Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அன்பில் இணைந்த இதயங்கள்

அன்பில் இணைந்த இதயங்கள்….22

அன்பில் இணைந்த இதயங்கள்…22

தனது படுக்கையில் அமர்ந்து சத்யாவை மனதில் திட்டியபடி இருந்தாள் கயல்விழி.இதோ அவள் வீடு வந்து ஒரு வாரம் கடந்துவிட்டது.அதுவும் கடந்த மூன்று நாட்களாக அவள் அவசியமின்றி அறைவிட்டு வெளியில் செல்லுவதில்லை.ஏன் மாப்பிள்ளை வரவில்லை என்று பெற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவருக்கு வேலை என்று சமாளித்து வைத்தாள்.ஆனால் பார்வதிக்கு மகளின் முகத்தில் தெரிந்த வாட்டம் ஏதோ சரியில்லை என்பதை உணர்த்திவிட்டது.அவர் இரண்டொரு முறை கேட்டு பார்த்தார் ஆனால் கயலின் பதிலில் மாறுதல் இல்லை ஆனாலும் விடாமல் அவர் கேட்க,

“ஏன்மா….நான் வீட்டுக்கு வந்தா ஏதோ சண்டை போட்டு தான் வந்திருப்பேன்னு நீங்களாவே முடிவு பண்ணிடுவீங்களா…”என்று கயல் கோபமாக கத்த,

“ஏன் பாரூ அவ கிட்ட இப்படி பேசி அவளை சங்கடபடுத்துற….நீ விடுடா…”என்று குரு கூறிய பின் தான் பார்வதி விட்டார் ஆனால் பெண் வந்து இருநாட்கள் ஆகியும் மாப்பிள்ளை வராததது அவருக்கு மனதுக்கு உறுத்தலாகவே இருந்ததது.அடுத்த இரு நாட்களில் மூன்றாவது மகள் வரும் வரை தான் அவரின் நினைப்பு கயலின் மீது இருந்தது.



Advertisement

நந்திதா கருத்திருத்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தது.அவளுக்கு உடல் பலவீனமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறிவிட அவளை தாய் வீடு அனுப்பி வைத்தான் ரவி.நந்திதாவுடன் அவளை விட வந்த அவளின் மாமியார் வீட்டில் கயலை கண்டவுடன் என்ன நினைத்தாரோ மகனிடம்,

“இன்னும் இரண்டு வாரம் தானப்பா இருக்கு ஐஞ்சா மாசம் மருந்து கொடுக்குறதுக்கு….அதனால நான் இருந்துட்டே வரேன்….”என்று கூறிவிட்டார்.ரவியும் சரி என்று விட்டுவிட்டு சென்றுவிட்டான்.அவர் வந்ததில் இருந்து அவர் கயலை ஜாடையாக வம்பிழுத்துக் கொண்டு தான் இருந்தார்.கயலும் முன்பு போல் எல்லாம் இல்லை பதிலுக்கு பேசிவிடுவாள் தான் ஆனால் இப்போது அவள் இருக்கும் நிலை அவளை பேசவிடவில்லை.

அறையில் தனது பேசியை எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டு இருந்தாள் இந்த ஒருவாரமாக அவள் இதை தான் செய்து கொண்டு இருக்கிறாள்.தன்னவனிடம் இருந்து அழைப்பு வருமா என்று காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது அவளுக்கு.இதில் அவள் கருவுற்றிப்பதை பற்றி யாரிடமும் கூறவில்லை.முதலில் கூறிவிடலாம் என்று இருந்தவளுக்கு அவன் தனது பேச்சை கேட்காமல் விட்டு சென்றதில் இருந்து அவனை தவிர வேறு யாரடமும் கூற போவதில்லை என்ற உறுதியுடன் இருந்தாள்.

