Skip to content
Post Views: 6,554
மனதிலோர் மோகன ராகம்
அத்தியாயம் 5
சத்யா அந்த மாதத்தின் “கார்ஸ்” மேகஜீனை மேய துவங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம், “ஹாய் பேபி. ஐம் ரியலி ரியலி சாரி. ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேனா?” என்று கேட்டுக் கொண்டே புயலாய் நுழைந்த மிருது, நேரே அங்கிருந்த சோஃபாவில் தொப்பென அமர்ந்தாள். கையில் பிடித்திருந்த நான்கு ஐந்து துணிக்கடை கேரிபேக்குகள் அவள் காலடியை அலங்கரித்தன.
அவள் பின்னூடே தொற்றிக் கொண்டு வந்த தீப்தியின் கைகளிலும் அதே துணிக்கடையின் கவர்கள் தென்பட்டன. “என்னை வா வான்னு டார்ச்சர் பண்ணிட்டு, இவ ஜாலியா ஷாப்பிங் போயிட்டு வந்திருக்கா பாரேன். சரி, நம்ம கல்யாணத்துக்காக இவளோ யோசிச்சு மெனக்கெடறாளே நாமளும் சப்போர்டிவ்வா இருப்போம்னு நினைச்சு இன்னைக்கு ஃபுல் ஷெடியூலை ஃப்ரீ ஆக்கிட்டு நான் வந்தேன் பாரு என்னை சொல்லணும்” என்று சத்யா கொஞ்சமாக முகம் சுருக்க, சத்யாவின் புருவ நெரிசலை உணர்ந்து கொண்டது போல மிருதுளா அவன் அருகே வந்து அமர்ந்து கொண்டாள்.
Advertisement
“ப்ரோகேட்ல 30% ஆஃபர் சேல் போட்டிருந்தான் பேபி.செம கலெக்ஷன்ஸ். கரெக்டா நாங்க கடையை க்ராஸ் பண்ணறப்போ தான் ஆஃபர் அனவுன்ஸ் பண்ணாங்க. ஈவிங்க் போய் பார்த்து வாங்கறதுக்குள்ள நல்ல நல்ல கலெக்ஷன்லாம் போயிடும். அதான் தீப்திய பிக்கப் பண்ணிட்டு வர்ற வழியில சின்னதா ஒரு ஷாப்பிங் பிரேக்” என்று சொல்லி, சிரித்தவளைக் கண்டு கொஞ்சம் போலக் கோபம் எட்டிப் பார்த்தது சத்யாவிற்கு.
“என்னை இங்க ஒரு மணி நேரத்துக்கும் முன்னாடியே வந்து வெயிட் பண்ண வச்சுட்டு, நீ சாவகாசமா ஷாப்பிங்கா போயிட்டு வர்ற?” என்று மனம் ஆத்திரப்பட்டாலும், அவன் மனசாட்சியோ, “ஏண்டா இங்க நீ என்ன பண்ணிட்டு இருந்தன்னு கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பார்க்க மாட்டியா? நீ என்னமோ ரொம்ப கஷ்டப்பட்டு துக்கப்பட்டு துயரப்பட்டுட்டு இங்க உட்கார்ந்து இருந்த மாதிரி பொங்கற? ஜாலியா அந்த ராகா பொண்ணை சைட் அடிச்சுட்டு, போறப்போ வரப்போ லுக் விட்டுகிட்டு ஹேப்பியா தானே உட்கார்ந்திருந்த?” என்று சரமாரியாகக் கேள்விகள் கேட்கவும், அவன் கோபம் உருவான இடம் தெரியாமல் தானே பொசுங்கிப் போயிற்று.
“சே! என்னவொரு மானங்கெட்ட மனசு” என்று தன்னைத் தானே நொந்து கொண்டவன், மேலே பேசும் முன்னர், ராகாவும் நடாஷாவும் அறையினுள் நுழைந்தனர். நடாஷா தீப்தியை அடையாளம் கண்டு கொண்டு பேசினாள். “ஹலோ தீப்தி? ஹவ் ஆர் யூ? உன் கசின் எப்படி இருக்காங்க” என்று சம்பிரதாயமாக விசாரித்தாள்.
