Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கொல்லும் நிலவு கொஞ்சும் சூரியன்

கொல்லும் நிலவு கொஞ்சும் சூரியன் 3

3

வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் கடந்த நிலையில் அப்பா அன்று அதிக உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தார்.  காலை உணவின் போது தான் அவர் உற்சாகத்தின் காரணம் தெரிந்தது.

    மாப்பிள்ளை வீட்டினர் இன்னும் இரண்டு நாட்களில் வருவதாக சொல்லிக் கொண்டிருந்தார்.

    அதன் பிறகு துணி எடுக்க கடைக்கு போக வேண்டும் என்றும், திருச்சியில் உள்ள பெரிய கடையில் தற்போது நிச்சயதார்த்தத்திற்கு புடவை எடுப்பதாகவும்.,   காஞ்சிபுரத்தில் சென்று கல்யாணத்திற்கு துணிகள் வாங்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்.



Advertisement

     உணவில் இரண்டு வாய் சென்றிருக்க மூன்றாவது வாயை.,  வாய்க்கும் வைக்காமல் கையில் வைத்தே இட்லியை கூலாக மாற்றிக் கொண்டிருந்தாள்.

      துளசி நிமிர்ந்தே பார்க்காமல் இருந்தாள். சற்று நேரம் கழித்து மெதுவாக உண்ணத் தொடங்கியவளோ உணவைக் கொறித்த படியே யோசனைக்குள் சென்றாள். (chl.ca)

        இந்த திருமணத்தை நிறுத்த எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வேன், என்று மனம் உறுதி எடுத்தது.

Advertisement

     இந்தியா வந்து சேரும் வரை ஒரு பயமும் பதட்டமும் இருந்தது என்னமோ உண்மைதான்.,  ஆனால் இப்போது பயம் மனதிற்குள் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் தைரியமாக இருக்க தொடங்கி இருந்தாள்.

Advertisement

       ஏனோ தன்னால் இதிலிருந்து தப்பிக்க முடியும் என்ற எண்ணம் மட்டும் அவள் மனதில் வலுவாக இருந்தது.

     தப்பிக்க வேண்டும் ஆனால் எப்படி என்பது தான் அவளுக்கு தெரியவில்லை.,  இத்தனை தூரம் மனதில் நம்பிக்கை இருக்கும் போது கடவுள் தனக்கு நிச்சயமாக வழி காட்டுவார் என்ற எண்ணத்தோடு தான் இருந்தாள்.

        அவ்வப்போது நண்பர்களிடம் பேசிக் கொண்டாலும் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.,  எதுவாக இருந்தாலும் தான்  மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.,  பின்பே மற்றவர்களிடம் அதைப் பற்றி சொல்லலாம்., ஆனால் இந்த வீட்டில் இருக்கும் வரை நண்பர்களிடமும் தோழிகளிடமும் கூட தன்னால் மனம் விட்டு பேச இயலாது என்பது அவள் அறிந்ததே.,

Advertisement

      ஏனென்றால் அவ்வப்போது அம்மாவும் அப்பாவும் அவளை கண்காணிப்பதை அவள் புரிந்து கொண்டாள். பாட்டி தாத்தாவிடம் கூட அதிகமாக பேச முடியாத சூழ்நிலை அவர்களிடம் பேசினாலாவது ஏதாவது வழி கிடைக்குமா என்று பார்த்தால்.,  பாட்டி தாத்தாவின் அருகில் இவள் சென்று அமர்ந்து பேச தொடங்கினாலே யாராவது வந்து இவர்களோடு அமர்ந்து கொள்வதை இப்போது வழக்கமாக வைத்துள்ளனர்.

      எனவே இப்போது எல்லாம் அவர்களிடம் கூட சாதாரண பேச்சுவார்த்தையோடு நிறுத்திக் கொள்கிறாள்.

