Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அன்பில் இணைந்த இதயங்கள்

அன்பில் இணைந்த இதயங்கள்….21

அன்பில் இணைந்த இதயங்கள்…21

தன் கையில் உள்ள பொருளையே கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் கயல்விழி.கண்களில் கண்ணீர் வழிந்தோடியது இம்முறை அளவு கடந்த மகிழ்ச்சியால்.மனமெங்கும் மன்னவன் நினைவு ஆட்டி படைக்க யோசிக்காமல் அவனிற்கு அழைத்துவிட்டாள்.அழைப்பு போய் கொண்டிருக்க,

“சத்யா…சத்து மாத்திரை….உன்னை இப்பவே பார்க்கனும்டா….உன்கிட்ட தான் சொல்லுவேன்….”என்று மகிழ்ச்சியில் பிதற்றியபடி பேசியை காதில் வைத்துக் கொண்டிருக்க பேசி எடுக்கபடவில்லை இரண்டு முறை அழைத்தவள் அவன் எடுக்கவில்லை என்றதும் மனதில் சுணக்கம் தான்.இருந்தாலும் அவன் வேலை முடித்து பார்த்துவிட்டால் கண்டிப்பாக தனக்கு அழைப்பான் என்று அவனின் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருந்தாள்.

மாலை வர வேண்டிய லிங்காவும்,அமிர்தாவும் மதியவேளையே வந்துவிட்டனர்.கயலிற்கு அமிர்தாவிடம் கூறிவிடலாம் என்று தான் மனது ஏங்கியது இருந்தும் சத்யா அழைத்துவிட மாட்டான அவனிடம் முதலில் பகிர்ந்துவிட்டு பின் கூறலாம் என்று விட்டுவிட்டாள்.அறையில் பரிசோதனை செய்த கிட்டை அழகாக கிப்ட் போல பேக் செய்து வைத்தவள் கணவனின் அழைப்பிற்காக காத்துகொண்டிருந்தாள்.



Advertisement

இரவு நேரம் வரை அவன் அழைக்கவில்லை என்றதும் சரி வீட்டில் உள்ளவர்களிடம் பகிர்ந்துவிடுவோம் என்று அவர்களை தேட லிங்காவும்,அமிர்தாவும் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர்.கயல் சந்தோஷமாக அவர்களை நோக்கி வந்து,

“அத்தை….மாமா….அது…”என்றவளுக்கு எப்படி இதை உரைப்பது என்று புரியவில்லை மனதெங்கும் கணவனின் நினைவு தான் அவனிடம் முதலில் கூற வேண்டுமே என்று மனது ஆட்டி படைத்தது அனைத்தையும் ஓரம்கட்டிவிட்டு வீட்டு பெரியவர்களிடம் கூறுவது தான் நல்லது என்று நினைத்து,அமிர்தாவின் அருகில் அமர்ந்து,

“அத்தை….அது…நான்….”என்று கயல் தொடங்கும் முன்,

Advertisement

“கயல் எனக்கு தலைவலியா இருக்குடா….நீ போ…நாளைக்கு பேசிக்கலாம்….”என்று அமிர்தா கூற,கயல்விழி அப்போது தான் அமிர்தாவின் முகத்தை பார்த்தாள் அவரின் முகமே அழுதது போல இருக்க,

Advertisement

“அத்தை என்ன ஆச்சு…ஏன் ஒருமாதிரி இருக்கீங்க….”என்று கயல் கேட்க,அவளை நிமிர்ந்து பார்த்தவர் ஒன்றும் கூறாமல் வேறுபுறம் முகத்தை திருப்பி தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார்.அதை கவனித்த கயல்,

“என்ன ஆச்சு அத்தை….ஏன் ஒருமாதிரி இருக்கீங்க….மாமா நீங்களாவது சொல்லுங்க…”என்று லிங்கத்திடம் கேட்க,

“ஒண்ணுமில்லமா…..நீ போ….நாளைக்கு பேசிக்கலாம்….”என்று  அவளை அனுப்புவதிலேயே குறியாக இருக்க,

Advertisement

“அப்ப ஏதோ இருக்கு….ஏன் என்கிட்ட சொல்லமாட்டீங்களா…சொல்லுங்க மாமா…”என்று கயல் கேட்க,லிங்கா அமிர்தாவின் முகத்தை பார்க்க,