Advertisement
தீப்தியின் அத்தைமகள் திருமணத்திற்கு சங்கீத் ஃபன்ஷனுக்கும், மெஹந்தி ஃபன்ஷனுக்கும் மட்டுமே இவர்களைக் கேட்டிருந்தனர். அப்போது “ஷ்ருஷ்டீஸ்” துவங்கியிருந்த சமயம் என்பதால் முழு திருமண பொறுப்பையும் அவர்களிடம் ஒப்படைக்க வெகுவாகத் தயக்கம் காட்டியது தீப்தியின் குடும்பம்.
Advertisement
ஆனால், வாய்ப்பு கிடைத்தால் போதுமென்று காத்திருந்த நடாஷாவிற்கும், அவள் குழுவிற்கும் இந்த இரு நிகழ்வுகளே தங்களை நிரூபிக்கப் போதுமானதாக இருந்தது. திருமணத்திற்கு வந்திருந்த ஒவ்வொருவர் வாயிலும், “கல்யாணத்தை விட சங்கீத்தும், மெஹந்தியும் செம ரிச்சா, க்ளாஸா பண்ணிட்டீங்க” என்ற வார்த்தைகள் இடம்பிடித்திருந்தன.
ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தையும் முன்னரே யோசித்து, திட்டமிட்டு, திடுமென ஏற்படும் பிரச்சனைகளை யூகித்து அதற்கான தீர்வுகளுடன் தயாராக இருந்ததால் தங்குதடையின்றி அந்த நிகழ்ச்சிகள் நடந்தேறி நற்பெயரை சம்பாரித்துக் கொடுத்திருந்தது.
“பெரிய அளவு ப்ராஃபிட்னு எதுவும் இல்லைன்னாலும் இந்த ஈவெண்ட் மூலமா நமக்கு நிறைய எக்ஷ்போஷர், நல்ல பேர்னு பெங்களூர் பார்ஷ் சர்கிள்ல நமக்கு ஒரு விளம்பரம் கிடைச்சிருக்கு. ஆல் தேங்க்ஸ் டு யூ கைஸ்” என்று புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த ராகா, மைக்கில் மற்றும் வனிஷாவிடம் தன் நன்றியைத் தெரிவித்திருந்தாள் நடாஷா.
Advertisement
இன்று அங்கே இங்கே தொட்டு, தீப்தியின் மூலமாக மீண்டுமாக ஒரு வாய்ப்பு. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அந்த அறையில் இருந்த நடாஷாவிற்கும், ஏன் ராகாவிற்குமே கூட அதிகமாக இருந்தது.
“இந்த முழு மேரேஜ்ஜையும் நாம நல்லா பண்ணிகுடுத்துட்டா, இது மூலமா கிடைக்கப் போற எக்ஸ்போஷர் வேற லெவல்ல இருக்கும்” என்று தீர்மானமாகத் தெரிய, எப்படியும் இவர்களை கவர்ந்து விட வேண்டும் என்றே நினைத்து பேச்செடுத்தாள் நடாஷா.
மிருதுளாவின் எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தவள், அருகில் தன் ஆப்பிள் டேப்லெட்டுடன் அமர்ந்திருந்த ராகாவை நோக்கி ஒரு அர்த்தமுள்ள பார்வையை வீசி விட்டு, பேசத் துவங்கினாள்.
“ஐம் நடாஷா. திஸ் இஸ் மை ஈவெண்ட் எக்ஸிக்யூடிவ் ராகமாலிகா. வி ஆர் ஹியர் டு லிசின் டு யுவர் ட்ரீம்ஸ் மிஸ்.மிருதுளா! உங்க டேஸ்ட் என்ன? என்ன மாதிரியான எதிர்பார்ப்புகள் இருக்கு? உங்க ஆசைகள், உங்களோட விருப்பங்கள், முக்கியமா எதெல்லாம் இருக்கக் கூடாதுன்னு சில அவாய்டபிள்ஸ், இதெல்லாம் கொஞ்சம் டீடெயில்டா சொன்னா எங்களுக்கு ஈஸியா இருக்கும்” என்று கூறிய நடாஷாவின் பார்வையும் பேச்சும் மிருதுவிடமே குவிந்திருந்தது. சத்யாவைப் பார்த்து இரண்டொரு முறை இலேசாகச் சிரித்ததோடு சரி. மற்றபடி அவனைப் பெரியதாய் நடாஷா கண்டுகொண்டாளில்லை.