Advertisement

“டொக்….டொக்…”கதவு தட்டப்பட,கயல் தன் நினைவுகளில் இருந்து மீண்டவள் கதவை திறக்க,பார்வதி நின்றார்,

Advertisement

“என்னம்மா….”என்றாள் சோர்வுடன்,மகளின் சோர்வை கண்டவர்,

“ஏதோ பிரச்சனை என்னனு என்கிட்ட சொன்னா என்னடீ…ஏன் இப்படி உனக்குள்ளேயே மருகுற….”என்று அவர் ஆரம்பிக்க,சலித்து போனது பெண்ணிற்கு இன்னும் எத்தனை தான் நான் தாங்க வேண்டும் என்று நினைத்தவள் மனதும்,முகமும் கசங்கிவிட,பார்த்துக் கொண்டிருந்த பார்வதி கண்கள் கலங்கிவிட,

“ப்ச்….விடுடாமா….நீயா எப்ப நினைக்கிறியோ அப்ப சொல்லு….இப்படி முகத்தை வைக்காத மனசு கலங்குது….இந்தா இதை குடி….சரியா சாப்பிடவும் மாட்டேங்குற….”என்றவர் அவள் கையில் பழச்சாரை திணிக்க வாங்கி கொண்டவள்,

Advertisement

“ம்மா….நிஜமா….அவருக்கு வேலை தான்….எனக்கு நான்….”என்று அவள் கூற முடியாமல் முழுங்க,

“சரிடீ….நான் கேட்கலை….போதுமா….இப்ப ஜீஸை குடி….”என்றுவிட்டு அவர் நகர,கயலும் அன்னை கொடுத்த ஜீஸை குடித்தபடி வரவேற்பறைக்கு வந்தாள்.அப்போது தான் நந்திதா குளித்து வந்திருக்க,

“ஐ க்கா….உனக்கு மட்டும் ஜீஸ்ஸா எனக்கு கொடு…”என்று அவள் விளையாட்டிற்கு கயலின் கைகளில் உள்ளதை பிடுங்க,

“ம்ஹம்….ஒண்ணுமில்லாதவளுக்கு எல்லாம் உங்க அம்மா செய்வாங்க….ஆனா மாசமா இருக்குற உனக்கு செய்ய வலிக்குது போல….என்ன இருந்தாலும் இந்த பொண்ணுதான செல்லம் அதான்….”என்று நந்திதாவின் மாமியார் நீட்டி முழங்க,

“அவளுக்கும் தான் போட்டு வச்சேன் மதனி…அவ குளிக்க போயிட்டா….இந்தா நந்து….”என்று பார்வதி அவளிடம் கொடுக்க,கயல் அமைதியாக தாயின் பின்னே சென்றாள்.அவளுக்கு புரிந்தது இவர் வேண்டும் என்று தான் பேசுகிறார் இவர்களை போன்றவர்களிடம் பேசி வாக்குவாத்தில் ஈடுபடுவதை விட தூரம் செல்வதே மேல் என்று முடிவுக்கு வந்துவிட்டாள்.அதனாலே அவரைக் கண்டாலே கயல் அந்த இடத்தில் இருக்கமாட்டாள் இருந்தும் அவளை விடாமல் அவர் துரத்திக் கொண்டு இருக்கிறார்.அவளின் அமைதி உடைபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அவர் அறியவில்லை.

சமையல் அறையில் அன்னைக்கு தேவையான உதவிகளை கயல் செய்து கொண்டிருக்க,மெல்ல வந்த நந்திதா,

“க்கா….சாரிக்கா….நான் சும்மா விளையாட்டுக்கு தான் பண்ணேன்….”

“ஏய் நந்து குட்டி….நான் எதுவும் நினைக்கலைடா….நீ இதையெல்லாம் பெரிசா நினைக்காத….”என்று கூற,

“ப்ச்….இவங்க என்கூட இருப்பாங்கனு எனக்கு தெரியாது….இப்படி வந்து தங்கி உன்னையும் நிம்மதி இல்லாம பண்ணுறாங்க….அதான் கஷ்டமா இருக்கு….நீ ஏன் அக்கா அமைதியா இருக்க….நீயும் திருப்பி கேட்க வேண்டியது தான…..”அதற்கு கயல் பதில் கூறும் முன் பார்வதி,

“நந்து….அவங்களே கயல் எப்ப எதிர்த்து பேசுவா அதை வச்சி அவளை மட்டம் தட்டலாம்னு தான் வாய்ப்பு தேடி அலையிராங்கா…அதுக்கு நாமளே அவங்களுக்கு வாயப்பை உருவாக்கிட கூடாது புரியுதா….நீ போ….அவ பார்த்துபா…”என்று பார்வதி மகளை அனுப்பி வைத்தார்.