“அத்தை நீங்களாவது சொல்லுங்க….”என்று அவள் அமிர்தாவிடம் திரும்ப,அமிர்தாவின் கண்களில் கண்ணீர் சுரந்தது.அதை கண்ட கயல் பதறி அவரின் கண்களை துடைத்துவிட்டவள்,அவரின் முகத்தை தன் பக்கம் திருப்பி,

“எதுவா இருந்தாலும் சொல்லுங்க ப்ளீஸ்….”என்று இரைஞ்ச,அமிர்தா,

“கயல் நீ….உன்னை பத்தி தப்பா பேசிட்டாங்கடா….நானும் கோபத்துல கத்திட்டு வந்துட்டேன்…”என்று அவர் உடைந்து அழ,கயலிற்கு மனதில் திக் என்ற உணர்வு தான் இருந்தாலும் மனதை திடப்படுத்திக் கொண்டு,

“என்ன சொன்னாங்க அத்தை…”என்று நிமிர்ந்து நின்றே கேட்டாள்.

“விடுமா….அவங்களுக்கு வேற வேலையில்லை நான் அப்பவே இவகிட்ட சொல்லிட்டேன்….உறவுனா நாலு பேரு நல்லவங்க இருப்பாங்க நாலு பேரு கொஞ்சம் மோசமா தான் இருப்பாங்க…அவங்களை எல்லாம் நாம எடுத்துக்க கூடாது….அதை சொன்னா உங்க அத்தை புரிஞ்சிக்காம….இப்படி மூஞ்சியை தூக்கி வைச்சிக்கிட்டு இருக்கா…”என்று லிங்கா வருத்தமாக கூற,

“என் மருமகளை பத்தி அவங்க வாய்க்கு வந்ததை பேசுவாங்க….நாம அமைதியா போகனுமா….நானே எவ்வளவு நாள் கழிச்சு என் புள்ளை முகத்துல சந்தோஷத்தை பார்க்குறேன்….இவங்க கண்ணுலபட்டா அதுவும் போயிடும் போலயிருக்கே….”என்று அவர் புலம்ப தொடங்க,

“அம்மு…இப்ப எதுக்கு தேவையில்லாதது எல்லாம் பேசிக்கிட்டு இருக்க….”என்று லிங்கம் கோபப்பட,

“உங்களுக்கு என்ன தெரியும் என் மகனை எவளோ ஏமாத்தி பைத்தியமா அலையவிட்டா….அவ பேரு கூட எனக்கு தெரியாம போச்சு….தெரிஞ்சிருந்தா கொன்னு போட்டுருப்பேன்….அந்த சிருக்கி என் புள்ளை கொல்ல பார்த்தா….அப்படிபட்ட பேய்கிட்டேந்து காப்பாத்தி இதோ என்று கயலை காட்டி தேவதை மாதிரி ஒருத்தி கிட்ட ஒப்படைச்சிருக்கேன்….இவ வந்ததுக்கு அப்புறம் தான் என் பையன் மறுபிறவி எடுத்து இருக்கான்….நான் என் மருமகளை என் வீட்டுக்கு வந்த தேவதை போல நினைச்சுகிட்டு இருக்கேன்….எவ எவளோ கண்ட பேச்சசெல்லாம் பேசுறா இருக்கட்டும் நாளைக்கு அவ வீட்டுல போய்….”என்று அமிர்தா ஆவேசமாக கத்திக் கொண்டிருக்க,

“என்ன சொன்னாங்க….”என்று அமைதியாக கயல் மீண்டும் கேட்க,

“நீ விடு ராஜாத்தி…நான் பேசிக்குறேன்….”என்று அமிர்தா அவளின் கன்னம் வழிக்க,அவரின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு,

“சொல்லுங்க என்ன சொன்னாங்க….எனக்கு தெரியனும் உங்களுக்கும் தெளிவு படுத்தனும்…”என்று கேட்க,

“என்னடாமா…நாங்க உன்னை தப்பா நினைக்கவேயில்லைடா….எல்லாம் இவளால வரும் போதே சொன்னேன் முகத்தை தூக்காத பிள்ளை பார்த்தா சங்கடபடும்னு….கேட்டியாடீ…இப்ப பாரு பிள்ளை முகமே வாடி போச்சு….இந்த விஷயம் மட்டும் சத்யாவுக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான்….”என்று லிங்கா கூற,

