Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

anbae nee puyalaa mazhaiyaa poonthendralaa

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம்-14.2

 

 

அத்தியாயம் 14.2:

 



Advertisement

 

 

 

Advertisement

 

Advertisement

 உமாவுக்கு உதவியா திராட்சை அல்வா செய்ய ஆயத்தமாகிட்டாள் மல்லி. 

 

 

Advertisement

உமா, “மல்லி அந்த டப்பாவில் இருக்க ரவை எடுடீ… நான் இந்த சட்டியை சுத்தமா விளக்கி வைக்கிறேன்”. “உமா இந்த நெய் எங்கடி இருக்கு”… அது மூணாவது செல்பில் இருக்கு மல்லி. 

 

“மல்லி திராட்சை கழுவி வைடீ”… சரிடீ நான் பன்றேன்… நீ வந்து பாரு இன்னும் என்னென்ன வேனும்னு. இரு வருகிறேன் மல்லி… உமா எனக்கு திராட்சை அல்வா பன்ன தெரியாடீ, நீ தான் பன்னனும்… எப்படி பன்னனும்னு எனக்கு சொல்லிக்கொடுடீ… சரி மல்லி சொல்லறேன்… நான் செய்ய செய்ய நீ பாத்துக்கோ டீ எனக்கூறி வேலையில் கவனமானாள் உமா.

 

திராட்சை அல்வா :

 

 

பொருட்கள்.

 

1. ரவை

2. சக்கரை

3. முந்திரி

4. நெய்

5. பன்னீர் திராட்சை 

 

 

முதலில் இதை எல்லாம் எடுத்துவச்சிகோடீ மல்லி. அப்புறமா 

 

 

ரவையை வறுத்து நல்லா அரைத்துக்கனும் மல்லி. அப்புறமா முந்திரியை நெய்யில் பொன்னிறமா வறுத்து வச்சிக்கனும். அப்புறமா பன்னீர் திராட்சையை நல்லா கழுவி, அதை நல்லா பிச்சஞ்சி சாறு எடுத்துவச்சிக்கோ, அதை சக்கையில்லாம வடிச்சிக்கனு மல்லி. 

 

 

இந்த ஜூஸ் அதுக்குள்ள அதை நல்லா திக் ஆகும் வரை கொதிக்க வச்சிக்கனும் மல்லி. அதுல சக்கரையையும் வருத்த ரவையையும் போட்டு கைவிடாமல் கிளறிவிடனும். பதம் வந்ததும் முந்திரியை சேர்த்து இறக்கினா திராட்சை அல்வா ரெடி.  அவ்வளவு தான்  மல்லி… ரொம்ப சிம்பிள் டீ. 

 

 

“அப்புறம் மல்லி, ரவை ஒரு கப் எடுத்தா, சர்க்கரை ஒரு கப் எடுத்துக்களாம்… திராட்சை அரைக்கிலோ எடுக்கனும் டீ” எனக்கூறி  சமையலில் இவர்கள் மூழ்கி இருந்தனர்.

 

 

 

******************×****************************

 

 

அமெரிக்கவில்  இருக்கும் நித்தியன், தன் ஐந்து மாத ஆண் குழந்தையிடம் தன் தங்கையின் புகைப்படத்தை காட்டி, அவளை பற்றி கூறிக்கொண்டு இருந்தான். 

 

 

 

அந்த ஐந்து மாத குழந்தைக்கு என்ன புரிந்ததோ அந்த புகைபடத்தை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தது. இதை எல்லாம் பார்த்த நித்தியன் மனைவி ஆனந்திக்கு உமாவை நினைத்து வேதனையாக இருந்தது…

 

 

அதைவிட தன்னவன் உமாவை தன்னால் பாதுகாக்க முடியவில்லையே என வேதனை படுவதை பார்த்தாள் அத்தனை கஷ்டமாக இருந்தது. 

 

 

நித்தியன் மற்றும் ஆனந்திக்கும் உமா என்றால் அத்தனை பிரியம். அதே போல் தான் அவளுக்கும். 

 

 

“இந்த ஐந்து வருடங்களில் குறைந்தது மூன்று அல்லது ஐந்து முறை தான் உமா நித்தியனுக்கு போன் செய்து இருந்தாள். அதிலும் உமா இருக்கும் இடம் பற்றி நித்தியன் கேட்டும் அவள் கூறவில்லை”. 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

தன் இருப்பிடம் தெரிந்தால் நித்தியனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமே எனபயந்தாள். அதை பற்றி நித்தியனிடமும் கூறியும்விட்டாள். 