மணமகனின் பர்ஸையும், பதவியையும் தவிர, அவனது அறிவுரையும், அறிவும் அவர்களுக்கு எங்கேயும் தேவைப்படாது என்று நடாஷாவிற்குத் தெரியும். அதனால் என்றுமே நடாஷாவின் கவனம் மணப்பெண்ணிடம் தான் குவிந்திருக்கும்.
திருமண ஏற்பாடுகளில் மணப்பெண்ணை திருப்திப்படுத்திவிட்டால் போதுமானது. அவளே மற்றவர்களைக் கவனித்துக் கொள்வாள், “எனக்கு இதான் பிடிச்சிருக்கு. இதான் வேணும்” என்று செலவுகள் பற்றி கவலைப்படாமல் தன் பிடித்தம் என்ற ஒற்றை சொல்லில் அனைவரையும் அடக்கிவிடுவாள் என்று நடாஷா தீர்க்கமாக நம்பினாள்.
அதிலும் “மிருதுளா மாதிரி, வசதியான வீட்டு பொண்ணுன்னா கேட்கவே வேண்டாம். செலவெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. அவங்களை திருப்தி படுத்தணும். அது மட்டுமே போதும்.” என்று நம்பிய நடாஷா, மிருதுவின் முகத்தைப் பார்த்த வண்ணம் அந்த நொடி மிருதுவின் எண்ணங்களும் விருப்பு வெறுப்புகள் மட்டுமே பிரதானம், மற்றபடிக்கு உலகம் சுழன்றால் என்ன சுழலா விட்டால் என்ன என்கின்ற ரீதியில் பேசினாள்.
தன்னை முக்கியத்துவப்படுத்தி பேசப்படும் விஷயம் என்பதால் மிருது வெகு உற்சாகமாகவே பதிலளித்தாள். நடாஷா கேட்காமலேயே அனைத்து விஷயங்களையும் ஒப்பித்தாள்.
“ஆக்ட்சுவலி எங்க வீட்டில யாருக்குமே டெஸ்டினேஷன் வெட்டிங்ல அவளோ இண்டிரெஸ்ட் இல்ல. ஆனா, எனக்கு சின்ன வயசில இருந்தே இதான் ஆசை. அதை நான் சொல்லவும் என் ஃபியான்சி சத்யாவும் உடனே சரின்னு சொல்லிட்டாரு” என்று சொல்லிய மிருது, தன் ஆசைகள் கனவு எதிர்பார்ப்பு என எங்கிருந்து ஆரம்பித்து எங்கே முடிப்பது என்று தெரியாமல் கோர்வையே இல்லாமல் பல விஷயங்களைப் பேசத் துவங்கினாள்.
மிருதுவின் படபட பட்டாசு பேச்சிற்கு நடாஷாவோ, ராகாவோ பதில் மொழி சொல்லவில்லை. ராகா, அவ்வப்போது மிருதுவின் பேச்சிலிருந்து விஷயங்களை கவனித்து, “பிங்க் கலர் பிடிக்கும். ஆர்கிட் பிடிக்கும். எலகெண்ட் லுக் பிடிக்கும்” போன்ற அங்கங்கே சிதறிய, அவர்களுக்குத் தேவையான விஷயங்களைப் பற்றிய குறிப்புகள் மட்டுமாக எடுத்துக் கொண்டிருந்தாள்.
மணி பனிரெண்டு ஆகிவிட்டது என்பதைக் காட்டும் விதமாக, சத்யாவின் கைகளில் அணிந்திருந்த வாட்ச் மெல்லமாக அலற, அரை மணி நேரத்திற்கும் மேலாகத் தானே பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற விஷயமே மிருதுவுக்கு அப்போது தான் விளங்கியது.
சற்றே தொண்டையை அவள் கனைக்கவும், இதற்காகவே காத்திருந்தவள் போல, ராகா தன் ஸ்மார்ட் கைக்கடிகாரத்திலிருந்து வெளியே அழைப்பு விடுத்தாள். அடுத்த நிமிடம் ஒரு சிறிய ட்ரேயில் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சில கோல்ட் கட் ஃபிங்கர் சாண்ட்விச்களும், ஹாட்சாக்லேட்டும் குளிர்பானமும் எடுத்து கொண்டு ஒரு சிப்பந்தி உள்ளே வந்தான்.