“வேண்டாம் என்பிள்ளைக்கு தெரிஞ்சுது….அவன் தாங்க மாட்டான்….அதோட திரும்பியும் அந்த பொண்ணு நினைப்பு வந்து பழையபடி அவன் மாறிட்டா…”என்று அமிர்தா நடுங்க,அவரின் கைகளை பிடித்து மீண்டும் இருக்கையில் அமர வைத்த கயல்,

“மாமா,அத்தை உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்….உட்காருங்க….”என்று கூற,

“வேண்டாம் கயல்….அது அத்தை சொல்லுறது…ரொம்ப வருஷம் முன்னமா….அது முடிஞ்சு போனது….அந்த பொண்ணு யாருனு கூட  எங்களுக்கு தெரியாது….”என்று லிங்கா மருமகளுக்கு இதெல்லாம் தெரியாதே அவள் மனதொடிந்து போய்விடக் கூடாதே என்று பயத்தில் கூற,

“எனக்கு தெரியும்….”என்றவளின் பதிலில் லிங்கமும்,அமிர்தாவும் அவளை அதிர்ந்து பார்த்தனர்.

“எனக்கு தெரியும் உங்க பையனை ஏமாத்தினவ யாருனு எனக்கு தெரியும்….”என்று கயல்விழி கூற,

“உனக்கு எப்படி தெரியும் சத்யா சொன்னானா….ஆங்…”என்று லிங்கம் கேட்க,

“இல்லை…எனக்கு தெரியும் நான் சொல்லுறேன்…அதுக்கு முன்னாடி நீங்க ஏதோ யாரோ சொன்னாங்கனு சொன்னீங்களே அதை சொல்லுங்க….”என்று கயல் கேட்க,

“அது எதுக்குமா….நாங்க அதை பத்தி எல்லாம் நினைக்கல….எங்களுக்கு கோபம் எங்க மருமகளை பத்தி அவங்களுக்கு என்ன தெரியும்….அதான் கோபம்….”என்று லிங்கா கூற,

“இல்லை உங்களுக்கு தெரியாது நீங்க சொல்லுங்க என்ன நடந்துச்சுனு….இன்னைக்கே எல்லா விஷயத்தையும் நான் பேசிடனும்னு இருக்கேன்….ப்ளீஸ் மாமா சொல்லுங்க….”என்று கேட்க,லிங்கம் கூற தொடங்கினார்.

திருமணத்திற்கு வந்த வனி மற்றும் நந்திதாவின் மாமியார்களும் கயலை பற்றிய பழைய விஷயங்களை பெரிது படுத்தி அமிர்தாவிடம் கூறி அவரை ஏத்திவிட அமிர்தாவும்,லிங்காவும் கோபத்தில் எங்கள் மருமகளை பத்தி பேசாதே என்று கத்திவிட்டனர்.இதனால் திருமணத்தில் வெகு நேரம் இருக்க முடியாவில்லை அவர்க அதனால் இருவருமே சீக்கிரம் திரும்பி இருந்தனர்.வரும் போதே லிங்கம் இதை இதோடு விடு வீட்டில் யாரிடமும் கூற வேண்டாம் என்று தான் கூறியிருந்தார் ஆனால் அமிர்தாவால் அவ்வாறு இருக்க முடியவில்லை.

“இது தான்மா நடந்தது…நீ இதை எல்லாம் பெரிசா எடுத்துக்காதமா….”என்று லிங்கா கூற அவரை தடுத்த கயல்,ஒரு நீண்ட மூச்சொன்றை இழுத்துவிட்டவள்,

“மாமா,அத்தை அது நான்….அவங்க சொன்னதுல பாதி உண்மை தான்.,…”என்றுவிட்டு அவர்களின் முகத்தை காண இருவருமே அதிர்ந்து அவளை பார்க்க,

“இதோட இன்னொரு உண்மையும் உங்களுக்கு தெரியாது….முதல்ல எனக்கு இதெல்லாம் மறைச்சு தான் இந்த கல்யாணம் நடந்ததுனுனே தெரியாது….கலை அப்பா உங்ககிட்ட எல்லாம் சொல்லியிருப்பாங்கனு தான் நினைச்சேன்….ஆனா உங்களுக்கு எதுவும் தெரியலை….எதுவுமே தெரியலை….”என்று முகத்தை மூடி அழ,லிங்காவும்,அமிர்தாவும் திகில் அடைந்து அவளை பார்த்து கொண்டிருந்தனர்.

