பாவமாய் நண்பன் முகம் நோக்கினான்.
எந்நேரமும் என் விவாகம் தான் பேச்சு! ஒன்னு அந்த பொண்ணை தூக்கிட்டு வந்து விவாகம் பண்ணுவோம்.. இல்லைனா வேற பொண்ணு பார்ப்போம்.
என்னால முடியல மச்சி அது தான் தப்பிச்சு ஓடி வந்துட்டேன்.
பவி என்ன சொல்றா? சௌமி கவலையுடன் கேட்டாள்.
தெரியாது!
எது தெரியாதா?
ம்ம்ம்
நீ பேசலையா?
இல்லை… பேசி ஒன் மந்த் ஆகும்.
என்னடா சொல்ற?
ம்ம்ம்ம்… ஆமா அகி அவளும் பேசல… நானும் பேச முயற்சி பண்ணல…
ஹரி…. தழு தழுத்தது சௌமியின் குரல்.
எப்படிடா..? பேசாம இருக்க முடியுதா? வியந்து போனான் அகிலன்.
இருந்து தானே ஆகணும்! குரல் அடைத்து தொண்டை குழிக்குள் சிக்கிக் கொண்டது.
ஏன்டா இந்த இம்சை எல்லாம்? நண்பனுக்காய் அவன் மனம் தவித்தது.
பவி ஸ்டராங்கா முடிவு எடுத்திருக்கணும்…. சௌமி அவ்வளவு வருத்தம் கொண்டாள்.
வேறென்ன முடிவு எடுத்திருக்க முடியும்? தன் உள்ளம்கவர் குலாபிக்காக பரிந்து வந்தது பேச்சு.
அட போடா….! முப்பத்தொரு வயசாச்சு உனக்கு.
அதுக்கு என்ன பண்ண முடியும்?
பவி சரியில்லை… மீண்டும் பொறுமினாள் சௌமி.
ச்சு… அப்படி சொல்லாதே சௌமி…! இதெல்லாம் யோசித்து தான் அவ என்னோட லவ்வை மறுத்தா.
எங்க லவ்வுக்கு நீ பெரிய பேக் போனா இருந்த மச்சி…ஆனா உன் நிலைமை இப்படி ஆகிடுச்சே…
நெகிழ்ந்து உடைந்தது அகிலனின் குரல்.
அடுத்தவங்க பிரச்னைக்கு ஈஸியா சொல்யுஷன் கொடுத்துட முடியும். நமக்குன்னு வரும்போது இந்த கையளவு மூளை கண்டதையும் யோசிக்குது.
அடுத்து என்ன? அகிலன் சங்கடமாய் கேட்டான்.
தெரியல… தோளை குலுக்கினான்.
த கிரேட் ஹரிசரண் நந்தமூரி எர்ரபள்ளிட்ட இதை நான் எதிர்பார்க்கல.
போடா… ஹரிசரணும் சராசரி மனுஷன் தான். ஆன்டிஹீரோவா மாற அஞ்சு நிமிஷம் போதும்.
என் பவி என்ன கேட்டாலும் என்னால வாங்கி கொடுக்க முடியும். ஆனா என்கிட்ட அவ எதையுமே கேட்டதில்லை.
அவ வாயை திறந்து கேட்காமல் மனசால என்கிட்ட கேட்கிறதும் எதிர்பார்க்கிறதும் அவ அம்மா சம்மதத்தோட நடக்குற விவாகம் தான்.
எப்போடா நடக்கும்? கன்னத்தில் கைவைத்து அமர்ந்து விட்டான்.
நடக்கும் போது நடக்கட்டும்!
அட போடா…. சலித்துக் கொண்டான் அகிலன்.
டேய் எத்தனை பேர் எதிர்த்து நின்றாலும் தட்டி வீசிட்டு தூக்கிட்டு வந்து தாலிக் கட்ட என்னால முடியும்.
அவ சைடில் நம்மோட மோத பண பலமும் இல்லை, படை பலமும் இல்லை… கௌரவம் மட்டும் தான் இருக்கு.
அந்த கௌரவத்துக்கு மரியாதை கொடுக்கணும்!
என் அம்மா இப்போ வரைக்கும் வருத்தப்படுறாங்க அவங்க பெத்தவங்களை எதிர்த்து விவாகம் பண்ணினதை நினைத்து.
அந்த சங்கடம் என் அம்மாயிக்கு ஒரு நாளும் வந்துடக் கூடாது.
மச்சி…. இறுக்கி அணைத்துக்கொண்டான் அகிலன், கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
நண்பனை பார்த்து பெருமை கொண்டான். இவன் என் நண்பன் என்ற பெருமை.
——— தொடரும் ——
error: Content is protected !!