வெறும் உணவுப் பதார்த்தங்கள் மட்டும் இன்றி, கைதுடைக்க நாப்கின், பற்குத்தும் குச்சி, சின்னதாய் அளவான கோப்பைகளில் குளிர்பானம், குடி தண்ணீர், தனியாகக் குவளையில் சேண்ட்விச்சிற்கான சாஸ். அதை எடுத்து போட்டுக் கொள்ளச் சிறிய அளவிலான ஸ்பூன்கள், துணியின் மீது எதுவும் கொட்டிவிடாமல் இருக்க, லேப்டவல், சான்விச்சை எடுத்து உண்ண வசதியான தட்டுகள் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து அடுக்கப்பட்டிருந்தது. ”நாங்கள் எல்லா விதத்திலும் உங்கள் நலனை மட்டுமே முதலில் கவனிப்போம். கருத்தில் கொள்வோம்” என்று சொல்லாமல் சொல்லிவிட்டிருந்தது “ஷ்ருஷ்டீஸ்”
இந்த சிறிய உபசரிப்பிலேயே மிருதுளாவும் தீப்தியும் விழுந்துவிட்டனர் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. தீப்தி அடக்கமாட்டாமல், “ஒரு பிக் எடுக்கறேன். ஃபார் மை இன்ஸ்டா” என்று ஆவலுடன் அந்த ட்ரேவை படம் பிடிக்க, “ஓ. ஷ்யுர். டோண்ட் ஃபர்கெட் டு டேக் அஸ், #ஷ்ருஷ்டீஸ்” என்று ட்ரேவை வெளிச்சத்திற்கு நகர்த்தி தீப்தி அழகாய் படமெடுக்க உதவி செய்த ராகா, அந்த சிறு சந்தர்ப்பத்தைக் கூட உபயோகப்படுத்திக் கொள்ள நினைத்தாள். தன் காரியத்திலேயே குறியாக இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.
அது மற்றவருக்கு எப்படி இருந்த தோ, நிச்சயமாக சத்யாவிற்கு சற்றே அசூசையை ஏற்படுத்தியது. “அட் த எண்ட் ஆஃப் த டே, எல்லாமே பிசினஸ் டாக்டிக் தான். பப்ளிசிட்டி தான். ஒத்துக்கறேன். அதுக்காக இவளோ அப்பட்டமா காட்டிக்கணுமா என்ன?” என்ற எண்ணமே தோன்றியது.
ஆனால் இதெல்லாம் மிருதுளாவின் கவனத்தில் பதியவேயில்லை. அவள் தீப்தியுடன் சேர்ந்து செல்ஃபி எடுப்பதிலேயே குறியாக இருந்தாள்.
இருவரும் இப்போது நிறுத்தப் போவதில்லை என்று உணர்ந்த நடாஷா, “ப்ளீஸ் ஹேவ் சம்” என்று கைகாட்டினாள். நடாஷாவின் சமிக்கைகாக காத்திருந்த ராகா, எழுந்து நடாஷாவின் மேஜையின் மீது வைத்திருந்த பெரிய அளவிலான ஆப்பிள் கம்பியூட்டரின் டிஸ்ப்ளேவை இயக்கி, மானிட்டரை மற்றவர்களின் பார்வைக்கு தக்கபடி வைத்தாள்.
மானிட்டரின் அருகே ராகா எழுந்து சென்றதும், நடாஷா தன் கையிலிருந்த ரிமோட்டை அழுத்த, அவர்கள் அமர்ந்திருந்த அறையின் கண்ணாடி தடுப்புகளை திரைச்சீலைகள் அழகாய் வந்து மூடிக் கொண்டன. வெளிச்சத்தைக் குறைத்து வைத்துவிட்டு ராகா கணினி முன்னால் கைகளைக் கட்டிக் கொண்டு அழகாய் நின்றாள்.