 

 

இவர்கள் போன் மூலம் பேசவில்லையே தவிர மின்னஞ்சல் வழியாக தொடர்பில் தான் இருந்தனர். 

 

 

ஆனந்தி, “உமா பட்ட கஷ்டங்களை பார்த்ததாள் இந்தியா வரவே தவிர்த்தால், அதைவிட மாமியாரின் முகத்தை பார்க்ககூட அவள் விரும்பவில்லை”. எங்கே அவர் தங்கள் மூலமாக உமாவை நெருங்கிவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் இருந்தது. 

 

 

“ஆனந்தியின் பயத்தை உணர்ந்த நித்தியனும் இந்தியா செல்லும் என்னத்தை கைவிட்டுவிட்டான். தன் குழந்தை பிறந்தை கூட முதலில் உமாவுக்கு தான் சொன்னான். இது வரை லட்சுமியிடம் குழந்தை பிறந்த விஷயத்தை கூறவில்லை. அந்த அளவுக்கு அவரை வெறுத்தான் நித்தியன்”.

 

 

 

 

இந்த அளவுக்கு பாசம் உமாவின் மீது வரக்காரணம் அவன் தந்தை தான். தன் தங்கை மீது கொண்ட பாசத்தினால் தன் மகனுக்கு உமா மகேஸ்வரன் என பெயர் வைத்தான் நித்தியன்.

 

 

இவர்கள் வேதனைக்கு மருந்தாக இருப்பது குழந்தையின் சிரிப்பும் மழலை மொழியும் தான். 

 

 

 

“வறண்ட பாலைவனத்தில் கிடைத்த சிறு துளி தண்ணீர் போல் இருந்தது குழந்தையின் வரவு… காரிருளில் கிடைத்த சூரிய ஒளி போல்… வழி தெரியாமல் சிக்கிய அடந்த கானகத்தில் கண்ட சகமனிதனை போல் இருந்தது குழந்தையின் வரவு இந்த தம்பதிகளுக்கு”.

 

[the_ad id=”6605″]

 

 

உமாவை நேரில் காண வேண்டிய நாளுக்காக இவர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

 

 

தவம் புரியும் முனிவனை போல் ஐந்து வருடங்களாக அவளுக்காக மொழி அறியாத ஊரில் காத்துக்கொண்டு இருக்கின்றனர் கணவனும் மனைவியும்.

 

 

ஆனந்தி, “நித்து தம்பிக்கு ரொம்ப சிரிப்பு காட்டாதீங்க… வயிறு வழிக்கு”… “ஆனந்தி இவனுக்கு சிரித்து சிரித்தே தூக்கம் வந்துவிட்டது பாரு…  நீ தூங்க வை டீ…  நான் நமக்கு பிரட் ஆம்பிளேட் போடறேன்”… “பாத்து பன்னுங்க, கையை சுட்டுக்காதீங்க நித்து”… நான் இங்கே பாத்துக்கிறேன், நீ அவனை பாரு எனக்கூறி அவளை அறைக்கு அனுப்பி வைத்தான் நித்தியன்.

 

 

குழந்தையை உறங்க வைத்துவிட்டு வந்த மனைவிக்கு சாப்பாடு ஊட்டிவிட்டவன், தானும் உண்டுவிட்டு மனைவியுடன் சேர்ந்து பால்கனியில் அமர்ந்து நகரத்தின் அழகை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். இருவருக்கும் இடையே பலத்த அமைதி நிலவியது…

 

 

அதை கலைக்கும் பொருட்டு நித்தியன், “ஆனந்தி… நான் உன்னை சந்தோசமா பாத்துக்கிறேனா?… நீ இங்க சந்தோசமா இருக்கியா ஆனந்தி?… உன்னை உன்னுடைய அப்பா, அம்மா கிட்ட இருந்து பிரிச்சிட்டேனா ஆனந்தி?”…  “உங்களுக்கு என்னா ஆச்சி நித்து?… ஏன் இப்படி எல்லாம் கேட்கிறீங்க?… நீங்க என்னை பார்த்துக்கிற மாதிரி என்னைய பெத்தவங்களாளா கூட பாத்துக்கமுடியாது மாமா”… 

 

 

 

உங்க கூட இருந்தா போதும்னு நினைத்து தானே இந்தியா பக்கம் கூட போகாம நீங்க போர நாட்டுக்கு எல்லாம் பெட்டிய கட்டிக்கிட்டு உங்க பின்னாடியே நானும் வருகிறேன் மாமா. 