அவ்வப்போது பின்புறம் உள்ள தோட்டத்தில் சுற்றிப் பார்ப்பது வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தாள். தினமும் அந்த பக்கம் செல்ல அங்கிருக்கும் பறவைகளின் ஒலி அவள் மனதிற்கு இதமாக இருந்தது.,

     அங்கிருக்கும் காற்று மட்டுமே அவளுக்கு சுதந்திரமாக உணர்வைக் கொடுக்க.,  தன்னை இப்படியே விட்டு விட்டால் கூட போதும் இங்கேயே இருந்து கொள்ளலாம் என்ற எண்ணம் மனதிற்குள் வலுக்கத் தொடங்கியது.

      இந்தியா வந்து சேர்ந்த பிறகு அவளிடம் இருந்த பாஸ்போர்ட்டை அப்பா வாங்க மறந்து இருந்தாரா.,  அல்லது இங்கிருந்து இவளால் செல்ல முடியாது என்று நினைத்தாரோ என்னவோ.,  பாஸ்போர்ட் அவள் கையில் இருந்தது.

      அதை பற்றி மறந்தது போல எடுத்து.,  தன் கையில் எப்போதும் செல்போனோடு கொண்டு செல்லும் பர்சில் வைத்து பத்திரப்படுத்தினாள்.

      அதையும் மறைத்து வைத்தாள். செல்போனில் இங்கு வந்த பிறகு நண்பர்களுடன் பேசுவதற்காக வேண்டும் என்று வந்த மறுநாளே அடம்பிடித்து இங்குள்ள சிம்கார்டு ஒன்றை வாங்கி போட்டவள்.,  நெட் வசதி வேண்டும் என்று அடம் பிடித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து  கொண்டாள்.

     யாரிடமும் தொலைபேசியில் பேசவில்லை என்றாலும் அவ்வப்போது நண்பர்களோடு பேசுவது வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிய தான் செய்யும்.,

     பொதுவாக வீடியோ கால் என்றால் அவர்களுடைய இரவு நேரத்தில் அழைக்கும் போது.,  இங்கே அது நடு இரவாக இருக்க.,  தன் அறையில் இருந்தே பேசிக் கொண்டாள்.,

     சத்தத்தை ஹெட் போன் போட்டு அடக்கி இருந்ததால் வீட்டினில் யாருக்கும் தெரியாமல் தான் அவர்களை பார்ப்பதும் பேசுவதும்.,  மற்றபடி அம்மாவின் முன்னிலையில் பேசுவது சாதாரண வாட்ஸ் அப் காலில் பேசிக் கொள்வாள்.

       நண்பர்கள் யாருக்கும் இவளைஎப்படி தப்பிக்க வைப்பது என்று புரியாத சூழலில்.,

     இவளோ அப்பா சொன்ன அந்த துணி எடுக்கும் நாளை முடிவு செய்தாள்.

     துணிக்கடையிலிருந்து தப்பித்து செல்ல ஏதாவது வழி இருந்தால் நன்றாக இருக்கும். இந்திய ரூபாயாக தன்னிடம் எதுவும் கிடையாது எப்படி செல்வது  என்று யோசித்தவளுக்கு தன்னிடம் கார்டு இருப்பது நினைவு வந்தாலும் அதை வைத்து டிக்கெட் போட்டுக் கொள்ளலாம்.,

        ஆனால் இங்கிருந்து பஸ்ஸில் செல்வதோ, வேறு எந்த டிரான்ஸ்போர்ட்டில்   ஏர்போர்ட் செல்வதாக இருந்தால்  கூட அவளுக்கு டிக்கெட் எடுக்க பணம் வேண்டுமே’ என்ற யோசனை யோடு எப்படி உதவி கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

மாப்பிள்ளை வீட்டார் வருவதற்கு முதல் நாள் வீட்டில் பேசிக் கொண்டிருக்க.,

      இவளோ “எனக்கு பிடித்த புடவையாக இருக்க வேண்டும்” என்றாள்.