“இதுவரைக்கும் எங்க ஸ்ருஷ்டீஸ் ஈவெண்ட்ஸ் மூலமா நாங்க பண்ண சின்ன லெவல் ஃபன்ஷன்ல இருந்து, பெரிய பெரிய மேரேஜ் ரிஷப்ஷன்ஸ் வரைக்கும் பிக்ஸ் இதுல இருக்கு. நீங்க ப்ரேக் எடுக்கற டைம்ல இதை வியூ பண்ணா உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.” என்று சொல்லி நிறுத்திவிட்டு, மிருதுளாவை மட்டுமே கண்களால் இழுத்துப் பிடித்து,
“எங்களுக்கு சின்ன லெவல் ஃபங்க்ஷன், பெரிய விருந்துன்னு எந்த பாகுபாடும் இல்ல. உங்க விஷ் தான் எங்க கமெண்ட். நீங்க என்ன ஆசைப்படறீங்களோ அதை கண்முன்னால கொண்டு வந்து காட்டறது தான் எங்க ஸ்பெஷாலிட்டி” என்று அமைதியான, ஆனால் தீர்க்கமான குரலுடன் பேசப் பேச, மிருது, ராகாவின் ஒவ்வொரு வார்த்தையையும் கூர்ந்து கவனித்தாள்.
“உங்க மனசில இருக்கற கனவை ரியல் லைஃப்ல கொண்டு வர்றது தான் எங்க ஷ்ருஷ்டீஸ்ஸோட விஷன் மிஷன் எல்லாமே. ஃப்ராஃபிட், கோல்ஸ், டார்கெட்டு எங்களுக்கு எல்லாமே எங்க கஸ்டமர்ஸ், அதாவது நீங்க தான். நல்ல கஸ்டமர்ஸை சம்பாரிக்கறது தான் எங்க மோட்டிவ். இதை உங்களுக்கு நாங்க சொல்லணும்னு அவசியம் இல்ல.”
“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஃபன்ஷனோட இம்பாக்ட்ட வச்சு தான் உங்க ஃப்ரெண்ட் தீப்தி உங்களை அழைச்சுட்டு வந்திருக்காங்க. சச் ஏ மார்வெலஸ் மெமரி யு ஹேவ் தீப்தி” என்று தீப்திக்கும் சேர்த்து ஒரு புகழாரம் வாசித்தாள் ராகா.
அவளுக்குத் தெரியும், எல்லா மணப்பெண்ணுமே மிகவும் நம்புவது அவர்களது தோழிகளைத் தான். அதிலும் முடிவெடுக்க இயலாமல் தடுமாறு அனைத்து தருணங்களிலும் இலவச ஆலோசனைகள் கிடைப்பது தோழிகளிடம் தானே. அதனால் தீப்தியின் நன்மதிப்பும் முக்கியமானது என்று புரிந்து வைத்திருந்தாள்.
“என்னடா சின்ன கம்பெனியா இருக்கே. இவங்க எப்படி நம்மளோட மனசைப் புரிஞ்சுகிட்டு நம்ம இஷ்டப்படி எல்லாமே செய்வாங்கன்னு நீங்க தயங்கவே வேண்டாம். பெரிய பெரிய ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் ஜாம்பவாங்கள் பெங்களூர் மும்பை டெல்லின்னு எல்லா மெட்ரோயலையும் இருக்காங்க. ஆனா அவங்களுக்கு நீங்க ஒன் ஆஃப் த க்ளையண்ட். எங்களுக்கு அப்படியில்ல. எங்களோட ஒன் அண்ட் ஒன்லி கான்செண்ட்ரேஷன் நீங்க மட்டும் தான்” என்று நிறுத்தி அழுத்தமாய் ஒரு புன்னகையை பதித்தாள் ராகா.
“இன்ஃபாக்ட், நாங்க ஒரே டைம்ல எப்பவும் ரெண்டு ப்ராஜெட் கூட ஒத்துக்க மாட்டோம். ஒரே டார்கெட் மட்டும் தான். அதுக்காக எங்க முழு உழைப்பையும் கொடுப்போம். எங்களை நீங்க நம்ப எந்த அவசியமும் இல்ல. உங்க ஃப்ரெண்டோட எக்ஸ்பீரியன்ஸ் அண்ட் வேர்ட்ஸ் மேல நம்பிக்கை இருக்கும் இல்லையா.” என்று அவர்கள் யோசிப்பதற்கும் சுவாசிப்பதற்கும் கொஞ்சம் கூட அவகாசம் விடாமல் கோர்வையாகத் திறமையாகப் பேசினாள் ராகா.