“நான் சொல்ல போறது உங்களுக்கு மனசுக்கு கஷ்டமா தான் இருக்கும்…”என்றவளை இடைமறித்த அமிர்தா,

“என்னமா நீ என்னனவோ சொல்லுற…எங்களுக்கு ஒண்ணும் புரியலை….”என்று கணவரை பார்க்க அவரும் அதே புரியா பார்வை பார்த்துக் கொண்டு நின்றார்.

“நான் சொல்லுறத நீங்க பொறுமையா கேட்டு தான் ஆகனும்….”என்றவள்,இருவரின் முன்பும் கைகளை எடுத்து கும்பிட்டு,

“என்னை மன்னிச்சிடுங்க….நான் தான் சத்யா காதலிச்ச பொண்ணு…..”என்றவள் அவர்களின் காதல் தொடங்கியது முதல் முடிந்தது வரை கூறி அதன் பின் அவளின் வாழ்வில் நடந்த அனைத்து குளறுபடிகளையும் கூறி முடிக்க,லிங்கமும்,அமிர்தாவும் அதிர்ந்து நின்று விட்டனர்.இத்தனை நடந்துள்ளது தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று மனதில் கோபம் அனலாக தகித்தது.

“நீ என்னமா சொல்லுற….”என்று லிங்கம் கேட்க,அவளோ பதில் கூறாமல் நிற்க அமிர்தா கயலை வெறித்தபடி இருந்தார்.தன் மகன் திருமணத்திற்கு உடனே ஒத்துக் கொண்டதன் காரணம் ஏன் என்று புரிந்தது அமிர்தாவிற்கு.ஆக அத்தனை நடந்த பின்பும் அவனின் மனம் மாறவில்லை எங்களின் கண்ணீர் அவனுக்கு பெரிது இல்லை அவனின் முடிவு மட்டும் தான் முக்கியம் என்று நினைத்துவிட்டான் என்று நினைத்தவர் பேசாமல் நிற்க,

“அத்தை…நான்…”என்ற கயலின் பேச்சை கையை உயர்த்தி இடை நிறுத்தி,

“என்னங்க இனி இவ என்கிட்ட பேசக்கூடாது சொல்லிடுங்க….”என்றுவிட்டு வேகமாக உள்ளே சென்றுவிட்டார்.

“ஏன் இவ்வளவு நடந்து இருக்கு எங்களுக்கு எதுவும் தெரியலை….எங்களை எல்லாரும் ஏமாத்தியிருக்கீங்க….”என்று ஆவேசமாக கேட்க கயல் அவரை நிமிர்ந்து பார்க்க முடியாமல் நின்றாள்.

“எனக்கு….எனக்கு தெரியாது மாமா…..உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சு தான் என்னை கல்யாணத்துக்கு கேட்டீங்கனு தான் நான் நினைச்சேன்….”என்று கயல் கூற,

“உன்னை ஏன் நான் சொல்லப் போறேன்……என் குடும்பத்துல உள்ளவங்களே எங்களை ஏமாத்தியிருக்காங்க….போ…நான்…எனக்கு ஏதாவது சொல்லிடுவேன்….அன்னைக்கு என் புள்ளையே எப்படி பார்த்தேன் தெரியுமா….பித்து பிடிச்சமாதிரி…”என்று தொண்டை கட்டிவிட்ட குரலில் அவர் கூற,கயலிற்கு அப்படியே மணலில் புதைந்துவிடலாமா என்று தோன்றியது.

“என்னங்க….எதுக்கு அதையெல்லாம் அவகிட்ட சொல்லிகிட்டு இருக்கீங்க….வாங்க….”என்று அமிர்தா வந்து லிங்காவை கை தாங்களாக அழைத்து சென்றுவிட்டார்.கயல்விழி எப்படி தனது அறைக்கு வந்தாள் என்று அவளுக்கு தெரியாது வந்தவள் பொத்தென்று தன் படுக்கையில் விழுந்து குலுங்கி குலுங்கி அழுதவள்,பின் மெல்ல தன் கண்களை துடைத்துக் கொண்டு சத்யாவிடம் இருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்கிறதா என்று பார்க்க எதுவும் வரவில்லை என்றதும்.

