Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அந்தி நேர உதயம் 5

5

                        அன்று ஏதோ ஒரு தமிழ் படத்தின் பிரத்யேகக் காட்சிக்கு குட்லக்  தியேட்டரின் வாயிலில் காத்திருந்த ரம்யாவிற்கு  சூரியா பத்திரிக்கையின் ஆசிரியர் சங்கரன் மீது கடுமையான கோபம் வந்தது.

   இன்னும் இரண்டு மணி நேரம் ஒரு அபத்தமான தமிழ்  படத்தை தியேட்டரில் அமர்ந்து பாரப்பது அவளைப் பொறுத்தவரை மரண தண்டனைக்கு

நிகரானது. ஆனால் எடிட்டருக்கு  அவள் எரிச்சல் தெரிகிறதா?



Advertisement

   சூரியாவின் சினிமா செய்தித் தொகுப்பாளர் சிக் லீவ் எடுத்ததால் அவள் தலையில் விடிந்தது வினை. ரம்யாவின் நிலைமை  புரியாமல் தயாரிப்பாளர் ரெட்டி வேறு படத்தை சீக்கிரம் ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தினார்.

   படக் கதாநாயகன் ப்ரேம்குமார் வர வேண்டுமாம். ஏற்கெனவே பொறுமையிழந்திருந்தவளை சகப் பத்திரிக்கை  நண்பன் வினோத் வெறுப்பேற்றினான்.

            காட் ப்ளெஸ் மீ என் நண்பர்களிடம் ரம்யாவோடு சேர்ந்து படம் பார்த்தேன்னு  பெருமையா சொல்லிக்கலாம் .பொறாமையில் செத்தே போயிடுவாங்க.

Advertisement

     வினோத்தின் வழிசல் தாங்க முடியாமல் ரமயா கிளம்பலாமா என்று யோசித்த வேளையில்  ப்ரேம்குமார் வந்தான்.

Advertisement

        ஹாய் ரம்யா…….கார் சாவியை கையில் சழற்றியபடி வந்த ப்ரேம்குமாரிடம் ஒரு முன்னணி நட்சத்திரத்துக்கான அனைத்து அம்சங்களும் குறைவின்றி இருந்தன. அருகில்  வந்தவன்  விழிகள் கிறங்க, மயங்கினாற் போல் நடிக்க, தயாரிப்பாளர் ரெட்டி பதறினார்.

     ப்ரேம்    என்னப்பா ஆச்சு?

      அது ஒண்ணுமில்லை மிஸ்டர் ரெட்டி ..த பேமஸ் ரம்யா என் படத்துப் ப்ரீவ்யூவிற்கு  வர்றதுன்னா, காட் திஸ்  இஸ் சர்ப்ரைசிங். ரெட்டிகாரு! வராதவங்க எல்லாம் வந்திருக்காங்க.   நிச்சயமா நம்ம படம் சில்வர் ஜூப்ளி தான்.சந்தேகமேயில்லை.

Advertisement

    ப்ரேமின் குறும்பும் கிண்டலும் ரம்யாவிற்கு கல்லூரி நாட்களிலேயே பரிச்சயம் தான். ஆனால்  சினிமாவிற்கு வந்த பின்னும் அதே பழைய நண்பனாய் அவன் பழகுவது அவளுக்கு இன்றைக்கும் ஆச்சரியமூட்டும் விஷயம்.

  அதுவும் சக நடிகை சங்கீதாவை அவனுடன் இணைத்து கிசுகிசு எழுதிய வினோத்தை அவன் கலாய்த்த விதம் ரசிக்கும்படி இருந்தது.

        வினோத் ஹாட்ஸ் ஆஃப் டூ யூ. நான் என் கல்யாணத்தை ஆபஸ்ட்பரியில வெச்சுக்கலாமா  இல்லை ஏ.வி.எம்.ல வெச்சுக்கலாமானு திணறிட்டிருந்தேன். நீங்க என்னடான்னா சிம்பிளா கோவில்ல வெச்சு என் கல்யாணத்தை முடிச்சுட்டிங்க. தாங்க் யூ

         ரம்யா எரிச்சல் மறந்து சிரித்தது மட்டுமின்றி வினோத்திற்காக பரிந்து பேசவும்   செய்தாள்.

   ஏதோ தெரியாத்தனமா எழுதிட்டார் வினோத். அதுக்காக அவரை இப்படியா வாருவிங்க?

   இட்ஸ் ஆல் இன் த கேம் பேபி. டேக் இட் ஈஸி.

 ப்ரேம் வசீகரமாகச் சிரித்தான்.

   அனைவரும் தியேட்டரினுள் நுழைந்த பொழுது, ரம்யா திடீரென்று கையை உதறினாள்.

  வாட்ஸ் ராங்?

ப்ரேம் நின்று திரும்பினான்.

   இது உங்க படம்னு தெரியாது ப்ரேம் .தெரிஞ்சிருந்தால்………ரம்யா இழுத்தாள்.

   தெரிஞ்சிருந்தால்?   ப்ரேம் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான்.

   கையோடு ஒரு ஆஸ்பிரின்னோ இல்லை சாரிடானோ கொண்டு வந்திருப்பேன்.

   ரம்யாவின் பார்வையில் குறும்பு மிதந்தது.

 யூ………. பொய்கோபத்துடன் முறைத்த ப்ரேம்  குறும்பாக  கண்சிமிட்டினான்.

   கவலைப்படாதே ரம்யா. அப்படி ரொம்ப தலை வலிச்சா நான் மசாஜ் பண்ணி விடுகிறேன்  நோ ப்ராப்ளம்.

   யூ……  அடிக்க ஓங்கியவளின் கையை பற்றியவன், அவளை இழுத்துக் கொண்டு நடந்தான்.

   போகிறபோக்கில், வினோத்தை பார்த்து கண்சிமிட்டினான் .கையை விடுவித்துக் கொள்ள  போராடிய ரம்யாவைச் செல்லமாக மிரட்டினான்.

  உஷ் ரம்யா கையையெல்லாம் கிள்ளாதே. அப்புறம் வினோத் நம்மை தப்பா நினைச்சுக்கப் போறார் எனக்கு உன்னுடன் இன்னொரு கல்யாணம் பண்ணி வைத்தாலும்  ஆச்சரியப்படறதுக்கில்லை. ஏன் வினோத் எனக்கு கல்யாணமானதா செய்தி போட்டது தான் போட்டிங்க, மணப்பெண்ணா ரம்யாவைப் போட்டிருக்கக் கூடாது? எங்கேயிருந்து பிடிச்சிங்க    சங்கீதாவை?……ம்?

   சாதுவாக முகத்தை வைத்துக்கொண்டு படு சீரியசாக ப்ரேம் கேட்க, ரம்யா தன் கைகளை  விடுவித்துக் கொண்டு சீறினாள்.

   ப்ரேம்………திஸ் இஸ் த லிமிட்.  உங்க விளையாட்டுப் பேச்சுக்கு ஒரு அளவேயில்லையா?

     ஓ.கே. ஓகே உடனே கண்ணகி அவதாரம் எடுக்காதே. கூல் பேபி கூல்…….

       ப்ரேமின் விளையாட்டுப்பேச்சு பின்னொரு நாளில் அவளுக்கு விபரீதமாக வந்து விடியக் கூடும் என்று ரம்யா கனவிலும்  நினைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!