“என்னால எல்லாருக்குமே கஷ்டம் அப்படி தான ம்மா….”என்று கயல் வருத்ததுடன் கூற,

“அப்படியெல்லாம் இல்லைடீ….எல்லாரும் தப்பு பண்ணுறது இயல்பு தான்….”என்றவரை தடுத்த கயல்,

“ஆனா பொண்ணுங்க பண்ணா மட்டும் அதை குத்தி குத்தி காட்டி அவளை வாழ விட மாட்டங்க….அப்படி தானம்மா…அன்னைக்கு நீ இதை தான சொன்ன…”என்றவளின் குரல் உடைந்து விட,அவளை தன்னை நோக்கி திருப்பிய பார்வதி,

“கயல் என்ன உன் மனசை உறுத்தது…நேத்து மாப்பிள்ளை கிட்ட பேசினோம்….அவரும் ஒண்ணும் சொல்லலை….”என்று கூற,

“என்ன அவர் உன்கிட்ட பேசினாரா….”என்று கயல் அதிர்ந்து கேட்க,

“ம்ம்….நான் தான் அப்பாவை பேச சொன்னேன்…நீ வெசனப்படாத நாங்க சாதாரணமா பேசிட்டு வச்சிட்டோம்….அவருக்கும் ஏதோ வேலை போல பேச நேரமில்லை மாமா அப்புறம் பேசுறேன்னு சொல்லிட்டு வச்சிட்டார்….”என்று கூற கயலிற்கு மனதில் சற்றி நிம்மதி பரவியது.எங்கே தன் மீது உள்ள கோபத்தை இவர்களிடமும் காட்டிவிடுவானோ என்று தான் பேச வேண்டாம் என்று கூறியிருந்தாள்.இப்போது தாய் பேசியதாக கூறவும் உள்ளுக்குள் பயம் தான் அவன் வேலை என்று கூறியதில் மனதில் அமைதி பரவியது.

“ஏய் கயல்….”என்று பார்வதியின் குரலில் தெளிந்தவள்,

“ஆங்…என்னம்மா…”

“என்னடீ…அப்பப்ப ஏன் இப்படி எதையோ யோசிச்சிக்கிட்டே இருக்க…”என்று பார்வதி கேட்க,

“ஒண்ணுமில்ல மா…நான் கொஞ்ச நேரம் படுக்கவா…எனக்கு தூக்கமா வருது….”என்றவள்,

“காய் எல்லாம் நறுக்கி வச்சிட்டேன்….பருப்பு வேக வச்சிட்டேன்….”என்றவளை தடுத்து,

“நான் பார்த்துகுறேன் நீ போ….போய் படுத்துக்க…”என்று பார்வதி கூறி கொண்டிருக்க,

“ம்க்கும்….இப்ப தான எந்திரிச்ச அதுக்குள்ள தூக்கம் வருதா….நல்லா இருக்கு…இப்படி இருந்தா எப்படி புகுந்த வீட்டுல வச்சிருப்பாங்க…அதான் துரத்திவிட்டாங்களா….”என்று நந்திதாவின் மாமியார் சமையல் அறைக்கு வந்தபடி கேட்க,

“அது அவங்களுக்கும் எனக்கும் உள்ள விஷயம் உங்களுக்கு என்ன வந்தது….ம்மா…நான் தூங்க போறேன்…சாப்பாடு ரெடியானதும் என்னை எழுப்பு….”என்றுவிட்டு அவள் செல்ல,

“என்ன மதனி இது….இப்படி உங்க பொண்ணு மரியாத இல்லாம பேசிட்டு போகுது….நீங்களும் அமைதியா நிக்குறீங்க….”என்று கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பிரச்சனையை தொடங்க,

“அவளுக்கு உடம்பு சுகமில்லை மதனி….அதான் நீங்க ஏன் இப்படி நிக்குறீங்க…உட்காருங்க….இந்தாங்க காபி குடிங்க….”என்று அவரின் வாயை அப்போதைக்கு அடக்கி வைத்தார் பார்வதி.ஆனால் மகள் இனி அமைதியாக இருக்கமாட்டாள் என்பது மட்டும் புரிந்தது அவருக்கு.இம்முறை மகளின் மீது தவறில்லை என்பதால் அவளின் புறம் நின்றார் அன்னை.