“உன்னிடம் முக்கியமான விஷயம் கூற வேண்டும்….வேலை முடிந்தவுடன் அழைக்கவும்….”என்று பேசில் அனுப்பிவிட்டு அப்படியே படுத்துவிட்டாள்.அடுத்த நாள் காலை யாருக்கும் காத்திராமல் விடிந்தது.

கயல்விழி சற்று தாமதமாக தான் விழித்தாள்.எழுந்து காலை கடன்களை முடித்துக் கொண்டு அறையை விட்டு வெளிவர லிங்கம் எங்கோ கிளம்பி உணவு அருந்த அமர்ந்திருந்தார்.அமிர்தா அவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருக்க,அவர்களை எதிர் கொண்ட கயல் எப்போதும் போல் புன்னகைக்க அமிர்தாவோ கயலின் புறம் திரும்பவில்லை லிங்கமோ தலையை மட்டும் ஆட்டிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

கயல்விழி அமிர்தாவிடம் பேச முயற்சி செய்ய அவரோ திரும்பியும் பாராமல் செல்ல,கயலுக்கு மனது வலிக்க தொடங்கியது.தவறு இழைத்துவிட்டேன் தான் அதுக்கான தண்டனையும் எனக்கு கிடைத்துவிட்டது இன்னும் எத்தனை தான் அந்த கடவுள் தனக்கு தருவார் என்று நினைத்தவள் தன் காலை நேர வேலைகளை செய்ய தொடங்கினாள்.

இதோ ஒருவாரம் ஓடிவிட்டது சத்யாவிடம் இருந்து அழைப்பு வரவில்லை அவன் பேசியில் கயல் அனுப்பிய செய்தியை பார்க்கவும் இல்லை.வீட்டில் லிங்கம் மட்டுமே கயலிடம் பேசினார் அதுவும் கயல் கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறுவார்.அமிர்தாவோ கயலை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார்.கயலும் அமிர்தாவிடம் எவ்வளவோ பேச முயற்சி செய்ய,

“எனக்கு இப்ப உன்னை பார்க்கும் போது எல்லாம் அன்னைக்கு என் புள்ளை தவிச்ச தவிப்பு தான் நியாபகத்துக்கு வருது…நான் சும்மா இல்லாம உன்னை ஏதாவது சொல்லிடுவேன்…அதனால தான் நானே ஒதுங்கி போறேன்….என்னை வீணா தொந்தரவு பண்ணாத….உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா உன் வீட்டுக்கு போயிட்டு வா…”என்றுவிட கயல் கண்ணீர் மல்க அவரை பார்த்தவள்,

“உன் வீட்டுக்கு ஒரேடியா போனு சொல்லுறீங்களா அத்தை….”என்று அழுதபடி கேட்க,

“நீ செஞ்ச காரியத்துக்கு நான் அதை தான் சொல்லனும் ஆனா சொல்லமுடியாதே….அதனால தான் ஒதுங்கி போறேன்…”என்று அவர் கூற,தன் கண்களை துடைத்துக் கொண்ட கயல்,

“அத்தை நான் தப்பு பண்ணிட்டேன் தான் ஒத்துக்குறேன்…அந்த தப்பை நான் உணர்ந்ததால தான் உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு இப்படி குற்றவாளியா நான் நிக்குறேன்….ஆனா அதுக்காக எல்லாம் என் சத்யாவை விட்டுட்டு என்னால போக முடியாது….அதனால நீங்களே என்னை வீட்டை விட்டு துரத்தினாலும் நான் போகமாட்டேன்….”என்று கயல்விழி தெளிவாக கூறிவிட்டாள்.

முன்பு போல் எல்லாம் கயல் மூளையில் உட்கார்ந்து அழவெல்லாம் இல்லை எப்போதும் போல் வீட்டில் நடந்து கொண்டாள்.அமிர்தாவிடம் அவர் பேசவில்லை என்றாலும் பேசிக் கொண்டு தான் இருப்பாள்.ஆனால் அவர் தான் இவள் பேச வந்தலே எழுந்து தன் அறைக்குள் சென்று முடங்கிவிட அதனால் அவரை கயலும் தொந்திரவு செய்யாமல் விட்டுவிட்டாள்.