 

 

 

உங்க அம்மாவால் ஏதாவது பிரச்சினை வந்திரக்கூடாதுனு தான நாம சென்னைக்கு போகாம இருக்கோம். அதனால் தான நாம இந்த ஐந்து வருடத்தில் நாளு நாட்டுக்கு டிரான்ஸ்பர் வாங்கிகிட்டு கடைசியா இங்க இருக்கோம்…

 

 

எங்க அம்மா அப்பாவை பார்க்கனும்னு தோனும் போது எல்லாம் அவங்களை இங்க வரவைக்கிறீங்க… என் முகவாட்டத்தை வைத்தே எல்லாம் தெரிந்துக்கிறீங்க மாமா. 

 

[the_ad id=”6605″]

 

 

உங்க மாமா, அம்மையார் இங்க நிரந்தரமா இருக்கமுடியாமல் தான அவங்க ஆறு மாதம் அங்கேயும் ஆறு மாதம் இங்கேயும் இருக்காங்க. 

 

 

 

நீங்களும் நம்ம குழந்தையும் எங்கூட இருக்கிறவரை எனக்கு எந்த கஷ்டமும் இல்லை மாமா. என்னுடைய ஒரே கவலை நீங்க இப்படி கவலை மனதில் வச்சுகிட்டு வெளியே  சந்தோசமா இருக்க மாதிரி நடிக்கிறீங்க பாருங்க அதுதான். நம்ம பையங்கிட்ட இருக்கும் பொழுது தான் நீங்க மனச விட்டு சிரிக்கிறீங்க… நீங்க நீங்களா இருக்கீங்க நித்து. 

 

 

 

“அது அப்படி இல்ல ஆனந்தி… நம்ம உமா நம்பகூடவே இருந்தா இன்னும் நல்லா இருக்கும் அவ்வபோது தோனும் டீ… அவ எங்கே எப்படி இருக்கானு நினைத்து தான் சிறிது கலக்கம் தவிர, உங்களோடு இருக்கும் பொழுது அந்த கவலையை மறந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன் டீ”. 

 

 

நீங்க இப்படி வருந்துவது தெரிந்தால் உமா உங்களை சும்மா விட மாட்டா நித்து… அவ இருக்க இடம் மட்டும் தான் நமக்கு தெரியாதே தவிர, அவ யாருடன் இருக்கிறாள் என உங்களுக்கு தெரியாதா நித்து?… 

 

 

“உங்களுடைய குட்டி தங்கை தான் மூன்று பசங்களை வளர்த்து படிக்கவைக்கிறாள்… அதை மறக்காதீங்க மாமா… அதை எப்படி மறக்க முடியும் டீ?… அந்த குழந்தைங்க போட்டோ கூட அனுப்பி வைத்தாள் இல்ல… இந்த வயதிலேயே அவங்களுக்கு எவ்வளவு கஷ்டம். எவ்வளவு பொறுப்பா இருக்காங்க. உமா நல்லா வளர்த்து வச்சி இருக்கா அவங்களை”. அப்படி என் சித்தி மாதிரி குணம் உமாவுக்கு ஆனந்தி. 

 

 

 

“நம்மளை பத்தி மறைக்காம அம்முகிட்டையும் கண்ணன்கிட்டையும் சொல்லிவச்சி இருக்கா பாருங்க நித்து”… குட்டி மட்டும் ரொம்ப சின்னவன் நாள அவன்கிட்ட சொல்லவில்லை பாருங்க அவ. தெளிவா முடிவெடுக்க கத்துகிட்ட இல்ல நித்து. 

 

 

 

“எதுஎப்படியோ  டீ… அவ நல்லா இருந்தா போதும்”… சரி வா..  டைம் ஆச்சி… வந்தபடி ஆனந்தி, நம்ம ஜூனியர் வேற நாளு மணிக்கே எழுந்துக்குவான். அப்புறமா நீ  தூங்க நேரமே இருக்காது டீ… வா எனக்கூறி தன் மனைவியை அழைத்துக்கொண்டு தூங்க சென்றுவாட்டான். 

 

 

 

அன்பு தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!