தனது அறைக்குள் நுழைந்ந கயலிற்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.இருக்கிற கோபத்திற்கு எதையாவது எடுத்து உடைத்துவிடலாமா என்று தோன்றியது.அருகில் இருந்த தண்ணீர் பட்டிலில் உள்ள நீரை அருந்தியவளுக்கு அதன் குளிர்ச்சி தொண்டையில் இருந்த வெண்மையும் மனதில் இருந்த வெண்மையும் சேர்த்தே குறைத்தது.

“என்ன பேச்சு பேசுது இந்தம்மா…நானும் பேசக்கூடாதுனு பொறுமையா போனா…ரொம்ப பேசுது….இனி பேசட்டும் இருக்கு….வாயை உடைச்சிடுறேன்…”என்று நினைத்துக் கொண்டவளுக்கு கணவனின் நினைவும் வர,

“இந்த போலீஸ்க்கு பொண்டாட்டிக்கிட்ட பேச நேரமில்லையா இரு…உன்னை என்ன பண்ணுறேன் பாரு….”என்றுவிட்டு,அவனிற்கு பேசியில் அழைக்க அழைப்பு எடுக்கப்படவில்லை ஆனால் கயல் விடாமல் அழைக்க அவன் அழைப்பை துண்டிக்க தொடங்கினான்.

“இது….இது தான வேண்டும்….சத்து மாத்திரை…உனக்கு எல்லாம் பழைய கயல் தான் லாயக்கு…”என்றவள்,மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்க,ஒருகட்டத்தில் அவன் பேசியை அணைத்து வைத்துவிட்டான்.கயலிற்கு மனதில் கோபம் எரிமலையாக தகித்தது.என்ன செஞ்சிட்டேன்னு இப்படி என்னை வதைக்கிறான் என்று நினைத்தவள் படுக்கையில் விழ அவளின் கண்ணீர் தலையணையை நினைத்தது.

காவல் நிலையத்தில் தனது பேசியை பார்த்துக் கொண்டிருந்த சத்யாவின் முகத்தில் கீற்றாக புன்னகை.

“இப்ப தான் என்னை தேடனும்னு உனக்கு தோணுது….இன்னும் இரண்டு நாள் இப்படியே இரு…இல்லாத வேலையெல்லாம் செஞ்சிட்டு இவ போயிட்டா…நான் தான் மாட்டிக்கிட்டு முழிக்குறேன்…”என்றவன் தனது பணியில் கவனத்தை செலுத்த தொடங்கினான்.

அவனுக்கு உண்மையில் வேலை அதிகம் தான் போதை பொருட்களை கடத்தி விக்கும் கும்மலை இன்னும் இரு தினங்களில் பிடிக்க வேண்டும்.அதன் தலைமை பொறுப்பில் அவன் இருக்க மற்ற விஷயங்களில் அவனால் கவனத்தை செல்லுத்தமுடியாத சூழ்நிலை.ஆனால் அவன் விட்ட அந்த இரு தினங்களில் அவனின் மனைவி மிகவும் மனதளவில் உடைந்துவிடுவாள் என்பதை அவன் அறியவில்லை.

அடுத்த இரு தினங்களில் அந்த போதை பொருள் கும்பலை பிடித்து கோர்ட்டில் நிப்பாட்டும் வரை சத்யா ஓயவில்லை.அவனின் அதிரடியான நடவடிக்கையில் அதில் சம்மந்தப்பட்ட அனைவரும் பிடிப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.அவனின் பணியில் அடுத்த பெரிய சாதானை இது.அவனின் செயலை பாராட்டி தொலைகாட்சிகளிலும்,பத்திரைக்கைகளிலும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.அதை வாசித்துக் கொண்டிருந்த குரு,

“பார்த்தியா பாரூ…நம்ம மாப்பிள்ளை எவ்வளவு பெரிய காரியம் பண்ணியிருக்காரு….அதான் அன்னைக்கு நம்மகிட்ட பேசகூட நேரமில்லைனு சொன்னாரு போல….”என்று கூற,பார்வதியும் அவரின் கூற்றை அமோதிப்பதை போல தலையாட்டினார்.ஆனால் அவரின் நினைவு எல்லாம் இரு தினங்கள் முன்பு கயல்விழியின் மாமியாரின் வீட்டுக்கு சென்று வந்திலேயே நின்றது.