      அவள் அப்பாவோ “அதுதான் நாங்கள் எல்லோரும் வருகிறோமே” என்று சொன்னார்.

     இவளோ “இல்லை எனக்கு பிடித்தது போல சிலவற்றை எடுக்க வேண்டும். அதனால் எனக்கு தனியாக கையில் கொஞ்சம் பணம் தாங்க” என்று கேட்டாள்.

    “அவள் கல்யாணத்திற்கு டிரஸ் தானே எடுக்க கேட்கிறா”., என்று அவள் அம்மாவும் சொன்னார்.

     அவள் கையில் தனியாக சிறிய தொகையாக இருந்தாலும் கையில் ஒரு தொகையை கொடுக்க., அதுவே அவளுக்கு போதுமானதாக தோன்றியது.

     ஏனெனில் முதல் நாள் தான் திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்கு பிளைட் டிக்கெட் விலையை பார்த்து வைத்திருந்தாள்.

            சரி இது போதும் இங்கிருந்து சென்னை செல்ல., அதன் பிறகு சென்னை சென்று அங்கு தன் நண்பர்கள்  யாரையாவது வைத்து ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் போட்டுக் கொள்ளலாம் என்ற தைரியத்தோடு அமர்ந்திருந்தாள்.

      நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கை வேறு விதமாக அல்லவா சென்று விடும்.,  அது தெரியாமல் தான் அனைவரும் அவரவர் மனதிற்கு தோன்றியபடி பலவிதமான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறோம்.

       துளசியும் அப்படித்தான் அவளுக்கு தோன்றிய திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்க மாப்பிள்ளை வீட்டினரும் வந்து சேர்ந்ததாக தகவல் வந்தது.

    திருச்சியில் புகழ்பெற்ற ஹோட்டலில் அவர்களை தங்க வைத்துவிட்டு வந்து பெருமை பேசிக் கொண்டிருந்த அப்பாவை பார்க்கும் போது.,

      ‘இவரை எல்லாம் என்ன செய்வது’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டாள்.

   அவர்கள் நேராக துணி எடுக்கும் கடைக்கு வருவதாகவும்.,  மறுநாள் காலை அங்கு சென்றால் போதும் என்றும் பேசிக் கொண்டிருந்தார்.

        அவள் தந்தையின் செல்போனுக்கு மாப்பிள்ளை இடமிருந்து அழைப்பு வந்திருப்பதாக சொல்லி அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே.,  “துளசி மாப்ள பேசணுமாம்”, என்று சொல்லி போனை அவளிடம் கொடுத்தார்.

         கடுப்போடு போனை வாங்கியவள் அமைதியாக இருந்தாள்.   அந்தப்பக்கமோ “என்ன ஆச்சு இங்க வந்து அதை மைண்ட்ல  தான் இருக்கியா.,  உன்னோட மைண்ட் செட் மாத்திக்கோ.,  இன்னும் பத்து நாளில் கல்யாணம்.,  இங்கே எல்லா ஏற்படும் பண்ணியாச்சு.,  திருச்சில வச்சுதான் கல்யாணம்  நடக்குது.,  கல்யாணம் முடிஞ்ச உடனே ஸ்ரீரங்கம் போயிட்டு இரண்டு நாள் சென்னையில் இருந்துட்டு அப்படியே லண்டன் கிளம்புறோம்” என்று சொன்னான்.

  இவளோ வாய்க்குள் கண்ட வார்த்தைகளையும் போட்டு அவனை திட்டிக் கொண்டிருந்தாள்.

அது அறியாதவனோ இவள் இங்கு வந்த பிறகு அமைதியாக இருப்பதாக நினைத்து “ரொம்ப மாறிட்ட போல., பதிலுக்கு பதில் எதுவுமே பேச மாட்டேங்கற” என்று கேட்டான்.