“சும்மா சொல்லக் கூடாது. நிஜமாவே வாய் திறமை அதிகம் தான். எங்க எங்க டச் பண்ணா என்ன மாதிரி ரியாக்ஷன் இருக்கும்னு புரிஞ்சு வச்சு செம்மையா இம்பிரஸ் பண்ண ட்ரை பண்ணறாங்க. இதே முனைப்பு கல்யாண வேலையிலையும் காட்டுவாங்களா இல்ல வெறும் வாய் பேச்சு தானா?” என்று அந்த நேரத்தில் யோசித்தது சத்யா மட்டுமே! மற்றவர் அனைவரும் ராகாவின் பேச்சாற்றலில் தன்னை மூழ்கடித்திருந்தனர்.
சத்யாவின் எண்ணவோட்டத்தையும் கூட உணர்ந்தவள் போல, “என்னாடா இவ, இவளோட வாய் வார்த்தையால இம்பிரஸ் பண்ண பார்க்கறா? இதே இண்டிரெஸ்ட் வேலையில காட்டுவாங்களா இவங்கன்னு நீங்க நினைக்கலாம். தப்பேயில்ல! நீங்க எங்களை நம்ப வேண்டாம். நாங்க சொல்லற எதையுமே நம்ப வேண்டாம். நாங்க நடத்தின ஈவெண்ட்ஸ் பத்தி ப்ரெவியூ பாருங்க. அப்பறமா நீங்களே டிசைட் பண்ணலாம்.”
“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க ஈவெண்டால இம்பிரஸ் ஆகி தான் இன்னைக்கு உங்களுக்கு எங்களை சஜெஸ்ட் பண்ணியிருக்காங்க தீப்தி! எங்களோட ஸ்டாண்டர்ட் என்னன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும். எஞ்சாய் த ப்ரிவ்யூ” என்று சொல்லிய ராகா, கணினியை இயக்கிவிட்டு, மீண்டும் நடாஷாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். நடாஷா, ராகாவை மெச்சுதலுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு, திரையில் கண்களைப் பதித்தாள்.
ராகா பேசிய சில நிமிட நேரத்தில் அங்கே இருந்தவர்களின் கவனம் முழுக்க அவள் மேலேயே இருப்பது போலப் பார்த்துக் கொண்டாலும், சத்யாவின் பார்வை மட்டும் அவள் தோளின் பின்னால் இருந்த சுவரையே வெறித்தது. மறந்தும் கூட அவள் முகத்தையோ, அவள் கண்களையோ பார்த்துவிடா வண்ணம் வெகு சுதாரிப்புடன் சுவரிலேயே கண்களைப் பதித்திருந்தான்.
அங்கே ராகாவின் சில்வுட்(Silloutte) எனப்படும் நிழல் பிம்பம் மட்டுமே தெரிந்தது. அவளது வரிவடிவத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அந்த் நிழல் வடிவமே மனதில் படிந்தும் போனது.
சத்யாவின் பார்வை தன்னைக் கவனிக்காததை ராகாவும் கண்டு கொண்டாள் தான். பள்ளிக்கூடம் போல, “ஏ! எங்க பராக்கு பார்த்துட்டு இருக்க? லிசின் டு மி” என்று தலையில் கொட்டியா அவளை கவனிக்க வைக்க முடியும். ராகாவிற்கு சற்றே சப்பென்று ஆகித்தான் போனது. “ஐயோ எவளோ பெரிய க்ளையண்ட். இந்த ஈவெண்ட் மட்டும் நமக்கு கிடைச்சா போதும். கண்டிப்பா அவங்க எதிர்பார்க்கற மாதிரி எலகெண்டா, ரிச்சா செம்மயா பண்ணிடலாம். ஆனா கிடைக்கணுமே” என்ற ஆதங்கம் ஏற்பட்டது உண்மை.