நந்திதாவின் ஐந்தாம் மாதம் மருந்து கொடுக்கும் விழாவிற்கு அழைக்க சென்ற போது லிங்கமும்,அமிர்தாவும் அவர்களை நல்ல முறையில் தான் வரவேற்றனர் ஆனால் பார்வதிக்கு அமிர்தாவின் முகத்தில் ஏதோ குறைவது போலவே தெரிந்தது.அதோடு அவர் கயலை பற்றி எதுவும் விசாரிக்காதது பார்வதிக்கு மனதில் ஏதோ நெருடலை ஏற்படுத்தியிருந்தது.அதன் நினைவிலேயே அவர் உழன்டு கொண்டிருக்க,

“கயல்….இன்னைக்கு பேப்பர் பார்த்தியாடா……”என்று குரு கேட்க,

“பார்த்தேன்ப்பா…”என்றவள் சோர்வாக எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.குருமூர்த்தி வீட்டில் இருந்தால் நந்திதாவின் மாமியார் அறையை விட்டு வெளியில் வரமாட்டார்.குருவின் முன்னே நல்லவர் வேடம் போடுவார் அதனால் குருவின் தலை மறையும் வரை அவரின் தலை வெளியில் தெரியாது.

“என்னடா என்னவோ போல இருக்க…என்ன ஆச்சு…ஏன் பாரூ இவ இளைச்சு போன மாதிரி இருக்கா….”என்று குரு கேட்க,பார்வதியும் அப்போது தான் மகளின் முகத்தை ஊன்றி கவனிக்க அவருக்கு தாயாக சந்தேகம் எழுந்தது.அதை அவர் கயலிடம் தனியாக இருக்கும் பொழுதில் கேட்க அவளோ மழுப்பலாக பதில் கூறி சமாளித்துவிட்டாள்.

கயல்விழி அன்று சத்யாவிடம் அழைத்தது தான் அதன் பிறகு அவனை அழைக்க முற்படவில்லை.மனதில் கோபம் அனலாக கனன்று கொண்டு இருந்தது.இனி அவனாக கூப்பிடும் வரை அந்த வீட்டிற்கு அவள் செல்ல போவது இல்லை என்று முடிவுடன் இருந்தாள்.

சத்யாவின் வீட்டில் லிங்கம் யோசனையாக அமர்ந்திருந்த அமிர்தாவிடம்,

“என்ன அம்மு…என்ன யோசனை….”என்று கேட்க,அவரோ ஒன்றுமில்லை என்று தலையாட்டினார்.கயலை அவளின் வீட்டில் விட்டுவிட்டேன் என்று மகன் கூறியதில் இருந்தே அமிர்தாவின் முகம் இப்படி தான் இருந்தது.

மருமகள் சென்றதில் இருந்து மகனும் இதோ இன்று வரை வீட்டில் தங்கவில்லை.பணியில் மகனின் செயலை கண்டு ஊர் மொத்தமும் அவர்களை கொண்டாட,கொண்டாட வேண்டியவர்களின் மனமோ எதையோ இழந்ததை போல தவித்துக் கொண்டிருக்கிறது.இதற்கு ஒரே தீர்வு கயல்விழி தான் என்பதை லிங்கம் உணர்ந்தும் இருந்தார்.மகன் கயல்விழி இல்லாமல் வீட்டிற்குள் வரமாட்டான் என்றும் புரிந்து போனது அவருக்கு.அதனால் அவர் அமிர்தாவிடம்,

“அம்மு ஒண்ணு சொன்னா கோச்சிக்க கூடாது…அன்னைக்கு சத்யா சொன்னது போல நாம தான் மருமகளை தப்பா புரிஞ்சிகிட்டோம்னு நினைக்கிறேன்…..”என்று கூற அவரை நிமிர்ந்து பார்த்த அமிர்தா,