கயல்விழி யாரிடமும் குழந்தை பற்றி வாய் திறக்கவில்லை அதற்கான சூழ்நிலையும் வீட்டில் இல்லை என்பதால் அமைதியாக தான் இருந்தாள்.ஆனால் யாருக்கும் தெரியாமல் மருத்துவரை சந்தித்து குழந்தையை உறுதி செய்து கொண்டு அவர் கூறிய அறிவுரைகளை கேட்டுக் கொண்டாள்.மசக்கை அவளை படுத்தி தான் எடுத்தது.எது சாப்பிட்டாலும் வாந்தி,தலை சுற்றல் என்று அவளை படுத்தியது.அமிர்தா எப்போதும் போல் இருந்திருந்தால் கயலை கவனித்திருப்பார் அவர் கோபத்தில் கயலை பார்ப்பதையே தவிர்த்துவிட்டார். ரஞ்சினியிடமும் கயலின் விஷயம் அமிர்தாவின் மூலம் சென்றுவிட ரஞ்சிக்கும் கயலின் மீது கோபம் தான் இருந்தாலும் அதை அவளிடம் காட்டவெல்லாம் இல்லை ஆனால் பேச்சுகள் முன்போல் இயல்பாக இல்லை.ஆக கயலிற்கு அனைவரும் இருந்தும் இல்லை என்ற சூழ்நிலை.

மேலும் ஒரு வாரம் கழித்து தான் சத்யா வீட்டிற்கு வந்தான்.விடியற்காலை சத்யா வீட்டிற்கு வர லிங்கம் தான் முகத்தை உர் என்று வைத்து கொண்டு கதவை திறந்தார்.அவரிடம் நேற்று இரவு கிளம்பும் போதே பேசியிருந்தான்.அவரும் வீட்டில் நடக்கும் விஷயங்களை அவனிடம் கூறியவர்,

“நாங்க உனக்கு முக்கியம் இல்லை அப்படி தான ப்பா….”என்று கோபத்தில் கேட்க,

“இதை நீ உன் மச்சான் கிட்டேயும் கேளு ப்பா….என்னை மட்டும் ஏன் கேட்குற…”என்று அவன் இடக்காக கேட்க,

“அவனுக்கு தான்டா முதல்ல போன் பேட்டேன்…அவன் எங்கோ வெளியூர் போயிருக்கானாம்…வரட்டும் இருக்கு அவனுக்கு…”என்று லிங்கம் கோபமாக கத்த மறுபக்கம் சத்தமே இல்லை அவன் எப்பவோ பேசியை வைத்திருந்தான்.அதன் கோபம் இன்னும் அவருக்கு குறையவில்லை அதனால் மகன் வந்தவுடன்,

“ஏன்டா நான் பேசிக்கிட்டு இருக்கும் போதே போனை வைச்ச…”என்று கத்த,

“எனக்கு தூக்கம் வந்துடுச்சி ப்பா…அதான்…”என்றுவிட்டு அவன் தன் அறைக்குள் நுழைந்துவிட்டான்.லிங்கமோ கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றார்.

தனது அறைக்குள் நுழைந்த சத்யா கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனைவியை கண்டு அவளின் அருகே வந்து அவளின் தலையை மெல்ல தடவி விட்டவன்,நெற்றியில் முத்தத்தை பதித்துவிட்டு,

“ஏன்டீ நீயாவே போய் மாட்டுற….அடுத்து அம்மு ம்மீ என்ன சொல்ல போகுதோ…”என்று கூறிக் கொண்டே தன்னை சுத்த படுத்திக் கொண்டு வந்து அவளை இறுகி அணைத்துக் கொண்டு படுத்துவிட்டான்.

காலை நேரம் கழித்து தான் கயல்விழி விழித்தாள் முதல் நாள் அவளுக்கு தலைசுற்றல் அதிகமாகி மிகவும் கஷ்டப்பட்டு போயிருந்தாள்.அவள் எழுந்த நேரம் சத்யா அறையில் இல்லை.அவள் குளித்து முடித்து வெளி வரும் போது சத்யா கண்ணாடியில் தலைவாரிக் கொண்டிருக்க,வெளிவந்த கயலிற்கு தன்னவனை கண்டு சம்பித்த நிலை.