ஏனென்றால் ப்ரிவிய்யூவின் முடிவில் ராகா பயந்தது போலவே தான் சத்யா செய்திருந்தான். “ஷ்ருஷ்டீஸ்”ஸின் பிரசண்டேஷனில் குறை என்று சொல்ல, ஒரு விஷயம் கூட இருக்கவில்லை மிருதுளாவிற்கு. அவளை சத்யா மட்டும் தடை சொல்லாமல் இருந்திருந்தால், அந்த நாளே அவர்களைப் தேர்ந்தெடுத்திருப்பாள்.
மிருதுளா தன் ஒப்புதலைச் சொல்லத் துவங்கும் சமயம், “மிருது பேப்! நாளைக்கு “ஏ1 ஈவெண்ட்ஸ்”ல மீட்டிங் இருக்கு இல்லையா. அவங்களும் இதே மாதிரி ரொம்ப ப்ரிபேர் பண்ணியிருப்பாங்க. சோ, அதையும் பார்த்துட்டு அப்பறம் டிசைட் பண்ணிக்கலாம் பேப்” என்று “ப்ரிப்பேரில்” நிறைய அழுத்தம் கொடுத்து, ராகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு “இது நீ எங்களை இம்பிரஸ் செய்ய எடுத்துக் கொண்ட பெரு முயற்சி! மிருதுளா மயங்கலாம். நான் ஏமாற மாட்டேன்” என்று சொல்லாமல் சொல்லிவிட்டான்.
ராகாவிற்கு சத்யாவின் செய்கையால் பெருத்த ஏமாற்றம் தான். “டேய் இன்னும் நாலு தடவை வேணா நான் இங்கையும் அங்கையும் நடக்கறேண்டா. உள்ள வந்து பத்து நிமிஷமும் வச்ச கண்ணு வாங்காம நல்ல விதமா நான் எக்ஸ்பெக்ட் பண்ண மாதிரி தானே நடந்துகிட்ட! இப்போ ஏண்டா திடீர்னு நியாபகம் வந்தவன் மாதிரி “அர்ஜெண்டா ஒரு ராமர்” பார்சல்னு நடந்துக்கற” என்று மனதினுள் கருவி கொண்டாள்.
ஏன் நடாஷாவுமே மிருதுளா உடனே ஒப்புக் கொள்வாள் என்றே நம்பினாள். நாளை வேறு ஏ1 ஈவெண்ட்ஸ்ஸிடம் மீட்டிங்காமே. இப்போதைக்கு இவர்களுக்குத் தொழில் முறை போட்டி என்றால் அது ஏ1 குழுமம் தான். அவர்களது பக்க பலமே, “நிறைய மூலதனமும்” அதன் மூலமாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் பல ஊழியர்களும் தான்.
ஏ1ன்னில் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு ஆட்கள் நியமிக்கப்பட்டிருப்பர். அவர்களது அலுவலக் கட்டியடம் வேறு பெரியது. “ஷ்ருஷ்ரூஸ்டீஸை” விடவும் பளபளப்பானது. இங்கே கஸ்டமரின் கவனத்தைக் கவர, நம்பிக்கையை ஏற்படுத்த அவர்கள் நிறைய மெனக்கெட வேண்டும்.
ஆனால் ஏ1ன்னில் அதற்கு அவசியமே இல்லை. அவர்களின் படோபடம் பிரசித்தி பெற்றது. இதெல்லாம் நடாஷாவிற்கும் ராகாவிற்கும் சங்கடத்தை ஏற்படுத்தின. “வீ வில் கெட் பேக் டு யூ” என்று சொல்லிவிட்டு சத்யா வெளியேற, அவன் பின்னால் யோசனையுடன் மிருதுளாவும் தீப்தியும் சென்றிருந்தனர்.
“ஏ1 போனா இவங்களை கோழி அமுக்கற மாதிரி கைக்குள்ள அடைச்சுடுவானே! இவங்களை ஏ1 போக விடாம செய்யேன் ஈஸ்வரா! சொக்கா சொக்கா பெரிய க்ளையண்ட் மிஸ் ஆகாம காப்பாத்துப்பா” என்று தருமி ரேஞ்சில் வெளிப்படையாகத் தன் நண்பர்கள் மைக்கிலிடமும், வனிஷாவிடமும் குமுறத் துவங்கினாள் ராகா.
error: Content is protected !!