“என்னை பார்த்தா கொடுமை படுத்துற மாமியார் மாதிரி இருக்காங்க…”என்று கலங்கிய குரலில் கேட்க,

“அம்மு…என்னடா இது….என்ன பேச்சு இது….”என்று லிங்கம் சற்று அதட்டலாகவே கூற,

“பின்ன இப்ப நான் என்ன செஞ்சிட்டேன்னு உங்க பிள்ளை கயலை அவங்க வீட்டுல விட்டுட்டு வந்துட்டான்….எனக்கு கோபம் தான் கயல் மேல அதுக்காக நான் மருமகளை வீட்டை விட்டு துரத்திடுவேனா….எனக்கு மட்டும் கயல் மேல அக்கறை இல்லையா….எங்க கோபத்துல அவளை ஏதாவது காயப்படுத்திடுவேனோனு தான் நான் பேசாம ஒதுங்கி போனேன்….”என்றவர் உடைந்து அழவே துடங்கிட,லிங்கம் தான் அவரை தேற்ற வேண்டியதாகிற்று.

“இங்க பாரு அம்மு….உன் மகன் சரியான கேடி…அவனுக்கு நீயும் வேணும் அவன் பொண்டாட்டியும் வேணும்…அதனால தான் இப்படி பண்ணியிருக்கானு நான் நினைக்கிறேன்…நானுமே நீ கேட்ட மாதிரி அவன் கிட்ட கேட்டேன் அப்ப அவன் என்கிட்ட கயல் வீட்ல இருந்த அம்மாக்கு கோபம் குறையாது அம்மா கோபம் குறையிற வரை அவ அவங்க வீட்டுல இருக்கட்டும்னு சொன்னான்….எனக்கு முதல்ல புரியலை இப்ப புரியுது…நீ கயலை மன்னிச்சிட்டேன்னு சொன்னாலே அவன் மருமகளை கூட்டுகிட்டு வந்துடுவான்….”என்று அவர் மனைவிக்கு எடுத்துரைக்க,

“ஓஹோ…இது தான் விஷயமா….நீங்களும் இத்தனை நாளா ஏன் என்கிட்ட அவன் சொன்னதை சொல்லல???”என்று அமிர்தா கேட்க,

“நான் சொல்லாம்னு தான் இருந்தேன்…ஆனா உன் மனசு எப்படி இருக்குனு எனக்கே புரியலை…அதோட உனக்கு மனசு மாற நேரம் கொடுக்கனும் தான் அமைதியா இருந்தேன்….”என்றவரின் கூற்றை ஆமோதித்த அமிர்தா,

“இனி அவன்கிட்ட என்ன நாம சொல்லுறது….நாளைக்கு நாம கயல் தங்கச்சி விசேஷத்துக்கு போறோம் நம்ம மருமகளை கூட்டுகிட்டு வரோம்….எனக்கும் கயல் இல்லாம வீட்டுல இருக்க முடியலை….”என்று அவர் கூற,

“அம்மு நீ கயலை மன்னிச்சிட்டியா….”

“மன்னிக்கமுடியுமா தெரியலை ஆனா மறக்க முயற்சி பண்ணலாம்…யார் தாங்க தப்பு பண்ணல…..எல்லாரும் தான் தப்பு பண்ணுறோம்….அதுக்காக அதையே நான் நினைச்சுட்டு இருந்தா என் குடும்பம் நிம்மதியா இருக்காது…சில விஷயங்களை மறக்க முயற்சி பண்ணுறது நல்லது….அதுவும் என் பிள்ளை சந்தோஷத்துக்காக நான் இதைக் கூட செய்யமாட்டேனா…”என்றவர்,

“அப்புறம் நாளைக்கு கயலை வீட்டுக்கு கூட்டிட்டு வரதை பத்தி நீங்க அவன்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்…புரியுதா….என்னை அழ வச்சிட்டான்….இருக்கட்டும் பேசிக்கிறேன்…சரியான கேடி பையன்….”என்று கூறியவரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!