“கயல்….கயல்…”என்ற சத்யாவின் குரலில் தெளிந்த கயல்,

“சத்யா எப்ப வந்த….”என்று கேட்டுக் கொண்டே அவனிடம் நெருங்கும் முன்,

“கிளம்பு கயல்….”

“சத்யா….நான் உன்கிட்ட முக்….”

“ப்ச்…கயல் எனக்கு வேலையிருக்கு….சீக்கிரம் கிளம்பு….”என்றவன் வெளியில் சென்றுவிட்டான்.கயலிற்கு மனதில் சுணக்கம் தான் இருந்தாலும் அவனிடம் வெளியில் செல்லும் இடத்தில் கூறலாம் என்று நினைத்தவள் அவன் கூறியது போல் கிளம்பி வர,

“எவ்வளவு நேரம் வா….”என்று முன்னே செல்ல,கயல் அமிர்தாவிடம் சொல்லவிட்டு வரலாம் என்று சமையல் அறைபக்கம் போக,அவளின் கையை பிடித்து இழுத்து சென்று வண்டியின் அருகே விட்டவன்,

“உன்னை என் பின்னாடி வான்னா நீ எங்க சமையல்கட்டுக்கு போற…வண்டியில ஏறு….”என்று சத்யா காய,

“அத்தைகிட்ட சொல்லிட்டு வரேன் சத்யா….”என்று கயல் கூற,

“நான் சொல்லிட்டேன்…நீ வா…”என்றுவிட்டு வண்டியை உறும,கயல் அமைதியாக அவனின் பின்னே ஏறி அமர்ந்துவிட்டாள்.போகும் வழியில் அவள் பேச முயல அவன் காது கொடுத்தது போல் தெரியவில்லை.வண்டி அவளின் வீடு இருக்கும் தெருவிற்குள் நுழைய,

“எங்க வீட்டுக்கு தான் கூட்டிட்டு வந்தியா சத்யா….”

“ம்ம்ம்….”என்றவன் அவளின் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு,

“இறங்கு…”என்று கூற கயல் இறங்கிவிட்டு அவனுக்காக நிற்க,அவனோ வண்டியை திருப்ப,

“நீ வரலை சத்யா….”என்று கயல் கேட்க,

“எனக்கு வேலை இருக்குனு  சொன்னேன்ல…நீ இப்போதைக்கு இங்கேயே இரு….”என்றுவிட்டு கிளம்ப பார்க்க அவனின் வண்டியின் முன் நின்று அவனின் வண்டி சாவியை பிடுங்கி கொண்டவள்,

“என்ன நினைச்சிக்கிட்டு இருக்க நீ….நான் முக்கியமான விஷயம் பேசனும்னு சொல்லுறேன்….நீ…”

“ஏய்….”என்று சத்யாவின் கத்திய கத்தலில் கயல் அமைதியாகிவிட,

“என்னடீ…காலையிலேயே கடுப்ப கிளப்பக்கிட்டு…நான் ஏற்பனவே மண்டை காஞ்சு வந்திருக்கேன்….இதுல நீ சும்மா இல்லாம பெரிய உண்மை விளம்பி மாதிரி பேசியிருக்க…உன்னை…”என்று பல்லை கடித்து,

“நீ பண்ண வேலைக்கு தான் நான் அவங்ககிட்ட பேச்சு வாங்கிட்டு வந்திருக்கேன்…உன்னால எல்லாம் உன்னால….என்று வண்டியில் குத்திவிட்டு ப்ச் ரோட்டுல என்னை கை ஓங்க வச்சிடாத….நீ வீட்டுக்குள்ள போ….நான் வந்து கூப்பிடுற வரைக்கும் நீ இங்கேயே இரு….”என்று கூறி கயலின் கையில் இருந்த சாவியை பிடுங்கி கொண்டு அவளின் பதிலை எதிர்பாராமல் சென்றுவிட்டான்.கயல்விழிக்கு என்ன நடந்தது என்று புரியவே சிறிது நேரம் ஆனது.கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவள் மனதில் ரணத்துடன் தன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!