இவளோ  மனதிற்க்குள்., மகனே கைல கிடைச்ச குத்து குத்துன்னு குத்தியே  கொன்னுருவேன்.

     இங்கு யாருமே சப்போர்ட்க்கு ஆள் கிடைக்கலையே என்ற கோபத்தோடு அவனை மனதிற்கு வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

அவன் போனை கட் செய்த பிறகு ‘லூசு மாக்கான்’ என்று திட்டிக் கொண்டே தோட்டத்திற்குள் சென்றவளுக்கு வந்த இரண்டு நாளில் அவள் யோசித்து பார்த்த விஷயங்களை நினைத்துக் கொண்டிருந்தாள்.

  இரண்டு நாளில் பகலில் பாட்டி படம் பார்த்துக் கொண்டிருக்க.,  இவளும் அவர்களோடு சேர்ந்து அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ தமிழ் படம் ஓடிக் கொண்டிருக்க,  அவளும் அதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அப்போது நிச்சயதார்த்தத்தை எப்படி நிறுத்துவது என்று யோசித்து கொண்டு இருந்தவளுக்கு அதில் கல்யாண பெண் தன் காதலனை வைத்து நிச்சயதார்த்தை  நிறுத்த கலாட்டா செய்வது போல வர.,

     ‘இது நல்ல ஐடியாவா இருக்கே.,  ஆனா நான் காதலனுக்கு எங்க போவேன்’ என்று யோசித்தவள்.,

    ‘இது செட் ஆகாது நாமளே கத்தி சத்தம் போட்டு எல்லாத்தையும் நிறுத்திடுவோம்., வர்ற பெரியவங்க நமக்கு சப்போர்ட் பண்ண ஒரு நாலு பேருக்கு கிடைக்க மாட்டாங்களா’ என்று யோசித்தவள்.

    ‘இல்ல அப்பாக்கு பயந்துட்டு யாரும் பேசலை என்றால் என்ன பண்ண’ என்று யோசித்தவள்.

      ‘பேமிலி சண்டையாமே இல்லாட்டி அத்தை பையன’ என்று யோசித்தவள்.

       ‘அத்தைக்கு பையன் இருக்கா என்ன’ என்று யோசித்தாள்.

     பின்பு ‘இருந்தாலும் சின்ன பையனா இல்ல இருப்பான்.,  நான் பிறந்ததுக்கு அப்புறம் தான் கல்யாணம் ஆச்சுன்னு ஒரு நாள் அம்மா பேச்சு வாக்குல சொன்னாங்களே.,  நீ பிறந்து சின்ன பிள்ளையா இருக்கும் போது உங்க அத்தைக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொன்னாங்களே.,  அப்ப பையனும் சின்ன பையனால்ல இருப்பான்’ என்று தனக்கு தானே பேசிக் கொண்டவள்.

      சின்ன பையனா இருந்தா என்ன., நம்மள விட ரெண்டு வயசு இல்ல மூன்று வயசு தானே கம்மியா இருப்பான்.,  அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டா.,  ச்சீ ச்சீ., புத்தி போறத பாரு’., என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.

      ‘சரி ஹெல்ப் கூட கேட்க முடியாது., அவன் எப்படி இருப்பான்னு கூட தெரியாது., எப்படி இருந்தா என்ன’ என்று அவளை அவள் மனசாட்சியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

         அதன் பின்பு தான் புடவை எடுக்கப் போவதை பற்றி அப்பா பேசியவுடன் அவளுக்கு தோன்றியது.   ‘புடவை எடுக்கும் கடையிலிருந்து வெளியேறி விடுவது’ என்று ஆனால் யாரிடம் உதவி கேட்பது என்று யோசிக்கும்போது அப்போது அங்கு நடந்த செய்திகள் கேட்கும் போதும்.,  இங்கு நடக்கும் விஷயங்களை பார்க்கும் போதும்.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!